Skip to content
Post Views: 3,805
ஜதி தரும் அமுதம்
Advertisement
அத்தியாயம் -1
Advertisement
Advertisement
ஐதராபாத் நகரத்தை முத்துக்களின் நகரம் என்று அழைக்கலாம், தொழில் நுட்பத் துறையில் பல வேலை வாய்ப்பை வழங்கிறது, வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்ட நகரம் இதை ‘நவாப்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஐதராபாத்தில் பெரிய பிலிம் சிட்டி உள்ளது.
Advertisement
ஐதராபாத்தில் வசதி படைத்தவர்கள் ‘கிஸ்மத்பூர்’ என்ற பகுதியில் வாழ்கின்றனர். இங்கு பக்கத்தில் ஏர்போர்ட் உள்ளதால் பெரும் பாலோனர் இங்கே இடம் வாங்கி, அவர்களுக்கு பிடித்தமாதிரி வில்லாக்களை கட்டி குடியேற வருகின்றார்கள்.
கிஸ்மத்பூர் பாதுகாப்பான இடம். இங்கே உள்ள கிரிதாரி ப்ரோஸ்பெரா கவுண்டில் உள்ள தனி, தனி வில்லாக்கள் ஒருவகை, இதில் சிலர் இரண்டு, மூன்று வில்லாக்களை வாங்கி அவர்களுக்கு ஏற்ற வாரு தனியாக வில்லாக்களை கட்டி கொள்வார்கள்..
அப்படிப்பட்ட இடத்தில் தான் டான்சர் இந்திராதேவியின் இல்லம் உள்ளது..
வீட்டின் கேட் முன் பக்க சுவரில் தங்க எழுத்துக்களால்..
மிஸஸ். நாகில்லி இந்திரா தேவி ஹோம்
மிஸ்டர். நாகில்லி வெங்கடேஷ்வர ரெட்டி.
என்று எழுதப்பட்டிருக்கும்.. இந்திரா தேவி பெரிய பரத நாட்டிய டான்சர், தமிழ் நாட்டை சேர்ந்தவர். தமிழ் பெண்.
நாகில்லி வெங்கடேஷ்வர் ஐதராபாத்தை சேர்ந்தவர்.. தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். அசைவம் உண்பவர்..
இந்திரா தேவி சைவ நெறியை பின்பற்றுபவர்.. அவரை ஒரு டான்ஸ் சோவில் பார்த்தார் நாகில்லி வெங்கடேஷ், பார்த்தவுடனே அவரை பிடித்து விட..
இந்திரா தேவியை பெண் கேட்டு அவர் வீட்டுக்கு வெங்கடேஷ் செல்ல..
அவரை தன் மகளுக்கு திருமணம் முடித்து வைக்க மறுத்து விட்டனர் இந்திராதேவியின் பெற்றோர்.. தங்கள் இனம், மொழி, ஊர் எல்லாம் வேறுப்பட்டு இருக்கும் ஒருவரை தங்கள் மகளுக்கு திருமணம் முடிக்க மாட்டோம் என்று சொல்லிவிட..
வெங்கடேஷ்வரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இந்திரா தேவியை இரண்டு வருடம் விடாமல் காதல் தொல்லை செய்து, வீட்டை விட்டு எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார் நாகில்லி வெங்கடேஷ்வரர்.
அவர்கள் வீட்டில் இரண்டு மொழியையும் பேசுவதுண்டு, தமிழ், தெலுங்கு சில முறை ஆங்கிலத்திலும் சேர்ந்து பேசுவார் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்..
இந்திரா தேவி, நாகில்லி வெங்கடேஷுக்கும் மூன்று பிள்ளைகள். முதலில் நாகில்லி கணேஷ், திருமணம் முடித்து வெளிநாட்டில் இருக்கிறான், மூன்றாவது பெண் நாகில்லி சௌசன்யா திருமணம் முடிந்து ஐதராபாத் பக்கத்தில் உள்ள வரங்கல் என்ற ஊரில் வசிக்கின்றாள்..
இரண்டாவது நம்ம ஹீரோ நாகில்லி விஜயேந்திர தேவ் தனது பத்து வயது மகள் யாழினியுடன் தாய் தந்தையுடன் சேர்ந்து இருக்கிறான்..
வெங்கடேஷின் இரண்டு பிள்ளைகள் வெளியூரில் இருக்க, தந்தை நடத்திக்கொண்டிருந்த பெரிய ஐ. டி நிறுவனத்தை பல மடங்கு பெறுக்கி இருந்தான் விஜயேந்திரன் ..
வெங்கடேஷ்வரர் இந்திரா தேவிக்கு மிக பெரிய டான்ஸ் அகடாமி கட்டி கொடுத்தார்.. நடனத்தில் பல திறமைகளை கொண்டிருந்தவரின் திறமையை ஆதரித்தார்,.. கணவர் வைத்து கொடுத்த அகடாமியை பல மடங்கு உயரத்துக்கு கொண்டு வந்திருந்தார் இந்திரா தேவி..
முதலில் அகடாமி என்று இருந்தது, இப்போது மிக பெரிய நடனபள்ளி, பல்கலைகழகமாக மாறி உள்ளது. இங்கே இளக்கலை பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் நடனப் படிப்புகள்(BPA) என்ற நடன படிப்பும், நடனத்தை ஒரு கலை வடிவமாக , ஆழமாகப் படிக்கவும் அதன் மூலம் படைப்பாற்றல், தலைமைத்துவம், ஒழுக்கம் போன்ற திறன்களை வளர்க்க உதவுகிறது. இங்கே இசை, நடனம், நாடகம், பல விதமான நடனங்களை ஒரு மித்த பல்கலைக்கழகமாக நடனத்தை கற்பித்து வருகிறார்கள்..
இது இந்திரா தேவியின் பல்கலைக்கழகம். இதன் பெயர்
ஐ. டி. டி நடன பள்ளி என்று பெயரால் அழைக்கப்படுகிறது..
இங்கே 5 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகள் கலந்துக்கொள்ளலாம், வயது தடை இல்லை, ஆண், பெண் என்று பேதம் இல்லை.. நடனத்தில் ஆர்வம் இருந்தால் போதும்.. அவர்களுக்கு ஏற்ப நடனத்தை கற்றுக்கொடுக்க பல நடன ஆசிரியர்கள் உள்ளனர்…
அதிகாலை மணி 6 இந்திரா தேவியின் இல்லம்.. தா, தை, தா, தத், தா, தை, தா என்று ஜதி ஒலிக் கேற்ப. அவர்களின் வீட்டு தோட்டதில் உள்ள நடனம் ஆடுவதற்கு என்று கட்டி வைத்திருந்த மேடையில், நடன ஆசிரியர் சொல்லிக்கொடுக்க , சில இசை வாத்தியம் வாசிக்க, தன் பிஞ்சு பாதங்களை, ஜதி சேர்த்து ஆடிக்கொண்டு இருந்தாள் 10 வயது யாழினிஸ்ரீ, இந்திரா தேவியின் செல்ல பேத்தி.. பத்து வயதியே ஓர் அளவுக்கு முக்கியமான நடனகலைகளை கற்று, மேடையேறி அரங்கேற்றம் முடித்து, பல விருதுகளையும் , அவார்ட்களையும் வாங்கியுள்ளாள்,, இந்திரா தேவி பேத்தி என்றால் சொல்லவா வேண்டும், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? இவ்வயதிலே நிறைய நடன மேடை ஏறி சாதித்து இருக்கிறாள் யாழினிஸ்ரீ..
யாழினிக்கு இன்னும் ஒன்றே இலக்கு டெல்லியில் நடைபெறும் ‘ஆல் இந்தியா ஜுனியர் சாம்பியம்’ என்ற அவார்டை வாங்குவதே அதற்காக, தினமும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள்..
நாளை மறுநாள் அப்போட்டி துவங்க உள்ளதால் நாளை டெல்லி கிளம்புகிறாள்..
இந்திரா தேவிக்கு தன் பேத்தியின் நடனத்தை பார்த்து, தானே சிறுவயதில் நடனம் ஆடுவது போல் தெரிந்தது. அவளின் சுறுசுறுப்பான நடனம், முகம் காட்டும் பாவனை, தன்னை தானே பார்ப்பது போல் உணர்ந்தவர்.
நடனம் மாடி முடிந்தவள், நேராக சென்று அவள் குருவின் காலில் விழுந்து வணங்கிவிட்டு. தன் அம்மம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்,
தன் பேத்தியை தொட்டு தூக்கி அணைத்து கொண்டு நெத்தியில் முத்தமிட்டார் இந்திரா தேவி..
“அம்மம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க, நான் டான்ஸ் போட்டியில வின் பண்ண” என்று சொன்ன யாழினியை..
“நா பங்காரம், கண்டிப்பா நீ வின் பண்ணுவடா, கப்போடு வீட்டுக்கு வா” என்று பேத்தியை வாழ்த்த..
“ஓகே அம்மம்மா”.. என்றாள் யாழினி..
இந்திரா தேவி டான்ஸ் குழுவினர் அனைவரையும் நாளை ஏர்போர்ட்க்கு வருமாறு, சொல்லி அனுப்பி வைத்தவர்.. தன் பேத்தியோடு வீட்டிற்குள் நுழைய..
சஞ்சனா வீட்டுக்குள் வருவதற்கும் சரியாக இருந்தது..
“குட் மார்னிங் மேம்” என்றாள் இந்திரா தேவியை பார்த்து..
“குட் மார்னிங்” என்று சஞ்சனாவிடம் சொன்னவர்..
“எல்லா ஏற்பாடும் பண்ணிட்டீயா?”.
“எஸ் மேம், டிக்கெட் எல்லாருக்கும் கன்பாம் ஆகிடுச்சு, டெல்லியில போய் தங்குறதுக்கு போட்டி நடக்குற இடத்துக்கு பக்கத்துல ரூம் புக் பண்ணிட்டேன்.. டான்ஸ் போட்டிக்கான சார்ட் இதோ என் கையில இருக்கு மேம் எல்லாம் ரெடி, நம்ம கார் ஒன்னு நாளைக்கு டிரைவரோட டெல்லி ஏர்போர்ட்ல நிக்கும், யாழினி மேம் போயிட்டு வர வசதியா இருக்கும்” என்று கூறி முடித்தாள்.
“குட்” என்றவர். தன் மகன் யாழினியை ஸ்ரீயை பார்த்துக்கொள்ள சஞ்சனாவை வேலைக்கு வைத்தது சரி என்றே தோன்ற,, “ஓகே நாளைக்கு ஏர்போர்ட்டுக்கு வந்துரு, நானும் யாழினியும் வந்துருவோம்”..
“ஓகே மேம்”என்றவள். கிளம்பிவிட்டாள். கிளம்பும் போது அந்த வீட்டையும் , இந்திரா தேவியையும் பார்த்து,, ஒரு நாள் இருக்கு உங்களுக்கு எல்லாம் நான் யாருன்று காட்டுறேன், என்று புலம்பியபடியே சென்றாள் சஞ்சனா..
மறுநாள் காலை அழகாக விடிந்தது..
யாழினி ஸ்ரீயும், இந்திரா தேவியும் நேற்று இரவே அவள் கிளம்புவதற்காக அனைத்தையும் எடுத்து வைத்திருக்க,, காலையில் யாழினி குளித்து முடித்து ரெடியாகி கீழே வந்தாள்..
அவளுக்காக தன் கணவரோடு காத்திருந்தார் இந்திரா தேவி..
கீழே வந்த பேத்தியை பார்த்த நாகில்லி வெங்கடேஷ் “நா பங்காரம்(தங்கம்) எந்தா பெத்த பணி சேஸ்துந்தி,” என்று பெருமையாக சொல்ல..
“தாத்தையா” என்று யாழினி அருகில் வர..
அவளை தூக்கி சுற்றியா, நாகில்லி வெங்கடேஷ்வர், கீழே இரக்கி விட,,.
“தாத்தையா நன்னன்னு ஆசிர்வாதம் செய்யன்டி” என்ற பேத்தியை..
“நா ஆசிர்வாதம் எப்புடு நீக்கு உந்திரா பங்காரம்”.
“இரண்டு பேரும் தமிழ் பேசுங்க இது தமிழ் நாவல்,” என்று சொன்ன இந்திரா தேவியை இருவரும் முறைத்து..
“உனக்கு நாங்க தெலுங்குல பேசுல என்ன பிரச்சனை”.
” எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல, நீங்க பேசுறது புரியுது ஆனா, நான் பேசனா தப்பு, தப்பா தெலுங்கு பேசுவேன், நீங்க சிரிப்பீங்க” என்றார்..
“நீ இங்க வந்து எத்தனை வருஷம் ஆச்சு, இன்னும் உனக்கு தெலுங்கு பேச சரியா வரல”..
“நான் நல்லா தான் பேசுறேன், நீங்க தான் நான் பேசுறதை கேலி பண்ணி சிரிக்குறீங்க” என்ற மனைவியை..
“நீ தப்பு, தப்பா தெலுங்கு பேசுறது கூட அழகா இருக்குடா, நா பெத்த பங்காரம்”, என்று இந்திரா தேவியை பார்த்து கண்ணடித்து கூற..
“பேத்தி பக்கத்துல இருக்கா” என்றார் இந்திரா தேவி..
“யாரு இருந்த என்ன? நீ தான், நா பஸ்ட் பங்காரம்”..
“ஆமாம், ஆமாம், நான் உங்க பங்காரம் தான், ஏர்போர்ட்டுக்கு நேரம் ஆச்சு கிளம்புறோம்” என்றார்..
“அம்மம்மா நானா போன் செஞ்சாரா”.
“இல்லடா பங்காரம், நீ போன் போடு” என்க..
யாழினி ஸ்ரீயின் போன் ஒலித்தது எடுத்து பார்த்தவள் “நானா” என்று தாத்தா, பாட்டியிடம் சொன்னவள்.
போனை ஆன் செய்து “நானா” என்று விஜயேந்திரனை அழைக்க.
“நா சிங்கார தல்லி எப்படி இருக்க”..
“ஐ யம் ஓகே நானா, நீங்க எப்போ வருவீங்க, என் டான்ஸ் பாக்க, வருவீங்களா இல்ல வரமாட்டீங்களா?”…
“நானா கண்டிப்பா உன் பைனல் டான்ஸுக்கு வருவேண்டா யாழ்குட்டி”..
“கண்டிப்பா வரணும் நானா, நான் வின் பண்ணுற பார்க்க”.
“வர்ரேண்டா யாழ், நீங்க பத்திரமா போயிட்டு வாங்க, சஞ்சனா ஆட்டி கூட இருக்கனும், எங்கேயும் தனியா போக கூடாது, நல்லா டான்ஸ் பண்ணு, ஆல்த பெஸ்ட்”..
“தாங்யூ நானா, ஐ மிஸ் யூ”..
“ஐயம் ஆல்சோ மிஸ்யூடா யாழ் குட்டிமா பாய்” என்று போனை வைத்திருந்தான்..
பேத்தியின் மலர்ந்த முகத்தை பார்த்து ” உன் நானா கிட்ட பேசிட்டீயா”..
“ஊம், அம்மம்மா நானா பைனல் டான்ஸ் பார்க்க வருவாங்கலாம்”.. என்று சந்தோஷப்பட்ட பேத்தியை பார்த்த இந்திரா தேவி பேத்தியின் தலையை வருடி விட்டவர்..
“சரிடா சாப்பிடு நேரமாச்சு” என்றவர்.. “அப்பறம் ஒரு விசயம் நீ இந்திரா தேவி பேத்தியென்று யார் கிட்டையும் சொல்ல கூடாது”..
“சரி அம்மம்மா” என்ற பேத்தியின் தலையில் முத்தமிட்டவர். மனதில் அவள் திறமையால், அவள் வெற்றி பெற வேண்டும், தன் பெயரை கொண்டு அவளுக்கு வரும் வெற்றி வேண்டாம் என்று நினைத்தார்..
ஐதராபாத் விமான நிலையத்தில் சஞ்சனாவிடம் தன் பேத்தியை ஒப்படைத்தவர். “சாக்கிரதை” என்று சொல்லி விட்டு. யாழினிஸ்ரீயின் கன்னத்தை தட்டி விட்டு சென்றார்..
தன் டான்ஸ் கனவுகளோடு விமானத்தில் ஏறினாள் யாழினிஸ்ரீ.
இங்கே சென்னை விமான நிலையத்தில் அதே டான்ஸ் போட்டிக்காக டெல்லி செல்லும் பிளைட்டில் ஏறினாள் 10 வயது கம்யாஸ்ரீ, தன் தாய்யுடன்..
விஜயேந்திர தேவ் நீயூயார்கில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில், அவன் இங்கே வந்த பிஸ்னஸ் நல்ல படியாக முடிந்தால். அனைவருக்கு சக்சஸ் பார்ட்டி ஏற்பாடு பண்ணி நடந்துக்
கொண்டிருக்க அனைவரும் கையில் கிளாஸோடு சிரித்து பேசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்த.. விஜயேந்திரன் தனது பி. ஏ. பிரகாஷ்வுடன் “இரண்டு மூன்று நாளில் வந்த வேலை முடிந்து விடம் ஐதராபாத்துக்கு டிக்கெட் போடுறா” என்று பேசிக்கொண்டு இருக்க..
விஜயேந்திரனை நோக்கி ஒரு பெண் வருவதை பார்த்து பிரகாஷ் “ஒக்க நிமிசம் சார்” என்று தள்ளி சென்று விட..
“ஹாய் வீ, பி” என்று அவனின் அருகில் வந்து நின்றது பெண், அவனை டான்ஸ் ஆட அழைக்க,.
அந்த நீயூயார்க் அழகியை நிமிர்ந்து அவள் கண்களை பார்த்தான் விஜயேந்திர தேவ்..அவன் தேடி அழையும் கண் இல்லை இது, அந்த சிரிப்பை எந்த பொண்ணிடமாவது கிடைத்து விடாத என்று பார்த்தவனுக்கு ஏமாற்றமே, “சாரி” என்று அப்பெண்ணிடம் சொல்லிவிட்டு விலகி இருந்தான்..
அவன் வாழ்நாளில் ஒரு முறையாவது அவளை சந்தித்து விடுவோமா? அந்த கண்களை பக்கத்தில் இருந்து பார்க்கணும். அவள் சிரிக்கும் அழகை பார்க்க ஆசைப்பட்டு தேடியவனுக்கு கிடைத்த விடையோ.. “சார் நீங்க தேடி வந்த இரண்டு பொண்ணுங்களுல ஒரு பொண்ணு செத்து போச்சு,, இன்னொரு பொண்ணு மெண்டல் ஆஸ்பத்திரியில பைத்தியமா இருக்கு அட்ரஸ் தரட்டுமா” என்றவரிடம்.. “வேண்டாம்” என்று திரும்பிவந்தவன்..
அவன் தேடி சென்ற பெண் இறந்திருந்தான்.. அவனால் தாங்கி கொள்ள முடியாது.. அதே பெண் பித்து பிடித்து சுயநினைவு இல்லாமல் இருப்பதை பார்த்தால், அங்கேயே அவன் உயிர் பாதி போயிரும்,, அவன் அழகி, அவன் இதயத்தில் ஜதி சேர்த்து எப்போதும் நடனமாடி கொண்டிருக்கும் நினைவு ஒன்றே போதும் என்று திரும்பி வந்திருந்தான்..
சென்னை விமான நிலையத்தில் தனது மகள் கம்யாஸ்ரீயிடம் “எல்லாம் சரியா எடுத்து வச்சுகிட்டியாடீ” என்றாள் கம்யாவின் தாய் சௌமியா..
“உம் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்மா”.
“சித்திக்கு போன் போட்டீயா”?..
“போன் போட்டேன்மா, சித்தி எடுக்கல, கால் மீ யின்னு மெஜேஸ் போட்டு இருக்கேன்” என்ற மகளின் தலையை தடவியவள்..
“இந்த டான்ஸ் போட்டியில வின் பண்ணுறீயோ இல்லை தோக்குறியோ ரெண்டுக்குமே கவலபடகூடாது, நாம கலந்துக்குனும், நம்ம திறமைய காட்டுறோம் அவ்வளவு தான் புரியுத, தோத்துட்டோமுன்னு அழகூடாது” என்று மகளிடம் கூற..
“அய்யோ அம்மா இது சித்தி ஏற்கனவே சொல்லிட்டாங்க, நாம வின் பண்ணுறோமோ இல்லையோ பயம் இல்லாமல் தைரியமா ஆடணும், வின் பண்ணணும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கனும். வின் பண்ணீயே ஆகனும் என்ற உறுதி இருக்க கூடாது, சந்தோஷமா ஆடணும், அனுபவிச்சு ஆடணும், நம்மலோட பெஷ்ட குடுக்கனுமின்னு சித்தி சொல்லி இருக்காங்கமா” என்ற மகளை ஆச்சரியமாக பார்த்தாள் சௌமியா. அவள் தங்கை அடுத்தவர்களுக்கே ஆயிரம் உதவி செய்வாள். என் மகளுக்கு சொல்ல மாட்டாளா என்ன.. என்று நினைத்துக்கொண்டே டெல்லி வந்து சேர்ந்தனர்..
யாழினிஸ்ரீயும், கம்யாஸ்ரீயும் டெல்லி வந்து சேர்ந்தனர்..
நாளை நடன போட்டி தொடங்குகிறது இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது யார்?… பார்க்கலாம்…..
error: Content is protected !!