Skip to content
Post Views: 1,531
அத்தியாயம் 19
“அவ்வளவு தானா?” கூர்மையான பார்வையுடன் ஹரிஷ் கேட்க,
Advertisement
“அய்யோ சார்! குட்டிக்கு வயசு தான் ஆச்சு.. இன்னும் நல்லது கெட்டது தெரியல.. நான் சொத்தை என் பேர்ல கேட்கல.. என் மாமா பேர்ல தான்…” என்று பரமசிவம் சொல்லி முடிக்கும் முன்,
“பொய் சொல்றான் சார்!” என ஆராத்யா தடுத்திருக்க,
Advertisement
Advertisement
“இங்க பாரு பரமா! அந்த பொண்ணு முழுசா சொல்லி முடிக்குற வரை நீ வாயே திறக்க கூடாது.. மீறி திறந்த… சொல்லிட்டே இருக்க மாட்டேன்.. கண்ட இடத்துல சுட்டுருவேன்.. ஆனா உனக்கு இருக்கு டா.. மிரட்டல் கேஸ், கடத்தல் கேஸ்னு உன் லிஸ்ட்டே போதும் உன்னை சுட்டு தள்ள!” என்ற ஹரிஷ் ஆராத்யா புறம் திரும்ப,
“அவன் மாமானு சொன்னது என் அப்பாவை இல்ல.. அவன் வைஃபோட அப்பாவை..” என்று ஆராத்யா சொல்ல,
Advertisement
“பொறுக்கி நாயே! கல்யாணம் வேற ஆகிட்டா உனக்கு?” என கன்னம் கன்னமாய் பரமசிவத்தை அடித்து தள்ளியது ரகுராம்.
“அய்யோ குட்டி! எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல.. அந்த அகல்யா யாருன்னே எனக்கு தெரியாது.. நான் சொன்ன என் மாமா எனக்கு தூரத்து சொந்தம்..”
இன்னும் பரமசிவம் தன் வாயால் தனக்கு தானே சுய வாக்குமூலம் கொடுக்க,
“தூரத்து மாமா பேர்ல எல்லாம் சொத்தை எழுதி கேட்ட உன்ன நினச்சா எனக்கு பெருமையா இருக்கு பரமா..” என்ற ஹரிஷ்,
“உன் பொண்டாட்டியோட அப்பானு தான் அந்த பொண்ணே சொன்னா.. நீ அகல்யானு பேரு வச்சி சொல்றியே! அகல்யா யாரு உனக்கு தங்கச்சியா?” ஹரிஷ் கேட்க,
“இல்ல சார்! நான் ஒத்த பையன் என் வீட்டுக்கு.. அகல்யா என் மாமா பொண்ணு!” உளறி கொட்டினான் பரமசிவம்.
“இப்ப தானா டா இல்லாத பொண்டாட்டி அகல்யானா யாருன்னே தெரியாதுனு சொன்ன.. இப்ப மாமா பொண்ணுங்குற.. அப்ப அந்த மாமா தான் சொத்து பேர் கேட்ட மாமாவா?” என்று ஹரிஷ் அவன் முடியை இழுத்து ஆட்டி ஆட்டி கேட்க, மொத்தமாய் வலியில் கதறி குழம்பிவிட்டான் பரமசிவம்.
“காசு வேணும்னா எப்பவும் என் அம்மாகிட்ட தான் வந்து நிப்பான்.. காசுக்காக மட்டும் தான் வீட்டு பக்கமே வருவான்.. இவனுக்கு கல்யாணம் ஆனதே என் வீட்டுல யாருக்கும் தெரியாது சார்.. என் அம்மாக்கும் கூட தெரியாது அவனுக்கு கல்யாணம் ஆனது.. அம்மா இறந்த மூணாவது நாள் என்கிட்ட கையெழுத்து கேட்டு நான் முடியாதுன்னு சொல்லவும் என்னை மிரட்டிட்டு அந்த மூணுபேரை என்னை காவலுக்கு வச்சுட்டு இவன் போய்ட்டான்.. இவன்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு ஏதோ தைரியத்துல அங்க இருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டேன்..” ஆராத்யா சொல்லிக் கொண்டு இருக்க,
“பொறுக்கி ராஸ்கல்! ஹரி! நான் இப்ப இவன் மேல கம்பளைண்ட் குடுக்கேன்.. அக்ஷன் எடு.. இவனை எல்லாம் சும்மாவே விட கூடாது.. ஆராத்யா சைன் பண்ணுவா!” என்று அத்தனை கோபத்தில் ரகு கூற, ஆராத்யாவே மிரண்டு தான் பார்த்தாள் ரகுவை.
“கண்டிப்பா ரகு!” என்ற ஹரிஷ்,
“உங்களுக்கு எப்படி ஆராத்யா இவனுக்கு கல்யாணம் ஆனது தெரியும்? எப்ப தெரியும்?” ஹரிஷ் கேட்க,
“அந்த மூணு பேர்ல ஒருத்தன் தான் சொன்னான் சார்.. என் அப்பாவை அவனுக்கு நல்லா தெரியுமாம்.. என் மேல இரக்கப்பட்டு சொன்னான்.. இங்க இருந்து ஓடிருனு அவன் தான் என்னை தப்பிக்க வச்சான்.. இவனுக்கு கல்யாணம் ஆகிட்டதாவும் அந்த பொண்ணோட அப்பா இவன்கிட்ட பணம் கேட்டுட்டு இருக்கதனால தான் என்னை கல்யாணம் பண்ண பார்க்கதாவும் சொன்னான்” ஆராத்யா சொல்ல,
“அய்யோ குட்டி! யார் என்ன சொன்னாலும் நம்பிடுவியா?” என்று பரமசிவம் சொன்னது தான் தாமதம், அவன் கையை முறித்து வலது காலை தன் காலால் சுழற்றி தலை முடியை அந்த இடத்திலேயே கொத்தாய் பிடித்து முட்டியிட வைத்திருந்தான் ஹரிஷ்.
ஆராத்யா நடுங்கி ரகுவை ஒட்டி நிற்க வர, “இவனுக்கு இதெல்லாம் கம்மி ஆரா!” என்றான் அவள் முகம் பார்த்து ரகு.
“லூசு மாதிரி சொன்னதையே சொல்றியே பைத்தியமா இருப்பியோனு உன்னை நான் நினச்சா.. நீ எல்லாருக்கும் விபூதி அடிக்க பாத்திருக்க என்ன? கல்யாணம் பண்ணிட்டு இன்னொரு பொண்ணை பார்த்ததே தப்பு.. இதுல அதட்டி, மிரட்டி, கடத்தி, கொலை பண்ண முயற்சி பண்ணி…” என்று ஹரிஷ் அடுக்க,
“அய்யோ சார்! நான் கொலை எல்லாம் பண்ணல.. வலிக்குது சார்!” என அலறினான் பரமசிவம்.
“நீ தான் பண்ணின.. நீ கொலை பண்ண முயற்சி பண்ணாமலா அந்த பொண்ணு கையில அவ்ளோ பெரிய கட்டு?” ஆராத்யா கையில் ஒன்றுமே இல்லாத சிறு பேண்டேஜ் பார்த்து ஹரிஷ் சொல்ல,
“எது பெரிய கட்டா? ஏ குட்டி.. சொல்லு நீ தான அறுத்துகிட்ட..” என்று அழுகையோடு கேட்டான் பரமசிவம்.
“பரமா! அது யாருக்கு தெரியும் சொல்லு? ஜட்ஜ், கோர்ட்டு எல்லாம் நான் சொல்றதை தான் நம்பும்.. நீ தான் வெட்டின..” என்றான் ஹரிஷ்.
“யோவ்! கண்ணை நல்லா திறந்து பாரு யா.. அது வெறும் ஸ்டிக்கர் ஒட்டிட்டு நிக்குது.. நான் வெட்டுனேனு சொல்லுத!” பரமசிவம் பேச,
“கண்ணன்!” என்று கான்ஸ்டபிளை அழைத்த ஹரிஷ்,
“இவனை உள்ள கொண்டு பொய் கவனியுங்க.. நான் வர்றேன்!” என்று சொல்லி பரமசிவம் கதறி கெஞ்சியபடி உள்ளே செல்வதை பார்த்து நின்றான்.
“இவனுக்காக எல்லாம் பயந்து ஒளிஞ்சு வாழ என்ன இருக்கு? எத்தனை போலீஸ் ஸ்டேஷன்? அதுவும் பொண்ணுங்களுக்கு ஸ்பெஷலா நிறைய பாதுகாப்பு திட்டமெல்லாம் இருக்கு நாட்டுல.. என்னை பொறுத்தவரை உங்க மேல தான் தப்பு.. நீங்க முதல்லயே இதை வெளில சொல்லாம விட்டது தான் இப்ப உங்களை இவ்வளவு கஷ்டப்பட வச்சிருக்கு!” ஹரிஷ் ஆராத்யாவிடம் சொல்ல,
“ஹரி! நாம ஈசியா சொல்லிடலாம்.. ஆனா அம்மா அப்பா இறந்து ஒரு வாரம் ஆகாம, அடுத்து என்ன தன்னோட வாழ்க்கைனு கலங்கி நிக்குற ஒரு இருபது வயசு பொண்ணுக்கிட்ட ஒருத்தன் கல்யாணம்னு பேசி, சொத்தை எழுதி கேட்டு, கடத்தி வச்சு பெரும்பாடு பட்டு தப்பிச்ச பொண்ணுகிட்ட நீ இவ்வளவு எக்ஸ்பெக்ட் பண்ணுவியா?” என்றது ரகு.
மொத்தமாய் ஆராத்யாவை வாய் மூட வைத்திருந்தான் அவன் கூறிய பதிலை கேட்டு. தான் நினைத்ததை அப்படியே ரகு சொல்லி இருக்க, கூடவே அவள் பட்ட கஷ்டத்தினை அளவில்லாமல் அப்படியே அவன் முழுதாய் இது தான் இதனால் தான் என சொல்லி இருக்க, சுத்தமாய் பேச்சு நின்று அதிர்ந்து நின்றிருந்தாள் ஆராத்யா.
ஹரிஷ் அதில் மெல்ல சிரித்தவன், “தப்பு தான் டா.. போதுமா.. சரி வாங்க.. சைன் பண்ணிட்டு அவங்களை கூட்டிட்டு கிளம்பு.. டைம் ஆச்சு!” என்று ஒன்பது மணி ஆனதைப் பார்த்து சொல்ல,
“ஆரா!” என்று அழைத்து கையெழுத்திட கூறினான் ரகு.
இங்கே நின்றிருந்த இவ்வளவு நேரத்தை தவிர்த்து இறுதியாய் அவளுக்காக ரகு பேசிய அந்த ஒரு நிமிட பேச்சினில் தன் பயம், நடுக்கம் எல்லாம் தொலைந்து போக, புதிதாய் வந்த தெளிவும் அவன் கொடுத்த தெம்புமாய் சேர்ந்து கையெழுத்தை கொடுத்துவிட்டாள்.
“ஓகே டா கிளம்புறேன்.. கேஸ் விஷயமா எப்ப வேணா கால் பண்ணு.. நாங்க வந்துடுறோம்!” தனக்கான பிரச்சனையாய் பார்த்து ரகு கூற, கண்கள் அதிகமாய் கலங்கி வந்தது ஆராத்யாவிற்கு.
“கேஸ் விஷயமா இனி கால் எல்லாம் வராது.. அதுக்கு அவன் இருக்கணுமே!” என்ற ஹரிஷ்,
“உன் கல்யாண விஷயமா வேணா கால் பண்ணுவேன்.. எப்பனு கேட்பேன்!” கிண்டலாய் சொல்ல,
“டேய்!” என்று முறைத்தாலும் சிரித்த ரகு,
“சொல்றேன்.. சீக்கிரமே!” என்று கூறி, தலையசைத்துவிட்டு, கண்கள் விரிய தன்னைப் பார்த்து நின்ற ஆராத்யாவை பார்த்தும் கண்டு கொள்ளாதவன் போல,
“போலாம் ஆராத்யா!” என்று கூறி அழைத்து வந்துவிட்டான் காருக்கு.
தானே இப்பொழுது தர்ஷினிக்கு அழைக்க, “சொல்லு டா.. இன்னுமா வரல.. சாப்டியா இல்லையா? ஆரா என்ன பண்றா? இதெல்லாம் நீயே பார்த்துக்க மாட்டியா? இரு உன் மாமாகிட்ட சொல்றேன்.. அவர் சொன்னா தான் நீ கேட்ப!”
தன்னை பேச விடாமல் பேசிய சகோதரி பேச்சினில் புன்னகை புரிந்தவன், “வந்துட்ருக்கோம் தர்ஷி.. லேட்டாகிட்டே அதான் சொல்லலாம்னு கால் பண்ணினேன்.. ஆராத்யா போன் சார்ஜ் இல்லை போல.. நீயே அவங்க பிரண்ட்க்கும் சொல்லிடு!” என்று ரகு சொல்ல, அப்பொழுது தான் ஸ்ருதியிடம் தான் பேசவே இல்லை என்பது நியாபகம் வர, ஆராத்யா வேகமாய் அலைபேசியை தேடினாள் கைப்பையில்.
“ப்ச்! சொல்லியாச்சு ஆரா! நோ இஸ்யூ! இப்ப நீ பேசுற மைண்ட்ல இருக்க மாட்ட.. வீட்டுக்கு போய்ட்டு பேசிக்கோ!” என்று ரகு கூற,
“நான் லைன்ல இருக்கேன்!” என்ற தர்ஷினி குரலில்,
“தர்ஷ்!” என்று தழுதழுத்த குரலில் அழைத்தாள் ஆராத்யா.
“ஆரா! என்ன வாய்ஸ் இது? இது என் ஆரா இல்லையே!” தர்ஷினி கிண்டல் செய்தவள்,
“டேய்! என்ன டா பண்ணின? கூட்டிட்டு போய் பயம் காட்டி கூட்டிட்டு வர்றியா?” என்று தம்பியிடம் கோபம் கொள்ள,
“ஹே! நீ இன்னும் தூங்காம என்ன பண்ற? மாமாகிட்ட சொல்லவா? வாக் பண்ணியா இல்லையா?” என்று மொத்தமாய் பேச்சை மாற்றினான் ரகு.
“தூக்கத்துல அசந்தவளுக்கு போன் பண்ணி தொல்லை பண்ணிட்டு மிரட்டல் வேற! சீக்கிரம் வந்து சேருங்க!” என்ற தர்ஷினி,
“ஆரா! நாம எல்லாம் அழ கூடாது.. எவ்ளோ இருக்கு.. இதெல்லாம் ஒண்ணுமே இல்லை..” என்று கூற,
“அதெல்லாம் நான் சொல்லிக்குறேன்.. டைம் ஆச்சு நீ தூங்கு.. அப்புறம் நாங்க சாப்பிட்டு வந்துடுறோம்.. அதையும் சொல்லிடு.. பை குட் நைட்!” என்ற ரகு, பேச விடாமல் பேசி வைத்தும் விட்டான்.
எப்பொழுதும் தனக்கு சுகம் தரும் தர்ஷினி பேச்சில் எளிதாய் சிரிக்கவும் முடியாமல், இப்படி பேசிக் கண்டிராத ரகுவின் பேச்சில் லயிக்கவும் முடியாமல் புதிதாய் ரகுவிடம் தெரிந்த மாற்றம் மட்டும் ஆராத்யாவின் முன் நிற்க, அதை ஏற்கவும் முடியாமல் திணறி அழுகையை அடக்கி கண்ணீர் மட்டும் மேலும் மேலும் உற்பத்தியாகிக் கொண்டே இருந்தது ரகுவின் பக்கமாய் சில நாட்களுக்கு முன்பேயே சாய துவங்கிய ஆராத்யாவின் இதயத்திற்கு.
error: Content is protected !!