Skip to content
Post Views: 658
அத்தியாயம் 05**1
Advertisement
பேபியம்மாவிடம் இருந்து கதிருக்கு விசயம் தெரிந்தவுடன் அந்த வீடு பரபரப்பாக இயங்க ஆரம்பித்தது..
Advertisement
கதிர் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.. சாதாரணமாக தாயிடம் தகவலை கூறி அவரையும் ரெடியாக சொல்லிவிட்டு அவனது மற்ற அக்கா ராஜேஸ்வரிக்கு அழைப்பு விடுத்தான்..
Advertisement
அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்
Advertisement
“ என்னய்யா கதிர் இவ்வளவு நேரமாவே கூப்பிடுருக்க? ”
“ ராஜி அக்கா நம்ம கோமதி அக்கா பொண்ணு பெரிய மனுஷியாகிட்டாலாம். இப்பதான் அத்தை கால் பண்ணி சொன்னாங்க. சீக்கிரம் புறப்பட்டு வா இங்க அம்மாவுக்கு ஒத்தாசையா எடுக்க வேண்டியதை எடுத்துட்டு நம்ம அங்க சீக்கிரமாவே போகணுமே.. ”
“ அடடே! காலங்காத்தாலே ரொம்ப நல்ல செய்தி கிடைச்சிருக்கு இதோ வந்துடுறேன். நீ அங்க ஆக வேண்டியதை பார்.. என்று கதிருடன் பேசிக்கொண்டு அழைப்பை நிறுத்தாமல் மகளை அழைத்தாள் ராஜி “ நிலா, அடியே நிலா சீக்கிரம் எழுடி..”
ராஜி அந்த பக்கம் பேசவும் கதிர் அழைப்பை துண்டித்து விட்டு தங்கை மற்றும் தம்பியை எழுப்பி தகவல் சொன்னான்..
“ என்னம்மா? இன்னைக்கு பள்ளிக்கூடம் லீவு தானே! ஏன் மா எழுப்புற? தூக்கம் தூக்கமா வருதுமா. ”
“ அடியே பெரியம்மா வீட்டுக்கு போகணும் சீக்கிரம் ரெடியாக போறியா? இல்ல இங்க பக்கத்துல உங்க சித்தி வீட்டுல விட்டுட்டு போகவா?. ”
“ ஐயோ அம்மானா என் செல்ல அம்மா தான்.. நானே பெரியம்மா வீட்டுக்கு போகணும். அங்க அக்காவோட விளையாடனும்னு நினைச்சுகிட்டு உன்கிட்ட எப்படி கேட்கிறதுனு தெரியாமல் இன்னைக்கு பெரிய மாமா வந்ததும் மாமா கிட்ட சொல்லி கேட்கணும்னு நினைச்சேன்.. நீயே கூட்டிட்டு போறியே என் செல்லம்மா இப்படி பதமா சொன்னா உடனே நிலா எழும்பி பத்து நிமிஷத்துல ரெடியாகிடுவா.. அப்படியே அங்க கொஞ்ச நாளைக்கு நிக்கிறதுக்கு எனக்கு உடுப்பெல்லாம் ரெடி பண்ணி வைம்மா..” இன்று தாயிடம் செல்லம் கொஞ்சி விட்டு நிலா ஓடிப் போய் குளித்து ரெடியாக ஆரம்பித்தாள்..
ராஜிக்கு 26 வயது.. 18 வயதில் திருமணம் முடித்து எட்டு வயது நிலாவிற்கு..
ராஜியின் கணவன் ரமேஷ் துபாய் நாட்டில் வேலைக்காக சென்று இருக்கிறான்..
நிலா விற்கு நான்கு வயது இருக்கும் போது போனவன். ஐந்து வருட காண்ட்ராக்டில் போனதால் காண்ட்ராக்ட் முடிந்ததும் தான் வருவான்..
வெளிநாடு போய் பெரிய வீடு கட்டி விட்டான்.. வீட்டோட கூடிய இடத்தில் அவனுக்கு மருத்துவக் கிளினிக் மற்றும் பார்மசி வைப்பது தான் ஒரே திட்டம் அதற்கு பணம் திரட்ட தான் வெளிநாடு சென்றிருக்கிறான்..
அந்த ஊரில் அரசாங்க மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் மிகுந்த தூரம் செல்ல வேண்டும்.. வாகன வசதி கொண்டவர்களால் மட்டும் உடனடியாக அவசரம் என்றால் போக முடியும்.. அரசு பேருந்து வந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு ஒரு அவசர நேரத்தில் போக முடியாது.. அதனால் பிறந்த ஊரை நேசித்த ரமேஷ் அந்த ஊர் மக்களுக்காக அவனால் முயன்ற உதவி குறைந்த பணத்திலேயே நல்ல முறையான சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சாதாரண சரிய கிளினிக் தான் தற்பொழுது ஆரம்பிக்க போகிறான்
வீடு கட்டி இப்பொழுது தான் ஆறு மாதம் ஆவதால் அதற்குரிய கட்டிடம் இன்னும் ஆறு மாதம் கழித்து கட்ட ஆரம்பிக்கலாம் என யோசித்து பணத்தை மனைவிக்கு அனுப்பிய மிகுதியை சேமிக்கிறான்..
கனவனுக்கு வாய்ஸ் மூலம் தகவல் சொல்லிவிட்டு வேகமாக மகளையும் அழைத்துக் கொண்டு தம்பியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் ராஜி..
ஆளுக்கு ஒரு வேலையாக இருந்தார்கள்.. செல்வி வேகமாக பூக்கள் அனைத்தையும் பறிக்க நிலா வந்து அவளுக்கு ஒத்தாசையாக இருந்தாள்..
அன்பு பின்பக்கம் மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தான்..
அப்போது இளநீர் பறித்துக் கொண்டு நாட்டுக்கோழி முட்டை, காய்கறிகள் என ஒவ்வொன்றாக வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்துக் கொண்டு இருந்தான் கதிர்..
“ ஐயா கதிர் இதெல்லாம் நம்ம கொண்டு போறது சரி ஆனா மரியாதைக்கு நம்மளும் சீர் செய்யணுமே நகை போடணுமே என்ன செய்யபோறோம்.. ” இப்பொழுது தான் இருந்த பணத்தை எல்லாம் நிலக்கடலைக்கு உரம், எண்ணெய் என அதற்கு தேவையான செலவுகளை பார்த்தான்..
“ அதெல்லாம் பாத்துக்கலாம்மா அதை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்.. போறதுக்கு ரெடி பண்ணுங்க போதும்”
“ என்னய்யா இப்படி சொல்லிட்ட. உன் கையில இப்ப அந்த அளவுக்கு காசு இல்லை.. எனக்கும் தெரியும். எங்கேயும் கடனை வாங்கி கடனில் இறங்கிடாத சாமி.. கடனால் நான் பட்ட கஷ்டம் போதும்.. ”
“ கடன் வாங்க மாட்டேன் (ஆட்டு) கிடாயை, நம்ம செவளையனை (காளை மாடு )இரண்டு பேரையும் தட்டி விடுவோம்.. ”
“ நல்லதுய்யா. கஞ்சோ, கூழ் உங்க சொந்த காசுல குடிச்சிட்டு கடன் படமா நீங்க எல்லாரும் வாழ்ந்தாலே எனக்கு போதும்..
எத்தனை சவரன் பண்ண போற? “
“ குறைஞ்சது அஞ்சு சவரனாவது பண்ணனுமே.. ”
“ சரிய்யா உன் வசதிப்படி பார்த்து பண்ணிடு. நாள பின்ன நம்ம நிலா குட்டியும் பெரிய மனஷி ஆயிடுவா அவளுக்கும் இதே மாதிரி பண்ணனும்.. அப்புறம் செல்விக்கு பொண்ணு பிறந்தா அவளுக்கு பண்ணனும்.. கோமதி,ராஜி,செல்வி என் மூணு பொண்ணுங்களுக்கும் இடையில அண்ணன்,தம்பி நீங்க ரெண்டு பேரும் செய்யும் முறைல எந்த குறைபாடும்,வேற்றுமையும் வந்துவிடக்கூடாது.. ” என்றார் மகேஷ்.
“ என்னம்மா நீ இப்படி சொல்லிட்ட.. இன்னைக்கு சூழ்நிலை இப்ப பார்ப்போம்.. அப்புறம் நிலாவுக்கு இன்னும் வயசு இருக்கு. நிலா பிரச்சனையை அப்புறம் பார்ப்போம்.. தம்பி மனசை ஏன் இப்பவே கஷ்டப்படுத்தற நீ.. ” என்று கேட்டுக்கொண்டே ராஜி உள்ளே வந்தாள்..
“ வா அக்கா. அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை.. இதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோசம் தான்.. நான் வெளியே போறேன். நீ ஆக வேண்டிய வேலையை பாருக்கா.. ” என்று கூறி விட்டு கதிர் வெளியே சென்றான்..
“ அடி என்னடி நீ வேற என் பொண்ணுங்க மனசு சுணங்காம இருக்கணும்.. அதுக்கு உங்களுக்கு இடையில் வேற்றுமை இருக்க கூடாது அதைத்தான் நான் சொன்னேன்..”
“ அதெல்லாம் ஒரு வேற்றுமையும் வராது என் தம்பியை எங்கயும் நான் விட்டு கொடுக்க மாட்டேன். அப்போ பாத்துக்கலாம் அதை. நீ போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டியா?..”
“ ஆமா அப்படித்தான் நல்லா சொல்லுக்கா. அண்ணா தமிழ் பாப்பா சடங்கு சீர் செலவ பாத்துக்கட்டும்.. நான் எதுக்கு இருக்கேன். நானும் தாய் மாமா தான். நிலா குட்டி சீர் செலவ நான் பாத்துப்பேன்.. நிலா பெரிய மனுசியாகும் போது நான் படித்து வேலைக்கு போயிடுவேன்.. அப்ப அத நான் பாத்துக்குவேன்.. செல்விக்கு பாப்பா பிறந்தா ரெண்டு பேரும் சேர்ந்து பாத்துப்போம்.. அஞ்சு வருஷம், பத்து வருஷம் பிறகு நடக்கிறத நினைத்து கவலைப்படாம இப்ப ஆக வேண்டிய வேலையை பாருங்கம்மா.. சீக்கிரம் போகணும் எல்லாரும்.. ரெடி பண்ணி கிளம்புங்க.. அண்ணா ஆட்டோ கூப்பிட சொல்லிட்டு போகுது நான் ஆட்டோ கூப்பிட போனும் நான் போய் குளிச்சிட்டு ரெடியாகுறேன்.. ” என்று பால் கறந்து கொண்டு வந்த அன்பு அவர்கள் பேசியதை கேட்டு அவன் கருத்தை சொல்லிவிட்டு சென்றுவிட்டான்..
“ எங்க ராஜி இந்த மூட்டுவலி மூணு நாளா என்ன போட்டு ரொம்ப பாடு படுத்தி வைக்குது.. வீட்டு வேலை எல்லாம் செல்வி தான் பாக்குது. சமையல் கூட கதிர் தான்.. உன்ன வர சொல்லத்தான் பார்த்தேன். ஆனா நீயும் ஒத்தையாளா அந்த வீட்டு வேலை எல்லாத்தையும் பாத்துட்டு கஷ்டப்படுறியே இன்னும் நானும் ஏன் உனக்கு கஷ்டத்தை கொடுக்கன்னு உன்னை கூப்பிடல.. இந்த காய்கறி,பழங்கள் எல்லாம் எடுத்து கவர்ல போட்டு ரெடி பண்ணனும் ராஜி அந்த வேலையை கொஞ்சம் முடி.. ”
“ அட என்னம்மா நீ. பெரிய சீனத்து வேலை அந்த வீட்டை கூட்டிப் பெருக்கி ரெண்டு பேருக்கு சமையல் பண்ணி பாத்திரம் கழுவுறது பெரிய வேலையா? ஒரு தகவல் சொல்லி இருந்தா வந்து இங்க எல்லாத்தையும் பண்ணி வைச்சிட்டு போய் இருப்பேன்.. கதிர் வெளி வேலையும் பார்த்துட்டு வீட்டில் சமையலும் பண்ணுவானா?. இந்த செல்வி கழுதை இன்னும் சமையல் பண்ண பழகலையா என்ன? ..
“ அவ எங்க சமையல் பண்ண போறா? அவ படிப்பு, படிப்பு, படிப்புலயே இருக்கா. இந்த ஊர் பள்ளிக்கூடத்துக்கு டீச்சராக போறதுதான் அவளுடைய ஒரே குறிக்கோள்.. எனக்கு மூட்டு வலியால் கஷ்டப்படும் போது கொஞ்சம் வேலை செஞ்சு தருவா அவ்வளவு தான்.. ”
“ என்னவோ மா நம்ம குடும்பத்துல அவளும், அன்பும் படித்து நல்ல நிலைமையில் இருந்தால் நமக்கு சந்தோசம் தானே.. நாங்க தான் சின்ன வயசுலயே கல்யாணம் கட்டி எங்க வாழ்க்கையை தேடிக்கிட்டோம்.. அவளாவது படித்து வேலையை தேடி நல்ல வரன் பார்த்து கல்யாணம் கட்டி சந்தோஷமா வாழட்டும்.. ”
பேசிக்கொண்டே செல்வியும்,ராஜியும் சேர்ந்து அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்கள் என அனைத்தையும் வாசலில் கொண்டு வந்து வைக்க அதை ஆட்டோவில் அன்பு ஏற்றிக் கொண்டிருந்தான்..
மாலை கட்ட நேரம் இல்லை என்று ஆட்டோவில் ஏறி ஒரு பக்கம் ராஜி நடுவில் மகேஸ்வரி மறுபக்கம் செல்வி இருந்துகொண்டு மகேஸ்வரின் மடியில் இருந்த பூத்தட்டில் இருந்து நிலா பூ எடுத்து கொடுக்க செல்வியும் ராஜியும் மாலைக்கு பூ கட்டிக்கொண்டு அவர்களது பயணத்தை தொடர்ந்தார்கள்..
மற்ற ஆட்டோவில் ஏற்றிய சாமான்களோடு பால் கேனை வைத்து விட்டு மடியில் முட்டையை வைத்துக்கொண்டு அன்பு பயணம் செய்தான்..
அவர்களை தொடர்ந்து அவனது இரு சக்கர வாகனத்தில் கதிரும் கோமதியின் ஊரை நோக்கி பயணம் தொடர்ந்தது..
கோமதியிடம் படபடப்பு என்றால் பேபியம்மா நிதானமாக சொந்தம் அனைவருக்கும் தகவல் சொல்லி வரவழைத்துக் கொண்டிருந்தார்..
தன் பேத்தியுடன் பிரச்சினை பண்ணியதால் மூர்த்தி மற்றும் சிவாவின் குடும்பத்திற்கு அவர் சொல்லவில்லை..
அப்போது ஆட்டோ வந்து நிற்கவும் பேபியம்மா வேகமாக வந்து நின்றார்..
“ வா ராஜி, மகேஷ், செல்வி நிலா குட்டி. உள்ள வாங்க என அவர்களை வரவேற்று அழைத்து சென்றவர்..
அடுத்த ஆட்டோ வரவும் வேகமா மீண்டும் வந்தார்.
அதிலிருந்து அன்பு இறங்கவும் “ வா அன்பு என்ன இது எல்லாம் எங்க கதிர் வரல?.. ”
“ அத்தை இது எல்லாம் காய்கறி, பழம், அண்ணா பின்னாடி பைக் ல வருது.. ”
“ சரி சரி தம்பி இதை கொஞ்சம் அங்க கொண்டு போய் வைங்க.. ” என ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லவும் அவரும் சரி என்று எடுத்து வைத்தார்..
அவர் அனைத்தையும் எடுத்து வைத்ததும் அவர் கையில் சுருக்கு பையில் இருந்து 500 ரூபாய் பணம் எடுத்து கொடுத்தார் பேபி..
“ ஐயோ என்ன அத்தை இவ்வளவு பணம் கொடுக்குறீங்க? நானே எடுத்து வச்சிருப்பேன்ல.. ” என்றான் அன்பு..
“ அன்பு என் பேத்தி விசேஷம் இன்னைக்கு கணக்கு பார்க்கவே மாட்டேன்.. நம்ம ஜாலியா என்ஜாய் பண்ண போறோம். என்ன நிக்கிற வா உள்ள வா உன் அக்கா, மாமாவும் தங்கத்துக்கு தேவையான பொருள் வாங்க போய் இருக்காங்க.. ” என்றார்..
ராஜி, செல்வி மாலை கட்ட ஆரம்பித்தார்கள் தாய் மாமா மாலை அழகாகவும் பெரிதாகவும் இருக்க வேண்டும்..
மகேஷ், நிலா தமிழுடன் இருந்து கொண்டார்கள்..
“ அத்தை செழியன் எங்க காணல.. ”
“ எல்லாருக்கும் காப்பி போடணும்ல பால் வாங்க போய் இருக்கான்.. ”
“ ஐய அத்தை அது தான் நாங்க பால் கொண்டு வந்து இருக்கோமே.. ”
“ அது தெரியாதே. நீங்க சொல்லவும் இல்லை.. சரி கூள் பெட்டியில வச்சு சாயங்காலம் எடுக்கலாம் ஆள் வர அதிகம் பால் தேவை படும்.. நீ இரு இப்ப செழியன் வந்துடுவான். இந்த கதிர் இன்னும் காணல.. ” என்று கூறிக்கொண்டே அவனுக்கு அழைப்பு விடுத்தார்..
முதல் முறை அழைப்பு எடுக்கவில்லை.
அடுத்த அழைப்பு போகவும் கட் ஆகும் கடைசி நொடியில் எடுத்தான்..
“ எங்க கதிர் எல்லாரும் வந்துட்டாங்க முதல் ஆளா வரவேண்டிய நீ இன்னும் வரல.. ”
“ அத்தை கொஞ்சம் அவசர வேலை வந்துட்டு இதோ முடிய போகுது வந்துடுவேன்.. ”
“ இப்ப என்ன வேலை உனக்கு சரி சீக்கிரம் வா.. ” என்று பேசிவிட்டு வைத்தார்..
அண்ணன் மகன் மீது பாசம் அதிகம் தான்..
error: Content is protected !!