Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 27.1

நதி 27
மழையின் குளுமையிலும் இரவு முழுவதும் நீடித்த இளமை தாகத்தை தீர்க்கும் போராட்டத்திலும் கட்டுண்டு கிடந்தவர்களுக்கு விடிந்ததே தெரிந்திருக்கவில்லை.


Advertisement

சுக அயர்வில் இருவரும் மூழ்கி இருக்க, தீனாவின் காதில் ஏதோ ஓசை விழுந்து லேசாக அவன் தூக்கத்தை கலைக்க முயன்றது.
‘என்ன ஓசை அது..?’ என ஆராயும் முன்னமே அது நின்றுவிட, மீண்டும் தூக்கம் சுகமாய் அவனை ஆட்கொண்டது.

Advertisement

Advertisement

எவ்வளவு நேரமோ மீண்டும் அதே ஒலி அவனை தொந்தரவு செய்ய, இம்முறை அது அவனின் போனிலிருந்து வரும் அழைப்பு ஓசை என்பது தெளிவாக புரிந்தது அவனுக்கு.
அரைக்கண் கொண்டு கைகளால் துழாவி பார்த்து போன் கிடைக்காது போனதால் எழுந்து அமர்ந்தான் வேறு வழியின்றி.

Advertisement

“எங்க போச்சு இந்த போனு..?” என தலையை கோதியபடி சுற்றிலும் தேடியவனுக்கு அப்போது தான் அது இன்னும் தனது பேன்ட் பாக்கெட்டில் இருப்பதே நியாபகத்திற்கு வந்தது.
‘அதெங்கே கிடக்கு..?’ என யோசித்தபடி விழியை சுழற்ற அறையில் ஒரு பக்கம் கேட்பாரற்று கிடந்தது அவனின் கீழாடை.
அதில் நமுட்டு சிரிப்பை உதிர்த்தபடி எழுந்தவன் தன் நிலை கண்டு வெட்கி.. அங்கு கொடியில் கிடந்த துண்டை கட்டிக்கொண்டு பேன்ட் இருந்த இடத்தை அடைந்து.. அதிலிருந்து போனை எடுப்பதற்குள் இரண்டு முறை முழுதாய் அழைத்து அடங்கியிருந்தது.
போனில் சக்தியின் எண்ணை பார்த்துவிட்டு நேரத்தை பார்க்க அதுவோ ஒன்பதை தாண்டி காட்ட, 
“இவ்வளவு நேரமாச்சா..?” என குழம்பி இருளாய் இருந்த அறையை கண்டு யோசனையோடு ஜன்னலை திறந்து பார்க்க, மழையின் காரணமாக இன்னும் விடியல் பொழுதை போல தான் இருந்தது.
“இதனால தான் டைமே தெரியல போல..” என வெளியே பார்த்து சொல்லிவிட்டு, ஜன்னலருகேயே நின்று போனை ஆராய.. ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கு முன்னும் அவர் அழைத்திருப்பது தெரிய அழைத்தான் தன் மாமனுக்கு.
முதல் ரிங்கில் எடுத்த சக்தி எதையும் பேசும் வாய்ப்பை தீனாவிற்கு அளிக்காமல், “சாப்பாடு கொண்டு வந்து திண்ணையில வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க. 
அவுங்க எல்லாரும் இன்னைக்கு இங்க தான் இருப்பாங்க..” என்றுவிட்டு அணைத்துவிட, 
“அவரு வந்துட்டு போனதே தெரியாமையா தூங்கிட்டு இருந்தோம்..! 
அப்போ கூப்பிட்டு பாத்துட்டு போயிருப்பாங்க போல..” என ஒரு வித கூச்சம் எழ லேசாக தலையை கைவிரலால் கோதியபடி வெக்கச்சிரிப்பை உதிர்த்தவன்,
“எல்லாம் இவளால.. மயக்கு மோகினி பாப்பா.. இவள தாண்டி வேற எதையும் யோசிக்க விடாம பண்ணிட்டா..” என்றபடி அவள் புறம் பார்வையை திருப்பினான்.
அதுவரை.. உறக்க கலக்கத்தில் அவனிடம் போராடி பெற்ற
டீசர்ட்டை மட்டும் அணிந்திருந்தவளுக்கு.. இப்போது திறந்த ஜன்னல் வழியாக வந்த காற்றினால் உண்டான குளிர் தாங்காது விழி திறக்காமல் தேடி.. கிடைத்த போர்வையை கழுத்துவரை போர்த்திக்கொண்டு சுருண்டாள் சொகுசு பூனையாய்.
அங்கேயே சாய்ந்து நின்றவாரே தனது இரு கரங்களையும் நெஞ்சோடு கட்டிக்கொண்டு சிறுபுன்னகை சிந்த அவளின் செய்கையை ரசித்து பார்த்திருந்தான் தீனா.
அவளின் முகத்தில் களைப்பையும் தாண்டி தெரிந்த வசீகரத்தில் போனை அங்கிருந்த திட்டிலேயே வைத்துவிட்டு ஜன்னல் கதவை அடைத்தவன்,
மெதுவாக கட்டிலருகே வந்து அவளின் போர்வைக்குள் புகுந்த இடையோடு கையிட்டு அவளை தன்னோடு இறுக்க, அவனின் உடல் சூட்டுக்கு வாகாய் அவனுள் பாந்தமாய் அடங்கினாள் பாவை.
“ஓய் பாப்பா..” என அவன் காதோரம் மீசை உரச கிசுகிசுக்க, 
“போ. நா மாட்டேன்..” என்றவளோ வார்த்தை எதிராய் அவன் கழுத்தோடு ஒன்ற தீனாவின் உடல் குலுங்கியது மோகனச் சிரிப்பில். 
“அப்ப நானே ன்னா உனக்கு ஓகே வா பாப்பா..?” என சிரிப்போடு தீனா கேட்க,
தூக்க கலக்கத்தில் அவனின் பேச்சு புரியாமல் குழம்பியவள், “ப்ம்ச்.. போங்க நீங்க..” என அவனோடு நெருங்கிக்கொண்டே சொல்ல, அவனின் எண்ணத்தை அழகாய் செயலாக்க ஆரம்பித்தான் கள்வனாய்.
அவனின் செய்கையில் முற்றும் முழுதாய் தூக்கம் தெளிந்து மறுக்கும் முன்.. முழுமையாய் அவன் கட்டுப்பாட்டில் அவள் வந்துவிட்டிருக்க.. எங்கிருந்து மீள..?
அவனின் செய்கைக்கு இசைந்து.. செல்ல சிணுங்களை கை வளையோடு இசைத்து.. சுகமாய் சொக்கி போனவளை தன் விசைக்கு ஏற்ப ஆட்டுவித்து விடுவித்தான் கள்ளன்.
“திருட்டு பயலே..” என செல்லமாய் அவனை அடித்து, கழுத்தோரம் கடித்து.. என அவள் தந்த தண்டனை எல்லாம் அவனுக்கு சுகமாய் மாற.. எங்கிருந்து அவன் அவளை விடுவிக்க..?
ஆட்டுவித்து.. ஆடிக்களைத்து.. என அவர்கள் ஒருவழியாய் அந்த அறையை விட்டு வெளியே வர, யமுனாவிற்கு பசியில் வயிறு கத்த ஆரம்பித்திருந்தது.
அப்போதும் மழை பொழிந்து கொண்டிருக்க, 
“பயங்கரமா பசிக்குது தயா.. இனி குளிச்சு.. நா சமச்சு.. போங்க எல்லாம் உங்களால..” என சிணுங்கிக் கொண்டு அவள் குளியலறைக்குள் புக,
சக்தி வைத்துவிட்டு சென்ற பையை கூடத்திற்கு எடுத்து வந்து அவள் வந்ததும் உண்பதற்கு ஏற்ப எல்லாவற்றையும் தயாராக வைத்தான் தீனா.
மழை குளிரில் அவசரக் குளியலை முடித்து ஈர துண்டை தலைக்கு சுற்றி, புடவையை அரைகுறையாய் உடலில் சுற்றிக்கொண்டு வந்தவளின் நாசியில் உணவின் நறுமணம் நுழைய.. ஆச்சரியமாக பார்த்தவள் அவசரமாய் அதிலிருந்தவற்றை தட்டில் வைத்து நான்கு வாய் உண்ட பிறகே தீனாவை தேடினாள்.
அவனோ அவள் வந்த அழகை கண்டு திகைத்து, பின் ரசித்து.. அவள் உணவை வாயில் வைத்த வேகத்தில் பசியை உணர்ந்து, 
‘இங்கிருந்தால் அவளை உண்ண விடமாட்டோம்..’ என்ற எண்ணத்தாலேயே குளியலறை சென்றிருந்தான்.
“அச்சோ.. அவர விட்டுட்டு இப்படி சாப்பிட்டுறோமே.?” என்ற எண்ணத்தில் உணவு தட்டோடு யமுனா அமர்ந்திருக்க, வேட்டியை மட்டும் அணிந்து ஈரத்தலையை துவட்டியபடி வந்து சேர்ந்தான் தீனா.
குளித்து வரும் இடைவெளியில் அவளை சீண்ட தூண்டும் எண்ணத்தை சீர்படுத்தி வந்திருந்தவன், அவன் செல்லும் போது தட்டில் வைத்திருந்த உணவு இன்னும் அப்படியே இருப்பதை கவனித்து,
“என்ன பாப்பா.. சாப்பாடு டேஸ்ட் பிடிக்கலையா என்ன..? வாணி நல்லா சமைப்பாளே..!” என்றவாரே அவளிடம் வந்தான்.
அவனை நிமிர்ந்து பார்க்காமல், “சாரிங்க.. உங்கள விட்டுட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்..” என்றாள் தவறு செய்துவிட்ட பாவனையில் தலைகுனிந்து.
“அட..! அதுக்கா சாப்பிடாம வச்சுட்டு இருக்கே..? எனக்கு பசிக்கவே இல்ல. நீ தான் பசியில இருந்தே. 
பசிச்சா சாப்பிடறதுல தப்பே இல்ல. எனக்காக வெயிட் பண்ணி, எனக்கு கொடுத்துட்டு தான் சாப்பிடனுமுன்னு எந்த அவசியமும் இல்ல..” என்றவன் அவளருகே அமர,
அவனின் வார்த்தை கொடுத்த நெகிழ்ச்சியோடு தன் தட்டிலிருந்த உணவை எடுத்து அவன் வாயருகே நீட்டியிருந்தாள் யமுனா.
ஒரு நொடி அவள் செய்கையில் திகைத்தவன் மறு நொடி புன்னகை முகத்தோடு ஆசையாய் வாய் திறந்து வாங்கிக்கொண்டான் உணவை.
அவளே அவனுக்கும் ஊட்டி தானும் உண்ண, அவளின் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு அவளை சீண்டும் எண்ணம் இப்போது உயிர்தெழ, 
“எனக்கு பசிக்கலன்னு சொன்னேன் தானே..! ஏன்னு கேட்டையா..?” என்றான் உதட்டை அழுந்த கடித்து விசம சிரிப்பை அடக்கி.
தீர்ந்து போனதை உணவு தட்டிற்கு பாத்திரத்திலிருந்து மாற்றும் வேலையில் மும்முரமாக இருந்த யமுனாவிற்கு அவனின் கேள்வி புரிந்த அளவு அவனின் விசமம் புரியாததால், 
“நீங்க, நா குளிக்க போன கேப்ல சாப்பிட்டீங்களா..? இல்லையே. பேக் பண்ணதுல எதுவும் எடுத்த மாதிரி இல்லையே..?” என்ற யோசித்து குழப்பமாய் சொல்ல,
“ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம்,  செர்ரின்னு எல்லாம் கலந்த ப்ரூட் மிக்ஸரை நைட் ஃபுல்லா சாப்பிட்டவனுக்கு எப்படி பசிக்கும்..?” என அவன் கிசுகிசுக்க.. ஒரு நொடி குழம்பி பின், அவன் சொன்ன பாவனையில் விசயம் விளங்க, 
“அச்சோ..” என்றவளுக்கு மஞ்சள் பூசிய முகம் மொத்தமாய் சிவந்துவிட்டது.
அவளின் முகம் கண்டு நெருங்கி அமர்ந்தவன்,
“என்னோட மக்கு பாப்பாக்கு அதுக்குள்ள அர்த்தம் புரிஞ்சிடுச்சா..! ச்சே.. சான்ஸ் மிஸ்ஸாகிடுச்சு.  எப்படி ன்னு நீ கேட்டிருந்தா.. ” என்றவனின் வார்த்தையை விட கண்கள் அவள் மேனியில் பரவி படர்ந்து காட்டிய இடத்தை கண்டு அவனின் பேச்சை 
இடது கரம் கொண்டு அடைத்தவள், 
“இனி பேசினா பிச்சு பிச்சு..” என மிரட்ட,
அவளின் கரத்தை தன் கரத்தில் அடக்கி விலக்கிக்கொண்டே,
“அதான். அப்படி சாப்பிட்டு தான் ஃபுல்லா ஆகிடுச்சு..” என்றான் விடாமல் அவனும்.
“த.. யா…” என அவளின் வெக்கத்தோடான இழுவையில் வாய் விட்டு நகைத்தவன், 
கரத்தால் அவளின் தோளணைத்து கன்னத்தில் இதழ் ஒற்றி விலக,
யமுனாவும் மலர்ந்த முகத்தோடு அவனின் நெஞ்சத்தில் தஞ்சமானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!