Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Suyambu

Suyambu 2

சுயம்பு-2 
 
நேரம் போவதே தெரியாது தன்னை மறந்து நின்றவளை  அங்கு வந்த நர்ஸ் கூப்பிட்டும் பதில் வராததால் அவளை தொட்டு “க்யா ஹுவா மேம்.(என்னாச்சு மேம்என்றார். 
 


Advertisement

உடனே தன்னிலை அடைந்த உத்ரா அந்த நர்ஸிடம் “வார்ட் பாயை கூப்பிடுங்க ” என சொல்லி விட்டு அங்கிருந்த சேரில் சோர்ந்து போய் அமர்ந்தாள்.  
 
வார்ட் பாய் வந்ததும் அவரிடம் “பெட்டில் இருக்கறவரை மெல்ல  கொஞ்சம் என்னை பாத்த மாறி திருப்புங்க..” என ஹிந்தியில் சொன்னாள். 

Advertisement

 

Advertisement

அப்படியும் அவர் சற்று வேகமாக திருப்ப “மெல்ல மெல்ல திருப்புங்க” என மறுபடியும் சொன்னாள். 
 
மயக்கத்திலும் வலியில் அவன் முகம் சுருங்கியதுஅவரை சற்று நகர சொல்லி மெதுவாக பிறந்த குழந்தையை பரிசோதிப்பது போல அவனின் கைகால்களை திருப்பி திருப்பி நிதானமாக பரிசோதிக்க ஆரம்பித்தாள்.  

Advertisement

 
இடது கை மூட்டில் ப்ராக்சர்இடது  கணுக்காலில் தசை கிழிந்திருக்கும் என்பதை செக் செய்து உணர்ந்தவள் அவனுக்கு கம்ப்ளீட் ஸ்கேன் எடுக்க உடனே சொன்னாள் 
 
அவனை ஸ்கேன் செய்ய அழைத்து போனதும் ..”மனு உனக்கு என்னாச்சு..நீங்க எல்லாரும் நல்லா இருப்பீங்கங்கற நம்பிக்கைல தானே டா நான் என்னை மறைச்சுக்கிட்டு இந்த ஊருக்கே வந்து இருக்கேன்..” 
 
யாருமே தெரியாத இந்த ஊருக்கு எதுக்கு வந்திருக்க..இப்படி நினைவே இல்லாம கிடக்கறீயே 
இத்தனை வருஷம் கழிச்சு உன்னை இப்படியா நான் பாக்கணும்..” என மனதுக்குள் கதற ஆரம்பித்தாள் 
 
அடுத்த இரண்டு மணி நேரத்தில் ரிசல்ட் வந்ததுரிசல்ட் அவள் நினைத்தது போலவே இருந்தது 
 
அதை எடுத்து கொண்டு சீப் டாக்டரின் அறைக்கு சென்று கதவை தட்டினாள்.  
 
அவரின் அனுமதி வந்ததும் உள்ளே சென்றவளை சீஃப் வரவேற்று உட்கார சொன்னார்.   
 
ரிப்போர்ட்களை அவரிடம் குடுத்து பார்க்க சொன்னாள்அவர் பார்த்து கொண்டே “வாட் இஸ் யுவர் ஒப்பினியன் உத்ரா..” என கேட்டார். 
 
டாக்டர்ரைட் சைட் ஹேண்ட் அண்ட் லெக் இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட்..ஹி ஹேஸ் ப்ராக்சர்ட் ஹிஸ் லெப்ட் எல்போலிகமண்ட் டேர் ஆன் ஹிஸ் லைப்ட் ஆங்கிள்..தட் இஸ் பிகாஸ் ஹி மே ஹேவ் பாலன் ஆன் தட் சைட்..(டாக்டர் வலது கைகால் எல்லாம் சரியா இருக்கு..இடது கை மூட்டு உடைந்திருக்குஇடது கணுக்கால் தசை கிழிந்திருக்குஅவர் கீழே விழும் போது இடது பக்கமா விழுந்திருக்கலாம்.. 
அதனால தான் அந்த பக்கம் மட்டும் பாதிப்பாகி இருக்கு)” 
 
நோ..ஹெட் இன்சூரிஸ்டின்டன் சீ எனி க்ளாட் இன்  ப்ரைன்ப்ரீத்திங் இஸ் அப்சலூட்லி நார்மல்நோ நீட் ஃபார் ஆக்ஸிஜன்வைட்டல்ஸ் ஆர் நார்மல்..செக்ட் ஹிஸ் ஐஸ்..இட் இஸ் ஆல்சோ நார்மல் அண்ட் ரொட்டேட்டிங்..எவர்திங் இஸ் ஃபால்ட்லெஸ்..பட்..டோண்ட் நோ தி ரீசன் பார் ஹிஸ் அன்கான்சியஸ்னெஸ்..( தலையில் அடிபடலமூளையில் எந்த ரத்தக்கட்டும் இல்லை..சுவாசம் சரியா இருக்கு..இதய துடிப்பு சரியா இருக்கே..பார்வையும் சரியா இருக்கு..எல்லாமே சரியா இருக்க ஏன் இன்னும் மயக்கத்துலேயே இருக்கார்னு தெரியல)” என சொல்லி முடித்தாள்.  
 
அவள் சொன்னதை கேட்டவர்..தன் சேரில் இருந்து எழுந்து கை தட்டி “திஸ் இஸ் உத்ரா தி பர்பெக்ஷ்னிஸ்ட்” என பாராட்டினார்.  
 
அதை கேட்டு புன்சிரிப்புடன் “இட்ஸ் மை ட்யூட்டி டாக்டர்” என பதில் சொன்னாள்.  
 
யூ ஆர் சோ..டெடிகேடட் 
ஹம்பிள்..மார்க் மை வேர்ட்ஸ்யூ வில் கோ ப்ளேசஸ்..(நீ உன்னுடைய வேலையை எளிமையா,ரொம்ப ஈடுபாடோடு செய்கிறாய்..இதனால் உயர்ந்த நிலையை அடைய போகிறாய்)” என மறுபடியும் பாராட்டியவர்..”ஹவ் கேன் வி ஐடன்டிபை ஹிம்..தேர் இஸ் நோ..ஐடி வித் ஹிம்..ஹவ் கேன் வி இன்பார்ம் ஹிஸ் பேமிலி..இட்ஸ் ரியலி  மிஸ்ட்ரி ட்டூ மீ..(அவர் கிட்ட எந்த ஐடியும் இல்லாததால அவரை யாருனு அடையாளம் தெரிஞ்சுக்கறது குழப்பமா இருக்கே..எப்படி அவங்களோட குடும்பத்துக்கு தகவல் தர்றதுனே தெரியலயே..)” என கவலையோடு சொன்னார்.. 
 
அவரின் வருத்தமான வார்த்தைகளை கேட்டவள்.. வேதனையோட அவரை பார்த்தவள் தன்னை மறந்து சற்றும் யோசிக்காமல்.. “அபிமன்யு.. கார்டியாக் சர்ஜன் ப்ரம் தமிழ்நாடு..ரேங்க் ஹோல்டர்..டிட் ஹிஸ் மாஸ்டர்ஸ் இன் இம்பீரியல் காலேஜ் ஆப் லண்டன்போஸ்ட் டாக்ட்ரேட் இன் ஹார்வேர்ட்ஹிஸ் எல்டர் சிஸ்டர் ஸ்வேதாஸ் கான்டெக்ட் நம்பர் இஸ் 9×××××××0″ என ஒப்பித்தாள்.  
 
அவள் சொன்னதை  அனைத்தையும் கேட்ட சீஃப் டாக்டர் அவளை அதிர்ந்து பார்க்க அவள் எங்கோ பார்த்தபடி இருந்ததை பார்த்துஅந்த அபிமன்யு ஏற்கனவே உத்ராவுக்கு நன்கு அறிமுகமானவனாக இருந்திருக்க வேண்டும்தற்போது தொடர்ப்பில்லாமல் இருக்க இருவரின் இடையே ஏதாவது பிரச்சினையாக இருக்கும் என்பதை சரியாக கணித்தார் 
 
இப்போது உள்ள சூழ்நிலையால் அவனுடைய உடல்நிலை பாதிப்பின் வேதனையால் உத்ரா தன்னிலையில் இல்லை,  என்பதை புரிந்து கொண்டார். 
 
பெல் அடித்து நர்ஸை வரவழித்து அவளுடைய ரூமில் அழைத்து போய் படுக்க வைக்க சொன்னார்.  
 
அவள் சொன்ன கான்டாக்ட் நம்பரை தன்னுடைய போனில் டைப் செய்து கால் செய்தார். 
 
போன் எடுத்ததும் அது அபிமன்யுவின் அக்கா ஸ்வேதாவா என கேட்க அந்த பக்கம் ஆம் என சொன்னதும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் ஷில்லாங்கில் இருந்து பேசுவதாக சொன்னார்.  
 
அதை கேட்டு குழப்பமான ஸ்வேதா எதற்காக தன்னை ஷில்லாங்கில் இருந்து ஒருவர் அழைக்க வேண்டும் அதுவும் அபிமன்யு அக்கா என ஏன் கேட்க வேண்டும் என்ற குழப்பமான யோசனையில் அமைதியாக இருந்தாள். 
 
டாக்டர் மல்ஹோத்ரா “மிஸ்டர் அபிமன்யு ஹஸ் மெட் அப் வித் அன் ஆக்ஸிடெண்ட்..ப்ராக்சர் இன் லெப்ட் ஹேண்ட் எல்போ அண்ட் லிகமண்ட் டர் இன் லெப்ட் ஆங்கிள்(அபிமன்யுவுக்கு விபத்து நடந்து இடது கை உடைந்துள்ளதுஇடது கணுக்கால் தசை கிழிந்துள்ளது) ” என சொல்லி முடித்தார். 
 
அதை கேட்டு அதிர்ந்த ஸ்வேதா “ஹவ் இஸ் ஹி நவ்” என அழுதபடி கேட்டாள். 
 
மேம்..ஹி இஸ் பைன்..எவ்ரி திங் இஸ் நார்மல் அண்ட்  அன்டர் கன்ட்ரோல்..ப்ளீஸ் டோண்ட் ஒரி” என அவளை சமாதானம் செய்தார். 
 
தேங்க்யூ..டாக்டர்.. தேங்க்யூ சோ..மச்..வி வில் ரீச் தேர்..ஆஸ் எர்லி அஸ் பாஸிபில்..” என சொல்லி போனை வைத்தாள். 
 
உடனே தன் கணவன் கவுதமை தேடி தோட்டத்துக்கு போகஅவன் குழந்தைகளிடம் விளையாடி கொண்டே திரும்பி ஸ்வேதாவின் முகத்தை பார்த்தவன்..ஏதோ சரியில்லை என புரிந்து தன் இரட்டையர்களை அம்மாவிடம் கொண்டு குடுத்து விட்டு வந்தான் 
 
ஸ்வேதாவின் அருகில் வந்து “என்னாச்சு..ஸ்வே..ஏன் ஒரு மாதிரியா இருக்க” என கேட்க.. 
உடைந்து அழுதவள் “நம்ம மனுக்கு ஆக்ஸிடெண்ட்டாம்லெப்ட் கை ப்ராக்சர்..கால்ல லிகமண்ட் டேராம்..” 
 
நேத்தி நைட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்களாம் 
இன்னும் கான்சியஸே வரலையாம்..இப்ப தான் ஷில்லாங்கில இருந்து டாக்டர் மல்ஹோத்ரானு ஒருத்தர் போன் பண்ணார்..” என்று அழுது கொண்டே சொன்னாள். 
 
அதில் பெரிதாக அதிர்ந்தாலும் காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தவனை பார்த்து “என்ன கவுதம்..மனுக்கு ஆக்ஸிடெண்ட்னு சொன்ன பிறகும் கொஞ்சம் பதட்டமே இல்லாம அமைதியா இருக்கீங்க” என கோபமாக கேட்டாள். 
 
அவளை தன் பக்கத்தில் உட்கார வைத்து “ஒரு நிமிஷம் அமைதியா இரு..ஸ்வே..எனக்கு சில விஷயங்கள் இன்னும் தெளிவாகல” என்றவன் 
 
நம்பர் ஒன் மனு கிட்ட நாம பேசி மூணு வருஷமாகுது..சரியா..அப்ப அவனோட போன் கால் லிஸ்ட்ல நம்மோட நம்பர் இருக்காது…” 
 
நம்பர் ட்டூ அவன் ஷில்லாங்க் போயிருக்கறது நமக்கு தெரியவே தெரியாது..அதுக்கான வாய்ப்பே இல்லை. 
 
அப்டி இருக்கறப்ப..யாரு அந்த மல்ஹோத்ரா கிட்ட உன்னோட நம்பர் குடுத்திருக்க முடியும்..”  
 
யாராவது எதாவது ப்ளே பண்றாங்களாஇல்லை இதுல ஏதோ விஷயம் இருக்குனு எனக்கு தோணுது…” 
 
அது எப்டி இது எதையும் பத்தி யோசிக்காம..நீயும் நார்மல் ஆட்கள் மாதிரி எமோஷனலா பிஹேவ் பண்ற…” 
 
நீ ஒரு கைனிக்ங்கற மறந்து போயிட்டியா..பாவம் உன்னோட பேஷண்ட்ஸ்” என அவளை கேலி செய்ததும் லேசாக ஸ்வேதா சிரிக்க.. 
 
சரி..சரி..அந்த நம்பர் குடு..நான் அந்த மல்ஹோத்ரா கிட்ட பேசறேன்” என சொல்லி நம்பர் வாங்கி மல்ஹோத்ராவுக்கு போன் செய்தான். 
 
அவர் போன் எடுத்ததும் கவுதம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு.. அபிமன்யு பற்றி கேட்டான். 
 
அவரும் ஸ்வேதாவிடம் சொன்னதையே சொன்னார்.  
அவர் பேசி முடித்ததும் கவுதம் “டாக்டர்  ஹேவ்  டவுட்..”என கேட்டான். 
 
மல்ஹோத்ரா “எஸ் கோ அஹெட்..”என்றதும்.. 
 
வி ஆர் ப்ரம் சௌத் பார்ட் ஆப் இந்தியா..வி டோன்ட் ஹவ் எனி ப்ரெண்ட்ஸ் தேர்… மை ப்ரதர் இன் லால் இஸ் இன் அன்கான்சியஸ் ஸ்டேஜ்….ஆல் ஆப்  சடன்ஹவ் டூ யூ நோ மை ஒய்ப்ஸ் நம்பர்… இஸ் ரியலி பஸில்டு அண்ட் சர்ப்ரைஸைஸ் மீ..(நாங்க தென்னிந்தியால இருக்கோம்எங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் அந்த ஊர்ல இல்லை..அப்பறம் எப்படி என் மச்சான்னு அடிபட்டிருக்குனு சரியா என் பொண்டாட்டிக்கு போன் பண்ணிங்க..அவ நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சுதுனு எனக்கு புதிராவும் ஆச்சர்யமாகவும் இருக்கு)”என தன் சந்தேகத்தை கேட்டான்.  
 
அதை கேட்ட சீஃப் டாக்டர் மல்ஹோத்ரா மகிழ்ச்சியான குரலில் “இட்ஸ் அவர் ஆர்த்தோ டாக்டர் உத்ரா செட் அபவுட் ஹர்..” என சொன்னதை கேட்டதும்.. 
அந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்த கவுதம் “டாக்டர்.. காண்ட் ஹியர் யு க்ளியர்லி….கேன் யு கம் அகைன் பீளீஸ்” என கேட்டான். (தொடரும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!