Skip to content
Post Views: 1,655
நதி 23
விருந்து நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்திருக்க நல்ல நேரம் பார்த்து மாலை வேளையில் புதுமணத்தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து வந்த வாணி மீண்டும் ஒரு முறை ஆலம் சுற்றியே உள்ளே அழைத்தாள்.
Advertisement
இவர்களோடு ஒரு சிலர் மட்டும் மண்டபத்திலிருந்து கிளம்ப, “ரெண்டு நாளா மாமா மட்டும் எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்யறாரு வாணி.
இங்கேயே இருந்து எதாச்சும் ஹெல்ப் தேவைப்பட்டா அதை பார்த்துட்டு, அப்படியே பணம் செட்டில் செய்யறதையும் பார்த்துட்டு போயிடலாம்..” என தீனா சொல்ல,
Advertisement
Advertisement
“அதெல்லாம் பார்த்துட்டு போனா நல்ல நேரம் முடுஞ்சிடும்டா.. நீ வீட்டுக்கு போனதும் கூட திரும்ப இங்கே வந்திடு..” என அங்கேயே பேசி முடித்து தான் வீட்டிற்கே வந்திருந்தனர்.
அதனால் வீட்டிற்குள் வந்ததும், ‘தீனா எப்படியும் மண்டபத்திற்கு சென்று விடுவான்..’ என்பதை கொண்டு அவனை கண்டு கொள்ளாதவளாக வேகமாக உள்ளே வந்திருந்தாள் யமுனா.
Advertisement
அத்தோடு காலை முதல் உடுத்தியிருந்த பட்டுபுடவை வேறு ஒரு மாதிரி கசகசப்பை உண்டாக்கியிருக்க அதை மாற்றவென உள் அறைக்கும் சென்றுவிட்டிருந்தாள்.
உள்ளே வந்து கண்ணாடியில் தனது சிகை அலங்காரத்தை கண்டவள், “கையோட அலசிட்டா நல்லது.. அத்தன ஸ்ப்ரேவ அடுச்சு வச்சிட்டாங்க அவங்க.. முடி டேமேஜ் ஆகிட்டா என்ன பண்ண..?” என தனக்கு தானே சொல்லிக்கொண்டு நகர்ந்து அங்கிருந்த கபோர்ட்டில் நேற்று வைத்த தனது உடையில் இருந்து மாற்றுடை எடுக்க அதை திறந்தாள்.
அப்போது திடீரென தன் இடையோடு இறுக்கிய கரத்தின் வெம்மையில் ஒரு நொடி திகைத்து.. கத்த போன போதும் அதன் ஸ்பரிசம் உடனடியாக அது யாரென காட்டிக்கொடுத்தது பெண்ணிற்கு.
அவள் சுதாரித்து வாயை திறக்கும் முன் அவளை அவனுக்கு வாகாய் சுழற்றி திரும்பியவன் அதே வேகத்தில் அதிர்வில் திறந்த வாயை தன் இதழ் கொண்டு அடைத்திட, விழிகளை அகல விரித்தவள் தன்னவனின் இதழும் இடையில் அவன் கரமும் தன்னுள் நிகழ்த்திய மாயாஜாலத்தில் மெல்ல உருகி கிறங்கி விழி சொக்கி போனாள்.
ஆனாலும் பெண்ணின் உள்ளுணர்வு திறந்திருக்கும் கதவை நினைவில் உறுத்த, அவனை அவளிடமிருந்து விலக்க முயல சொல்லி உள்மனம் தூண்டியதால் முழுதாய் ஒன்ற முடியாமல் தவித்தவளை விட்டு விலகியவன்,
“வாய் மட்டும் தான் பாப்பா உனக்கு, கிட்ட வந்தா இப்படி தள்ளிவிடுறே..?” என காதோடு குற்றப்பத்திரிகை வாசித்தவன்,
“இன்னைக்கு ராத்திரிக்கு எல்லாத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடுலாம்.. தயாரா இரு..” என சரசமாய் சொல்லி, அவளின் மொத்த தேகமும் தன்னில் படுமாறு இறுக அணைத்து விடுவித்தவன் அதே கபோர்டில் இருந்த தனது ட்ரக் பேண்ட் டீசர்ட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
அவன் சென்று வெகுநேரமாகியும் அவனின் அணைப்பு தந்த சூடும், சொல்லிச்சென்ற வார்த்தை தந்த கிறக்கமும் யமுனாவை திக்குமுக்காட செய்திட கால்கள் வேறுன்றியது போல செயலற்று நின்றுவிட்டாள்.
அவளை கலைத்தது என்னவோ, “அத்தே.. அம்மா கூப்பிச்சு..” என வந்து அவள் காலை கட்டிக்கொண்ட பாலமுரளி தான்.
அதில் தெளிந்தவள் தனக்கான உடையையும் எடுத்துக்கொண்டு வெளியே வர குடிக்க டீயை கொடுத்த வாணி,
“நானே சொல்ல நினச்சேன் யமுனா.. உன் முடி நல்லா அடத்தியா இருக்கு. இதுல அதுங்க ஸ்ஃப்ரே போட்டதால எதாவது ஆயிட்டா என்னாவும்..?
சுடுதண்ணி போட்டிருக்கு.. கையோட அலசிட்டு வந்திடு.. பட்டுப்புடவ நனையாம கழட்டி கதவு மேல கொடு நா வாங்கிக்கறேன்..” என அக்கறையோடு சொல்ல,
“சரிங்கண்ணி..” என்றவள், அதே போல கொடுக்க வாங்கி வந்து கூலிங் சீட் பந்தலுக்குள் இருந்த தூக்கில் வியர்வை வாடை போகும் விதமாய் உலற போட்டவர் மற்றவற்றை கவனிக்க சென்றார்.
மண்டபம் சென்ற தீனா அனைத்து வேலையையும் முடித்து.. குமரனை வழியனுப்பி விட்டு சக்தியோடு வீடு வர இரவு நெருங்கியிருந்தது.
கொஞ்சமாக இருந்த நெருங்கிய உறவுகளும் தீனா வந்ததும், “நாளக்கி கொலதெய்வ கோயிலுக்கும் போயிப்போட்டு வந்த பின்னால வேலக்கு போ தீனா..
எம்மாடி இவன நம்ப ஆவாது. நீ தா அவங்கிட்ட சொல்லி எங்கூட்டுக்கெல்லாம் விருந்துக்கு வறோனும்.. சரியா..?” என சொல்லி விடை பெற.. வீட்டு ஆட்களை தவிர மொத்த வீடும் காலியாகியது.
இரவு மண்டபத்தில் மீய்ந்து போன குழப்பு இருக்க, இட்லி மட்டும் கடையிலிருந்து வாங்கி வந்து உண்டு முடித்து அனைத்தையும் சரி செய்த வாணி,
“நாளக்கி பாலாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அப்புறம் கிளம்பினா சரியா இருக்கும் கோவிலுக்கு போவ..” என சொன்ன நொடி அழுகையை தொடங்கினான் சின்னவன்.
“நானூ.. மாமா நானூ.. அத்தே..” என பள்ளி செல்லாமல் இவர்களோடு வர வேண்டுமென அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, வாணியும் சக்தியும் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.
யமுனா தான், “அண்ணி, அவன் படிக்கற எல் கே ஜிக்கு ஒரு நாள் சேர்த்து லீவ் போட்டறதால என்னவாகிட போகுது..?
அவன விட்டுட்டு போனாலும் மனசு முழுக்க அவன விட்டு வந்தது தான் இருக்கும்.. கூட்டிட்டு போலாம்..” என முடித்துவிட,
புதுபெண்ணின் ஆசை என்பதோடு மகனின் கண்ணீரும் சரியென தலையசைக்க வைத்தது அவர்களை.
“நீயும் தான்டா வர்றே. அழுது கரையாத..” என தீனா சமாதானம் செய்து ஒரு வழியாய் தேற்ற அடுத்து,
“மாமா கூட தூங்கி..” என ஆரம்பித்தான் சின்னவன்.
முந்தைய நாள் போல தூங்காமல் இவன் சென்றுவிட்டால்.. ஜெகதீஷ் தன் மாமாவோடு தூங்குவானே.. என்ற எண்ணமா..? அல்லது வீட்டுற்கு சென்றால் நாளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்களோ என்ற எண்ணமா..? அவனுக்கே வெளிச்சம்.
நிச்சயமாக மிகவும் சங்கடமான தருணம் தான் பெரிய தம்பதிகளுக்கு.
முதல் நாள் தீனாவோடு தூங்கியதே வாணிக்கு கஷ்டமாய் இருக்க, இன்றும் இது போல செய்தால் எப்படி..? என்ற ஆதங்கம் மெல்லிய கோபமாய் மாற ஆரம்பித்தது தன் தம்பி இந்த வீட்டில் வாழும் லட்சணம் அறியாத அந்த அக்காவிற்கு..
வாணி கண்ணசைவில் சக்தி பிடிவாதமாய் அவனை தூக்கி வண்டியில் அமர்ந்த அப்படியொரு அழுகை அவனுக்கு.
பொறுத்து பார்த்த வாணி அடிக்க கையை ஓங்கியிருக்க.. வேகமாய் அவரை தடுத்து பிள்ளையை தூக்கிக்கொண்ட தீனா,
“ஏய் வாணி..! என்ன பண்றே..? அவன் கொழந்தே.. அவனுக்கு என்ன புரியும்..?” என்றுவிட்டு மருமகனை தோளில் போட்டு முதுகை வருடி சமாதானம் செய்ய வாணி தர்மசங்கடமாக யமுனாவை பார்த்தார்.
“அண்ணி, ஆசையா தவமிருந்து பெத்தேன்னு எங்கிட்ட சொன்ன புள்ளைய எங்களுக்காக.. கை நீட்டறீங்கன்னா அதுல எங்க மேல உங்களுக்கு இருக்கற அக்கறை நல்லா புரியுது. ஆனா அது சரியில்ல அண்ணி.
அவன் குழந்தை. அவன அழவச்சு அனுப்பிட்டு போயி நாங்க சந்தோஷமா இருக்க முடியுமா..? அப்படி இருப்போமுன்னு நீங்களும் நினைக்கறீங்களா..?” என கேட்க,
“அச்சோ அப்படி இல்ல யமுனா.. இவன் பிடிவாதம் பிடிச்சாலும் கொஞ்ச தூரம் போனதும் சரியாகிவான்னு தான்..” என சொன்ன போதும் பாலமுரளியை அடிக்க போன குற்றஉணர்வு ஒரு வித தயக்கத்தை கொடுக்காமல் இல்லை.
அதிலும் இன்னும் தீனா தோளில் முகம் புதைத்து தேம்பிக்கொண்டிருக்கும் பிள்ளையை கண்ட பின் அவர்களால் என்ன செய்ய முடியும்.
சக்தியும் வாணி கை ஓங்குவார் என எதிர்பார்க்காமல் இருந்ததால் அவருக்கும் வாணியின் செயலில் சிறு வருத்தம் தான். ஆனாலும் அவளின் செயலுக்கு பின் இருக்கும் நியாயமும் புரிய எதுவும் செய்ய இயலாதவராக நின்றிருந்தார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடைவெளியில் தீனா மெல்லிய குரலில் சமாதானம் சொல்லி அவனை தேற்றியபடி வாசலில் நடை போட, நாள் முழுவதும் மண்டபத்தில் போட்ட ஆட்டம் மற்றும் அழுகையால் ஓய்ந்து போன உடல் ஆழ்ந்த தூக்கத்திற்குள் தள்ளியது குழந்தையை சற்று நேரத்தில்.
அவன் உறங்கிவிட்டதை கண்டு, “யமுனா.. போய் பாய போடு. புள்ள தூங்கிட்டான்..” என மெல்லிய குரலில் தீனா சொல்ல,
“தம்பி அவன எங்கிட்ட கொடு. உறங்கினா அப்புறம் எழ மாட்டான். நாங்க எங்கூட்டுக்கு தூக்கிட்டு போறோம்..” என வாணி சொல்ல,
“எப்படிக்கா..?” என தீனா தயங்கிய போதும் விடாமல் போராடி தன் பிள்ளையோடு அங்கிருந்து கிளம்பியிருந்தார் வாணி.
error: Content is protected !!