Skip to content
Post Views: 1,762
நதி 20
தீனா யமுனா இருவரின் அந்த மோனநிலையை கலைக்கவென வெளியே பேச்சுக்குரல்கள் கேட்டது.
Advertisement
சுதாரித்த தீனா, “சக்தி மாமா வீட்டுக்கு போயிருந்தவங்க எல்லாரும் வந்துட்டாங்க போல பாப்பா.. சீக்கிரம் தலைய சீவிட்டு வா.. இதுக்கும் மேல ரூம்ல தனியா இருக்கறது நல்லா இருக்காது..” என்றவன் அவசரமாக அவளின் நெற்றியில் இதழ் ஒற்றி விலகினான்.
யமுனாவும் சூழல் புரிந்து, இரு பக்கமும் சிறிது முடியை எடுத்து நடுவே பின்னலிட்டு முடி உலர தேதாக விரித்து விட்டவள்.. நெற்றிக்கு பொட்டு வைத்து உச்சியில் குங்குமம் சூடி, ‘தயார்..’ என்பது போல தீனாவை பார்க்க.. மென் புன்னகையோடு அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் அவளோடு.
Advertisement
Advertisement
இருவரும் ஒரு சேர வெளியே வர அவர்களின் மலர்ந்திருக்கும் முகம் பார்த்து வந்திருந்த அனைவரும் நிறைவாய் உணர்ந்தனர்.. ஜெயசீலனை தவிர.
அதிலும் தீனாவின் முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷம் அவரின் முகத்தை மொத்தமாக கருத்து போக வைக்க.. அவரால் அதை காண சகிக்காதது போன்றான பாவனை வெளிப்படையாகவே தெரிந்தது.
Advertisement
அவரின் பாவனையை அவதானித்துக்கொண்டிருந்த யமுனாவிற்கு அவரின் எண்ணத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.
‘அட மாம நாருக்கு என்னோட தயா சந்தோஷமா இருந்தா ஆவாதா..?! அப்போ இனி அவர வெறுப்பேத்த நா வேற ஸ்பெஷலா மெனக்கெட வேண்டியிருக்காது போலவே..!’ என நினைத்தவளுக்கு ஒருவித உற்சாகம் குமிழிட்டது.
யமுனாவின் பார்வையின் தாக்கத்தால் ஜெயசீலனின் பார்வை அவள் புறம் திரும்ப அவளின் கண்ணில் தெரிந்த பாவனை அவரை துணுக்குறச்செய்தது.
அவர் அவளின் எண்ணத்தை படிக்க முயலும் போது,
“எம்மாடி தங்கம், வந்து மொதல்ல ரெண்டு பேரு சேந்து நின்னு மாடத்துல விளக்கேத்துங்க..” என பெரியவர் அழைக்க,
அவர் சொன்னதை செய்தவர்கள் அப்படியே அவரின் காலிலும் விழுந்து எழ.. அந்த பெரியவளுக்கோ அத்தனை மகிழ்ச்சி.
“மவராசங்களா இருங்கய்யா..” என மனதார வாழ்த்தியவர்,
“இந்த நேரத்துல உன்ற ஆத்தா உங்கூட இல்லாத போயிட்டாளே.. ராசா..” என ஆதங்கத்தோடு சொல்ல,
“வெசனப்படாதீங்க அத்தே.. என்ற தம்பிக்கே பொண்ணா வந்து பொறப்பாங்க எங்கம்மா..” என்றாள் வாணி அருள்வாக்கு சொல்வது போல.
அதை கேட்ட தீனாவிற்குள் புதுவித உணர்வு பிரவாகம்.
“தன் மகளாய்.. தன் தாய்..” நினைக்கும் போதே உடல் ஒரு நொடி சிலிர்த்தடங்கியது.
அதன் கனம் தாங்காது அருகிருந்த யமுனாவின் கையை அவன் இறுக்கி பிடிக்க, அவனை முழுதாய் உணர்ந்தவளுக்கு அவனின் இந்நிலைக்கு காரணம் புரியாதா..?
அதனால் மற்றொரு கரம் கொண்டு தன் கரத்தின் மேலிருந்த அவன் கரத்தை ஆறுதலாய் தடவி விட, அவள் புறம் திரும்பியவனின் விழி ‘அக்கா சொல்ற மாதிரி நடக்குமா..?’ என்றான கேள்வியில் திளைத்தது.
‘நிச்சயமா உங்க மகளா உங்க அம்மா வருவாங்க..’ என்றான பதிலை அவளும் பார்வையால் தர அதை விட வேறென்ன வேண்டும் அவனுக்கு.
“ஏய்யா தீனா உன்ற சம்சாரத்த கூட்டிட்டு கோயிலுக்கு போயிட்டு வந்துடு. மழ வேற இப்ப தான் வெரிச்சிருக்கு. மறுக்கா வந்துட போவுது..” என அந்த பெரியவர் சொல்ல,
“சரிங்க த்தே..” என்ற தீனா யமுனாவை பார்க்க, “போலாங்க..” என்றாள் தயாராய்.
“வாணி.. நீயு ஓரெட்டு அவுக கூட போயிட்டு வா..” என அவர் சொல்ல,
“இல்லத்தே.. இங்கன இன்னும் ஒரு வேலையும் ஆவல. காபி டிப்பன்னு எல்லாருக்கும் பாக்கனுமே.. அவுக மட்டும் போயிட்டு வரட்டும்..” என்ற வாணி,
பூஜைக்கென எடுத்து வைத்திருந்ததை யமுனாவிடம் கொடுத்து அவளின் கூந்தலில் மல்லிகையை சூடி விட்டவாரு சொல்ல.. அவளின் காரணம் சரியாக இருந்ததால் புதுமணத்தம்பதிகள் மட்டும் கோவிலை நோக்கி சென்றனர்.
ஓரளவு விடியல் வெளிச்சம் நிறைந்திருக்க வீட்டிற்கு அருகிருக்கும் கோவில் தான் என்பதால் இருவரும் நடந்தே சென்றனர்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள், காட்டுக்கு செல்பவர்கள் எல்லாம் புது மணப்பெண்ணை பார்க்கும் ஆர்வத்தில் நிற்க யமுனாவிற்கு கூச்சமாகி போனது.
“தயா.. என்ன இவங்க பொருட்காட்சிய பாக்கற மாதிரி என்னைய இப்படி பாக்கறாங்க..” என தீனாவிடம் மெல்லிய குரலில் சிணுங்க,
“என்னோட பொண்டாட்டி எம்புட்டு அழகுன்னு அவங்க பாக்கறாங்க பாப்பா.. இதெல்லாம் இங்கே சகஜம்.. விடு ஒண்ணு ரெண்டு நாள் பாப்பாங்க.. அப்புறம் நம்மள கண்டுக்க கூட மாட்டாங்க..” என பேசிய படியே கோவிலை வந்தடைந்தனர்.
பூசாரி அப்போது தான் அம்மனுக்கு அலங்காரம் செய்து முடித்திருக்க கொண்டு வந்திருந்த பூஜை சாமான்களை அவரிடம் கொடுத்து இருவரின் பேரிலும் அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.
இரவு பெய்த மழையின் விளைவால் இன்னும் மெல்லிய ஜில்லிப்பு காற்றில் கலந்திருக்க.. கோவில் உள்ளே வீசிய பூக்கள் மற்றும் கற்பூரத்தின் வாசனை ஒரு வித நேர்மறை எண்ணத்தை உண்டு பண்ணியது இருவருக்கும்.
*******
வீட்டிலோ, அவசரமாக வாணி வந்தவர்களுக்காக காலை உணவை தயாரிக்க செல்ல அப்போது சரியாக அங்கு பாலமுரளியுடன் வந்த சக்தி,
“இத்தன பேத்துக்கு நீ தனியா செய்ய ஆவுமா வாணி..? மெஸ்ல இன்னைக்கு ரெண்டு நேரத்துக்கு சொல்லியிருக்கேன்.
விருந்து பேச்சு வார்த்த பாத்துட்டு நைட்டுக்கு முடுவு பண்ணிக்கிடலாம்..
கொஞ்ச நேரத்துல கால டிப்பன் வந்துடும். நீ இருக்கறவங்களுக்கு டீ, காபி மட்டும் பாரு..
பையன குளிக்க வச்சுட்டேன். வீட்டுலையும் எல்லாத்தையும் எடுத்து வச்சுபோட்டு தான் வந்தேன். அதனால அதைய யோசிக்காத..” என்றுவிட்டு மகனுடன் வெளியே செல்ல வாணியின் முகத்தில் அத்தனை நிறைவு.
சக்தியின் இந்த மாதிரியான அனுசரணை தான் அவளை இன்னும் இத்தனை உயிர்ப்போடு எல்லாவற்றையும் செய்ய வைக்கிறதோ என்னவோ..!!
‘தம்பி வீட்டை விட்டு எங்கு போனான்..? ஏன் போனான்..?’ என்று எதுவும் தெரியாத நிலையில், திடீரென சக்தியை திருமணம் செய்யச்சொல்லி ஜெயசீலன் சொன்ன போது வாணிக்கு இந்த திருமணத்தில் சுத்தமாய் ஈடுபாடே இல்லை.
அதிலும் தம்பி பற்றிய எண்ணங்கள் மட்டுமே அவளை மொத்தமாய் ஆக்ரமித்து இருந்த காலம் அது.
தந்தையிடம் எத்தனையோ முறை கேட்டும் அவரிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருக்க.. என்ன செய்வது..? எங்கே சென்று அவனை தேடுவது..? என கூட புரியாமல் தவித்துக்கிடந்தாள் வாணி.
சிறு பிள்ளை முதல் தூக்கி வளர்த்த பாசம் அவ்வளவு சீக்கிரத்தில் அவளை சகஜமாய் நடமாட வைத்திடுமா..?
அவன் அவளின் பெறா பிள்ளையாயிற்றே..!
அதனால், “என்ற தம்பிய கண்ணுல காணாம என்றனால கண்ணாலம் பண்ணிக்க முடியாதுங்க அய்யா..” என உறுதியாய் வாணி சொல்லிவிட,
ஜெயசீலன் ஒரு முடிவு எடுத்து அதிலிருந்து மாறுவதா..? என்ற வைராக்கியம் அங்கு மீண்டும் உண்டாக வாணியின் விருப்பத்தையும் தாண்டி தான் அந்த ஆறு மாதத்தில் திருமண நாள் குறிக்கப்பட்டது.
அப்போதும் தனக்காக பார்க்காமல்.. தன் வருத்தத்தை கண்டு கொள்ளாத சக்தியை அவளால் முழு மனதாய் கணவனாய் ஏற்க தான் முடியுமா.?
அந்த மனநிலையில் இருந்தவளுக்கு மனதின் ஒரு பாரத்தை இறக்கி வைக்கவென மீண்டும் வந்து சேர்ந்தான் தீனா.
அவன் வந்து போனது தெரிந்து, அவன் இருக்கும் இடம் அறிந்து சக்தி நேரில் சென்று அங்கிருந்து வாணியிடம் பேச வைத்த பொழுது தான் முதன் முறை அவரை பற்றிய சிந்தனை நல்விதையாய் விழுந்தது வாணிக்குள்.
‘மற்றவர்களுக்கு தான் எப்படியோ.. ஆனால் வாணிக்காக எதையும் செய்வேன்..’ என்றான அவனின் எண்ணம் எல்லாம் இது போன்று செயலாக அன்றிலிருந்து அவ்வப்போது வெளிவரும்.
ஆரம்பத்தில் சக்தியை பிடிக்காத தீனாவிற்கு கூட அவரை பிடிக்க காரணமே இது போன்றான விசயம் தான்.
டிப்பன் வேலை இல்லை.. என்றதும் இன்னும் குளிக்காமல் இருப்பவர்களுக்கு வேண்டியதை செய்தவள், கையோடு அவளின் சித்தியையும் கவனிக்கவும் தவறவில்லை.
இடுப்பிற்கு எண்ணெய் போட வேண்டும் என்பதால் கூடத்தில் இருக்க வைக்காமல் அறைக்கு அழைத்து சென்று போட்டுவிட்டவள்,
“சித்தி, சித்த நேரம் இங்கனவே இருங்க. வலி கொறையலன்னா பத்து மணி வாக்குல டாக்டர பாத்துட்டு வந்துடலாம்..” என்றுவிட்டு வெளியேறினாள்.
error: Content is protected !!