Skip to content
Post Views: 545
குட் லக் சுந்தரி….2
சிவநேசனுக்கும்,லட்சுமிக்கும் தஞ்சாவூர் தான் பூர்வீகம்.அவர்களுக்கு ஒற்றை ஆண்பிள்ளை பெயர் ரவிகுமார்.லட்சுமியும்,நேசனும் காதலித்து மணமுடித்தவர்கள்.லட்சுமி நல்ல வசதியான குடும்பம் ஆனால் நேசனின் குடும்பம் அப்போது தான் வாழ்வில் முன்னேற போராடிக் கொண்டிருந்தார்கள்.லட்சுமியின் பெற்றோருக்கு மகளின் முடிவு அதிர்ச்சி தான் என்ற போதிலும் நேசனையும் அவனின் குடும்பத்தையும் நன்கு தெரியும் என்பதால் திருமணத்திற்கு சம்மதித்தனர்.
என்ன தான் அவர்கள் சம்மதித்தாலும் அவர்களின் மற்ற உறவுகள் நேசனையும் அவர் குடும்பத்தையும் சற்று கீழாக தான் பார்த்தார்கள்.ஆனால் லட்சுமியின் வீட்டார் நேசனை எந்தவித்திலும் கீழாக நடத்தியதில்லை அதே சமயம் தூக்கி வைத்தும் கொண்டாடியதில்லை.
ஆனால் சிவநேனும்,லட்சுமியும் இதையெல்லாம் காதிலும்,மனதிலும் வாங்காமல் தங்கள் வாழ்வை நிறைவாக தான் வாழ தொடங்கினர்.திருமணத்திற்கு பிறகு நேசன் வேலைக்கு போவதை தடுத்து தங்கள் விவசாய நிலங்களை கொடுத்து பார்க்க சொல்லி லட்சுமியின் தந்தை முன்வர,
Advertisement
“எங்களுக்கு எதுவும் வேணாம்ப்பா…..நாங்க இரண்டு பேரும் படிச்சிருக்கோம் எங்களுக்கான சொத்தை நாங்க உருவாக்கிப்போம்……”என்று லட்சுமி கூறிவிட நேசன் இன்னுமே மனைவியின் மீது காதல் பித்தானார்.இருவருமே வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகள்.ஆனால் நேசனிடம் சொந்தமாக நிலங்கள் இல்லை என்ற போதிலும் குத்தகைக்கு எடுத்து விளைச்சல் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது தான் லட்சுமி,
“எங்க நாமே ஏன் பேங்கல லோன் எடுத்து நிலம் வாங்க கூடாது….”என்று யோசனை தர,நேசனிற்கும் அந்த யோசனை இருந்த போதும் கடன் வாங்க மனம் இல்லை.ஆனால் லட்சுமி தான் அத்தனை பிடிவாதம் பிடித்தார்.
“நீங்க எதுக்கு பயப்படுறீங்கனு எனக்கு தெரியும் எங்க வீட்டு ஆளுங்க முன்னாடி கடனாளியா நின்னுட கூடாதுனு தான நினைக்கிறீங்க….”என்று ஒரு கட்டத்தில் ஆவேசமாக கத்திவிட,
Advertisement
“இல்லமா அப்படி இல்லை….”என்று கூற அவரை கை நீட்டி தடுத்தவர்,
Advertisement
“இங்க பாருங்க நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியாதாவ நான் இல்லை அதனால என்கிட்ட இப்படி மழுப்பிக்கிட்டு இருக்காதீங்க…..ஆமானு ஒத்துங்கோங்க…”என்று கூற,நேசனின் தலை ஆமாம் என்று ஆடியது.
“நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க….எல்லாம் தெரிஞ்சி தான் நாம இந்த பந்தத்துக்குள்ள வந்தோம் அப்படி இருக்கும் போது இதை எதிர்கொள்ளாம பின்வாங்க ஆரம்பிச்சா நாம நின்ன இடத்திலேயே தான் இருக்க முடியும் முன்னேற முடியாது….அதனால நான் சொல்லுறுதை கேளுங்க….”என்று கடைசியில் இறைஞ்சுதாலாக முடித்துவிட,
“சரிமா…ஆனா நாம வாங்கனுன கடனை அடைக்கிறது அவ்வளவு சுலபமும் இல்லை உனக்கே தெரியும் விவாசயம் எப்ப நமக்கு லாபம் தரும் எப்ப நமக்கு நட்டம் தரும்னு யாரலும் சொல்லமுடியாது…..”
Advertisement
“இதெல்லாம் நான் யோசிக்காமலா இருப்பேன்….நான் வேலைக்கு போறேன் என்னோட பிரண்ட் சென்னையில வேலையில இருக்கா அவகிட்ட சொல்லி வச்சிருந்தேன் அவ என்னை கூப்பிட்டு தான் இருக்கா….நான் வேலைக்கு போறேன்….” என்று கூற,நேசனுக்கு மனைவியை விட்டு பிரிவது பிடிக்கவில்லை என்றாலும் தங்கள் நிலை உயர வேண்டும் என்றால் இருவரும் உழைக்க தான் வேண்டும் என்று முடிவுடன் ஒத்துக் கொண்டார்.ஆனால் லட்சுமியின் பெற்றோர் இதற்கு மறுத்தனர்,
“என்ன இல்லை நம்ம கிட்ட நீ யார் கிட்டயோ போய் வேலைக்கு நிக்கனுமா….அதெல்லாம் வேண்டாம்….”என்று அவர்கள் கூற,
“உங்க கிட்ட தான் எல்லாம் இருக்கு….ஆனா நாங்க இப்ப தான் வளர்ந்துகிட்டு வரோம்…..அதனால எங்களோட வள்ர்ச்சியை பெரியவங்க நீங்களே கெடுக்காதீங்க….அதோட உழைச்சி சாப்பிடறது ஒன்னும் தப்பில்லையே…..”என்று லட்சுமி பேச,
“என்னமா நீ இப்படி பேசுற….எங்களுக்கு நீ ஒரே பொண்ணு…..ஏதோ நீ விருப்பபட்டேனு தான் நாங்க இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சோம்….ஆனா நீ எங்களை மொத்தமா ஒதுக்க கிட்ட….”என்று லட்சுமியின் தாய் கண்கள் கலங்கிவிட்டார்.
“ம்மா….ஒரு பொண்ணுக்கு புருஷன் வீடு தான் எல்லாம் நீ தான என்கிட்ட சொன்ன….இப்ப இப்படி பேசுற….”
“சொன்னேன் தான்டீ அதுக்காக நீ இப்படி ஒண்ணுமில்லாத குடும்பத்துல வாக்கப்பட்டு கஷ்படுவ நான் பார்த்துட்டு இருப்பேனா….”என்று அவரும் தன் ஆதங்கத்தை கொட்ட,
“ம்மா புரிஞ்சிக்க….நான் சந்தோஷமா தான் இருக்கேன்….என்னை என் வீட்டிக்காரர் நல்லபடியா தான் பார்த்துக்குறார்….நான் என்னோட புருஷன் சுமையை பாதி ஏத்துக்குறேன் அவ்வளவு தான்….அதோட நான் இதை பிடிச்சு தான் செய்யுறேன்….இதுக்கு மேல என்னை யாரும் எதையும் கேட்டாகாதீங்க…..”என்று லட்சுமி கோபத்துடன் உரைத்துவிட,மீண்டும் மகளின் பிடிவாதம் தான் வென்றது அங்கு.லட்சுமி கூறியது போல் வேலைக்கு சென்றுவிட,நேசனும் தன் தனைவி கூறியதை போல் வங்கியில் கடன் வாங்கி நிலத்தை வாங்கிவிட்டார்.இருவரின் கடின உழைப்பின் பரிசு தான் அவர்களின் வீடும்,இந்த நிலத்துடன் கூடிய தோப்பும்.எந்த இடத்தில் தாங்கள் தாழ்ந்து இருந்தோமோ அதோ இடத்தில் உழைத்து உயரத்தை எட்டியிருந்தனர் இருவரும்.அதில் லட்சுமியின் பெற்றோருக்கு அத்தனை கர்வம்.
அதைவிட நேசனிற்கு ஏதோ உலகத்தையே வென்ற உணர்வு.புரிந்து கொண்ட துணை கிடைத்தால் தோல்விகள் வந்தாலும் அதை கடந்து விடலாம்.அந்த வகையில் லட்சுமி அவருக்கு கிடைத்த வரம் தான்.அதனால் தான் தன் வீட்டிற்கு லட்சுமி விலாஸ் என்று பெயர் சூட்டினார்.அவரின் ஆன்மாவுடன் கலந்த ஒன்றாக தான் நேசனின் தோப்பும்,வீடும் இருக்கிறது இன்றுவரை.தன் பழைய நினைவுகளை அசைப்போட்டப்படி அமர்ந்திருந்த நேசனிற்கு மனதிற்குள் இப்போது வேதனை தான் மிதமிஞ்சி இருந்தது.இருக்காதா பின்னே இத்தகைய உழைப்பின் பரிசை தான் விட்டுவிட்டு வரும்படி கூறுகிறான் மகன் ரவிகுமார்.அந்தளவிற்கு அவனின் வெளிநாட்டு மோகம் முற்றி போயிருந்தது.ஒற்றை மகன் என்று செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டேனோ என்று தான் இப்போது வருந்தினார் நேசன்.
லட்சுமிக்கு இரண்டு முறை கரு கலைந்து மூன்றாவதாக தான் கரு நிலைத்தது அதனால் குழந்தையை தன் உயிர் போல தான் பார்த்துக் கொண்டார்.ரவிகுமாருக்கும் அன்னை என்றால் அத்தனை பிரியம் தந்தையிடம் கேட்டு கிடைக்காதவற்றை அன்னையின் மூலம் சாதித்து கொள்வான்.அப்படி தான் வெளிநாட்டு படிப்பும் அவனிற்கு கிடைத்தது.நேசனிற்கு துளி கூட விருப்பமில்லை மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப ஆனால் லட்சுமி தான் அவரை கரைத்து மகனை அனுப்பி வைத்தார்.
லட்சுமி படித்த முடித்தவுடன் இங்கு தானே வரப்போகிறான் என்று தான் பிள்ளையை அனுப்பி வைத்தார் ஆனால் அவனோ படித்தவுடன் அங்கே வேலை கிடைத்துவிட்டது என்று அமர்ந்தான் பின் அங்கு பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண்ணான நிரோஷவை திருமணம் செய்வேன் என்று நின்று அதையும் சாதித்துக் கொண்டான்.அதன் பின் அவனின் பிள்ளை பிறப்பும் அங்கு தான் நடந்தது.ஆக மகன் மொத்தமாக வெளிநாட்டிலேயே குடியேறியிருந்தான்.லட்சுமியும்,சிவநேசனும் முதலில் அடிக்கடி வெளிநாடு சென்று மகன்,மருமகள் பேரன் என்று குடும்பமாக இருந்துவிட்டு தான் வருவார்கள்.ஆனால் வயோதிகம் அதிகம் ஆக ஆக அவர்களால் பயணங்கள் செல்ல முடியாமல் போக மகனை பார்ப்பதே அரிதாகி போனது.
நேசனும் பலமுறை மகனை இங்கேயே வந்துவிடும்படி அழைத்துபார்த்து தோற்று தான் போனார்.ரவிக்கு வெளிநாட்டில் வாழ தான் விருப்பம் என்று உறுதியாக கூறிவிட அன்றிலிருந்து ஆரம்பித்தது அப்பா பிள்ளை போர்.நீ வரவில்லை என்றால் நாங்களும் வரப்போவதில்லை என்று நேசன் கூறிவிட,ரவியும் உங்கள் விருப்பம் என்று விட்டான்.அதில் மொத்தமாக உடைந்து போனது லட்சுமி தான்.எத்தனை அருமை பெருமையாக மகனை வளர்த்தேன் இப்படி ஒற்றை வார்த்தையில் எங்களை வேண்டாம் என்றுவிட்டானே என்று எண்ணாத நாளில்லை.
நிரோஷா வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை.அவரை பொறுத்தவரை பணம் தான் பிரதானம் மற்றவை எல்லாம் அதன் பின் தான் என்னும் எண்ணம்.அவரின் பெற்றொரும் அதை தான் அவருக்கு கற்பித்திருக்க லட்சுமி,நேசனின் ஆசா பாசங்கள் எல்லாம் இமோஷனல் பூல் என்பார்களே அது போல் தான் இருந்தது.பேரனை பற்றி கேட்கவே வேண்டாம் இப்படி பணம் பணம் என்று சுற்றுபவர்கள் பிள்ளையை எப்படி வளர்த்திருப்பார்கள், நேசனும்,லட்சுமியும் அங்கு செல்லும் நாட்களில் அவனை பார்ப்பதே அரிதாக இருக்கும்.மகன்,மருமகளிடம் கேட்டால் அவன் வளர்ந்துவிட்டான் அவன் வாழ்வை அவன் பார்த்துக் கொள்வான் என்று கூற மொத்தமாக உடைந்த தான் போயினர் பெரியவர்கள்.
லட்சுமி என்ன தான் மகனிடம் கோபம் என்றாலும் அவன் ஒரு முறை பேசிவிட்டாலே அனைத்தையும் மறந்து தான் போய்விடுவார்.ஆனால் நேசனால் அப்படி இருக்க தான் முடியவில்லை தனக்கு பின் தன் மகன் வந்து அனைத்தையும் பொறுப்பெடுத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு அது நடக்கவே போவதில்லை என்பது புரிய வேதனை தான் ஏற்பட்டது.இதில் இரண்டு வருடம் முன் இவர்கள் சென்ற வந்த போது அப்பா,மகன் வாக்குவாதத்தில்,
“உங்களுக்கு நாங்க வேணும்னா எல்லாத்தையும் வித்துட்டு இங்க வந்துடுங்க….”என்று கூறி விட கொதித்துவிட்டார் நேசன்.
“என்னாடா நினைச்சிக்கிட்டு இருக்க அதை நீ சொத்தா மட்டும் தான் பார்க்குற ஆனா அது என்னோட உயிர்ல கலந்தது….அதை விட்டு இங்க எப்படி வருவேன்……என்னால முடியாது…..”என்று நேசன் கூற,
“அப்ப என்னாலையும் வரமுடியாது….”என்றுவிட்டார் ரவி.அத்துடன் கிளம்பி வந்தவர்கள் தான் இதோ இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது ஆனால் பிரச்சனை முடியவில்லை.
“என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்…..”என்ற பாடல் வரிகள் ஒலிக்க,நேசனின் முகத்தில் புன்னகை அரும்பியது.தனது கைபேசியை ஆன் செய்து காதில் வைத்தார்.
“உன்னை விட்டு போகமாட்டேன்ன்ன்…..”என்று எதிர் முனையில் சுந்தரி பாட,நேசன் தன் காதுகளை இரு நொடி அடைத்துக் கொண்டார்.தான் என்ன கூறினாலும் இப்போது அவள் காதில் விழாது அதனால் தன் செவிகளை காத்துக் கொள்வதே மேல் என்று புரிந்து கொண்ட மனிதர்.
“காதுலேந்து கையை எடு நான் பாடி முடிச்சிட்டேன்…..”என்று சுந்தரி கத்த,
“ஹா ஹா….எடுத்துட்டேன் எடுத்துட்டேன்…..”
“ம்ம்…வர வர ரொம்ப கொழுப்பு கூடி போச்சு உனக்கு….”
“என்னடா பண்ண உன்னோட தாத்தா வாச்சே….அப்படி தான இருப்பேன்….”என்று அவர் பதிலடி கொடுக்க,
“அவ்வா….நல்லா பேச கத்துக்கிட்ட தாத்தா….சரி அதெல்லாம் விடு….எதுக்கு என் லச்சுவை படுத்துற…..பாவம் நீ வந்ததுக்கு அப்புறம் அந்த பார்சலை சுத்தி சுத்தி வந்தீங்கனு பாட்டு பாடிக்கிட்டு அதையே சுத்திகிட்டு இருக்கு…..”
“அவளுக்கு வேற வேலை இல்லை…..”என்றவரின் பதிலேயே பழைய நினைவுகளின் பிடியில் உள்ளார் என்று புரிந்து கொண்டவள்,
“தாத்தா….இப்படி பேசாத….”என்ற சுந்தரியின் குரலும் உள்ளே சென்றிருந்தது.
“நீ தான சொல்லுவ கடந்து போன விஷயங்களை நினைச்சிக்கிட்டே இருந்தா நிகழ்காலமும் நம்மை விட்டு போயிடும்னு….இப்ப நீயே இப்படி பண்ணலாமா….நல்லாவா இருக்கு….”
“நல்லா இல்லை தான்….என்னை என்ன செய்ய சொல்லுற….அவளுக்கு அவ பிள்ளை வேணும்,எனக்கு என் தோப்பும்,வீடும் வேணும்….ஆனா என் பிள்ளைக்கு நாங்க இரண்டு பேருமே வேண்டாம்….”
“ஏன் அப்படி சொல்லுற அங்கிள் தான் உன்னை கூப்பிடுறார் தானே அவர் கூட போக வேண்டியது தானே….”
“என்ன சுந்தரி நீயும் புரியாம பேசுற….கஷ்டபடுற குடும்பத்துல இருக்குறவன் வெளிநாட்டுல வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்….ஆனா இங்க அப்படி இல்லை ரவிக்கு எல்லாம் இங்க இருக்கு…..அவன் இங்க வந்து அந்த வேலையை பார்த்தா என்னனு தான் நான் கேட்குறேன்…..என்னதான் வெளிநாடுனு சொன்னாலும் நம்ம நாட்டை போல வருமா….அது ஏன் அவனுக்கு புரிய மாட்டேங்குது…..இவனாவது பரவயில்லை இவன் பிள்ளை அப்பனை மிஞ்சிடுவான் போல….போன தடவை போனப்போ அவனை நாங்க பார்க்கவேயில்லை எங்கடா விக்ரம்னு ரவிகிட்டேயும்,நிரோஷகிட்டேயும் கேட்டா சொல்லி வச்ச மாதிரி எங்களுக்கு தெரியலைனு சொல்லுறாங்க…..பெத்த பிள்ளை எங்க இருக்குனு கூட தெரியலை இதெல்லாம் என்ன குடும்பனும் தான் எனக்கு தோணுச்சு….”
“தாத்தா அவங்க அங்கேயே வளர்ந்தவங்க…அங்கெல்லாம் அப்படி தான்….அதோட உன் பேரன் என்ன சின்ன பிள்ளையா காணம போக….”
“இதோ இப்ப நீ சொன்னியே அது தான்…..அந்த கலாச்சாரம் தான் பிடிக்கலைனு சொல்லுறேன்….குடும்பத்தோட பிணைப்பு இல்லை ஏதோ பேயிங் கெஸ்ட் மாதிரி வந்துட்டு போறான்….ச்சு இதை பத்தி பேசாதடா எனக்கு பீபி ஏறுது…..நீ எதுக்கு போன் பண்ண அதை சொல்லு….”என்று நேசன் பேச்சை மாற்றிவிட்டார்.
“இன்னைக்கு கோவிலுக்கு போகனும்…நியாபகம் இருக்கட்டும்….அப்புறம் லச்சு கிட்ட பேசு….ரொம்ப லோன்லியா பில் பண்ணுகிட்டு இருக்கும்….இன்னைக்கு லச்சு பேபி பர்த் டே வேற….”
“இதெல்லாம் நீ சொல்லனுமா…..நான் பேசுறேன்….நீ பாரு…..”என்று கூறிவிட்டு வைத்துவிட,அலைகடலாய் அலைக்கழிந்து கொண்டிருந்த மனது சுந்தரியிடம் பேசிய பிறகு சற்று சமன் பட்டது போல் இருந்தது.
error: Content is protected !!