Skip to content
Post Views: 1,264
விழாக் காணுமே வானம் 10 (01)
வத்சலா ராகவன் – மது ஹனி
மலரின் சுகந்தத்தில் மின்னிய நட்சத்திரங்கள்.
போனை கையில் பிடித்தபடியே அசையாமல் அமர்ந்திருந்தாள் வைஷாலி. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்த சந்திப்பு எதேச்சையாக நிகழ்ந்தது என்ற போதும் சற்று முன் நடந்த உரையாடல் அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
Advertisement
‘அன்னைக்கு ஹோட்டல் போகும் முன்னாடி நான் ஏதாவது தப்பா செஞ்சிருந்தா ஸாரி’ என்றானே’ வருத்தம் தெரிவிக்கிறானா.
அவள் மனம் கல் எறிந்த குட்டையைப் போல குழம்பிக் கிடந்தது.
அர்ஜூன் அவளது நம்பரைக் கேட்டான் என்று அரவிந்த் கடைசியாக கூறியது நினைவு வர வைஷாலி உடனேயே அர்ஜூனுக்கு போன் செய்தாள்.
Advertisement
“என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னீங்களா” என்று அவள் கேட்கவும் அர்ஜூன் சற்றே ஆச்சரியம் கொண்டான்.
Advertisement
‘நான் அரவிந்திடம் நம்பர் கேட்ட விஷயம் இவளுக்கு தெரிந்து கால் செய்கிறாள்’ என்று புரிந்து கொண்டவன் மனதில் ஒரு யோசனை உதித்தது.
கேட்கலாமா வேண்டாமா என ஆயிரம் முறை யோசித்தான் அவன். ஸ்வாதியை அவளது அன்னையுடன் சேர்த்து வைக்க இதை விட ஒரு சந்தர்ப்பம் கிட்டுமா எனத் தெரியவில்லை அவனுக்கு.
“லாஸ்ட் இயர் ஒரு கவர் ஸ்டோரிக்கு அங்கிளை நீங்க அப்ரோச் செய்தீங்களே. டூ யூ ரிமம்பர்” அவன் கேட்க, சற்று முன் இருந்த மனநிலை முற்றிலுமாக மாறி மிகவும் உற்சாகமானாள் வைஷாலி.
Advertisement
“எஸ் அது என்னோட லாங்டைம் விஷ். அப்படி ஒரு கவர் ஸ்டோரி செய்ய வேண்டும் என்று” சொன்னாள் தான். ஆனாலும் அரவிந்தின் கோபமும் அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தது. மறுக்கவும் முடியாமல் ஒப்புக் கொள்ளவும் முடியாமல் ஊஞ்சலாடியது அவளது மனது.
அவளது பல நாள் கனவாயிற்றே அது.
“உங்களுக்கு ஒகேன்னா ஐ ஆம் இன். பட் ஸ்வாதி கிட்ட நீங்க தான் கேட்கணும்” என்று அவன் சொல்ல
“ச.. சரி “ வில் டூ இட்” எல்லாவற்றையும் வைஷாலி தனது பொறுப்பாக்கிக் கொண்டாள்.
இரவு வெகு நேரம் ஆகியும் தூக்கம் பிடிக்காமல் ஸ்வாதி அறையிலேயே நடை பழகிக் கொண்டிருந்தாள்.
வைஷாலியின் நம்பர் கேட்டதும் அரவிந்த் மனப்பாடமாக சொன்னது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘அரவிந்திடம் அப்படி கேட்டிருக்க கூடாது. மார்னிங் சாரி சொல்லிடணும்’ என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
வைஷாலி அரவிந்தைப் பற்றிய சிந்தித்துக் கொண்டே கதவை திறந்து பால்கனி வந்துவிட்டிருந்தாள். மார்கழி மாசத்துக் குளிர் காற்று அவளை தாவி அணைத்துக் கொண்டது.
“ஸ்ஸ்ஸ் குளிருது” கைகளை தேய்த்துக் கொண்டு உடலை குறுக்கி கொண்டாள் ஸ்வாதி.
‘அன்றும் இப்படித் தானே குளிரில் நின்றாள். அவன் வந்து அணைத்துக் கொண்டானே’ என மனம் அசைபோட, இன்று மாலை அதே போல அவளது தோளை அணைத்துக் கொண்டு அவன் நின்றதும் மனக்கண் முன் காட்சியாய் விரிந்தது.
“அவனுக்கென்ன எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்வான்” மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாலும் அந்த புகைப்படத்தை காணும் ஆவலை மட்டும் அவளால் கட்டுப் படுத்திக் கொள்ள இயலவில்லை.
சற்றே யோசித்தவள் வைஷாலியின் எண்ணை அழைத்திருந்தாள்.
“ஹாய் ஸ்வாதி, வாட் எ சர்ப்ரைஸ். இப்போ தான் உங்களுக்கு கால் செய்யலாமா வேண்டாமா. லேட் ஆகிருச்சேன்னு யோசனையில் இருந்தேன். நீங்களே கால் செய்துட்டீங்க” என வைஷாலி கூறவும் என்ன விஷயம் என்று கேட்டறிந்தாள் ஸ்வாதி.
வைஷாலி தனது ட்ரீம் கவர் ஸ்டோரி பற்றி ஸ்வாதியிடம் கூறினாள். வைஷாலி அதை விவரித்த போது அவளின் குரலில் தொனித்த மகிழ்ச்சியும் உற்சாகமும் ஸ்வாதியை அசைத்தது.
“நாளைக்கே கூட ஒகே” எதையும் யோசிக்காமல் சொல்லிவிட்டாள். ஸ்வாதி.
ஸ்வாதி அப்படித் தான். தூய்மையான அன்பின் சிறு துளியிலும் கரைந்து போவாள். அந்த அன்பிற்காக எதையும் செய்வாள். தன் மீது அன்பு கொண்டவர்களை தனக்கும் மேலான உயரத்தில் வைத்து அவர்களைக் கொண்டாடுவாள். அவர்களை ஒரு போதும் விட்டுக் கொடுக்கவும் மாட்டாள்.
வைஷாலிக்காக, அவளது தூய அன்பிற்காக ஸ்வாதி சம்மதித்திருந்தாள்.
வைஷாலியுடன் பேசிவிட்டு போனை வைத்தப் பிறகு தான் ஸ்வாதிக்கு ஒரு யோசனை தோன்றியது. அகடமிக்கு அரவிந்தையும் வரவழைத்து இருவரையும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க வைக்க திட்டம் போட்டாள்.
மறுநாள் அதிகாலையிலேயே ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து கொண்டு அகடமிக்குப் புறப்பட தயாரானான் அர்ஜூன்.
இரவே வைஷாலி அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். ஸ்வாதி சம்மதித்து விட்டதாகவும் அடுத்த நாளே வைத்துக் கொள்ளலாம் என்றும் அவள் தெரிவித்து அவனுக்கு ஓகேவா என்று கேட்டிருந்தாள்.
அர்ஜூனும் தனது சம்மதத்தை தெரிவித்திருந்தான்.
“என்னடா இன்னிக்கு காலங்கார்த்தாலேயே ராக்கெட்டோடு கிளம்பிட்ட” அத்தை அவனிடம் சத்துமாவு கஞ்சியை கொடுத்தபடி கேட்டார்.
“அகடமிக்கு போயிட்டு வரேன் அத்தை. ஸ்வாதி வரச் சொன்னாளாம்” அத்தையைப் பார்த்து விஷமமாகக் கண்ணடித்தான்.
“ஏன்டா உனக்கு விளையாட நான் தான் கிடைத்தேனா” அத்தை சிரித்துக் கொண்டே அவன் தலையை செல்லமாக தட்ட அர்ஜூன் அவரின் முகத்தை கனிவுடன் பார்த்தான்.
“என் கூட விளையாட தான் என் குஷ்பூ இருக்காளே. அப்புறம் உங்களோட எதுக்கு விளையாடப் போறேன்” அவன் குரலில் உல்லாசம் நிரம்பி வழிந்தது.
வைஷாலியின் கவர் ஸ்டோரி பற்றி அத்தையிடம் கூறினான்.
“அப்போ முழு நாளும் அங்கே தான் இருக்கணுமா” என்று கேட்டபடியே காலை உணவை சிறிய லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தார்.
“வச்சிடுங்க அத்தை, எடுத்துக்கிறேன்” ஷூவை மாட்டிக் கொண்டே அர்ஜூன் சொல்லவும், “கதவை சாத்திட்டு போயிட்டு வா” என்றவர் பூஜைக்கு பூ பறிக்க தோட்டத்திற்கு சென்றார்.
அதிகாலையிலேயே ஸ்வாதி அகடமிக்கு வந்துவிட வைஷாலி அவளுக்கும் முன்னால் அங்கே காத்திருந்தாள்.
ஸ்வாதி வைஷாலியிடம் பேசிக் கொண்டிருந்த போது .“ஹாய் வைஷாலி” என குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள்.
“ஒஹ் மேடமும் வந்திருக்காங்களா” சற்றே கேலி இழையோட சொன்னான் அர்ஜூன்.
‘என்னவோ நான் வருவேன்னு தெரியாத மாதிரி கேட்கிறான்’ மனதில் நினைத்தவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் பார் மேகிங் மை ட்ரீம் கம் ட்ரூ. அண்ட் சாரி நீங்க கேட்ட போட்டோவை இன்னிக்கு ஈவனிங் அனுப்பறேன்” என போட்டு உடைத்தாள் வைஷாலி.
‘இவனும் போட்டோ கேட்டிருக்கானா’ என ஸ்வாதியும், ‘என் குஷ்பூக்கும் போட்டோ பார்க்க ஆசையா இருந்திருக்கு போல’ என அர்ஜூனும் மனதில் நினைத்துக் கொண்டதை அவர்களின் விழிகள் சத்தம் போட்டு வாசித்துக் கொண்டிருந்தன.
“க்கும்ம். உங்களுக்காக மட்டும் தான் வைஷாலி நான் ஒத்துக் கொண்டேன்” வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்துக் கூறினாள் ஸ்வாதி.
மனதிற்குள் சிரித்துக் கொண்ட அர்ஜூன் “நானும்” என்று ஆரம்பிக்கவும் ஸ்வாதி அவனைப் பார்த்து முறைத்தாள்.
சிரிப்பை அடக்க வெகு பாடு பட்ட அர்ஜூன் சொல்ல வந்ததை முடிக்காமலே நிறுத்திவிட வைஷாலி என்னவென்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஸ்வாதி இடை புகுந்தாள்.
“எங்க ரொட்டீன் பத்தி கேட்டீங்களே. எங்க மார்னிங் 4.30 க்கு ஸ்டார்ட் ஆகிடும். வீட்டிலேயே யோகா, ப்ராணாயனம் செய்வோம். அப்புறம் 5.30 டூ 6.30 ஜாகிங். அப்புறம் பேஸ்கட் பால் கோர்ட் வருவோம்” என்று சொல்லிக் கொண்டே வைஷாலியை பாஸ்கட் பால் கோர்ட்க்கு அழைத்து வந்தாள்.
‘இப்போ கூட என் குஷ்பூக்கு ‘என்’ அப்படின்னு சொல்ல வரலை. எங்கன்னு என்னையும் சேர்த்து தான் சொல்லுது’ அர்ஜூன் மனம் நெகிழ்ந்து கிடந்தது.
“நீங்க கேள்விகள் கேட்டா சொல்ல இன்னும் கொஞ்சம் ஈசியா இருக்கும். இது போல கவர் ஸ்டோரி எங்களுக்கு பர்ஸ்ட் டைம்” அர்ஜூன் கூற அவனோடு சேர்ந்து ஆம் என்றாள் ஸ்வாதி.
ஒரு வருடமும் இந்த வரை முறைகளை எல்லாம் இருவரும் எங்கே கடைபிடித்தார்கள்.
எந்த விளையாட்டுத் துறையானாலும் அதில் சாதிக்க வேண்டுமெனில் அதற்கு நிறைய உழைப்பும், டேடிகேஷனும் கூடவே பல தியாகங்களும் செய்ய வேண்டும்.
“நீங்க நார்மல் ஸ்கூலை மிஸ் செய்ததே இல்லையா” வைஷாலி கேள்விகளை கேட்க அவர்கள் பாஸ்கட் பால் கோர்ட்க்கு வந்தார்கள்.
“நான் செகண்ட் ஸ்டாண்டர்ட் வரை ஸ்கூல் படிச்சேன். இவ தான் ஸ்கூலுக்கே போனதில்லை” கேலியாக சொன்னான் அர்ஜூன்.
“அவனை விட நான் தான் டென்த்லேயும் ப்ளஸ்டூவிலும் அதிக மார்க்” வெட்டும் பார்வை ஒன்றை அவன் மீது செலுத்தியபடியே சொன்னாள் அவனின் குஷ்பூ.
“ப்ரைவேட்டா எக்ஸாம் எழுதினோம். அம்மா தான் எல்லா பாடமும் சொல்லிக் கொடுத்தாங்க” பேச்சின் சுவாரசியத்தில் அம்மா என்று அவள் கூறிவிட்டாள். அந்தச் சொல்லின் ஒலி அவள் செவியில் நுழைந்து இதயத்தை தாக்கியதும் அவள் முகம் தானாக வாடிப் போனது.
‘இந்த வாட்டம் சீக்கிரமே மலர்ச்சியா ஆகும் குஷ்பூ’ அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
பாஸ்கட் பாலை உருட்டிக் கொண்டே எம்பி கூடையில் போட்டவள், ‘இங்க ஒன் ஹவர் போல ஆடுவோம்” என்றாள்.
“ஒன் டே வித் தி டென்னிஸ் ஸ்டார்ஸ்” கனவு நனவாகிக் கொண்டிருந்தது வைஷாலிக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
“கொஞ்சம் பிக்ஸ் எடுத்துக்கவா” எனவும் உடனே சம்மதம் கூறினர்.
“டென்னிஸ் தவிர பாஸ்கட் பால் தான் உங்களுக்கு பிடிக்குமா” வைஷாலி கேள்விகளை தொடர்ந்தாள்.
“டென்னிஸ் மட்டும் தான் பிடிக்கும். பாஸ்கெட் பால், வாலிபால் எல்லாம் ஸ்டெமினா பில்ட் செய்ய ஆடுறது தான். பெருசா கேம் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்றதில்லை” அர்ஜூன் அக்கேள்விக்கு பதில் சொன்னான்.
“நீங்க பாஸ்கெட் பால் ஆடியிருக்கீங்களா” என்றபடியே வைஷாலியை நோக்கி பந்தை எறிந்தாள் ஸ்வாதி.
“ஹே ஸ்கூலில் ஆடுவோம். பிடி ஹவர்ல .நீங்க ஆடுங்க. நான் ரேண்டமா கொஞ்சம் பிக்ஸ் எடுத்துக்கிறேன்” என்று தனது டிஎஸ்எல்ஆரில் படம் பிடித்துக் கொண்டாள் வைஷாலி.
ஸ்வாதி பந்தை தட்டிக் கொண்டே போக அவளிடம் இருந்து அதை பறிக்க முயன்றான் அர்ஜூன்.
“நீங்க கேட்டுட்டே இருங்க. நாங்க சும்மா விளையாட்டுக்கு தான் ஆடுறோம்” அவர்கள் விளையாடுகிறார்கள் என்று அமைதியாக இருந்த வைஷாலியை பார்த்து கூறினான் அர்ஜூன்.
“உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆகாதா” வைஷாலி கேட்டாள்.
“என்ன வைஷூ, நீங்களே எத்தனை டோர்னமன்ட்க்கு வந்திருக்கீங்க. க்ரௌட் எவ்வளவு ஆரவாரம் செய்வாங்க. அதில் எல்லாம் டிஸ்ட்ரெக்ட் ஆனா எப்படி மேட்ச் ஆடுவது” ஸ்வாதி பேசிக் கொண்டே லாவகமாக எம்பி மறுபடியும் கூடைக்குள் பந்தை போட்டு விட அது கீழ விழும் சமயம் அர்ஜுன் தட்டிப் பறித்துக் கொண்டான்.
“எப்படி அந்த கான்சன்ட்ரேஷன் வருது உங்களுக்கு” வைஷாலி மிகவும் ஆர்வமாக கேட்டாள்.
“யோகா. மெடிடேஷன். அப்புறம் டையட்” அர்ஜூன் சொல்ல “டயட்டுக்கும் கான்சன்ட்ரேஷனுக்கும் என்ன சம்பந்தம்” என கேட்டாள் வைஷாலி.
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. ஹெல்தி பாடி ஹெல்தி மைன்ட்” ஸ்வாதி சொல்ல ‘வாவ்’ என்று ஆச்சரியம் கொண்டாள் வைஷாலி.
“திருக்குறள் எல்லாம் சொல்றீங்க. இது எவ்வளவு ஹாட் நியூஸ் ஆகும் தெரியுமா. இவ்வளவு நாள் எப்படி மீடியாகிட்ட சிக்காம இருந்தீங்க. பார்ட்டீஸ் கிடையாது. சோஷியல் லைப் கிடையாது. உங்க பிரண்ட்ஸ் எல்லாம் பார்ட்டி குடுக்க சொல்லி கேட்க மாட்டாங்களா”
பிரண்ட்ஸ் என்று வைஷாலி சொல்லவும் ஸ்வாதி, அர்ஜூன் இருவரும் அந்த வார்த்தையில் உறைந்து போனார்கள்.
அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் என்று தானே இத்தனை வருடங்களாக உற்ற நண்பர்களாக இருந்தார்கள்.
நார்மல் லைப். அது எப்படி இருக்கும் என்று அவனுக்காவது லேசாக நினைவில் இருக்கிறது.
ஏழு வயது வரையிலும் மற்றப் பிள்ளைகளைப் போல வளர்ந்தவன் டென்னிஸில் சாம்பியன் ஆன போது ‘அகடமியில் சேர்ந்து கொள்கிறாயா’ என்று அவன் அப்பா அவனிடம் அவனது விருப்பத்தைக் கேட்டார்.
“நான் உனக்கு பிரண்டா இருக்கேன், நீ இங்கேயே சேர்ந்துக்கோ” தன்னுடன் சாம்பியன்ஷிப் கப்பை பகிர்ந்து கொண்டவள் பிரியமாக சொல்லவும் அவன் சந்தோஷமாக சம்மதித்து விட்டான்.
ஸ்ரீதேவியும் ரங்கநாதனும் ஏன் பாட்டியும் கூட ஒரு நாளும் அவனை விட ஸ்வாதியை அதிகமாக கொண்டாடியதில்லை.
ஆனால் ஸ்வாதிக்கு அப்படியல்லவே. அவளுக்கு சாய்ஸ் என்று இருக்கவே இல்லை. மூன்று வயது குழந்தைக்கு என்ன தெரியும். தந்தையின் இலட்சியமே அவளது வாழ்க்கையானது.
அவளது கடினமான பாதையில் வசந்தப்பூக்களை நிறைத்தது அவனது நட்பு. அவளது வாழ்க்கையின் தருணங்களை இனிமையாக்கியது அவனது அன்பு.
“என்னாச்சு, நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா” வைஷாலி பதற திடுக்கிட்டு சுயநினைவு பெற்றனர் இருவரும்.
“ச்ச்சே ச்சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. உங்க கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. அதான். எங்களுக்கு க்ரவுட்ன்னா அலர்ஜி. அதான் பார்ட்டிஸ் பிரண்ட்ஸ் எல்லாம் இல்ல” சமாளித்தான் அர்ஜூன்.
வைஷாலி முகம் வாடியதைக் கண்ட ஸ்வாதி அவளை உற்சாகப் படுத்தும் வண்ணம் அவர்கள் டோர்னம்ன்ட்களின் போது நடந்த சில காமெடிகளை கூறினாள்.
மனம் நிறைய சிரித்துக் கொண்டிருந்த வைஷாலியை பார்த்த ஸ்வாதிக்கு அப்போது தான் மனம் சமாதானம் ஆனது.
‘நான் சில சமயம் டல்லா இருந்தாலும் இப்படித் தான் எதையாவது சொல்லி உடனே சிரிக்க வச்சிருவா’ அர்ஜூனின் மனம் அவள் மீதான அன்பில் தழும்பி வழிந்தது.
“கிராஸ் கோர்ட்ஸ் GRASS COURT எங்களோட மிகப் பெரிய பலம். வெளிலே க்ராஸ் கோர்ட் இருக்கு. அப்புறம் போகலாம்” என்றாள் ஸ்வாதி.
“அது எனக்குத் தெரியும். விம்பிள்டன்ல நீங்க தான் எவர் ராக்கிங் ஸ்டார்ஸ். பட் உங்களுக்கு க்லே CLAY COURT தான் கொஞ்சம் வீக். ஆம் ஐ ரைட்” வைஷாலி கேட்க “யூ ஆர் பெர்பேக்ட்லி ரைட்” என்றாள் ஸ்வாதி.
தனது கேமராவில் எடுத்த படங்களை வைஷாலி ஸ்க்ரோல் செய்ய அவள் முகத்தில் தெரிந்த திருப்தியின்மையை ஸ்வாதி கண்டு கொண்டாள்.
“என்னாச்சு, இன்னும் பிக்ஸ் வேணும்னா எடுத்துக்கோங்க” ஸ்வாதி சொல்லவும் வைஷாலி புன்னகைத்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனிடம் இருந்து பாலை தட்டிப் பறித்து விட்டிருந்தாள் ஸ்வாதி.
நேற்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆடுவதைப் போல ஆடிக் கொண்டிருந்த இருவரையும் தனது டிஎஸ்எல்ஆரில் பதிவு செய்து கொண்டிருந்தாள் வைஷாலி.
அன்றும் இருவரும் ஒரே போல உடை அணிந்தே இருந்தனர்.
“நியூ பிகினிங்ஸ்” என்ற வாசகம் தாங்கிய டி ஷர்ட் அவர்கள் வாழ்விலும் புதிய ஆரம்பத்தை கொண்டு வருமா.
பந்தைக் கைப்பற்ற இரு கரம் கொண்டு அர்ஜூனின் தோளைப் பற்றி ஸ்வாதி தள்ளிவிட “ஸ்வாதி” என்ற அதட்டலான குரலில் கவனம் சிதறி தடுமாறினாள் பெண்.
அர்ஜூனை தள்ளிய அதே வேகத்தில் தரையில் விழ இருந்தவளை “குஷ்பூ” என்று தாங்கிப் பிடித்துக் கொண்டவனின் தோளை இயல்பாக பற்றிக் கொண்டவள் கோபம் பொங்க நின்றிருந்த அரவிந்த்தைப் பார்த்தாள்.
வெகு இயல்பான அவர்களின் அன்னோன்யத்தை போட்டிகளில் கண்டு அதிசயம் கொள்வாள் வைஷாலி. இன்று நேரில் பார்த்ததும் மகிழ்ந்து ரசிக்க முடியாமல் அவளை அதிரச் செய்தது அவள் செவிகளில் விழுந்த குரல்.
இன்னும் அர்ஜூனின் தோளைப் பற்றிக் கொண்டே நின்றிருந்த ஸ்வாதி “அறிவிருக்கா உனக்கு, நீ போட்ட கூச்சலில் கீழே விழுந்திருப்பேன்” என்று அரவிந்த்தைப் பார்த்து கத்தினாள்.
அதோடு அவனோடு சண்டை பிடிக்க அவனை நோக்கிச் சென்றாள்.
ஓரத்திலே படம் பிடித்துக் கொண்டிருந்த வைஷாலி, சண்டைக் கோழிகளைப் போல முறைத்துக் கொண்டிருந்த ஸ்வாதியையும் அரவிந்தையும் கண்டு சிறு பயத்தோடு அர்ஜூன் அருகில் வந்து நின்று கொண்டாள்.
அப்போது அவளை அங்கே கண்ட அரவிந்த் ஒரு கணம் பேசவும் மறந்து திகைத்துப் போய் சிலையாக நின்றான்.
error: Content is protected !!