Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

35. Dayani Shalokshan - ஹார்ட் பீட் திருடன்

ஹார்ட் பீட் திருடன் – 05

 

ஹார்ட் பீட் திருடன் – 05

அடுத்த நாள் மெல்லப் புலற காலையிலே மகிஷாவை பார்க்க வந்தான் கரன். கரணை வாட்ச் மேனுக்கு தெரியும் என்பதால் அவனை குவாட்டஸ் இருக்கும் பகுதிக்குள் விட்டார் கரணும் மகிஷாவின் குவாட்டசின் அழைப்பு மணியை அடிக்க அவளும் கதவை திறந்தாள். “உள்ளே வா என்றவள் டீ ஆர் காஃபி” எனக் கேட்க “காஃபி” என்றவன் அறையை சுற்றி பார்வையை சுழல விட்டபடி இருக்க காபியுடன் வந்தவள் கரன் முன் ஒரு காஃபி, கப்பையும், ஒரு கவரையும் வைத்தாள்.

காஃபியை அருந்தியவன் “என்ன” என கேட்க அவளோ “பிரிச்சுப்பாரு” என்றாள். அவனும் அதை பிரிக்க பணக்கட்டும் சில நகையும் இருந்தன. “மகி” என அவன் அதிர்ச்சியாய் நோக்க “கரன் நேத்து நாம அடிச்சது இது உன்னோட பங்கு” என்றாள்.



Advertisement

“என்னடி சொல்ற” “கூழ் மச்சி, என்றாள். “ரெண்டு பேரும் ரிஸ்க் எடுத்து தான் இதப் பண்ணிருக்கம் ,மொக்கையன் மாதி பேசாம இத தாத்தா பாட்டிட கொடு அவங்க நிலத்த அடமானம் வச்சி தான் உன்ன இந்த நிலமைக்கு வளர்த்திருக்காங்க தாத்தாட நிலத்த மீட்டுக் கொடு” என்றாள்.கரன் அவள் கொடுத்த கவரைப் பெற்றுக் கொண்டான். மகி இல்லத்துக்காக திருடினாலும்  தனது உற்ற நண்பனின் பிரச்சினையையும் அவள் தீர்க்கத் தயங்கவில்லை.

“கரன் அடுத்தது பெருசா அடிக்கனும்” என்றாள் மகி. “என்னடி சொல்ற” “மச்சி   பெர்பெக்டா ப்ளான் போடுறம்  அடிக்கிறம்” என்றாள்.

கரனும் அவளுடன் கை கோர்க்க இருவரும் அடுத்த திட்டத்தை போடத் தொடங்கினர். “கரன் பக்கத்துல ஏலம் நடக்குது பார்த்துவிட்டு வருவோம்” என்றவள்.குவாட்டஸைப் பூட்டிக் கொண்டு  புறப்பட்டனர். போகும் வழியில் அடித்த நகைகளை விற்றவள் அன்பு இல்லத்திற்கு அழைப்பெடுத்தாள். மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டு  “ஹலோ” என தேவியம்மாவின் குரல் கேட்டதும் ” அம்மா டோனேஷன் கிடைச்சதும்மா,ஆமாம்மா ஆபிஸ் மூலமா தான்மா ஒவ்வொரு மாதமும் தாரனு சொல்லியிருக்காங்க அது தவிர வேற இடத்துலயும் முயற்சி பன்னன் உடம்ப பார்த்துக்கோங்கம்மா” என  அவருடன் பேசியவள் அழைப்பைத் துண்டித்தாள்.

Advertisement

அவள் பேசுவதை கேட்டுக் கொண்டு வந்தவனுக்கோ புரிந்தது இல்லத்து மீதும், அங்குள்ள பிள்ளைகள் மீதும் அவள் கொண்ட அன்பும் அக்கறையும் தான்.தன்னலமற்ற அவள் அன்பே அவனை இன்றளவும் தோழியாய் காண வைக்கிறது.

Advertisement

இருவரும் ஏலம் நடைபெறும் பெரிய நட்சத்திர  ஹோட்டலுக்கு  வந்தனர். ஆங்காங்கு போலீஸ், காட்ஸ் நின்றனர். வருவோர், போவோர் அனைவரையும் பரிசோதித்தே அனுப்பினர்.

அதே சமயம் ஹோட்டலின் இன்னொரு பக்கம் ” டேய் அர்ஜுன் இந்த  வைரத்தை  தூங்குறோம் ஆனா அது திருட்டுக்காக அல்ல ஜஸ்ட் ஒரு கேம்க்காக  என்றான்..அர்ஜுனோ “என்னடா சொல்ற” ஜோகித்தோ கண்சிமிட்டியபடி திரும்பியவன் இடித்ததென்னவோ மகிஷாவைத் தான் “சர்வண்ட் உடையில் இருந்த ஜோகித்தின் கையில் இருந்த யூஸ்  ஊற்றுப்பட ” ஏய் பார்த்து  வர மாட்டியா ” என  ஜோதித்தை கரன்  திட்ட  ஜோகித்தின் அழுத்தமாக கரனைப் பார்த்தவன் மகிஷாவின் புறம் பார்வையைத் திருப்ப,அவளை விட்டுப் பார்வையை அகற்ற முடியவில்லை அவர்களை நெருங்கிய அர்ஜுன் ” மேம் வாஸ் ரூம் அந்தப் பக்கம்  இருக்கு   ”  என்றான். அவளும் “இடியட்” என திட்டியபடி வாஸ் ரூம் நோக்கிச் செல்ல கரனும் ஜோகித்தை  முறைத்தபடி சற்றுத் தள்ளி ஏலத்தை பார்க்கும் படி அமர்ந்து கொண்டாள்.

மகிஷாவும் தனது உடையில் பட்ட ஜுஸ் கறையை  சுத்தப்படுத்திக் கொண்டவளுக்கோ ஜோகித்தின் முகம்   ஞாபக அடுக்கில் அவனைப் பார்த்தா சர்வண்ட் போல் தெரியவே இல்லையே ஏதோ சரியில்லாதது போலவே அவளுக்குப்பட்டது.

Advertisement

ஏலமும் ஆரம்பமானது அந்த வைர நகை மேடையில் ஜொலித்து அவளும் கரனை நோக்கி வந்தவள் அவன் அருகில் அமர்ந்தாள். மகிஷாவிற்கு எதிர்ப்புறம் நின்ற ஜோகித்தோ மகிஷாவை நோக்கி நேருக்கு நேர் பார்க்க மகிஷாவிற்கோ ஒரு நிமிஷம் மூச்சு நின்ற போல் இருந்துச்சி  அவளுடைய ஹார்ட் பீட் வேறு  படபடவென அடிக்கத் தொடங்கியது.  அவள் அ சிந்தனையோ இவன் எந்த ஆங்கிள்ள பார்த்தாலும்  சர்வண்ட் போலவே இல்லையே..

சர்வண்ட் உடை அணிந்திருந்தாலும்  அவனின் முக அமைப்பும்  உடற்பயிற்சியால் முறுக்கேறிய புறமும் அவனது சர்வண்ட் உடையையும் தான்டி அவனுக்கு ஒரு ஹீரோ லுக்கைத் தந்தது. அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன் மகிஷா  ஷாக்காகி நிற்கும் போதே  “டமால்னு”  ஒரு சத்தம் லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆனது.

ஒரு பத்து  செகண்ட் தான். லைட் எரியும் போது அந்த வைர நகை இருந்த இடத்தில் ஒரு சிவப்பு நிற ரோஜா மட்டும் இருந்தது.

ஜோகித்தும் அர்ஜுனும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மாயமாகி விட்டனர்.அந்த சிறிது நேரத்தில் எப்படி சாத்தியம் கரணும் மகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.”கரன் அந்த நகையக் காணோம்” என்றாள். பதறியபடி யாரோ திருடிட்டாங்க .போலிசும், காட்சும் அங்கு சூழ சில நிமிடத்தில் அங்கு நிலைமையே தலைகீழ், ஏலத்திற்கு வந்த அனைவரும் ஒருபுறம் நிற்க வைக்கப்பட்டனர்.அதே வேளை அங்கு வந்து சேர்ந்தான் ஏசீபி  சத்யன் அவனோ அந்த  சம்பவம் நடந்த இடத்தை பார்த்தவனோ அருகில் இருந்த. கான்ஸ்டபிளிடம் அதே ஆள் தான் ஏதும் தடயம் இருக்கானு பாருங்க,  சீசீ டிவி எல்லாம் செக் பண்ணுங்க”  என படபட வென உத்தரவுகளை பிறப்பித்தவன்.ஏலத்திற்கு வருகை தந்த   அனைவரையும் விசிரணைக்கு உட்படுத்தினான்.

பொலிஸ் அனைவரினதும் தகவல்கள் வாங்கியே விட்டனர். அதில மகிஷாவும்  கரனும் உள்ளடக்கம்.

வெளியே வந்த இருவருக்கும் பெரும் ஆச்சரியம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருந்தது. மகிஷாவோ “கரன் அந்த சர்வண்ட் மேல் தான் சந்தேகமா இருக்கு” அவனும் “ஆம்” என தலையாட்ட அன்றைய பிரேக்கிங் நியூஸ் ஏலம் பற்றியதாகவே இருந்தது.

இப்படியே நாட்களும் மெல்ல மெல்லச் செல்ல மகிஸாவும் அடித்த பணத்தை வைத்து மூன்று மாதங்கள் இல்லத்திற்கு அனுப்பினாள். அலுவலகத்தில் வேலைப் பளு காரணமாக அவளால் அன்பு இல்லத்திற்கு செல்ல முடியவில்லை.

இதற்கிடையில் ஜோகித்திற்கோ மகிஷாவின் நினைப்புத் தான் தூக்கத்தில் கூட மகிஷாவின் கண்கள் தான் அவனை இம்சித்தது.இனி எப்போது  அவளைப் பார்ப்போம்,யாரவள் எனும் எண்ணம் தான் அவனுக்கு, இறுக்கமான அவனையும்  அவள் கண்கள் பாதிப்பதாயின் இது  காதல் இல்லாமல் வேறு என்ன.அவன் தூக்கத்தை கெடுத்தவளோ ஆழ்ந்த தூக்கத்தில்

மகிஷாவோ அன்று அலுவலகத்தில் வேலையில் ஈடுபட்டு இருக்கும் கரன் சொன்ன “டார்க்வெவ்”  பற்றிச் சொல்லியது ஞாபகம் வர,ப்ளார்க்  வெப்பினுள் நுழைந்தாள்.அதிலோ பல்லாயிரக் கணக்கான சட்டவிரோதச் செயல்கள் தொடர்பான பேச்சுக்கள் இடம்  பெற்றன தனக்கு வேண்டிய தகவலைத் தேடியவளுக்கோ கிடைத்ததென்னவோ பெரும்  வாய்ப்பு அடுத்த வாரம் நடைபெற இருக்கும் டைமண்ட் நகைகளுக்கான கண்காட்சி அதில் குறிப்பிட்ட ஒரு டைமண்ட் நகையை திருவே அதில் கேட்கப்பட்டிருந்தது.அவளும் அதற்குப் பதிலளித்திருந்தாள்.

அதே வேளை ஜோகித்தும் தன் முன்னிருந்த லாப்டாபில் அதே டைமண்ட் நகையை தான்  பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜோகித்திற்கோ திருடுவது ஒரு பொழுதுபோக்கு அதுவும் பழங்காலப் பொருட்கள் மீது அலாதிப் பிரியம் இவ்வேளை சேலஞ்சிக்காக  போற்றுவான். சிலதை காசுக்காக பண்ணும்  அவனுக்கு பணத் தேவை இல்லை இருப்பினும் ரிஸ்க் எடுத்து திருடுவதில் அலாதிப் பிரியம். போலீசை சுத்ததில் விட்டு தன்னை ஹீரோவாக காட்டுவது அவளோ பிடிக்கும் அவனுக்கு.

அன்று மாலை சிக்கலில் மீண்டும் மகிஷாவைக் கண்டதும் அவள் பற்றி அறிய மனம் உந்த காரை சற்று தள்ளி சாலையோரம் நிறுத்தியவன் அவளை இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்தான்.அவளும் குவாட்டஸினுள் நுழைந்ததைக் கண்டவன். ‘ ஓஓ இவ் சாஃப்ட் வேர்ரா,இங்க தான் வேர்க் பன்றா போல ‘என தனக்குள் எண்ணிக் கொண்டவன் காரை எடுத்துக் கிளம்பினான். அலைபேசி   தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க, அழைப்பை ஏற்றது தான் தாமதம்  ” எங்க இருக்கா மச்சான் ரொம்ப நேரமா  கால் பன்றன் என்றான் அர்ஜீன்.” அவனை கடுப்பேத்தும் நோக்கில் “என் ஆளப் பார்த்துடு வாரன்” என்றான்ஜோகித்.” என்ன” என அர்ஜுன் அதிர்ச்சியாய் கேட்க ” வைடா வாரன்” என்றவன் அமைப்பைத் துண்டித்தான்.

சிறிது நேரத்தில் அர்ஜுன் முன் அமர்ந்து ஆசுவாசமாக தேனீர் அருந்தினான். அர்ஜுனோ ” டேய் உன்னத் தான் கேட்கிறேன்,யார்டா “? என்றான்.பல்லைக் கடித்தபடி தனது ” அலைபேசியை திருப்பி அவன் புறம் வைக்க அதைப் பார்த்தவன் ” மச்சான் இவ அவல்ல ,அப்போ அவ கூட இருந்தது?” ,”அவ ப்ரண்ட, அவள  எப்படிடா  நெருங்கிறது” என அர்ஜுனனிடம் கேட்க ,அர்ஜுனோ ஜோகித்தையே அதிர்ச்சியாக நோக்கினான் . ‘எப்படி இருந்தவன் இப்படி கேட்கிறான்’.என அவன் தனக்குள் யோசித்துக கொண்டான்.அவனையே நோக்கியாவன் “உண்மைய தான் சொல்றியா?அடுத்த வாரம் நடக்கிற ஜுவல் எக்ஸிபிசன்  அந்த  ரேர் டைமணட் ஜுவல அடிச்சு தான் அவளுக்கு ப்ரோபோஸ்  பன்னப்போறன்.

“அடேய் இப்போ தானேடா ஒரு சம்பவம் பண்ணம் அதுவே  இன்னும் அடங்கின பாடு இல்லை,அந்த போலீஸ் ஆபிஸர் வேற நம்மள புடிச்சே ஆகுவேன்னு கங்கணம் கட்டிக் கொண்டு அலைறான். அதுக்கிடைல அடுத்ததா” என அவன் புலம்பச் செய்தான்.

அன்று மாலை அலுவலகம் முடிந்ததும் கரனும் மகிஷாவும் அருகில் இருந்த பார்க்கிற்குச்சென்றனர்.

“கரன்  அடுத்த வாரம்  கண்காட்சி  நடக்கிற இடத்த தான் முதல் நாள் போய் ஆப்சேவ் பண்ணுவோம், அடுத்த நாள்  ஆக்டர்ஸ் ஜுவல்  ஷோல நானும் ஆக்டர்ஸ் கூட இருப்பன். நீ சர்வண்ட் போல  இரு மற்ற எல்லா நம்ம ப்ளான் படி செய்வோம் என்றாள். கரனும்” சரி” என்று சொல்ல இருவரும் தங்கள் இருப்பிடத்திற்கு புறப்பட்டனர்.நேரமோ ஆறைக் கடந்திருக்க. அவளும் குவாட்டஸை நெருங்கும் வேளை ” மேடம் இந்த பார்சல்  உங்களுக்கு வந்துச்சி” எனக் கொடுத்தான் வாட்ச்மேன்.

‘நமக்கு யாரு  பார்சல் அனுப்புறது’ எனும் யோசனையோடு அறைக்குள் கொண்டு சென்றவள் அதனை பிரிக்க   ‘லவ் யூ பேபி ‘எனும் குறிப்போடு சாக்லேட்  பாஸ்கட் இருந்தது. யோசனையுடன் பிரிதத்வளுக்கோ ஆச்சரியமாக இருக்க,. யாரா இருக்கும் ஃப்ரம் அட்ரஸ் எதுவும் இல்ல’ என கவரை திருப்பிப் பார்த்தவள்  அதை அப்படியே குப்பையில் வீசிவிட்டு தனது  வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

சூரியன் தன் பொற்  பாதங்களை பரப்பி பூமியை அனைத்துக் கொள்ள அழகாகப் புலர்ந்தது அந்த காலைப்  பொழுது. அலுவலகம் செல்ல வெளியே வந்தவளிடம் ஒரு சிறிய பரிசை நீட்டினார் வாட்ச்மேன் அதை வாங்கியவள் யோசனையுடன் “யாரு தந்தது”. எனக் கேட்க அவரோ கை நீட்டிய திசையில் காரொன்று சென்று கொண்டிருந்தது.அவளும் எரிச்சலுடன் அதை ஹேன்ட் பேக்கில் போட்டுக் கொண்டு அலுவலகம் நுழைந்தாள்.

இப்படியாக தினமும் அவளுக்கு பிடித்த பொருட்கள் வந்த வண்ணமே இருந்தது. காரை மட்டும் தான் அவளால் பார்க்க முடிந்தது.முதலில் எரிச்சலுற்றவள்.பின் தனக்கு பிடித்தவை எப்படித் தெரியும்  என யோசிக்கையில்அவனைப் பார்க்க ஆவல் கூடியது.

இப்படியே நாட்கள் செல்ல அன்று காலையில் வாட்ச்மேன் ” மேடம் இது இன்னைக்கு என சிவப்பு நிற ரோஜாக்களைக் நீட்டினார்.பூக்களைக் கண்டதுமே அவள் இதழ்கள் கூட மெலிதாக புன்னகைத்தன.சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட அதே கறுப்பு நிறக் கார்  தொலைவில் நின்றது.காரை நோக்கி அவள் வர அதைக் கண்ட ஜோகித் புருவம் சுருக்க அதே அவளை காரை நெருங்கியவள் கார்க் கண்ணாடியைத் தட்ட அவனோ பெரூமூச்சுடன் கார்க்  கண்ணாடியை கீழிறக்க அவளோ ரோஜாவை தூக்கிக் காட்டி “என்ன இது” என்றாள்.

அவனோ கண்ணில் கூலர்  அணிந்திருப்பதால் அதன் வழியே அவளைக் பார்க்க அவன் முன் கையாட்டியவள் “யார்? நீங்க” எனக் கேட்க.முன் கதவை திறந்து விட்டவன் “பேசிட்டே போகலாம்” என்றான்.அவனை முறைத்தாள் ரோஜாவைத் தூக்கி திறந்திருந்த கதவின் வழியே இருக்கையில் போட்டவள் விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள்.

அவள் போவதைப் பார்த்தவன் தன் தலையில் தட்டிக் கொண்டான். அவனை எங்கோ பார்த்தது போல ஒரு ஞாபகம்  அவளுக்கு, அன்று முழுவதும் கார்க் காரனுக்கே திட்டிக் கொண்டே இருந்தாள். கரன்  என்ன எனக் கேட்க அவனுக்கும் திட்டுத் தான் விழுந்தது. இவளுக்கு என்னாச்சு என தன்னையே நொந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!