Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kottathile oru Thanimai pura

செளந்தர்யாசெழியனின் தனிமை புறா அத்தியாயம் 3

அத்தியாயம்  3

ஆஆஆஆ…………ஆஆ…………..ஆஆஆஆ என்று காட்டு கத்து கத்தியவனின் கத்தலில் பதறிப் போன பவ்யா அவன்  வாயை தனது கைகளால் மூடியவள் அவன்  தலையில்  ஓங்கி ஒரு கொட்டு வைக்க,
ஏற்கனவே வலியில் இருந்தவன் அவள் கொட்டியதும் தனது வாயில் இருந்த பவ்யாவின் கைகளை தட்டி விட்டு தனது தலையை தடவிக் கொண்டு அவளை முறைத்து பார்த்தவன்,
“ஏண்டி  இப்ப கொட்டுன…………,???
நீ ஏண்டா இந்த கத்து கத்துறா…., காது ஜவ்வு கிழிச்சிரும் போல இருக்கு  இவள் பதிலுக்கு எகிற,
ஏண்டி……, வலிச்சா கத்தாமா பாட்டா பாடுவாங்க எரும மாடே……,
யாரப் பாத்துட எரும மாடுன்னு சொன்ன நீ தாண்டா தடிமாடு என்றவள் மீண்டும் ஒரு கொட்டு வைத்து விட்டு அவன் கைக்கு எட்டாதவாறு சற்று தள்ளி நின்றுக் கொண்டாள்.
பிச்சை அவன் கால்களுக்கு மருந்திட்டு கொண்டிருக்க, நகர்ந்து அவளை பிடிக்க முடியாக நிலையை எண்ணி வெறுத்தவன்,
முடிந்த மட்டும் அவளை முறைத்துப் பார்த்து,
போடி……, குட்டிப் பிசாசு….., குட்டிச் சாத்தான்!!!!!
நீ தாண்டா மலைமாடு…., மலைக்குரங்கு பதிலுக்கு இவள் கத்த,
போடி அரிசி மூட்டை ……, குண்டு பூசணி என அவள் உடல் வாகை இவன் கிண்டல் செய்ய என மாறி மாறி இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்தனர்,
இது வழக்கமாக நடப்பது ஒன்று தான் எனும் ரீதியில் இவர்களின் சண்டையில் தலையிடாது போனுக்குள் தலையை விட்டுக் கொண்டாள் தேவான்ஷி.
லக்ஷ்மி இவர்களின் சண்டையை சிறிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் பிச்சை மருந்திட்டு முடித்திருந்தார் இருந்தும் அவர்களின் யுத்தம் தீர்த்தப் பாடில்லை.
 அருகில் கேட்ட வண்டிச் சத்தத்தில் இருவரும் தங்களது சண்டையை சற்று நேரம் தள்ளி வைத்து விட்டு திரும்பி பார்க்க,
வேலையாள் வண்டியை ஓட்ட பின் இருக்கையில் கிராமத்திற்குரிய உடற்கட்டுடன் இவ்வீட்டிற்கு மட்டுமல்ல இக்கிராமத்திற்கே நான் தான் தலைவன் என்ற தோரணையுடன் அமர்ந்திருந்தார் சொக்கலிங்கம்.
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் இவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தவர், இவர்களின் அருகில் வந்ததும்,
வாங்க, வாங்க உங்கள காக்க வச்சதுக்கு மன்னிச்சிடுங்க தம்பி இன்னைக்கு வாரச் சந்தை நாள் அதுக்கு வண்டி அனுப்பிட்டு வரதுக்கு தாமதமாயிடுச்சு,
உள்ளார வாங்க போகலாம், .என்றவர் லக்ஷ்மி யை பார்க்க,
அவரின் பார்வையின் பொருளை அறிந்தவர், ” ஆச்சுங்க மோர் குடுத்துட்டேன் ” என்றவர்,
“மயிலு ஆரத்தி எடுத்துட்டு வா ” என அவர் குரல் கொடுத்த அடுத்த நிமிடம் ஆரத்தி தட்டுடன் வந்த மயிலின் கையிலிருந்து ஆரத்தி தட்டை வாங்கியவர்,
ஏம்மா!! புள்ளைகளா இங்கன வந்து நில்லுங்க என மூவரையும் அழைக்க,
ஏற்கனவே, மன்னிப்பை கூட கம்பீரமாக உரைத்தவரின் பேச்சில்தேவாவை தவிர மற்ற இருவரும் வியப்பில் இருந்தவர்கள்,
இப்பொழுது ஆரத்தியை கண்டு விழிக்க,
அவர்களின் யோசனை முகத்தை கண்ட பிச்சை, “எதுக்கு இந்த ஆரத்தின்னு யோசிக்கிறீங்களா???”
தேவாவை தவிர்த்து மற்ற இருவரின் தலைகளையும் ஆம் என்று உருண்டினர்.
அது ஒன்னும்  இல்ல வீட்டுக்கு யாரு புதுசா வந்தாலும் அவங்கள ஆரத்தி எடுத்து வரவேற்குறது எங்க வழக்கம் ,வந்து நில்லுங்க வாங்க,என்ற பிச்சையின் பேச்சில் மறக்காது மூவரும் வந்து நிற்க லக்ஷ்மி ஆரத்தி எடுக்க போக,
லக்ஷ்மி ஒரு நிமிஷம் நில்லு என்ற பிச்சையின் குரலில் அனைவரும் அவரை என்னவென்று பார்க்க,
மூணு பேரு நிக்கிறாங்க ஒத்தப் படையில ஆரத்தி எடுக்க கூடாது லக்ஷ்மி!
ஆனா அத்த வேறு என்ன பண்ணுறது…,மாமியாரின் கேள்விக்கு இவர் பதில் அளித்தார்.
இன்னும் ஒரு ஆள கூட நிக்க வச்சா இரட்டப் படை கணக்கு வந்திடும்…,
சரி அத்த, ஆனா யார நிக்க வைக்கிறது உங்க புள்ளைய நிக்க வைக்கவா என தனது கணவரை லக்ஷ்மி கைநீட்ட,
ஏன் லக்ஷ்மி உன் பையன நிக்க வச்சா ஆகாதா???
அவன் எப்புடி அத்த இந்நேரத்துக்கு வருவான் வயாக்காட்டுலல இருப்பான்!!
[the_ad id=”6605″]
தோ…, அங்க வந்துட்டு இருக்குறது எம்ம பேரன் தானா என அவர் சுட்டி காட்டிய திசையில்,
முறுக்கிய மீசையும், கண்களில் கூலர்ஸ்ஸூம், முழுக்கை சட்டையை முட்டிக்கு மேல் வரை மடித்து விட்டு சட்டையின் முதல் இரு பட்டன்கள் திறந்திருக்க ,இடது கைய்யில் தங்க காப்பும் கழுத்தில் மெல்லிய மைனர் செயினுடன் அசல்டாக ஒற்றைக் கையால் புல்லட்டை ஓட்டிக் கொண்டு மறு கையால் தனது தலை முடியை அழுந்த கோதியவாறு உள் நுழைந்தான் “நரசிம்மன்”.
வண்டியை ஸ்டாண்ட் போட்டு விட்டு கூலர்ஸை அலட்சியமாக கழட்டி சட்டையில் மாட்டியவன், மடக்கி கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டு ராஜ தோரணையில் கம்பீரமாக கண்களில் ஒருவித அலட்சிய தன்மையும் உதடுகளில் கள்ள புன்னகையுமாக இவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்தவன்,
அவர்களை கண்டு தனது வசீகர புன்னகையை உதிர்க்க,
அதுவரையில் அவனின் கம்பீரமான நடவடிக்கைகளில் மயக்கி இருந்தவள் அவனது புன்னகையில் சுதாரித்து.வேறு புறம் திரும்பி கொண்டாள்.
அவளது கள்ளத் தனத்தை கண்டுக் கொண்டவனின் உதடுகள் ரகசிய புன்னகையை வெளியிட்டன.
எய்யா ராசா அப்புடியே  நீயும் நில்லுப்பா உனக்கும் ஆரத்தி எடுக்கட்டும்  ஒத்தப் படையா எடுக்க கூடாது என்ற பிச்சையின் பேச்சில் மறுக்காது தேவாவின் அருகில் நின்றுக் கொண்டான்.
இதனை எதிர்பார்த்திடாத தேவா சுதாரித்து விக்கியின் புறம் நகர்வதற்குள் அவள் அருகில் வந்து தோளோடு தோள் உரசி நின்றிருந்தான், திகைத்து விழித்தவள் வேற புறம் நகர முயல அவளின் செய்கையை உணர்ந்தவன் போல் நொடியில் அவளின் சுண்டு விரலுடன் தனது விரலை கோர்த்து அவள் நகர முடியாதபடி இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
அதிர்ச்சியை வெளிக் காட்டாது அவனிடம் இருந்து விரலை உருவிக் கொள்ள தேவா போராட,  அவளால் விரலை உருவ முடியவில்லை. இதற்கு மேலும் முயற்சித்தால் அருகில் இருக்கும் இருவருக்கும் இவளின் நிலை தெரிந்துவிடும் என எண்ணியவள் பல்லை கடித்துக் கொண்டு அவனை உறுத்து விழிக்க ,அவனோ இவள் புறம் திரும்பாது நின்றிருந்தான்.
இதற்கு காரணமான பிச்சையை இவள் முறைக்க, அவளின் முறைப்பை அலட்சியமாக புறம் தள்ளியவர்,”ம்ம்ம்……, லக்ஷ்மி இப்ப ஆரத்தி எடு என தனது மருமகளுக்கு கட்டளையிட்டார்.
ஆரத்தி எடுத்து முடித்து விட்டு அனைவரும் வீட்டினுள் செல்ல முயல,
மொத மொத வீட்டுக்குள் போறீங்க வலது கால எடுத்சு வச்சு வாங்கய்யா என்ற பிச்சையின் பேச்சில் முதலில் திகைத்த பவ்யா, விக்கி பின்பு இதுவும் ஒரு வழக்கமாக இருக்கும் என நினைத்துக் கொண்டு அவரின் சொல் படி உள்ளே சென்றனர்.
ஏற்கனவே , ஆரத்தி எடுத்ததில் கோபத்தின் பிடியில் இருந்தவளுக்கு பிச்சையின் பேச்சில் இது எதற்காக என யூகித்தவளின் மனதில் கோபம் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
அவரை உறுத்து விழித்தவள் வேண்டுமென்றே இடது காலை எடுத்து வைக்க போக,
அவளின் செய்கையை நொடியில் உணர்ந்த நரசிம்மன் வீட்டினுள் செல்வதற்காக அவனின் பிடியில் இருந்து விடுதலை செய்திருந்த அவளின் சுண்டு விரலை சடுதியில் எட்டி பற்றியவன் அதனை மடக்கி தனது கோபத்தை வெளிப்படுத்தினான்.
அவன் விரலை வளைத்து மடக்கியதில் வலி உயிர் போக, இருந்தும் தனது வீம்பை விடாதவள் மீண்டும் இடது காலை வைக்கப் போக,
அவளின் பிடிவாதத்தில் கோபம் தலைக்கோற இன்னும் இன்னும் விரலை ஒடியும் அளவிற்கு வளைத்து பிடித்தான்
சுர்ரென்று ஏறிய வலியை உதடு கடித்து அடக்கியவள் கண்ணில் முட்டிய நீருடன் இவனிடமிருந்து தன்னை காப்பாற்ற மாட்டார்களா என முன்னே சென்ற மற்ற இருவரையும் பார்க்க,
பேச்சு சுவாரசியத்தில் இவளின் நிலையை கவனியாது வீட்டினுள் சென்றிருந்தனர்.
இவனிடம் தான் தோற்பதா என்ற அவளது அகந்தை மேல் எழும்ப வலியையும் தாங்கிக் கொண்டு அடங்குவேனா என்று திரும்பவம் இடது காலை தேவா எடுத்தற வைக்க போக,
இவ்வளவு நடந்தும் அடங்குறாளா பாரு!! என முணுமுணுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டவன் அவள் விரலை விட்டு விட்டு ஒரு கையால் அவளது இடுப்பை பிடித்துக் தூக்கியவன் அவள் உணரும் முன் வாசல் படியை தாண்டி வீட்டினுள் நிற்க வைத்திருந்தான்.
அவன் நிற்க வைத்த வேகத்தில் இரு கால்களையும் சமமாகவே வீட்டினுள் எடுத்து வைத்திருந்தாள்.
[the_ad id=”6605″]
இதுல இப்ப ஜெயிச்சது நானா??இல்ல அவனா????? என்ற கேள்வியுடன் தேவாஅவனைப் பார்க்க,
அவளின் கேள்வியை விழி வழி அறிந்தவன் அவளை நோக்கி கண்சிமிட்டி சிரித்து விட்டு நேரே சொக்கலிங்கம் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
வேறுவழியின்றி அவனை பின்தொடர்ந்தவள் விக்கியின் அருகில் சென்றமர்ந்தாள்.
டீ, காபி கொடுத்து உபசரித்த லக்ஷ்மி  பிச்சை,சொக்கலிங்கம் ,நரசிம்மன் அமர்ந்திருந்த ஷோபாவின் அருகில் சென்று நின்றிக் கொண்டிருந்தவரின் பார்வை நொடிக்கும் குறைவாக அவளை தொட்டு மீண்டது.இவர்கள் மூவரும் அமர்ந்திருந்த ஷோபாவின் எதிர்புறம்  இருந்த இருக்கையில் விக்கி, பவ்யா,தேவா அமர்ந்திருந்தனர்.
அவர்கள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த சொக்கலிங்கம் விக்கியிடம்,
 அப்புறம் சொல்லுங்க தம்பி, உங்களுக்கு நான் என்ன உதவி பண்ணணும் ஈஷ்வர் போன போட்டு நீங்க வர தகவல பத்தி தா சொன்னப்படி வேற எந்த விஷயமும் சொல்லல……..,??????????, அவரின் கேள்வியை எதிர்பார்த்த விக்கி,
சார்…, நாங்க நிலா நீயூஸ்பேப்பர்ஸ் அண்ட் சேனல்ல  இருந்து வர்றோம். இங்க நடக்கற ஏழு நாள் திருவிழா ரொம்ப விசேஷமானதுன்னு சொன்னாங்க,
இப்ப இருக்குற சிட்டி மக்களுக்கு கிராமத்துக்கு வர்றதுக்கோ இல்ல ஏழு நாள் தங்கி திருவிழா பாக்கிறதுக்கோ நேரமும் இல்ல பொறுமையும் இல்ல  காலத்துக்கு ஏத்த மாதிரி அவுங்களும் ஓடிட்டு இருக்காங்க காலப்போக்குல இந்த திருவிழா என்ற வார்த்தையையே மறக்க வாய்ப்பிருக்கு, அதுவரை அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நரசிம்மன்,
அதெப்புடிங்க, மறக்க வாய்ப்பிருக்கு என்ன தான் சிட்டி வாழ்க்கைக்கு பழகியிருந்தாலும் அவுங்களோட அடிப்படை வேர் இங்க தான இருக்கு ஒருத்த தன் கிராமத்த மறக்குறானா அது அவன் பொறந்த வீட்டையும் கூடப் பொறந்தவங்களையும் பெத்த அம்மா அப்பாவையும் மறக்குறதுக்கு சமமில்லையா???? என்றவனின் வார்த்தைகள் கடுமையுடன் வெளிவந்தன.
அவனின் குரலில் பேதத்தை உணர்ந்த தேவா நிமிர்ந்து அவனை பார்க்க அவனின் முகம் இறுகி பாறை போல் மாறியிருந்தது.
நரசிம்மனின் பேச்சை கேட்ட பவ்யாவிற்கு “என்ன இவரு இன்னமும் அர்த்த பழசாவே இருக்காரு”  என்றுதான் தோன்றியது,
அவள் நினைத்ததையும் தான் விக்கியும் கேட்டான்.
இன்னும் எந்த காலத்துல சார் இருக்கீங்க நீங்க, இப்ப மக்கள் எல்லாருமே காலத்துக்கு ஏத்த மாதிரி தங்களையே மாத்திக்கிட்டாங்க அப்புடி மாத்திக்கலன்னா
அவங்களால இங்க சர்வே(survey) பண்ண முடியாதே, இப்ப இருக்குறதே சுயநல உலகம் சார் நமக்கு முன்னாடி இருக்குறவன் எப்ப விழுவான் நம்ம அந்த இடத்த புடிச்சக்கலாம்னு தான் சார் எல்லாரோட எண்ணமும்,
இப்ப இருக்குற மனுஷங்க எல்லாம் பணம்,புகழ் பின்னாடி ஓடிட்டு இருக்காங்க, இதுல பணம் சேர்க்கனும்மனு நாடு விட்டு வேற நாடு போறவங்களும் இருக்காங்க குடும்பத்தையே மறந்துட்டு இருக்குறவங்களும் இருக்காங்க,
இப்புடி இருக்குற நிலமையில,அவுங்களுக்கு எங்க இருந்து சார் கிராமமும் அடிப்படை வேரும் ஞாபகம் வரப் போகுது.
விக்கரமின் கேள்விற்கு சூடாய் நரசிம்மன் பதிலடி கொடுக்க எத்தனிக்கையில்,
பேச்சின் திசை மாறுவதை உணர்ந்த சொக்கலிங்கம்,
நரசிம்மா!!!….. இப்ப எதுக்கு இந்த பேச்சு, அவுண்களுக்கு கொடுத்த வேலைய செய்ய வந்திருகாங்க இதுல நம்ம தலையிட வேண்டிய அவசியம் இல்ல! உனக்கு புரியும்னு நினைக்கிறேன்??
தந்தையின் வார்த்தைகளில் வேறு வழியின்றி அமைதியானான். அவனின் அமைதியை உணர்ந்தவர்
விக்கியிடம், “நீங்க மேல சொல்லுங்க தம்பி”???
ம்ம்ம்ம்…….., சார் சிட்டி மக்களால இங்க வர முடியாதே தவிர, இங்க நடக்குற திருவிழாவ நீயூஸ்பேப்பர்ஸ் மூலமாவோ இல்ல டிவி சேனல் மூலமாவோ இதோட முக்கியத்துவத்த மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும், இதுதான் எங்க சேனலோட நோக்கமும்.
ஷோ நீங்க இங்க வந்திருக்குறதே இங்க நடக்குற திருவிழால எங்க சேனல் மற்றும் நீயூஸ் பேப்பர்ஸ் மூலமா வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த தான்,
மோர் ஓவர், மூணு தலைமுறையா கூட்டுக் குடிம்பமா இருக்குற உங்க குடும்பத்தையும் பேட்டி எடுக்க வந்துருக்கோம் அதுக்கு உங்க அனுமதியும் உதவியும் தேவை.
எங்க எம்.டி ஈஷ்வர் சார் தான் நீங்க எல்லா உதவியும் செய்வீங்கன்னு சொல்லி எங்கள அனுப்பி வச்சாரு!!
அதுக்கு என்ன தம்பி தாரளமா பேட்டி எடுத்துக்கிடுக,
உங்களுக்கு என்ன உதவி தேவைப்படுது சொல்லுங்க செஞ்சிடலாம்.
எங்களுக்கு தங்குறதுக்கு இடம் வேணும் சார், நா கூட பரவாயில்ல வெளிய எங்கயாவது பாத்துக்குவேன் பட் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பான ஒரு இடம் வேணும் சார்,
நீங்க எதுக்கு தம்பி வெளிய தங்கணும் உங்களுக்கு சேர்த்தே ஏற்பாடு பண்ணுறோம்.
ஏம்ப்பா நரசிம்மா நம்ம தோப்பு வூட்ட இவுகளுக்கு கொடுக்கலாமா???
தந்தையின் கேள்விக்கு தன்னவளின் மீது தனது விழிகளை அழுத்தமாக படரவிட்டவன்,
” இல்லப்பா அது சரிவராது” என்றான்.
ஏன்ய்யா அந்த வீட்டுக்கு என்ன?? இவுகளுக்கும் அந்த வீடு செளகர்யமா இருக்கும், யாரு தொந்தரவு இல்லாமல் இவுகளும் வேலை பாப்பக!
இல்லப்பா…, கோயில் திருவிழா ஆரம்பிச்சுட்டா, ஆளுக அங்க போக வர இருப்பாக, அன்னதானத்துக்கு தேவையான அரிசி மூட்டை, காய்கறி எல்லாம் அங்கதான் இறக்குவாக,
அதுவும் இல்லாம வேலை செய்யுறவங்க கொஞ்சம் அலுப்பு தீர அங்க தான் தூங்கி எந்தீரிகிறாங்க,
இவரு மட்டும்னா பரவாயில்ல கூட பொட்டப் புள்ளைக வேற இருக்காங்க
 வேலை செய்யுறவங்க அலுப்பு தெரியாமா இருக்குறதுக்கு ராத்திரி எல்லாம் தண்ணியப் போட்டு மட்டையாகிடுவாங்க,
அத நம்ம ஏன்னும் கேக்க முடியாதே!! ஏன்னா?? இது வழக்கமா நடக்குற ஒண்ணு தான்.
நீ சொல்லுறதும் சரிதான்ய்யா அப்ப இவுங்கள எங்க தங்க வைக்கிறது??
ஏன் சொக்கா…., நம்ம வீடு இல்லையா?? இவ்வளவு பெரிய வீட வச்சிக்கிட்டு எதுக்கு அவுங்கள வெளிய தங்க வைக்கிற??? அதுவரை அமைதியாக இருந்த பிச்சை தனது கருத்தை முன் வைத்தார்.
ஆஹா……., அப்பத்தா சும்மா  கன் மாதிரி நாம சொல்ல வந்த பாயிண்ட்ட கரக்ட்டா சொல்லிடுச்சே, கிழவி யூ ஆர் சோ ஸ்வீட் என எண்ணியவன் பிச்சையை பார்க்க,
அவனின் விழி.செய்தியை புரிந்துக் கொண்ட பிச்சை தனது புருவத்தை உயர்த்தி “எப்புடி” என கண்களால் வினவ,
அதனை புரிந்துக் கொண்டவன் நமட்டுச் சிரிப்புடன் யாருக்கும் தெரியாமல் தனது கட்டை விரலை உயர்த்தி கண் சிமிட்டினான்.
இவர்களின் லீலைகளை கண்டு கொண்டவளின் முகம் கடுகடுத்தது.
நீ சொல்லுறதும் சரிதான் ஆத்தா, எப்ப நரசிம்மா இது சரிவருமா நீ என்ன சொல்லுற?? மகனின் பதில் வேண்டி அவன் முகத்தை பார்க்க,
அப்பத்தா சொல்றது சரிதான்ப்பா, இவுங்க இங்கயே தங்கட்டும் திருவிழாவையும், நம்ம குடும்பத்தையும் தான பேட்டி எடுக்க வந்திருக்காங்க,
இங்க இருந்தா தான் அவுங்களுக்கு சவுகரியமா இருக்கும் அதும் இல்லாம
திருவிழா பத்தி ஏதும் சந்தேகம் இருந்துச்சுன்னா நம்ம குடும்பத்து ஆளுககிட்ட கேக்க வசதியா இருக்கும்.
அப்பறம் இவங்களுக்கு மாடில இருக்குற ரூம்ம கொடுத்திரலாம் கீழ இருந்தா திருவிழா பத்தி பேச ஆளுக வந்துட்டு போயிட்டு இருப்பாங்க அவுங்க வேலைக்கு இடஞ்சலா இருக்கும். நீங்க என்னப்பா சொல்லுறீங்க,
இதுல நா சொல்லுறதுக்கு என்னய்யா இருக்கு நீ சொல்லுற மாதிரி அப்படியே செஞ்சிடலாம் என்றவர் விக்கியிடம் திரும்பி,
“ஏன்ப்பா உங்களுக்கு இதுல சம்மதமா’ என்க,
தேவா இல்லை என தலையாட்டும் முன் மற்ற இருவரும் சரி என்று செல்லி தங்கள் சம்மதத்தை தெரிவித்திருந்தனர்,
அவளுக்கு இதில் விருப்பம் இல்லை என கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது,
மற்ற இருவரின் சம்மதத்தை கண்டு இனி இதில் செய்வதற்கு ஏதும் இல்லை என எண்ணியவள் அமைதி காத்தாள்.
” லக்ஷ்மி…. “
சொல்லுங்க…….,தன் கணவரின் அலைப்பிற்கு அவர் பதில் பார்வை பார்க்க,
இவுங்கள மாடிக்கு கூட்டிட்டு போம்மா அவுங்களுக்கு தேவையானத பாத்துகிடும்மா……, நா கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன் என்று விட்டு செல்ல எத்தனித்தவரை தடுத்தான் விக்கி.
சார்…….,??
என்ன தம்பி …,??
நீங்கயும் உங்க குடும்பமும் எப்ப ப்பீரீயா இருக்கீங்கன்னு சொன்னா நாங்க அதுக்கேத்த மாதிரி பேட்டி எடுக்க ரெடியாகிடுவோம்…,
அப்புடி யா……, நீங்க நாளைக்கே எடுத்துடுங்க தம்பி நாளை மறுநாள் கொடி ஏத்திட்டா எல்லாரும் திருவிழா விஷயமா அலைய ஆரம்பிச்சுருவோம் உங்களுக்கு சம்மதம்னா நாளைக்கே எடுத்திடுங்க..,
ம்ம்ம் சரிங்க சார் என்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வேலையாளின் பின்னே சென்று விட்டனர்.
அவர்கள் செல்வதை பார்த்த சொக்கலிங்கம்,
“நரசிம்மா”!!
சொல்லுங்கப்பா…,
திருவிழா கணக்கு வழக்கு பாக்க கோயில்ல ஆளுங்க எல்லாம் கூடியிருப்பாங்க ஒரு எட்டு போய் நீ என்னனு பாத்துட்டு வந்துரு,
நம்ம பூ தோட்டத்துக்கு   ஆளுங்க வேலைக்கு வந்திருப்பாங்க நா அங்க பாத்துகிறேன், நீ கோயிலுக்கு போயிட்டு வந்துரு…,
சரிங்கய்யா என்றவன் இரு பெண்களிடமும்  சொல்லிக் கொண்டு கிளம்பிட அவன் பின் சொக்கலிங்கம்மும் சென்றுவிட்டார்.
அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட லக்ஷ்மி பிச்சையை அழைத்தார்,
” அத்த..,”
தனது மருமகளின் அழைப்பை எதிர்பார்த்தவர் அவரிடம் சிறு புன்னகையை சிந்தி
‘எல்லா நல்ல படியா நடக்கும் லக்ஷ்மி நீ வீணா மனச போட்டு ஒலப்பிக்காத ‘
தனது மாமியாரின் பேச்சை கேட்டவரின் மனம் சற்று நிம்மதியடைய ஏதும் பேசாது அடுப்படிக்கு சென்றுவிட்டார்.
அங்கு மாடியில்…….,
வேலையாள் காட்டிய அறைக்குள் மூவரும் நுழைந்ததும்,
“காய்ஸ் உங்க ரெண்டு பேருக்கும் இந்த ரூம் கொடுத்திருகாங்க எனக்கு பக்கத்துல இருக்குற ரூம்,
நா அங்க தங்கிக்கிறேன் ஏதும் வேணும்னா என்ன கூப்புடுங்க நா போய் கொஞ்சம் ப்ரஸ்(fresh) ஆகிட்டு வரேன் அதுக்கப்பறம் நம்ம நாளைக்கு எடுக்க போற இண்டர்வ்வீயூ பத்தி டிஸ்கஸ் பண்ணலாம் என்ற விக்கி தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று.விட,
தேவா நா போய் ப்ரஸ் ஆகிட்டு வரவா இல்ல நீ போறீயா ரொம்ப டையர்ட்டா தெரியுற..,என்ற பவியின் கேள்விற்கு
இல்ல பவி நீ போயிட்டு.வா நா அப்பரம் ப்ரஸ் ஆகிக்கிறேன்…,
சரி டி என்றவள் அந்த ரூமின் மூலையில் இருந்த குளியலறைக்குள் செல்ல,
[the_ad id=”6605″]
அவள் சென்றுவிட்டதை உறுதிபடுத்திக் கொண்ட  தேவா தனது கைப்பேசியுடன் சற்று தள்ளி இருந்த ஜன்னலருகே சென்று நின்றுக் கொண்டவள் கைப்பேசியில் அழைப்பை விடுத்து மறுமனை எடுப்பதற்காக காத்திருந்தாள்.
அழைப்பு ஏற்கப்பட்டதும்..,
ஹலோ பாட்டி….,
சொல்லு தேவா அங்க போயிட்டியா??
ம்ம் பாட்டி இப்ப தான் வந்தேன்
சரி எங்கன தங்கியிருக்க??
இங்க தான் தங்கியிருக்கோம் உன் பையன் எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி தா என்ன இங்க அனுப்பி வச்சியிருக்காரு..,
அவன் என்ன தான் திட்டம் போட்டாலும் அத நான் நடக்க விடமாட்டேன் உன் பக்கத்து யாரும் இல்லையா அந்த பவ்யா புள்ள எங்க??
இல்ல பக்கத்துல யாரும் இல்ல அவ பாத்ரூம்ல இ்ருக்கா…,
சரி அந்த சிறுக்கியா பாத்தியா?
இல்ல பாட்டி நா அவுங்கள இன்னும் பாக்கல மாடில இருக்குற ரூம்ல தான் தங்கியிருக்கோம்…,
அவன் ஏதும் வம்பு பண்ணுணாண தேவா அங்க இருக்கவங்க உன்கிட்ட எப்புடி நடத்துக்கிட்டாங்க??
இதை கேட்ட நொடி சற்று முன்  நரசிம்மன் நடந்துக் கொண்டது அவள் மனக் கண்ணில் வலம் வர, இத பாட்டிக்கிட்ட சொல்லலாமா ! வேண்டாம்மா! என யோசித்தவள் இப்போதைக்கு வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு ‘இல்ல பாட்டி யாரும் என்ன இங்க தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல..,’
ம்ம் நல்லது தேவா உனக்கு நா சொல்ல தேவயில்ல எல்லா விஷயமும் உனக்கே நல்லா தெரியும்!! பார்த்து கவனமா நடத்துக்கோ…,
உன் வேல முடிஞ்ச அடுத்த நாள் எந்த காரணமும் சொல்லாமா அங்கியிருந்து
கிளம்பிடு.., நா வைக்கவா?
சரி பாட்டி அப்பாவ பாத்துக்கோ மாத்திரை எல்லாம் கரக்ட் டைம்முக்கு சாப்பிடுங்க.., நா வச்சிடுறேன் பாட்டி..,
போனை கட் செய்து விட்டு நிமரிந்தவளின் கண்களில் சற்று அருகில் இருந்த அந்த மாடி.வீடு தென்பட்டு வேண்டாத கசப்பான நிகழ்வுகள் ஞாபகம் வர கண்களை இறுக மூடி அதனை விழுங்கியவளின் கண்ணோரம் இரு நீர் துளிகள் துளிர்ந்தன,
வேகமாக அதனை துடைந்து எறிந்தவள் “நீங்க எல்லாரும் என்ன பிளான் பண்ணுறீண்கன்னு நல்ளாவே தெரியுது, அத ஒருநாளும் நான் நடக்க விட மாட்டேன், இந்த வீட்டுலயே தங்கி  இருந்து உங்க எல்லாருக்கும் அத நிருபிச்சு உங்க மூஞ்சில எல்லாம் கரிய பூசல!! நான் கற்பத்தோட பேத்தி தேவான்ஷி இல்ல!!” என்றவளின் விழிகள் அழுகையிலிருந்து மாறி இருந்தது. ஒரு வித தீவிரம் அவள் விழிகளில் குடிபெயர்ந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!