Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 20.2

“தயா, மணி என்ன இருக்கும்..?” என சுற்றிலும் இருக்கும் தூண்களை பார்த்துக்கொண்டிருந்த தீனாவிடம் யமுனா கேட்க,
“ஏன் பாப்பா..?” என்றவனுக்கு,


Advertisement

“விடிய விடிய தூங்கவே இல்லையே நாம. அதா லைட்டா பசிக்குது.. உங்களுக்கு பசிக்கலையா..?” என்றாள் ஒரு வித கூச்சத்தோடு.

Advertisement

அவள் சொன்ன விதத்தில் அவன் அவளை விடுத்து அவசரமாக சுற்றிலும் தான் பார்வையை ஓட்டினான்.

Advertisement

அவனின் அவசரத்தில் குழம்பிய யமுனா, “ஏங்க..? எதுக்கு இப்படி பாக்கறீங்க..?!” என்றாள் அவளும் புரியாமல் அவன் பார்த்த மாதிரி பார்வையை சுழற்றி.

Advertisement

“அடி பாப்பா.. நீ சொன்னத ரீவைண்ட் பண்ணி பாரு, அதுக்கு என்ன அர்த்தம் வருமுன்னு.. அதான் யாராச்சும் நீ பேசுனத கேட்டாங்களான்னு பார்த்தேன்.. 
நல்ல வேள மழையால இன்னும் யாரும் கோவிலுக்கு வரல போல..” என்றான் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்து.
“அப்படி என்னத்த சொன்னேன்..? ராத்திரி தூங்கவே இல்..” என சத்தமாகவே ஆரம்பித்தவள் சட்டென வாய் மீது கை வைத்து திருட்டு முழி முழிக்க, தீனாவால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அவனின் சிரிப்பில் தன் கரத்தை விலக்கி அவனின் தோளில் ஓரடியை கொடுத்தவள், “ஷ்ஷ்.. மூச்..!!” என்றாள் ஒற்றை விரலை வாய் மீது வைத்து கண்களை உருட்டி மிரட்டலாய்.
அவளின் பாவனையில் சிரித்தவன் அதே நிலையில் தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்த்துவிட்டு நேரத்தை சொன்னவன், “வா கிளம்பலாம்..” என்றபடி எழுந்தான்.
அப்போது போனில் நோட்டிபிகேஷன் சத்தம் வர போனை பார்த்தவனுக்கு தங்கமணி அனுப்பியிருந்த பணத்தை கண்டு திகைத்து.. பின் அதன் காரணம் உணர்ந்து கொண்டான்.
உடன் இருந்த யமுனா கேள்வியாய் பார்க்க சூழ்நிலையை அவளிடம் சொல்வதா..? வேண்டாமா..? என ஒரு நொடி யோசித்தவன் மொத்தமாக சொல்லிவிட்டான்.
கெட்ட வார்த்தை கொண்டு அர்ச்சிக்க ஆசை வந்த போதும் இருக்கும் இடம் கருதி விழியால் மட்டும் அதை மொழிந்துவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்தாள் கோபமாய்.
“ஏய் பாப்பா.. என்னோட சூழ்நிலை..” என ஆரம்பித்தவனை கை காட்டி நிறுத்தியவள்,
“போதும் தயா.. நேத்திருந்து இதை நிறைய முறை கேட்டாச்சு. இப்பவும் சொல்றேன் இதெல்லாம் நீங்களே இழுத்துக்கிட்ட வினை. 
நீங்க இப்ப நினைச்சா கூட இதை சரி பண்ண முடியும். முடிவு உங்க கையில..” என மட்டும் சொல்ல தீனாவும் சிந்தனை வயப்பட்டான்.
‘இதுவரை இங்கு இல்லை. இனி இங்கே எனும்போது தேவையை கண்டு செய்தால் போதுமே..’ என நினைத்தவன் அதையே அவளிடமும் சொல்ல,
‘புருஞ்சா சரி..’ என்பதான பார்வை மட்டுமே இப்போதும் அவளிடம். 
அவளின் ஆதங்கம் கோபமாய் உருமாறியிருந்தது அப்பட்டமாய் அவள் முகத்தில் தெரிய,
“பாப்பா.. நீயும் இப்படி இருந்தா.. எப்படி..? இதெல்லாம் நா யோசிச்சதே இல்லன்னு தானே சொல்றேன். 
நீ என் வாழ்க்கையில வந்த பின்னாடி அப்படி இல்ல தானே..?” என அப்பாவியாய் அவள் முகம் பார்த்து சோகமாய் கேட்டவனை கண்டு முகத்தை திருப்பக்கூட மனம் வரவில்லை யமுனாவிற்கு.
‘ஆளு மட்டும் வளந்தா போதுமா.. இன்னும் சின்ன புள்ள மாதிரி தான்..’ என நினைத்தவள் புன்னகைத்த பின்னரே அவன் முகமும் மலர்ந்து.
“தேங்க்ஸ் பாப்பா. இனி நா சரியா இருப்பேன்.. இப்படி மூஞ்சிய திருப்பாதே.. எனக்கு நீ தானே இருக்கே..” என கெஞ்சலாய் அவன் சொல்ல,
“தயா இன்னும் நீங்க தனி ஆள் இல்ல. உங்க வீட்டுக்கு தேவையை செய்ய கூடாதுன்னு நான் சொல்லவே மாட்டேன். 
அந்த ஆளு சொன்னாலும் சொல்லலைன்னாலும் இந்த குடும்பத்தை பார்க்கற கடமை உங்களுக்கு மட்டுமல்ல வீட்டு மருமகளா எனக்கும் இருக்கு.
ஆனா தேவை அறிஞ்சு எதையும் செய்யனுமுன்னு சொல்றேன். 
நான் மொத்தமா மாசம் எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பேன்னு உங்களுக்கு தெரியும். ஆனா வாங்குற சம்பளம் மொத்தமா நா எங்க வீட்டுக்கு கொடுத்தது இல்லை.
ஏன்னா சப்போஸ் ஒரு வாரம் வேலை இல்லாம போனா அடுத்த மாசம் அதே அளவு நம்மளால கொடுக்க முடியுமா..? 
அதனால ஒரு குறிப்பிட்ட அமவுண்ட் அனுப்பி மட்டும் தான் பழக்கம். இப்பவும் என் கணக்குல பணம் இருக்கு.
அவங்களுக்கு தேவை இருக்குன்னா நா கண்டிப்பா கொடுப்பேன். ஆனா அது தேவையை பொறுத்து தான்..” என ஆசானாய் அவள் சொல்ல,
யமுனா சொல்வதில் உள்ள உண்மை உறைக்க, “இனி பாத்துக்கறேன் பாப்பா..” என்றான் தீர்மானம் நிறைந்த குரலில்.
அவன் முகத்திலும் அந்த தெளிவு வந்திருக்க யமுனாவிற்கு நிம்மதி உண்டானது.
அதே நிம்மதியோடு, “சரி வீட்டுக்கு கிளம்பலாம்..” என யமுனா சொல்ல,
 
“இரு பாப்பா.. மணி அண்ணனுக்கு போன் பண்ணி பேசிட்டு போயிடலாம். அங்க போனா சொந்தக்காரங்க யாராவது வந்து போகன்னு பேச நேரம் கிடைக்காம போயிடும்..” என்றவன் தங்கமணிக்கு அழைத்தான். 
அவர் அழைப்பை ஏற்ற நொடி, “தேங்க்ஸ் ண்ணே..” எனக்கூற,
“எங்கடா இருக்கே..?” என கேட்டு பதிலை பெற்றவர், 
“நல்ல புத்திய இனியாச்சும் கொடுன்னு நல்லா வேண்டிட்டு போய் வேலய பாருடா.. அறிவு கெட்டவனே..” என சொன்னவர் போனை வைத்துவிட, 
‘ஞே..!’ என்ற பார்வை பார்த்த தீனாவை கண்டு அத்தனை சிரிப்பு யமுனாவிற்கு. 
அவர் பேசியது தான் அவளின் காதிலும் விழுந்திருந்ததே. அதோடு அவனின் பார்வையும் அப்படி ஒரு சிரிப்பை கொடுத்தது அவளுக்கு.
“என்னைய அவரு திட்டுனா.. அப்படி ஒரு சிரிப்பு வருது உனக்கு..?” என கோபமாய் கேட்க நினைத்தாலும் அவனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“பின்னே.. என்னால முடியாததை அவரு செய்யும் போது சந்தோஷம் வரத்தானே செய்யும்..” என்றாள் தன் கண்களை சிமிட்டி உற்சாகமாய்.
போலியான முறைப்பை தந்தவன், “இருடீ, அவருகிட்ட பேசிட்டு வச்சுக்கறேன் உன்ன..” என்றவன் மீண்டும் அவருக்கு அழைப்பை கொடுக்க,
“வச்சுக்க வச்சுக்க மொத்தமா உனக்கே உனக்கு தான்..” என கிசுகிசுப்பாக உரைக்க,
தீனாவிற்கு சுற்றம் தான் நினைவில் இருக்குமா..?!
அவனின் மொத்த கவனமும் அவளின் இதழில் குவிந்திட மறுமுனையில் இருந்து பல முறை கத்திய தங்கமணியின் குரல் எங்கே அவன் செவிக்குள் செல்லும்..?
பொறுத்து பார்த்த தங்கமணி அழைப்பை கட் செய்துவிட்டு.. அவராகவே அழைக்க, அந்த சத்தத்தில் மீண்டவன் அதை அட்டன் செய்து, “சொல்லுங்க அண்ணே..?” என்றதும்,
“எதுக்குடா கூப்பிட்டே..?” என்றார் அவர்.
“நா கூப்பிட்டேனா..? நீங்க தானே கூப்புட்டீங்க..?” என தீனா குழம்ப, 
“நீ ரொம்ப தெளிவா இருக்கேன்னு தெரியுது. முதல்ல போய் யமுனாவ தலைக்கு நல்லா எலுமிச்சம் பழத்த உச்சில தேச்சு விடச்சொல்லி குளி.. எல்லாம் சரியாகிடும்..” என்றார் அவரும் திருமண நாளை கடந்து வந்த அனுபவஸ்தராய்.
அதன் பிறகே கொஞ்சம் தெளிந்த தீனாவின் முகமோ வெக்கத்தால் சிவந்து விட, அசட்டு புன்னகையை சிந்திய படி, “அண்ணே…” என்றான் இழுவையாய்.
அவனின் பாவனையில் தங்கமணிக்கோ அத்தனை நிறைவு. அவர் ஆசைப்பட்டது இப்படிப்பட்ட தீனாவை காண வேண்டும் என்று தானே.
“அண்ணனுக்கு என்னத்த வச்சிருக்கேன்னு சொல்லிட்டு போய் யமுனாவ பாருடா..”  என்றார் அவரும் இழுவையாய்.
“கிண்டல் பண்ணாம சொல்ல வர்றத கேளுங்க அண்ணே. நாளைக்கு விருந்துக்கு அண்ணிய கூட்டிட்டு நீங்க கண்டிப்பா வரனும். அதுக்கு தான் கூப்பிட்டேன்..”  என ஒருவழியாய் அழைப்பிற்கான காரணத்தை சொல்லிவிட,
“நாங்க வராமையா..? கண்டிப்பா வருவோம். எங்களுக்கு நீ தனியா அழைப்பு வைக்கனுமா என்ன..?” என்றார் வீம்போடு.
“அச்சோ.. உங்கள எனக்கு தெரியும் அண்ணே.. ஆனா இங்கே நேத்து அவுங்க பேசினதால தான்..” என இழுக்க,
“தீனா உனக்காக யமுனாக்காக நாங்க வருவோம். உன்னோட சந்தோஷம் எங்களுக்கு முக்கியம். 
போ, போய் எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இரு. நாளைக்கு பாக்கலாம்..” என்று விட்டு நிறைவோடே காலை கட் செய்தார்.
‘நேற்று நடந்ததை வைத்து அவர் வருவாரோ.. இல்லையோ..?’ என்ற தவிப்போடு, விருந்துக்கான செலவு குறித்த குழப்பமும் நீங்க.. தீனாவின் முகம் இன்னும் தெளிவானது.
அவனின் கண்ணில் இதுவரை காணாத நிம்மதியை கண்ட யமுனா மெய் மறந்து அவனின் மைவிழியையே  பார்த்திருந்திருந்தாள் இமை சிமிட்டாது.
அவளின் அசரடிக்கும் பார்வை வீச்சில் லேசான வெக்கம் உண்டாக, 
“ஓய் பாப்பா… என்னடீ பார்வையிது..?” என்றான்.
“இன்னைக்கு நீங்க ரொம்பவுமே அழகா இருக்கீங்க தெரியுமா..?” என்றதும்,
“ஊகூம்..! அப்படியா..?” என்றவன் இருக்குமிடம் மறந்து அவளிடம் நெருங்கி வர, 
லேசாக வீசிய தென்றல் காற்றில் அசைந்தாடிய செடிகளில் இருந்த மழை நீர் அவர்களை நனைத்தது.
அதில் உண்டான சிலிர்ப்போடு நிதர்சனம் புரிந்து தீனா தன் பின்னந்தலையை இடது கரத்தால் கோதியவாரே வலக்கரத்தை அவள் புறம் நீட்ட, அதனை ஆசையோடு பற்றிக்கொண்டவளோடு வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான் தீனதயாளன்.
கடந்த காலம்
 மறந்து போவோம்
 கரங்கள் சேர்த்து
நடந்து போவோம்
உலகம் எங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டுப் பாடும்
இனிய ராகம் கேட்கும் வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!