Skip to content
Post Views: 599
“வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு”
அத்தியாயம் -5
கணேசா பொண்ண இட்டாந்தியே இந்நேரம் விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சிருக்குமில்ல.
எதுக்குமா கேக்கற?
Advertisement
“ம்க்கூம்” கேட்டதுக்கு பதில் சொல்லுடான்னா என்னயே எதிர் கேள்வி கேக்கற?
அதெல்லாம் எப்பவோ தெரிஞ்சிருக்கும். எல்லாம் பக்காவா பிளான் போட்டு தான் இந்த வேலைல இறங்கிருக்கேன் என்னோட குறி தப்பவே தப்பாது.
ம்ம்ம்ம்ம்……எப்பாடா,
Advertisement
ராசா வயித்துல பாலைவாத்தடா உன்னைய பெத்ததுக்கு இன்னிக்கி தான் உறுபடியான வேலை செய்திருக்க.
Advertisement
“ம்மா…” கொஞ்சம் பொறுமையா இரு. சத்தமா பேசி நீயே காரியத்த கெடுத்துடுவ போலிருக்கே. நானே எப்படி நகையையும், பணத்தையும் வாங்கிட்டு தள்ளி விடலாம்னு யோசிச்சினிருக்க என்றான் பல்லை நரநரவென கடித்து,
என்ன ராசா உனக்கு தெரியாத யோசனையா?
எத்தனை பொண்ணுங்கள இப்படி ஏமாத்திருக்கோம். ஆன அதுங்க கிட்டல்லாம் இந்த அளவுக்கு ஆஸ்தி அந்தஸ்து இல்ல. கெடைச்சாலும் கெடச்சா நல்லா வெட கோழியா நம்ம கிட்ட சிக்கிட்டாடா கணேசா இவ என்றவர்,
Advertisement
“ஹா ஹா ஹாஹா ஹா ஹா… என்று சத்தமாக சிரித்தார்.”
அம்மா, மறுபடியும்” சொல்லிட்ட பொண்ணுங்க விஷயம் பணம், நகை எல்லாம் ஏமாத்தி புடுங்கிட்டு அந்த பார்ட்டிகிட்ட ஒப்படைக்கற வரைக்கும் ஓவரா பேசாத நமக்கு மேல இருக்கறவன் நம்ப நகையெல்லாம் எடுத்துட்டு அவன்கிட்ட அனுப்பறது தெரிஞ்சா அவ்ளோதான் இந்த நிமிஷமே நம்ப உயிர் போயிரும்.
சரி ராசா நான் இத பத்தி இனி பேச மாட்டேன் போதுமா?
ம்ம்ம்ம்…. அது அப்படியே இரு.
“எங்கிருக்கா அவ? “
“ஹாங்” உன்னோட ரூம்ல தான் இருக்கா.
சாப்பிட எதாவது குடுத்தியா?
எதுக்குடா எனக்கு வம்பு என்று மனதில் நினைத்தவர்,
இல்லப்பா நான் எதாவது குடுத்து இதுக்கு முன்னாடி கூட்டிட்டு வந்த பொண்ணுக்கு ஆன மாதிரி ஆகிட்டா என்ன சும்மா விடுவியா, பெத்த தாய்ன்னு கூட பாக்காம கழுத்தை நெறிச்சியே மறுபடியும் அந்த தப்ப நான் பண்ணுவேனா?
ஓஹோ…. நான் திட்டினதுனால நீ சாப்பாடு கொடுக்கல இல்லனா விழுந்து விழுந்து கவனிப்பியோ.
என்ன அப்படி கேட்டுட்ட? காசு கொடுக்கற மகாலட்சுமி அவ, அதனால வடை, பாயசம் செஞ்சி கவனிசிக்க மாட்டேன்.
இந்த நக்கலுக்கு ஒன்னும் குறையில்லை. கிழக்க போற வயசுல பணம் பணம்ன்னு கேக்கறயே அந்த பொண்ணுக்கு உயிர் இருந்தா தான் மதிப்பு இல்லன்னா அது வெறும் சவம் தான். இவ்ளோ கஷ்டப்பட்டு நான் அந்த பொண்ண மடக்கி கூட்டிட்டு வந்தேன் தெரியுமா? அதுக்கானது ஒண்ணுமே நமக்கு கிடைக்காது.
டேய் போடா “பொசக்கெட்ட பயலே” ஓவரா பேசாத நானும் பொறுமையா இருக்கறேன் என்னையே கேள்வி கேட்டுனிருக்க.
அதோ அங்குட்டு இருக்கற அவளுக்கு நீயே சோத்த போடு ஏதாவது பண்ணு என்ற கணேசனின் தாய் காஞ்சனா வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொண்டார்.
மாடி வீட்டில் இருந்தவளுக்கு இது தேவையா?
கணேசனின் வீடு சொல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை. சீமை ஒட்டினால் பதித்து நான்கு புறமும் சுவர் எழுப்பி நடுவில் ஒரு மறைப்பு சுவர் கொண்டு அதில் சிறிய தகரத்தால் ஆன கதவு பொருத்தியிருந்தது.
அந்த அறையின் கதவை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே சென்றவன். அவளின் மெல்லிய பூ போன்ற தேகத்தை தொட முயன்றான்.
சற்றும் எதிர்பாராத விதமாக அவள் எழுந்து வெளியே வர நினைக்க இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு பிரேமா தடுமாறி விழ போன நேரம் அவளின் தாமரை இலை போன்ற மெல்லிய இடையை இலாவகமாக பிடித்துக்கொண்டான்.
அவனின் இந்த எதிர்பாராத செயலில் ஒரு கணம் தன்னையே மறந்து அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் தன்னையே மறந்து அவனுள்ளே இணையுமளவிற்கு மயங்கி கிடந்தாள்.
அவனின் ஆசையெல்லாம் பணமென்று ஓடிகொண்டிருந்த எண்ணத்திற்கு மாறாக இவளின் ஒற்றை மயக்க பார்வை நொடி நேரத்தில் அவனின் இளமை பசியை தூண்டிவிட்டது.
பிரேமா……
பிரேமாமாமா…………என்றான் மயக்க குரலில்,
காதல் மயக்கத்தில் இருந்தவலுக்கு அவனது வார்த்தைகள் “ரீங்காரமாய் ஒலிக்க” பூவினுள் இருக்கும் தேனினை வண்டு சத்தமில்லாமல் அருந்தி தன்னுடைய பசியை தீர்த்து கொள்வதை போல தன்னுடைய இளமை பசியை இருவருமே தீர்த்து கொண்டனர்.
வெளிச்சதிலிருந்த தன்னுடைய வாழ்கை இருட்டை நோக்கி செல்வதை அறியாமல் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டாள் பிரேமா இனி என்ன ஆகுமோ????????
****************
அங்கே மண்டபத்தில் வல்லரசுவை பார்த்ததும் முதலில் அவரிடம் சென்றது அமராவதி தான்.
“மாப்ள “
“ப்ச்” அத்தை எல்லாரும் பாக்கறாங்க பொறுமையா இருங்க சகலை கிட்ட நான் பேசுகிறேன்.
“அதுக்கில்ல மாப்ள “
அய்யோ ஒரு முறை சொன்னா புரிஞ்சிக்கிற பழக்கமே கிடையாதா? என்றவன் அங்குள்ள வரவேற்பு மேஜையில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்.
அதனை கண்டதும் பாவம் அமராவதி ஒன்றும் பேசாமல் மீண்டும் மணமேடைக்கு வந்து மகளின் அருகில் நின்றுகொண்டார்.
அனைத்து சடங்கும் இனிதே நல்லபடியாக நிறைவேற ஐயர்,
செய்முறை செய்யறவா எல்லாரும் வந்து செய்யுங்கோ என்னோட வேல முடிந்துடுத்து,
வாங்கோ, அக்காங்க ரெண்டு பேர் இருக்காளே ஆளுக்கு அஞ்சி சவரன் போடவேண்டாமோ என்றார் குறுஞ்சிரிப்புடன்,
பழனிமூர்கதனமானவர். மூர்கதனமானவர் யாரையும் நம்ப மாட்டார், எடுத்தெரிந்து பேசுவார். அதனாலோ என்னவோ இரண்டு மச்சான்களும் சின்ன மாமாவிடம் ஒட்டி கொண்டனர்.
கோவம் கொண்ட பழனி, யோவ் அய்யரே வந்தியா மந்தரத்த சொன்னியா பணத்த வாங்கனயா போய்ட்டே இருக்கனும். அத விட்டுட்டு அஞ்சி (ஐந்து ) சவரன் போடு அம்பது (ஐம்பது) சவரன் போடுன்னு சொல்ல நீ யாரு?
பழனியின் வார்த்தையில் இருந்த கோவத்தை புரிந்துகொண்ட அய்யர் சும்மா “சொன்னேன்டா கண்ணா” நான் சொன்னாலும் சொல்லலனாலும் உன் மச்சானுக்கு செய்யறத நீ சிறப்பா செய்ய போறல்லடா என்றவர் வழிந்த சிரிப்பை சிரித்து விட்டு வாங்க வேண்டிய தட்சனையை வாங்கி கொண்டு புறப்பட்டார்.
அவரை முறைத்துக்கொண்டே மேடை ஏறியவர் மனைவியை ஒரு முறை முறைதார். அதற்கு அர்த்தம் புரிந்தவர் அருகில் சென்று நிற்க முருகன் கையில் தங்கத்தாலான மூன்று சவரன் காப்பினை அன்பளிப்பாக கொடுத்தார்.
அருகிலிருந்த ஜோதிலிங்கத்தை பார்த்து, மாமா எப்படி எடுத்திருக்கோம் பாத்திங்களா? நல்லாருக்கா காப்பு என்றவர் சட்டை காலரை கெத்தாக தூக்கிவிட்டு சின்ன மாப்பிளை என்ன செய்யறாருன்னு பாக்கறனே என்றார் நக்கலான சிரிப்புடன்,
அப்பொழுது தான் கலவரத்தில் இருந்த தங்கம்மாவுக்கு மாமாவின் வார்த்தைகள் நெருப்பாய் காதில் விழ தம்பிக்காக வைத்திருந்த ஐந்து பவுன் சங்கிலியை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் திணறிப்போனாள்.
அருகில் இருந்த மதிவாணன்,
அம்மா என்னமா யோசிக்கிற?
ம்ம்ம்……. அதுவா, மாமாவுக்கு எடுத்து வச்ச நகை எங்கப்பா வச்சோம்.
அது தான் பிரேமக்கா மாடல் நல்லாருக்குனு போட்டுக்குச்சேம்மா. கடைக்கு கூட்டிட்டு போகும் போதும் பார்த்தேனே கழுத்துல ஓம் டாலர் மின்னிச்சிம்மா.
அடுத்த வார்த்தை மகனிடமிருந்து வந்தால் நடந்த அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்றுணர்ந்த தங்கம்மா,
அதில்லப்பா இதோ தொலஞ்சிடும்ன்னு நானே அப்பா கழுத்துல போட்டுட்டு அங்கங்க தேடிட்டிருக்கப்பார் நானொறுத்தி ஞாபகமறதி என்று தலையில் அடித்து கொண்டார்.
மனைவியின் பதட்டத்தை புரிந்த கணவன் மதிவாணா, அம்மா தான் சொல்றாங்கலே இது தான் அந்த ஜெயின், வா தங்கம்மா முருகனுக்கு போட்டுவிடு என்றவர்,
பாத்தியா தங்கம் இதுக்குதான் வெண்டைக்காயும், வல்லாரை கீரையும் நெறய சாப்டுன்னு சொல்ற கேட்கமாட்டேங்கற என நக்கலடிதார்.
அவளும் போலியான சிரிப்பை சிரித்துக்கொண்டே தம்பியின் கழுத்தில் நகையினை போட்டாள்.
மனதில் வஞ்சகத்துடன் இருந்த பழனி இதுதான் சந்தர்ப்பமென்று,
ஆமாமா அவன் சம்பளத்தை மட்டும் வாங்கியா இப்படி சபை நிறைய செய்ய போறான். எத்தனைபேர் வாயிலயும் வயித்துலயும் அடிச்சானோ தெரியலையே?
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த தங்கம்மா
மாமா…… வார்த்தையை பார்த்து பேசுங்க.
என்ன தங்கம்மா அக்கா புருஷன்னு கொஞ்சமகூட மரியாதை இல்லாம சபையிலையே எதிர்த்து பேசற.
பின்னென்ன மாமா, என்னோட புருஷன் இப்ப வரைக்கும் எந்த கெட்ட பேருமில்லாம சட்டதுக்கு புரம்பா ஒரு தவறையும் செய்ததில்லை.
சபை நெறைஞ்சிருக்கற இந்த நேரத்துல ஆயிரம் கோபமிருந்தாலும் இப்படி பேசலாமா? பெரியவங்க நீங்களும் சொல்லுங்க என்றாள் கண்கள் கலங்கிட,
தங்கம்மா அமைதியா இரு, பேசறவங்களுக்கு விளக்கம் கொடுக்கற பழக்கம் எனக்கில்லை. எனக்கு முக்கியமான வேலை இருக்கு உடனடியாக வேலைக்கு கெளம்பனும் என்றார் வல்லரசு பிரேமாவை மனதில் நினைத்து,
ம்ம்ம்ம்…..பாத்திங்களா? பாத்திங்களா?
இதுக்குதான் சொன்னேன் அவன் திருட்டு தனம் பண்ணினதுனால இங்க இருக்க முடியல. நேர்மையா இருக்கறவன் எதுக்கு கெளம்பனும்னு துடிக்கிறான்.
இவன் பண்ணின பாவம் சும்மா விடுமா? அதனாலயோ என்னவோ தளச்சன் புள்ளைய எமன் வாங்கிகிட்டான்.
கொஞ்சமும் யோசிக்காமல் வார்த்தையில் அக்கினியை வாரி கொட்டினான் பழனியப்பன்.
குழந்தையை பற்றி பேசியதும் தங்கமாவுக்கு பழைய நினைவெல்லாம் தூண்டிவிட மண்டையினுள் மிகப்பெரிய வலி உண்டாகி மயங்கி விழுந்தாள்.
ஆமாங்க செய்யாத பூஜையில்லை, இருக்காத விரதமில்லை, போகாத கோவிலில்லை ஆனாலும் இறைவனுக்கு ஏனோ அவள் மீது இறக்கில்லாமல் செய்த செயலினால், அந்த குழந்தை மூன்று வருடம் கழித்து கிடைத்தும் எமனுக்கு கொடுத்துவிட்டாள்.
அதனாலோ என்னவோ முதல் குழந்தை ஞாபகம் வந்தாலே தங்கம்மாவின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அந்த ஞாபகம் வரும்போதெல்லாம் செத்துபிழைப்பாள்.
குழந்தை வரம் இல்லாதவருக்கு தானே அதனோட வலி தெரியும்.
தங்கம்மாவின் நிலைமையை பார்த்து கடுப்பான முருகன், மணமேடையில் மனைவியின் கையினை உதறி தள்ளிவிட்டு மயங்கிய அக்காவை அள்ளி தோளில் போட்டுகொண்டான்.
கிளம்புங்க மாமா போகலாம்.
புரிஞ்சிக்கிறவங்ககிட்ட பேசலாம் புரியாத தற்குறி கிட்ட எதுவுமே பேசமுடியாது.
யாருடா தற்குறி?
நீ தான் தற்குறி.
“நீ மட்டும் தான் தற்குறி ” என்றது கர்ஜனையாக ஒரு குரல்.
தொடரும் அத்தியாயம்-6.
error: Content is protected !!