Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Karuvin Kural

Karuvin Kural EPILOGUE

கருவின் குரல்
எபிலாக்

தேவா காலில் விழாத குறையாக கெஞ்சிவிட்டான்.ஆனால் ஜானகி இறங்கி வந்த பாடு இல்லை.

தனது நேரம் வந்தவுடன் பழிவாங்கல் இல்லை இது.

எவ்வளவோ நாட்களை தனிமையில் சொல்லணா துயரங்களில் கடந்து இருக்கிறாள் அல்லவா.



Advertisement

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த வீட்டிற்கு வாங்க,உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.ஆனால் என் குடும்பம் என்றோ என் மனைவி என்றோ உரிமையாக இங்கே வரவேண்டாம்.

உங்களுடனான வாழ்க்கைக்கு ஏங்கியவள்தான் உங்கள் கைபிடிக்கும் நாளை எண்ணி மனதில் பல கனவுகளுடன் இருந்தவள்தான். அவை அனைத்தும் கிடைத்த நொடி இந்த உலகிலேயே அதிக அதிஷ்டசாலியாக என்னை நானே மெச்சிக் கொண்டேன்.

நான் இன்னமும் அதே ஜானகிதான். உங்க ஜானகிதான்.ஆனால் நீங்கள் என் தேவா இல்லையே.எப்போதோ நீங்கள்தான் அதையும் எனக்கு தெரியப்படுத்துனீங்க…

Advertisement

நீங்கள் இல்லாத வாழ்வை நான் வாழ பழகிக் கொண்டேன். நீங்களும் என்னை மறந்து உங்கள் குடும்பத்தோடு சந்தோசமாக வாழுங்கள்.

Advertisement

இதைதான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றாள்.

ஜானு நான் பண்ணுனது தப்புதான், அதுக்கு நீ மன்னிக்க வேண்டாம் அது இன்னும் ஒரு பெரிய குற்ற உணர்வை எனக்கு தரும்.

உனக்கு நான் செய்த துரோகத்திற்கு எத்தனை பிறவி எடுத்தாலும் மன்னிப்பு கிடைக்காதுனு எனக்கு நல்லா தெரியும்.

Advertisement

பணம் அந்தஸ்து எல்லாம் என் கண்ணை மறைச்சிடுச்சு ஜானு.நான் உன்கூட வாழ்ந்த நாட்கள் மட்டுந்தான் சந்தோசமான நாட்கள்.

நான் உன்கிட்ட அந்த வாழ்க்கையை பிச்சை கேட்கிறேன் திரும்ப எனக்கு அந்த நாட்கள் வேணு ஜானு

உன்னை தினமும் பார்த்துட்டு வாழ்றே ஒரு வாழ்க்கை எனக்கு போதும்.உனக்கு நானே சமைச்சு தரே,ஏன் உன் ட்ரெஸ் எல்லாம் துவைச்சு,உன் கார் டிரைவராக கூட நான் இருக்கே

இந்த வீட்டுல எனக்கு ஒரு வேலை போட்டு கொடு என்னோட அந்திம காலம் வரை நான் உன்னை பார்துட்டு இந்த வீட்டுல ஒரு மூளைலே இருந்துக்கறேன்.

ப்ளீஷ் ஜானு என்னை வேண்டானு மட்டும் சொல்லிறாதே என்று கெஞ்சினான்.ஜானகியின் கண்களிலும் நீர், இருந்தாலும் ஏற்க மனம் மறுத்தது.

ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானலும் திருமணம் செய்து கொண்டு திரும்ப வந்தால் மனைவி ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இதையே ஒரு பெண் செய்து வந்தால் ஆண் ஏற்றுக் கொள்வானா?அவளுக்கு இந்த உலகம்தான் வைக்கும் பெயர்கள் எத்தனை?

தேவாவை போல் ஜானகி செய்துவிட்டு திரும்ப வந்து மன்னிப்பு கேட்டு இருந்தால் தேவா ஏற்றுக் கொள்வானா?இல்லையே பணம் ,கெளரவம் என்று அவளை தள்ளி அல்லவா வைத்து இருப்பான்.

அதுமட்டுமல்ல இது ஜானகியோடு முடிவது இல்லையே.கணவன் எவ்வளவு பெண்களோடு குடும்பம் நடத்தினாலும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சமுதாய திணிப்பை இன்று அவளும் செய்தால்,ஜானகியை தவறான முன்னுதாரணமாக கொண்டு மற்றவரும் பின்பற்றி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

என்ன ஆனாலும் தேவாவை திரும்ப அவள் வாழ்வில் கொண்டுவரும் எண்ணம் துளியும் இல்லை.

இருவரும் சிறந்த நண்பர்களாக இருப்போம்.எப்போது வேண்டுமானாலும் இங்கே வாங்க இப்போ கிளம்புங்க என்று சட்டென கதவை அடைத்துவிட்டாள்.

முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள்.மற்ற மூவருக்கும் என்ன சொல்லி ஜானகியை சமாதானப்படுத்துவது என தெரியவில்லை.

அர்ஜூனிற்கு தேவாவை தனியே விட மனமில்லை.மைதிலி உடனான அவனது அன்பற்ற வாழ்வை முதல்நாளிலே கண்டு கொண்டான்.

ஜானகியும் இப்படி தனியாக வாழ்வது அவனுக்கு சற்று சங்கடத்தை தந்தது. ஏன் இருவரும் திரும்ப வாழ்வில் இணையக் கூடாது என்று எண்ணினான்.

ஆனால் யார் அவர்களை இணைப்பது. அனிஷிடம் சொல்ல அவளும் எனக்கு அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழணும்னு ஆசைதான் ஆனால் அம்மா நெறைய விஷயங்களை அப்பாவாலே இழந்து இருக்கிறாங்க.அதே சமயம் நிறைய காயப்பட்டு இருக்கிறாங்க.

நாம அம்மாவை வற்புறுத்த வேண்டாம். ஆனா அதே சமயம் அப்பாவையும் விட்டுக் கொடுக்க கூடாது என்றாள்.

இரவு நல்ல மழை அர்ஜூனும் மரகதமும் வீட்டிற்கு செல்ல கிளம்பி வெளியே வந்தனர்.

தேவா மரத்தடியில் மழையில் நனைந்து குறுக்கி அமர்ந்திருந்தான்.அர்ஜூன் பதறி அவனை உள்ளே அழைக்க மறுத்துவிட்டான்.

ஜானகி என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள்.அவளை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.அதனால் இந்த மரத்தடியிலேயே இருந்து கொள்கிறேன்.

ஜானகி வெளியே கிளம்பும் போதும் திரும்பி வீட்டிற்கு வரும் போது அவளை பார்க்கும் அந்த வாழ்வு போதும் என்றான் திடமாக.

அனிஷ் ஜானகியிடம் “மம்மி உனக்கு வேணா அவரு வேண்டாம் ஆனா எனக்கு அவரு வேணும்,எனக்காக அவரை இந்த வீட்டுல சேர்த்திக்கலாம் மம்மி”

அவரு உன்னை எந்த டிஸ்டர்ப்உம் பண்ண மாட்டார் மம்மி அவரு வீட்டுக்கு நீ என்னை வயித்துல சுமந்துட்டு போன அப்போ அவங்க உன்னை துரத்திவிட்டாங்க இல்லே, இப்போ நீ மட்டும் என்ன செய்றே நீயும் அவரை துரத்தி விட்டா அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் மம்மி அவரை மன்னிச்சு உள்ளே கூப்பிடு மம்மி ப்ளீஸ் எனக்காக என்றாள்.

ஜானக்யிடம் எந்த அசைவும் இல்லை. நல்ல இடி ,மின்னல் வெளியே வந்து உள்ள வாங்க என அனிஷ் கூப்பிட மறுத்துவிட்டான்.

ஜானகியை வெளியே வந்து உள்ள வாங்க என்றாள்.உலகையே வென்றுவிட்ட கர்வம் அவன் கண்களில் தெரிந்தது.இதுவரை அந்த வீட்டில் திறக்காத ஒரு அறையை திறந்து அவனுக்கு கொடுத்தாள்.

பார்த்தவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.அவனுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் அந்த அறையில் இருந்தது.

உங்களுக்கு என் வாழ்வில் இடமில்லை அதை மறக்க வேண்டாம்.நாம் சேர்ந்து வாழப்போவதும் இல்லை பிரியப் போவதும் இல்லை. அனிஷ் திருமணத்திற்கான வேலையை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சுபமாக முடித்துவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.

அங்கே சக்கரவர்த்தி முன்பு அதுல்யா, மைதிலி,வினய்,ஸ்வேதா, ராஜேஸ்வரி, சுப்ரமணியம் கூடி தங்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லுமாறு அவரை கேட்டுக் கொண்டிருந்தனர்.

எல்லோருக்கும் முன்பு அதுல்யா ஆரம்பித்து விட்டாள் தாத்தா அப்பா எங்களுக்கு வேண்டும் அதே சமயம் எங்களுக்கு மட்டும் என நான் கூறவில்லை. ஆனால் அம்மா தற்போது ஒரு தெளிவான முடிவெடுத்துள்ளார்.

இனி அவர் வாழ்வில் அப்பா வேண்டாம் என,ராஜி பாட்டி வீட்டிற்கு செல்கிறார். நாங்களும் அவரவர் நலன் கருதி இந்த முடிவை மதிக்கிறோம் என பக்குவமாக பேசினாள்.

தாத்தா நீங்களே எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைங்க,எனக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை என அனைவரையும் புன்னகைக்க வைத்தாள்.

வினய் கூட,” நா அதுல், ஸ்வேதா அனிஷ் திருமண வேலைகளில் பங்கெடுத்து கொள்வதாக “இன்பஅதிர்ச்சி அளித்தான்.

அதுல்யா தற்போது தெளிந்த நீரோடையாக இருந்தாள்.ஒருவர் மீது அன்பு வைத்தால் அவரது விருப்பத்திற்கு தனது விருப்பத்தை விட அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

எனவே அர்ஜூனின் விருப்பப்பத்திற்கு தடையாக இருக்ககூடாது என முடிவெடுத்தாள்.அவன் தன் வாழ்வில் ஒரு சிறு வெளிச்சம் மட்டுமே என நினைத்தாள்.இனி அவனை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய கூடாது என தீர்மானம் செய்து கொண்டாள். இதே முடிவைதான் மைதிலியும் எடுத்திருந்தாள்.அம்மா வழியையே மகளும் பின்பற்றினாள்.

ஜானகி வீட்டில் அனைவரும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர். குற்ற உணர்ச்சி உடனே திருமணத்திற்கு வந்தனர்.எந்த வேலையும் முன்னின்று செய்யவில்லை.விருந்தாளிகள் போல வந்தனர்.

காம்பவுண்டு வீட்டினர்களான சுதா,பாலா,பூஜா அவள் கணவன் மணமக்களை வாழ்த்த வந்தனர்.

தீபா,ராஜேஷ் ,நகுல் கேரள தம்பதிகள் ப்ரதீப், ரேஷ்மா என ஒரு பட்டாளமே வந்து சேர்ந்தது திருமணத்திற்கு…

தாய்மாமன் சீர் முறையை வினய் முன்னின்று தனது அக்காவிற்கு செய்தது ஜானகி வீட்டினருக்கு தங்கள் இழிநிலையை அவர்களுக்கு உணர்த்தியது. அதுல்யாவும்,ஸ்வேதாவும் அனிஷிற்கு மேக்கப் செய்து கொண்டே ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரித்துக் கொண்டனர்.

சக்கரவர்த்தி ,கருணா ,அறிவு ,செளமியா ஒன்றாக வந்தனர் மணமக்களை ஆசிர்வதிக்க… அர்ஜூனின் அம்மா ஒரு ஓரமாக நின்று மணமக்களை வாழ்த்தினார்.

அதுபோக இன்னொரு விஷயமும் அங்கிருந்தவர்களுக்கு ஜானகி அடைந்திருக்கும் உச்சத்தை காட்டியது.

தன்னைபோன்ற கணவனாலும் பெற்றவர்களாலும் கைவிடப்பட்ட பெண்களுக்கு தொழில் கல்வி கற்று தந்திருந்தாள் ஜானகி. யார் தயவும் இன்றி தனியாக நிற்க அவர்களுக்கு தேவையான ஊக்கமும் தன்னம்பிக்கையும் அளித்து இருந்தாள்.

இன்று அவர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். அவர்களை பார்த்த அந்த நொடி கருணா தன் கணவர் ஜானகியைவிட அந்தஸ்தில் சற்று குறைவானவராக தோன்றினார்.

ஜானகியை கர்வமாக தன் மருமகள் என அங்கிருந்த அனைவரிடமும் அறிமுகப்படுத்தினாள்.

ஜானகி எதையும் சட்டை செய்யவில்லை.கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் என அமைதியாக இருந்து கொண்டாள். அவள் வாழ்வில் யாரையும் அவள் விலக்கவும் இல்லை,சேர்க்கவும் இல்லை.

அவர்களாக வந்தால் வரட்டும் இல்லையென்றால் விலகட்டும் என்ற தத்துவநிலைக்கு சென்றுவிட்டாள்.

ஐயர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என கூற அனிஷின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் அர்ஜூன்

முதல் முடிச்சு நம்பிக்கை.

இரண்டாம் முடிச்சு பாதுகாப்பு.

மூன்றாம் முடிச்சு மௌனமான காதல்.

அனிஷின் கண்களில் இருந்து ஒரு துளி விழுந்தது. அர்ஜூன் அதை பார்த்து, யாருக்கும் தெரியாமல்,
அவள் கையை மெதுவாக அழுத்தினான்.

அனிஷிற்கு வாழ்நாள் முழுக்க கண்ணீர் வந்தால் துடைக்க
ஒரு கை வந்துவிட்டது.

அர்ஜூனிற்கு வாழ்நாள் முழுக்க
பிடிக்க துணையாக ஒரு கை வந்துவிட்டது.

“கல்யாண ராகங்கள்…
துள்ளும் மழை இசையில் வர…

சங்கீத சிலம்போடு…
இரு பறவைகள் மனம் இணைந்திட…

செவ்வாலைத் தோட்டங்கள் வாழ்த்தும்…

சந்தன பூங்கிலையில்…
அன்பினைப் பாடும் குயில்…

வானத்தை விலையாகக் கேட்கும்…

வானத்தை விலையாகக் கேட்கும்…”

— கருவின் குரல் நிறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!