Skip to content
Post Views: 2,988
அத்தியாயம் 11
“டேய் பாரி அந்த பில்டிங் பின்னாடி இருக்கான் பாரு டா.. அட்டாக்..அட்டாக்”
Advertisement
“ஹேய் .. நீ முதல்ல குனிடா.. உன்ன பின்னாடி இருந்து அட்டாக் பண்ண ஒருத்தன் வரான்டா…”
“டம்..டம்..டமால்..”
Advertisement
Advertisement
“டேய்ய்… வேகமா போடா…”
“இந்தா இந்த எனர்ஜி பூஸ்ட்டரை எடுத்துக்கோ வில்வா”
Advertisement
“ஸ்ஸ்ஸ்…..ஆஆ..”
“அடாக்க்க்க்க்க்….”
தொடர்ந்து இது போல ஒரே கூச்சலாக இருந்தது.
“கடன்காரங்களா… பரீட்சை முடிஞ்சதுல இருந்து இந்த வீடியோ கேம்மையே கட்டிக்கிட்டு அழுகுறானுங்க…” என்று முனுமுனுத்துக்கொண்டே அமர்ந்திருந்தார் கருணாம்பிகையின் பாட்டி.
“டேய்.. நான் செத்துட்டேன்டா…”
“செத்துட்டியா … கொஞ்ச நேரம் கழிச்சு சாக கூடாதா? சரி கவலைப்படாதே… இருடா நான் இந்த நெட்டையனை கொன்னுட்டு வந்து உன்னை பார்க்கிறேன்..”
“பார்த்து டா.. நீயும் போய் செத்துடாதே..”
“ஏய் சுமதி.. எடு அந்த துடப்பத்தை.. வெள்ளி கிழமை அதுவுமா விளக்கு வச்ச நேரத்துல என்ன பேசுதுங்க பாரு இரண்டும்..” என்று வெகுண்டெழுந்து விட்டார் பாட்டி.
“விடுங்க அத்தை.. அது கேம் தானே..”
“என்ன கருமாந்திரம் பிடிச்ச கேம் இது… செத்து போய்ட்டேன்…. கொலை பன்றேன்னுட்டு..”
“நல்லா கேளுங்க பாட்டி.. எப்ப பார்த்தாலும் இதே வேலை இரண்டு பேருக்கும்” என்று பாட்டியை ஏற்றிவிட்டு கொண்டிருந்தாள் கருணா.
“நான் ரீஸபான் ஆயிட்டேன்..ஹூ ஹூ..நண்பேன்டா…” என்று கத்தினான் வில்வா.
“அது என்ன கருணா சொல்லுறானுங்க”
“ரீஸபான் பாட்டி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செத்துட்டேன்னு சொன்னான் இல்ல, இப்ப உயிர்தெழுந்துட்டான்.. அதை தான் சொல்லுறான்..”
“கருமம்.. கருமம்.. “ என்று பாட்டி தலையில் அடித்து கொண்டார்.
“உயிர்தெழுறது நல்ல விஷயம் தானே.. அதுக்கு எதுக்கு கோவப்படுறீங்க அத்தை” என்றார் சுமதி.
மாமியாரின் தீ பார்வையில் அடுப்படிக்குள் புகுந்து கொண்டார்.
இங்கே நடக்கும் எந்த சம்பாஷனையும் வில்வா பாரி காதுகளுக்குள் நுழையவே இல்லை. அவர்கள் தான் விளையாட்டு உலகத்திற்குள் புகுந்து விட்டார்களே.
“விடுங்க பாட்டி, அவங்க இரண்டு பேருக்கும் காதே கேக்காது. கத்துனா உங்களுக்கு தான் ப்ரஷர் ஏறும்”
“அதை சொல்லு.. இந்த தமயந்தி அண்ணன் பையன் வந்திருக்கான் இல்ல.. அவினாஷ்.. இவங்க வயசு தானே.. எப்படி இருக்கான் பாரு… உங்க அம்மாக்கு கூட அவ்வளவு சம்மார்தியம் வராது.. அப்படி கட்டு சோப்பா குடும்பத்தை நடுத்துறான்.. அவன பார்த்தாவது பொறுப்பு வருதா பாரு இவனுங்களுக்கு..”
“உனக்கு டிவி சீரியல் பார்க்க முடியலைன்னு பசங்களை கரிச்சு கொட்டாதே சவுந்திரம்” என்று வந்தார் தாத்தா.
“உங்க தாத்தாக்கு கொழுப்பை பார்த்தியா கருணா.. நீங்க இவனுங்க பக்கத்துல பத்து நிமிஷம் உட்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும் நான் ஏன் பொலம்புறேன் அப்படின்னு” என்று பேத்தியிடம் தொடங்கி கணவரிடத்தில் முடித்தார்.
“கோவிலுக்கு போகணும்னு சொன்னீயே.. இன்னும் கிளம்பலையா?”
“நான் கிளம்பியாச்சு… உம்ம வேலையை பாரும்” என்று நொடித்துக்கொண்டு எழுந்து சென்றார் பாட்டி.
பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிந்ததும் இருவரும் சேர்ந்து இந்த வீடியோ கேம் வாங்கி இருந்தார்கள். அதை டிவியில் கநெக்ட் செய்து விளையாடுவதே இவர்களுது முக்கிய வேலை.
“பாட்டி இருங்க நானும் உங்களோடு கோவிலுக்கு வரேன்” என்று கருணாவும் கிளம்பினாள்.
“பாட்டி, போகும் போது அப்படியே அருந்ததியையும் கூட்டிட்டு போலாம்“
“ஏற்கனவே நேரமாச்சு.. இனி அந்த பொண்ணையும் கிளப்பி எப்ப போறது?”
“சின்ன பொண்ணு தானே பாட்டி, அதுவும் போற வழி தானே.. அப்படியே கூட்டிட்டு போய்டலாம். நீங்க மெதுவா வாங்க.. நான் வேகமா போய் அவளை கூப்பிடறேன்.. இரண்டு நிமிஷம்.. “ என்று விரைந்து விட்டாள்.
“எங்க வீட்டுல ஒன்னொன்னும் ஒரு ரகம், எல்லாம் சரியான ராகுகாலம் தான்.. கால்ல சக்கரம் தான் கட்டியிருப்பா இவ எப்பவும். பாட்டி உங்க கூட வரேன்னு கிளம்பி வந்துட்டு இப்ப ஓட்டத்தை பாரு..” என்று முனங்கி கொண்டே வந்தார் பாட்டி.
இவர்கள் வீட்டில் இருந்து மூன்று வீடுகள் தள்ளி தான் அவினாஷ் வீடு. கேட்டில் இருந்தே “அருந்ததி அருந்ததி” என்று சத்தமாக அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் கருணா.
“வாங்க அக்கா.. “ என்று ஆசையாக வரவேற்றாள் சிறுமி.
“நானும் பாட்டியும் கோவிலுக்கு போறோம். அதான் உன்னையும் கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.. வா”
“இருங்க க்கா அண்ணாக்கிட்ட கேட்டுட்டு வரேன்”
“அண்ணா.. அண்ணா…”
“என்ன பாப்பா?” என்று உள்ளிருந்து கேட்டான் அவினாஷ்.
“கருணா அக்கா கோவிலுக்கு கூப்பிட்றாங்க.”
——-
“போட்டுமா அண்ணா?”
——
“ப்ளீஸ் அண்ணா …”
“சீக்கிரம் வந்துடனும்.. சரியா? தெரியாதவங்க யார் கிட்டயும் பேசக்கூடாது. அந்த அக்கா கை பிடிச்சிட்டு போயிட்டு வந்துடணும்”
“சரி அண்ணா.. பாய்..”
“அப்புறம் பாப்பா..” என்று மீண்டும் எதோ சொல்ல வந்தான்.
“உங்க பாப்பாவை பத்திரமா கொண்டு வந்து விட்டுடறேன். பத்து எட்டு வச்சா கோவில்.. அதுக்கு உங்க அலும்பு கொஞ்சம் ஓவர் தான்..” என்று அவனுக்கு பதில் கொடுத்து விட்டு,
“சீக்கிரம் வா அருந்ததி.. பாட்டி வெளிய நிக்குறாங்க” என்று அவளை அழைத்து கொண்டு சென்றாள் கருணாம்பிகை.
அவினாஷ் தாத்தாவிற்கு உதவிகொண்டு இருந்தான்.
“சரியான வாயாடி..” என்று முனங்கி கொண்டான்.
இங்கே வந்து இருபது நாட்கள் ஆகிறது. பாரியும் வில்வாவும் இவர்களுடன் பேசுவார்கள் தான். ஆனால் ஒரு எல்லையோடு நின்று கொள்வார்கள். கருணா மட்டுமே சரசர பட்டாசு.
இந்த இட மாற்றம் தாத்தாவின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றத்தை தந்திருந்தது. அதுவே அவினாஷிற்கு இந்த முடிவு சரிதான் என்ற நிம்மதியை தந்தது.
வீட்டு வேலைகளிலோ உணவு விஷயத்திலோ உதவி செய்ய வந்த தமயந்தியை கண்டிப்புடன் மறுத்து விட்டான்.
“ஏற்கனவே நீங்க நிறைய உதவி செஞ்சிருக்கீங்க அத்தை.. உங்களால் தான் அங்க எல்லாத்தையும் செட்டில் செஞ்சுட்டு இங்க புது இடத்துலயும் எங்களால் எந்த பிரச்சனையும் இல்லாம குடி வர முடிஞ்சுது. இதுக்கு மேல உங்க கிட்ட உதவி வாங்கிக்கிறது சரி இல்லை. என்னால முடியலைன்னா நானே நிச்சயம் கேக்கறேன்“ என்று முடிவாக கூறி விட்டான்.
தமயந்தி பாவமாக பார்க்கவும், “நீங்க எப்ப வேணாலும் வாங்க.. தாத்தாவோட இருங்க பேசுங்க.. அதுவே பெரிய ஆறுதல் எங்களுக்கு. நீங்க சொல்றதை எல்லாம் நான் கேட்டேனா இல்லையா.. இதை நீங்க ஒத்துக்கணும்” என்றான்.
அதற்கு மேல் தமயந்தியும் விட்டு விட்டார்.
பாரிவேந்தன் வந்து தாத்தாவை முதன்முதலாக பார்த்த போது,
அவர் கை அசைத்து அவனை அருகில் அழைத்து அவனை தொட்டு பார்த்தார். கண்கள் கலங்கியது அந்த முதியவருக்கு. பாரி பிறந்த போது தர்மராஜ் அழைத்து விஷயத்தை கூறிய போது, என் பொண்ணே செத்துட்டா.. அப்புறம் எப்படி பேரன் பிறப்பான்” என்று அச்சாணித்தனமாக கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.
தினமும் ஒரு முறை வந்து தாத்தாவை பார்த்து செல்வான் பாரி. பெரும்பாலும் அவனுடன் வில்வாவும் வருவான். இருவருக்கும் அரை சென்டிமீட்டர் அளவு ஒரு புன்னகை தருவான் அவினாஷ், அவ்வளவே.. அவர்களும் ஹாய்.. என்பதோடு சென்று விடுவார்கள்.
அருந்ததி அவர்களை மிரசட்சியுடன் தான் பார்ப்பாள். எதுவும் பேச்சு வைத்து கொள்ள மாட்டாள்.
கருணா தமயந்தியுடன் அடிக்கடி வருவாள்.
“சீக்கிரம் எந்திருச்சு உட்காரணும் தாத்தா.. எங்க அத்தை இத்தனை வருஷம் அவங்களோட பேசலைன்னு நிறைய சண்டை போடணுமாம் உங்ககூட, புரியுதா… அதனால சீக்கிரமா உடம்பை தேத்துங்க” என்று தாத்தாவையே மிரட்டிவிட்டு செல்வாள்.
அருந்ததியுடணும் பேசி பேசி நல்ல தோழமையை ஏற்படுத்திக்கொண்டாள்.
அவினாஷிடமும் பேசவாள் தான். ஆனால் ஆம், இல்லை, சரி வேண்டாம் இதை தவிர அதிக பதில் வராது அவனிடம்.
ஆனாலும் அவள் பேச வேண்டியதை பேசி விட்டே செல்லுவாள்.
இதற்கிடையில் தர்மராஜிடம் மீண்டும் வேலை விஷயமாக கேட்டிருந்தான் அவினாஷ்.
“முதல்ல இந்த பிளஸ் டூ எக்ஸாம் எழுதிடு. பிரைவேட்டா அப்ளை பண்ணா ரீ எக்ஸாம் டைம்ல எழுதிடலாம். அதுக்குள்ள என்ன வேலைக்கு சேரலாம்ன்னு யோசிப்போம்” என்றார்.
அவனுக்கும் அது சரியெனவே பட்டது.
“நீயே படிச்சிடுவீயா.. இல்ல டியூட்டர் ஏற்பாடு செய்வோமா?”
“நானே படிச்சுப்பேன் மாமா..”
“செலவாகும்ன்னு யோசிக்காதப்பா, பார்த்துக்கலாம்.”
“அப்படி இல்லை மாமா.. நிஜமாலுமே நானே நல்ல படிப்பேன்..”
“பாரியும் வில்வாவும் இந்த வருஷம் தான் எக்ஸாம் எழுதியிருக்காங்க.. நீ எந்த க்ரூப் “
“ப்ர்ஸ்ட் குரூப்..”
“அவங்களும் அதே குரூப் தான்.. எல்லா புக்ஸும் இருக்கு.. அதை வச்சு படிக்க ஆரம்பி.. தேவை பட்டா சொல்லு.. டியூட்டர் ஏற்பாடு செஞ்சுப்போம்”
“சரி மாமா.. ரொம்ப தேங்க்ஸ்..”
அவினாஷிற்கு புக்ஸ் கொண்டு கொடுங்க என்று தர்மராஜ் இருவரிடமும் கூறி இருந்தார்.
இவர்கள் இருவரும் தான் கேம்மும் கையுமாக இருக்கிறார்களே.. புக்குகளை எல்லாம் கருணாம்பிகை தான் கொண்டு வந்து கொடுத்தாள்.
“எனக்கு நிறைய மிஸ் தெரிஞ்சவங்க இருக்காங்க. ஏதாவது டவுட் இல்லனா சொல்லி கொடுக்கனும்னா சொல்லுங்க நான் கூட்டிட்டு போறேன்” என்றாள் அவினாஷிடம் புத்தங்களை கொடுத்துக்கொண்டே
“எதுக்கு இவ்வளவு வெய்ட் நீ தூக்கிட்டு வந்த பாப்பா.. கூப்பிட்டு இருந்தா நானே வந்து இருப்பேன் இல்ல..” என்றான் அவினாஷ்.
“என்னது நான் உங்களுக்கு பாப்பாவா? உங்க குடம்பத்துல எல்லாருமே பாப்பா தானா.. கால் மீ கருணாம்பிகை” என்றாள் பட்டென்று.
அவினாஷிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அத்தை அவளை பாப்பா என்று அழைப்பதை கேட்டு அப்படி கூறி விட்டான்.
“சாரி” என்றான் உடனே.
“சாரி எல்லாம் வேண்டாம், நான் மனசுல பட்டதை சொல்லிடுவேன். அதுக்கு எல்லாம் சாரி தேவை இல்லை. அவ்வளவு தான்.. இப்ப ஒழுங்கா படிங்க.. நான் இப்ப போய்ட்டு சாயந்தரம் வரேன். எவ்வளவு படிச்சிருக்கீங்கனு நான் அப்ப வந்து கேக்கறேன்” என்று சென்று விட்டாள்.
“ஆங்..” என்று செல்லும் வழியே பார்த்து கொண்டிருந்தான் அவினாஷ்.
சொன்னது மட்டும் இல்லாமல் அன்றிலிருந்து தினமும் வந்து எவ்வளவு படித்திருக்கிறான். எதுவும் சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டுக்கொள்வாள்.
“கோவிலுக்கு போற அவசரத்துல மேடம் இன்னிக்கு என்ன படிச்சு முடிச்சிருக்கேன்னு கேக்காம போய்ட்டாங்க பாருங்க தாத்தா” என்றான் தாத்தாவை பார்த்து சிரித்துக்கொண்டே.
பல மாதங்கள் கழித்து பேரன் முகத்தில் பார்த்த சிரிப்பு வேதாச்சலத்திற்கு அத்தனை மனநிறைவை கொடுத்தது.
பின் தாத்தாவின் அருகிலே அமர்ந்து படிக்க தொடங்கினான் அவினாஷ்.
—————–
error: Content is protected !!