Skip to content
Post Views: 1,546
அவனின் வெற்று மேனியில் இன்னும் சரிவர துவட்டாத கூந்தலில் இருந்து வடிந்த நீர் துளிகள் வழிந்து வந்து சாய்ந்திருந்த பாவையின் கன்னம் சேர.. உள்ளூர ஒருவித குறுகுறுப்பு உண்டானது.
அதில் உண்டான பேரலையின் அவஸ்தையில் அவனிடமிருந்த விலகியவளுக்கு அதன் தாக்கம் தீராததால் உணவை கை கொண்டு பிசைந்தபடி இருந்தாள்.
Advertisement
‘அவனின் நிலையும் அதான்..’ என்ற போதும், அவளை உண்ண விடாமல் உணர்வு பூர்வமாக தவிக்க செய்வது தவறென புரிந்து அவசரமாக எழுந்தவன்,
“எனக்கு போதும் நீ சாப்பிடு.. நா கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன். இப்ப போய் ட்ரஸ் மாத்திட்டு வர்றேன்..” என்றுவாரே சென்றிருந்தான் உள் அறைக்கு.
Advertisement
Advertisement
அதில் லேசாக அவன் நெருக்கம் தந்த மயக்கம் தெளிந்து.. தன் நினைவை நினைத்து வெக்கி.. என நிமிடத்தை கடத்தியவள் உணவை மெல்ல உண்டபடியே,
“ஏங்க.. நா குளிக்க போனதும் சக்தி அண்ணா வந்தாங்களா..?” என்றாள் தீனாவிடம்.
Advertisement
உள் அறையில் கண்ணாடி முன் நின்று தலையை வாரிக்கொண்டிருந்தவன், “இல்லையே பாப்பா.. ஏன் கேட்கறே..?” என்றபடி வெளியே வர,
“நீங்க வண்டி எடுத்துட்டு போன மாதிரி தெரியலையே..! அதான் கேட்டேன்..?” என உணவு பாத்திரத்தை ஜாடை காட்டி சொல்ல,
“ஓ.. அதா. சக்தி மாமா நீ குளிக்கறப்போ வரல..
அவர் வந்தது.. கால் பண்ணது.. போனது.. ன்னு எதுவும் தெரியாம தான் தூங்கியிருக்கோம்..
இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னே மறுபடியும் கால் பண்ணி சொல்லி தான் இதெல்லாம் தெரிஞ்சது..” என்றதும்,
“என்ன..! நாம எழுறதுக்கு முன்னே அண்ணா இங்கே வந்துட்டு போனாரா..?
போச்சு.. அவரு நம்மள பத்தி என்ன நினைச்சிருப்பார்..?” என கூச்சம் தந்த தவிப்போடு யமுனா கேட்க,
“என்ன நினைச்சிருப்பாரு.. அப்பாடா ஒருவழியா நம்ம பையன் வாழ ஆரம்பிச்சிட்டான்னு நினைப்பார்..” என தீனா கண் சிமிட்டி சிரிப்போடு சொல்ல,
“விளையாடாதீங்க.. அவரை இனி எப்படி நேரா பார்க்க..? அவர் போய் அண்ணிகிட்டையும் சொல்லி இருப்பாங்க தானே..? போச்சு..” என தலையில் கை வைக்காத குறையாய் புலம்ப ஆரம்பித்தாள் யமுனா.
“இங்கே பாரு பாப்பா, வாணி ஆசைப்பட்ட மாதிரி நாம இருந்தா.. அதுல அவ சந்தோஷம் தான் படுவா.
நீ நினைக்கற விதமா அவ யோசிக்க மாட்டா.. அதே தான் மாமாக்கும். அவங்கள பார்க்கவெல்லாம் சங்கடப்பாடாத..” என அவளை சமாதானம் செய்தவன்,
பின் விசமமான குரலில், “அவங்களும் இதெல்லாம் பாக்காமையா வந்திருப்பாங்க..?
நம்மள தொந்தரவே பண்ணாம.. சமத்தா கொண்டு வந்ததை வச்சிட்டு போனதுலையே அவரும் இதெல்லாம் கடந்து வந்த கேஸூன்னு புரியலையா..?
இப்ப கூட சாப்பிட்டு.. அப்புறம் தெம்பா..” என்றவனின் வார்த்தை அவளின் முறைப்பில் பட்டென நின்றது.
‘இவன் வாயை எப்படி அடைக்கலாம்..’ என்பது போலான பாவனையில் சுற்றிலும் யமுனா பார்வையை ஓட்ட,
“உன்கிட்டையே இருக்கறத வச்சு அடைக்காம.. வேற தேடற பாரேன்.. இன்னும் ட்ரைனிங் பத்தல பாப்பா உனக்கு.. அதனால..” என்றவனை தொடர விடாது அடிக்க யமுனா துரத்த, அவளிடம் சிக்காமல் சிரிப்போடு போக்கு காட்டி ஓடினான் அந்த வீட்டிற்குள்ளாகவே தீனா.
அவனை துரத்திக்கொண்டு ஓடியவளுக்கும் முகமெல்லாம் மகிழ்ச்சி அலை மட்டும்.
***
இவர்களின் மலர்ந்த முகத்துக்கு நேரெதிராக முகம் இறுக அமர்ந்திருந்தார் ஜெயசீலன் சக்தியின் எதிரில்.
இரவு போதை தந்த கிறக்கத்தில் உறங்கி போனவர் காலை கண்விழித்த போது தான் அவர்கள் மூவர் மட்டும் அங்கே தங்கி போனது புரிந்தது அவருக்கு.
அதிலேயே அவர் சில நாளாய் நடக்க விடாமல் இருந்த விசயம்.. நேற்று நல்லவிதமாக நடந்திருக்கும் என்ற எண்ணம் நிலை கொள்ள விடாமல் செய்தது.
அவரின் கோபத்தை வன்மத்தை எல்லாம் சட்டென யாரின் முன்னும் காட்டாத கோழை தானே அவர்.
அதனாலேயே அமைதியாய் இருப்பதான பாவனையில் உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தார்.
சகுந்தலாவை, சக்தி வாணியிடம் ஏதோ கேட்க போன இடைவெளியில் கண்ணால் மிரட்டி, ‘நீயாவது போயிருக்க வேண்டாமா..?’ என்று கேட்க,
அவரோ, ‘க்கும்.. என்ற தம்பி என்னைய உட்டுபோட்டு தா வேற வேல பாத்திருப்பான் பாரு..’ என மனதோடு பேசியவர் முகத்தை பாவமாக வைத்து அமர்ந்துவிட்டார்.
‘சரி ஆனது ஆகட்டும். வீட்டுக்கு போய் மற்றதை யோசிப்போம்..’ என கிளம்பியவரை அமர வைத்த சக்தி,
“மாமா.. இது உங்க மகள கட்டி கொடுத்த சம்மந்தக்காரங்க ஊடு மட்டுமில்ல என்னோட அக்காளுக்கு பொறந்த ஊடும் இதான்.
இத்தன வருசஞ்சென்டு இங்க வந்து தங்கியிருக்கீங்க.. மாமன கவனிக்கலன்னு ஒரு பேச்சு வரக்கூடாதில்ல..
அதனால இன்னைக்கு உங்களுக்கு மாமனார் வீட்டு விருந்து வச்சு தா அனுப்பலமுன்னு இருக்கேன்..” என சொல்ல.
“என்ன மாமனார் விருந்தா..?” என அதிர்ந்த ஜெயசீலன்,
“அதா போது போதுன்னு சொல்லற விதமா நேத்தே விருந்த போட்டாச்சே மாப்ளே..! இப்போ என்னத்துக்கு மறுக்கா போடோனும்..?” என்றார் புரியாத குழப்பத்தோடு,
“அச்சோ மாமா.. அது உங்க பையனுக்கு போட்ட கல்யாண விருந்து..
அதாவது தீனா அக்காள நா கட்டினதால அவனுக்கு அக்கா மாமாங்கற முறையில விருந்து.. நேத்து.
என்னோட அக்காள நீங்க கட்டுனதால உங்களுக்கான மச்சினன் வீட்டு விருந்து இன்னைக்கு.. புருஞ்சுதுங்களா மாமா..?
புரியலன்னா வேற மாதிரி சொல்றேன் கேளுங்க.
இப்போ என்னோட அக்காள நீங்க கட்டினீங்களா..? உங்க மகள நாங்கட்டினேனா..? அதனால உங்க மவனுக்கு போட்டது அக்கா விருந்து.. நா போடறது மாமா விருந்து..” என அவரை மொத்தமாய் அன்று முழுவதும் அங்கேயே நிறுத்தி வைக்க, நடிகர் விசு போல பேசியே குழப்பவது போல சக்தியும் செய்ய,
உள் அறையில் சமையல் வேலையை பார்த்துக்கொண்டு இருந்த வாணிக்கோ,
‘இந்த மனுஷனுக்கு இப்படியெல்லாம் பேச வருமுன்னு இத்தன வருஷமா குடும்ப நடத்தற எனக்கே தெரியல பாரேன்..?’ என சக்தியின் பேச்சில் சிரிப்பு பீறிட்டது.
ஒருகட்டத்தில் ஜெயசீலன், “ச்சை.. எங்கையும் போவல விடுடா என்ன..” என கதறும் நிலைக்கே சென்று விட அதன் பிறகே அமைதியானார் சக்தி.
அவனை காலை அங்கு சென்று வந்து நிலவரத்தை சொல்லும் வரை வாணியின் முகத்தில் இருந்த கவலை ஒரு வழியாக்கி இருந்தது.
அவன் வாணியை உண்மையான நேசத்தோடு தான் கரம் பிடித்தான்.
தன் தாய் இருக்கும் நிலையில் அவரை பார்ப்பதே வாணிக்கு பெரிய வேலையாய் இருக்க, அதோடு வாணியின் வயதையும் கொண்டே.. மனமெல்லாம் கொள்ளை ஆசை இருந்த போதும் பிள்ளை பேற்றை தள்ளி போட்டிருந்தவன் அவன்.
வாணியின் வருத்தத்தை கண்டு தீனதயாளன் விசயத்தில் எவ்வளவோ முறை அவனை இங்கே அழைத்தும், அவன் மீண்டும் மீண்டும் மறுக்க ஒரு கட்டத்தில் வெறுத்து போய் அழைப்பதையே நிறுத்தியிருந்தார்.
அதில் வாணிக்கு வருத்தம் இருந்த போதும் தம்பியின் பிடிவாதத்தை உணர்ந்ததால் சக்தியை அவ்விசயத்தில் குறை கூறமுடியவில்லை அவளால்.
“என்னோட தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. இனி நா நிம்மதியா இருப்பேன் மாமா..” என அத்தனை பூரிப்போடு சில தினங்களுக்கு முன் தன்னை கட்டிக்கொண்டு சந்தோஷித்தவளை ஆறுதலுக்காய் நேற்று தோள் சாய வைத்துவிட்டார்களே..!
அவன் மனைவி கண்கலங்கினால் விடுவானா..?!
‘அவளின் சந்தோஷத்திற்காக இவரை இன்னும் கொஞ்சம் என்ன செய்து படுத்தலாம்..?’ என்ற எண்ணத்தோடு அமர்ந்திருந்தான் தோரணையாய்.
தீனாவின் திடீர் திருமணத்தை கொண்டு நேற்று வரை விடுப்பு எடுத்திருந்தவனுக்கு, மில்லில் அன்று முதல் இரவு ஷிஃப்ட் என்பதால் பொறுமையாய் அமர்ந்திருக்க முடிந்தது அவனாலும்.
அதற்கு தான் அப்படியான பாவனையோடு முகம் இறுகி அமர்ந்திருந்தார் ஜெயசீலனும்.
அப்போது சரியாக தீனாவிடமிருந்து அழைப்பு வந்தது.
அதை எடுத்தக்கொண்டு வெளியே வந்த சக்தி, “சொல்லு மாப்ளே..?” என்றதும்,
“மாமா, வீடு வரைக்கும் வாங்க..” என்றான்.
“வர்றேன் மாப்ளே..” என்றவர் வாணியிடம் சமயலறை சென்று தீனா வரச்சொன்னதை சொல்லியவர்,
ஜெயசீலனிடம், “மாமா, வெளிய ஒரு சின்ன வேல.. போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடறேன்.. ரெஸ்ட் எடுங்க.. எக்கா அந்த பாய மாமாக்கு விரிச்சுக்கொடு.. உறங்கட்டும்..” என்றுவிட்டு வெளியேறினார்.
மழையின் காரணமாக பிள்ளைகள் இருவரும் வெளியே சென்று விளையாட முடியாது என்பதால் அவர்கள் மொத்தமாய் உள் அறையை ஆக்ரமித்து இருக்க, சகுந்தலாவிடம் தனித்து பேச கூட முடியாத நிலையில், ‘அடுத்து என்ன..?’ என்ற யோசனையில் ஆழ்ந்தார் ஜெயசீலன்.
தானாக சென்று வலையில் விழப்போவது தெரியாமல்.
****
error: Content is protected !!