Skip to content
Post Views: 3,161
என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் -1
Advertisement
Advertisement
Advertisement
அதிகாலை 5.30 மணி சூரிய உதயத்துக்கு முன், தன் காலை ஓட்டத்தை ஆரம்பித்து இருந்தான் அக்னிபுரீஸ்வரன்.
சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் ஜாகிங் ஓட்டம் என்று அவரவர்கள் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, சிலர் காலையில் பீச் வந்து ஓடி கொண்டு இருந்தனர்.
Advertisement
நம்ம ஹீரோ அக்னி அவன் ஓட்டத்தை ஓடிக்கொண்டு இருந்தான் பீச்சின் ஓரத்தில்.
33 வயது நிறைந்த கட்டிளம் காளை அவன், பெரிய ஐ.டி கம்பெனியை வெற்றி கரமாக 6 வருடமாக நடத்தி வருகிறான், இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் அவனின் அம்மா திருமணம் செய்து கொள் என்று பெண்களின் போட்டோகளை அவனிடம் காண்பித்து கொண்டு இருக்கிறார்.
போட்டோவை வாங்கி பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.
அக்னியின் அம்மா பார்வதிக்கு மகனின் மீது கோபம் அவன் கூட பிறந்த தம்பி, தங்கை எல்லாருக்கும் நல்லபடியாக இவனே திருமணம் முடித்து வைத்திருந்தவன், இவன் மட்டும் அனைத்தையும் அவர்களுக்கு செய்து முடித்து விட்டு, அவன் திருமணம் முடியாமல் இருப்பதை எண்ணி கோபமாக மகனிடம் நடந்து கொள்வார் பார்வதி..
அக்னி தங்கைக்கு திருமணம் முடித்த பின் தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்க, தம்பி காதல் என்று வந்து நின்றவுடன் உடனே தம்பிக்கு நல்லபடியாக திருமணத்தை முடித்து இருந்தான் அக்னி.
அக்னியின் தங்கை நிலாவை சிங்கப்பூரில் உள்ள ஒரு பிஸ்னஸ்மேன் மகனுக்கு திருமணம் முடித்திருக்க, தம்பி காதல் என்று ஒரு முஸ்லிம் பெண்ணை விரும்பி காதல் என்று தன் முன் வந்து நிற்க,, தன் சொந்தங்கள் வேண்டாம் என்று சொன்ன போது, இவனே தன் தாய் சம்மதத்தோடு தம்பிக்கு அவன் காதலித்த முஸ்லிம் பொண்ணையே திருமணம் முடித்து வைத்திருந்தான்..
தம்பி வேற்று மதத்தில் திருமணம் முடித்ததால் இவனின் சொந்தங்கள் இவர்களை ஒதுக்கி வைக்க, இவனே அனைவரையும் ஒதுக்கி வைத்து விட்டான்..
அவனின் சித்தப்பா மட்டும் இவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்..
காலையில் தன் ஓட்டத்தை முடித்தவன் வீடு வந்து சேர்ந்தான்..
அவனைப் பார்த்த பார்வதி மகனுக்காக செய்து வைத்து இருந்த சத்துமாவு கஞ்சியை அவன் முன்னாடி டம் என்று வைத்து விட்டு செல்ல.
தன் அம்மாவின் செயலை அறிந்தவன் சிரித்துக் கொண்டே சுவை கழட்டி வைத்துவிட்டு கை கழுவி வந்தவன், கஞ்சியை குடித்துக்விட்டு டம்புளரை கிச்சனில் வைக்க, கிச்சனுக்கு செல்ல..
பார்வதி யாருடனோ போனில் பேசுவதை பார்த்து நின்றான்…
“வந்துட்டான் கொடுக்கிறேன், நீங்களே சொல்லுங்க தம்பி” என்று போனை மகனிடம் தர.
போனில் யார்? என்பது போல் தாயைப் பார்க்க “உன் சித்தப்பா” இன்று மகளிடம் போனை கொடுத்தார் பார்வதி…
போனை வாங்கியவன் “சொல்லுங்க சித்தப்பா” என்றான்…
“நல்லா இருக்கியாடா மகனே?” என்றார் ..
“நான் நல்லா இருக்கேன் சித்தப்பா நீங்க, சித்தி, தம்பி, பாப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க?”..
“எல்லாரும் நல்லா இருக்கோம் டா மகனே நீ எப்ப தான் கல்யாணம் சாப்பாடு போட போற? அண்ணி வருத்தப்படுறாங்க தம்பி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க கூடாதா?”… என்று வருத்தப்பட்டு பேச..
“சித்தப்பா எனக்கு மட்டும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஆசையா?. எந்தப் பொண்ணையும் போட்டோல பார்த்தா பிடிக்கல, அப்படி புடிச்சு பேசினா ஆயிரம் கண்டிஷன் போடுறாங்க.. இப்ப இருக்கிற பொண்ணுங்க மைண்ட் செட் வேற மாதிரி இருக்கு சித்தப்பா.. யோசிச்சுதான் கல்யாணம் பண்ணனும்,, இல்லையின்னா வாழ்க்கையே கஷ்டமாகிறும்”..
“என்ன தம்பி சொல்லுற?”…
” ஆமாம் சித்தப்பா இப்ப இருக்குற பொண்ணுங்க மைண்ட் செட் வேற மாதிரி பணம் இருக்கா?, இந்த வீடு யாரு பேருல இருக்கு, மாப்பிள்ளை பேர்ல இருக்கா? மாப்பிள்ளைக்கு எவ்வளவு சொத்து இருக்கு? அம்மாவை யாரு பாக்கணும் சின்ன பையன் வீட்டுக்கு போக மாட்டாங்களா? அம்மாவை நீங்கதான் பார்க்கணும என்று ஆயிரம் கண்டிஷன்.. இதுல அந்த பொண்ணுக்கு சமைக்க தெரியாதாம், வேலைக்கு போக மாட்டாங்களாம், வருஷம் ஒரு முறை வெளிநாட்டுக்கு டூர் கூட்டிட்டு போகணுமாம், அவங்க கூட பிறந்தவங்களை சேர்த்து பார்த்துக்கனுமாம்,, இது கூடா பரவாயில்ல, கடைசியில பொண்ணுக்கு மாப்பிள்ளையை விட 1 வயசு தான் அதிகமா இருக்கனுமாம்,, இல்ல 6 மாசம் கூடுதல இருக்கனுமாம்,, இப்படி ஆயிரம் கண்டிஷன், கேள்வி …
அப்புறம் ஜாதக பொறுத்தம் வேற. இதெல்லாம் சரி வந்து அந்த பொண்ணு கிட்ட பேசுனா?. எனக்கு வயசு அதிகமாம்,,
நீங்க ரொம்ப மெச்சூடா பேசுறீங்கன்னு, என்னை ரிசெக்ட் பண்ணுறாங்க, கல்யாணம் பண்ணவே தோணல சித்தப்பா, வெறுப்பா இருக்கு”.. என்று அக்னி அவன் கடந்து வந்த கதைகளை சொல்ல..
“என்ன டா சொல்லுற மகனே இப்படியுமா பொண்ணு வீட்டுக்காரங்க இருக்காங்க?”…
“இதுக்கு மேலேயும் இருக்காங்க சித்தப்பா”..
“பேசாம உனக்கு நம்ம ஊருல பொண்ணு பார்க்கவா அக்னி?”..
” வேண்டாம் சித்தப்பா, என் தம்பியை ஒதிக்கி வச்ச ஊர் எனக்கும் வேண்டாம், பார்ப்போம் என்ன நடக்குதுன்னு, எனக்கு எப்போ கல்யாணம் நடக்கனுமுன்னு இருக்கோ, அப்போ நடக்கட்டும் “… என்று போனை வைத்தான்..
பார்வதி மகனிடம் இருந்து போனை வாங்கி ஒரு கவரை அவனிடம் நீட்ட….
அந்த கவரை வாங்கி பிரித்துப் பார்த்தவன் “பொண்ணு புடிக்கல'” என்று போட்டோவை தாயிடம் திருப்பி தந்து விட்டு அவனை அறைக்கு சென்று விட..
ஐயோ என்று இருந்தது பார்வதிக்கு..
இவனுக்கு எப்ப பொண்ணு பார்த்து பேசி கல்யாணத்த முடிச்சு முடியலடா, என்று வாய்விட்டு புலம்பிய படியே மகனுக்கு சமைக்க சென்றார் பார்வதி….
சரியாக எட்டு மணிக்கு ஆபீசுக்கு ரெடியாகி டைனிங் டேபிள் முன் வந்திருந்தான் அக்னி…
சுட சுட சிறுதானிய அடை தோசையும் காய்கறி அவியலையும் பரிமாறினார் பார்வதி மகனுக்கு…
அக்னி தாயைப் பார்த்து “நீங்களும் உட்காருங்கம்மா சாப்பிடலாம்” என்று அழைக்க..
அவனை முறைத்தபடியே அமர்ந்து உண்ண ஆரம்பித்தார் பார்வதி…
பார்வதியின் போன் ஒலித்தது.. அக்னி யார் என்று பார்க்க, அவன் தங்கை நிலா தான் அழைத்துக் கொண்டிருந்தாள்..
தாய்க்கு கண் ஜாடை காட்டிவிட்டு போனை ஆன் பண்ணி அவன் காதில் வைத்தான் அக்னி…
” அம்மா பொண்ணு போட்டோ அண்ணனுக்கு காட்டிட்டியா? அவனுக்கு புடிச்சிருக்கா? ” என்று நிலா கேட்க…
” பிடிக்கல வாலு” என்றிருந்தான் தங்கையிடம்…
“டேய் அண்ணா உனக்கு பார்க்கிற பொண்ண எல்லாம் வேண்டாமுன்னு சொன்னா.. உனக்கு எப்படி கல்யாணம் நடக்கும், நான் எப்போ புதுப்பட்டு புடவை கட்டுறது, டேய் அண்ணா ஓவரா போற நீ”… என்று அவள் வருத்தத்தை அவள் தெரிவிக்க..
” நீ புது பட்டு புடவை கட்டுவதற்காக எல்லாம், நான் கல்யாணம் பண்ண முடியாது நிலா குட்டி” என்றான் தங்கையிடம்…
“போண்ணா ரொம்ப வருத்தமா இருக்கு நீ எப்ப தான் கல்யாணம் பண்ணிக்குவியோ?”…
“சீக்கிரம் பண்ணிக்கிறேன் டா நல்ல பொண்ணா பாரு அண்ணாவுக்கு” என்று தங்கையை சமாதானம் பண்ணி இணைப்பை துண்டித்து விட…
” உண்மையில் நீ கல்யாணம் பண்ணுற ஐடியாவுல இருக்கியாடா?”… என்று மகனை பார்த்தபடியே பார்வதி கேட்க..
“ஏன்மா என்ன பார்த்த அப்படி தெரியலையா?”..
” என்னவோ போடா பாக்குற பொண்ணுங்களை எல்லாம் புடிக்கல புடிக்கலைன்னு சொல்லுற” என்றவர்….
“நாளைக்கு என்ன நாளுன்னு ஞாபகம் இருக்கா தம்பி”….என்றதும்..
தலையாட்டியவன், “ஞாபகம் இருக்குமா அப்பாவோட இறந்த நாள்”.. என்று வருத்தமாக கூறிய மகனின் தலை கோதிய பார்வதி..
” வருத்தப்படாத அப்பா எங்கேயும் நம்மல விட்டுட்டு போகல, உன் கூடவே தான் இருப்பாரு சரியா,”.. என்று மகனை சாப்பிட வைத்தவர்…
“உன் தம்பி தேவ் அவன் பொண்டாட்டி பிள்ளையோட நாளைக்கு வீட்டுக்கு வர்ரான், நம்ம சேர்ந்து அப்பாவுக்கு சாமி கும்பிடுவோம்” என்று கூற..
“சரிம்மா நான் ஆபீஸ் போயிட்டு வரேன்” என்று கிளம்பி விட்டான்..
மறுநாள் அழகாய் விடிந்திருந்தது.. தம்பி, தம்பி மனைவி, அவனின் 1 வயது மகன் அனைவரும் வீட்டிற்கு வந்திருக்க வீடே கலகலவென இருந்தது..
அக்னியின் அப்பா சிவப்பிரகாஷுக்கு மூன்றாம் ஆண்டு இறந்த நாளை அனைவரும் அவருக்கு பிடித்த உணவுகளை செய்து அவருக்கு படைத்து சாமி கும்பிட்டனர்..
தேவ் மனைவி மிகவும் சாதுவான அமைதியான பெண் பார்வதியோடு ஒற்றுமையாக இருப்பாள்.. அவள் பேசுவது கூட வெளியே சத்தம் கேட்காது. அக்னிக்கு தம்பியின் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததை பார்த்து மிகவும் சந்தோஷம்..
இதுபோல ஒரு பெண் தனக்கு மனைவியாக அமைந்தாள் போதும், தன் அன்னையோடு ஒற்றுமையாக இருந்தால் போதும் என்று நினைத்து இருந்தான் அக்னி.
ஒரு வாரம் கடந்திருந்தது அக்னியின் ஈமெயிலுக்கு, ஒரு ஈமெயில் வந்திருந்தது அதை பார்த்து சந்தோஷப்பட்டான் அக்னி..
அதைப் பார்த்ததும் பக்கத்தில் இருந்த தன்னுடைய பீ.ஏ பார்த்திபனுக்கு அந்த ஈமெயிலை காட்ட.. அதை பார்த்ததும்..
” சார் வாழ்த்துக்கள் சார் சாதிச்சிட்டீங்க நீங்க நினைச்சது மாதிரியே சூப்பர் சார்” என்று கைகுலுக்கி அக்னியை பார்த்திபன் பாராட்ட..
அக்னியின் நீண்ட நாள் கனவு இது கண்மூடி தன் தந்தையை நினைத்துக் கொண்டான்..
தன் தந்தையிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார்.. என்று அவரை நினைத்து கொண்டிருந்தான் கண்கள் மூடியபடியே.
பார்த்திபன் பேசியதை கூட கவனிக்காமல்.. அவனின் தந்தையின் நினைவு அவனை சூழ்ந்திருக்க, தந்தையோடு மனதில் பேசிக்கொண்டிருந்தான்..
சர்வதேச ஐடி கம்பெனிகளுக்கு விருது வழங்கும் விழா. டாப் 20 கம்பெனிகள் மட்டும் கலந்து கொள்ளும் விழா இது..
இதில் செலக்ட் ஆகுவதே மிகவும் கஷ்டம்.. இந்த அவார்டில் நிறைய கேட்டகிரி உள்ளது இதில் அக்னிபுரீஸ்வரன் ‘த யங் டேவலப் ஐ. டி கம்பெனி ‘ என்று அவார்ட் பெற்றதை நினைத்து மிகவும் சந்தோஷம் பட்டு கொண்டான்..
இன்னும் ஒரு வாரத்தில் டெல்லியில் நடக்கும், விழாவுக்கு கிளம்புவதாக இருந்தான். பார்வதியிடம் சொல்லி அவரை அந்த விழாவுக்கு அழைத்துச் செல்ல விரும்பம் தெரிவிக்க.
“நீ யே போயிட்டு வாயா, அம்மாவுக்கு சந்தோசம்” என்று டெல்லிக்கு வருவதை மறுத்துவிட்டார்…
ஒரு வாரம் கழித்து அந்த பிரம்மாண்டமான அவார்ட் பங்ஷனுக்காக டெல்லி வந்திருந்தான் அக்னி.. அவனின் நீண்ட வருட கனவு இது நிஜமாகி கொண்டிருப்பது எண்ணி சந்தோஷபட்டவன், சந்தோஷமான மனநிலையில் அவார்ட் கொடுக்கும் ஹாலிற்குள் வந்தான்…
அந்த இடமே பல வண்ண, கலர் லைட்டிங் விளக்குகளால் ஜொலித்தது, நிறைய வளர்ந்து வரும் ஐடி கம்பெனியோட பெயர் பலகை பேனர்கள், பெரிய திரையில் விளம்பரம் போல் தொலைகாட்சியில் வீடியோ போல் ஒலிபரப்பாக சத்தம் காதை பிளந்தது, மீடியாக்காரர்கள் வேற அவார்ட் வாங்க வருபவரிடம் பேட்டி எடுக்க மைக்கோடு அங்கங்கே நின்று அவரின் சேனலுக்காக வெற்றி பெற்றவர்களிடம் சிறிய மேடை போல் அமைத்து பேட்டி எடுத்துக்கொண்டிருக்கு..
அக்னி தன் முன் வந்த மீடியா காரர்களிடம் பேச மறுத்தவன்.. விருது வழங்கும் ஹாலிற்க்கு சென்று அவனுக்கென்று ஒதுக்கி வைத்து இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்..
சிறிது நேரத்தில் விருது வழங்கும் விழா தொடங்கியது..
முதலில் டாப் ஐந்து ஐ. டி கம்பெனிக்களுக்கு விருது வழங்க. அதில் உலகநாதன் கம்பெனி தான் முதல் இடத்தில் இருந்தது.
உலகநாதனுக்கு சென்னையில் மூன்று ஐ. டி கம்பெனிகள், மும்பையில் இரண்டு கம்பெனிள், சிங்கப்பூரில் ஒன்று என ஏகப்பட்ட ஐடி நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் உலகநாதன்..
வருடா வருடம் உலக நாதனுக்கே டாப் நம்பர் ஒன் அவார்ட் கிடைக்கிறது,..
அது போலவே இந்த வருடமும் அவருக்கே சிறந்த ஐ. டி நிறுவனம் நடத்தியவருபவர் என்று விருது வழங்க… அவரை மேடைக்கு அழைக்க..
50 து வயதில் இருக்கும் உலகநாதன், 40 வயது போல் தோற்றம் அளிப்பார்.. சாம்பல் வண்ண நிற கோர்டும் வெள்ளை நிற சட்டையும், அணிந்து வேகமாக நடந்து வருபவரை பார்த்த அனைவரும் இவருக்கா 50 யது, இவருக்கா? என்று கூறும் அளவிற்கு அவ்வளவு ஸ்டைலாக இருந்தார்.
அவர் நடந்து வரும் வேகத்தை வைத்தே இவர் எவ்வளவு சுறுசுறுப்பானவர் என்று தெரிந்து கொள்ளலாம்.. இதை விட இன்னும் நிறைய சாதிப்பார் என்று தோன்றும்…
7 அடி உயரத்தில்
கருப்பான நிறம், நீளமான முகம்.. அழகான முகவடிவம், கம்பீரமான தோற்றம், அனைவரையும் ரசிக்க தோன்றும் அவரில் அழகான சிரிப்பு..
நம்பர் ஒன் அவார்டை கையில் வாங்கியவர் அதை அனைவரும் பார்க்கும் வண்ணம் மேலே தூக்கி காட்டி.. அந்த அவார்ட் சிலைக்கு முத்தம் வைத்து ‘வீட்டுக்கு போலாமா’ என்று கேட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார் உலகநாதன்..
கீழே அமர்ந்திருந்த அக்னி புரீஸ்வரனுக்கு உலகநாதனை பார்த்து ஆத்திரமாக வர, இருக்கும் இடம் அறிந்து அமைதியாக இருந்தான்..
அடுத்தடுத்து இரண்டாம் இடம், மூன்றாம் இடம், என்று எல்லா கம்பெனிகளுக்கு அவார்ட் கொடுக்கப்பட, அனைவரும் சென்று வாங்கிக்கொண்டு பேசிவிட்டு வர.
அடுத்ததாக சிறந்த வளர்ந்து வரும் டாப் ஐ.டி கம்பெனிகளுக்கு அவார்ட் வழங்க, அதில் முதலிடம் அக்னி புரீஸ்வரன் கம்பெனிக்கு தான். அவார்ட் வாங்க அவனை..
” தா, யங் பாய் அக்னி புரீஸ்வரன் கம் பாய்” என்று அக்னியை தெரிந்த ஒருவர் மைக்கில் அவனை வேடிக்கையாக பேசி அக்னியை அவார்ட் வாங்க மேடைக்கு மேலே வரும்படி அழைக்க..
அவனும் சிரித்தபடியே அவார்ட் வாங்க மேடைக்கு சென்றான்.
மேடையில் ஏறியதுமா மைக்கில் பேசிய வரை அணைத்து விட்டே,, அவார்ட் வாங்க சென்றான் அக்னி..
அந்த அவார்டை கையில் வாங்கியவன்.. அதை உயர்த்தி காட்டி, கடவுளுக்கு நன்றி சொல்வது போல் தலை வணங்கி நன்றி சொல்லியவன். அவார்டை தன் மார்போர்ட் அணைத்து வைத்து கொண்டே மேடையை விட்டு கீழே இறங்க…
முதல் முதலில் உலகநாதன் கண்களுக்கு தென்பட்டான் அக்னி புரீஸ்வரன்..
இவன் யாரு என்பது போல் அவன்னையே பார்த்து இருந்தார் உலகநாதன்.. அவார்ட வாங்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறான், இது வரை இவனை எங்கையுமே பார்த்ததில்லையே என்று நினைத்தவர், பக்கத்தில் உள்ள அவர் நண்பரிடம் அக்னியை பற்றி கேட்க..
அக்னியை பற்றி நன்கு தெரிந்த அந்த நபர், அவனை பற்றி அனைத்தையும் கூற.. அவர் சொல்லியதை கேட்டு கொண்டவர்.
அவன் பூர்வீகம் திருநெல்வேலி என்று கேள்வி பட்டு சந்தோஷபட்டவர்..
நம்ம ஊருக்கார பயலா.. என்றே அவனை பார்த்திருந்தார்….
அவன் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்தவர். கவனித்துவிட்டு கடைசியில் ஒரு முடிவு எடுத்தவராக, அவனிடம் பேச வேண்டும் என்று காத்திருந்தார்.
இரவு உணவு பார்ட்டில் அக்னியை பார்த்து , அவனிடம் பேச அருகில் வர.
உலகநாதனை தன் அருகில் பார்த்ததும் ஆச்சரியம் ஆவது போல் அவரைப் பார்த்து “ஹாய் சார்” என்று கைகுலுக்க..
அக்னியை அணைத்து வாழ்த்து சொன்னார் உலகநாதன்.
அக்னிக்கு அவர் அணைத்து வாழ்த்து சொன்னதை நம்ப முடியவில்லை.
தன்னைவிட பல மடங்கு உச்சியில் இருப்பவர் தன்னிடம் பேசுவதே பெரிய விஷயம் இதில் அணைத்து வாழ்த்து சொல்ல கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு போனான் அக்னி.
“நம்ம ஊர்க்கார பையன் நீ உன்னை வாழ்த்தாட்டி எப்படி” என்றவர்..
” நான் திருச்செந்தூர் அக்னி நீ திருநெல்வேலியாமே,? “..
“ஆமாம் சார்”.. என்றான் அக்னி..
” நீ அவார்டு வாங்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் நானே அவார்ட் வாங்குற மாதிரி ஒரு ஃபீல், என்னை சின்ன வயசுல பாக்குற மாதிரியே இருக்கு யங் மேன்” என்று கைகுலுக்கியவர்..
அவனிடம் மட்டுமே நீண்ட நேரம் பேசினார்.
அக்னிக்கு ஆச்சரியம் எவ்வளவு பெரிய ஆள் இவர் என்றே தோன்ற பேசும் உலகநாதனே பார்த்து இருந்தான்…
உலகநாதன் தன் பையில் இருந்த ஒரு பிறந்தநாள் பாட்டி கார்டை எடுத்து அக்னியிடம் தந்து “நாளைக்கு என் பொண்ணுக்கு பிறந்தநாள் பார்ட்டி நீ கண்டிப்பாக உன் குடும்பத்தோடு வரணும்” என்று அழைத்து விட்டு.. மீண்டும் அவனை அணைத்து கைகுலுக்கி சென்று விட்டார்..
அவர் கொடுத்த கார்டை திருப்பி பார்த்தான்.. பர்த்தடே பார்ட்டி கார்ட், ரியா என்று பெயர் எழுதி இருக்க.
‘ரியா’ என்ற அந்த பெண்ணின் பெயரை சொல்லி பார்த்தவன்..
அவரே வந்து வான்டடா வந்து சிக்குனா விடுவேனா நான், நாளைக்கு வர்ரேன்டா உலகநாதா…..
error: Content is protected !!