Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை 35❤️ ( இரண்டாம் பாகம் )

அடுத்த நாள் காலை விடிந்ததும் அர்ஜுனனும் சுபாவும் மருத்துவமனை சென்றுவிட்டனர்…. சசி எதுவும் கூறவில்லை இருவரும் வந்தவுடன் மித்ராவை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்துவிட்டான்… சுபா சென்று பார்க்கும் போது நிரவி எழுந்து இருந்தாள்… சுபாவை பார்த்ததும் அம்மா என கை நீட்டி அழைத்தாள்…

சுபா தன் கண்ணீரை அடக்கி கொண்டு நிரவியின் அருகில் அமர்ந்தாள்… நிரவி குட்டி சலுகையாக அவள் மடி மீது சாய்ந்து கொண்டது… அதன் பின்னான பொழுதிலும் சுபாவை விட்டு நகரவில்லை… இரண்டு நாட்கள் கழித்து நிரவியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்…



Advertisement

பிள்ளைகள் அனைவருக்கும் அரையாண்டு விடுமுறை தான்.. எனவே அனைவரும் அர்ஜுனன் வீட்டில் தான்.. ரித்திகா பெரிய பெண்ணாகி பதினைந்து நாள் ஆகி இருக்க இன்று அவளின் சடங்கு… எல்லாமே நன் முறையில் நடந்து முடிந்து இருந்தது…

அதன் பிறகான நாட்களில் அர்ஜுனனும் சுபாவும் இன்னும் கவனமாக இருந்தனர்… அவர்கள் செய்யும் சிறு செயல் கூட நிரவியை காயப்படுத்தாமல் பார்த்து கொண்டனர்…அதே போல் ரித்திகாவை காயப்படுத்தவும் இல்லை… குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இன்றி சென்றது… என்ன சசி தான் அர்ஜுனன் சுபாவுடன் பேசுவது இல்லை…

Advertisement

Advertisement

குடும்பத்தினருக்கு அது தெரிந்தாலும் அவர்கள் இவர்களுக்கு இடையில் தலையிடவில்லை… நிரவி சிறு பிள்ளை அதனால அவளுக்கு எதுவும் தெரியவில்லை தன் பெற்றோரிடம் பேசிவிட்டாள்… ஆனால் சசி அப்படி இல்லையே அவன் அன்று வரவில்லை என்றால் என்ன ஆகி இருக்கும்… அர்ஜுனன் அன்று என்ன பேசி இருந்தாலும் அந்த நாள் தாக்கம் அவனிடம் குறையவில்லை… அது தான் பேசாமல் இருக்கிறான்… அது அர்ஜுனனுக்கும் புரிந்தது எனவே அவனை தொந்தரவு செய்யவில்லை… சுபா தான் வருத்தமாக இருந்தாள்… அர்ஜுனன் புரிய வைத்து விட்டான்… “அம்மு நாம செஞ்சது தப்பு… அன்னிக்கு சசி வராம போய் இருந்தா என்ன ஆகி இருக்கும்…. யோசி அம்மு… அவனுக்கு நம்ம மேல இருக்குற கோவம் குறைஞ்சா அவனே பேசுவான்….” என்று கூறினான்… அவளும் புரிந்து அமைதியாகி விட்டாள்…

அந்த கல்வியாண்டு முடிந்து இருக்க சிவனேஸ் ஒரு முறை ஊருக்கு வந்து விட்டு சென்று இருந்தான்… ஒரு வாரத்தில் நிரவியின் பத்தாவது பிறந்தநாள் வர இருந்தது… அன்று அர்ஜுனனின் நண்பன் அப்துலும் ஆஷாவும் வந்து இருந்தனர்….

Advertisement

ஆஷாவிற்கு நிரவி என்றால் அவ்வளவு இஷ்டம்… அது ஏன் என்று தெரியவில்லை… தேவியை போல் மச்சம் உள்ளதற்க இல்லை அர்ஜுனன் மேல் இருந்த சகோதரா தன்மையா அது தெரியவில்லை… ஆனால் நிரவி என்றால் அவளுக்கு கொள்ளை இஷ்டம்….இந்த முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் நிரவியை தங்களுடன் அழைத்து செல்ல கேட்டு வந்து இருந்தனர்….

சிறிது நேர நல விசாரிப்புக்கு பிறகு ஆஷா தான் “அண்ணா நிரவி குட்டியை என் கூட லீவுக்கு கூட்டிட்டு போகட்டா… இப்போ லீவுல தானு இருக்கா… எனக்கு ஆசையா இருக்கு ண்ணா… ப்ளீஸ் லீவ் முடிய ஒரு வாரம் முன்னாடி அவளை iஇங்க கூட்டிட்டு வந்து விடுறேன்….” என்று ஆசையாக கேட்டாள்…

அவளின் ஆசைக்கு மறுப்பு கூற தோன்றவில்லை… சுபாவின் முகம் பார்த்தான்… அவளுக்கு விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை… அதே போல் குடும்பத்தினருக்கும் அவ்வளவாக விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை… இவர்களுக்கு ஒன்றரை வருட சந்திப்பு தான்… ஆனால் அர்ஜுனனுக்கு அவ்வாறு இல்லையே பள்ளி கல்லூரியில் வீட்டில் இருந்ததை விட அவர்களுடன் தான் அதிகம் இருந்தான்…. நடுவில் பேச்சு வார்த்தை நின்று இருந்தாலும் நட்பு மாறாது அல்லவா…

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… நிரவி வந்தா நீ கூட்டிட்டு போடா ம்மா.. நிரவி சாயங்காலம் வந்துருவா… நீ அவ கிட்டயே கேட்டுக்கோ… முதல்ல சாப்பிடலாம் வாங்க ரெண்டு பேரும்….” என்று கூறினான்… நிரவி இங்கு இல்லை… மெய்யனூரில் வர்ணன் வீட்டில் உள்ளாள்…

“இல்லை அண்ணா… வீட்டுல மம்மி செஞ்சி வெச்சு இருப்பாங்க… உங்களை பாத்துட்டு போகலாம்னு தான் வந்தேன்… குட்டிமா வந்ததும் கேட்டுட்டு சொல்லுங்க.. இன்னும் மூனு நாள்ல கிளம்புறோம்” என்று கூறி அனைவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டனர் இருவரும்…

சுபா அவர்கள் கிளம்பியதும் “நிரவிகாவை எல்லாம் அனுப்ப வேண்டாம் மாமா.. உங்க ப்ரெண்ட்ஸ் அதோட போதும் வீட்டுக்கு குடும்பத்தோட வராங்களா நாம போயிட்டு வருவோம்… ஆனா நிரவியை தனியா எல்லாம் அனுப்ப முடியாயது மாமா… அவங்க என்ன இங்கயா இருக்காங்க… அவங்க இருக்குறது டெல்லில… அவ்வளோ தூரம் எல்லாம் அனுப்ப முடியாது… தன்மையா மறுத்துடுங்க..” என்று கூறிவிட்டு அவ்வளவு தான் என்று அவள் கிளம்ப அர்ஜுனனோ “அம்மு ஒரு நிமிஷம்… நீங்க எல்லாம் எவ்வளவு முக்கியமோ அதே போல அவளும் எனக்கு ரொம்ப முக்கியம்… அவ ஆசைப்பட்டு கேட்டு என்னால வேண்டாம்னு சொல்ல தோணல… அவங்க என் ப்ரெண்ட்ஸ் மட்டும் இல்லை… முகுந்தனும் வர்ணனும் எப்படியோ அதே போல தான் எனக்கு அப்துலும்… கண்மணி ஜனனி போல தான் ஆஷாவும்… சொல்ல போனா அவங்க ரெண்டு போரையும் விட அவ எனக்கு முக்கியம் அம்மு… இதை அவ கேட்டு இருந்தா எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு இருப்பா… இங்க இருக்க யாருக்கும் இதுல விருப்பம் இருக்குறது போல தெரியல… நாம எதுவும் சொல்ல வேணாம்… குட்டிமா வரட்டும் கேட்டு சொல்லிடலாம்…. ” என்று கூறி அறைக்கு செல்ல பார்த்தான்….

“மாமா நிரவிக்கு என்ன தெரியும்… அவ சின்ன குழந்தை… அது எல்லாம் வேண்டாம்… அவளோ தூரம் எல்லாம் அனுப்ப முடியாது…” என்று கூறி அர்ஜுனன் கூறுவதை கேட்காமல் அறைக்கு சென்றுவிட்டாள்…

நிரவி வீட்டிற்கு வரும் போதே சோகமாய் தான் வீட்டிற்கு வந்தாள்.. அவள் வந்ததும் சசியை தான் தேடினாள்… ஆனால் அவன் அப்போது வெளியில் சென்று இருந்தான்… அர்ஜுனன் தான் ஹாலில் அமர்ந்து இருந்தான்… அவனை கண்டதும் அவனிடம் ஓடி சென்று அவன் மேல் அமர்ந்து கொண்டாள்…

அர்ஜுனன் அவளிடம் “குட்டிமா உனக்கு அப்துல் மாமா ஆஷா அத்தை தெரியும் தானே… அவங்க உங்களை லீவுக்கு டெல்லிக்கு கூப்பிடுறாங்க…” போயிட்டு வரியா என்று கேட்டான்…

அவளும் என்ன நினைத்தாளோ “ஹ்ம்ம் ப்பா” என்று கூறி அவனை அணைத்து கொண்டாள்… அவனும் அவளை தன் மீது சாய்த்து தட்டி கொடுக்க ஆரம்பித்தான்… இரு நிமிடத்தில் உறங்கியும் இருந்தாள்….

கர்ணனும் பாலாவும் அங்கு தான் இருந்தனர்…

சுபா அப்பாவும் மகளும் பேசி கொண்டு இருந்ததை கேட்டு கொண்டு தான் இருந்தாள்… “மாமா நான் அவ்வளவு சொல்லியும் போறியானு கேட்குறீங்க… விட்டா அவங்க பொண்ணு கேட்டா பொண்ணை தூக்கி கொடுக்கவும் செய்விங்க போல… அப்படி என்ன மாமா பாசம் அவங்க மேல….” என்று கேட்டாள்..

அர்ஜுனனோ “இன்னும் நிரவிக்கு வயசு இருக்கு.. ஆஷாவும் அப்படி கேட்க மாட்டா.. அப்படி கேட்டாலும் சந்தோசமா என் பொண்ணை ரியாஸுக்கு தருவேன்” என்று கூறி நிரவியை தூக்கி கொண்டு அறைக்கு சென்று விட்டான்… மித்ராவும் சுப்ரியாவும் அங்கு தான் இருந்தனர்…

சுபா கொஞ்சம் கோவமாக பாலாவிடம் “என்ன சொல்லிட்டு போறாரு பாருங்க மாமா… எப்படி அவ்வளவு தூரம் அனுப்ப முடியும்… அது மட்டுமில்லாம பொண்ணு கேட்டா கட்டி தருவேன்னு சொல்லிட்டு போறாரு..” என்று கேட்டாள்…

பாலாவோ “அர்ஜுனன் சொன்னா தப்பா இருக்காது ம்மா… அர்ஜுனோட ப்ரெண்ட்ஸ் கண்டிப்பா தப்பானவங்களா இருக்கவே மாட்டாங்க.. நிரவி இங்க விட்டு எங்கயும் போனது இல்லை…. போயிட்டு தான் வரட்டுமே… கவலைப்படாம போய் வேலையை பாரு சுபிம்மா…” என்று கூறி அவர் அறைக்கு சென்றுவிட்டார்….

சுபா எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்றுவிட்டாள்… மித்ராவும் சுப்ரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவர்களும் சுபாவை பின் தொடர்ந்து சமையல் அறைக்கு சென்றுவிட்டனர்…

அடுத்த மூன்று நாட்களில் சுபாவின் அரைகுறை சம்மதத்துடன் நிரவி அப்துல் ஆஷா மற்றும் அவர்களின் மகன் ரியாஸ் உடன் டெல்லி புறப்பட்டு இருந்தாள்… இதுவே அவளின் முதல் விமான பயணம்… ஆஷா அப்துல் ஒரு சீட்டில் அமர அவர்களுக்கு பின்னால் சீட்டில் நிறுவியும் அப்துல் ஆஷாவின் பதினாறு வயது ரியாஸும் அமர்ந்து கொண்டு வந்தனர்..

நிரவி பயத்துடன் தான் அமர்ந்து இருந்தாள்… அவளை ரியாஸ் தான் எதோ எதோ பேசி கவனத்தை திசை திருப்பி இருந்தான்…டெல்லி விமான நிலையம் அடைந்து இருக்க நால்வரும் வாடகை கார் மூலம் அவர்கள் வீட்டை அடைந்து இருந்தனர்….

அங்கு ஊருக்கு ஒருவனோ நிரவி அங்கு இல்லை என அறியாமல் அவளை பார்க்கவும் தன் குடும்பத்தை பார்க்கவும் விமானத்தில் பறந்து வந்து கொண்டு இருந்தான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!