Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

01. சின்னபொண்ணு - காதலுக்கு வேலி கட்டலாமாContest Stories 2026

காதலுக்கு வேலி கட்டலாமா 05

அத்தியாயம் 05**2

மாலை கட்டி முடித்ததும் அதை ராஜி பத்திரமாக வைத்துவிட்டு பேபியம்மாவிடம் வந்து அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை கேட்டு ராஜி, செல்வி செய்ய ஆரம்பித்தார்கள்..



Advertisement

“ என்னடி மகேஷ் வந்ததும் பேத்தி பக்கத்துலயே இருந்துட்ட.. ”

Advertisement

“ ஆமா அப்புறம் நான் என்னதான் பண்ணுறது ஓடியாடி வேலை செய்யுற வயசா? எங்க இந்த மூட்டு வலி விடுது.. ” என இருவரும் பேசிக்கொண்டே எழுந்து வாசலுக்கு வரவும் முதல் சரவணன் கார் அதை தொடர்ந்து கதிர் பைக் வரவும் சரியாக இருந்தது..

Advertisement

 சரவணன் மில்லில் வேலை செய்யும் ஆட்களையும் உதவிக்கு என அழைத்து வந்திருந்தார்..

Advertisement

 அவர்களும் வந்ததும் காரில் இருந்த பொருட்களை இறக்கி உள்ளே வைக்குமாறு சொல்லிவிட்டு கோமதி இறங்கி வந்தார்..

 அப்போதுதான் வந்த தன் குடும்பத்தை பார்த்து மகேஸ்வரிடம் சென்று அவரை கட்டியணைத்து விட்டு ராஜி, செல்வி அனைவரையும் வரவேற்று நிலாவையும் வரவேற்று பின்னாடியே வந்த தம்பி கதிரின் கையை பிடித்துக் கொண்டு கண்கலங்கி விட்டார்..

“ என்ன அக்கா நீ.. கண்ணை தொட.. ”

“ சரி நீ இப்பதான் வரியா இருங்க எல்லாருக்கும் காபி போட்டு கொண்டு வரேன்.. ” வீட்டின் பெண்ணாக அனைவரையும் கவனிக்கச் சென்றார்..

 வந்திருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுத்து அவர்கள் அனைவரும் உண்டதும் ஆளுக்கு ஒரு வேலையாக எடுத்துக்காட்டி செய்தார்கள்..

 குடும்பத்தார் அனைவரும் வீட்டுக்குள் சென்றாலும் இன்றும் கதிர் வீட்டுக்குள் செல்லாமல் பெரிய வீட்டு ஓரத்தில் சேர் போட்டு இருந்து கொண்டான்..

 அவன் காதில் தமிழின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டே இருந்தது. உடலின் நரம்பெல்லாம் அவளை சென்று பார் என அவனை உந்தி தள்ளியது ஆனால் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவளது சிரிப்பிற்கு ஏற்ற தாளமாக அவன் முகத்தில் சிறு புன்னகை மலர்வதும், மறைவதுமாக இருந்தது..

 பால் வாங்க சென்ற செழியன் வந்ததும் கோமதி அனைவருக்கும் வாங்கி வந்திருந்த காலை உணவை கொடுக்க அனைவரும் சாப்பிட்டனர்..

அதை தொடர்ந்து “ அன்பு, செழியன் நீங்க இரண்டு பேரும் வாங்க.. ” கதிர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவர்களது தோட்டத்திற்கு சென்று தென்னம் பாளை மற்றும் தென்னை ஓலை வெட்டி வந்தார்கள்..

கதிர் பாளையை எடுத்து வந்து கவனமாக வைக்கும் படி கூறி ராஜியிடம் கொடுத்து விட்டு ஓலை பின்ன சென்று விட்டான்..

 நேரம் வேகமாகவே சென்றது தண்ணீர் வார்ப்பதற்குரிய அனைத்தையும் தயார் பண்ணி விட்டார்கள்..

“ கோமதி சாப்பாடு மதியம் கடையில ஆர்டர் பண்ணவோம் எல்லாருக்கும்.. ” சரவணன் சொல்ல

“ ஏன் மாமா நாங்க தான் இத்தனை பேர் இருக்கோமே இப்பதானே பத்து மணி.. இப்ப எடுத்தாலும் 12 மணிக்கு சமைச்சு முடிச்சுடுவோம்..” என்றாள் ராஜி.

“ அதெல்லாம் வேணாம் ராஜி. நீயும் உங்க அக்காவும், செல்வியும் தான் இருக்கீங்க. வேற யார் உதவி செய்வா? அத்தைக்கும், அம்மாக்கும் முடியாது அதனால சமைச்சு கஷ்டப்பட வேண்டாம். மதியம் எல்லாருக்கும் நானே ஆர்டர் பண்ணி விடுறேன்.. ”

 சரவணன் சொன்னதும் சரி என ராஜியும், கோமதியும் எழுந்து தமிழுக்கு உணவும் மகேஷ், பேபி அம்மாவுக்கும் வீட்டில் சிம்பிளாக செய்ய ஆரம்பித்தார்கள்..

 செல்வியும், செழியனும், நிலாவும் சேர்ந்து வந்தவர்களுக்கு கொடுத்த அனுப்ப கேக் மற்றும் பலகாரங்களை பொதி செய்து கொண்டிருந்தார்கள்..

 இப்படியாக ஆளுக்கொரு வேலையாக செய்து கொண்டிருகும்போதே நேரம் ஒரு மணி ஆகிவிட்டது. ராஜி, கோமதி அனைவரையும் அழைத்து மதிய உணவு வந்ததும் கொடுத்து முடித்து அனைதையும் ஒதுங்க வைத்துவிட்டு மீதம் இருந்த வேலைகளை பார்த்து முடித்துவிட்டு ஆறுதலாக அமர்ந்து அக்கா,தங்கை,அம்மா பிள்ளைகள் என அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்..

 பேபியம்மாவின் சிறிய வீட்டை ஒட்டியுள்ள முன் பந்தலில்

அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே பின்னிய ஓலைகளை வைத்து அன்பை துணைக்கு வைத்துக் கொண்டு கதிர் குச்சி கட்டினான்..

 மாலை நேரம் நான்கு மணி நெருங்கியதால் அனைவருக்கும் மீண்டும் ராஜியும், கோமதியும் காபி கொடுத்துவிட்டு தமிழுக்கு தண்ணி வார்ப்பதற்காக அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்தார்கள்..

 மில்லுக்கும், வயலுக்கும் சென்ற சரவணன் ஐந்து மணி போல் வந்து விட்டார்..

 சரவணனுக்கு கோமதி என்றால் உயிர். அதைப்போல் தாய்மாமன் பிள்ளைகள் ராஜி,செல்வி,அன்பு இவர்களையெல்லாம் அனுசரித்து அன்பாக அரவணைத்துக் கொண்டவன் ஏனோ கதிர் என்றால் பிடிக்காமல் போனது..

 கதிர் சின்ன வயசில் சரவணனுடன் பேசுவான். ஆனால் அப்போது சரவணன் ஒதுக்குவதை புரிந்து கொள்ள தெரியவில்லை.. விபரம் தெரிந்த வயதில் அதை புரிந்து கொண்டு அவனாகவே ஒதுங்கிக் கொண்டான்..

 இருவரின் தந்தை இறந்த நேரம் சரவணனாவது திருமணம் முடித்து இருந்தார்.. ஆனால் கதிருக்கு மிகவும் சின்ன வயது அனைத்திலும் அக்காவின் கணவனாகவும் தாய் மாமன் மகனாகவும் இருந்து சரவணன் வழி காட்ட வேண்டிய அவனே ஒதுக்கி வைத்து இருந்தான்..

அதனால் கதிரே தட்டு தடுமாறி அவனாகவே தன் வாழ்க்கையில் கையூன்றினான்..

 ராஜியின் கணவன் ரமேஷை கூட சரவணன் தான் மாப்பிள்ளையாக பார்த்து நகை போட்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தது.. ரமேஷ் மற்றும் அவர்களின் மகள் நிலா என அனைவரையும் அனுசரித்து போகும் சரவணன் கதிரை ஒதுக்குவதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை..

 இதோ இப்போது கூட கதிர், செழியன் மற்றும் அன்போடு இருந்து பேசிக் கொண்டிருந்தான்.. அப்போது வந்த சரவணன் கதிரை பார்த்து முறைத்துவிட்டுத்தான் சென்றான்.. இவர்களுக்கு இது எப்போதும் வாடிக்கை என்பதால் குடும்பத்தினரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..

இப்போதே இவர்களின் முட்டல், மோதல்களை கண்டுபிடித்து தீர்த்து வைக்கலாம் போய்விட்டால்

பிற்காலத்தில் அவர்கள் யோசித்து வருந்தும் காலம் வரும்..

ஆனால் அதை யாரும் தீவிரமாக எடுக்கவில்லை..

 நேரம் வந்ததும் ஊர் பெண்களும் வர முதலில் ராஜியும், செல்வியும் தண்ணீர் ஊற்றினார்கள் அதைத் தொடர்ந்து தூரத்து அத்தை முறை பெண், அடுத்து கோமதி அடுத்து சுமங்களி பெண்கள் என பதினொரு குடம் தண்ணீர் ஊற்றி அவளை குளிக்கவைத்து உள்ளே அழைத்து செல்லும் போது வெடி ரோல் தெருவே அலறும் படி வெடித்தான் கதிர்..

 அவளுக்கு உடை அணிந்து செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்து அவளை அறையில் இருக்க வைத்துவிட்டு அவளுக்கு துணையாக நிலாவையும் இருக்க வைத்து விட்டு வந்தவர்களை கவனிக்கச் சென்றார்கள்.

 வந்தவர்கள் அனைவரையும் கவனித்து பலகாரப் பொதியை கொடுத்து அவர்களும் சென்றதும் வீட்டில் இருந்தவர்களும் உணவை உண்டு விட்டு

கதிர் குடும்பம் அவர்களது ஊரை நோக்கி பயணித்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!