Skip to content
Post Views: 7,419
இறுகிய முகத்தோடு அறைக்குள் வந்தவன், மொபைலை கட்டிலில் போட்டு குளியலறைக்குள் சென்றான். இவன் உள்ளே சென்ற இரண்டாவது நிமிடத்திலிருந்து விடாமல் மொபைல் ஒலித்தது. எடுக்கவா வேண்டாமா என்று பொன்மணி யோசித்திருக்க, மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது திருனேஷ்வரனிற்கு.
ராஜதுரை, மற்றும் ரூபலஷ்மியின் எண்ணிற்கு தனிப்பட்ட ஒலியை வைத்திருக்கவே, அழைப்பு ராஜதுரையிடமிருந்து என்று தெரிந்து, அவசரமாக துண்டை சுற்றியபடி வெளியே வந்தான்.
ராஜதுரைக்கு அழைப்பு விடுத்ததும், “பொன்மணி யாருடா?” என்றார்.
“என் வொய்ஃப் சார்”
Advertisement
“கல்யாணம் ஆகிடுச்சாடா உனக்கு?” என்றவர் “எங்க இருக்க?” என்றார்.
“வீட்டுல சார்”
“தென்றல், ஸ்வாதி யாரு?”
Advertisement
“என் கூட வேலை செய்யிற பொண்ணுங்க சார்”
Advertisement
“பொண்டாட்டியை அங்க விட்டுட்டு நீ எதுக்குடா தனியா இருக்க?” என கடிந்தவர், “உன் வொய்ஃப் தங்கியிருக்க இடத்துக்கு போ. க்விக்” என்று இணைப்பை துண்டித்தார்.
பதட்டத்தோடு பைக்கில் பறந்தான் திருனேஷ்வரன். வீடு திறந்து இருக்க, உள்ளே சென்றதும் “திருனேஷ்வரனா?” என்றார் ஒருவர்.
ஆமாம் என்பதாய் தலையசைத்தபடி திரும்ப, இரண்டு பேர் கை கால்கள் கட்டப்பட்டிருந்தனர். “யார் சார் இவனுங்க? தென்றல் ஸ்வாதி எங்க?” என்றான் பதட்டத்தோடு.
Advertisement
இருவரும் அறையிலிருந்து வெளியே வர, “என்னாச்சு ம்மா?” என்றான்.
“இவங்க யாருனு தெரியல சார். நீங்க பொன்மணியை அழைச்சிட்டு போன கொஞ்ச நேரத்துலயே வந்தாங்க. பொன்மணி எங்கனு கேட்டு மிரட்டினாங்க. அவ குழந்தை எங்கனு கேட்டாங்க.
குழந்தை இல்லனு சொன்னா நம்பாம எங்களை அடிக்க வந்தாங்க. இவங்க இரண்டு பேர் வரவும் நாங்க தப்பிச்சோம் சார்” என்று குறையாத பயத்தோடு சொன்னாள் தென்றல்.
வந்தவர்களில் ஒருவர், ராஜதுரைக்கு அழைத்து, “திருனேஷ்வரன் வந்துட்டார் சார்” என்றதும், “அவன்கிட்ட கொடு” என்றார் ராஜதுரை.
“பொன்மணிக்கு குழந்தை இருக்கா?”
“இல்ல சார்” என்றவனுக்கு இப்படி சொல்லித்தான் சத்யப்ரகாஷை பயமுறுத்தியிருக்கிறாள் என்று புரிய, அனைத்தும் விளக்கினான் திருனேஷ்வரன்.
“இவ்வளோ நடந்துருக்காடா?” என்றவர், “இவனுங்க இரண்டு பேரையும் சத்யப்ரகாஷ் அனுப்பி வச்சிருக்கான். ஆனா இவனுங்க ஒத்துக்கமாட்டேங்குறானுங்க. குழந்தையை கொன்னுட்டு பழியை பொன்மணி மேல போட்டு உள்ள தள்ளுறதா ப்ளான் பண்ணியிருக்கான் சத்யப்ரகாஷ்.
“அவன் எங்க சார்?” என்றான் உள்ளடக்கிய கோபத்தோடு.
“அவன் சேலத்துல இருக்கான்டா, அவனை ஃபாலோ பண்ண சொல்லியிருந்தேன். அவனோட இவனுங்க சுத்திட்டிருந்திருக்கானுங்க. எதோ ப்ளான் பண்றமாதிரி தெரியவும் என்னனு தெரியற வரைக்கும் அவனை தூக்க வேண்டாம்னு விட்டுருந்தேன். சத்யப்ரகாஷ் ப்ளான் படி உன் பொண்டாட்டியை தேடி சென்னை வந்துருக்கானுங்க.
“அவனை சேலத்துல வச்சு பத்து நிமிஷத்துக்கு முன்ன அரெஸ்ட் பண்ணியாச்சு. எத்தனை வருசம் போடலாம் சொல்லு, அதுக்கேத்த மாதிரிதான் கேஸ் ஃபைல் பண்ணனும்” என்றார் இலகுவாக.
“நீங்க பார்த்து பண்ணுங்க சார்”
“அதுக்கு நீ ஸ்டேஷன் போகனும்” என்றார்.
“இப்போ வா சார்?”
“ஆமாம்டா, ப்ராப்பரா கம்ப்ளைன்ட் கொடுக்கனும், அவங்களோடவே போ”
“ஓகே சார், நான் ஸ்டேஷன் கிளம்பறேன்”
“அங்க போய்ட்டு கால் பண்ணு” என்று இணைப்பை துண்டித்தார் ராஜதுரை.
இருவரின் கட்டையும் அவிழ்த்துவிட்டு கையில் விலங்கு போட்டு அழைத்துச் சென்றனர் தன்னார்வ காவலர்கள்.
“இரண்டு பேரும் கிளம்புங்க” என்றான் தென்றல் ஸ்வாதியிடம்.
“எங்க சார்?”
“என் வீட்டுக்கு. இரண்டு நாள் அங்கயிருந்துட்டு பயம் போன பின்ன இங்க வந்திடுங்க” என்றான்.
“இல்ல சார், அதான் அவங்களை கூட்டிட்டு போய்ட்டாங்களே” என்றனர்.
“ஸ்யூரா? பயமில்லையா?” என்றான் மீண்டும்.
“இல்ல சார், நாங்க பார்த்துக்கிறோம்” என்ற பின்னே, “டோர் லாக் பண்ணிக்கோங்க, எதாவதுனா கால் பண்ணுங்க” என்று கிளம்பினான்.
ராஜதுரை சொன்னது போல புகார் எழுதி கொடுத்துவிட்டு அழைப்பு விடுத்தான். ஏற்றவர், “வீட்டுக்கு வந்துட்டு போடா” என்றார்.
“இப்போவா சார்?”
“ஆமாம்… உன் சர்டிஃபிகேட்ஸ் வேணாமா?”
ஓ… அதுவரை விசயம் தெரிந்துவிட்டதா? அப்படின்னா மேடமை சார் மன்னிச்சிருப்பார். அதனாலதான் மேடம் என்னோட சர்டிஃபிகேட்ஸ் பத்தி பேசியிருப்பாங்க. என்று நிம்மதியாக நினைத்தவன்,
“அது பத்திரமா இருக்கும்னு தெரியும் சார். மேடம் என்னை பார்த்தா கில்ட்டா ஃபீல் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே சார்” என்றான் கோரிக்கையாக.
“ரூபாதான்டா உன்னை வர சொன்னா” என்றதும், “வரேன் சார்” என்று இணைப்பை துண்டித்து கிளம்பினான் ரூபலஷ்மி வீட்டிற்கு.
ரூபலஷ்மியை காண திருனேஷ்வரனுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் தன்னை கண்டு ரூபலஷ்மி குற்றவுணர்வு கொண்டால், அந்த நிலையை தன்னால் தாங்க முடியாதே என்ற தயக்கத்தோடு வீட்டிற்கு வந்தவன், “சார்” என்றான் வெளியிலிருந்து.
சமையலறையிலிருந்து வெளியே வந்த சந்திரா, “நீங்க வந்தா மேல வர சொன்னாங்க தம்பி” என்றார் சந்திரா.
சார் என்றது மாறி தம்பி என்று சந்திரா அழைத்தது மேலும் நிம்மதியை கொடுக்க, “சரிக்கா” என்று மேலே சென்றான்.
ராஜதுரையும் அங்கேதான் இருந்தார். “வாடா” என்றார் ரூபலஷ்மி.
“நல்லா இருக்கிங்களா மேடம்” என்றான் மரியாதையாக.
“ம்” என்றவர், “மாமா கேர் எடுக்கவும் ஆச்சு, இல்லைனா என்னவாகியிருக்கும்? கேர்ஃபுலா இருக்க சொன்னேன்தான?” என்றார் முறைப்பாக.
“சார்கிட்ட விசயத்தை சொன்னதாலதான் மேடம் நான் கேர்லஸா இருந்தேன்” என்றான்.
ரூபலஷ்மிக்கும் அது தெரியும். கணவன் முன்னிலையிலேயே திருனேஷ்வைரனை சந்திக்க வேண்டும். முன்பு நடந்ததை மறந்துவிடு, நான் அப்படி அல்ல என்பதை வார்த்தையால் அல்லாமல் பார்வையால் உணர்த்த வேண்டும் என்பதற்காகவே திருனேஷ்வரனை வரவழைத்திருந்தார் ரூபலஷ்மி.
“மாமா கால் பண்ணுங்க” என்றார் ராஜதுரையிடம்.
ராஜதுரை சேலம் காவல் நிலையத்திற்கு அழைத்து, சத்யப்ரகாஷை பார்த்து பேச ஏற்பாடு செய்ய சொன்னார்.
பத்து நிமிடத்தில் வீடியோ அழைப்பு வர, ஏற்றவர் திருனேஷ்வரனிடம் காண்பித்தார்.
சத்யப்ரகாஷைப் பார்த்தவன், “டிரஸ்லாம் போட்டுருக்கான்? அவ்வளோ பெரிய வி.ஐ.பியா சார் இவன்? என்னை ஜட்டியோடதான வச்சிருந்தாங்க?” என்றான் கோபத்தோடு.
தவறுதலாக தன்னை அழைத்து வந்திருக்கிறார்கள், தனது ஆள் பலத்தை இவர்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்திருந்த சத்யப்ரகாஷிடம்,
சர்வதேச அளவில் போதை பொருள் கடத்துவது, இளம் பெண்களை போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர் என்றும் வழக்கு போடுவதாக காவலர்கள் சொல்லவே பயத்தின் உச்சத்திற்கு சென்றான் சத்யப்ரகாஷ்.
‘நான் அப்படிப்பட்டவன் இல்லை, நீங்க யாரோனு நினைச்சு என்னை கூட்டிட்டு வந்துட்டிங்க’ என்று மன்றாடினான்.
‘தப்பு செய்யிற எல்லாரும் சொல்ற வார்த்தைதான்டா, உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம்?’ என்று அசால்ட்டாக சொன்னார்கள் காவலர்கள்.
இந்த நிலையில் மொபைலில் திருனேஷ்வரனைப் பார்த்ததும் இவன் ஏற்பாடா என்று மரண பயம் வந்தது.
“எவ்வளோ தைரியம் இருந்தா நான் அவ்வளோ சொல்லியும் என் பொண்டாட்டியை நெருங்க நினைச்சிருப்ப?” என்றான் முகம் சிவக்க.
“எ… என்னை மன்னிச்சிடுடா” என்று கெஞ்ச,
“மன்னிக்கலாமே… அதுக்குத்தான நான் காத்திட்டிருக்கேன்?” என்று எள்ளலாய் சொல்லி,
“இவ்வளோ கேவலமானவனையா கல்யாணம் செய்தோம்னு இவன் பொண்டாட்டியும் பெத்தவங்களும் நினைக்கிற அளவுக்கு கேஸ் போட்டு இவனை சிறப்பா கவனிக்கனும் சார்.
பொறுமையா அம்பது வயசுக்கு அப்புறம் வெளில வந்தா போதும். இவன் வெளில வரும்போது இவன் பொண்டாட்டி வேறவனோட பொண்டாட்டியா இருக்கனும். இவனை நினைச்சு நினைச்சே பெத்தவங்களுக்கும் நிம்மதி இருக்கக்கூடாது.
எதை செய்து பையனை வெளில கொண்டுட்டு வரலாம்னு அவங்க திண்டாடனும், தண்டனை காலத்துலயும் பரோல்ல கூட வெளில வரக்கூடாது, இவன் வெளியுலக வாழ்க்கை இன்னையோட முடியனும். செய்யாத தப்புக்கு உள்ள போனா எப்படி வலிக்கும்னு நல்லா டீப்பா தெரியட்டும்” என்றான் ஆத்திரத்தோடு.
சத்யப்ரகாஷ் கதறி அழவே, “இல்லாத குழந்தையை தேடினா எப்படிடா கிடைக்கும்?” என்றதும் சத்யப்ரகாஷ் அதிர்ந்து விழித்தான்.
மனைவி நினைவில் “ஊரார் முன்னாடி உன் வாயாலயே உண்மையை ஒத்துக்க வச்சிட்டா” என்றான் பெருமையாக.
பின்னே “ஸ்கூல் படிச்சிட்டிருந்த பிள்ளைக்கிட்ட உன் பலத்தை காட்டிருக்கியே… எப்படி துடிச்சிருப்பா?” என்று ஆத்திரத்தோடு சொன்னவன்,
ராஜதுரையிடம் “அஞ்சு வருசம் முன்னாடி நான் வாங்கின அடியை வட்டியோட சேர்த்து இவனுக்கு கொடுக்க ஏற்பாடு செய்ங்க சார்” என்றவன், “குட்பாய்” என்று சத்யப்ரகாஷிடம் சொல்லி இணைப்பை துண்டித்தான்.
ஐந்து நிமிடம் அமைதியில் கழிய, சத்யப்ரகாஷ் நினைவை விலக்கி வைத்து, ரூபலஷ்மியை பார்த்தான். “கேர்ஃபுலா இரு. வான்ட்டடா எங்கையும் மாட்டிக்காத” என்றார் கட்டளையாக.
ரூபலஷ்மி தனது மனமாற்றத்தை தன்னிடம் உணர்த்துவது தெளிவாக புரிய, அவரின் குற்றவுணர்வை போக்க எண்ணியும், உண்மையில் ராஜதுரை தனக்காக எடுத்த சிரத்தை எண்ணியும், “சார் மேடம் பக்கத்துல நில்லுங்க” என்றான்.
கணவன் தன்னை மன்னிக்காத போதும், மனதளவில் என்றாலும் கணவனுக்கு துரோகம் இழைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வும் இருக்கவே, ராஜதுரைக்கும் ரூபலஷ்மிக்கும் இன்னும் சுமூகமான உறவு ஏற்படவில்லை.
ஆனாலும் திருனேஷ்வரனிடம் அதனை காண்பிக்க விரும்பமில்லாததோடு, நாங்கள் மகிழ்வோடு இருக்கிறோம் என்று உணர்த்த இணைந்து நின்றார் கணவனோடு.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம். சத்யப்ரகாஷ் இப்படி ஒரு காரியத்தை செய்யத் துணிவானு நினைக்கவேயில்ல. அப்போ இருந்து இப்போ வரைக்கும் எனக்காக நிறைய செய்திருக்கிங்க. எனக்கு அண்ணன், அக்கா கிடையாது, எந்த பிரச்சனைனாலும் உங்ககிட்டதான் வருவேன்,
ஸ்ட்ரிக்ட் அக்கா, அண்ணன் மாதிரி இல்லாம, குட் ஃப்ரண்டா கைட் பண்ணுங்க, நல்லபடியா பொழச்சிக்கிறேன்” என்று இருவரின் பாதம் பணிய எத்தனிக்க, “டேய்… டேய்…” என்று ரூபலஷ்மி மறுக்க,
“விழுடா” என்று திருனேஷ்வரனின் தோள்தொட்டு தன்னை பணியவைத்து பின்னே எழவும் கைகொடுத்தார் ராஜதுரை.
சிரிப்போடு நிமிர்ந்தவன், “குட்டீஸ் எங்க சார்?” என்றான்.
“அவங்க பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க” என்றார் ராஜதுரை.
இருவருக்கும் இடையே இருக்காமல் கிளம்ப நினைத்தவன், “கல்யாணமாகி இரண்டு மாசம் கழிச்சு இன்னைக்குத்தான் சார் பொண்டாட்டியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். கிளம்பட்டுமா?” என்றான் பாவனையாக.
சிரித்தவர், “பொன்மணியால எவ்வளோ பாதிச்சிருக்க? அந்த பொண்ணை எப்படிடா கட்டிக்கிட்ட? உன் அம்மாப்பா சம்மதிச்சிட்டாங்களா?” என்றார்.
திருமண நாளன்று நடந்ததை விளக்கி, “அஞ்சு வருசமா அவ நினைப்புல மட்டுமில்ல சார், உயிர்லயும் கலந்துருக்கேனு அந்த நிமிஷம் தோணுச்சு. பட்டுனு தாலி கட்டிட்டேன். அஞ்சு ரூபாய்ல கல்யாணத்தை முடிச்சிட்டேன் சார்” என்றான் பெருமையாக.
“அடப்பாவி” என்று ஸ்வாரஸ்யமாக சொன்னபோதும், “ஆக… நீயும் அந்த பொண்ணை வற்புறுத்தித்தான் கல்யாணம் செய்திருக்க. இதுக்கே கேஸ் போடனும்” என்றார் சிரிப்போடு.
“ஆளை விடுங்க சார்….” என்று பயந்தவன் போல் வேகமாய் நடக்க, “டீ காபி எதாவது குடிச்சிட்டு போடா” என்று ராஜதுரை சொல்ல, “என் பொண்டாட்டி காத்திட்டிருப்பா சார், டீ காபியா முக்கியம்?” என்றபடி கிளம்பினான் பெரும் மகிழ்வோடு.
*** *** *** *** *** ***
வாழ்வின் மொத்த பிரச்சனைகளும் தீர்ந்தது போன்று உணர்ந்தான் திருனேஷ்வரன். வீட்டிற்குள் வந்ததும் “அவ்வளோ அவசரமா எங்க போன திருனேசு?” எனப்பதறினார் வில்வராஜ்.
“நல்ல விசயம்தான்ப்பா. குளிச்சிட்டு வந்து சொல்றேன்” என்று அறைக்குள் செல்ல, அருகே வந்தவளிடமிருந்து முறைப்போடு விலகியவன்,
“பிச்சைகாரன் மாதிரி தெருவுல கெஞ்ச வச்சிட்டு இப்போ மட்டும் எதுக்குடீ வர? மதியம் அவ்வளோ பேசிட்டு நைட் என்னை தனியா விட நினைச்சல்ல? தனியாவே இருந்துக்கிறேன்” என்று கடுகடுத்து குளிக்கப்போனான்.
கணவனின் கோபத்தில் பயம் வந்தது பொன்மணிக்கு. கோபமில்லாத நேரத்தில் எந்தளவிற்கு இறங்கி வருகிறானோ… கோபம் வந்தால் அதை விட பலமடங்கு தள்ளியும் நிற்பான் என்று அறிந்தவள் ஆதலால் என்ன செய்து கோபத்தை தணிப்பதென்று தவிக்கலானாள்.
error: Content is protected !!