Skip to content
Post Views: 642
“மாமா அம்மாவ எதுவும் சொல்லாதீங்க எனக்கும் தனியா எந்த விருப்பமும் கிடையாது” என்றான் அவசரமாக சுபாஷ்
“அப்ப என்னப்பா உன் பிரச்சனை உங்க அம்மா சொல்ற மாதிரி டாக்டர் படிக்க வேண்டியதுதான. உனக்குன்னு ஒரு ஆசை இல்லைன்னு சொல்ற அப்ப உங்க அப்பா அம்மாவோட ஆசைய நிறைவேத்த வேண்டியது தானே அதுல உனக்கு என்னப்பா கஷ்டம்” என்றார் விநாயகம்.
“அ..து அ…து வந்…து” என்று பதில் சொல்ல முடியாமல் அவன் திணற
“அதுக்கு பதில் நான் சொல்லட்டாபா” என்ற வேதாச்சலம் தாத்தாவை அனைவரும் திரும்பி பார்க்க
Advertisement
“என்னப்பா அதிர்ச்சியா பார்க்க அதுக்கு பதில் நான் சொல்லட்டா ஸ்கூல் படிப்பை முடிக்கவே நம்ம அம்மா படாத பாடு பட்டுச்சி அப்படி இருக்கும்போது நம்மள டாக்டருக்கு படிக்க வைக்க நம்ம அம்மா எவ்வளவு பாடுபடுவா. உங்க அம்மாவ கஷ்டப்படாம பாத்துக்க வேண்டிதான நீ டாக்டர் படிக்க மாட்டேன்னு சொல்ற கரெக்டா” என்றவரை
அதிர்ச்சியுடன் பார்த்தான் சுபாஷ்.
“ என்னப்பா அப்படி பாக்க உன் மனசுல உள்ளத எப்படி தாத்தா கரெக்டா சொல்றாருன்னு பாக்கியா” என்றவருக்கு ஆமாம் என்பது போல தலையாட்ட
Advertisement
“ மொத மொதல்ல உன் கிட்ட பேசும்போதே உன்னோட கேரக்டர் என்னன்னு எனக்கு புரிஞ்சிட்டு அதனாலதான் உன்னோட இப்ப உள்ள மனநிலைய நான் கரெக்டா சொல்றேன். பாத்தியமா இந்திரா உன் புள்ள உனக்கு கஷ்டம் தரக்கூடாதுனு அவன் டாக்டர் படிக்க மாட்டான்னு சொல்றான் அந்த பிள்ளையை நீ எப்படி திட்டுற”என்று சைடுக்கேப்பில் இந்திராவை ஒரு கொட்டு வைத்தார் தாத்தா.
Advertisement
“ டேய் தாத்தா சொல்றது உண்மையா. எனக்கு கஷ்டம் தரக்கூடாதுனு தான் நீ டாக்டர் பிடிக்க மாட்டேன்னு சொல்றியா சொல்லுடா அம்மா முகத்தை பார்த்து சொல்லுடா” என்று தலைகுனிந்து நின்றவனின் முகத்தை நிமிர்த்தி அவன் கண்களை பார்த்து கேட்டார் இந்திரா.
“ஆமாம்மா உனக்கு கஷ்டம் தரக்கூடாதுன்னு தான் நான் டாக்டர் படிக்க மாட்டேன்னு சொன்னேன். என்னால நீ கஷ்டப்படுறதை பார்க்க முடியலமா. உங்க குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் உங்கள பத்தி கேவலமா பேசும்போது என்னால தாங்க முடியலம்மா. ப்ளீஸ்மா நான் டாக்டருக்கு படிக்கல ஏதோ ஒரு டிகிரி படிச்சிட்டு உன்னை கண் கலங்காம அடுத்தவங்க கிட்ட கையேந்தாம நான் பாத்துக்குறேன்மா”என்று தனது அன்னையிடம் கண்ணீருடன் கெஞ்சினான் சுபாஷ்.
அவன் அழுவதை பார்த்து அவனை அணைத்துக் கொண்டு இந்திரா, “ஐயோ கடவுளே எங்களை ஏன் இப்படி சோதிக்கிற” என்று அழ அவர்கள் இருவரின் அழுகை பார்த்து திவ்யா திருவின் கையை எடுத்துவிட்டு தனது அன்னை மற்றும் தம்பியை அழைத்துக்கொண்டு கதறி அழுதாள்.
Advertisement
மூவரின் அழுகையை தாங்க முடியாமல், “என்னமா இந்திரா எதுக்கு அழுவுற உன்ன பாத்து பிள்ளைகளும் அழுது பாரு கண்ணை தொட” என்று சமாதானம் சொன்ன வேதாச்சலம்.
“இங்கே பாரு ஜூனியர் என்ன பொறுத்த வரைக்கும் நீயும் என்னோட பேரன் மாதிரி தான் நீ என்ன உன்னோட சொந்த தாத்தாவா பாக்கியான்னு எனக்கு தெரியாது. ஆனா நான் உன்னை என்னோட சொந்த பேரனா தான் பார்க்கேன். அதனால உன் படிப்பு செலவு பத்தி எதுவும் கவலைப்படாத எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்” என்றவருக்கு ஏதோ சொல்ல வந்த சுபாஷை தடுத்து நிறுத்தியவர், “ நீ என்ன சொல்ல வரன்னு எனக்கு தெரியுது நீ ஒன்னும் என்னோட காசுல படிச்சு டாக்டர் ஆக வேண்டாம். இப்ப நான் உனக்கு கடனா அந்த காசு தரேன் அத வச்சு நீ படிச்சு முடிச்சுட்டு வந்து நம்ம ஊர்ல நாங்க கட்டப் போற ஹாஸ்பிடல்ல அஞ்சு வருஷம் வேலை பார்த்து உன்னோட கடனை அடிச்சுரு. என்னோட பையனுக்கு அவன் ரெண்டு பசங்கள ஏதாவது ஒருத்தன் டாக்டர் படிச்சு நம்ம ஊருக்கு சேவை செய்வான்னு கனவு கண்டான். அது நடக்கவே இல்ல அதான் இப்போ நான் உன்கிட்ட கேட்கேன் என்ன சொல்ற இந்த டீலிங் உனக்கு ஓகேவா” என்றார் வேதாச்சலம் தாத்தா.
“தாத்தா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. நான் டாக்டர் ஆகிறது எங்க அப்பாவோட ஆசை என்கிறத விட என்னோட கனவு தாத்தா. ஆனா என்ன பண்ண என் கையில காசு இல்ல எங்க அம்மா கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல. இதுல அக்காவுக்கு வேற கல்யாணம் ஆயிட்டு அவளுக்கு வேற நான் சீர் செய்யணும். அம்மாவ கஷ்டப்படாம பாத்துக்கணும் இப்படி நிறைய பொறுப்பு என் தலை மேல இருக்கு தாத்தா. இந்த பொறுப்புகளுக்கு முன்னாடி என்னோட ஆசை கனவு எல்லாம் வெறும் தூசி மாதிரி தான் எனக்கு தெரிஞ்சது. நான் டாக்டர் படிக்கப் போயிட்டா எங்க அம்மா இன்னும் கஷ்டப்படுவாங்க. இதுல எங்க அக்கா குழந்தை உண்டாகிட்டா அவளுக்கு பார்க்க எங்க அம்மா எங்க போவாங்க. இப்படி எல்லாத்தையும் யோசிச்சு தான் சின்னதா எதாவது டிகிரி படிச்சிட்டு அம்மாவ பார்த்துக் கொள்ளலாம்னு நினைச்சேன் தாத்தா. ஆனா நீங்க என்னோட பொறுப்பு எல்லாத்தையும் ஒன்னு இல்லாம பண்ணிட்டீங்க கண்டிப்பா நான் நல்ல டாக்டர் ஆகி இந்த ஊருக்கு வந்து சேவை செய்வேன் தாத்தா” என்றவனை பெருமையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் இந்திரா.
“சரி வாங்க எல்லாம் சுகமா முடிஞ்சிட்டு இல்ல. வீட்டுக்கு போய் இத எல்லாரும் சேர்ந்து கொண்டாடலாம் வாங்க. இந்த இருட்டு ரூம்ல இன்னும் எவ்வளவு நேரம் நிக்க வாங்க எல்லாரும் வீட்டுக்கு போலாம்” என்று அழைத்தாள் புஷ்பா.
“ஆமா வாங்க எல்லாரும் வீட்டுக்கு போவோம்” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் வேதாச்சலம்.
அவர்களின் பின்னே செல்லப் போன சுபாஷ் கையை பிடித்த சரண்,“அப்பாடி குட்டி மச்சான் எப்படியோ இந்த ஹிட்லர் கிட்ட இருந்து என்ன காப்பாத்திட்ட” என்ற சரனை புரியாமல் பார்த்தான்.
“என்ன புரியலையா குட்டி மச்சான். எங்கப்பன் இருக்கானே அப்பன் அந்த ஹிட்லருக்கு மூத்த பையன் ஆகிய எங்க அண்ணன் அதான் பா உன்னோட அத்தான் திருகுமரன் அவன் போலீஸ் ஆகி இந்த ஊருல எந்த தப்பும் நடக்காம பார்த்துக்கணும் ஆசைப்பட்டாரு. அதே மாதிரி அந்த மிஸ்டர் குமரனும் அந்த ஆசைய நிறைவேற்றி விட்டான். அதோட கம்முனு இருக்க வேண்டியதுதானே அந்த ஆளு. விட்டாரா இல்லையே அவரோட கடைசி பையனாகிய நான் டாக்டர் ஆகி இந்த ஊருக்கு ப்ரீயா சேவை செய்யணும் நெனச்சாரு. ஆனா அவருக்கு தெரியல பத்தாப்பே பிட் அடிச்சு தான் நான் பாஸ் ஆனேன். என்ன போய் அவர் டாக்டராக்கி பாக்கணும்னு நெனச்சது தப்பு தான. அந்த மனுஷனுக்கு அது புரியாம வருஷம் புள்ள என்ன முறைச்சுட்டு திரியிறார் டா. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் உன்னால தான் எனக்கு பாவ விமோசனம் கிடைக்கணும்னு இருந்திருக்கு. எப்படியோ என்னை காப்பாத்திட்ட. அதே மாதிரி நல்ல டாக்டராகி என்னோட பேரையும் காப்பாத்திடுடா” என்று சொல்லி அவனின் தோளில் தட்டி சென்றவனே புரியாமல் பார்த்து நின்றான் சுபாஷ்.
@@@@@@@@@@@@
“எங்க அந்த நாளாவது தெரு பத்மா இந்த மாசம் வட்டி பைசா தந்துட்டாளா” என்று தனது கனத்த உடலை தூக்கிக்கொண்டு வரவேற்பு அறையில் இருந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்த தனது கணவரிடம் வந்து கேட்டாள் வசுந்தரா .
“இல்லம்மா அவளே பாவம் அவளோட பொண்ண ஹாஸ்பிடல் வச்சிட்டு வீட்டுக்கும் ஹாஸ்பிடலுக்கும் அலையுறா அவகிட்ட போய் எப்படி வட்டி காசு வாங்க முடியும். அதான் நேத்து வந்து அந்த புள்ள ஒரு பத்து நாள் கழிச்சு வட்டி பைசா தரேன்னு சொல்லுச்சி நானும் சரியுமானு சொல்லிட்டேன் மா” என்றார் மெதுவா ஐயோ இந்த மண்டோதரி என்ன சொல்லுவான்னு தெரியலையே என்ற பயத்துடன் அவளின் கணவர் ரவி.
“என்னது வட்டி காசு தரலையா அதுவும் பத்து நாள் டைம் வேற கொடுத்தீங்களா என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க. என்ன பயம் விட்டு போச்சோ பையன் ஊருக்கு வந்ததிலிருந்து உங்க போக்கு ஒன்னும் சரியில்லை பார்த்துக்கிறேன். எனக்கு தெரியாது நாளைக்கு அவங்க கிட்ட இருந்து வட்டியோட பணத்தை வாங்கிட்டு வரீங்க. இல்ல நான் மனுஷியா இருக்க மாட்டேன் பாத்துக்கங்க” என்று கோபமாக கத்தினாள்.
“ஆமா இப்ப மட்டும் நீ மனுஷியா தான் இருக்க பாரு. கடவுளே இந்த மண்டோதரிக்கிட்ட இருந்து நான் தப்பிக்கவே முடியாதா காலம் ஃபுல்லா இவகிட்ட மாட்டிகிட்டு சிக்கி சீரழியனும்னு என் தலையில் எழுதி இருக்கியா” என்று மெதுவாக தனது விதியை நொந்து கொள்ள
“என்ன கேட்டதுக்கு பதில் சொல்லாம வாய்க்குள்ள என்னத்தையோ முனங்கிட்டு இருக்கீங்க. எதா இருந்தாலும் சத்தமா பேசுங்கன்னு உங்ககிட்ட எத்தனை தடவை சொல்ல ” என்று அவள் கத்திக்கொண்டு இருக்கும்போதே “அம்மா அப்பா” என்று சந்தோசமாக அழைத்துக் கொண்டு ஸ்வீட் பாக்ஸுடன் உள்ளே வந்தான் ரமேஷ்.
“என்னமா எதுக்கு காலையிலேயே அப்பாவை கத்துகிட்டு இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டு அவர்களின் அருகே வந்து அமர்ந்தான்.
“ஆமா உங்க அப்பா ஒன்னும் தெரியாத பாப்பா பாரு நான் தான் அவரை ஒரே திட்டிகிட்டு இருக்கேன். வந்துட்டான் அப்பாவுக்கு சொம்ப தூக்கிட்டு சப்போர்ட் பண்ண”
“ஏம்மா காலையில் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க”
“உங்க அம்மா என்னைக்கு டா சந்தோஷமா இருந்தா அவளும் சந்தோசமா இருக்க மாட்ட அவளை சுத்தி இருக்கிற ஆளுங்களும் சந்தோசமா இருந்தா உங்க அம்மாவுக்கு பொறுக்காது. அவ டிசைனே அப்படித்தான் சரி நீ சொல்லு எதுக்கு ஸ்வீட் பாக்ஸ் வாங்கிட்டு வந்திருக்க” என்றுவரை முறைத்துப் பார்த்தாள் வசுந்தரா
“ஆமாப்பா மறந்துட்டேன் பாருங்களேன் நான் சொல்ல வந்த விஷயத்தை அம்மா அப்பா முதல்ல இந்த லட்ட பிடிங்க” என்று ஆளுக்கு ஒரு லட்டை கையில் கொடுத்து இருவரையும் சாப்பிட சொன்னான்.
அவன் தந்த லட்டை சுவைத்துக் கொண்டு, “எதுக்குடா லட்டு உனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கா” என்று கேட்டாள் வசுந்தரா.
“ இல்லம்மா எனக்கு ப்ரமோஷன் கிடைக்கல”
“ அப்ப எதுக்குடா ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்க”
“நம்ம இந்திரா சித்தி இருக்காங்கள அவங்க பையன் பிளஸ் டூ ல டிஸ்ட்ரிக்ட் பஸ்ட் வந்து இருக்கேன்மா” என்றான் சந்தோசமாக ரமேஷ்.
“ டேய் என்னடா சொல்ற நம்ம சுபாஷா டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி இருக்கானா” என்று சந்தோசம் கலந்த ஆச்சரியத்துடன் கேட்டார் ரவி.
“ஆமாப்பா அவன் தான் என் தம்பி ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிட்டேன் பா”
“ரொம்ப சந்தோசம் டா பாவம் இந்திரா எவ்ளோ கஷ்டப்பட்டா எப்படியோ நல்லா படிச்சு அந்தப் பையன் முன்னேறி அவள நல்லா பாத்துக்கிட்டா சரிதான். அவ கஷ்டப்பட்டதுக்கு எல்லாம் கடவுள் இனி தான் பலன் கொடுக்கப் போறாரு பாரு”
என்றார் நெகிழ்ச்சியுடன் ரவி.
“ என்னது கடவுள் அவளுக்கு பலன் கொடுக்கப் போறாரா. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க அப்பாவும் மகனும். அவ எனக்கு தங்கச்சி இல்ல நான் சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் என்ன அவளுக்கு வேண்டி சந்தோஷப்பட்டு இருக்கீங்க. அதுவும் அந்த அனாதையோட பையன் மொத மார்க்கு வாங்கிட்டேன் ஸ்வீட் வேற வாங்கிட்டு வந்து இருக்கியா நீ. இங்க பாருடா அவ எனக்கு தங்கச்சி கிடையாது அப்படி இருக்கும் போது உனக்கு எப்படி அவ சித்தி ஆவா. அவர் சித்தி இல்லனா எங்க இருந்துடா அந்த ரெண்டு அனாதை பிள்ளைங்க உனக்கு தம்பி தங்கச்சி ஆவாங்க. என்னங்க உங்களுக்கு என்ன மச்சினிச்சி மேலே ரொம்ப பாசம் பொங்குதோ ரெண்டு பேரும் பார்த்து இருந்துக்கோங்க இல்ல உங்க ரெண்டு பேரையும் நான் என்ன செய்வேன்னு தெரியாது” என்று கோபத்துடன் கத்திவிட்டு உள்ளே சென்றார் வசுந்தரா.
“ அப்பா ஏன் பா இந்த அம்மா இப்படி பேசுது” உள்ளே போன தனது அன்னையை பார்த்து வேதனையுடன் கேட்டான் ரமேஷ்.
“விடுடா உங்க அம்மா பண்ண பாவத்துக்கு எல்லாம் பலன் இனிமே தான் அவளுக்கு கிடைக்கப் போகுது பாரு. பணம் மட்டும்தான் வாழ்க்கன்னு நெனச்சிட்டு இருக்கா மொத்தமா எல்லாத்தையும் இழந்து இவ நடுத் தெருவுல பாசத்துக்காக ஏங்கி நிற்கப் போறா பாரு. அப்பதான் சொந்தத்தோட அருமை அவளுக்கு புரியும். அதுவரைக்கும் இவ கிட்ட எதுவும் பேச முடியாது டா” என்றார் நொந்துப் போய் ரவி.
“விடுங்கப்பா பாத்துக்கலாம் நீங்க பீல் பண்ணாதீங்க” என்று அவருக்கு ஆறுதல் சொன்னான் ரமேஷ்.
அவர் காலத்தை தெரிந்து சொன்னாரோ தெரியாமல் சொன்னாரோ தெரியாது ஆனால் வசுந்தராவுக்கு காலம் தனது பாடத்தை வலிக்க வலிக்க கற்றுத் தர போகிறது……
error: Content is protected !!