Skip to content
Post Views: 4,522
“எத்தனை வாட்டினா? யோவ் பெரிய மனுஷா? அப்போ நீ ஒண்ணும் என் மம்மியவே நினைச்சுட்டு பேச்சிலரா இல்லையா ? நீ அப்படி இருக்கன்னு இல்ல நினைச்சேன்! அப்ப உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? அய்யோ மம்மி!” என்று ரித்து அலறிட..
“டேய்.. டேய்.. நிறுத்துடா. கல்யாணம் ஆச்சுன்னு சொன்னேன். வேற பொண்ணோட ன்னு சொன்னேனா? எல்லாம் உன் மம்மியோட தான் ஆச்சு!
சஷி போனில் எல்லாம் சொன்னா! நீ அஞ்சு வருஷம் முன்னாடியே உன் குட்டிமாவை ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுட்டியாமே!
இந்த கல்யாண விஷயத்துல நான் உன்னை விட சீனியர்!
Advertisement
நான் அந்த காலத்திலேயே உன் மம்மி கழுத்தில் தாலி கட்டிட்டேன்.
அவ மறைச்சு தான் வச்சுருக்கா இன்னிக்கு வரைக்கும்!
உன் அம்மா ரிஷிக்கும் அப்பா சதீஷ்க்கும் நானும் சஷியும் தான் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி வச்சோம்.
Advertisement
அதுல ரொம்ப கோபமா இருந்தாங்க உன் மாமன்கள்!
Advertisement
லூஸு கிறுக்கன்கள், அந்த கோபத்தில் சின்ன வயசுல இருந்து பேசி வச்சுருக்கிற எங்க கல்யாணத்தை நிறுத்தி விடுவாங்களோன்னு ரிஷிக்கு ஒரே பயம்!
அதனால ஒரே பிடிவாதமாய் பிடிச்சு, அவங்க கல்யாணத்துக்கு அடுத்த நாளே, என்னை சஷி கழுத்தில் தாலி கட்ட வச்சுட்டா!
ஒரே நேரத்துல இப்படி ரெண்டு பொண்ணுங்களும் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டது சொந்தக் காரங்களுக்கு தெரிஞ்சுட்டா,
Advertisement
எங்களைப் பார்த்து இப்ப தான் தங்கள் வீட்டுப் பெண்களை படிக்க வெளியில் அனுப்ப ஆரம்பித்து இருக்கும் மற்ற சொந்தக்காரர்கள்,
மீண்டும் அதே பழைய கட்டுப்பாடுகளை சொல்லி, நம்ம ரிலேட்டிவ் வீட்டு பொண்ணுங்களை படிக்க விடாம பண்ணிடுவாங்க!
நாம ஒரு மோசமான முன்னுதாரணமாக போய்ட கூடாது!
அதனால தேவைப்பட்டா சொல்லிக்கலாம். இப்ப வேண்டாம் என்று சஷி தீர்மானமாக சொல்லிட்டா!
அதுக்கப்புறம் உன் அம்மா அப்பா இறந்ததும், அதன் பிறகு நடந்தவையும், அதை வெளியில் சொல்ல விடாமல் பண்ணி விட்டது!” என்று ப்ளாஷ் பேக்கினார் வசந்த்!
“ஆனா ஒண்ணு மகனே, இப்படி கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியா இருக்கிறது நம்ம பேமிலிக்கு தொடர்கதையா போச்சு!
என்ன .. நீ உன் பொண்டாட்டியை தேடி ஊர் ஊரா அலைஞ்சுட்டு இருந்திருக்க! நான் கண் முன்னாடி வச்சுகிட்டு வெளியே சொல்ல முடியாம இருந்திருக்கேன்!”
“ஓ…” என்று சொன்னவன், வாய்க்குள் “நீங்க தான் கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியா இருந்து இருக்கீங்க! நான் இல்லை!” என்று மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து முணுமுணுத்து விட்டான் ரித்து!
“டேய்,, என்ன சொன்ன?” வசந்த் கேட்க.,
“இல்ல எல்லா விஷயத்துலயும் நீங்க சீனியர் இல்ல, சில விசயத்துல நான் தான் சீனியர்ன்னு சொன்னேன்!”
“டேய்..” என்று அவன் காதை திருக,
“அய்யோ சீனியர் விடுங்க.
சீனியர், சீனியராவே இருந்திருந்தா எனக்கு ஒரு தம்பியோ, இல்ல தங்கச்சியோ இருந்துருப்பா! அத சொல்ல வந்தேன்!”
“ரொம்ப தான்டா வாய் உனக்கு!” என்று மீண்டும் அவன் காதை திருகினார் வசந்த்!
அடுத்து வந்த சில நாட்களில் தன் அண்ணன்கள் அண்ணிகளை அழைத்து பேசினாள் சஷி.
கூடவே இருந்தார் வசந்த்!
அவர்களிடம் ரித்து ஏற்கனவே பதிவு திருமணம் செய்து இருந்ததை சொல்ல வில்லை இருவரும்.
அவளின் அண்ணிகள் மிகுந்த பொறாமையுடன் மானுவைப் பார்த்தார்கள்.
ஏற்கனவே குடும்ப சொத்தில் இரு பங்குகள்! அப்புறம் சஷியின் இத்தனை வருட சம்பாத்தியம்!
சதீஸ் வகையில் கிடைத்துள்ள சொத்து மதிப்பு!
இப்போது வசந்தின் வழியிலும் ரித்துவுக்கு கிடைக்கப் போகும் சொத்துக்கள்! அவர் இத்தனை வருடங்கள் சென்ட்ரல் கவர்மென்ட் வேலையில் சம்பாதித்த பணம் என்று அவர்கள் மனம் வேகமாக ரித்து மானசாவின் சொத்து மதிப்பை கணக்கிட்டது!
இதை உணர்ந்த சஷி, குடும்ப சொத்தில் தன் பங்கை குடும்ப வாரிசுகள் அனைவருக்குமே, ரித்து உட்பட மற்ற அண்ணன்களின் வாரிசுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப் போவதாக சொன்னவுடன் தான் ஓரளவு அவர்கள் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது!
எந்த ஜாதி பேரை சொல்லி இவ்வளவு நாள் ஏதேதோ செய்து வந்தார்களோ, சஷியின் அண்ணன்கள், அந்த ஜாதி எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிரூபித்தார்கள் அவர்களின் வாரிசுகள்!
அடுத்தடுத்த காதல் கல்யாணங்களால்!
காலப் போக்கில் எதுவும் மாறும். அவர்கள் மனமும் மாறும் என்று நம்புவோம்!
சஷி வசந்த் பெற்றோர்களாக நின்று ஆசிர்வதிக்க, மனீஷ் மாலுவும் அண்ணன் அண்ணியாக பெற்றோர் இடத்தில் இருந்து சம்பந்தம் கலந்து ரித்தீஷ் மானஸா கல்யாணம் நல்லபடியே நடந்தது.
சத்யா பாமா மகிழ்ச்சியில் திளைத்தார்!
மானுவின் மாமா மட்டும் வந்து வாழ்த்தினார்!
ஹவுஸ் ஓனர் மாமி, பாபு அண்ணா, மானு வேலை செய்த ஹாஸ்பிடல் ஓனர் எல்லோரும் வந்து வாழ்த்தினார்கள்!
ரிதன்யா குட்டி, மணவறையில் மானுவின் அருகே அமர்ந்து கொண்டது!
எல்லோர் ஆசிர்வாதத்துடன் தன் குட்டிமாவுடன் இனிதே வாழ்க்கையைத் தொடங்கினான் ரித்து!
சுபம்.
குட்டி எபிலாக்.
ஐந்து வருடங்கள் கழித்து.
“அம்மா.. இன்னும் நீ கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க?” மானு உள்ளே இருந்து குரல் கொடுக்க,
“இருடி.. இன்னும் கொஞ்ச நேரம் இப்ப தான் உன் பையன் ரிமோட்டை பெரிய மனசு பண்ணி கொடுத்தான்! இந்தா முடிய போவுது. தொடரும் போட்ருவான். வந்திட்டேன்..” என்று சொல்லி டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தார் பாமா.
மானு வெளியே வந்தாள்.
“உனக்கும் உன் பேரனுக்கு இந்த ரிமோட் சண்டை எப்ப தான் தீருமோ!
வாம்மா, கடைக்கு போகணும் லேட்டாகிடுச்சு”
“அவங்க வரட்டும் ஏன் தொல்லைப் பண்ற குட்டிமா?” என்றபடி வந்தான் ரித்து.
இப்போ அவனும் அம்மா வழியில் தொழில் காந்தம் ஆகிக் கொண்டு இருக்கிறான்.
மானு வீட்டில் இருந்து அனைவரையும் பார்த்துக் கொண்டு அழகாக குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறாள்.
வசந்தின் அம்மா, அவள் பொறுப்பில்!
வசந்த் சஷி பாலா அறுபதாம் கல்யாணம் அடுத்த வாரம் நடக்கவிருந்தது. அதற்கான ஷாப்பிங் போக தான் இப்போது அனைவரும் கிளம்பி கொண்டிருக்கிறார்கள்.
திருக்கடையூர் கோவிலில் வைத்து அறுபதாம் கல்யாணம்!
தன் மகனை கொஞ்சம் லேட்டாக(?!) என்றாலும் மணக்கோலத்தில் கண்டு மன நிறைவுடன் ஆனந்த கண்ணீர் விட்டார் வசந்த்தின் அம்மா அந்த வயதான மூதாட்டி!
error: Content is protected !!