Skip to content
Post Views: 2,446
அத்தியாயம் – 11
ஆயிற்று மீனாள் மருத்துவமனையில் இருந்து அரியக்குடி வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டது.லட்சுமணன் இரு தினங்களுக்கு முன்பு தாய்யை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்து வள்ளியப்பனிடம் ஒப்படைத்த கையுடன் காரைக்குடிக்கு கிளம்பி விட்டான்.
மருத்துவன் கடமை மிகவும் பொறுப்பானது அல்லவா. பொதுநல மருத்துவன் என்றாலும் தற்போது மேற்படிப்புப் படித்துக் கொண்டிருப்பதால் அவனால் ஓர், இரு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க முடியாத நிலை.இப்போது தான் தேர்வு வேறு முடிந்தது,இதோ அடுத்தச் சுற்றுக்குப் பணம் வேறு கட்ட வேண்டும்.அதுவும் போக உணவகம் வேறு உள்ளது அல்லவா, அதனால் ஓட்டம் பிடித்தான்.
Advertisement
அவனது ஓட்டம் கண்டு பெரியவர்கள் தான் வருந்தி நின்றனர்.இந்த ஒரு வார காலமாக அவனுக்குச் சரியான நித்திரை இல்லை போலும்.இன்று விடியலில் கண்கள் சிவந்து நின்ற மகனை பார்த்து பதறி தான் போனாள் மீனாள்.
Advertisement
“லட்சு?”
Advertisement
“சொல்லுக ஆத்தா என்ன செய்யுது? எதுவும் வேணுமா?” என்ற கரிசனையில் தொண்டை அடக்கப் பேச முடியாமல் இல்லை என்று மட்டும் தலையை ஆட்டினாள் மீனாள்.
Advertisement
“வேற என்ன ஆத்தா?”
“செத்த ஓய்வெடுக போதும் ரொம்ப ஓட்டம் புடிக்கிறீக” என்றதும் தாயின் கவலைக்குப் பதில் வழமையான புன்னகையைக் கொடுத்தவன்.
“இந்த வயசில ஓட்டம் புடிச்சாதேன் பின்னுக்கு ஓய்வு எடுக்க முடியும்”
“அதுக்குன்னு இத்தினி வேகம் வேணாம் பைய்ய போக, இன்னும் தூரம் கிடக்கு, அப்புறம் களைச்சு போவீக என்றவள் சிறு இடைவேளை விட்டு பேசாம மசாலா மட்டும் வச்சுக்கிட்டு, சாப்பாடு கடையக் கொடுத்துறலாம் லட்சு” மகனின் ஓயாத ஓட்டத்தை எண்ணி கவலை கொண்டு மீனாள் கேட்க.
“ஆத்தா! என்ன பேச்சு இது? வளர்த்து கொடுப்பீகளா? அதெல்லாம் முடியாது.இப்போ என்ன ஓட்டம் குறைக்கனும்அதானே.கல்யாணம் முடியட்டும் சாலா துணை கொடுப்பாக, எல்லாத்துக்கும் மேல மாமா இருக்காரு இனி அவர் நம்பக் கூடதேன்” ஓர கண்ணால் வள்ளியப்பனை ஒரு பார்த்துக் கொண்டே லட்சுமணன் சொல்ல.
இவர்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்த கண்ணாத்தாள் திடுக்கிட்டு, வள்ளியப்பனை பார்க்க. அவருக்கும் இது புதுச் செய்தி தான்.வாய் வார்த்தையாக எத்தனையோ முறை சேர்ந்து இருக்க போவதாக லட்சுமணன் சொல்லிருந்தாலும் அது வெறும் வாய் வார்த்தை தானே என்று பெரிதாக அவர் எடுத்து கொள்ளவில்லை போலும்.
கண்ணாத்தாள் எதுவோ பேச வர, பார்வையால் அவளைத் தடுத்தவர்.அவரும் காதில் எதையும் வாங்கிக் கொள்ளாதது போல் அமர்ந்திருந்தார்.அறைக்குள் துணிகளை மடித்துக் கொண்டிருந்த சாலாக்கும் இந்தப் பேச்சு வார்த்தைகள் கேட்க தான் செய்தது.
இந்தச் சில நாட்களில் தான் லட்சுவின் குணமே அறிகிறாள்.அவள் பார்த்து வளர்ந்த லட்சுமணன் இவன் இல்லை.உணவு உண்ண கூட வாய் திறப்பானா என்று மீனாளிடம் அவள் கிண்டல் செய்த காலமெல்லாம் உண்டு,ஆனால் இன்று அவனது செயலும்,பேச்சும் அவளுக்கு அத்தனை ஆச்சிரியமாக இருந்தது.அவனுள் நிறைய எண்ணங்கள், ஆசைகள், கோபங்கள்,வருத்தங்கள் என்று எத்தனையோ உணர்வுகள் புதைந்துள்ளது என்பதை அறிந்து கொண்டாள் அரிவை.
லட்சுமணன் பேச்சில் சிறு நிம்மதி கண்ட மீனாள்.அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்தி கொண்டாள்.வள்ளியப்பன் துணை இருந்தால் அவளுக்கும் சற்று நிம்மதியாக இருக்கும் என்ற எண்ணம் தான்.
“சரி லட்சு ரொம்ப சந்தோசம் அண்ணனும், மதனியும் கூட இருந்தா இன்னும் பலந்தேன் “என்று சிரிக்க இப்போது இன்னும் அழுத்தமாகக் கண்ணாத்தாள் கணவனைப் பார்த்து வைத்தாள்.
அதற்குள் மீனாள் வேறு பேச்சுக்கு தாவி விட்டார்,”லட்சு இது என்ன உதட்டு கிட்ட?” என்றதும் தாய்யை சிரிப்புடன் பார்த்தான் லட்சுமணன். இதனை கேட்ட சாலாக்குப் பதறிக் கொண்டு வந்தது.இரு தினங்களுக்கு முன் படித்த காதல் காவியத்தின் எச்சம் மிச்சமாக இருந்தது.
சாலாவின் கூர் சிங்கப்பல் அவனது இதழை பதம் பார்த்து வைக்க.அவனது இளவண்ண ரோஜா நிறத்திற்கு அவள் கொடுத்த காயம் பெரிதாகத் தெரிந்தது.சிறு காயம் இன்று அடர் ஊதா வண்ணம் கண்டு ரெத்தம் கட்டி போயிருந்தது.அவன் வீட்டுக்குள் நுழைந்த உடனே மீனாள் கண்ணில் பளிச்செனப் பட்டது அவன் உதட்டு காயம் தான்.
“அது ஆத்தா நீக ஆஸ்பத்திரில இருக்கும் போது நானும், சாலாவும் வூட்டுக்கு வந்தோமா?” என்றதுமே அறைக்குள் இருந்து பதறிக் கொண்டு ஓடி வந்து, கண்ணாத்தாளுடன் நின்று கொண்டாள் சாலா.
அவளை பார்த்து கொண்டே, “அப்போ நான் சொல்ல, சொல்ல கேட்காம சாலா” என்றதும் மேலும் என்னத்த சொல்லி வைப்பானோ என்று பதறி அவனை முந்தி கொண்டு.
“அயித்த அவுக கீழே விழுந்து வச்சுட்டாக”
“கீழயா? மல்லாக்க விழுந்தாக்க மண்டையில அடி படும்,குப்புறக்க விழுந்தாக்கா தாவங்கட்டை நெத்தினு அடிபடும்.அது எப்படி உதட்டுல காயம் பட்டுச்சு” கண்ணாத்தாள் சந்தேகம் கேட்க லட்சுமணனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.சரியான புன்னகை மன்னன் போலும் இவன்.
தாயின் பேச்சில் கலங்கி நின்றவள் லட்சுவின் சிரிப்பில் அழுதே விடுவேன் என்பது போல் அவனைப் பார்க்க.இரு புருவங்களை மேல் தூக்கி கண்ணை மயக்கமாக மூடுவது போல் மூடி இதழ் குவிக்கக் குப்பென வேர்த்தது அரிவைக்கு.
என்ன ஆகாத காரியம்,அத்தனை பேர் பார்வையும் தங்களைச் சுற்றி இருக்க. என்ன சேட்டை செய்கிறான் இவன் என்று பதறி சுற்றி,முற்றி பார்க்க. எல்லாரும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஏனென்றால் லட்சுவின் பேச்சில் தன்னை அறியாமல் அலறி வைத்திருந்தாள் சாலா.
“ஐயோ! என்ன இங்கன பாக்குறாக” மேலும் அவளை தவிக்க விடாமல்,
“ஆத்தா! தாயின் கவனத்தைத் திருப்பிய லட்சுமணன் கையை கொஞ்சம் சுருக்கி வைத்து காட்டி. இத்தினி குட்டியா ஒரு கல்லு மேல் பக்கம் கத்தி முனை போலக் கூர், தடுக்கி விழுந்த ஜோருள பல் போயிருக்க வேண்டியது தலையைத் தூக்கி வச்சேன் பாருக உதட்டை அந்த கல் குத்தி வச்சிருச்சி.
உண்மை போலவே சொன்னவனை அடப்பாவி! என்பது போல் அதிர்ந்து பார்த்து கொண்டிருந்தாள் சாலா.சத்தியமாக நாளுக்கு நாள் குறும்பு காட்டி மயக்கி கொண்டிருப்பவனை ஏற்க தான் அரிவைக்கு முடியவில்லை நித்தமும் ஒரு பதட்டம் வைத்து ஆட்டி வைக்கும் இவன் மாய கண்ணின் வார்ப்பு போலும்.
“ஓ! பார்த்து இருக்க மாட்டீகளா? வர, வர உங்க கவனம் எங்கன இருக்குனே தெரியல போக” செல்லமாக மகனை மீனாள் கடிந்து கொள்ள.லட்சுவின் கவனம் முழுமையும் அவனது சாலாவின் மேல் தான் இருந்தது.
இங்கு ஒரு வழியாக பதட்டம் தணிந்து போக.
அங்கு அண்ணாமலை ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டிருக்க. அவரது அருகில் அமர்ந்து கொண்டு எங்கோ வெறித்துக் கொண்டிருந்தார் உண்ணாமலை ஆச்சி.இருவருக்கும் இரு பிள்ளைகள் சோமு,ருக்கு இவர்களுக்கும் ஆளுக்கு ஒரே வாரிசு.ருக்குக்குப் பெண் வாரிசு நாகம்மை,
சோமுவுக்கு ஒரே ஆண் வாரிசு லட்சுமணன் தான்.மகன் வழி பேரனை எடுத்து மகள் வழி பேத்தியிடம் கொடுத்து தலைமுறையைத் தழைக்க வைக்கத் தான் ஆசை கொண்டனர் இருவரும்,
ஆனால் இப்போது? பார்க்கும் முன் எப்படியோ பார்த்த பின் பேரனை விட்டு கொடுக்க முடியாமல் தவியாய்த் தவித்தது உள்ளம்.இவர்கள் எண்ணத்தில் உழன்று கொண்டிருக்கும் போதே பெட்டியை தூக்கி கொண்டு வந்தான் சோமு அவனது அருகில் வள்ளி.
“ஐயா! நான் கிளம்புறேன்” என்றவனை ஏறிட்டு பார்த்தவர்.
“நீக மனுஷ சென்மம் தானே? உங்களுக்கு எப்படி இத்தினி உரம் வந்துச்சு?” இதே கேள்வியை பல வருடங்களுக்கு முன் கேட்டு இருந்தாள் மீனாள் குளிர்ந்து கிடந்து அண்ணாமலை சொல் பேச்சுக் கேட்டு அவர்களுடனே இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
இப்போது காலம் காலாவதி ஆகி நிற்கும் நிலையில் இந்தக் கேள்வி எதற்கு? என்பது போல் கணவனை பார்த்து வைத்தார் உண்ணாமலை.
“ப்ச்!” சலித்தவனைப் பார்த்து இன்னும் கோபம் வர.
“ரொம்பச் சலிச்சுக்கிடாதீக இன்னைக்குப் பட்ட மொகரடிக்கு நாங்கதேன் சலிச்சுக்கனும்.பேரன் கேட்டாகலே கேள்வி ஒரு கேள்விக்குக் கூடப் பதில் சொல்ல முடிஞ்சுதா?”
“நீக எதுக்கு அங்கன போனீக எல்லாம் வேணான்னு ஒதுங்கியாச்சு தானே, பிறகு என்ன உறவு?” மகனது பேச்சில் உண்ணாமலைக்கு அத்தனை கோபம் வந்தது.
“சோமு நீக என்ன பேச்சு பேசுறீக லட்சுமணன் உங்க மகேன் தானே. ஒத்த பொம்பளையா கிடந்து அப்படித் தான் வளர்த்திருக்காக. அப்படி பட்ட பிள்ளையச் சீராட உங்களுக்குத்தேன் கொடுத்து வைக்கல” என்றதும் சில நொடிகள் அமைதியாகி போனான் சோமு.சில ரகசியங்களை நியாயம் கொள்ள முடியாது.ஏன் இந்த இரண்டாவது திருமணம்? எதற்காக நடந்தது? என்று காரணம் பேசி நியாயம் கொள்ள செய்யச் சோமு முன் வரவில்லை.
“மீனாவை கல்யாணம் பேசும் போதே நான் வேணான்னு தானே சொன்னேன்”
“நாகப் பேசித்தேன் கட்டாய படுத்திதேன் நீ கட்டிக்கிடீக அதுக்குப் பின்னே நல்லாத்தானே குடும்பம் பண்ணீக” என்றவள் பார்வை வள்ளியை தீண்ட கண்ணில் உடைப்பெடுக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணீரை உள்ளே இழுத்து கொண்டாள் வள்ளி.
“இப்போ எதுக்கு இந்த பேச்சு? இனி பேச எதுவும் இல்லை நான் கிளம்புறேன்” என்றவனை வெறுப்பாகப் பார்த்த இருவரும் எதுவும் பேசாமல் இருக்க.
“வாக! என்று வள்ளியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் சோமு.
“இத்தினி அழுத்தம் கூடாது உண்ணா?” போகும் மகனை பார்த்துக் கொண்டே அண்ணாமலை சொல்ல.
“நம்ப அவுகள கட்டாய படுத்தி இருக்கக் கூடாது அவுக போக்குல விட்டுருக்கனும் நல்லதுன்னு எண்ணி செஞ்சோம் இப்போ மீனா கொடுத்த பாவத்தைக் கழிக்கிறோம் என்றவர்
“என்னக கடைசிக் காலம் நமக்கு கொல்லி போட கூட ஆள் இருக்காதோ” கண்ணில் நீர் வழிய கேட்ட மனைவியின் கையை ஆதரவாகத் தட்டி கொடுத்தார் அண்ணாமலை இவர்களிடம் முதுமை தனது வேலையை அழகாகத் தொடங்கியது போலும்.
லட்சுமணன் நீண்ட நேரமாக மாமன் முகம் பார்த்திருக்க வள்ளியப்பனோ பெரும் யோசனையில் இருந்தான்.இருவரும் இரவு நடைக்காகக் கொஞ்சம் வெளியில் வந்திருந்தனர்.
“என்ன மாமா யோசனை?”
“நீக என்ன யோசனை லட்சு வச்சிருக்கீக?”
“சொல்லுவேன் நீக தப்பா எடுத்துக்கக் கூடாது?”
“சொல்லுக?”
“கல்யாணம் பண்ணி சுமையக் குறைக்கத்தேன் எண்ணிருக்கேன்”
“விளையாடாதீக நீக பேசுனதை வச்சு உங்க அயித்த என்னை போட்டு அலசி வச்சுட்டாக உண்மைக்கு இந்த விஷியத்துல அவுகள சமாளிக்க முடியல”
சிறு புன்னகையுடன், “சமாளிக்கனும் மாமா என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை”
“நீக நடப்பு தெரியாம பேசுறீக உண்மைக்கும் உங்க தாத்தாமார் பேசுன பேச்சுக்கு வேற ஒருதார இருந்தா நான் என் பொண்ணை தர உறுதி செஞ்சிருக்க மாட்டேன் மீனாளை கொண்டுதேன் நான் உங்க பக்கம் நின்னேன்.
உங்க அயித்தைக்குக் கூட இதுல உடன் பாடில்லை.அவுக கல்யாணத்துக்கு மறுப்பு சொன்ன காரணம் எல்லாமே. பழியா உங்க தாத்தா சொல்ல.அந்நேரம் எனக்கே அப்படி ஒரு தவிப்பு” என்றதும் அதே புன்னகை வாடாமல் உறுதியான குரலில்.
“மருமகனா பார்த்தாக்க கவுரவம் பார்க்க வேண்டியதுதேன். மகேன் கிட்ட என்ன கவுரவம் வேண்டி கிடக்கு.என் முடிவுல மாற்றம் இல்ல மாமா அயித்தைக்கு புரிய வைக” என்றவன் வெடுக்கெனத் திரும்பி நடந்து விட,அவனது இந்த கோபத்தை எதிர்பாராதவர்.
“ப்ச்! லட்சு நில்லுக” என்றவர் அவனது நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டம் பிடிக்க அதற்குள் வெகு தூரம் சென்று விட்டான் லட்சுமணன்.
“இதுதேன் சாது மிரண்டா காடு கொள்ளாதுனு சொல்றது போல எத்தினி கோபம் வருது” சலிப்பாக முனகி கொண்டார் வள்ளியப்பன்.ஏனென்றால் கண்ணாத்தாள் சில பல உறுதிகள் கொண்டே இந்த திருமணம் செய்ய வேண்டும். மீனாள் லட்சுவிடம் பேச வேண்டும் என்று வள்ளியப்பனிடம் உறுதியாக சொல்லி விட.இப்போது வள்ளியப்பனுக்கு யாரை சமாதானம் செய்வது என்று தான் தெரியவில்லை.
அழகான குடும்பக் காவியத்தில் அவ்வ போது பிழைகள் தலை காட்ட அதனைப் பக்குவமாகத் திருத்தி எழுத முயன்றான் லட்சுமணன். பார்ப்போம் லட்சுமணன் பிழைகளை எவ்வாறு அடித்தல், திருத்தல் காட்டாமல் சரி செய்கிறான் என்று..
error: Content is protected !!