Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 9

என் ஜீவன் உன்னை சேருமா



Advertisement

   அத்தியாயம் – 9

Advertisement

Advertisement

  கல்யாண மண்டபத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகி பார்க்க..

 அக்னிக்கு  தன் முன் எரிந்து கொண்டிருந்த அக்னி குண்டத்தில் உள்ள   தீ   போல   எழுந்து நின்றான் அக்னிபுரிஸ்வரன்..

Advertisement

 மாயா என்னாச்சு என்பது போல் அக்னியை  பார்த்தாள்,  தாலி கட்டினார்  தானே, அவன் கட்டியது  போலதான்  தெரிந்தது  அவளுக்கு.. பின்பு  சட்டென அக்னி எழுந்து  அவள் கழுத்தில் தாலியை கட்டாமல் அக்னிகுண்டத்தில்  தாலியை போட்டவுடன்  பயந்து போனவள்..

 அக்னி முகத்தையே அவள் பயந்து போய்  பார்க்க.. அக்னி  ஒரு நொடி கூட மாயாவின் முகத்தை பார்க்கவில்லை..

 உலகநாதன் மகள் பக்கத்தில் நின்று  இருந்தார். மகளுக்கு  திருமணம் முடிந்தது என்று பூக்களை  அவர் தூவ திடீரென்று அக்னி தாலியை ஓம குண்டத்தில் போட்டவுடன் அதிர்ச்சியானவர். ஒரு நிமிடம் என்னாச்சு  ஏன் இப்படி நடந்து கொள்கிறான் அக்னி  என்று சம்பித்து போய்   நின்றவர்..

 அக்னி மணமேடையை விட்டு கீழே இறங்கவும் அவனின் கையைப்  பிடித்து இருந்தார்..

” என்ன ஆச்சு?  என்ன மாப்பிள்ளை,ஏன் ஏதாவது  தப்பா நடந்துச்சா  என்ன கோபம் எங்கள் மேல் உங்களுக்கு ” என்றார்

 அக்னி ஒரு  கோணலாக ஒரு சிரிப்பை  சிரித்தவன்,,  “என்னை லவ் பண்ணுற  பொண்ணு அங்க சாக கிடக்கிறா,  நான் போய் அவளை காப்பாற்றனும்,சாரி நான் போகணும்”  என்று படபடவென்று  பேசிவிட்டு  செல்ல..

 “என்னாச்சு  அக்னி யார் அந்த பொண்ணு முதலில் கல்யாணம் நடக்கட்டும் அப்புறமா பாத்துக்கலாம் வாங்க வந்து முதலில் என் பொண்ணு கழுத்துல  தாலியை  கட்டுங்க”  என்றார் உலகநாதன்..

” இல்ல  அங்கிள் என்னை காதலிச்ச பொண்ணு அங்க சாக கிடக்கிறா  நான் கண்டிப்பா அங்கே போயே ஆகணும்” என்று மறுபடியும் அதயே அவன்  திரும்ப சொல்ல..

 “மாப்பிள்ளை” என்று பல்லை கடித்தார்  உலகநாதன்…

” யாரோ ஒரு பொண்ணு, உங்களை லவ் பண்ணி முட்டாள்தனமா சாகப்போன அதுக்கு  நீங்க எப்படி பொறுப்பு.. நீங்க லவ் பண்ணல தானே,  அப்புறம் என்ன?   வேற ஆளை விட்டு பாத்துக்கலாம் வாங்க வந்து முதல்ல என் பொண்ணு கழுத்துல தாலியை கட்டுங்க வாங்க” என்றார்..

 அக்னி  தன் இரண்டு கைகளையும்  சத்தமாக தட்டி “ஓ.. யாரு சாக கிடந்தாலும் உனக்கு பரவால்ல யாரு எக்கேடு கெட்டாலும் பரவால்ல, ஆனா உனக்கு உன் பொண்ணு கல்யாணம் மட்டும் நடக்கணும் அப்படித்தானே” என்றான்..

 “எனக்கு யாரையும் பத்தியும், எந்த  கவலை இல்லை,என் பொண்ணு  மாயா வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் . நீ வந்து முதலில் தாலியை கட்டு அப்புறம் பேசலாம்”..

” தாலி கட்ட முடியாதுடா” என்றிருந்தான்  அக்னி கோபமாக..

” அக்னி என்ன பிரச்சனை உனக்கு ஏன் நீ  இப்படி பேசுற,  நீ பண்ணுறது சரி இல்ல.. முதலில் மாயா கழுத்தில்  தாலியை  கட்டு அப்புறம் பேசிக்கலாம்”….

 அக்னிக்கு  கோபம்  எல்லை  மீற.. மறுபடியும் “என்னை காதலிச்ச பொண்ணு அங்க  சாக கிடக்கிறா நான் போவேன்” என்று மீண்டும் சொன்னதையே  அவன் சொல்லி வெளியில் நடக்க..

 “டேய்” என்று அவன் சட்டையை பிடித்து இழுத்து இருந்தார் உலகநாதன்..

 “என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல,  சொன்னதையே திரும்ப,  திரும்ப  சொல்லுற ‘நான் காதலிச்ச பொண்ணு சாக கெடக்கிறான்னு” என்று அவனை  திட்ட ஆரம்பித்திருந்தார்..

” நீ  25 வருஷம் முன்னாடி இதே டைலாக்கை  சொல்லிட்டுதானே ஒரு பொண்ண மணமேடையில தவிக்க விட்டுட்டு   போன, அப்போ என் குடும்பம் எப்படி துடிச்சிருக்கும்” என்றான்..

 சட்டென அக்னியின் மேலே இருந்த அவர் கையை எடுத்தார்..

 உலகம் தலைகீழா சுற்றுவதை போல்  அவருக்கு தெரிய.. “யாருடா நீ”  என்றிருந்தார் உலகநாதன் அவனை பார்த்து..

 உனக்கு நான் ஏன் பதில் சொல்லணும் என்பது போல் ஒரு பார்வை பார்த்தவன் வெளியே கிளம்ப  போக..

” சொல்லுடா சொல்லிட்டு போ  யாருடா நீ உனக்கும் ரதிதேவிக்கும் என்ன சம்பந்தம்”..

 “ஓ என் அத்தை பேர் கூட உனக்கு ஞாபகம் இருக்கா, பல்ல ஒடச்சிடுவேன் இன்னொரு தடவை என் அத்தை பேர சொன்னா.. என்  அத்தை  பேரை சொல்ல கூட உனக்கு தகுதி இல்லை, இன்னொரு தடவை என் அத்தை பேரை சொன்ன கொன்னு போட்டுடுவேன்” என்றவன் மாயாவை திரும்பி பாராது மண்டபத்தை விட்டு வெளியே சென்று விட..

 ரதி தேவிக்கு  என்ன ஆச்சு என்று ஷாக் அடித்தது போல் உலகநாதன் அதிர்ச்சியாக நிற்க,, “டாடி” என்று கலங்கிய கண்களோடு தன்னை  தொட்ட மாயாவை பார்த்தார்…

 மகள்   கண் கலங்கியதை பார்க்க பொறுக்காமல் மகளை அணைத்துக் கொண்டு “மாயா அழாத” என்று  அவளை சமாதானம் பண்ண..

 “என்னாச்சு டாடி அக்னி அத்தான் ஏன் கோபமா போறாங்க அவங்க பேசறது  எனக்கு ஒன்னும் புரியல என்ன சொல்றாங்க அவங்க”..

” நான் சொல்றேன் டா மாயா” என்றவர்.. கல்யாணம் மண்டபத்தில்  ஆட்கள் நிறைய வந்திருக்க  அவர்களை பார்த்து, கைகூப்பி “கல்யாணம் நின்னு போச்சு, கண்டிப்பா இன்னொரு நாள் நடக்கும், வந்ததுக்கு நன்றி” என்று   அனைவரிடமும் சொல்ல”..

வந்தவர்கள் ஏதோ பிரச்சனை போல என்று அவர்களுக்குள்ளே பேசிவிட்டு செல்ல..

 “என்னாச்சு டாடி ஏதாவது பிரச்சனையா” ..

“ஆமாம்” என்ற  உலகநாதன் பார்வதியை தேட அச்சோ பார்வதி அங்கே காணவில்லை…

 அப்பொழுதுதான்  உலக நாதனை கவனித்தார்   அக்னியின் உறவுகள்  என்று மண்டபத்தில் யாருமே இல்லை  எல்லாம் ப்பிளான்.  பிளான்  போட்டு தான் செய்திருக்கிறான் என்று புலம்பிக்கொண்டவர்…

” நீ வா மாயா பார்வதி அம்மாவை போய்  பார்க்கலாம்”என்று கூற..

“சரி ப்பா” என்று   மாயா சொல்லி இருவரும் அக்னியின் வீட்டிற்கு   சென்றனர்.

 பார்வதி தன் குடும்பத்தோடு  காரில் தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்..

 தேவ்  வந்து சொல்லியதும் துடித்து  போனார்  பார்வதி..

அக்னியின்  செயல் அவருக்கு பிடிக்கவில்லை, ஒருத்தனை உறவாடி வதம் செய்வது போல் தன் மகன் நடந்து கொண்டதை அவர்  மனம்  ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..

 அவர்கள்  வீடு வந்து சேர்ந்ததும் பார்வதி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருக்க..

 பிள்ளைகள் அவரை சுற்றி நின்று கொண்டிருந்தனர்..

 தேவுக்கு மட்டும்தான் உண்மை தெரியும்.. நிலாவுக்கு அவன் கணவனுக்கும்,  தேவ் மனைவிக்கும்  கூட ரதிதேவிக்கு  என்ன நடந்தது என்று தெரியாது,,

 ஆனால் ரதிதேவியை  அவர்களுக்கு  தெரியும்…

 மூன்று பேருக்கும் மனதில் ஆயிரம் கேள்வி. ஏன் அக்னி கல்யாணத்தை நிப்பாட்டினார்.. ஏன் என்னாச்சு என்ன பிரச்சனை என்று அவர்களுக்கு தலையும் புரியவில்லை வாழும் புரியவில்லை…

 நிலா தான்   “ஏன்மா  என்னாச்சும்மா ஏன் அண்ணா கல்யாணத்தை  நிப்பாட்டினார்” என்று கேட்க..

 ‘”ஆமாம்  அத்தைக்கு  என்னாச்சு”  என்று கேட்டு நிக்க..

“ஏன்  பெரிய மாமா கல்யாணத்தை நிப்பாட்டினாரு?”  என்று தேவ்வின் மனைவியும் கேட்க..

 தேவ் தன் தாய் முகத்தைப்  பார்த்தான்,  சொல்லு என்பது போல பார்வதி  தலையாட்ட  தேவ் சொல்ல தொடங்கினான்..

“நம்ம ரதிதேவி அத்தை இருக்காங்கல  அவங்க  அப்படி இருக்குறதுக்கு  காரணமே இந்த உலகநாதன் தான்”..

 “என்ன”  என்று அதிர்ந்த நிலா “அவங்க அப்படி  இருக்கிறதுக்கு இந்த  உலகநாதன் தான் காரணமா,, அப்போ அண்ணா  பண்ணது  தப்பே இல்ல,   இவனை  மாதிரி  ஆளுங்களை எல்லாம் சும்மா விடகூடாது   கொன்னு போட வேண்டியதுதானே” என்று  ஆத்திரத்தில்  நிலா பேச..

” நீ வேற சும்மா இருடி” என்றார் பார்வதி..

 “அம்மா அண்ணா பண்ணது  தான் சரி” என்றாள்  நிலா..

 எழுந்து வந்தவர் மகளை அறைந்திருந்தார்,, “என்ன இது,,, இது என்ன சினிமாவா பழிக்கு பழி வாங்குறதுக்கு  ஒரு பொண்ணோட வாழ்க்கை,, அந்த உலகநாதன் அன்னைக்கு  உன் அத்தை ரதிதேவியை கல்யாண மேடையில் தாலி கட்டாமல் விட்டுட்டு போனான்.. அதே மாதிரி தான் உன் அண்ணன் . அவர் மகள் மாயாவை கல்யாணம் மேடை வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டு.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணாம, பழிவாங்க மாயா கழுத்தில் தாலி கட்டாமல் கல்யாணத்தை நிறுத்தி  இருக்கான்   இது என்ன மாதிரியான செயல்,,.

 உலகநாதன் பண்ணா  அதுக்கு பதில் இவனும் பண்ணுவானா?

 உலகநாதன் பண்ணுனது  தப்புன்னா..  உங்க அண்ணன் பண்ணுனது  அதைவிட பெரிய தப்பு…

 மாயா ஒரு சொட்டு கண்ணீர் விட்டா கூட அது நம்ம குடும்பம் தாங்காது,,, பெண்ணின் சாபம் பொல்லாதது மாயா பிள்ளையை ஏமாற்ற  உன் அண்ணனுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சு?.. தாயில்லா பிள்ளை எப்படி துடிச்சு  போய் கலங்கி இருப்பா” என்று பார்வதி  மீண்டும் கதறி  அழ..

 “அம்மா அழாத,  அழாதம்மா” என்று பார்வதியின்  பிள்ளைகள் அவரை சமாதானம் பண்ண..

 அக்னியின்  கார் அக்னியின் வீட்டு வாசலில்  வந்து நின்றது..

அக்னி  வீட்டில் உள்ளே நுழைய..

” தேவ்  அவனை  அங்கேயே நிற்கச் சொல்லு” என்றார்  பார்வதி…

 அன்னையின்  சத்தம் கேட்டு அக்னி வாசலிலே நிற்க..

” அம்மா”  என்ற தேவ்  ஏதோ   சொல்ல வர,,

“நீயும் உன் அண்ணனோட கூட்டா” என்றார் பார்வதி…

 “இல்லம்மா எனக்கு விஷயமே தெரியாது மா அண்ணா மண்டபத்தில்  வச்சு  சொன்னப்பதான் எனக்கு எல்லா விஷயமும் தெரியும்”..

 நிலாவுக்கு அண்ணன் பண்ணியது சரி என்றே பட..

” அண்ணா நீ பண்ணது சரிதான்.. நீ உள்ளே வா அம்மாவா நான் பாத்துக்கிறேன்”  என்று நிலா கூற..

 நிலாவை  பார்த்து முறைத்தவர்.. மகன் காலை  எடுத்து உள்ளே வைக்கவும் “டேய்” என்று அக்னியை  அதட்டியிருந்தார்..

 தேவ்வின்  மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை,  கணவனிடம் “ரதிதேவி யாரு?  உங்க அத்தை ஒருத்தவங்க ஊருல இருக்காங்க, அவங்களுக்கு மனநலம் பாதிக்கபட்டு இருக்கிறத சொல்லுவீங்களே அவங்களா..அவங்க கூட  எலுமிச்சை கலர்ல இருப்பாங்கன்னு சொல்லி என்னை அப்போ, அப்போ வெறுப்பேத்து வீங்களே அவங்களா” என்றாள்..

 “ஆமாம்” என்று தேவ்  சொல்ல..

 “அப்போ பெரிய மாமா பண்ணது தப்பே இல்ல” என்றாள் தேவ்வின் மனைவின்  ரஷியா..

 “நீ சும்மா இரு ரஷியா” என்று அவளை அடக்கினான்….. தேவ்..

 பிள்ளைகள் எல்லாம் அக்னிக்கு  சப்போர்ட் பண்ண…

 அனைவரும் அக்னியை  உள்ளே வருமாறு சொல்ல..

 “அவன் உள்ளே வரக்கூடாது” என்றார் பார்வதி ..

 “அவன் உள்ளே வந்தா நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்” என்றார்..

  “எனக்காக யாரும் சப்போர்ட் பண்ண வேண்டாம்.. நான் செஞ்சது தப்பு தான்  என்பது எனக்கு  தெரியும்” என்று அக்னி   சொன்னவுடன்..

” தப்புன்னு  தெரிஞ்சும் ஏன்டா  தப்பு  பண்ண”…என்ற பார்வதி மகனை திட்டிய படியே  வாசலுக்கு வர..

 “என் அத்தைக்கு  நடந்த கொடுமையை அந்த உலகநாதன் உணரனும்,  நம் குடும்பம் அனுபவிச்சு வேதனையை அவனும் படனும், என் அத்தை துடித்து அழுதது  போல  மாயாவும் அழணும்  அதை பார்த்து அந்த உலகநாதன் சாகணும்” என்றவுடன்..

” எதுக்குடா உனக்கு இவ்வளவு வன்மம்” என்று மகனை அடித்திருந்தவர்.. “பாவம்,  பாவம் பண்ணி வச்சிருக்க டா பெரிய பாவத்தை பண்ணி வச்சிருக்க பொம்பள பிள்ளை வாழ்க்கையை கொடுத்து வச்சிருக்க, இத  எங்க போயி நான் தொலைப்பேன் கடவுளே” என்று பார்வதியும் அழுதார்..

” அம்மா”  என்று அக்னி  பார்வதி அழுவதை  தடுத்தவன்…

 “அந்த உலகநாதன் அன்னைக்கு என் அத்தையை  மணமேடையில்  தவிக்க விட்டுட்டு போனது சரியா?..  அதுக்கு அப்புறமா  அவங்களுக்கு என்ன நடந்ததுன்னு,  அவங்க குடும்பம் என்ன ஆச்சுன்னு,  அந்த ஆளு திரும்பி  பார்த்தானா?  அவன் பாட்டுக்கு அவன் காதலி சாக கிடக்கிறான்னு  சொல்லிட்டு போனவன் இதுவரைக்கும் அத்தைய பத்தி நெனச்சு பார்த்திருக்கானா, அவன் பண்ணது சரியா?”..

 “அதுக்கு நீ பண்ணது  சரியா,, என் பையனா நீ,  அவன் பண்ணது மாதிரி நீயும் பண்ணி இருக்க அப்போ அவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் அன்னைக்கு உன் அத்தை மணமேடையில அவன்  விட்டுட்டு  போனான்… இன்னைக்கு நீ அதையே மாயாவுக்கு செஞ்சிருக்க. அன்னைக்கு  எங்க வயிறு உன் அத்தை வாழ்க்கையை நினைத்து எப்படி கலங்குச்சு…

 அதே மாதிரி தானே மாயாவும்  தவிச்சுக்கிட்டு இருந்திருப்பா,  அவங்க அம்மா மட்டும் இருந்தா எப்படி துடிச்சு போயிருப்பாங்க அவ வாழ்க்கையை  எண்ணி…

 நீ பண்ணது பெரிய பாவம் மாயாவுக்கு நம்பிக்கை கொடுத்து வாழ்க்கை அழிச்சிருக்க.. அன்னைக்கு உலகநாதன் பண்ணதை விட நீ இன்னைக்கு பண்ணது தான் பெரிய தப்பு.. உலகநாதன் அவர் பண்ணது தப்புன்னு தெரியாம பண்ணிட்டாரு.. ஆனா நீ  தப்புன்னு  தெரிஞ்சும், அந்த பாவத்த என் மருமகளுக்கு  பண்ணி இருக்க அக்னி” என்றார்..

 “நான் கல்யாணம் பண்ணா தானே மாயா உங்க மருமக”? என்றான் கோபமாக..

 “நீ கல்யாணம் கண்டிப்பா என் மருமகள  பண்ணுவ நீ பண்ணிய  ஆகணும்”..

 “அப்போ அந்த உலகநாதனை   சும்மா விட சொல்றீங்களா?” ..

 “உன்னை யாருடா அவனை சும்மா விட சொன்னது? அவரை பழிவாங்க ஆயிரம் வழி இருக்கு இந்த பாதையை  ஏன் நீ தேர்ந்தெடுத்த,,  நான் உன்னை கேட்கிறேன் அவன்  பிசினஸ் பண்றான்,,  நீ பிசினஸ் பண்ணுற நீ அவனைவிட முன்னேறி வாழ்ந்து காட்டு,,  அவனுக்கு தொல்லை கொடு,, இம்சை கொடு அவன்ன  அடி உதை இம்சை பண்ணு என்னவோ பண்ணு பொம்பளை பிள்ளை ஏண்டா இதுல  இழுக்குற…  நீ பண்ணது பெரிய தப்பு அக்னி இந்த பாவம் நம்ம தலைமுறையையே   அழிச்சிடும்”.. என்றார்  வேதனையான குரலில்….

” அவனுக்கு எங்கே அடிச்சா வலிக்குன்னு  எனக்கு தெரியும் அதான் நான்  அடிச்சேன்”  என்றான் அக்னி..

” நீ சொல்றதெல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன்,  நீ போய் மாயாவை  கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வா” என்றார் பார்வதி..

” முடியாது” என்றான்  அக்னி..

“அப்போ என்கிட்ட இனிமே  நீ பேசாத என்னைக்கு நீ மாயாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரியோ, அன்னைக்கு தான் நான் உன்கிட்ட பேசுவேன் நீ கிளம்பலாம்” என்றார் வாசலின் வெளியே காட்டி..

” உங்களுக்கு மாயா தான் முக்கியமா  அப்போ நான் முக்கியம் இல்லையா'”..

 பார்வதி கல் போல நிற்க..

” நான் நிம்மதியா தூங்கி  25 வருஷம் ஆச்சுமா, ஆனா இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்,, என் அத்தை வாழ்க்கையை கெடுத்தவனை பழி வாங்கிட்டேன்”. என்றான் வெறுமையான புன்னகையோடு..

 பார்வதி மகனை பார்த்து முறைக்க..

 “என்னால முடியலம்மா அப்பூ.. நான் செத்துப் போயிடுவான்னு  அத்தை என் மடியில படுத்து அழுததை என்னால மறக்க முடியலமா,,  அதுமட்டுமா இன்னைக்கு வரைக்கும் நம்மலால நிம்மதியா தூங்க முடியுதா அத்தைக்கு தினம், தினம்  என்னாச்சோ,  ஏதாச்சோ அவங்க வீட்டுக்கு வந்தாங்களா அவங்களுக்கு ஏதாவது நடந்துச்சா, யாராவது அவங்களை  ஏதாவது பண்ணிடுவாங்களா என்று  தினம், தினம் துடிச்சுக்கிட்டு இருக்கோம்,, அதுக்கு காரணமாக இருந்தவனை ஒன்னும் பண்ணமுடியாம எத்தனை நான் தூங்காம இருந்து இருக்கேன்,, இந்த உலகநாதனை எப்படி மா சும்மா விடுறது”..

 பார்வதிக்கு மகன் பக்கம்  இருக்கும் நியாயம் புரிந்தாலும் மாயாவை  நினைத்து அவர் அமைதியாக இருக்க..

” மறந்துட்டீங்களாமா  என் அப்பா எப்படி செத்தாரு ஞாபகம் இருக்கா..  அத்தையை  நெனச்சி நெனச்சி கவலப்பட்டு  தானே சீக்கிரமா  இறந்து போனாரு, அவருக்கு சாகுற வயசா… என்ன?.. என்  ஐய்யப்பா எப்படி செத்தாரு?,, என் ஐயம்மா எப்படி செத்தாங்க.. எல்லாத்துக்கும் காரணம் அவன் தானே.”….

” தம்பி இறந்தவங்க  இறந்து போயிட்டாங்க அதையே திரும்பத் திரும்ப பேசி நம்ம  ஒன்னும் பண்ண முடியாது டா,, உன் வாழ்க்கை தாண்டா எனக்கு முக்கியம்.. “..

 “எனக்கு என் வாழ்க்கை  எல்லாம் முக்கியம் இல்ல,, அந்த உலகநாதனை பழி வாங்கணும் கதற விடனும், அவன் அவள் மகளை பார்த்து  துடிக்கனும்”..

“அக்னி   இவ்வளவு கோபம் வேண்டாம் டா, அது  உன்னையே அழிச்சிரும்”…

“எனக்கு அத பத்தி கவலயில்லை, அந்த உலகநாதன்  மாயாவை  பார்த்து ரத்த கண்ணீர் வடிக்கனும்” என்றான் ஆத்திரமாக..

” அக்னி அம்மா சொல்லுறேன் கேளுடா,  உன் வாழ்க்கை  போயிடும் அக்னி,, நீ வாழ வேண்டாமா,, ? “..

“நீங்க  என் அம்மா,எனக்கு உயிர் கொடுத்தீங்க .,  ஆனா  என்னை வளத்தது யாரு என் அத்தை ரதிதேவி தானே….என்  அத்தை  எனக்கு அம்மா மாதிரி  அவங்க வாழ்க்கையை  அழிச்சவனை, சும்மா விட  சொல்லுறீங்களா?..  இங்கே பாருங்க என் அத்தையை”.. என்று அவனின்  போனில் உள்ள தற்போது  ரதிதேவி  உள்ள புகைபடத்தை  தாய்யிடம்  காண்பித்தவன்,   “எப்படி இருக்காங்க  பாருங்க” என்று  கதறி அழுத மகனை அணைத்துக்கொண்டு  அவரும்  அழுதார்..

பார்வதி  சிவபிரகாஷை கல்யாணம் முடித்து வரும் போது பதின் வயதில் பாவாடை சட்டையில்   தன்னை அண்ணி, அண்ணி என்று  சுத்தி, சுத்தி  வந்த உண்மையிலே ரதி போல இருந்த  ரதிதேவியின்   முகம்  ஞாபகம்  வந்தது பார்வதிக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!