Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 4

அத்தியாயம் 4

 

“ஆரா! இந்த வீக்கேன்ட் எதுவும் ப்ரோக்ராம் வச்சிருக்கியா?” ஸ்ருதி ஆராத்யாவிடம் கேட்க,

 



Advertisement

“ம்ம் இப்ப வரை எதுவும் இல்லை!” அஜய்க்கு உணவு ஊட்டியபடி கூறியவள் நினைவு வந்தவளாய்,

 

“ஆமா ஒரு நியூ ப்ராஜெக்ட் ஒன்னு சக்ஸஸ் பண்ணினோம்னு சொன்னேனே! அதுக்கு பார்ட்டி கேட்ருந்தாங்க.. மோஸ்ட்லி டீம்அவுட் தான் பிளான் பண்ணுவாங்க.. ஏன் ஸ்ருதி?” என்றாள்.

Advertisement

 

Advertisement

“இல்ல பிரண்ட் மேரேஜ் ஒன்னு.. அதான் உன்னையும் கூட்டிட்டு போலாம்னு கேட்டேன்..”

 

“ம்ம்! போலாம் ஸ்ருதி.. நான் ஆபீஸ்ல என்னனு கேட்டுட்டு சொல்றேன்!”

Advertisement

 

“ஆரா! உனக்கு டைம் ஆச்சு.. நீ சாப்பிடு.. அவனுக்கு நான் ஊட்டிக்குறேன்!” அம்பிகா கூற,

 

“முடிஞ்சுது ம்மா.. கொஞ்சம் தான்!” என முழுதாய் ஊட்டிவிட்டு கிளம்பி தன்னுடைய வண்டியை கிளப்பிக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

 

ஆராத்யாவின் வாகனம் உள்ளே நுழைந்து அவள் கைப்பயை எடுத்துக் கொண்டு பார்க்கிங்கை தாண்டி லிப்ட் நோக்கி செல்லும் வரையுமே அவளை மட்டுமே பார்த்தபடி காரினுள் அமர்ந்திருந்தான் ரகு.

 

என்றாவது மட்டுமே சாதாரணம் போல காட்டி உடனே செல்வதும் அவளுடன் லிப்ட்டில் பயணிப்பதும்.. மற்ற நேரங்களில் எல்லாம் நேரம் கணக்கிட்டு அவள் தன் இடத்தில் அமரும் வரை தனக்குள் ஒரு நேரம் நிறுத்தி பின் தான் காரை விட்டு இறங்கவே செய்வான் ரகு.

 

நேற்றைய தினம் ஆரா தன் நண்பர்களுடன் லிப்ட் உள்ளே வர, அவள் சென்றிருப்பாள் என நினைத்து வந்தவன் பின்னேயே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும் துளி கூட முகத்தில் காட்டிடவில்லை அவன்.

 

இன்று அவள் பார்க்கிங் தாண்டி செல்லவும் தானும் இறங்கி உள்ளே சென்றபோது லிப்ட் மேலே செல்வதற்கான பட்டனை அழுத்திய ஆரா ரகுவின் வருகை கண்டு அதை நிறுத்தி வைக்க, ரகுவே நான்காம் தளம் செல்லும் பட்டனை அழுத்திவிட்டு நகர்ந்து நின்றான்.

 

“குட் மார்னிங் சார்!” புன்னகையோடு ஆராத்யா கூற,

 

“மார்னிங்!” என்று சிறு புன்னகை கொடுத்தவன் மனம்,

 

தர்ஷினி, நாந்தா கூறியதை நினைத்து ‘பேசு பேசு! எதாவது பேசு!’ என அவனை உந்த, சுத்தமாய் பேச்சு வரவில்லை ரகுவிற்கு. அலுவலகத்தில் சிறு தவறுக்கெல்லாம் அவன் இடும் சத்தம் கேட்டு மொத்த கட்டிடமும் அதிரும் என கூறுவார்கள்.

 

இங்கே இப்படி ஆரா முன் பேச்சு வராமல் அவன் நிற்க, ரகுவிடம் அதற்கு மேல் எதையும் எதிர்பாராதவள் லிப்ட் கதவைப் பார்த்தபடி நின்றுவிட்டாள்.

 

இன்று இப்பொழுது என்று இல்லாமல் இத்தகைய வாய்ப்புகள் கிடைத்தும் பல நேரங்களில் அவனால் பேச முடிந்ததில்லை.

 

தொழிலில் பேசியே காரியம் சாதித்துக் கொள்ளும் ஒருவன் தன் மனம் கவர்ந்தவளிடம் மட்டும் தள்ளி நிற்கும் நிலை.

 

பேசிவிடுவது என்னவோ எளிது தான்.. ஆனால் அவளின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று தான் ரகு அதிகத்திற்கும் நினைத்து தயங்குவதே.

 

‘இவ்வளவு தானா நீ?’ என அவன் பேச்சினை வேறொரு கோணத்தில் அவள் பார்த்துவிட்டால்? நினைக்கவே பயமாய் இருக்க, தலையை உலுக்கவும் லிப்ட் திறக்க, ஆராத்யாவிற்கு முன் வேகமாய் சென்றுவிட்டான்.

 

விஷால் வந்து ரகுவிடம் மற்றவர்களின் விருப்பம் என்று கூறி டீம்அவுட் செல்ல கேட்க, அவர்களின் விருப்பப்படியே சனிக்கிழமைக்கு ஒப்புதல் கொடுத்திருந்தான் ரகு.

 

“ஆரா! வர்ற தானே?” கார்த்திகா கேட்க,

 

“ஆரா இல்லாமலா? இந்த மாதிரி டைம் எல்லாம் அவ மிஸ் பண்றது இல்லை.. இல்ல ஆரா?” என்றான் பிரேம்.

 

“பின்ன? இதே மாதிரி தான் ஜாலியா இருப்போமா? இல்ல இதே பிரண்ட்ஸ் லாஸ்ட் வரை கூட வருவாங்களா? இதே மாதிரி அவுட்டிங்னு நாம காலத்துக்கும் சுதந்திரமா இருக்க முடியுமா? இல்லை இல்ல? கிடைக்கும் போது அனுபவிச்சுக்கணும்!” என்ற ஆராத்யா,

 

“விக்ரம்! இந்தா!” என்று நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.

 

“எதுக்கு?” விக்ரம் கேட்க,

 

“நேத்து கேன்டீன்ல சேஞ்ச் கேட்டப்ப ஹன்ரெட்டா குடுத்தியே?” என்று இன்னும் நீட்டியபடியே இருக்க,

 

“மாறவே மாட்டியா நீ?” என்றான் விக்ரம் முறைத்து.

 

“ம்ம்ஹும்!” என்று சிரித்தவள்,

 

“காசு விஷயத்துல நான் மட்டும் இல்ல நீங்க எல்லாருமே இப்படியே இருங்க, பிரண்ட்ஸ், தெரிஞ்சவங்க, ரிலீட்டிவ்.. யாரா இருந்தாலும்.. ஒரே மாதிரி எப்பவும் இருக்க மாட்டாங்க.. காசுக்கு அவ்வளவு மதிப்பு இருக்கு!” என்று பாடம் எடுக்க,

 

“ஒரு நூறு ரூபாய்க்கு இவ்ளோ  பேச்சு.. டேய்! வாங்கி வச்சுக்கோ டா.. மைக் கேட்டாலும் கேட்பா!” என்று பிரேம் கிண்டல் செய்ய, விக்ரமும் வாங்கிக் கொண்டான்.

 

சிரித்துக் கொண்டிருந்தாலும் ஆராத்யாவின் மனம் தன் குடும்பத்தின் பக்கமாய் செல்ல, பணத்தின் முக்கியத்துவம் என்றும் மாறாது என்பது அவளது தெளிந்த எண்ணம்.

 

“டேய்! சார் வர்றாங்க!” விஷால் பிரேம் அருகே வந்து கிளம்பும் நேரம் சொல்ல,

 

“விஷால்!” என்று அழைத்தபடி தான் கதவை திறந்து வந்தான் ரகு.

 

“சார்!” என்று விஷாலும் ரகு அருகே செல்ல,

 

“நான் கிளைண்ட் மீட் பண்ண போறேன்.. நீங்க பார்த்துக்கோங்க.. நாளைக்கு நான் ஆபீஸ் வர்றது டவுட்.. சோ நீங்க தான் மைண்டைன் பண்ற மாதிரி இருக்கும்!” என்று நின்று கூறியவன் அருகே பிரேம், விக்ரம், மற்றும் ஒரு நான்கு பேர் கூடி வந்துவிட,

 

விஷாலிடம் பேசிக் கொண்டிருந்தவன் பார்வை அவர்களிடம்  சென்றது.

 

“சார்! நாளன்னைக்கு தான் சட்டெர்டே! நீங்களும் எங்களோட ஜாயின் பண்ணிக்கலாமே!” விக்ரம் கேட்க,

 

“ஆமா சார்! நீங்க வந்தா நாங்களும் ஹாப்பி!” என்றான் பிரேமும்.

 

சட்டென ஒரு நொடி என்றாலும் ரகுவின் பார்வை பிரேம் பின்னே அவளிடத்தில் அமர்ந்திருந்த ஆராத்யாவை தொட்டு திரும்பி இருக்க,

 

“எல்லாரும் சேர்ந்து போனா நல்லாருக்குமே சார்.. நீங்க எங்களோட வந்து ரொம்ப நாள் ஆச்சு!” என்றான் விஷாலும்.

 

“இட்ஸ் ஓகே!” என்று சிறு புன்னகையை கொடுத்த ரகு,

 

“இந்த டைம் நீங்க போய்ட்டு வாங்க.. நெக்ஸ்ட் பாக்கலாம்!” என்ற வார்த்தைக்கு மேல் அவனை வற்புறுத்த முடியவில்லை யாருக்கும்.

 

அடுத்தடுத்த நாட்கள் சாதாரணமாய் நகர, ஒரு வாரம் ஓடி இருந்தது.

 

இடையே அலுவலகத்தில் இருந்து சென்ற அவுட்டிங்கும் நல்லபடியாய் போய் வந்திருக்க, உற்சாகமாய் வேலைகளில் ஈடுபட்டிருத்தனர் அலுவலகத்தில்.

 

நாளை தர்ஷினியின் வளைகாப்பு.. இன்று ரகு அலுவலகம் சென்றிருக்கவில்லை.

 

நந்தகுமார் திருச்சி வந்து சேர்ந்திருக்க, சொந்தங்களுக்கு மகேஸ்வரியும் கல்பனாவும் அழைத்துவிட்டனர்.

 

முக்கிய சொந்தங்களுக்கு மட்டும் ரகுவும் மகேஸ்வரியும் நேரில் சென்று அழைத்து வர, அகிலன் தன்னால் முடிந்த வேலைகளை அவன் பார்த்துக் கொண்டான்.

 

வங்கியில் விடுப்பு எடுக்க முடியாத சூழலில் சில விஷங்களை அலைபேசியில் பேசி முடித்திருந்தான் அகிலன்.

 

“இதென்ன அத்தை போட்டோ?” கல்பனா மகேஸ்வரியிடம் கேட்க,

 

“உன் அப்பா தான் குடுத்தாரு.. பிரிச்சு பாரு!” என்றார் மகேஸ்வரி.

 

ரகுவோடு சென்று கல்பனாவின் வீட்டிற்கு சென்று நேரில் அழைத்துவிட்டு வந்தவர்களிடம், கல்பனா பேசியபடி இருக்க, ரகு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

 

“இது பிரியா தானே? என் சித்தப்பா பொண்ணு.. இவ போட்டோ எதுக்கு..?” என கேட்டுக் கொண்டு வந்த கல்பனாவிற்கு மகேஸ்வரியின் பார்வை சென்று கொண்டிருந்த ரகுவிடம் இருப்பதை பார்த்ததும் புரிய,

 

“ப்ச்! என் அப்பா வேலையா?” என்றாள் கல்பனா.

 

“ஷ்! மெதுவா பேசு டி.. அவனுக்கு தெரியாது.. அவன் போன் பேச போன கேப்புல உங்க அப்பா இதை என் கையில திணிச்சுட்டார்..” மகேஸ்வரி சொல்ல,

 

“ஏன்? நேரா ரகுகிட்டயே குடுத்திருக்கலாமே! என்ன பயம்?” என்று கல்பனா சிரிக்க,

 

“ம்ம்க்கும்! குடுத்ததும் வாங்கி பார்த்துடுவான் உன் கொழுந்தன்.. அட போ டி.. உன் அப்பாவும் வரும் போதெல்லாம் பிரியா பத்தி சொல்லி பாத்தாரு.. எங்க? இவன் தான் காதுல வாங்கவே இல்லையே! அதான் போட்டோவை நீட்டிட்டார் இன்னைக்கு.. நல்லா தான் இருக்கா!” என்று மகேஸ்வரி போட்டோ பார்த்து கூறினார் பெருமூச்சோடு.

 

“உங்க புள்ளைகிட்ட நீங்க காட்டுறது!”

 

“ஆசையா பார்க்கலனாலும் வேண்டா வெறுப்பா பார்த்தா கூட போதும்னு நானும் காட்டிடுவேன்.. அவன் தான் கவரை கூட பார்க்க மாட்டேன்னு நிக்கிறானே! தர்ஷி வரட்டும்.. பிடிச்சு அமுக்கி கல்யாணம் பண்றியா இல்லையானு கேட்குறேன் அவனை” என புகைந்துவிட்டு செல்ல, சிரித்தபடி சென்றாள் கல்பனாவும்.

 

அடுத்த நாள் அதிகாலைக்கும் முன்பே வீட்டில் இருந்து கிளம்பிவிட்டனர் ரகு குடும்பத்தினர்.

 

சொந்தங்கள் அனைவர்க்கும் அகிலன் பஸ் ஒன்றிணை ஏற்பாடு செய்திருக்க, மகேஸ்வரி, ரகு, அகிலன், கல்பனா நால்வரும் தங்களது காரில் வரும்படி ஏற்பாடு.

 

“நான் பஸ்ல வர்றேன்.. அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க?” என மகேஸ்வரி கேட்க,

 

“நினைக்குறவங்க பேசட்டும்.. அப்புறமா பாத்துக்கலாம்.. உங்களுக்கு அங்க வசதியா இருக்காது.. பேசாம வாங்க த்த!” என்றுவிட்டாள் கல்பனா.

 

சரியாய் கார் வரவும் வரவேற்க வாசலுக்கு வந்துவிட்டான் நந்தகுமார்.

 

“எப்ப வந்திங்க மாமா?” என அகிலன் நந்தாவிடம் கேட்க,

 

“நேத்து தான் பிளைட்ல வந்தேன் மச்சான்!” என்ற நந்தா,

 

“வா ரகு!” என்று தோளோடு அணைத்துக் கொண்டான் ரகுவை.

 

“போ! போய் தர்ஷிக்கு இந்த பூவை வச்சுவிடு” மகேஸ்வரி கல்பனாவிடம் சொல்ல,

 

சரி என நந்தாவிடமும் பேசிவிட்டு உள்ளே சென்றாள் கல்பனா.

 

ஏற்கனவே தலை நிறைந்த பூவும், பட்டு சேலையும் என தயாராய் நின்றாள் தர்ஷினி.

 

“சொன்னேன்! உங்க அம்மாகிட்ட அப்பவே சொன்னேன்.. இம்புட்டுகாண்டு பூ அங்க கிடைக்காதான்னு.. அண்ணி வாங்கி கொடுக்குறது தான் முறைனு வாங்கி என் கையில குடுத்தாங்க.. இத நான் இப்ப எங்க வைக்குறதாம்?” என கல்பனா குறை போல தர்ஷினி முன் சென்று கோபமாய் நிற்க,

 

“அவ்வளவு தானே அண்ணியாரே!” என பூவை வாங்கியவள், அதை கட் செய்து கொஞ்சமாய் தனக்கு வைத்துக் கொண்டு மீதி அனைத்தையும் கல்பனாவை திருப்பி அவள் தலையினில் வைத்துவிட்டாள்.

 

“சரியா போச்சு போ! இன்னைக்கு ஃபன்க்ஷன் உனக்கு!”

 

“ஏன் பூ வைக்குறதுல என்ன தப்பு? சீக்கிரம் உங்களுக்கும் இந்த ஃபன்க்ஷன் வரனும்னு வேண்டிட்டு வச்சிருக்கேன்.. பார்ப்போம்.. அப்ப எனக்கு நீங்க என்ன கிப்ட் தரிங்கனு!” என்று சொல்ல, கண் கலங்கிய கல்பனா அதை மறைத்தும் கொண்டாள்.

 

“அப்படிலாம் கலங்க கூடாது.. கடவுள் தள்ளி குடுத்தாலும் நிறைவா தர போறாரு..” என்று தர்ஷினி மாமியார் வர, விழா இனிதாய் ஆரம்பம் ஆனது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!