நாட்காட்டியில் காகிதங்கள் வேகமாய் கழிய, அன்று மாலை நேரம் இட்லிக்கு மாவு அரைக்கவென ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்ட யமுனாவிற்கு நீண்ட நாட்கள் சென்று தீனாவை சீண்டிப்பார்க்கும் ஆசை எழுந்தது.
‘மாலை நேரம் அவனுக்கு வேலை அதிகமாய் இருக்கும். கண்டிப்பாக தனது போனை எடுக்க மாட்டான்.. அதை கொண்டு அவனோடு சண்டை என்ற பெயரில் விளையாடி பார்க்கலாம்..’ என்ற எண்ணம் புது உற்சாகத்தை கொடுக்க, போனை கையில் எடுத்தவள் அவனுக்கு அழைக்க தொடங்கினாள்.
Advertisement
முதல் முறை அழைத்ததும் உடனே எடுத்து விட்டவன், “என்ன பாப்பா..?” என அடுத்தவருக்கு கேட்காதவாறு மெல்லிய குரலில் கேட்க,
Advertisement
நினைத்தது நடக்காததில், “ஒன்னுமில்ல சும்மா தான்..” என கட் செய்துவிட்டாள் உடனேயே.
Advertisement
அவள் சொன்ன பாவனையில் அவள் எண்ணம் புரிந்தது போல, லேசான புன்னகையை உதிர்த்து தலையை இடவலமாக அசைத்துக்கொண்டவன், அருகே இருந்தவரிடம் கட்டுக்களை காட்டி பேசத்தொடங்கினான்.
Advertisement
அவர் சென்றதும் குமரன், “என்ன தீனா ண்ணே.. போன்ல யமுனாவா..?” என நமுட்டு சிரிப்போடு கேட்க,
‘யாருக்கும் கேட்காத மாதிரி மெல்ல தானே பேசினேன். இவனுக்கு எப்படி தெரிஞ்சுது..?’ என நினைத்து கேள்வியாய் பார்க்க,
அவன் சொன்னதில் உண்டான வெக்கத்தை.. வேறு பக்கம் முகத்தை திருப்பி.. தலை கோதி.. என மறைத்தவன், முயன்று வரவழைத்த கண்டன குரலில்,
“என்னைய நோட் பண்ணறத விட்டுட்டு போய்.. எதுல எவ்வளவு பேக்கிங் ஆகியிருக்குன்னு நோட் பண்ணு..” என விரட்ட,
“உங்க கடலைக்கு நாங்க இடஞ்சலா இருக்கோமுன்னு தொறத்தறதுக்கு பதிலா.. நீங்க கிளம்பி வீட்டுக்கு போகலாம்..” என சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட, தீனாவும் சிரிப்போடு தன் வேலையில் ஆழ்ந்தான்.
கொஞ்ச நேரத்தில் யமுனா மீண்டும் அழைக்க, அப்போது குமரன் தீனாவிடம் ஏதோ கேட்க வரவும் சரியாக இருந்தது.
தீனா போனை எடுத்துமே அவன் முகம் காட்டிய பாவனையில் குமரன் அவனை பார்த்து சிரிப்பை அடக்க முயன்றபடி நிற்க,
“டேய்.. ஏதோ முக்கியமான விசயமா இருக்கும் டா..” என்றுவிட்டு போனை அட்டன் செய்து,
“பாப்பா.. சொல்லு என்ன விசயம்..?” எனக்கேட்க,
இந்த முறையும், “ஒண்ணுமில்ல சும்மா தான்..” என்றுவிட்டு வைத்துவிட,
தீனாவின் முகத்தில் வழிந்த அசட்டுத்தனத்தில் குமரனின் சிரிப்பு அங்கிருந்த பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.
தீனாவிற்கு எந்த போன் வந்தாலும், ஆஃபீஸ் அறைக்கோ அல்லது வேறு ஆட்கள் இல்லாத இடமாக ஒதுங்கி தான் பேசுவான்.
அப்போது தான் மிஷின்கள் சத்தமின்றி எதிரில் கேட்பவருக்கு தான் சொல்வது புரியும்.. என்பதை கொண்டு.
‘மாலை நேரம் கட்டுக்களை எடுக்கவும், தைத்ததை கொடுக்கவும்.. யாராவது வந்தால் என்ன செய்வது.
தன்னை தேடக்கூடாதே..’ என்ற ஒரு காரணத்திற்காக தான் அங்கேயே இருந்து போனை எடுத்தது.
அப்படி இருக்க, விசயமே இல்லாமல் போனை போட்டு தன்னை இப்படி திண்டாட வைப்பவளை,
‘அய்யோ.. இவள வச்சுக்கிட்டு.. மானத்த வாங்கறாளே..’ என மனதுக்குள் செல்லமாக திட்டிக்கொண்டு,
குமரனின் கழுத்தோடு கையிட்டு விளையாட்டாய் இறுக்கியவன், “கொன்னுடுவேன்..” என்றவனுக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவர்களின் விளையாட்டை கண்ட சிலரும் சிரிப்போடு அவர்களின் வேலையில் ஐக்கியமாக மீண்டும் ஒலித்தது அழைப்பு மணி.
***
“என்ன போன போட்டதும் பட்டுன்னு எடுக்கறாரு..! இது தப்பாச்சே..! வேல வெட்டி இல்லாமையா இருக்கு அவ்வளவு பெரிய கம்பெனில..? ச்சே.. நம்ம ப்ளான் இப்படியா சொதப்பனும்..?” என வாய் விட்டு புலம்பியவள்,
அரிசி மாவை எடுத்து விட்டு உளுந்தை போட்டிருந்தால் அதற்கு லேசாக தண்ணீரை தெளித்துவிட்டு,
“இதோட லாஸ்ட்.. இப்ப அவரு எடுக்காம இருந்தா.. திரும்ப அடிக்கிறோம்.. வந்ததும் சண்டை பிடிக்கிறோம்..” என தனது தோளை தானே தட்டி மோட்டிவேட் செய்து கொண்டவள்,
அவ்வாரே அழைக்க அவளின் எண்ணம் போல அவன் போனை எடுக்கவில்லை.
“வாவ்.. எடுக்கல.. யமுனா ப்ளான் சக்சஸ்.. விடாதே அஞ்சு நிமிஷத்துல திரும்ப அடி..” என சொல்லிக்கொண்டவள்,
அரைத்த மாவை அள்ளி பாத்திரத்தில் போட்டு உப்பை போட்டு கலந்தபடியே மீண்டும் அழைக்க.. இம்முறை போனை எடுக்கவில்லை அவன்.
அதும் போன் முதல் ரிங் ஆகும் போதே கட்டாக,
“என்ன ரிங் போறதுக்குள்ள கட்டாகுது..! டவர் மிஸ்டேக்கா..?” என யோசனையோடே,
அரைத்த மாவை ஒரு கையால் கலந்த படி போனை ஆராய, பின் புறமிருந்து அவளின் போனோடு சேர்த்து இறுக பிடிக்கப்பட்டது அவளின் கரம்.
“பஸ்ட் நைட் அன்னைக்கு அண்ணி ஒண்ணு சொன்னாங்க.. அத செஞ்சிருந்தா என்னவாகி இருக்குமுன்னு இப்ப புரியுது..” என வெக்கச்சிரிப்போடு யமுனா சொல்ல,
அவளின் முகம் காட்டிய பாவனையே அது ஏதோ விவகாரமான விசயம் என்பதை கண்டு கொண்ட தீனா,
“இப்படி என்னோட பாப்பா முகம் சிவக்கற அளவு அப்படி என்ன சொன்னாங்க உன்னோட அ..ண்..ணி..?” என அவளின் வெக்கத்தில் சிவந்த கன்னத்தை ஒற்றை விரல் கொண்டு வருடியபடி கிறங்கி போன குரலில் கேட்க,
அதில் கண்கள் சொக்கிப்போன போதும் மென் குரலில் அன்று வாணி சொன்ன சந்தன சாங்கியத்தை சொல்லி முடிக்க,
அட்டகாசமாய் வாய்விட்டே சிரித்தபடி, “அட.. இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.. அப்ப மிஸ் ஆனது இன்னைக்கு நடந்திடுச்சு..” என்றான்.
‘அன்று அவர் சொன்னதை செய்து அவர் முன் நின்றிருந்தால்..’ என நினைக்க அவ்வளவு வெக்கம் இருவருக்குள்ளும்.
மெல்ல அவளில் இருந்து விலகி எழுந்தவன், பீரோவை திறந்து ஒரு பெட்டியை எடுக்க, போர்வையை கழுத்தோடு சேர்த்து பிடித்து நிமிர்ந்து கேள்வியாய் பார்த்தாள் யமுனா.
அழகான புன்னகையை பரிசாய் தந்துவிட்டு.. அவளின் பாதத்தின் அருகே அமர்ந்தவன், அவளின் காலில் முன்பு அணிவித்த சத்தமெழாத கொலுசை அகற்ற ஆரம்பித்ததுமே விழிகள் சாசராய் விரிந்தது யமுனாவிற்கு.
அவளின் எண்ணம் போலவே பெட்டியிலிருந்த அதிக முத்துக்கள் வைத்த கொலுசை அணிவிக்க, ‘எதற்கு அது..’ என புரிந்து.. மேனியெங்கும் சிவந்து போனது அவளுக்கு.
அணிவித்த புது கொலுசுக்கு முத்தமிட்டு.. தவழ்ந்து மேலே வந்தவன், எப்போதும் போல அவளின் கழுத்தோரம் சரிந்திருந்த தாலிக்கு முத்தமிட, அவனின் மீசையும் தாடியும் தந்த குறுகுறுப்பில் உடல் சிலித்தவள்,
“தள்ளி போங்க கண்ணழகா..” என செல்லமாக தள்ள.. போன வேகத்தில் காந்தமென அவளோடு ஒட்டிக்கொண்டவன், மீண்டுமொரு ஆலிங்கனத்தை அரங்கேற்ற முயல,
“அச்சோ..! என்ன பண்ணறீங்க..? வேலைக்கு போகலையா..? இன்னும் நேரமாகலையே..?” என அவனை தடுத்துக்கொண்டே சொல்ல,
“முதல்ல முழுசா இந்த வேலைய பாக்க விடுடீ.. அந்த வேலைக்கெல்லாம் ஏற்பாட்ட பண்ணிட்டு தான் வந்திருக்கேன்..” என்றவன் அடுத்து பேச அவளுக்கு வாய்ப்பை தரவே இல்லை.
பக்கத்தில் ஆட்கள் இருந்ததில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் இருவருக்கும் தகர்ந்திருக்க, அந்த அறையெங்கும் கொலுசில் மெட்டுக்கு.. சிணுங்கலோடு இருவரின் குரலும் ஸ்ருதி சேர்த்தது.
ஆத்மார்த்தமான கூடலின் முடிவில்,
“நீங்க ரொம்ப மோசமா ஆகிட்டீங்க.. கண்ணழகா.. என்னென்ன சேட்டை செய்யறீங்க..!” என செல்லமாக சிணுங்கியவளை கண்டு அவளறியாது நமுட்டு சிரிப்பை உதிர்த்தவன்,
அவள் பார்க்கும் போது முகத்தை கடுமையாக்கி, “உன்னால பாரு என்மேல எப்படி மாவெல்லாம் ஆகியிருக்குன்னு..” என புகார் வாசிக்க,
“என்னாலையா..! நா தான் சொன்னேனே.. கேட்டீங்களா..?” என்றவளை இடைமறித்து,
“போன போட்டு கூப்பிட்ட நீ தான் எல்லாத்துக்கும் காரணம்.. அதனால நீ என்ன பண்ணறேன்னா உன்னால ஆனத நீயே க்ளீன் பண்ணி விடறே.. சரியா..?” என்றான் விசமம் ஊறிய விழியோடு.
அதை கவனிக்காத பெண்ணவளோ, “ம்ப்ச்..!!” என உச்சு கொட்டி,
“தெரியாம கால் பண்ணிட்டேன் சாமி.. இனி நா பண்ணவே மாட்டேன். இருங்க.. போய் துண்டை ஈரம் பண்ணி எடுத்துட்டு வர்றேன்..” என உடலில் சுற்றிய போர்வையோடு எழ,
“என்ன..! ஈர துணியில துடைக்கிறையா..? இங்க பாரு தல முடியெல்லாம் சால்ட் அண்ட் பெப்பர் டை அடுச்ச கணக்கா ஆக்கி வச்சிருக்கே.. அதெல்லாம் எப்படி போகும்..?” என்றான் தனக்கான காரியத்தை சாதிக்க எண்ணி இடக்காக,
அவனின் எண்ணம் புரியாமல் தானாக வலையில் விழுந்தாள், “அதுக்காக உங்கள குளிக்க வைக்கவா முடியும்..?” என்ற வார்த்தையை சொல்லி.
“சரியா சொன்ன என் பட்டுக்குட்டி..” என்றவன், அவளை அள்ளிக்கொண்டு குளியலறைக்குள் நுழைய..
அடுத்து அங்கு கேட்டது எல்லாமே சிங்கார சிணுங்கல்கள் மட்டுமே..!!
இன்று அவனின் கட்டுப்பாடற்ற கலவை.. அந்த மாதமே முழுமை பெற்றிருந்தது இரட்டை கோடாய் பிரக்னென்சி கிட்டில்..
அதை யமுனா காட்டியதும் முதலில், ‘ஞே…’ என்ற பார்வை பார்த்து நின்றவன்,
“எங்கேடா சொதப்புனே..?” என யோசித்து கண்ட உண்மையில் பின்னந்தலையை சொரிந்து கொண்டு அசட்டுசிரிப்பை உதிர்க்க,
அவனின் செய்கையை ரசனையோடு பார்த்திருந்தவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
“சிரிக்காத பாப்பா..” என்றவன் முகத்தில் தெரிந்த வெக்கத்தை கண்டு,
“நா செய்ய வேண்டியதை எல்லாம் நீங்க செய்யறீங்க..” என யமுனா கலாய்க்க, அவளை தன்னோடு இழுத்துக்கொண்டவன், பின் அவளின் வார்த்தையையும் சேர்த்து உள் வாங்கியிருந்தான் இதமாய்.