Skip to content
Post Views: 1,799
கருவின் குரல்
அத்தியாயம் 20
அன்ஷின் கான்செப்ட் அங்கிருந்த அனைவருக்கும் பிடித்திருந்தது. இருப்பினும் இவளை விட தீப்தியின் கான்செப்ட் முதல் பரிசை தட்டிச் சென்றது.
அனிஷைவிட அர்ஜூனுக்கு வருத்தமே நன்றாக தானே இருந்தது,நடந்து வந்த மாடல்களும் அவர்களது பணியை சிறப்பாகவே செய்தனர்.அதற்குமேல் அனிஷின் ஸ்பீச் பீக் லெவல்.
நான் ஜட்ஜாக இருந்திருந்தால் இதற்குத்தான் முதல் பரிசு தந்திருப்பேன் என எண்ணினான்.சரி இந்த துறையில் நாம் அவ்வளவு ஜாம்பவான் இல்லையே என்றும் எண்ணிக் கொண்டான்.
Advertisement
சற்று நேரத்தில் கூட்டம் கலைந்து செல்ல, இவனும் அனிஷை தேடி சென்றான்.
பர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்காத துக்கத்தில் இருப்பாள்.அந்த அளவுக்கு அவளது ஹார்ட் வொர்க் அதில் தெரிந்தது. அவளை எப்படியாவது சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வேண்டும் என தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அங்குமிங்கும் அலைந்து அவள் இருந்த அறையை கண்டுபிடித்து விட்டான். உள்ளே அவளது தோழன் ரிஷிக்கு மேகப் கலைத்தவாறே பேசிக்கொண்டிருந்தாள்.
Advertisement
ரிஷி இன்னைக்கு வர வேண்டிய மாடல் லீவு போட்டதும் ,எனக்கு என்ன பண்ணறதுனே தெரிலே,பட் நல்லவேளை நீ மாடலா வர சம்மதிச்சே ரொம்ப தேக்ஸ் டா,ஆனா யாருமே நீ பையனு கண்டுபிடிக்கவே இல்ல பாத்தியா என தான் செய்த களவானித்தனத்தை மெச்சிக் கொண்டிருந்தாள்.
Advertisement
தேக்ஸ் எல்லா வேண்டா அனிஷ். நா உனக்கு பர்ஸ்ட் ப்ளேஸ் கிடைக்கனுனுதா மாடலா வர சம்மதிச்சே, பட் அது அந்த தீப்திக்கு போய்ருச்சுனு வருத்தமா இருக்கு என்றான்.
எனக்கும் வருத்ததான் , சும்மாவே அவ சீன் போடுவா இனி அவளை கையிலே பிடிக்க முடியாது.சரி விடு நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம் என்றாள்.
நீ என்ன சொன்னாலும் மனசே கேட்கல அனிஷ் என்றான்.
Advertisement
இங்க பாரு ரிஷி நம்ம ஒரு இடத்துலே கடினமா முயற்சி செய்தும் தோக்கறோம்னா,இதை விட பெரிய வெற்றி நமக்காக காத்துட்டு இருக்குனு அர்த்தம். இந்த ஸ்டேஜை விட பெரிய ஸ்டேஜ்லே வின் பண்ணப் போறோம்னு அர்த்தம். தோத்து போய்ட்டோம்னு ஃபீல் பண்ணவே கூடாது என்றாள்.
அடப்பாவிகளா இவன் என்ன பையனா நடந்த வந்த அத்தனை பேரும் பொண்ணுணல்ல நா நினைச்சே,அங்க எல்லாரையும் ஏமாத்திட்டு இங்க வந்து மோட்டிவேசனல் ஸ்பீச் கொடுத்துட்டு இருக்கா, இவளை கொஞ்சம் ஜாக்கிரதையாதா ஹேண்டில் பண்ணனும்.
இருந்தாலும் அந்த மோட்டிவேசனல் டையலாக் நல்லாதான் இருக்க என,குரலை செருமிய படியே கதவை தட்டினான்.
இருவரும் இவனை பார்த்து யார்? உங்களுக்கு என்ன வேணும் என்றனர்.
அனிஷ்கா தேவி! என்றான். ரிஷி,” உடனே ஹலோ மிஸ்டர் யார் நீங்க?என்ன சொல்றீங்க? “என்று எகிறினான்.
நான் அர்ஜூன். மை பேசன் ஓட பார்ட்னர் என்றான். இருந்துட்டு போ அதெல்லா எதுக்கு எங்ககிட்ட சொல்லிட்டு இருக்கே என்றான்.
தேவராஜ் சார் என்னை இங்க அனுப்பி வச்சாரு, அனிஷை கூப்டு வர சொல்லி என்றான்.
தேவா என்ற பெயரை கேட்டதும் அனிஷ் ரிஷி அப்பா அனுப்பி வச்ச ஆளு போல, நீ எதும் பேசாதே நா அவரோட கிளம்பறேன் என்றாள்.
அப்பாவா என்று மனதுள் ஒரு கேள்வி எழுந்தது அர்ஜூனுக்கு, டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க நா கிளம்பி வர என அங்கிருந்த சேர் எடுத்து போட்டு அவனை அமர வைத்தாள்.
அவளது பொருட்களை வேகமாக எடுத்து பேக் செய்தாள்.ரிஷி,”அனிஷ் இவன பார்த்த நல்லவ மாதிரி தெரிலே இவனோட தனியா நீ போகாதே,அவனை போக சொல்லு நா கூட உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடறே”, என்றான்.
இல்ல ரிஷி அப்பாவே ஆள் அனுப்பிருக்காருனா எதாவது முக்கியமான விஷயமா இருக்கும்.
நா கிளம்பறே,என்ன நானே பாதுகாத்துப்பே என்றாள்.சரி எதுக்கும் இந்த கத்தியை வச்சுக்க அவன் ஏதாவது பண்ணுனா குத்திரு என்று ஒரு சிறிய கத்தியை தந்தான்.
அர்ஜூன் கார் ஓட்ட,அனிஷ் பின் இருக்கையில் வேடிக்கை பார்த்தவாறே வந்தாள்.
இருவருக்குள்ளும் ஒரு அமைதி, எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
மேடம் ஏதாவது சாப்டறீங்களா? என்றான்.ஆமா பசிக்குது ஏதாவது நல்ல ஹோட்டல் இருந்தா நிறுத்துங்க, அப்பறம் இந்த கார்ல பாட்டு எல்லாம் பாடாதா என்றாள்.
அவன் மீடியா ப்ளேயரை ஆன் செய்ய,
80ஸ் காலத்து காதல் பாடல்கள், தேவாவிற்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவர்களின் பயண மெளனத்தை அது ஈடு செய்து கொண்டிருந்தது.
ஒரு நல்ல ஹோட்டலில் அர்ஜூன் காரை பார்க் செய்தான்.இருவரும் எதிரெதிரே அமர்ந்து தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
அனிஷ் எதற்கு தேவா வரச் சொன்னான் என்கிற யோசனையிலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அடுத்த டேபிளில் முதல் இடம் பிடித்த தீப்தி தனது காதலனுடன் உணவு அருந்திக் கொண்டே, நல்ல வேளை நீ அந்த ஜட்ஜ்க்கு பணம் கொடுத்தே இல்லைனா அந்த அனிஷ் பர்ஸ்ட் வந்துருப்பா ரொம்ப தேங்க்ஸ் என்று கூறிக் கொண்டிருந்தது, இவர்கள் காதில் நன்றாகவே கேட்டது.
ரிஷி கொடுத்த கத்தியை பேக்கினுள் இருந்து எடுத்தாள் அனிஷ்.அவள் அடுத்த அசைவை அர்ஜூன் யுகிப்பதற்குள் சட்டென தீப்தியை குத்த சென்றாள்.
அர்ஜூன் ஓடிச் சென்று அவளை தடுக்க அவன் கையில் கத்தி கிழித்து ரத்தம் பீறிட்டது.
அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.மேற்கொண்டு எந்த பிரச்சினையும் வரக் கூடாது ,இவளை பத்திரமாக தேவாவிடம் ஒப்படைக்க வேண்டும் என எண்ணி, கைவலியையும் பொருட்படுத்தாது அவளை தரதரவென இழுத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினான்.
அனிஷ்,” கையை விடு உன்னை யாரு நடுவிலே வரச் சொன்னா,என்னோட ஒரு வருசத்தோட கடின உழைப்பு அது ” என அவனை பார்த்து கத்திய படியே வந்தாள்.
கையை தன்னிடம் இருந்த சிறிய துண்டை கொண்டு கட்டினான் அர்ஜூன்.
“மேடம் சார் கிட்ட உங்கள பத்திரமாக ஒப்படைக்கனு ,நீங்க அந்த பொண்ணை குத்தி இருந்தா இன்னேரம் ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்திருப்போம்.
நா உங்களை தேவா சார் கிட்ட ஒப்படைச்சதுக்கு அப்பறோம் நீங்க இன்னொரு டைம் வந்து அந்த பொண்ணை கத்திலே குத்துங்க என்றான்.
அதன் பிறகு தேவாவிடம் வரும் வரை அனிஷ் வாயைத் திறக்க வில்லை.
வழியில் அவனுக்கு தெரிந்த டாக்டரிடம் சென்று கட்டு போட்டுக் கொண்டான். அவன் கையை காயப்படுத்தியதாக எந்த குற்ற உணர்ச்சியும் அவளிடத்தில் இல்லை. அவன் கைக்கு கட்டுப்போட ஹாஸ்பிடல் உள்ளே செல்லும் போது கூட ஹாயாக காரினுள் உட்கார்ந்து கொண்டாள்.
இரவு பதினொரு மணி அளவில் பொள்ளாச்சி வந்தடைந்தனர்.
தேவாவும் ,ஜானகியும் அவர்களை வரவேற்க தயாராக நின்றனர்.
தூரத்தில் இருந்து வரும்போதே ஜானகியை பார்த்து விட்ட அனிஷ் இதுவெல்லாம் அம்மாவின் வேலை என்று புரிந்து கொண்டாள்.
அம்மாவின் திருமண ஏற்பாடுகள் பிடிக்காமல் போகவே ,நான்கு மாதமாக போனில் கூட அவளைத் தொடர்பு கொள்ளாமல் இருந்தாள். இன்று தேவா அர்ஜூனை அனுப்பவும் ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் என்றுதான் கிளம்பி வந்தாள்.
ஏனெனில் அவளுக்கு நன்றாக தெரியும் தன் விஷயமாக அம்மா தேவாவின் உதவியை நாடமாட்டாள் என,ஆனால் இன்று அவளது யூகத்தை ஜானகி உடைத்து எரிந்து இருந்தாள்.
என்னதான் அம்மாமீது அளவுகடந்த கோபம் இருந்தாலும்,அவளை நேரில் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். ஜானகி கண்களில் நீரோடு அவளது நெற்றியில் முத்தமிட்டாள்.
நால்வரும் மைபேசனுள் அமர்ந்திருக்க, ஜானகி ரொம்ப நன்றி தம்பி இவளை பத்திரமாக கூட்டிட்டு வந்ததற்கு என்றாள்.பரவாயில்லங்க மேடம் இது என் கடமை தேவா சாருக்கு தேங்க்ஸ் சொல்லுங்க என்றான்.
அப்போது அவன் கையில் இருந்த கட்டை சுட்டிக்காட்டி ஜானகி கேட்க,ஒரு நிமிடம் அனிஷ் பதட்டப்பட்டாள்.அது ஒரு சின்ன ஏக்ஸிடன்ட், ஹாஸ்பிட்டலே கட்டுப்போட்டுட்டே சரி ஆயிடும் என்றான்.
அனிஷ் ஒரு பெரும்மூச்சு விட்டாள். தேவா என்ன ஏதாவது ப்ராப்ளமா? என்றான்.இல்லை சார் அது லேசான காயம்தான் சரி ஆயிடும் என்றான்.
“அனிஷ் இனி நீ பொள்ளாச்சியிலேயே இருந்துரு, அம்மா நீ இல்லாம ரொம்ப கஷ்டப்படுறா”என்றான் தேவா.
இல்ல நா டெல்லிலே அம்மாவோட செட்டில் ஆக போறேன்.பேசன் டிசைனிங்க்கு அங்கதான் நல்ல வாய்ப்பு இருக்கு என்றாள்.
அர்ஜூன் குறுக்கிட்டான், இல்ல பொள்ளாச்சிலே உங்க பேசன் ட்சைனிங்கே விரிவு படுத்துங்க நம்மளோட மைபேசன்லே ஜாயின் பண்ணிக்கோங்க என்று சட்டென்று கூறி விட்டான்.
மற்ற மூவருக்கும் தயக்கமே அனிஷை அங்கு வேலை செய்ய,அதிலும் அனிஷிற்கு கொஞ்சம் கூட அவன் சொன்னது விருப்பமில்லை.
அவளுக்கு நன்றாக தெரியும் மைதிலியின் பெயரைத்தான் மைபேசன் என்று வைத்துள்ளனர் என்று,அதுமட்டுமின்றி தன் அம்மா இருக்க வேண்டிய இடத்தை இன்னொருவர் தட்டிச் சென்று விட்டதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அன்றிரவு மைதிலியின் தாய் தங்களிருவரையும் தாக்கியதை இன்றளவும் மனதினுள் கடுமையாக போராடி மறக்க முயன்று கொண்டிருக்கிறாள்.அவ்வாறிருக்க அர்ஜூன் இப்படி கூறியது அவளுக்கு சற்று கடுப்பை தந்தது,இவன கையிலே இல்ல வாயிலே குத்திருக்கனும்னு மனதினுள் நினைத்துக் கொண்டாள்.
ஜானகி,” இல்ல நானே ஒரு சின்ன பொட்டிக் வெச்சு கொடுக்கலானு இருக்கே” என்றாள்.”நீ எடுத்த முடிவு கரைக்ட் ஜானு பொட்டிக் வைக்க எந்த ஹெல்ப்னாலும் தயங்காமல் கேளு “என்றான் தேவா.
ஆனால் அர்ஜூன் விடவில்லை அவனுக்கு தெரியும் எப்படியும் ஒருநாள் அப்பாவின் ஹோட்டல் பிசினஸ் பார்க்க கிளம்பி விடுவோம்.
தேவாவிற்கு இது சைடு பிசினஸ் மட்டுமே, அனிஷின் ப்ரெசன்டேசனை பார்த்த உடனே முடிவு செய்து விட்டான் மைபேசனுக்கு சரியான ஆள் அனிஷ் மட்டுமே என, இவனுடைய முடிவால் இவர்கள் நால்வர் சந்திக்க போகும் பிரச்சினைகளைப் பற்றி அறியாமல்.
ஜானகியிடம் மேடம் ஒரு ஆறு மாசம் அவங்க பொள்ளாச்சிலே பேசன் டிசைனிங் வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ளட்டும்,அதன் பின் உங்கள் ஆசைப்படி பொட்டிக் வைத்துக் கொடுங்கள் என்றான்.
நம்ம கம்பெனிக்கும் இவங்க டிசைனிங் கொஞ்சம் தேவைப்படும் சார் என்றான் தேவாவிடம், எனக்கும் அதுதா சரியாப்படுது ஜானு ஒரு ஆறு மாசம் அனிஷ் இங்க இருக்கட்டும் அப்பறோம் நீ பொட்டிக் வைச்சு கொடு என்றான்.
ஜானகி யோசிப்பதைப் பார்த்து ,அனிஷிற்கு எல்லா வகையிலும் நான் பாதுகாப்பைத் தருகிறேன் என்றான் தேவா.
அரைமனதாக ஜானகியும் சரி என்றாள்.மகளை இனியும் விட்டால் திருமணத்தை தள்ளி வைக்க எண்ணி நான்கு வருடங்கள் கூட இவளை தவிக்க வைத்துவிடுவாள் என…
ஒரு ஆறுமாதம் தானே, சீக்கிரமாக முடிந்து விடும் ,அதற்குள் ஒரு நல்லவன் கையில் இவளை பிடித்துக் கொடுத்து விடலாம் என எண்ணினாள். அனிஷ் நாளைலே இருந்து வேலைக்கு வருவா என உத்திரவாதம் தந்து கிளம்பினாள்.
தேவாவும் வீட்டிற்கு செல்கிறேன் என கிளம்ப, அர்ஜூனின் போன் அடித்தது, அவன் பாட்டி மரகதம், “கண்ணா உனக்கு ஒரு பொண்ணை பார்த்து இருக்கேன்டா நல்ல லட்சணமா, அமைதியான பொண்ணா இருக்காடா எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு நீ ஒரு வாட்டி வந்து பாருடா உனக்கும் பிடிச்சா கல்யாணம் செஞ்சு வைச்சரே என மூச்சு விடாமல் பேசி முடித்தார்.
பாட்டி நான் முக்கியமான ப்சினஸ் ப்ராஜெக்ட்லே இருக்கே, ஆறு மாசமாகும் முடிய நான் வந்ததுக்கு அப்பறோம் நீங்க பார்த்து வைச்சுருக்கே பொண்ணை மேரேஜ் பண்ணிக்கறேன் என்று போனை கட் செய்தான்.
அவன் போனை வைத்ததும் ,மரகதம் அவசரமாக வெங்கடாச்சலபதியிடம் வேண்டுதல் வைத்தார், நடந்தே திருப்பதி வருவதாக……..
— கருவின் குரல் ஒலிக்கும்……
error: Content is protected !!