Skip to content
Post Views: 5,341
அந்தியூரான் -20
அமுதன் திருமணத்திற்கு சரியென்று சொல்லி சென்றதை இப்போது வரை விசலாட்சியால் நம்ப முடியவில்லை.அதனை வாய் விட்டு புலம்பி கொண்டே இருந்தாள்.
“ஏண்டி ஆட்ட குதிரை உண்மைய சொல்லு எங்க அண்ணன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்களா?”
Advertisement
“விசா கடுப்பாயிடுவேன் பார்த்துக்கோ எத்தனை முறை தான் நான் இதை சொல்றது. உண்மைக்கும் என்ன செஞ்சார் தெரியுமா? மாமா கட்டி புடிச்சு தங்கம் நீ தாண்டி என் தங்கம். இனி வேற யாருமே வேணாம்னு சொன்னாங்க. உன்னை கட்டிக்க கசக்குமான்னு வேற கேட்டாங்க ” சிரிப்பை ஒழித்துக் கொண்டு அப்பாவியாக சொன்னவளை பாவமாகப் பார்த்து வைத்தாள் விசாலாட்சி.
Advertisement
“தங்கம் வேறயாடி”
Advertisement
“இன்னும் வைரம் முத்தெல்லாம் வந்துச்சு அதெல்லாம் நான் உங்கிட்ட சொல்லமுடியுமா” என்று சீண்டியவள் தலையில் குட்டிய சிவகாமி.
Advertisement
“என்ன பேச்சு? என்ன வாய்? ஓடி போயி தம்பிய பாருடி” என்று குமாரியை துரத்தி விட்டு விசாலாட்சியிடம் திரும்பிய சிவகாமி.
“இப்போ உனக்கு என்ன பிரச்சனை? என்னத்த அவகிட்ட நொண்டி கேட்டுகிட்டே இருக்க?”
“என் பயமே யாருக்கும் புரிய மாட்டேங்குது கல்யாணம் பேசுனா நாள் முதலா அவருக்கு முகமே சரியில்லை எதுலயும் பட்டுக்க மாட்டேங்குறாரு அத்தை இதுக்குத் தான் நான் சொன்னேன்”
“இதெல்லாம் உங்க மாமாவும் பெரிய மாப்பிள்ளையும் பேசிட்டாங்க நீ இதையெல்லாம் எண்ணி வைக்காம பொண்ணுக்கு அம்மாவா பொறுப்பா அடுத்து என்ன செய்யணும் பாரு”
“என்ன பேசுனாங்க? எப்போ?”
“வீட்டுக்கு வந்த மருமகனை வான்னு கூடச் சொல்லாம உன் புருஷன் தலைய மட்டும் ஆட்டி வச்சிருக்கான். நல்ல வேளை இது உங்க மாமா கண்ணுளையும், பெரிய மாப்பிள்ளை கண்ணுளையும் பட்டுருச்சு போல.அதான் கூப்பிட்டு வச்சு கேட்டு இருக்காங்க”
“என்ன அத்தை சொன்னாராம்?”
“ஹ்ம்ம்! சுரைக்காய்க்கு உப்பு இல்லன்னு சொன்னானாம் அடியேண்டி நீ வேற. அவன் சொல்லுற விளக்கத்தைக் கேட்டு உங்க மாமா அவனை அடிக்க மட்டுந்தான் செய்யல.பொண்ணைக் கொடுத்தவன் கேள்வி கேட்க கூடாதுனு நிக்கிறான்.இது என்ன நியாயம்னு உங்க மாமா கேட்டதுக்கு என்னை நம்பி வைக்கணும் கதை பேசுறான்.இவன் கிட்ட இனி பேச பயனில்லைன்னு அவரே விட்டுட்டாரு”
“அவர் பிரச்சனையே அதான் அத்தை”
“விடு இதோ பொண்ணைக் கட்டி கொடுக்கப் போறான் இப்போ அமுதன் தவிப்பு தெரியும்”
“அத்தை நம்ப வீட்டு பொண்ணு”
“யாரு இல்லன்னா அமுதன் மேல நம்பிக்கை இருக்கு, அது எதுனால? உன்னைக் கொண்டு.அதுவும் போக உன் புருஷனை விடக் குமாரி புருஷன் அவளை நல்லாவே பார்த்துக்குவான்” என்ற சிவகாமி மகனை முழுதாகக் கிழித்துத் தோரணம் கட்டி விட்டு செல்ல தலையைப் பலமாக உலுக்கி கொண்டாள் விசாலாட்சி.
கல்யாண கூத்தில் அதிகம் குத்து வாங்கி நின்றது என்னவோ விசாலாட்சி தான்.
அமுதன் பச்சை கொடி காட்டியது தான் தாமதம், திருமண வேலைகள் அனைத்தும் தடபுடலாகத் தொடங்கியது.அமுதன் தரப்பில் அவனே அவனுக்குச் செய்து கொண்டான்.
தணிகா பெண்ணுக்கு பார்த்து பார்த்து அத்தனையும் செய்தான்.கந்தன் கூடத் தணிகாசலத்தைக் கிண்டல் செய்தார், “என்ன மாப்பிள்ளை அவரை விட நீங்க முறுக்கிட்டு இருந்தீங்க இப்போ பார்த்து, பார்த்து செய்றீங்க”
“என் ஒரே பொண்ணு மாமா.என் செல்வி கொடுத்த பொக்கிஷம்” என்றதும் சட்டெனப் பெண் நினைவில் அவருக்கும் கண்கள் கலங்கியது முயன்று அடக்கி கொண்டார் கந்தன்.
விசா அண்ணனா அவனைக் கண்டாலே ஆகாது,அதை தவிர்த்துப் பார்த்தா பக்கா நல்லவன், உழைப்பாளி நேர்மையானவன், அதான் என் பொண்ணு அவனைக் கை காட்டி நிற்கும் போது அமைதியா இருந்தேன்”
“அப்புறம் ஏன் அவர் கிட்ட முறைச்சுக்கிட்டு நிக்கிறீங்க? இப்போ அவருக்கான மரியாதைய நம்ப கொடுக்கனும் மாப்பிள்ளை” அவன் என்று விளித்ததை மறைமுகமாக சுட்டிக் காட்டினார் கந்தன்.
“மாமா சின்ன பையன் தானே அதுவும் போக ரொம்ப திமிரு யாருக்கும் தெரியாம என்னை சீண்டி வைக்கிறான்” என்றதும் சத்தமாகச் சிரித்து விட்டார் கந்தன்.
“என்ன மாமா சிரிக்கிறீங்க?”
“வேற என்ன செய்ய? இரண்டு பேரும் சேர்ந்தா நல்ல கூத்தா இருக்கும் போலையே” என்றவர் பின் அதே சிரிப்புடன் ஒரு எல்லைக்குள்ள நின்னுக்கோங்க மாப்பிள்ளை. உங்க வீம்புக்கும் வம்புக்கு எப்போது பொண்ணுகளை இழுத்திட கூடாது” கந்தன் புன்னகையாகச் சொன்னாலும் அதில் சிறு கண்டிப்பும் இருந்தது.
“பார்த்துப்பேன் மாமா”
“சரி மாப்பிள்ளை” என்றவர் விலகி செல்ல.அமுதனை கொண்டு இன்னும் முறுக்கி கொண்டான் தணிகா.
அங்கே காந்திபுரத்தில் மரகதம் கால் தரையில் பதியவில்லை.நாள் முழுமைக்கும் இருக்கும் கை, கால் வலி கூட இப்போது தெரியவில்லை போலும்,”ஏன் அமுதா குமாரிக்கு இன்னும் இரண்டு புடவை எடுத்தா என்ன?”
“எதுக்கும்மா?”
“இது என்னடா கேள்வி புள்ளைக்குக் கூட எடுத்தா என்ன ஆகிட போகுது?”
“தேவைக்கு வேண்டி இருந்தா போதும்”
“என்ன பேச்சு இது? அது வசதியா வளர்ந்த பிள்ளை” என்றதும் அமுதன் செய்யும் வேலையை விட்டுவிட்டு தாய்யை அழுத்தமாகப் பார்க்க. அமுதன் குணமறிந்த காந்திமதி ‘கெட்டது குடி’ என்று முனகி கொண்டார்
“என் வசதிக்கு தகுந்த மாதிரி தான் என் பொண்டாட்டி இருக்கனும் பொறந்த வீட்டுல நல்ல வசதி அதுனால இருந்தா நான் அவங்களை விடக் குறைவு தான். ஒரு வேளை உங்க மருமகளுக்கு வசதியா வாழ எண்ணமிருந்தா? என்றவனைத் தொடர விடாமல்
“அமுதா உங்க அம்மைக்கும் ஒன்னும் புரியல அந்த பேச்சை விடு” என்ற முத்து தங்கையை முறைக்க வாய்யை கப்பேன மூடி கொண்டார் மரகதம்.தாய்யை ஒரு பார்வை பார்த்தவன் வெளியில் கிளம்பி விட்டான்.
திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அவனே எல்லாம் பார்க்க வேண்டியதாகி இருந்தது.வயதின் காரணமாக முத்துவாலும் அலைய முடியவில்லை.சிவராமன் அமுதனுக்கு உதவ முன் வர அதனையும் அமுதன் ஏற்க வில்லை.இப்போது அவனே அனைத்தையும் பார்த்து கொண்டான்.
கண் இமைக்கும் நொடிக்குள் நாட்கள் செல்ல இதோ இன்று அழகாக புணர்ந்தது காலை வேளை.இந்த விடியல் அத்தனை உணர்வுகளையும் ஒன்றாய் கொட்டியே விடிந்தது.திருமண நாள் விடியும் வரை குதூகலமாக இருந்த குமாரி.
விடிந்தது தான் தாமதம் அப்படி ஒரு அழுகை.பிரிவு கொடுத்த பயமா? இல்லை திருமணம் கொடுத்த பயமா? என்று தெரியவில்லை,ஆனால் பயமாக இருப்பதாகக் கூறி விசலாட்சியை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.
மகன் வேறு இரவு முழுக்கத் தூங்காமல் படுத்தி வைத்திருந்தான் ஒரே அழுகை. இப்போது மகளும் அழுது வைக்க சமாளிக்க முடியாமல். கெஞ்சி, மிரட்டி பார்த்தவள் அறையை விட்டு வேகமாக வெளியில் வந்து கணவனைத் தேடி கண்டு கொண்டு,
கையோடு அவனைத் தர தரவென்று இழுத்து வந்தாள்,”என்னடி என்ன ஆச்சு?” என்றதற்கு பதிலே சொல்லாமல் அறைக்குள் விட்டு கதவை அடைந்தவள். குமாரியின் அருகில் அவனை அமர வைத்து.படுக்கையில் இருந்த மகனையும் அவன் கையில் கொடுத்து விட்டு.
“இந்தாங்க நீங்க பெத்த இரண்டும் நீங்களே வச்சுக்கோங்க என்னால முடியல நான் எங்க அம்மா கிட்ட போறேன்” என்றவளை பார்த்து பல்லை கடித்தவன்.
“என்ன விளையாட்டு இது? அம்மாக்கும் பிள்ளைகளுக்கும் விளையாட நேரமே இல்லையா?”
“யாரு விளையான்டா? இந்தப் பெரியவ முழிச்ச உடனே அழுக தொடங்குனவ இன்னும் நிறுத்தன பாடில்லை இன்னும் செத்த நேரத்துல ஆளுங்க வர தொடங்கிடுவாங்க, இப்படி அழுதா யாருக்கு என்ன பதில் சொல்றது?இந்த சின்னது ராத்திரி திறந்த தொண்டை இன்னும் மூடல என்ன சத்தம் நான் மனுசியா என்ன?”
எங்கே மனைவியின் சத்தம் வெளியில் கேட்டு விடுமோ என்று பதறிய தணிகா “அதுக்கு ஏண்டி கத்துற” என்றவன் குமாரியை தோளோடு அனைத்து.
“என்னடா?”
“கொஞ்சம் பயமா இருக்குப்பா”
“யாரை பார்த்து?”
“ப்ச்! யாரை பார்த்தும் இல்லை, ஆனா பயமா இருக்கு” மகளின் நிலை அவனுக்கும் புரிய தான் செய்தது.அவனுக்கும் அவளது பிரிவை எண்ணி தான் இரவில் துக்கம் பிடிக்கவில்லை.
“ஹ்ம்ம்! அப்பா இருக்கேன்” என்றதும் அவனது தோளில் முகத்தைப் புதைத்து கொண்டாள் குமா.ரி சில நொடிகள் மூவரும் அப்படியே இருக்க சின்னவனும் தனது அழுகையை மெல்லிய சிணுங்களாக குறைத்திருந்தான்.
முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு மூவரையும் பார்த்து கொண்டிருந்தவளை பார்த்த தணிகா சிறு புன்னகையுடன், “விசா குட்டி” என்று தனது பக்கத்தில் கண்ணைக் காட்ட மெதுவாக நடந்து வந்து மற்றொரு தோளில் சாய்ந்து கொண்டாள்.
நால்வரும் அப்படியே மௌனமாக சில நொடிகள் அப்படியே அமர்ந்திருக்க, கதவை வேகமாகத் திறந்து கொண்டு சிவகாமி வர அவரைத் தொடர்ந்து அவரது பெண்கள் எல்லாரும் நுழைந்தனர்.ஒரு நொடி நால்வர் நிலையை கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர். இப்பொது ஒரு அளவிற்கு அவர்களது பிணைப்பும்,உணர்வும் பிடிபடப் பெரிய பெண்களுக்கு ஒரு இதமான நிறைவு தான்.
“குமாரி நேரமாச்சுடா” ராணி பேத்தியின் அருகில் வந்து அவளது தலையை வாஞ்சையாகத் தடவி கொடுக்க தந்தையை விட்டுட்டு அவளை ராணியை அனைத்து கொண்டாள்.
வீட்டின் செல்ல சீமாட்டி அல்லவா அனைவரிடமும் செல்லம் கொஞ்சி விட்டு. ஒருவழியாக மணப்பெண்ணாகக் கிளம்பி வந்தவளை விசாலாட்சி கண்களால் நிரப்பிக் கொள்ளத் தணிகாசலம் பெண்ணின் உச்சி முகர்ந்து நின்றான்.
இதோ இனிதே அரங்கேறியது குமாரி- அமுதன் திருமணம் நல்ல மனங்கள் கூடி, கோடி வாழ்த்துக்கள் தூவி தேவர்களைச் சாட்சி வைத்து,குமாரியை தனது சரி பாதியாக ஏற்றுக் கொண்டான் அமுதன்.
தணிகாசலத்திற்குப் பெண்ணிடம் இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை.செல்வியின் எண்ணம் பெரும் அலையாக மோதி அவனைக் கவிழ்த்திருந்தது.அவனது எண்ணம் உணர்ந்தார் போல் சிறு வலியுடன் புன்னகைத்து கொண்டாள் விசாலாட்சி.
அதன் பின் நின்று யோசிக்க நேரமின்றிச் சடங்குகள் நடக்க.அதில் மூழ்கி போனார்கள் பெரியவர்கள்.அனைத்தும் முடிந்து பெண் வீட்டுக்கு வந்த மணமக்களை விட்டுட்டு மரகதம்,முத்து,காந்திமதி மூவரும் விடைபெற்று ஊருக்கு சென்று விட்டனர்.
அவர்கள் வழக்கப்படி பெண் வீட்டில் தான் சடங்கு போலும். அதனால் பெரியவர்கள் கிளப்பி விட்டனர் மாப்பிள்ளை வீட்டு விருந்து வேறு உள்ளது அல்லவா.
சிவராமன் வீட்டில் சந்தடி அடங்கவே வெகு நேரம் பிடித்தது.அதுவரை மகளிடம் விசாலாட்சி நெருங்க வில்லை.சிவகாமி நெருங்கவும் விடவில்லை. இப்போது தாயும் மகளும் சேர்ந்தாள் தன் பாடு திண்டாட்டமாக போய்விடும் என்று எண்ணினார் போலும்.அதனால் விசலாட்சியை அவளது அறைக்கு அனுப்பி வைத்து விட்டு.
தனது பெண் மக்கள் பேத்திகளுடன் குமாரியை அலங்கரித்து அனுப்பி வைத்தார்.
அன்று நடந்த பேச்சுக்கு பிறகு சிறு பார்வை தீண்டல் மட்டுமே கொண்டிருந்த ஜோடிகள் இன்று உரிமையுடன் தனித்து நிற்க பெரும் தடுமாற்றம் தான் குமாரிக்கு.சிறு பிள்ளையில்லை என்றாலும் பருவத்திற்கே உண்டான பயம் அவளுக்கு.
மெல்ல அறைக்குள் நுழைந்தவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன்.அவனது பார்வை உணர்ந்தாலும் அமைதியாக அவனது அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். சில நொடிகள் மௌனத்தில் கழிய.
“சில்வண்டு என்ன அமைதியா வந்து உக்காந்திருக்க” அவனது கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை போலும் அரிவை கண்கள் எல்லாம் சிவந்து பார்க்கவே சோர்வாக இருந்தான் அமுதன். இன்னும் குமாரி அவளை கவனித்துப் பார்க்கவில்லை.
அவளது தயக்கம் உணர்ந்து நொடி பொழுதில் தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டவனைத் திடுக்கிட்டு பார்த்து, “மாமா!”
“ஹ்ம்ம் என்றவன் அவளது தோள் வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டு. அவளது வாசனை நுகரக் கூச்சம் நெட்டி தள்ள அவனை தடுக்க எண்ணியவள் கையை இறுக்க பற்றி கொண்டான் அமுதன்.
“மாமா கண்ணு சிவந்திருக்கு”
“ஹ்ம்ம்!” என்றவன் தேகம் கொஞ்சம் அனலாகத் தான் இருந்தது அதை உணரும் நிலையில் குமாரி இல்லை
“மாமா?”
“ப்ச்! என்னடி? ஒரே அலைச்சல் தூக்கமே இல்லை.மாமாக்கு எடுத்துச் செய்ய யாரடி இருக்கா எல்லாம் வயசானவங்க அதான். அளவுக்கு அதிகமான அலைச்சல் அதான் ஒத்துக்கல” என்றவன் அவளுக்குள் ஆழ்ந்து புதைந்து கொண்டான்.
கை விரல் தீண்டி, காது மடல் கவ்வி, கழுத்தில் நிலைத்து முத்தி வைக்க துடித்துத் தான் போனாள் அரிவை.எந்தவித பூச்சுகளும் இல்லாமல் வெகு இயலபாக கலந்து நின்றார்கள் இருவரும்.கூச்சம் இருந்தாலும் தயக்கமே இல்லாமல் தன்னவனை தாங்கி நின்றாள் குமாரி.
அதன் பின் எந்த வித பேச்சுகளும் இல்லை.மெல்ல மெல்ல அமுதனின் பாணியில் பயணிக்க நிறையப் பயந்து கொஞ்சமே கொஞ்சம் தடுமாறி, கூச்சத்தை நெட்டி தள்ளி நிற்க.அழகாகத் தொடங்கியது குமாரி – அமுதனின் அழகான அத்தியாயம்.
அம்மாச்சி குழுவின் அறிவுரை படி காலையில் எழுந்து குளித்து முடித்து வந்த குமாரி அறைக்குளே திருத் திருவென விழித்து நிற்க.
வெளியில் தவித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தணிகாசலம்.இரவு அமுதனை எண்ணி ‘விசாவை கொண்டு தன் மகளை?’ அவனது கற்பனை குதிரை ஏகத்துக்கும் பாய்ந்தோட தூக்கமே இல்லாமல் இதோ விடியலில் மகளைக் காண அமர்ந்திருந்தான்.
error: Content is protected !!