Skip to content
Post Views: 3,849
மீனாவை மூன்றாம் நாள் மாலை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் முத்துலட்சுமி அங்குதான் இருந்தார், மருமகளை பார்க்கவில்லை என்றாலும் குழந்தையை இந்தமுறை வாங்கிக்கொண்டார் அவருக்கு விழிகள் நிறைந்து தளும்பியது.
Advertisement
‘உன்னை இப்படியா நான் வாங்க வேண்டும் ஏண்டா இவங்க ரெண்டுபேருக்கும் வந்து பிறந்த, எந்தக் குழந்தைக்கும் இப்படியொரு பிறப்பு வரக் கூடாது இந்தச் சமூகம் இவனை நிம்மதியாக வாழவிடுமா உன் தாய் என்ன செய்து உன்னைப் பெற்றுக்கொண்டாள் தெரியுமா என்று எத்தனை வருடங்கள் கழிந்தாலும் பேசிப் பேசி ரணப்படுத்துமே உன் அப்பா மனசு மாறுமா உன்னை ஏத்துப்பானா என் வம்சம் இப்படியா அவமானப்பட்டு நிக்கணும்’ என்று மனதில் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டார்.
Advertisement
Advertisement
கலங்கி நின்றவரை “அண்ணி” என்று தோள் தொட்டார் அன்னம்மா “நீ மீனாவை பாரு அன்னம் பிள்ளை அழுதா சொல்றேன்” என்றவர் குழந்தையோடு அறைக்குள் நுழைந்தார்.
Advertisement
மீனாவின் விழிகள் தங்கையைத் தான் ஆராய்ச்சியாய் பார்த்தது பிள்ளையின் பின்னே செல்கிறாளா மாமனை நினைத்துப் பிள்ளையைக் கொஞ்சுவாளோ என்று.
காமாட்சி மீனாவின் பார்வையின் அர்த்தம் புரிந்தவள் மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டு “மா ராத்திரிக்கு அடைக்கு மாவு அரைச்சு வெச்சுட்டேன் சட்னியும் வெச்சுட்டேன் சாப்பிடும்போது கூப்பிடுங்க ஊத்துறேன் இப்போ படிக்க இருக்கு” என்றவள் அவளின் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
பத்து நாட்களும் கடந்திருந்தது அன்று மாசிலாமணியின் சொந்தத்தில் ஒரு காதுகுத்து விஷேஷத்திற்கு கணவனும் மனைவியும் சென்றிருந்தனர், விஷேஷம் முடிந்து புறப்படுவதற்கு முன் அவர்களின் அருகில் வந்தார் மாசிலாமணியின் ஒன்றுவிட்ட தங்கை.
“என்ன அண்ணே காமாட்சிக்கு மாப்ள பாக்குறீங்களாம் கேள்விப்பட்டேன் நானே கூட என்மகனுக்கு கேக்கலாம்ன்னு இருந்தேன், அப்போதான் ரகுவுக்கு குடுக்குறதா பேச்சு இருந்துச்சு இப்போ எடுக்கலாம்னா என் மகன் வேண்டாம் சொல்றான்” என்க.
அன்னம்மா “ஏன்” என்பதாக அவரைப் பார்க்க “நானும் அதைத்தான் கேட்டேன் அவன்கிட்ட, அதுக்கு அவன் அத்தை பையன் மேல நிச்சயமா ஆசை இருந்திருக்கும் அப்படியே இல்லாம இருந்திருந்தாலும் கல்யாணம் பேசி முடிவான அப்புறம் நிச்சயம் ரெண்டு பேரு மனசிலயும் ஆசை வந்திருக்கும் அதோட இப்போ பெரியவ செஞ்ச காரியமும் சின்னது இல்லையே”.
“அதுமட்டுமா ரகு இப்போவும் காமாட்சியை வேற யாருக்கும் கட்டிக்குடுக்க விட மாட்டேன்னு பிரச்சனை செய்றானாம் அப்படிப்பட்ட பொண்ண கட்டிட்டு வந்து காலத்துக்கும் அவ அத்தை மகன் கூட மல்லுக்கட்ட முடியுமா ஒருவேளை இவளும் அக்காவை மாதிரியே ரகுவை விரும்பியிருந்தா என்கூட எப்படி குடும்பம் நடத்துவா, இன்னொருத்தனை மனசுல வெச்சிருக்கவ எனக்கு வேண்டாம்னு சொல்றான்” என்றவரை அதிர்ச்சியோடு பார்த்துநின்றனர் தம்பதியர்.
இது என்ன அதிர்ச்சி என்பதை போல ஒருமாதம் சென்று அழைத்த தரகர் “அண்ணே நீங்கச் சொன்னமாதிரியே எல்லாவிவரமும் சொல்லியே பத்து வரன் பாத்துட்டேன் எல்லாரும் ஒரே மாதிரி ஒரே கேள்விதான் கேக்குறாங்க இவ்ளோ பிரச்சனை இருக்குற பொண்ணை நாங்க எதுக்கு கட்டணும் அவ அத்தை மகனோட கட்டிபுடிச்சு உருளணும்னு”.
“நானே உண்மையைச் சொல்லித்தான் சம்மந்தம் பேசினேன் ஆனா பாருங்க இந்த ரகு பய ரெண்டு மூணு வீட்டில போய்ப் பிரச்சனை செஞ்சிருக்கான், ஆச்சி அவன் பொண்டாட்டியாம்… அவங்க அப்பறம் வேற என்ன சொல்லுவாங்க”.
“இல்லனா ரொம்ப அதிகமா எதிர்பாப்பாங்க அதுலயும் ஒரு சிக்கல் பாருங்க மொத தடவ குடுக்கறதோட நிக்காது தொடர்கதையா போய்ட்டுதான் இருக்கும் நாம நிறைய மெனக்கெடனும் அண்ணே நம்ம பக்கம் பிரச்சனை பெருசு சிக்கலும் கூட உங்களால ரகுவை தள்ளிவைக்கவும் முடியாது”.
“மூத்த பொண்ணோட வாழ்க்கை இருக்கு சொந்த அக்கா… அக்காப்பையன் கூடவே இருந்து ஏழரையை கூட்டிட்டு இருக்கவன வெச்சிக்கிட்டு இந்தப் பிள்ளையை எப்படி கட்டிக்குடுக்க, அவசரம்னு யாருக்காவது கட்டிவைக்க முடியாது நம்ம வீட்டு பொண்ணோட வாழ்க்கை ரொம்ப ரொம்ப யோசிச்சுதான் பிள்ளையை அனுப்பனும் இது மத்த கல்யாணம் மாதிரி சுளுவா நடக்காது அண்ணே” என்க மாசிலாம்மானிக்கு நெஞ்சை அடைத்தது.
‘என் மகளின் வாழ்க்கை என்னசெய்வேன் நான்’ என்று எண்ணிய நொடி மனிதர் குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினார் “அண்ணே” என்று தரகர் பதற அன்னம்மா கணவனின் காலடியில் மடிந்து அமர்ந்து விட்டார், யாருக்கு யார் ஆறுதல் சொல்ல இவை அனைத்தையும் கேட்டு நின்ற மீனாவின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம்.
பிள்ளையோடு வீட்டிற்கு வந்து ஒருமாதமும் கடந்துவிட்டது இன்னும் ரகுவந்து பார்க்கவில்லை இவன் பிள்ளையை வயிற்றில் சுமந்து வலி தாங்கி நான் பெற்றேடுத்து வந்திருக்கிறேன் என்னையும் பிள்ளையையும் பார்க்க வர முடியவில்லை அவளுக்காக யார் யார் வீட்டிற்க்கோ சென்றிருக்கிறான்.
இவளை விட்டு வரவே மாட்டானா என்று கோபம் கொண்டவள் “வர வைக்கிறேன்” என்று சபதம் எடுத்துக்கொண்டாள், மாலை காமாட்சி வந்தபோது வீடே நிசப்தமாக இருந்தது தந்தை அறையில் படுத்திருக்க அம்மாவும் அத்தையும் அழுது வீங்கிய முகத்தோடு சமையல் அறையின் கதவில் சாய்ந்து அமர்ந்திருந்தனர்.
“அம்மா என்னம்மா என்னாச்சு” என்று அவர்களின் அருகில் சென்றாள், இன்று கல்லூரியிலிருந்து அழைத்துவர மாசிலாமணி செல்லவில்லை கடையில் வேலை செய்யும் சிவா அண்ணன்தான் வந்திருந்தார்.
“முதலாளி வேலையா இருக்கார் ஆச்சி அதான் நான் வந்தேன்” என்று அவர் கூறியிருக்க அவளுக்குச் சந்தேகம் ஒன்றும் வரவில்லை சில சமயம் இது நடப்பதுதான், ஆனால் இங்கே தந்தை வீட்டில் இருக்கிறார் இவர்களானால் இப்படி இருக்கிறார்கள் என்று அருகில் செல்ல “ஒண்ணுமில்ல ஆச்சி நீ போய்க் கைகால் கழுவிட்டு வாச்சாப்பிடலாம்” என்றார் முத்துலட்சுமி.
“என்னன்னு சொல்லுங்க அத்த” என்றாள் பிடிவாதமாக அவர் அமைதியாக இருக்க.
“ஹ்ம்ம்… உனக்கு மாப்ள பாக்குறாங்கல்ல… அது பிடிக்குமா உன் ஆசை மாமனுக்கு அதான் அவங்க வீட்டில போய்ப் பிரச்சனை செஞ்சாராம் நீ அவர் பொண்டாட்டின்னு வேற சொன்னாராம் உண்மையாவே அப்படித்தானா!!” என்றாள் மீனா.
“எடு செருப்ப” என்று எழுந்து அவள் அருகில் வந்த அன்னம்மா “உனக்கும் உன் புருஷனுக்கும் பிரச்சனைன்னா அடிச்சுகிட்டு உருளுங்க எங்க எல்லார் உயிராயும் எதுக்குடி எடுக்குறீங்க, நீ ஆசைப்பட்டவன் உன்கூடதான் வாழணும்னு இவ்ளோ கேவலமா நடந்துக்க தெரிஞ்ச உனக்கு அவன் போதைல இல்லாதபோது நம்ம கூட வாழ்வான்னான்னு யோசிக்க தெரியாம போச்சு பாத்தியா”.
“அவன் வாழ்க்கை போதையால அழியுது உன் வாழ்க்கையும் அதாலேயேதான் அழியுது உன் புருஷனை உன்கூட வாழவைக்க வேண்டியது எங்க வேலையும் இல்ல எங்களுக்கு அது தேவையும் இல்ல, அவனை எப்படி புடிச்சு வைப்பியோ வெச்சுக்கோ அது உன் தலை எழுத்து எல்லாத்துக்கும் எங்க மேல ஏறாத பெத்த கடனுக்கு வெச்சு சோறு போடுறோம் அவ்ளோதான்” என்றவர்.
“ஆச்சி நீ வா அப்பாவைப் பாரு” என்றவர் “அண்ணி வாங்க” என்று முத்துலெட்சுமியை அழைத்துக்கொண்டு கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்றார்.
இபப்டி பிரச்சனைகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க முத்துலட்சுமி தம்பியிடம் “பிள்ளைக்குப் பேர் வெக்க வேண்டாமா மணி” என்றார்.
அவர் சங்கடமாக அக்காவைப் பார்த்தார் பிள்ளை பிறந்ததை கேள்விப்பட்டு பார்க்க வந்த சொந்தங்கள் அனைவருமே ஆளுக்கு ஒருவிதமாகப் பேசிட்டே சென்றனர் அதுகூட தனித்தனியாக வந்து சென்றனர் இப்பொழுது விழாவாகச் செய்கையில் என்னென்ன பேச்சுக்கள் வருமோ என்று அவருக்கு இப்பொழுதே பதட்டமாகியது.
தம்பியின் எண்ணம் புரிந்தது தமக்கைக்கு அவருக்கும் அந்தப் பயம் உள்ளதே “யாரையும் கூப்பிட வேண்டாம் மணி நமக்குள்ள வீட்டிலேயே வெச்சுக்கலாம், அவன் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்” என்றவர் அன்னம்மாவின் மடியில் கிடத்தியிருந்த பேரனின் தலையை மெல்ல தடவிவிட்டார்.
மீனா குழந்தையைப் பார்த்துக்கொள்வதேயில்லை, அவருக்கும்தானே பிள்ளை நான் மட்டும் பாக்கணுமா என்று சண்டைபோட்டவள் சும்மா சும்மா பால் குடுக்க சொல்லாதீங்க என்னால முடியாது அந்தப் பவுடரை கலக்கி குடுங்க என்றுவிட்டாள்.
முத்துலட்சுமி மகனிடம் சண்டை போட்டுக் கத்தி ஏன் கெஞ்சிக்கூட பார்த்துவிட்டார் “உனக்குப் பிறந்த குழந்தைதானே அது என்ன பாவம் செஞ்சுச்சு நான்கூடதான் கோவமா இருந்தேன் ஆனா அந்தப் பிஞ்சு மோகத்தை பார்த்தா எல்லா கவலையும் மறந்துடும் ரகு”.
“உனக்குப் பிடிக்கலைன்னா மீனாகிட்ட பேச வேண்டாம் ஆனா குழந்தையை வந்து பாருடா அவனுக்கு என்னவேணும்னு பாத்து செய் வாங்கி குடு உன் பிள்ளையை ஒருதடவையாவது கைல தூக்குடா இன்னும் கொஞ்சம் வர்ஷம் போனா உனக்கு இதெல்லாம் கிடைக்காது அப்போ இதெல்லாம் நெனச்சு வருத்தப்படுவ” என்று எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டார்.
அவன் மசியவில்லை “அது அவ வயித்துல வராம இருந்திருந்தாவே நான் சந்தோஷப்பட்டிருப்பேன், சரி வந்து தொலஞ்சுதே சனியன் அது அப்படியே அழிஞ்சு போயிருந்தா நான் நிம்மதியா…” என்றவனின் கன்னத்தைப் பதம் பார்த்தது முத்துலட்சுமியின் கை.
“நீ எனக்குப் பொறக்காமையே போயிருந்தா உன்னைய மாதிரி ஒரு பாவியைப் பெத்த மகாப்பாவியா நான் ஆகியிருந்திருக்கமாட்டேன்” என்றவர் தன் அறை கதவை அறைந்து சாற்றினார்.
தெரிந்த ஐயர் ஒருவரை அழைத்துவந்து வீட்டோடு குழந்தைக்குப் பெயர் வைக்கும் நிகழ்வை முடித்துக்கொண்டனர், ஆம் வெறும் நிகழ்வுதான் விழா அல்ல காரணம், தாய் பூரிப்போடு பட்டுடுத்தி நிற்கவில்லை தந்தை ஓடி நடந்து வேலை பார்க்கவில்லை உறவுகள் கூடி நின்று வாழ்த்தவில்லை புகைப்படம் எடுக்கவில்லை
மாசிலாமணி பேரனுக்குத் தங்கத்தில் சங்கிலி ஒன்றை வாங்கி வைத்திருந்தார், லிங்கேஸ்வரன் என்று பெயர் சூட்டினர் அதே வீட்டில் அவளுடைய அறையிலே இருந்தாள் மீனா என்றாலும் அவள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
மாசிலாமணி மருமகனை நேரில் சென்றே அழைத்தார் ஆம் அவனுடைய குழந்தைக்குப் பெயர் வைக்க அவனிடமே கெஞ்சி நின்றார்.
“ஆச்சி பிள்ளையை வெச்சுகிட்டு என்கூட உக்காரனும் எனக்கே அவளைக் கட்டிக்குடுங்க நாங்க ரெண்டுபேரும் சேந்து கூட அந்தப் பிள்ளையை வளத்துக்குறோம்” என்றான் அவன்.
“உன்னிடம் பேசுவதே வீண்” என்று வந்துவிட்டார் மாசிலாமணி மனைவியிடமும் அக்காவிடமும் அதைச் சொல்லிப் புலம்பினார், யார் என்ன பேசுகிறார்கள் என்று செவிகளைக் கூர் தீட்டி வைத்துக்கொண்டு திரியும் மீனாவிடம் அது சரியாகச் சென்று சேர்ந்தது சும்மாவே காமாட்சியிடம் வள் வள் என்று விழுந்துகொண்டிருப்பாள்.
error: Content is protected !!