Skip to content
Post Views: 1,449
கருவின் குரல்
அத்தியாயம் 24
ஜானகி தேவாவிடம் போன் செய்து விசாரித்துக் கொண்டாள்.அவளிடம் திக்கி திணறி கூறி முடித்தான்.அவளும் அவனை இதற்கு மேல் கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம் என விட்டு விட்டாள்.
வெள்ளிக்கிழமை சுப்பிரமணிய சுவாமி சன்னிதியில் இருவீட்டு முக்கிய சொந்தங்கள் முன்னிலையில் வினய்-க்கும்,ஸ்வேதாவிற்கும் திருமணம் நடந்தது.
வயிற்றில் பிள்ளையுடன் திருமணம் நடக்க கோவிலுக்கு வந்தவர்கள் அவர்களை வித்தியாசமாக பார்த்தனர்.சிலர் நீயுஸ் இல் வந்தவர்கள் என தங்களுக்குள் முனுமுனுத்துக் கொண்டே இவர்களை பார்த்தனர்.
Advertisement
தாலி கட்டிய உடன் அந்த இடத்தில் இருந்து பெண்ணும் மாப்பிள்ளையும் உடனடியாக வீடு சென்றனர்.
மீதமுள்ளவர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“அதுல் நீயும் அவங்க கூட வீட்டுக்கு போ, காலையிலே நேரமா எழுந்தது உனக்கு டையர்டா இருக்கும்”, என மைதிலி கூற மறுத்து அங்கேயே அமர்ந்து விட்டாள்.
Advertisement
அங்குமிங்கும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த அர்ஜூனை பார்வை விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
அவன் கடமையிலேயே கண்ணாக இருந்தான்.
ஐயர், வாத்தியங்களுக்கு சென்டில்மென்ட் செய்வது,
வந்திருப்பவர்களுக்கு அமர இடவசதி செய்து தருவது,சாப்பிட ஏதாவது தருவது.
பெண்ணும்,மாப்பிள்ளையும் கிளம்பிய உடன் பாதி பேர் செல்ல அவர்களை கோவில் வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பது என பிஸியாக இருந்தான்.
அதனால் அதுல்யாவின் பார்வையை அவன் கவனிக்க வில்லை. கவனித்தாலும் ஒரு சிநேக புன்னகை மட்டமே சிந்தியிருப்பான்.
Advertisement
ஒருவழியாக அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.அளவான சொந்தங்களை மட்டும் அழைத்திருந்ததால் வீட்டிலேயே விருந்து பரிமாறப்பட்டன.
தேங்காய் ஆலையில் இருந்தும் மைபேசனிலிருந்தும் வேலையாட்கள் மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.அவர்களும் கிப்டுடன் வந்து அந்த இடத்தை அமர்க்களப்படுத்திவிட்டு சாப்பிட அமர்ந்தனர்.
மைபேசனில்,”அனிஷ் ஏன்டி இப்படி பிடிவாதம் பண்றே, இன்னைக்கு ஒருநாள் உன் விரதத்திற்கு லீவு விடலாம் இல்ல, நீ விரதம் இருக்கேனு இப்பவே எந்தசாமியாது வரம் கொடுக்கப் போகுதா என்ன, என பவித்ரா அனிஷிடம் வாதாடிக் கொண்டிருந்தார்.
விசில் அடித்துக் கொண்டே அங்கிருந்த கண்ணாடியை பார்த்து தலைவாரிக் கொண்டிருந்தான் கணேஷ்.
கணேஷ்,” மேக்கப் செஞ்சது போது வந்து அனிஷை சம்மதிக்க வை என்றாள்”, பவி
அனிஷ் இன்னைக்கு ஒருநாள் தானே வா போயிட்டு வரலாம்.நீ வந்த ஜாலியா இருக்கும் என்றான்.
இவர்களுடன் அங்கு போக அவளுக்கும் கொள்ளை ஆசைதான் ஆனால் அதற்கு தேவா இவளின் தந்தையாக இருந்திருக்க கூடாது.
மைதிலி இவளின் சித்தியாக இருந்திருக்க கூடாது.அதுல்யாவும், வினயும் இவளின் தங்கை தம்பியாக இருந்திருக்க கூடாது.
தம்பியின் திருமணத்தில் ஓடியாடி முன்னிற்று வேலை செய்து, அவன் சந்தோசத்தை பார்க்க ஆசைதான். ஆனால் காலம் அவர்களை எதிர்எதிர் திசையில் அல்லவா நிற்க வைத்துவிட்டது.
உண்மையை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை.தனக்குள்ளே புதைத்து வைக்கவும் முடியவில்லை.
பவியும் கணேஷும் உண்மை அறியாமல் அவளை தங்களோடு அழைத்துக் கொண்டிருந்தனர்.
அங்கே சென்றால் அவர்களின் ஏளனப் பார்வையை பெற நேரிடும்.அதுமட்டுமல்ல அன்றிரவு தனக்கும் தாய்க்கும் நடந்ததை இவ்வளவு வருடங்களாக அவளால் ஜீரணிக்கவும் முடியவில்லை.
அதை இன்று நினைக்கும்போதும் நெஞ்சே அடைப்பது போல அவளுக்கு இருக்கும். உறுதியாக நான் வரலே நீங்க போய்ட்டு வாங்க என்று கூறிவிட்டாள்.
அந்த நேரம் கணேஷிற்கு போன் வர அவன் கட் செய்து விட்டு,அனிஷ் ஒருவாட்டி எங்களுக்காக வரக்கூடாதா என்றான்.
இந்தமுறை பவி போன் ஒலிக்க அவள் எடுத்து அர்ஜூன் அண்ணா சொல்லுங்க என்றாள்.
என்ன பவி இன்னமும் வராம இருக்கீங்க? கணேஷ்க்கு போன் செஞ்சே கட் பண்ணி விடறான் எங்கே இருக்கீங்க? என்றான்.
பவி போன் ஸ்பீக்கரை ஆன் செய்து டேபிள் மேல் வைத்தாள். கணேஷ்,”மாப்பிள்ளை என்னடா ஸ்பெஷல் அங்கே? என்றான்.
எல்லாமே ஸ்பெஷல்தான்,நான் உனக்காக நாலு மைசூர் பாகு எடுத்து வைச்சுருக்கே சீக்கிரமா வா என்றான்.
“அர்ஜூன் இந்த அனிஷ் வரமாட்டேனு அடம் பிடிக்குதுடா” -கணேஷ்
அன்று அனிஷ் அப்பா என கூறியது,நேற்று சக்கரவர்த்தி ஜானகியை தேவா ஏமாற்றியதாக கூறியது எல்லாம் ஒரு நிமிடம் கண்முன் வந்து போனது.
ஏதோ ஒரு வலிநிறைந்த கதை உள்ளது என்ன இருந்தாலும் அவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என எண்ணினான்.
போன் ஸ்பீக்கரில் இருப்பது தெரியாமல் யாரு வந்தா என்ன?வரலீனா என்ன? நீங்க ரெண்டு பேரும் கிளம்பி வாங்க என்றான்.
என்ன இவன் இப்படி சொல்கிறான் என இருவருக்கும் சங்கடம்.
அதற்கு மேல் தொடராமல், “சரி நாங்க வரோம்னு போனை கட் செய்து விட்டனர்”.
இவனுக்கு எவ்வளவு திமிரு இருந்தா இப்படி சொல்லுவா?என்னைக்காது என்கிட்ட மாட்டுவான் அப்ப பார்த்துக்கறே என மனதினுள் கருவிக் கொண்டாள் அனிஷ்.
இனி எவ்வளவு கெஞ்சினாலும் அவள் வரப்போவது இல்லை என உணர்ந்து, பிரிய மனமில்லாமல் அவளை விட்டுச் சென்றனர்.
ஒருவழியாக விருந்து நல்லபடியாக முடிந்தது. எல்லோரும் வழக்கமான வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.
மைபேஷனில் மேரேஜ் கான்ட்ராக்ட் முடிந்துவிட்டது.கணேஷ் மெல்ல அர்ஜூனின் காதை கடிக்க ஆரம்பித்தான்.
மாச்சா,எங்காவது ட்ரிப் போய்ட்டு வரலாம் என…. நீண்ட அலசலுக்குப் பின் கொடைக்கானல் போவதாக முடிவு செய்யப்பட்டு பயணத்திற்கான பர்சேஸ் தொடங்கியது.
இந்த முறையும் அனிஷ் வரலே என முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள். பவியும் கணேஷும் விடுவதாக இல்லை.
வீட்டிற்கே சென்று ஜானகியிடம் பர்மிஷன் வாங்கி கூட்டிச் சென்றனர்.
பசுமையான மலைகள்…
மெல்லச் சுழலும் மேகங்கள்… அருவியின் சத்தம் கூட அங்கே மென்மையாக இருந்தது.
அர்ஜூன் காரை ஓரமாக நிறுத்தினான். நால்வரும் இறங்கி அங்கிருந்த இயற்கை அழகை ரசித்தனர்.
கணேஷ் தனது மொபைலை எடுத்து செல்பி எடுத்துக் கொண்டான்.
சிறிது நேர பயணத்திற்கு பின் அங்கிருந்த ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்தனர். பிறகு ஒரு ஏரிக்கரையை அடைந்தனர்.
இது பவிக்கும் கணேஷிற்கும் தனிமையை தர வேண்டிய நேரம் என உணர்ந்து அர்ஜூனும், அனிஷும் அவர்களை முன்னால் விட்டு மெதுவாக இவர்கள் இருவரும் நடந்தனர்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லைபேச கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.அந்த இடம் முழுவதும் மெளனமே ஆக்கிரமித்தது.
தனித்து செல்லலாமா அல்லது இப்படியே தொடரலாமா? என இருவரும் கலவையான எண்ணங்களுடன் நடந்தனர்.
ஏரிக்கரையில் நடந்து கொண்டிருந்த போது
அர்ஜூனின் கால் தடுமாறி,கீழே விழப்போனான்.
அனிஷ் உடனே அவன் கையை பிடித்து,கீழே விழாதவாறு சப்போர்ட்டாக நின்றாள்.
அந்த தொடுதலில் உரிமையில்லை
ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது.
அனிஷ் மெல்ல அவனது கையை விட்டாள்.காற்று மெதுவாக வீசியது.
பேசினால் அந்த அமைதி கலைந்துவிடும் போல இருந்தது.
இருந்தும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அர்ஜூன் அவளை விட்டு விலகி முன்னால் நடந்தான்.அனிஷ்கா தேவி அவனுக்கு பின்னால் இரண்டு அடிவிட்டு நடையைத் தொடர்ந்தாள்.
அவன் திரும்பிப் பார்க்கவில்லை.
ஆனால் அவள் நடக்கும் சத்தம் நின்றால்
அவனும் நின்றுவிடுவான்.
அவளுக்கு அது புரிந்தது. “நான் பின்னால இருக்கிறேனா இல்லையானு கவனிச்சிட்டே நடக்கறானா? என தன்னுள் எண்ணிக் கொண்டாள்…”
வழியில் ஒருவயதான பெண்மணி குறிஞ்சிப்பூவை விற்றுக் கொண்டிருந்தாள்.அது பார்ப்பதற்கு அழகாக இருந்தது,இதுவரை அனிஷ் குறிஞ்சிப்பூவை பார்த்தது இல்லை.
கண்கள் விரிய ஆச்சரியத்துடன் அந்த பெண்ணிடம் பூவின் விலையை கேட்டு,ஜிபே செய்ய போனை எடுத்தாள்.
அந்த மூதாட்டி என்கிட்ட அந்த வசதியெல்லா இல்லமா,கையிலே காசு கொடு என்றார்.
பாட்டி என்கிட்ட பணம் இல்ல இதுதா இருக்கு,என் ப்ரெண்ட்ஸ் அந்தப் பக்கம் போய்ருக்காங்க அவங்க வந்தது நான் காசு கொடுத்திட்டு உங்ககிட்ட பூ வாங்கிக்கறே என்று திருப்பி கொடுத்தாள்.
வியாபாரம் கைநழுவி போக பாட்டியின் முகத்தில் சோகம் தோன்றியது.
சட்டென அர்ஜூன் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து பூவை வாங்கிக் கொள்ள சொன்னான்.
அனிஷ் எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.ஜானகியுடன் பூண்டு வியாபாரத்திற்கு செல்லும் போது எடை போட்ட பின் வேண்டாம் என வாடிக்கையாளர் சொல்லும் போது வரும் வலியை அனிஷ் உணர்ந்துள்ளாள்.
அதனால் அர்ஜூன் காசு கொடுத்ததும் வாங்கிக் கொண்டாள். கணேஷூம் பவியும் வந்தவுடன் இவன் பணத்தை செட்டில் செய்து விடலாம் எனவும் எண்ணிக் கொண்டாள்.
வானம் எப்போது மாறியது யாருக்கும் தெரியவில்லை.மழை மெதுவாக பெய்ய ஆரம்பித்தது.இருவரும் ஒரு மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டனர்.
அர்ஜூன் பரந்து விரிந்த ஏரிக்கரை மீது தன் பார்வையை செலுத்தினான்.அனிஷ் விழும் மழைத் துளிகளை ரசித்து நின்றாள்.இருவருக்குள்ளும் மெளனம் மட்டுமே…
அவர்கள் காதல்
நடையில்,
நிறுத்தத்தில்,
பார்வையில்,
மௌனத்தில்
மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது.
மாலை அவர்கள் தங்கி இருந்த ரிசார்ட் சார்பில் இரவு உணவும், வந்திருந்தவர்களுக்கு ஒரு கேம்மும் ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலில் நால்வருக்கும் கலந்து கொள்ள விருப்பம் இல்லைதான் ரிசார்ட் மேனேஜர் வற்புறுத்த கலந்து கொண்டனர்.
வழக்கமாக மியூசிக்கல் சேர் விளையாட்டுதான் ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட் வைக்கப்பட்டிருந்தது.
அதை மேனேஜர் விளக்கினார்.
பாட்டு இடையில் நிறுத்தப்படும் போது யார் நாற்காலி இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும்.இது ஆட்கள் எண்ணிக்கையை பொறுத்து மூன்று நான்கு சுற்றுக்கள் வரை வரும் இறுதியாக சுற்றும் இருவரில் யார் நாற்காலியில் அமராமல் இருக்கிறார்களோ,அதாவது தோற்று விடுகிறார்களோ அவர்கள் மனம் திறந்து பேச வேண்டும் அவ்வளவுதான் என்றார்.
மனம் திறந்து பேசறதா? என்னவேனாலும் பேசலாமா? என கூட்டத்தில் இருந்த ஒரு குரல் வர,இல்லை இல்லை நாங்கள் ஒரு சில கேள்விகள் வைத்துள்ளோம் அதற்கு மனம் திறந்து உண்மையை மட்டும் பேச வேண்டும் என்றார்.
அந்த ரிசார்ட் இரவு மின்னொளியில் ஜொலித்தது.பச்சை புல்வெளி, குளிருக்கு இதமாக ஆங்காங்கே விறகுகளை குவித்து நெருப்பிட்டு வைத்திருந்தனர்.
சிலர் குடும்பமாக வந்திருந்தனர்.ஒரு சில புதுமண தம்பதிகள், வாலிப நண்பர்கள் கூட்டம்,குழந்தைகளின் சிரிப்பும் விளையாட்டும் என அந்த இடம் ரம்மியமாக இருந்தது.
அனிஷ், பவி,கணேஷ் மூவரும் ஒரு விறகு குவியலில் போட்டி போட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.
அர்ஜூன் அவனது ஹோட்டல் பிசினஸ் சம்பந்தமாக அவர்களை விட்டு சற்று தள்ளி வந்து போன் பேசிக் கொண்டிருந்தான்.
திடீரென ஒரு குளிர் காற்று வீச அனிஷின் துப்பட்டா பறந்து சென்று அவன் முகத்தை மூடியது.
இவளும் பதறி அவன் முன் சென்று நின்றாள். அவன் அந்த துப்பட்டாவை எடுத்து அவள் கைகளில் தர ஒருமுறை இருவரின் பார்வையும் சந்தித்து கொண்டது.
அனிஷ் திரும்பி இரண்டு எட்டு வைத்தாள்.பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை.அந்த துப்பட்டாவை சுருட்டி தீயில் போட்டு விட்டாள்.
— கருவின் குரல் ஒலிக்கும்…
error: Content is protected !!