Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

01. சின்னபொண்ணு - காதலுக்கு வேலி கட்டலாமாContest Stories 2026

காதலுக்கு வேலி கட்டலாமா 03

அத்தியாயம் 03**2

தட்டில் உணவு எடுத்துக் கொண்டு வந்த கோமதி தம்பியிடம் கொடுக்க “ இல்லக்கா நான் திரும்ப ஆஸ்பத்திரி போயிட்டு தான் வீட்டுக்கு போவேன். அதனால எனக்கு இப்ப சாப்பாடு வேண்டாம். நீ முதலில் கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லல ஆத்தா, சின்ன அக்கா,தம்பி, தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்காங்க பாப்பாவ கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ நான் வரேன்..” என்று கிளம்ப போனவனை பேபி அம்மா தடுத்தார்..



Advertisement

“ கதிரு கொஞ்சம் நில்லுய்யா இதோ வரேன்.. ”

Advertisement

என்று கூறிவிட்டு “ அடியே கோமதி சீக்கிரம் வா மகேஷுக்கு நான் ஒரு புடவை எடுத்தேன் தானே அதுக்கு ரவிக்கை தைக்க உன்கிட்ட தந்தேன் தானே அதை தா.. ” என்று கேட்டு மருமகளை உள்ளே அழைத்து சென்றார்..

Advertisement

 யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வேகமாக பேபியம்மாவின் வீட்டிற்குள் சென்றான் கதிர்..

Advertisement

 அங்கே உடலை சுருட்டி கொண்டு கட்டிலில் படுத்திருந்தாள் தமிழ்..

அவள் நன்றாக உறங்கி விட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு அருகில் சென்று அமர்ந்தவன் அவள் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு தலையை தடவியபடியே “ சீக்கிரம் பெரிய பொண்ணு ஆகிடு டி அப்பதான் மாமன்கிட்ட வேகமா வர முடியும்.. நீ மாமன் கிட்ட வந்தா உன்னை பூ போல வச்சு தாங்குவேன். இன்னைக்கு உங்க அப்பன் கேட்டான் பாரு அவ என் பொண்ணு அவளை கேக்க நீ யாருடான்னு?.. நீ எனக்கே எனக்கான சின்ன பொண்ணா வந்துட்டா எப்படி அவன் கேட்பான். சீக்கிரம் பெரிய பொண்ணு ஆயிட்டா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன்னை என்கிட்ட நான் எடுத்துபேன்.. எப்ப நீ என் சின்ன பொண்டாட்டியா வருவ டீ.. ”

மீண்டும் குனிந்து அவள் நெத்தியில் முத்தம் வைத்து விட்டு அவள் தலையை தலையணையில் வைத்து அங்கிருந்து வெளியேறி வந்தான்.. அவன் வரவும் பேபியம்மாவும், கோமதியும் வரவும் சரியாக இருந்தது.

“ இந்தாய்ய கதிர் இதுல மகேசுக்கு நான் எடுத்த புடவை இருக்கு. நாளைக்கு வந்து அவளை பார்த்துட்டு இதை கொடுத்துட்டு வரலாம்னு தான் இருந்தேன். ஆனா இப்ப வீடு இருக்கிற நிலைமைக்கு என்னால வர முடியாது. மகேஷ் கிட்ட அவளுக்கு நான் தந்தேன்னு சொல்லிக் கொடு. அவளுக்கு பிறந்தநாள் வருது பிறந்தநாள் அன்னைக்கு இதை காட்டிக்கிட்டு நம்ம ஊரு அம்மன் கோயிலுக்கு அவளை வரச் சொல்லு. ” அவரது தோழியை பிரிந்து இருக்கும் கவலை முகத்தில் அப்படியே தெரிந்தது..

“ அத்தை பாப்பாவ பாத்துக்கோங்க. அக்கா நீ செழியனயும் பாத்துக்கோ. அவனை இனி அடிக்காத தோளுக்கு வளர்ந்த பிள்ளை ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணிட்டா என்ன பண்ணுறது வாயால சொல்லி திருத்த பாரு. எல்லாரும் பாத்துக்கோங்க நான் போயிட்டு வரேன்.. ” என்று சொல்லிவிட்டு கதிர் அங்கிருந்து சென்றுவிட்டான்..

 அவன் சிந்தனை முழுவதும் தமிழ் தான் நிறைந்து இருந்தால்.. அவளை பற்றி நினைத்துக் கொண்டே அவனது பயணம் மீண்டும் அந்த மருத்துவமனை நோக்கி சென்றது..

 கோமதியும் உள்ளே சென்று கணவன் மற்றும் மகனை அழைத்து இரவு உணவை கொடுத்து அவரும் உணவு உண்டு விட்டு அறைக்குள் சென்று விட்டார்..

 கோமதி உள்ளே சென்றதும் கட்டிலில் அமர அவரது கையை பிடித்து தன் அருகே இழுத்தார் சரவணன்..

 கணவன் பிடித்த கையை உதறி விட்டு முகத்தை திருப்பி கொண்டார்..

“ என்னடீ உன் பிரச்சினை சரி நான் பாப்பாவை அடிச்சது தப்புதான் உன் கால்ல விழணுமா என்ன?. ” என்றார் கோவத்துடன்..

“ என் கால்ல நீங்க விழத்தேவை இல்லை. அத்தை உங்களை மிதிக்க சொன்னாவ அப்ப நான் உங்களை மிதிக்கட்டுமா?..”

“ இது என்னடி கேள்வி. நீ மிதியேன் தாராளமா மிதி உன்னை யாரு வேணாம்னு தடுத்தா? உனக்கு இல்லாத உரிமையா இந்த சரவணன் கிட்ட. என் செல்ல சிட்டு . மாமனுக்கு ஏத்த மயிலு.. 16 வயசுல உன்னை கட்டிக்கிட்ட போது இருந்த அதே மயக்கம் இப்பயும் உன் மேல இருந்து போக மாட்டேங்குது என்னடி பண்ணுன நீ என்ன?.. ” என்றார்.

 சற்று முன்பு இருந்த கோபம் எங்கே போனது என்று தெரியாது.. முகம் மிகவும் கனிந்து, குரல் கரகரப்பாக காதல் மன்னனாக பேசினார் சரவணன்..

“ ஆமா இப்பதான் எனக்கு 16 வயசு அவருக்கு 21 வயசு கல்யாணம் கட்டி இருக்கோம். லவ் பண்ணுறதுக்கு அரை கிழவன் ஆகிட்ட இன்னும் என்னய்யா லவ்ஸ்.. ”

“ அடி போடி இவளே.. என் மகனுக்கு இன்னும் கல்யாண வயசு வரல. என் பொண்ணு இன்னும் பெரிய பொண்ணு ஆகல. நான் சின்ன வயசுலயே கல்யாணம் கட்டினதால இப்ப எனக்கு 39 வயசு , உனக்கு 33 தான் ஆகுது. என் வீட்டுக்கு புது மாப்பிள்ளை வந்தா தான் நான் பழைய மாப்பிள்ளை ஆவேன். என் பொண்ணுக்கு மாப்பிள்ளை வரதுக்கு இன்னும் காலம் கிடக்குதுடீ அதுவரைக்கும் நான் தாண்டி புது மாப்பிள்ளை.. நான் லவ்ஸ் பண்ணுவேன் டீ. என் பொண்டாட்டி கிட்ட தானே லவ்ஸ் பண்ணுறேன். அதை யாரு கேட்பா என்னை?.. ” என்றார்..

 கணவன் மீது கோபம் இருந்தாலும் அதை தள்ளி வைத்துவிட்டு கணவனின் விருப்பத்திற்கு சம்மதித்தாள் கோமதி..

 மிகவும் சிக்கலாக தமிழ் பிறந்ததால் உடனடியாக சரவணன் குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டார்..

 கூடலின் முடிவில் மனைவியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்..

“ உன்ன பாத்தா 18 வயசு பையனுக்கு அம்மா மாதிரியே தெரியலடி இப்பயும் சின்ன பொண்ணு மாதிரி சிக்குன்னு தான் இருக்க.. ”

“ சீ போய்யா வெக்கம் கெட்ட மனுஷா .. ” என்று முகத்தை கணவன் மார்பில் மறைத்துக் கொண்டார்..

“ ஆமா அம்மா அவங்க பிரண்டுக்கு புடவை எடுத்து கொடுத்துட்டாங்க. நீ உன் சித்திக்கு ஒண்ணும் எடுத்து குடுக்கலையா டி பிறந்தநாள்கு.. ”

“ நான் எடுக்காமல் நானும் எடுத்து வச்சிருக்கேன்.. அத்தை கதிர் கிட்ட கொடுத்தா அது வேற விஷயம்.. ஆனா நான் அப்படி கதிர் கிட்ட கொடுத்து அனுப்ப முடியாது.. நான் தான் போய் கொடுக்கணும்.. நாளைக்கு நானும் அத்தை கூட போறதா தான் இருந்தது ஆனா இப்ப போக முடியாத சூழ்நிலை அதனால பிறந்த நாளைக்கு முன்னாடி நானே போயி கொடுத்துட்டு வந்துடுவேன்..”

“ அது சரி நீயாவது உன் சித்திக்கு எடுக்காம இருக்கிறதாவது போகக்குள்ள சொல்லு நானே அழைச்சிட்டு போறேன்.. ” இருவரும் பேசிக்கொண்டே உறங்கி விட்டார்கள்..

 மருந்தின் உபயத்தால் அடுத்த நாள் காலை ஓரளவுக்கு சாதாரணமாகவே இருந்தாள் தமிழ்..

“ தங்கம் எழுந்துட்டியா தாயி.. இரு புள்ளைக்கு அப்பத்தா காப்பி கொண்டு வரேன். பல் விளக்கி முகம் கழுவிட்டு வா.. ” என்று கூறி உள்ளே சென்று காப்பி எடுத்து வந்தவர்..

 முகம் கழுவி விட்டு போட்டிருந்த சட்டையால் முகத்தை துடைக்க சட்டையை தூக்கினாள் தமிழ். அதை பார்த்ததும் சந்தோசம் தாங்காமல் பேபி அம்மா

 “ ஹே, ஹே ஐ ஐ அடியாத்தி என் தங்கமே,என் செல்லமே, என் வைரமே மனசு குளிர்ந்து போச்சு டீ ராசாத்தி.. ” என்று சொல்லிக்கொண்டு வேகமாக தமிழை தன் வீட்டுக்குள் அழைத்து வந்தார்..

 அவர் போட்ட சத்தத்திலேயே என்னவோ ஏதோ என்று பெரிய வீட்டில் இருந்த மூவரும் வெளியே வந்தார்கள்..

“ என்ன ஆச்சு அத்தை.. ”

“ என் தங்கம் பெரிய மனுஷியாகிட்டாடி.. சீக்கிரம் ஆக வேண்டியத பாரு. சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லு.. முதல்ல மாமன் காரனுக்கு சொல்லுங்க.. ராசா அப்பத்தா போன் எடுத்துட்டு வா.. ” என்று பேரனை அனுப்பினார்..

“ மாமனுக்கு சொல்லனுமாம்ல ஏண்டி மதி அவன் உன் கூட பொறந்தவனா? தாய் கூட பொறந்தா தான் தாய் மாமா புரிஞ்சிக்கோ.. ”

“ அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும் பேசாம போய்யா.. மக பெரிய மனுஷியா ஆகிட்டா அந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல் ஏதாவது ஒரண்டை இழுத்தா உடனே அத்தை கிட்ட போய் சொல்லுவேன்.. அத்தை உங்க மகன் குழப்பம் பண்ணுறாரு என்னன்னு கேளுங்கன்னு அப்புறம் நடக்க வேண்டியதுக்கு நான் பொறுப்பில்லை இப்ப நீங்க புரிஞ்சி நடந்துக்கோங்க .. ” என்று கூறி விட்டு மகளை பார்க்க உள்ளே சென்றுவிட்டார்..

‘ இவளும் லேசுப்பட்ட ஆள் இல்லை அம்மா கிட்ட சொன்னாலும் சொல்லிடுவா. பேத்தி விசேஷத்துக்கு நாம ஏதாவது ஒரு வார்த்தை குறை சொன்னாலும் சாமி ஆடிடும். நாம இருக்கிற இடம் தெரியாம அமைதியா இருந்துடுவோம்..

 அவன் வரட்டும் அப்புறம் தனியா தான் அவனுக்கு இருக்கு அப்பு.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!