Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

43. தனுஜா செந்தில்குமார் - மண் கொடுத்த மாணிக்கம்

மண் கொடுத்த மாணிக்கம் – 9

அத்தியாயம் – 9
லட்சுமணனுக்கு இந்நாள் அழகான விடியலாக இருந்தாலும்.இந்தப் பொழுது முடியும் போது அது எந்த வகையான தாக்கத்தை அளிக்கும் என்பதை இவர்கள் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில்.சற்று முன் தான் மீனாளும் லட்சுமணனும் வந்து சேர்ந்தார்கள்.விடியலுக்கே லட்சுவும் மீனாளும் கிளம்பி விட்டனர், இங்கு வந்து பூஜைக்கு உரிய ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.மீனாளுக்கு நெருங்கிய சொந்தமாக வேலை செய்பவர்களும்.சின்னப்பன் மற்றும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள்.


Advertisement

அந்த பக்கம் வள்ளியப்பன் முக்கியச் சொந்தமென்று இருபது பேர் வருவார்கள் என்பது கணிப்பு.இவர்கள் காரியங்கள் செய்து கொண்டிருக்கும் போதே வள்ளியப்பன் தனது குடும்பத்துடன் கோவிலுக்குள் நுழைந்தார்.அழகு பதுமையன சாதாரணப் பச்சை கைத்தறி புடவையில் ரோஜா வண்ண நிற பெரிய படார் போட்டு, உடலை ஒட்டாத வண்ணம் அதே நேரம் பாந்தமாக உடுத்திருந்தாள் சாலா.

Advertisement

அது மட்டுமா காதில் ஏழு கல் வைத்து ஜிமிக்கி,கழுத்தை ஒட்டி ஒரு அட்டிகை அதனைத் தாண்டி நீளமாக அன்னம் பதக்கம் வைத்த ஆரம்.கையில் பச்சை மற்றும் ரோஜா வண்ண நிறத்தில் கண்ணாடி வலைகள்.அழகாக ஜடை பின்னி அதற்கு ஜாதி முல்லை சரம் வைத்திருந்தாள்.

Advertisement

இன்று லட்சுமணன் என் வசமே என்ற எண்ணத்துடன் சாலா ஆச்சி கங்கணம் கட்டி வந்திருப்பாள் போலும்.அத்தனை அட்டகாசமாக இருந்தாள்.லட்சுமணன் கண் முழுக்கு அசைந்து வரும் அந்தப் பூந்தேரில் தான் இருந்தது.

Advertisement

“வாக! வாக அண்ணே!” தட்டில் பூ ,பழம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மீனாள்.வள்ளியப்பன் வருகை உணர்ந்து விசாலட்சி துணையுடன் நடந்து சென்று அவர்களை வரவேற்க.
“மீனா!”
“மதனி!” என்று கண்ணாத்தாளும்,மீனாவும் கைகளைக் கோர்த்து கொண்டனர்.இருவருக்கும் ஒரே பிள்ளைகள்.பிள்ளைகள் முக்கியக் கட்டத்தைக் கடக்கும் போது ஒரு பதட்டம் இருக்கும் அல்லவா.அந்த வகையில் இரு தாய் மார்களுமே சற்று நெகிழ்ந்து தான் இருந்தனர்.
அதற்குள் சின்னப்பன் வந்து, “வா வள்ளியப்பா! வா கண்ணாத்தா!” முறையாக அழைத்தவர் மீனாளிடம் திரும்பி,
“பூசைக்கு நேரம் போகுது மீனா வாக”
“இதோ அண்ணே என்றவள் சாலாவின் கையைப் பிடித்து அதில் மென்மையாக முத்தம் பதிக்க. அவளும் மீனாவின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள். சாலாவை அழைத்து வந்து லட்சுவின் அருகில் நிற்க வைத்து, பூஜையைத் தொடங்க அடுத்த அரைமணி நேரம் அத்தனை அமைதியாகக் கழிந்தது. கண் மூடி குலசாமியை துணை நாடி நின்றனர் அனைவரும்.
பூஜை முடிந்த கையோடு சின்னப்பன் பெரியவராக முன் நிற்க.இரு குடும்பங்களும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டனர்.லட்சுவின் பார்வை முழுமையும் சாலா நிரம்பி வழிந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.சிந்தாமல் சிதறாமல் அரிவையை அள்ளி கொண்டு கிடந்தான் லட்சு செட்டி.
முகம் கொள்ளா புன்னகையுடன் இரு வீட்டினரும் வெத்தலையை மாற்றிக் கொள்ளும் சமயம் பெரும் கூட்டத்துடன் மகனை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் கோபமாக நுழைந்தார் அண்ணாமலை செட்டியார்.
சரியாக நிகழ்வு தொடங்கும் நேரம் சிறு கூச்சலாகக் கேட்க அனைவரும் திரும்பி பார்த்தனர். அங்கே அண்ணாமலை பெரும் கோபத்துடன் உள்ளே நுழைவதை பார்த்து அதிர்ந்து நின்றாள் மீனா அவர் பக்கத்தில் சோமு வேறு.உண்ணாச்சி பெரும் கவலையில் பின்னே வந்தார்.அவருக்குப் பின் சோமுவின் மனைவி.
சோமு – வள்ளிக்கு குழந்தைகள் இல்லை என்பது செவி வழி செய்தியாகக் கிட்டியது.
வள்ளியப்பன் இவர்களைக் கண்டு கையில் உள்ளதை கீழே வைக்கப் போக, “மாமா என்ன செய்றீக தொடக்கத்தைப் பாதியில விடுற அளவுக்கு முக்கியம் இங்கன எதுவுமே இல்லை” அத்தனை உறுதியாகச் சொன்னான் லட்சுமணன். அதற்குள் நெருங்கி விட்டனர், பல வருடங்கள் சென்று பார்க்கும் பேரனை வாஞ்சையாகப் பார்த்து வைத்தார் அண்ணாமலை.வந்த கொதிப்புக்கு பேரனின் தரிசனம் தற்காலிக குளுமையைத் தந்தது.
“அப்பு!” லட்சுமணனை அழைக்க.
“வாக அப்புச்சி! வாக அப்பத்தா! எல்லாரும் வாக!” மரியாதையாக அழைத்தவன் மீனாளிடம் திரும்பி.
“ஆத்தா அஞ்சு நிமிசந்தேன் ராகு காலம் தொடங்கிடும் உறுதி செய்க” என்றதும் மீனாள் தனது அதிர்ச்சியில் இருந்து தெளிந்து வள்ளியப்பனை பார்க்க. அண்ணாமலை அடுத்து பேசும் முன்னே நொடி பொழுதில் அவர் எதிரிலே லட்சுமணன் சாலா திருமணம் உறுதி செய்யப் பட்டுவிட்டது.அண்ணாமலையின் ஒரு நொடி இளக்கம் லட்சுமணன் காரியம் சாதிக்கத் தோதுக் கொடுக்கச் செய்தே விட்டான் கள்ளன்.
பேரனின் செயலில் கோபம் வர, அதனை அவனிடம் காட்ட முடியாமல் சின்னப்பன் தொடங்கி வள்ளியப்பன், மருமகள் வரை சரமாரியாகச் சாட தொடங்கி விட்டார் அண்ணாமலை செட்டியார்.
“என்ன சின்னப்பா? எத்தினி சம்பந்தம் எடுத்துருக்கீக இப்போ நீக முன்ன நின்னு செய்யிற காரியம் சரியா சொல்லுக?”
“அண்ணே!” அண்ணாமலை செட்டியார் சின்னப்பனுக்குக் கொஞ்சம் பெரியவர் என்பதால் சட்டென நியாயத்தை எடுத்து சொல்ல தயங்கி நின்றார்.அது சரி பணம் படைத்தவர் என்றாலும் சமூகத்தில் பெரியவர் என்றாலும் தப்பை தப்பென்று சொல்ல தயங்கி தான் ஆக வேண்டி உள்ளது.
சின்னப்பன் நிலை உணர்ந்து மீனாளே முன் வந்தாள். மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் கொள்ள வேண்டும்,”வணக்கம் எல்லாரும் வாக நீக வந்தது ரொம்பச் சந்தோஷம்”
“உங்களுக்குச சந்தோஷம், ஆனா நீங்க செய்யிற காரியம் எங்களுக்கு வருத்தந்தேன். யாரை கேட்டு எம்பேரனுக்குப் பேசி முடிச்சீக? வூட்டுக்கு பெரியவுக இத்தினி பேர் இருக்கோம் தானே? எங்களை மீறி என்ன காரியம் பண்ணுறது?”
“ஐயா!” என்றழைப்பில் மீனாள் உறவுகளை தூரம் நிறுத்தினாள்.உங்க பேரந்தேன் அது எந்த வகையில உரிமை? பங்குல வரும்னு தான் தெரியல” என்றவள் பேச்சில் சோமு பல்லை கடித்தான்.அது என்னவோ மீனாளை சோமுக்குப் பிடித்தம் இல்லை அதுவும் லட்சுமணன் பிறப்பிற்கு முன்னேவாம் இதுவும் மீனாளுக்கு செவி வழி செய்தி. அவளுக்கு சோமு எந்த வகையன தெரியவில்லை.
“அப்போ உரிமை இல்லனு சொல்றீகளா?” என்றதும் மீனாள் எதுவோ பேச வர.அவளுக்கு முன் வந்து நின்றார் வள்ளியப்பன்.
“மாமா!”
“வாக வள்ளியப்பா! நிழல் கொடுத்துப் பழம் பறிக்கப் பார்க்குறீகளோ” என்றதுமே கண்ணாத்தாள் அதிர, சாலா கண்ணீர் விடத் தொடங்கி விட்டாள்.மெல்லிய மனம் படைத்த பெண்ணுக்கு சுடு சொல் ஆழமான காயத்தைக் கொடுத்தது போலும்.
“என்ன பேசுறீக” உண்ணா ஆச்சி பதறி கணவனைத் தடுக்க.
“விடுக அயித்த பேசட்டும் பேச்சுன்னு வந்தாச்சு பேசிப்புடுவோம்” வள்ளியப்பன் நிதானத்தில் கண்ணாத்தாள் கலங்கி நிற்க லட்சுமணன் வள்ளியப்பனுக்குப் பக்கவாட்டில் வந்து நின்று கொண்டு கைகளைக் கட்டி கொண்டான். அண்ணாமலை தவிர சோமு தொடங்கி வந்த அனைவருக்கும் லட்சுமணன் செயல் சுள்ளென கருத்தில் பதிந்தது.
சோமுவின் ஒரு நொடிக்கு குறைவான பார்வை லட்சுமணனின் கம்பீரத்தை தீண்டி விட்டு சென்றது.பக்கத்து ஊரில் இருந்தும் மகனை பார்க்க வாய்ப்புகள் இருந்தும் எண்ணமில்லாமல் போன சோமு விந்தையான தந்தை தான்.
இப்போதும் அவர் பார்வையில் பரவசம் இல்லை,அன்பில்லை.கம்பீரமாக அழகாக இருந்த மகனை மருத்துவன் என்ற பிரமிப்பும் சேர ஒரு ஆராய்ச்சியான பார்வை பார்த்து வைத்தார் அவ்வளவே.
“உங்களைத்தேன்? கேட்க ஆளு இல்லனு நினைப்பா வள்ளியப்பா? உதவி செஞ்சா உங்களுக்கு அடிமை ஆக்கி புடுவீகளோ? ஒன்னுத்துக்குமே வழியில்லாம அத்தினியும் இழந்து நிக்கிறீக அதுனால இந்தச் சம்மந்தம் கை கூடியிருக்கு.
இதே எம்பேரன் சராசரி வேலையில இருந்து நீக முன்ன போல வசதி படைச்சு  இருந்தா பொண்ணைக் கொடுத்திருப்பீகளா? என் மருமக பொண்ணுக்குச் சூதானம் இல்லை நன்றிக்கு புள்ளைய தாரைவாக்குதோ? என்னவோ?”
பேச்சுக்கு ஒரு எல்லையே எனக்கு இல்லை என்பது போல் அண்ணாமலை சரமாரியாகப் பேசி வைக்க.இந்த ஆக சிறந்த குற்ற பத்திரிகையைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை மீனாளுக்கு.பல வருடங்கள் சேர்த்து வைத்த கோபமெல்லாம் கொப்பளித்துக் கொண்டு வர தருணம் பார்த்துக் கொண்டிருந்தது.
அவர் கேட்ட கேள்விக்கு வள்ளியப்பன் வீட்டுப் பெண்கள் தான் கலங்கி நின்றனர், “என்ன மாமா கேட்டீக தங்கச்சிக்குப் பாதுகாப்பு கொடுத்து, அவ பையனை ராவிகிட்டேனு சொல்லுதீக அப்படித்தானே.
நீக சொல்லுறது அம்புட்டும் நூத்துக்கு நூறு சதவீதம் சரித்தேன்.ரத்தத்தை வத்தி, ராவு, பகல் பார்க்காம உழைச்சு,அக்கம், பக்கம் பார்த்து நிற்காம நேர்மையா கிடந்து பிள்ளையே கதின்னு வைரமா செதுக்கி வச்சிருக்காகத் தங்கச்சிமாரு .
கண்ணுக்கு முன்னே தங்கமா குணம் கொண்டு வளர்ந்த புள்ளைய,எந்த பொண்ணைப் பெத்த மடையனவாது விடுவானா அதேன் அள்ளிகிட்டேன் நான் சுயநலவாதிதேன் மாமா ” வெகு இயல்பாகப் பேசிய வள்ளியப்பனை பார்த்து ஒரு நொடி திருத் திருவென விழித்தார் அண்ணாமலை.
இப்படி பேசுபவனிடம் எப்படிச் சண்டை கட்டி வைப்பது.வள்ளியப்பன் பேச்சில் சிறு தைரியம் கொண்டு இப்போது சின்னப்பனும் சுற்றி இருந்தவர்களும் சேர்ந்து கொண்டனர்.சிறு சல, சலப்பு கூட அதுவரை அமைதியாக இருந்த மகனை பார்த்தவர் பேச்சு எல்லை மீறி செல்லவும் மெதுவாக நெருங்கி அவனது கையை மீனாள் பற்ற.அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளது கையை இறுக்கப் பற்றியவன்.
கொஞ்சம் குரல் உயர்த்தி, “மணி அந்த நாற்காலியை எடுத்து வாக” என்றதும் ஒரு பணியாள் நாற்காலியை கொண்டு வந்து போட.அதில் தாய்யை பத்திரமாக அமர வைத்தவன்.பின்பு நிமிர்ந்து தாத்தனையும், அப்பனையும் நேர் கொண்டு தனது கணைகளை நோகாமல் எய்தான்.
“அப்புச்சி!” என்ற அழைப்பில் அத்தனை மென்மையைத் தேக்கி அழைக்க உருகி தான் போனார் மனிதர்.லட்சுமணன் வாழையில் வலிக்காமல் ஊசி ஏற்றும் ரகமென்று அவருக்கு தெரியாது அல்லவா.
“என்ன கேட்கனுமோ இனி என்னைக் கேளுக சொல்றேன்”
“ஐயா! எங்க ஐயா கணக்கா இருக்கீக உங்கள கண்ணுல காட்டாம வச்சிக்கிட்டாக இங்கன சறுக்கல் இருக்கப் போயித்தேன் நாங்களும் உங்கள பார்க்க வரல” பூசி மொழுக அதற்குச் சிறு புன்னகை கொடுத்தவன்.
“அப்புச்சி கண்ணுல காட்டாம விட்டா இதோ இப்போ இத்தினி சனம் வந்த மாதிரி ஆளுங்களைத் திரட்டி வந்து என்னைப் பார்க்க வேண்டியது தானே அப்புச்சி?” ஒரே போடாகப் போட எங்கே அண்ணாமலை பேச. அத்தனை நேரம் ஆட்டாமாக ஆடியவர் பொத்தெனத் தரையில் விழுந்தார்.
“சரிய்யா! சரிய்யா! தப்பு எங்க மேலதேன் அதுக்குன்னு நாங்க எங்க உரிமையக் கேட்க கூடாதா?” சமாளிப்பாகச் சாமர்த்தியம் காட்டியவரை பார்த்து இப்போது நான் உங்களுக்கு மேல் என்பது போல் பல் தெரிய சிரித்தவன்.
“அப்புச்சி நான் உங்க பேரன் தானே” என்றதும் அவனிடம் நெருங்கி அவன் கன்னம் தொட்டு.
“இது என்ன கேள்வின்னு கேட்குறீக எம்பேரந்தேன்”
“அப்போ எனக்கு உரிமை இருக்கு?”
“என்ன கண்ணு கேள்வி? ஏக போக உரிமை கிடக்கு”
“அப்போ சரித்தேன் இப்போ உங்களுக்குச் சில சங்கதி புரிய வேண்டி கேள்வி கேட்பேன் நீக என் மேல வெசன படக் கூடாது”
“இல்லய்யா பட மாட்டேன்”
“சரி இவர் யாரு எனக்கு?”அதுவரை தகப்பன், மகன் உரையாடலை ஆவென்று பார்த்திருந்த சோமுவை கை காட்டி கேட்க.மகன் தன்னைக் கை காட்டவும் ஒரு நொடி அதிர்ந்து நின்றார் சோமு.
“”அவுக என் மகேன் உங்களைப் பெத்தவரு”
“சரித்தேன் மகேன் தப்புச் செஞ்சா தகப்பன் என்ன செய்யனும்?” என்றதும் பேரன் எங்கு வாரான் என்று நாடியை பிடித்தவர் லட்சுமணனை அதிர்ந்து பார்த்து மீண்டும் சமாளிக்கத் தொடங்கினார்.
“நான் அவன் வேற பொண்ணைக் கூட்டி வரும் போது சண்டை கட்டி வச்சேன் கண்ணு.இப்போவரை நாங்க அவுகள வூட்டுக்குச் சேர்கள என்றதும் சோமுவின் இந்நாள் மனைவியை எட்டி பார்த்த லட்சுமணன்.
“அப்போ நல்லது, பொல்லதுக்கு எங்க ஆத்தா மாதிரி அவுகளையும் தள்ளி வச்சீக அப்படித்தானே” முகத்தில் வாடாத புன்னகை கொண்டே கேட்டவனைப் பார்த்து இப்போது முழித்தார் அண்ணாமலை.
“சரி போகட்டும் வூட்டுல இருந்து புள்ளைய கூட்டிட்டு வெளில போனப்பவே ஆத்தாளை பேசி சமாதானம் பண்ணி வைச்சிருக்கலாமே?”
“ஏன் பண்ணல? கேளுங்க உங்க ஆத்தா கிட்ட அத்தினி தூரம் சொன்னேன். அவன் போன போகட்டும் நீ எங்களோட இருன்னு அத்தினி எடுத்து சொன்னோம்” வேகமாகப் பேசியவரை பார்த்து.
“சரி ஆத்தா மேலதேன் தப்பு பெரியவுக சொல் பேச்சு கேட்கல.கல்யாண பண்ண பொம்பளைன்னா புருஷன் தப்புப் பண்ணலாம் சுயம் தொலைச்சுப்புட்டு பெரியவுக சொல் பேச்சு கேட்டு, அவுக காலுல கிடந்திருக்கனும்.தனுச்சு வெளில வந்து மானமா பொழைச்சு இருக்கக் கூடாது”பேச்சில் எடக்கிருந்தாலும் வெகு மரியாதையாகப் பேச்சை தொடர்ந்தான் லட்சுமணன்.
“சரி அதை வுடுக உங்க அளவுக்கு ஆத்தாளுக்கு சமத்து பத்தல.இதுக்குப் பதில் சொல்லுக அப்புச்சி,கையில பிள்ளையைப் புடிச்சிட்டு வந்த பொண்ணு எங்கன இருந்தானு தெரிய வரும் போது இதே வள்ளியப்பன் வூட்டுக்கு வந்து நீ யாருடா எம்மூட்டு புள்ளைக்கு அடைக்கலம் தரன்னு கேட்க வேண்டியது தானே அப்புச்சி? ஏன் அப்புச்சி கேட்கல?”
“……” அண்ணாமலை வெகு அமைதி.
“சரி இதையும் விடுக இதுக்குப் பதில் தெரியுதான்னு பாருக. இதுக்கு மட்டும் நியாயமா பதில் சொல்லி வச்சீங்கன்னா நீக கைகாட்டுற பொண்ணுக்கு மறு பேச்சே இல்லாம தாலி கட்டுறேன்” என்றதும் இன்னும் வாய்ப்பிருக்கே என்ற களிப்பில் அண்ணாமலை செட்டியார் தலையை வேகமாக ஆட்டி வைக்க.
“இதே லட்சுமணன் சாதாரண வேலையில இருந்து ஆத்தாளுக்கு மசாலா பொடி டப்பால அடைச்சு வூட்டுக்கு வூடு போயி விக்கிற சாதாரணமான மனுஷனா இருந்தா? நீக உங்களோட பேத்தியை கொடுத்திருப்பீகளா? ஏன் கேக்குறேனா குணம் மட்டும் போதுமுன்னு நீக எண்ணிருந்தா ஆத்தாளை தக்க வச்சுக்க முயற்சி செஞ்சிருப்பீக . அதுக்கு அப்போ நிறைய வழியும் இருந்துச்சு அதேன்” அண்ணாமலை வள்ளியப்பனை பார்த்து கேட்ட அதே கேள்வி கணை தன்னைத் துளைக்கும் போது தான் அதன் வலி உணர்ந்தார் அண்ணாமலை.
“அது” என்று தொடங்கியவரை தடுத்து நிறுத்தியவன்.
“அப்புச்சி நீக என் மேல வச்ச பாசம் உண்மைங்கிற பட்சத்துல என் மேல சத்தியம் வச்சுப் பதில் சொல்லுக” இந்தமுறை எந்தச் சமாளிப்பு வைக்க முடியா வண்ணம் அண்ணாமலையை நிறுத்தி வைக்கத் தளர்ந்து நின்றார் பெரியவர்.
பேரனின் முகம் பார்க்காமல், “என் மக பொண்ணு கொடுக்க யோசனைத்தேன் பண்ணிருப்பாக என் ஆசைக்கு வேண்டித்தேன் பேச வந்தாக” என்றவரை பார்த்து இப்போது சத்தமாகச் சிரித்த லட்சுமணன்.
“ஆனா மாமா எனக்குப் பொண்ணு கொடுத்துருப்பாக. நீக எண்ணி வைக்கிற மாதிரி என் பணத்தை கொண்டு உடனே பண்ண சம்மந்தம் இல்லை இது. பல வருசத்துக்கு முன்னே பத்து வயசுல போட்ட பரிசம்.இன்னும் அந்த நாளு கண்ணுல நிக்குது அப்புச்சி.மாமா வூட்டை விட்டு காரைக்குடிக்கு வாரத்துக்கு முன்னுக்கு அவர் சொன்ன வாக்கு.
நல்ல இருப்பீக சாதுச்சு புட்டு வாக பரிசுக்கு பொண்ணை தரேன்னு சொன்னவரு என் மாமா. இந்த இடத்துல என் மேல உள்ள நம்பிக்கையத்தேன் நான் பார்த்தேன்.இதை அவர் சொன்ன நேரம் எங்க கிட்டையும் அத்தனை வசதி இல்ல?”
“…..”
“பாருக எத்தினி வாய்ப்புக் கொடுத்தேன் ஒரு கேள்விக்கும் உங்க கிட்ட நியாயமான பதில் இல்லை. இதுக்கு மேல நான் என்ன செய்ய?” என்றவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் அண்ணாமலை தவிக்க.அவரை மேலும் தவிக்க விட லட்சுமணனுக்கு விருப்பம் இல்லை.இதுவும் மீனாளின் நற்குணம் தானே
“நீக பெரிவுக அப்புச்சி இது தப்பு? என்மேல உரிமையைக் காட்ட எண்ணி வச்சீகனா சாலா என்று அழைக்க.அவன் அழைத்தக் குரலுக்கு முன் வந்து நின்றவளுடன் அவனும் அவர் கால் பணிந்து நிற்க.உண்ணா ஆச்சி வாய்விட்டே அழுது விட்டார்.அண்ணாமலை செட்டியார் அங்கனம் சரிந்து அமர்ந்து விட்டார்.
லட்சுமணன் எண்ணினால் வார்த்தையை வால் கொண்டு வீசி இருக்கலாம்.இருந்தும் அவன் குணம் கொண்டு கத்தி கூச்சல் போடாமல், தகாத வார்த்தை பேசி தர்க்கம் செய்யாமல் லட்சுமணன் பெரியவர்களை நடத்திய பாங்கு அனைவரையும் கவர்ந்து தான் நின்றது.
மீனாளும் உணர்ச்சி பிடியில் நாற்காலியில் கண் மூடி சரிய.
“அயித்த!” சாலாவின் அலறலில் தான் அனைவரும் மீனாளை பார்த்தனர்.நொடியில் சூழ்நிலை மாற.ஒரு மருத்துவனாகத் துரிதமாகச் செயல் பட்டான் லட்சுமணன்.ஈன்ற வலியும் அதன் பின் பட்ட பெரும் வலியும் இக்கணம் பலனை அள்ளி கொடுக்கப் பெரும் நிறைவில் தளர்ந்தாள் போலும் மீனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!