என் ஜீவன் உன்னை சேருமா 14
என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் – 14
மாயாவுக்கு தந்தை எழுந்து வந்தால் போதும் என்று நினைத்தவள், உலகநாதனை பார்ப்பதே தன் வேலையாக பார்த்துக்கொண்டு அங்கே இருந்து கொண்டாள்..
மாயாவின் போனிற்கு புதிய எண்ணில் இருந்து போன் வந்திருந்தது.. யார் என்று போனை மாயா ஆன் பண்ணி காதில் வைக்க
Advertisement
‘ஹலோ உலகநாதன் சார் பொண்ணாம்மா? ” என்று ஒருவர் போனில் கேட்க..
“ஆமாம் நீங்க யாரு”?.. என்று கேட்டாள்..
” உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமா உங்களை பார்க்க முடியுமா? “. என்றார் அவர்..
Advertisement
“நீங்க யாரு?”.. என்று மறுபடியும் மாயா கேட்க..
Advertisement
” உங்க பால் பண்ணையில வேலை பாக்குறேன்மா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பண்ணைக்கு வர முடியுமா” என்றார்..
“சரி வர்ரேன்” என்றவள்,, உலகநாதனை பார்த்துக் கொள்ளும் செவிலியிடம் தந்தையை நன்றாக பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு பால் பண்ணைக்கு கிளம்பினாள்.
அவள் பால் பண்ணைக்கு வர, ஒரே கலவரமாக இருந்தது பால் பண்ணை..
Advertisement
மாயா நேராக ஆபீஸ் ரூம் சென்று அமர்ந்து கொள்ள..
அனைவரும் மாயாவை பார்க்க முயல, சில முக்கியமானவர்கள் மட்டும் மாயாவின் அறைக்கு வந்தனர்..
வந்தவர்கள் அனைவரும் மாயாவின் தந்தையை விட முதியவர்கள் மாயா உடனே எழுந்து “வாங்க உட்காருங்க” என்று அவர்களை அமர சொல்ல..
அவர்களுக்கே ஆச்சரியம்,, மாயா எழுந்து அவர்களுக்கு மரியாதை கொடுத்து அமர் சொன்னதற்க்கு..
உலகநாதன் சார் பொண்ணு அப்படியே அவரைப் போலவே இருக்காங்கல என்று மனதில் நினைத்துக் கொண்டனர்..
‘அப்பா நல்லா இருக்காங்களாமா?” என்ற அனைவரும் கேட்க.
“நல்லா இருக்காங்க அங்கிள் கூடிய சீக்கிரம் பால் பண்ணைக்கு வந்திடு வாங்க “என்று மாயா கூற.
“அப்பா இங்க வர்றதுக்குள்ள பால்பண்னையே இருக்காது போலயே அம்மா” என்றார் ஒருவர்..
“என்ன சொல்றீங்க?” என்றாள் மாயா..
“இன்னைக்கு பெரிய பாப்பா ரியா வந்தாங்க,, அவங்க கூட சில ஹிந்தி பேசுற பசங்களும் வந்தாங்க நம்ம பால் பண்ணை மூடிட்டு பாலில் இருந்து தயாரிக்கும் நிறைய பொருள் தயாரிக்க போறாங்களாம் புதுசா,,
அதனால பால் சப்ளையா ஸ்டாப் பண்ண சொன்னாங்க,, நம்ம பால் கம்பெனிதான் இப்ப தரமான பால் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கு, இதை மூட சொன்னா எப்படி பாப்பா இதை நம்பி 500 குடும்பம் இருக்கு,,, எத்தனையோ குழந்தைகள் தாய்ப்பால் இல்லாமல் கஷ்டப்படுறாங்க அவங்களுக்கெல்லாம் மாயாபால் தான் உணவா இருந்துட்டு இருக்கு அதை மூட சொன்னா எப்படி பாப்பா? அவங்க இனி பாலில் இருந்து பன்னீர், ஸ்வீட் இன்னும் நிறைய பொருளை தயாரிக்க போறாங்களாம் பாப்பா” என்று வருத்தமாக கூற…
“இனிமேல் என் அக்கா இங்க வரமாட்டா,, நீங்க எப்பவும் போல பால் சப்ளை பண்ணுங்க ஏதாவது பிரச்சினையின்னா எனக்கு உடனே கால் பண்ணுங்க” என்றவள் அவள் வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்..
உலக நாதனின் வீடு தலைகீழாக மாறி இருந்தது..
வீடு நிறைய ஆட்கள்..
மாயாவுக்கு அவர்கள் யார் என்றே தெரியவில்லை..
இவள் வீட்டுக்குள் வரவே முடியாதபடி இரண்டு பெண்கள் கதவின் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டே இருக்க,,
மாயா யார் என்பது போல் அப்பெண்களை பார்த்தாள்,,
அப்பெண்கள் இவளை யாரு என்று பார்த்துக்கொண்டே இவளை உள்ளே வர விடாமல் நிற்க..
மாயாவுக்கு பயங்கர கோபம் அவர்களை திட்டும் முன் ரியாவின் மாமியார் வந்து.. ” மாயா ப்பேட்டி… வா, உள்ளே வாம்மா” என்று அழைக்க..
“யார் இவர்கள்” என்றாள் மாயா ரியா மாமியாரிடம்..
“ஒரு பூஜை இருக்குமா அதான் சொந்தக்காரங்க எல்லாம் வந்து இருக்காங்க”.. என்று ரியாவின் மாமியார் கூற..
அப்போதுதான் வீட்டைப் பார்த்தால் மாயா வீடே பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது..
அங்கே என் தந்தை உயிருக்கு போராடிட்டு இருக்காரு, இவங்க பூஜை செய்யுறாங்க என்று மனதில் நினைக்க..
கிச்சனில் இருந்து சத்தம் வர.. கிச்சனை நோக்கி சென்றாள் மாயா. அங்கே நான்கு ஐந்து பேர், விதவிதமாக சமைத்துக் கொண்டு இருக்க தன் வீட்டில் பணிபுரியும் வாயதான வேலைக்கார அம்மா பாவமாக நின்று ,, சிங்கில் நிறைந்து கிடந்த பாத்திரங்களை விலக்கி கொண்டிருந்தார்,,..
சோர்ந்து தெரிந்தவரை, கையை பிடித்து வெளியே அழைத்து வந்தவள் ,”நானும் அப்பாவும் வீட்டுக்கு வந்த உடன் நீங்க வேலைக்கு வாங்க பாட்டி இப்ப நீங்க கிளம்புங்க” என்றவள் இரண்டு மாத சம்பளத்தை எடுத்து அவர் கையில் தந்து விட்டு.. அவரை வீட்டுக்கு போக சொல்ல..
அந்த வயதான பெண்மணி மாயாவை நன்றியோடு பார்த்தவர்,.
” இது சரியில்ல பாப்பா,, நீ முழிச்சுக்கோ இல்ல உன்னை இந்த குடும்பம் முழுங்கிடும் பார்த்துக்கோ” என்று அப்பெரியவர் அவளிடம் சொல்லி விட்டு சென்றார்..
அவரும் தான் இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறார் உலகநாதன் வீட்டிற்கு புதுசு புதுசாக ஆட்கள் வந்து கொண்டே இருக்க வீடே அவர்கள் வீடு போல் நடந்து கொண்டிருந்தனர்,, இவருக்கு நடப்பது எதுவும் பிடிக்கவில்லை..
உலகநாதன் வீடு இப்போது ரியா மாமியார் வீடு போல் ஆனது..
மாயா தன் அறைக்கு செல்ல,, அங்கே ஒரு வயதான பெண்மணி அவள் அறையில் தூங்கிக் கொண்டு இருக்க..
மாயாவுக்கு நன்கு புரிந்தது.. ரியாவுக்கு இந்த வீட்டையும் அவளுக்கு வேண்டுமென்று கேட்கிறாள் போல,, என்று புரிந்து கொண்டவள் உடனே ரியாவுக்கு போன் பண்ணி இருந்தாள்..
“ஹாய் மாயா எல்லாம் ரெடியா இருக்கு நீ எங்க இருக்க சைன் பண்ண உடனே நீ கிளம்பி வா” என்றாள் ரியா..
“நான் நம்ம வீட்டுல தான் இருக்கேன்.. நீ எங்க இருக்க ரியா?” என்றாள் மாயா..
“நான் சென்னை கம்பெனியில் தான் இருக்கேன் சீக்கிரம் வா” என்று ரியா கூற..
மாயா உடனே கிளம்பி இருந்தாள்,, மாயாவின் போனிற்கு பார்த்திபன் மெசேஜ் பண்ணி இருந்தான்.. அதை திறந்து பார்த்தவளுக்கு ரியாவின் மேல் கடும்கோபம் வர..
பார்த்திபனை தன் கம்பெனிக்கு வரச் சொல்லி மெசேஜ் பண்ணியிருந்தாள் மாயா..
ரியா உலகநாதனின் கம்பெனியை, அவரின் எதிரி கம்பெனிக்கு பல கோடிகளுக்கு விற்க ஒப்பந்தம் போட்டிருந்தாள் ரியா..
அதை தெரிந்து தான் மாயா கோபமாக கம்பெனிக்குள் வந்து கொண்டிருந்தாள்..
மாய கோபமாக இருக்க,, ரியா தங்கையை சிரித்த முகமாக வரவேற்றாள்,,
மாயாவுக்கு ஆத்திரமாக வந்தது உலகநாதனின் தொழில் எதிரி லால் அவர்கள் கம்பெனிக்கு வந்து அவள் அப்பா உலகநாதன் உட்கார்ந்திருக்கும் சீட்டில் ஜம்பமாக அமர்ந்திருக்க,, அதை பார்த்த மாயாவுக்கு ஆத்திரம் பலமடங்காக .
பளார் என்று ரியாவின் கன்னத்தில் அரைந்திருந்தாள் மாயா..
அவள் அரைந்த நொடி ரிஷி மாயாவை அடிக்க வர,,
பார்த்திபன் ரிஷியின் கையை பிடித்து முறுக்கி இருந்தான்..
மாயா ரியாவை பார்த்து “அறிவு இருக்கா உனக்கு” என்றாள்..
“ஏய்” என்று ரியா மாயாவை அடிக்க வர,,
அக்காவின் கையை பிடித்துக் கொண்டவள்,,
லால் லை பார்த்து, “சாரி எங்க கம்பெனி உங்களுக்கு விற்க விருப்பமில்லை நீங்க கிளம்பலாம்” என்று மாயா கூற. அவரோ அமர்ந்துபடியே போக முடியாது என்ற தோறனையில் அமர்ந்திருக்க ..
“உங்களை தான் சார் நீங்க கிளம்பலாம்” என்றாள் மாயா..
அவரோ தெனாவட்டாக “ஆல்ரெடி ஐம்பது கோடி அட்வான்ஸ் பண்ணியாச்சு இனி நீ சைன் பண்ண வேண்டியது தான் பாக்கி” என்று சட்டமாக அமர்ந்து கொள்ள..
மாயா தன் அக்காவுக்கு ஏன் இப்படி புத்தி போகுது என்று தோன்ற..
” உங்க அட்வான்ஸ் பணத்தை நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் சார் நீங்க கிளம்புங்க” என்று கூற.
“முடியாது”..என்று லால் கூற..
பின்னே எத்தனை நாள் கனவிது உலகநாதனை தோற்கடிக்க.. இப்போ அவரின் சாம்ராஜ்ஜியத்திலே அமர்ந்திருப்பது அவருக்கு உலகத்தையே வென்று விட்டது போல் உவமையை தர அதை விட்டு செல்வதாக அவர் இல்லை..
சட்டமாக உலகநாதன் சேரில் அமர்ந்திருக்க,, அதை பார்க்க பார்க்க மாயாவுக்கு ஆத்திரம் கூடிக் கொண்டே சென்றது..
ரியாவை பார்த்து “ரியா” என்று கத்தியவள் “என்ன பண்ணி வச்சிருக்க என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா”? என்றாள் ஆத்திரமாக..
“உன்கிட்ட என்ன கேட்கணும் அதுதான் எனக்கு கம்பெனி தர்றதா சொன்ன தானா,, நான் வித்தா என்ன இப்போ? சைன் பண்ணிட்டு கிளம்பு “என்றாள் ரியா கூல்லாக..
“நான் சொத்தை எழுதி தர்றது உனக்கு.. நீ கம்பெனி நல்லபடியா நடத்தணும் அதை விட்டுட்டு நல்லா ரன் ஆகிட்டு இருக்கிற கம்பெனியை யாராவது விற்பாங்களா?”..
“அது எனக்கு தெரியாது, அது எனக்கு தேவையும் இல்லை எனக்கு இப்ப பணம் வேணும் அதற்கு தான் அப்பாவோட கம்பெனியை விற்க்குறேன்”.. என்றாள்…
” உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ கேளு, நான் ஏற்பாடு பண்ணி தரேன் அதை விட்டுட்டு ஏன் இப்படி சிக்கல் பண்ணி வச்சிருக்க”..
“நான் கேட்கிற பணத்தை உன்னால் கொடுக்க முடியாது” என்றாள் ரியா.
“நீ எவ்வளவு கேட்டாலும் அதை நான் ஏற்பாடு பண்ணி தரேன்”..
“உன்னால நான் கேட்கிறேன் பணத்தை தர முடியாது”. என்று மீண்டும் ரியா கோபமாக பேச…
“நீ கேளு” என்று மாய மறுபடியும் கூற…
” 500 கோடி எனக்கு வேணும் உன்னால ஏற்பாடு பண்ணி தர முடியுமா?” என்றாள் ரியா..
“என்ன 500 கோடியா எதுக்கு உனக்கு அவ்வளவு பணம்” என்று மாயா கேட்க..
“என் ஹஸ்பண்ட் ஃபாரின்ல கம்பெனி தொடங்கப்போறாரு அதுக்கு தான் 500 கோடிக்கு மேல தேவைப்படுது” என்றால் ரியா..
மாயா என்ன இப்படி எல்லாம் இவள் கேட்கிறாள்,, ஏன் அந்த தொழிலை இங்கு செய்ய கூடாதா என்று மனதில் தோன்றியதை கேட்டே விட..
“அது எங்களோட விருப்பம் உன்னால பணம் கொடுக்க முடியாது இல்ல, அப்போ நான் அப்பாவோட எல்லா சொத்தையும் வித்து ஃபாரின்ல கம்பெனி தொடங்கப் போறேன்” என்று ரியா உறுதியாக கூற..
இவளை சொல்லி திருத்த முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்த மாயா,,
” ஒரு வாரத்தில் நீ கேட்ட பணம் உன் கையில் இருக்கும். இந்த லால் இப்போ இங்கிருந்து கிளம்ப சொல்லு” என்றாள் மாயா..
“உன்னை நம்பலாமா” என்று ரியா கேட்க..
” உனக்கு பணம் வேணும்னா என்னை நம்பித்தான் நீ ஆகணும்” என்றால் மாயா…
ரியா லால் சாரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக சொல்லி அவரை அனுப்பி வைக்க முயற்சி பண்ண,,
லால் மாயாவை பார்த்து “நீ எப்படி பணத்தை ரெடி பண்றேன்னு நானும் பாக்குறேன்” என்று சவால் விடுவது போல் கூறிவிட்டு செல்ல..
இருக்கிற இம்சையே பத்தாது இதில் இவன் வேற என்று சலித்துக் கொண்டாள் மாயா..
மாயா ரியாவை பார்த்து “உன் சொந்தக்காரங்க நாளைக்கு என் வீட்டுல இருக்கக் கூடாது” என்றாள்…
“அது என்ன உன் வீடு இது நம்ம வீடு தானே” என்று ரியா கூறியதும்,
” உனக்கு தான் ஏற்கனவே அப்பா ரெண்டு வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார் தானே,, இந்த வீடு என் அம்மா பேர்ல இருக்கு, எனக்கு வேணும்” என்றாள் மாயா…
ரியாவின் கணவன் ரிஷி,, ரியாவிடம் சத்தமாக மராட்டியில் பேச..
ரியா ஏதோ சொல்ல இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி விட…
தந்தையின் ஆபீஸ் அறையில் ஒரு ஓரமாக போடப்பட்டிருந்த சோபாவில் கால் நீட்டி அமர்ந்து விட்டாள் மாயா,, உடல் மனம் எல்லாமே சோர்ந்து போன உணர்வு,, அப்படியே கண்மூடி சாய்ந்து விட்டாள்..
பார்த்திபன் அவளை பார்த்து வெளியில் சென்று அவளுக்கு சூடான காபி வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் தர..
கண்களை திறந்து பார்த்தவள் “வேண்டாம் அண்ணா நீங்க வேணா குடிங்க எனக்கு பழக்கம் இல்லை” என்றாள்..
“பரவால்ல மா கொஞ்சம் குடிடா உனக்கு தெம்பா இருக்குமுல,, நீ ரொம்ப சோர்ந்து போய் தெரியுற” என்றான் பார்த்திபன்…
“ஏண்ணா எனக்கு எல்லாமே தப்பாவே நடக்குது என்னால முடியல” என்றாள் கண் கலங்கியபடியே..
“சில நேரம் கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வரும்மா,, அப்போ நம்ம சோர்ந்து போய் உட்கார்ந்து விடக்கூடாது ஒவ்வொரு கஷ்டத்தையும் நாம தாண்டித்தான் போகணும்.,,அப்பதான் நம்ம ஒவ்வொரு கஷ்டத்தில் இருந்து ஒரு பாடம் நமக்கு புரியும்,, கடவுள் நமக்கு கஷ்டம் தர்ராங்கன்னா,, நம்மலை நல்வழி படுத்தி வாழ தயார் பண்ணுறாருன்னு அர்த்தம்,. நீ கவலைப்படாத உன் வாழ்க்கையில இனி எல்லா பிரச்சனையும் முடிஞ்சதுன்னு நினைச்சுக்கோ,, இனிமே நல்லாதே தான் உனக்கு நடக்கும், கடவுளே உனக்காக உன் அப்பாவை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார் மாயா, எதுக்கும் நீ கவலைப்படாதே,, உன் கஷ்டம் எல்லாம் பெரிய கஷ்டமேயில்லம்மா” என்று பார்த்திபன் கூற..
“ரொம்ப நன்றி அண்ணா நீங்க என்கூடவே இருக்கீங்களா அண்ணா எனக்கு அட்வைஸ்ரா எனக்கு பி ஏ வா” என்று மாயா கேட்க..
“ஐயோ அக்னி என்னை கொன்னுடுவானே” என்று பார்த்திபன் சிரிக்க..
“ப்ளீஸ் அண்ணா நீங்க என் கூடவே இருங்க கொஞ்ச நாளைக்கு” என்றாள் மாயா.
“சரிமா நான் அவன்கிட்ட கேட்டு பார்க்கிறேன்” என்றவன் அக்னிக்கு போன் போட….
போனை எடுத்த அக்னி “டேய் எங்கடா போய் தொலைஞ்ச அப்பப்ப காணாம போயிடுற” என்று அக்னி அங்கே கத்துவது இங்கே கேட்டது…
“சார் மாயா மேடமை பார்க்க வந்தேன்”..
“உனக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாத்தாலும் அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க” என்றான் கோபமாக..
உலக நாதனின் அறை அமைதியாக இருக்க அக்னி பேசியது மாயாவுக்கு நன்கு கேட்டது.
“அண்ணா வேலைக்கு வர முடியாதுன்னு சொல்லுங்க அண்ணா” என்றாள் மாயா..
மாயா பேசியது அக்னிக்கு கேட்க.. “அந்த பயந்தாங்கோலி பேசுறது எல்லாம் நான் கேட்க முடியாது நீ உடனே கிளம்பி வர பாரு பார்த்திபா,, உனக்கு இங்க வேலை நிறைய இருக்கு” என்றான் அக்னி..
“யாரு பயந்தாங்கோலி” என்றவள் போனை பார்த்திபனிடம் இருந்து பிடுங்கி இவள் அவனிடம் பேச..
“நீதான் பயந்தாங்கோலி” என்றான் அக்னி,,
“ஹலோ வார்த்தை அளந்து பேசுங்க அக்னி சார்” என்றாள் மாயா..
“நீ வேணா ஒரு ஸ்கேல் வாங்கி தர்ரியா மாயா மேடம் அளந்து அளந்து பேசுறேன்” என்றான் நக்கலாக..
“உங்ககிட்ட எல்லாம் பேச முடியுமா”?.. என்றாள்..
” பேசாத” என்றான் அக்னி..
“பார்த்திபன் அண்ணா இனிமே உங்க கம்பெனிக்கு வேலைக்கு வர மாட்டார்” என்றாள் மாயா..
“அவனை நீயே உன் அண்ணண்னா தத்தெடுத்து வச்சுக்கோ,,நான் ஒரு அழகான பொண்ண பி ஏ வா புதுசா அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிக்கிறேன்” என்றான் அக்னி..
“உங்களுக்கெல்லாம் ஒரு பொண்ணு பி ஏ வா வரமாட்டாள்,, நான் உங்களுக்கு சாபம் கொடுக்கிறேன்” என்றாள் மாயா எரிச்சலாக,,
“உன் சாபம் பலிக்கட்டும் தாயே” என்று போன் வைத்திருந்தான் அக்னி..
பார்த்திபனை அவளிடம் அனுப்புவது தான் அவனுடைய பிளான்,,
அவளே கேட்டதும் சரி என்று சொல்லாமல் ஒப்புக் கொண்டான்….
