Skip to content
Post Views: 2,020
கருவின் குரல்
அத்தியாயம் 16
பூண்டு வியாபாரத்தில் நல்ல லாபம் வருவதால் ஜானகி தனது சூப்பர் மார்க்கெட் வேலையை விட்டுவிட்டாள். வியாழன், ஞாயிறு மட்டுமே சந்தை. அந்த நாட்களில் வாங்கி, அடுத்தடுத்த நாட்களில் விற்று லாபம் பார்த்தாள். லாப பணத்தில் ஒரு குட்டி யானையை (மினி வேன்) வியாபாரத்திற்கு வாங்கி விட்டாள் ஜானகி.
அன்று ஞாயிறு கிழமை சந்தைக்கு அனிஷையும் அழைத்துக் கொண்டு சென்றாள். அவளுக்கு ஒரே குதுகலமாக இருந்தது. அம்மா இதுவரை தன்னை எங்கேயும் வெளியே அழைத்துச் சென்றதில்லை. தினமும் பள்ளி, அதை விட்டால் வீடு, கோவில், சிறுவர் பூங்கா அவ்வளவுதான் அவர்களின் வெளி உலக பயணம்.
இன்று பச்சை பசேல் என்று இருக்கும் தேனிக்கு அழைத்துச் சென்றதால் அனிஷிற்கு உற்சாகம்… கால்கள் தரையில் நின்ற பாடில்லை.
Advertisement
அவளுக்கு பிடித்த சோளா பூரி, சன்னா மசாலா உடன் ஐஸ்கீரிமும் ஜானகி வாங்கிக் கொடுத்தாள். ஈஸ்வரியிடம் பூண்டு வாங்கியபின் அனிஷை அறிமுகம் செய்து வைத்தாள். அவர் அவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளி, வீட்டில் இருந்து கொண்டு வந்த தேங்காய் பர்பியை கொடுத்தார். ஆசையாக அதை வாங்கி சாப்பிட்டபின் அம்மாவுடன் வியாபாரத்திற்கு தயாரானாள்.
இன்று அனிஷ் வந்த நேரமோ என்னமோ, இரண்டுமணி நேரத்திற்குள் எல்லாம் விற்று, லாபமும் இருபதாயிரம் வந்துவிட்டது.
வெளிமனிதர்களின் பேச்சு, பழக்கவழக்கம், அவர்கள் பேரம் பேசி வாங்கும் முறை எல்லாம் அனிஷிற்கு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. புரிந்தும் புரியாத நிலை அவளுக்கு.
Advertisement
வாடிக்கையாளர்கள் பூண்டை வாங்கி பணம் கொடுக்கும் போது, ஜானகி அனிஷிடம் கொடுத்து, தாங்கள் கொண்டு வந்த பையில் போடச் சொல்ல, தனது குட்டி கைகளில் பணத்தை வாங்கி பையினுள் அடுக்கி வைத்தாள்.
Advertisement
பென்சில், புத்தகம், விளையாட்டு பொருட்கள், திண்பண்டம் இவைகளை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட அந்த கைகள் இன்று பணத்தை தொடும்போது ஒருவித பக்குவம் அவளுள்.
“இந்த பணம் இருந்தால் மட்டுமே அடுத்த வேளைக்கு பள்ளி பீஸ், உணவு, உடை… ” என எல்லாம் கொஞ்சம் புரிந்திருந்தது.
பணத்தை செலவு செய்யும் ஆர்வமெல்லாம் இல்லை. ஜானகி கூட அவளுக்கு பிடித்த க்ரையான்ஸ் இரண்டு பாக்ஸ் எடுக்க வேண்டா மம்மி ஒரு பாக்ஸ் மட்டு போதும், இது முடிஞ்சதும் அது வாங்கிக்கலாம், காசு சேத்து வச்சுக்கலாம் மம்மி என்றாள். ஜானகிக்கு மகளை நினைத்து பெருமையே.
Advertisement
மகிழ்ச்சியாக வீட்டிற்கு தேவையானதை வாங்கிவிட்டு கிளம்பினார்கள்.
ஜானகி சவுதி அரேபியாவிற்கு பூண்டை ஏற்றுமதி செய்யும் வேலைகளை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் அனிஷ் அவளது வேலையை அவளாகவே பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். ஹோம்வொர்க் பூஜாவின் உதவியுடன் முடிக்க தொடங்கினாள். ஜானகி வியாபாரத்திற்கு செல்லும் நாட்களில் சுதாவின் கண்காணிப்பில் இருப்பாள்.
அன்று ஜானகி ஏற்றுமதி விஷயமாக எக்ஸ்போர்ட் லைசென்ஸ் வாங்க கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“அனிஷ், ஸ்கூல்க்கு டைம் ஆச்சு! சீக்கிரமா போய் குளிச்சுட்டு வா!” என கத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவளோ ,
“மம்மி நீ ஃபர்ஸ்ட் இந்த டைரிலே சைன் பண்ணு, அப்பறோம் போய் குளிச்சிட்டு வரேன்…” என்றாள்.
மகளை முறைத்துக் கொண்டே வாங்கி கையெழுத்து போடப் போனாள். டைரியில்,
“இன்று ஃபாதர்ஸ் டே செலிப்ரேசன். குழந்தைகள் அவரவர் அப்பாக்களை அழைத்து வர சொல்லி எழுதப்பட்டிருந்தது.”
அதைப் படித்தவுடன் ஜானகி,“சரி அனிஷ், இன்னைக்கு லீவ் போட்டுக்கோ. அம்மா கொஞ்சம் வெளியே போறேன். நீ சுதா அக்கா கிட்ட பத்திரமா இருக்கணும்…” என சொல்லி கிளம்பிவிட்டாள்.
போகும் போது ஒரே யோசனை, எவ்வளவு நாட்கள் தேவாவைப் பற்றி அவளிடம் மறைத்து வைக்க முடியும்?என்றாவது ஒரு நாள் அவனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.வேறு யாராவது சொல்லி அவள் தெரிந்து கொண்டால் அது நன்றாக இருக்காது…
“அவளுக்கு ஏற்ப புரியும்படி தெளிவாக சொல்ல வேண்டும். சரி, இந்த ஏற்றுமதி முடியட்டும்… பொறுமையாக எடுத்துச் சொல்லலாம்.” என முடிவெடுத்தாள்.
இந்நேரத்தில், அனிஷ் புதிதாக வாங்கி இருக்கும் வாஷிங் மெஷினை சுதாவிடம் காட்டி , “சுதாக்கா இதுதான் நானும் மம்மியும் புதுசா வாங்கியிருக்க மெஷின். இனிமேல் அனிஷ் பாப்பா ட்ரெஸ் எல்லாம் இந்த மெஷின் தா துவைச்சு தரும்…” என வாயடித்து கொண்டிருந்தாள்.
இவள் சத்தம் கேட்டு வந்த தேவா,
“ஏன் அனிஷ் இன்னைக்கு ஸ்கூல் லீவா?” என கேட்டான்.
“இல்ல ஹவுஸ்ஓனர், நான்தான் லீவு…” என்றாள்.
“ஏன்?” என அவன் கேட்டதும், “என் கூட வாங்க, நான் உங்களுக்கு ஒன்னு தரே…” என்று சொல்லி படுக்கை இருக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றாள்.
கஷ்டப்பட்டு படுக்கையை தூக்க, தேவாவும் உதவினான். அதன் அடியில் இருந்த கீரிட்டிங் கார்டை எடுத்து தேவாவிடம் தந்தாள். அதில் ஹாப்பி ஃபாதர்ஸ் டே என குண்டு குண்டாக மேலே ஒரு எழுத்தும் கீழே ஒரு எழுத்துமாய் எழுதி இருந்தாள்
அதில் ஒரு ஆண், பெண் பொம்மையும், அவர்கள் கையைப் பிடித்தபடி குழந்தை பொம்மையும் வரைந்து
“ஜ லவ் யூ டாடி” என எழுதி இருந்தாள். அதை பார்த்த தேவாவின் கண்களில் நீர் நிறைந்து நின்றது.
ஹவுஸ் ஓனர், “இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஃபாதர்ஸ் டே செலிபிரேசன் அதுக்காக இந்த கீரிட்டிங் கார்ட் நேத்து நானும் பூஜா அக்காவும் சொஞ்சோம் கடைசிலே ஸ்கூல்ல டாடி கூப்பிட்டு வரனுனு சொல்லிடாங்க அதான் நா போகுலே பாலா அண்ணாக்கு கொடுக்க சொன்னே பூஜாக்கா வேற கிப்ட் வாங்கி தரேனு சொல்லிட்டாங்க”
நீங்க உங்க டாடிக்கு இதை கொடுத்துருங்க என வாஞ்சையாக சொன்னாள். அவள் தலையை நீவி விட்டு கலங்கிய கண்களோடு தேவா வெளியே வர,
சுதா ஒரு நிமிஷம் யோசிச்சு முடிவு எடுத்து இருக்கலாம் தேவா இப்ப திரும்ப முடியாத இடத்துக்கு நீங்க போய்ட்டீங்க.. வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. எட்ட நின்னு அனிஷ்ஷிற்கு நல்லது செய்வீங்கனு நம்பறேன் என சொல்லி கிளம்பி விட்டாள்.
ஜானகி ஒரு வழியாக அலைந்து திரிந்து சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்து விட்டாள். அவளது முதல் ஏற்றுமதி! முகம்கொள்ளாப் புன்னகை… எத்தனையோ தூங்காத இரவுகள், எதிர்கால பயங்கள், சொந்த பந்தங்கள் உண்மை முகம் அனைத்தையும் தாண்டிய உற்சாகம்.
“தன்னாலும் சாதிக்க முடியும்!” என்ற நம்பிக்கை முன்பை விட பலமடைந்தது.
அனிஷை ஒரு பெரிய பள்ளியில் சேர்த்து விட்டாள். ஊருக்குள் நான்கு சென்ட்டில் ஒரு இடத்தையும் வாங்கி விட்டாள். இவை அனைத்தும் பல நாட்கள் சோறு தண்ணீர் இல்லாமல் வெயிலில் உழைத்த உழைப்பு .சில இடங்களில் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பு,சில இடங்களில் எதிர்பார்த்த தொகை வராத ஏமாற்றம் இவை அனைத்தையும் தாண்டி இன்று இடத்தை கிரையம் செய்து விட்டாள் . இன்னும் நாலைந்து ஏற்றுமதி செய்து விட்டு வீடு கட்டி விடலாம் என்ற கனவுகளுடன் இருந்தாள்.
இவ்வளவு நாட்கள் ஏற்றுமதிக்காக அங்குமிங்கும் அலைந்ததால் தேவாவை சற்று மறந்திருந்தாள்… முழுவதுமல்ல. அவன் எப்போது கிளம்புகிறான், வீட்டிற்கு வருகிறானா எல்லாம் தெரிந்து வைத்து கொள்வாள்.
மைதிலி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாக சுதா மூலம் தெரிந்துகொண்டாள்.
“நன்றாக இருந்தால் சரி… என்னதான் காலம் இந்தளவு தண்டனை கொடுத்து இருவரையும் பிரித்து இருந்தாலும் தேவாவை அவள் ஒரு போதும் வெறுத்தது இல்லை. அவனின் நலனை பெரிதும் விரும்பினாள் .
வலிதான் ஆனாலும் ஏற்றுக் கொண்டு மகளின் எதிர்காலத்திற்காக ஓடத் தொடங்கி விட்டாள். எவ்வளவு சீக்கிரமாக வீடு கட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கட்டி இங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அன்று இரவு. அனிஷுக்கு நல்ல உறக்கம். ஜானகி வரவு–செலவு பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென காலிங் பெல் அடித்தது.
மணி பத்தை காட்டியது யார் இந்த நேரம் என்ற யோசனையுடன் கதவை திறக்க ,தேவா நின்றிருந்தான்.
என்ன என்பது போல தலையை உயர்த்தினாள். அவன் பசிக்குது ஏதாச்சு சமைச்சு கொடு என்றான். எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். அவனும் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்து கொண்டான். ஜானகி அப்போதுதான் பாத்திரங்களை கழுவி வைத்தாள். சாப்பிட ஒன்றும் இல்லை
ஃபிரிட்ஜில் மாவு இருந்தது, தோசையும் தக்காளி சட்னியும் செய்யத் தொடங்கினாள் தோசையை ஊற்றி அதன் மீது எண்ணெய் விட்டு திரும்ப, தேவா பின்னாடி நின்றிருந்தான். திடுக்கிட்டு ஆவென கத்தி விட்டாள். நான்தா எதுக்கு கத்தரே தள்ளு நா தோசை ஊத்தரே நீ அந்த சட்னியை பாரு என்றான். அவள் எதுவும் பேசாமல் தக்காளி சட்னியில் தனது கவனத்தை திருப்பினான்.
இப்பவெல்லாம் நீ ரொம்ப மாறிட்ட ஜானு என்னை விட்டு ரொம்ப தள்ளி தள்ளி போறே… சுதா அக்கா சொன்னாங்க நீ வீடு கட்ட போறேனு உனக்கு ஒரு உண்மையே சொல்றே ஜானு நான் உனக்காகதான் இந்த வீட்டை வாங்குனே எப்பவும் உன்ன என் பக்கத்துல வெச்சுக்கலானு தான் இங்கே வந்தே ஆனா நீ இப்ப என்ன விட்டுட்டு ரொம்ப தூராம போறே என்றான்.
இவன் பேசுவது காதில் கேட்டாலும் அவனை நோக்கி செல்லும் தன் மனதை அடக்கிக் கொண்டிருந்தாள். தேவா எதிர்பார்த்த எந்த பதிலும் அவளிடம் இருந்து வராததால் ஏமாற்றமடைந்தான்.
ஜானு நான் மைதிலி கூட சந்தோசமா இருக்கேனு நீ என்ன தப்பா நினைக்காதே. நான் உன்கூட வாழ்ந்த நாட்கள் மட்டுதா சந்தோசமா இருந்தேன். இப்ப ஒவ்வொரு நிமிஷமும் அந்த வாழ்க்கை திரும்பி வந்தராதானு ஏங்கிட்டு இருக்கே ஜானு… நீ ஒரு நிமிஷம் சரினு சொல்லு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்தறே நீ நான் நம்ம குழந்தைனு எங்காச்சு போய் சந்தோசமா இருப்போம்… எனக்கு இந்த பணம் பகட்டான வாழ்க்கை எதுவுமே வேண்டா ஜானு
நான் உன்ன வேண்டானு சொல்லிட்டு போனதுக்கான தண்டனையை இப்போ அனுபவிச்சிட்டு இருக்கே. உனக்கு என்மேல கோபம் இருந்தா ரெண்டு அடி கூட வை ஆன என்ன விட்டு தள்ளி மட்டும் இருக்காதே என்று அவள் காலில் விழுந்து என்னை விட்டுட்டு போய்றாதே ஜானு என்று அழுதான்.
அவள் கண்களிலும் நீர் வழிந்தது தன்னால் ஆன முழுபலத்தையும் திரட்டி அவனை மேலே எழுப்பினாள். அவன் அவளை அணைத்து கொண்டு பெருங்குரல் எடுத்து அழுதான். ஜானகிக்கு இந்த நிலையை எப்படி எதிர் கொள்வது எனத் தெரியாமல் நின்றிருந்தாள்.
அதற்குள் மைதிலி,அவள் தாய் ராஜேஸ்வரி,அக்கா நிவேதா, தந்தை சுப்ரமணியம் ஆகியோர் திடுதிடுவென ஜானகியின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் நின்றிருந்த கோலம் கண்டு மைதிலி,” அம்மா பாத்தியா என் வாழ்க்க எப்படி கேவலமா போய்ட்டு இருக்குனு” என வராத கண்ணீரை வரவழைத்து அழுக முயற்சி செய்தாள்.
தேவா அதிர்ச்சி உடன் ஜானகியை விட்டு விலகி நின்றான்.அடி பாவி எம்மக வாழ்ககையே சீரழிச்சிட்டையே எத்தனை நாளா இந்த திருட்டு வேல நடக்குதுனு தெரிலியே இன்னைககு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும் என ஜானகியின் தலைமுடியை கொத்தாக பிடித்து வெளியே இழுத்து வந்தார்
— கருவின் குரல் ஒலிக்கும்…..
error: Content is protected !!