Skip to content
Post Views: 1,776
அத்தியாயம் 10
லதாவின் அறையில் கீர்த்திஸ்வரன் அமைதியாய் நிற்க, கோபத்தை அடக்க முடியாமல் அதை காட்டவும் முடியாமல் சீறிக் கொண்டிருந்த மகேஸ்வரன் மகன் பேசியதில் இப்பொழுது உருமிக் கொண்டு நின்றார்.
Advertisement
லதா வெளியில் அமைதியாய் இருவரையும் என மாறி மாறி பார்த்து நின்றாலும் உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சி. மகனை மெச்சும் பார்வை ஒருமுறை கணவன் அறியாமல் பார்க்கவும் மறக்கவில்லை.
Advertisement
Advertisement
காலை எட்டு மணி. இன்று அவசர வேலையாய் வெளியில் செல்ல என்று விரைவிலேயே கிளம்பி மகேஸ்வரன் வர, அது தெரிந்தது போலவே அவர் வருகைக்காக ஹாலில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தான் கீர்த்திஸ்வரன்.
Advertisement
“நீ எங்க டா கிளம்பிட்ட?” என்று அவர் கேட்கவும்,
“கொஞ்சம் உங்ககிட்ட பேசணும் ப்பா. அதான்!” என்றவனை என்னவென்று கேட்டு அங்கே அவர் நிற்க,
“அம்மாகிட்டயும் அப்படியே சொல்லிடுறேன். வாங்க!” என அவன் தான் லதா இருக்கும் அறைக்கு அவரையும் சேர்த்து அழைத்து வந்திருந்தான்.
இருவரும் ஒன்றாய் வருவதை லதா பார்த்தவர் மகனிடம் என்னவென்று கன்னசைக்க, அவனும் கண்ணமர்த்தி சைகை காட்டி தந்தையிடம் திரும்பினான்.
“என்ன சொல்லணும்? அதுவும் இவளுக்கும் தெரியுற மாதிரி!” என்று மகேஸ்வரன் கேட்க,
“ப்பா! அம்மாக்கும் எல்லாம் தெரியணும் ப்பா. அதென்ன ஒதுக்கி வைக்குறது?” என்ற மகன் கேள்வியில்,
“இதை சொல்லவா கூட்டிட்டு வந்த?” என்றார் முறைத்து.
“ப்ச்!” என தலையசைத்தவன்,
“ரெண்டு பேருக்கும் சேர்த்தே சொல்றேன். நல்லா கேட்டுக்கோங்க. இது உங்களுக்கு இஷ்டமில்லைனாலும் ஏத்துகிட்டு தான் ஆகணும். நான் நல்லா யோசிச்சு தான் முடிவு பண்ணிருக்கேன். அதுக்கு மேல முடியவே முடியாதுன்னா அப்புறம் நான் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியதிருக்கும்!” என அத்தனை பீடிகை வைத்தான் ஈஸ்வர்.
லதா சட்டென்று புரிந்து கொண்டவர் ஆச்சர்யமாய் மட்டுமே பார்க்க, அப்படி என்ன முடிவு என யோசனையாய் பார்த்தார் மகேஸ்வரன்.
“என்னால வேற எதுவும் சொல்ல முடியாது. ஆனா இது சரியா வராதுன்னு மட்டும் புரியுது. அதனால தான் சொல்றேன்!” என்றவன்,
“எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். ரெண்டு வருஷம் போகட்டும்” என்ற நொடி,
“என்ன டா விளையாடுறியா நீ? அங்க லாவண்யா அப்பா எந்த மண்டபம் பார்க்கலாம். விஐபி யார்யாரை கூப்பிடலாம்ணு தினமும் போன் பண்ணி என்னை கேட்டுட்டு இருக்கார். இப்ப போய் வேண்டாம்ணு சொல்ற?“ என கொந்தளித்த மகேஸ்வரன்,
“நீ எதுவும் சொல்லி குடுத்தியா? என்ன ட்ராமா பண்ணிட்டு இருக்க? லாவண்யா அப்பா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?” என லதாவிடம் தாவிவிட்டார்.
“அம்மாக்கு எதுவும் தெரியாது ப்பா!” உடனே குறுக்கிட்டு ஈஸ்வர் சொல்ல,
“என்ன தெரியாது? அவ சொல்லி தராமலா நேத்து வரை சரினு நின்னவன் இன்னைக்கு கல்யாணம் வேண்டாம்னு நிக்குற?” என மீண்டும் அவர் ஆரம்பிக்கவும் ஈஸ்வர் நெற்றியில் கைவைக்க,
“எல்லாம் அந்த பொண்ணாலயா? வேலைக்கு வந்த பொண்ணுகிட்ட ஒரு காபி கேட்டது தப்பா அம்மாக்கும் மகனுக்கும்? நேத்து லாவண்யா இதை சொல்லும் போதே உங்களை தட்டிக் கேட்காமல் விட்டது தப்பா போச்சு. ஆளாளுக்கு நாட்டாமை பண்ண ஆரம்பிக்குறிங்களோ?” என்ற மகேஸ்வரன் சொல்லில் கண்கள் கூர்மைபெற தந்தையைக் கண்டான் கீர்த்திஸ்வரன்.
“என்ன சொன்னிங்க?” என அவனே கேட்க,
“நேத்து வீட்டுக்கு வந்த பொண்ணை வீட்டுல வேலைக்கு வந்தவ அவமானப்படுத்தி அனுப்பி இருக்கா. அதை கேட்டதுக்கு உங்களுக்கு கோவம். அதான? எனக்கு தெரியாது மறைச்சுடலாம் நினைச்சீங்களா?” என்று கேட்டு அவர் ஆட்டமாய் ஆட,
‘பார்த்திங்களா ம்மா!’ என அன்னையைக் கண்டான் அவன்.
லதாவுக்குமே அது அதிர்ச்சி தான். ஒன்றுமே இல்லாத விஷயத்தை அவள் பெரிதாக்கியது போதாது என்று இவரும் அதைக் கேட்டு பேசிய பேச்சில் லதாவுக்கும் பக்கென்று தான் இருந்தது.
“ப்பா! எதைக் கொண்டு எதோட முடிச்சு சேக்குறீங்க? இது ஒரு கம்பளைண்ட்னு உங்ககிட்ட வந்தாளா?” என்றான் ஈஸ்வரும் கோபமாய்.
“பின்ன வராம? லாவண்யா இந்த வீட்டோட மருமகள். அவளை எப்படி நீங்க…” என அவர் மீண்டும் பேச ஆரம்பித்த போது தான் கைகாட்டி நிறுத்தி இருந்தான் ஈஸ்வர்.
“இப்ப சொல்றேன். எனக்கு இந்த கல்யாணம் இப்ப வேண்டாம். இல்ல முடியாதுன்னு நீங்க சொன்னா எப்பவுமே வேண்டாம்னு சொல்ல வேண்டியதாகும்” என்று சொல்லி வாயடைக்க வைத்திருந்தான் ஈஸ்வர்.
அதில் தான் லதா மெச்சும் பார்வை மகனைப் பார்த்ததும். மகேஸ்வரன் அதிர்ச்சியாகி நின்றதும்.
“நீ சொல்லு!” என மனைவியிடம் சைகையாய் காட்டி தலையையும் அசைத்து மகேஸ்வரன் சொல்ல,
‘என்னிடமா பேசினாய்’ என அவர் விழித்தார்.
“யார் பேசினாலும் நான் சொன்னது சொன்னது தான். இப்ப விட்டிங்கன்னா மூணு வருஷம். இல்லைனா…” என்றவன் தோள்களை குலுக்க,
“இப்ப தான ரெண்டு வருஷம் சொன்ன? அதுக்குள்ள மூணுனு மாத்துற? உன்னை நம்பி எப்படி டா நான் கல்யாணத்தை நிறுத்த? முதல்ல அந்த பொண்ணுக்கும் அவங்க அப்பாக்கும் நான் என்ன பதில் சொல்ல?” என கேட்ட மகேஸ்வரனுக்கு தெரிந்துவிட்டது மகன் உறுதி.
“என்னை கேட்டா? கல்யாணம்னு என்னை கேட்டா முடிவு பண்ணுனிங்க? இல்லைல? அது மாதிரி தான். நீங்களே பேசிக்கோங்க. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்!” என்றவன்,
“நீங்க எதுவும் கேட்கணுமா ம்மா?” என்றான் அன்னைப் பக்கம் திரும்பி.
“இப்படி திடிர்னு வேண்டாம்னு சொன்னா தப்பாகுமே ஈஸ்வர்!” என்றார் அவருமே. திருமணத்தை நிறுத்தியதாய் தன் மகன்மேல் கேள்வி வருமே என அவர் யோசித்து கூற,
“என்கிட்ட கேட்காம முடிவு பண்ணிட்டாங்க ம்மா. அதுக்காக பண்ணிக்கலாமோன்னு தான் நானும் நினைச்சேன். ஆனா முடியல. இப்ப பண்ணினா அது தப்பா முடிஞ்சுடுமோனு தோணுது!” என்றெல்லாம் அவன் சொல்லியதில் மகேஸ்வரனுக்கே பயந்து வந்தது.
“அதனால தான் சொல்றேன். இப்போதைக்கு வேண்டாம். எனக்கு இது இப்ப செட் ஆகும்னு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல” என்று சொல்ல,
“லாவண்யாகிட்ட நான் இதை என்னனு சொல்ல? அவ ரொம்ப ஆர்வமா இருந்தா ஈஸ்வர்!” என்றார் மகேஸ்வரன். இப்பொழுது குரல் கொஞ்சம் கெஞ்சலாய் வந்தது.
“அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட முடியாதே ப்பா. அது அந்த பொண்ணுக்கும் தானே கஷ்டம்?” என்றதும் அவர் தயங்கி யோசனையாய் விழிக்க,
“அந்த பொண்ணுகிட்ட நான் பேசிக்குறேன். அதுக்கப்புறம் நீங்க அவங்க அப்பாகிட்ட பேசிக்கோங்க!” என்ற ஈஸ்வர் சொல்லில்,
“நான் வேனா லாவண்யாகிட்ட பேசட்டுமா ஈஸ்வர்?” என்றார் வேகமாய் லதா.
அந்த பெண் பேசும் பேச்சிற்கு மகன் எப்படி ஈடுகொடுத்து பேசுவான் என்ற எண்ணம். கூடவே அவளின் மிரட்டலான முகமும் நியாபகம் வரவும் அவர் கேட்க,
“உன் பையன்கிட்ட சமாதானம் பேசுன்னு சொன்னேனே அது காதுல விழல உனக்கு. ஆனா அவகிட்ட பேசுறதுக்கு நீயா கேட்குறல்ல?” என மனைவியிடம் சண்டைக்கு வந்தார் மகேஸ்வரன்.
கோபத்திற்கு பதில் இப்போது சின்னதாய் சிரிப்பு வந்தது தந்தை கோபத்தில் ஈஸ்வருக்கு.
“இல்ல ஈஸ்வர் பேசிக்க மாட்டானே அவ்வளவா. அதான் சொன்னேன்” என்றார் லதா மெதுவாய்.
“மடியில வச்சு கொஞ்சு!” என்று சொல்லி வேகவேகமாய் வெளியேறினாலும் இன்னும் உடன்பாடில்லை இதில். ஆனால் மகனின் தீர்க்கமான பார்வைக்கு முன் உறுதியாய் பேசவும் முடியாமல் வெளியேறிவிட்டார்.
“ஈஸ்வர்!” என புன்னகையுடன் மகன் கைகளைப் பிடித்துக் கொண்ட லதா மகிழ்ச்சியில்,
“என்னம்மா கண்ணெல்லாம் சிரிக்குது? அவ்ளோ சந்தோஷமா? அவ்வளவு பிடிக்கலைனா முன்னாடியே சொல்லிருக்கலாமே!” என்று ஈஸ்வர் புன்னகையுடனே கேட்க, தன் தலையில் தானே தட்டிக் கொண்டார் லதா.
“அப்படி இல்லை டா அது. நீயா முடிவு பண்ணி அதை ஸ்ட்ரோங்கா பதிவு பண்ணிருக்கியே! அதுவும் உன் அப்பா முன்னாடியே! அந்த சந்தோஷம்!” என்றார் லதாவும்.
“ஹ்ம்! ஆனா பாருங்க! லாவண்யா நேத்து என்கிட்ட சண்டை போட்டது பத்தாதுன்னு அப்பாகிட்டயும் இதையே சொல்லி இஸ்யூ ஆக்கி வச்சிருக்கா!” என்று அவன் சொல்ல,
“ஹ்ம்! நல்லா தெரியுதே! லாவண்யாக்கு பல்லவியை பிடிக்கல. அதே மாதிரி பல்லவிக்கு லாவண்யாவை கண்டாலே ஆகல!” என்று சொல்ல,
“ஆமாமா! மூன்றாம் உலகப் போர் இல்ல ரெண்டு பேருக்கும்!” என்றவன் நிறைவாய் ஒரு நிம்மதிப் புன்னகை கொடுத்தான்.
“அஞ்சலி இன்னுமா வர்ல?” ஈஸ்வர் கேட்க,
“ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு பத்து நிமிஷம் முன்னாடி தான் போனா ஈஸ்வர். இந்த பொண்ணு பல்லவி தான் இன்னும் வர்ல!” என்று லதா சொல்லும் நேரம்,
“நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு” என்று வாசலில் நின்றாள் பல்லவி.
ஈஸ்வர் திரும்பி அவளைப் பார்க்க, “என் பேர் ரோஸ்ட் ஆகும் போதே வந்துட்டேன்” என்றாள் பாவமாய் முகம் வைத்து.
அதற்கும் சிரிப்பு தான் வந்தது ஈஸ்வருக்கு.
“ஒட்டு கேட்டியா நீ?” லதா முறைக்க,
“உங்க பையன் மேல சத்தியமா இல்ல!” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவளை ஈஸ்வரும் முறைக்க,
“நான் வந்த நேரம் என்னை பத்தி பேசினதை கேட்டுட்டு நல்ல பிள்ளையா வெளில போய்ட்டேன். அண்ட் ப்ரோமிஸ் அதுக்கு அப்புறம் வேற எதையும் நான் கேட்கல!” என்றாள் பல்லவி.
“இப்ப தான் மாமா வெளில போறதை பார்த்தேன். அதான் உள்ள வந்தேன்!” என்றாள் அவளே.
“அப்புறம்! காங்கிரட்ஸ் சார். அந்த லாவண்யாகிட்ட இருந்து விடுதலையா உங்களுக்கு?” என்றவள் கேள்வியில் அதிர்ந்து லதா,
“ஷ்ஷ்ஷ்!” என அவளிடம் சைகை செய்ய,
“இப்ப தான் எதையும் கேட்கலைன்னு சொன்ன?” என்றான் இன்னும் முறைத்த ஈஸ்வரும்.
“நிஜமா என்னை பேசினதை கேட்ட அப்புறம் வேற எதுவும் கேட்கல. ஆனா அதுக்கு முன்னாடி பேசினது என் அனுமதி இல்லாமலே காதுக்குள்ள போயிடுச்சு” என்று அவளும் சொல்ல,
“அப்ப எப்ப தான் வந்த நீ?” என்றார் லதா.
“அப்புறம் சொல்லவா?” என்றவள் திருட்டு விழியில்,
“ம்மா! இவளும் சரியான ஆளு தான். பார்த்து இருந்துக்கோங்க!” என அன்னையை எச்சரித்துவிட்டே சென்றான் கீர்த்திஸ்வரன்.
“இப்ப தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னான். எப்பவும் வேண்டாம்னு சொல்லல. அதுவும் லாவண்யாவை வேண்டாம்னும் சொல்லல” என லதா எடுத்து சொல்ல,
“ஓஹ்!” என்றாள் உடனே.
“இருந்தாலும் உனக்கு தைரியம் தான் பல்லவி. என்ன வாய் பேசுற. என்னவோ கோபப்படாம போறான் ஈஸ்வரும்!” என்று லதா சொல்ல,
“நிஜமா தான். இப்படி எல்லாம் யார்கிட்டயும் உரிமையா பேசினதே இல்ல நான். அம்மாகிட்ட என் தாத்தா பாட்டிகிட்ட மட்டும் தான் பேசுவேன். இங்க நீங்க ரொம்ப இடம் குடுத்துட்டிங்க நினைக்குறேன்!” என்று பல்லவியே சொல்ல, அதில் கனிந்தவர் அவளை கண்டிக்க எல்லாம் நினைக்கவே இல்லை.
error: Content is protected !!