Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 20 2

பாட்டு முடியும் வரை அவளின் அரைகண் மட்டுமே திறந்திருந்தாள்..

கேரளா பெண்  மோஹினி   நடனம் அதற்கு ஏற்றார் போல் பால் வண்ண உடையணிந்து  ஆடினாள்,



Advertisement

ஜெனிதா அனைவரையும்  பார்த்து சிரித்தப்படியே ஆடினாள்.

Advertisement

கேரளா  பெண்கூட மேடை முன் அமர்ந்திருப்பவர்களை பார்த்தபடியே  சிரித்து நடனம்  ஆட…

Advertisement

வைஷு தன் உலகில் இருந்தாள்… அது அவளின் நடனம் உலகம் அங்கே அவள் மட்டுமே.. அவளின் அரை கண் மட்டுமே  திறந்திருக்க, அவளின் ஞாபகம்  பின்னோக்கி சென்றிருந்தது.. தன் சிறு வயதிற்க்கு சென்றிருந்தாள்  ஆடிக்கொண்டே,, கவனம் ஆட்டத்தில் இருந்தாலும் மனம் அவள் சிறுவயதில் முதல், முதல் நடனபள்ளிக்கு சென்றது நினைவு வர..

Advertisement

சிரித்துக்கொண்டு.. அவளின் சிரிப்பில் அத்தனை நிறைவு,, தன்னோட இடத்துக்கு வந்து விட்டேன் என்ற முகமலர்ச்சியோடு நடனம் ஆட..

அவளும் ஹோமாவும் முதல், முதல் ஜோடி நடனம் ஆடியதை நினைவு படுத்தியவள் துள்ளலோடு குதித்து  ஆடினாள்…

தோழிகள் இருவரும் கர்நாடக கலாச்ஷேத்திராவில்  ஒன்றாக நடனம் கற்றது, பின்பு  இருவரும் சேர்ந்து நடனமாடியது மனக்கண்ணீல் வர,, ஆனந்த தாண்டவம் ஆடினாள்..

வைஷுவின் ஒவ்வொரு நடனம் வேறு, வேறாக இருக்க பார்ப்பவர்களுக்கு பிடித்து இருந்தது.. புதிது, புதிதாக ஆடினாள் வைஷு..

அவள் கதக் நடனம் கற்றதில் இருந்து, இன்று  வரை அவளுக்கு தெரிந்ததை ஆடினாள்.. அவள் ஆடிய நடனம்  மனதில் இருந்து, உடலையை நடனத்திற்கு அர்ப்பணிப்பு  போல மென்மையாக உடலை லேசாக்கி மென்மையாக ஆட 2 மணி நேரம் கடந்திருந்தது…

ஜெனிதாவும், கேரளா பெண்ணும் இரண்டு மணிநேரமும் வேகமாக ஆடினார்கள் அடுத்து அவர்களால் வேகமாக ஆட முடியவில்லை மெதுவாக அவர்கள் பாட்டுக்கு ஏற்றவாரு ஆட..

 வைஷு முதலில் எந்த வேகத்தில் ஆடினாளோ அதே வேகத்தில் தான் இப்போதும் ஆட..

நிமிடங்கள் கடந்து கொண்டே இருந்தது 4 மணி நேரம் ஆகி இருந்தது, கேரளா பெண் டான்ஸ்சருக்கு ஆட முடியவில்லை, கால் வீங்கி போகின,  போட்டியில் வின் பண்ணியே தீருவேன்  என்று மேலும் அரை மணி நேரம் ஆடியவள் இதற்கு மேல் தன்னால் முடியாது என்று  கால் வழியில் கீழே அமர்ந்து விட…

அவளை அவர் குழுவினர் வந்து அழைத்து சென்றனர்..

இப்போது வைஷுவும், ஜெனிதாவும் மட்டும் போட்டியில், இருவரும் சோர்வாக தெரிய.. ஜெனிதா ஆடிய ஸ்டெப்பையே மறுபடியும், மறுபடியும் ஆட.

வைஷு அப்படி இல்லை அவளுக்கு தெரிந்த ஒவ்வொறு நடன அசைவுகளையும் வேறு படுத்தி ஆடினாள் நிதானமாக.. அவள் நடன அசைவுகள் புதுசாக இருக்க அனைவரும் வைஷுவை மட்டும் பார்த்தனர்..

ஜெனிதாவுக்கு  கோபம் வந்து விட்டது,, அனைவரும் வைஷுவை மட்டும் பார்க்க அதை திசை திருப்பவென்று இவளும்  வேகமாக புது ஸ்டெப்பை போட்டு ஆட.. வேகமாக ஆடியதாள்  ஜெனித்தாவுக்கு கால் வலிக்க ஆரம்பித்தது..

வைஷுவுக்கு ஆட  முடியவில்லை , கால் வலியெல்லாம் அவளுக்கு ஒரு விசயமே இல்லை,,  கர்ப கால தொந்தரவு போல் மயக்கம் வருவது போல் உணர..

கண்களை விரித்து  நன்றாக  தன் முன் அமர்ந்து இருந்த தன் கண்ணாளனை  பார்த்து மகிந்தாள்,, அவனை பார்த்துக்கொண்டே ரசித்து ஆடியனாள்,,  அவன் “வா”.. என்று கண்களால் அவளை  அழைக்க முடியாது என்பது போல், தலையாட்டியவளுக்கு  மயக்கம் வருவது போல் தலையாட்ட..

வீ. பிக்கு புரிந்து போனது, அவளால் முடியவில்லை என்று எழுந்து நின்றவன் கோபமாக அவளை முறைத்து பார்த்து கொண்டே  மேடை நோக்கி வர முயற்சி பண்ண.. இந்திரா தேவி “உட்காரு  விஜெய் இன்னும்  கொஞ்சம் நேரம் தான்”…

என்று கூற..

“மீ  அவளால முடியல, நான் கூப்பிட போறேன்” என்று மேடை நோக்கி வர… அவனுக்கு  மேடைக்கு  வர அனுமதி கிடைக்காமல் போக..

என்ன செய்வது என்று தவித்து நின்றான்..

வைஷுவுக்கு சுத்தமாக முடிவில்லை தன் கன்னத்தை தட்டி, தட்டி சுயநினைவுக்கு வந்து ஆடியவள்.. கடைசியாக  அவள் தன் இரண்டு கைகளையும்  தட்டி  வைஷு அவளது நண்பனுக்கு  சிக்னல் கொடுக்க,,,, ஒலி பெருக்கியின் பக்கத்தில் இருந்த வைஷுவின் ஆள்,பாட்டின் ஒலியை  மிக அதிகமாக, வைக்க.

அனைவரும் என்ன  பாட்டு சத்தம் அதிகமாக இருக்கிறது, என்று திரும்பி பார்த்து நடனத்தை பார்க்க.. வைஷு தன் கன்னத்தை வேகமாக தட்டி அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தவள். பாட்டின் வேகம் அதிகமாக  இருந்ததாள்,, அவள் ஒரு  நீண்ட மூச்சை இழுத்து விட்டு. வேகமாக ஆட தயார் ஆக.. அவளுக்கு தோதாக கதக் சாங் வேற ஒலி பெருக்கில்  ஒலிக்க. பிடித்து விட்டாள் வைஷு..

இப்பா பாருடா நம்ம ஸ்பிட என்றவள்..

கணவனை பார்க்க அவனோ கொல வெறியில் இவளை பார்த்தான்..

அவனை பார்த்து கண்ணடித்து சாரி பாவ என்றாள். மௌன மொழியில் கண்களால் அவனிடம்  பேசி, குஷியாகி  தனக்கு தானே  எனர்ஜியை ஏற்றினாள்.

வீ. பிக்கு இவள் என்னவோ செய்ய போகிறாள் என்று, ஏண்டி என்பது போல் வைஷுவை  பார்க்க..

அவளின் தலைக்கு மேல்  அணிந்து இருந்த, ஸ்சாலை ஆடிக்கொண்டே கலட்டியவள் அதை தன் தோள்ளோடு, இடுப்பில் சேர்த்து  இருக்கமாக   கட்டியவள். ஜெனிதாவை ஒரு பார்வை பார்த்தாள், இப்போ பாருடி என் ஆட்டத்தை என்று.. அவ்வளவு தான்..

 மின்னல் வேகத்தில் கதக் நடனத்தை சுலண்டு, சுற்றி வேகமாக ஆட.. ஜெனிதா வைஷு பார்த்து இவளுக்கு என்னாச்சு ஏன் இவ்வளவு வேகமாக ஆடுற என்றவள், வைஷுவை பார்த்துக்கொண்டே ஆட.. பாட்டின் சத்தமும், இவளின்  நடன ஆட்டமும் வேகமாக இருக்க.

வைஷு வின் ஆட்டம் பேய் ஆட்டம் போல்  அதிவேகமாக  இருக்க..

ஜெனிதா தன் நடனத்தை நிருத்தி விட்டு வைஷுவின் நடனத்துக்கு  காலில் தாளம் போட்டு ரசித்து நின்று விட்டாள்..

ஜெனிதாவுக்கு தான் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் வைஷுவின் நடனத்தில் ஒன்றி விட..

ஜெனிதாவின் நடன குழுவினர் அவளை அழைத்து திட்ட. அதை கூட அவள் காதில் கேட்கவில்லை வைஷு நடந்தை அனைவரும் பார்த்து ரசித்து நிற்க…

போட்டி முடிந்தது என்று பெரிய பஜர் ஒலி கேட்டுதான், ஜெனிதாவுக்கு  நான் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறோம் என்று சுயநினைவு வர..

ஐயோ என்றவள் தலையில் கைவைத்து தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினாள்.

வைஷுவுக்கு பஜர் அடித்தது கூட கேட்கவில்லை அவள் ஆட்டத்தையும் நிறுத்தவில்லை..

பின்னாடி உள்ள பெரிய திரையில்,,  திஸ்  இயர்  நம்பர் ஒன் அகாடமி ஐ. டி. டி  ப்பிரம் இந்திரா தேவி டான்ஸ் அகாடமி என்று ஒலிப்பெருக்கியில் சொன்னதும் தான் கண்விழித்தாள் வைஷு,, ஆடியபடியே ஜெனிதாவை தான் முதலில் பார்த்தாள்.. அவள் நின்று இருப்பதை பார்த்து “வை” என்பது போல் புருவத்தை தூக்க..

“யூ ஆர் பெஸ்ட் டான்சர்”  என்றவள். திரையை காட்ட அங்கே வின் சோ வைஷுஎன்று அவளின் புகைபடம் வர…  ஜெனிதா  வைஷுவுக்கு பாய் சொல்லிவிட்டு கீழே சென்று விட்டாள்…

வைஷு நிமிர்ந்து  நேராக பார்க்க.. இந்திரா  தேவி  கண்ணீரோடு மருமகனை பார்த்து கைதட்டிக்கொண்டிருந்தார்.. கேமரா வெளிச்சம் அவள் மேல் பலிர் என்று, பட….

அவள்  கால்கள் துவண்டு, அவள் விழும் முன் அவளை தாங்கி பிடித்திருந்தான் வீ. பி..

மயக்கம் வருவது போல் வைஷுவுக்கு இருக்க.. கணவன் தாங்கி பிடித்ததும், அவனை  பார்த்து “பாவா, சாரி பாவா”  என்று மயங்கினாள்.

வைஷுவை கையில் ஏந்தி கொண்டு வந்தவன்,, இந்திராதேவி பார்த்து “நான் ஹாஸ்பெட்டல் போறேன் நீங்க இங்கே எல்லாத்தையும் முடிச்சிட்டு வாங்க”  என்றவன்,, வேகமாக சென்று அவளை காரில் ஏற்றியவன் காரை கிளப்பிக் கொண்டு  ஹாஸ்பெட்டலுக்கு வர..

   டாக்டர் வைஷு  செக்பண்ணி பார்த்துவிட்டு,, “பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை,, ஒரு டிரிப்ஸ் போட்ட சரியாகிடும், கால் ரொம்ப வீங்கி இருக்கு, கால் நரம்பு எல்லாம் கொஞ்சம் வீக்கா இருக்குற மாதிரி இருக்கு, நடக்காம பாத்துக்கோங்க”   என்று சொல்ல,..

வீ. பி டாக்டரிடம் வைஷு கர்பமாக இருப்பதை சொல்ல.. அதற்கு உண்டான பரிசோதனையையும் பார்த்து விட்டு, “பயப்பட வேண்டாம், எல்லாம் நார்மலா தான்  இருக்கு” என்று  சொல்லி சென்று விட்டார்..

இந்திரா தேவி நம்பர் ஒன் அகாடமி கோப்பையை  கையில் ஏந்திய வாரு ஹாஸ்பெட்டல் உள்ளே வந்தவர் வீ. பியை பார்த்து.. “என்னாச்சு விஜெய் வைஷுவுக்கு”… என்றதும்..

தாயை பார்த்து முறைத்தவன் “உங்களை மாதிரியே, உங்க மருமகளும் வந்து இருக்க, நீங்க எப்படி என்னை சின்ன வயசுல என்னை வீட்டுல  விட்டுட்டு அகாடமி போனீங்களோ, அதே மாதிரிதான் இவ,, என் பிள்ளைகள் அவ வைத்துல இருக்குறப்பவே டான்ஸ், டான்ஸுனு  கிறுக்குப்  பிடிச்சு திரியுறா”  என்றான்..

“என்ன  சொல்லுற வீ. பி வைஷு வைத்துல பிள்ளையா?. அவ மாசமா இருக்காளா?”…

“அவ  என் பிள்ளையை  வைத்துல வச்சுகிட்டு தான், நேத்து ஸ்கை டான்ஸ்  ஆடி சாகசம் பண்ணி,  இன்னைக்கு நான் வேண்டாமுன்னு  சொல்லியும், என் பேச்சையும் கேட்கமா டான்ஸ் ஆடி  இப்படி வந்து படுத்து இருக்க, அவளை” .. அடிப்பது போல் கையை முருக்கியவன்.. பல்லை கடித்து கோபத்தை அடக்க.

நாகில்லி மகனின் தோளை தொட..

“நானா”  என்றவன் அவரை  அணைத்துக்கொண்டு.. “நா பிள்ளடு, நானா, ்அவ என் பிள்ளைகளை வையித்துல  வச்சுகிட்டு டான்ஸ் ஆடி இருக்க.. அவளுக்கு, என் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன ஆவேன்,, அது ஏன் அவளுக்கு புரியல இந்த டான்ஸ் இப்போ முக்கியமா,, என்றவன் நாகில்லியை அணைத்து கண்கலங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!