Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

35. Dayani Shalokshan - ஹார்ட் பீட் திருடன்

ஹார்ட் பீட் திருடன் – 07

 

ஹார்ட் பீட் திருடன் – 07

ஜோகித்தோ மக்களோடு மக்களாக தனது பயணத்தை தொடங்கினான். மாளிகை வாழ்க்கையை விட இந்த சாதாரண வாழ்க்கை அவனுக்கு பிடித்திருந்தது.

அவனைப் போல் இன்றும்  கிரேஸ் குடும்பத்தினர் மக்களோடு மக்களாக எழிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர்.



Advertisement

ஏதும் முக்கியமான முடிவுகள் எடுப்பதா யின்  மாளிகையில் அனைவரும் ஒன்று கூடுவர்  அன்ரூட் நயோமி கூட ஜோகித்திற்கு பத்து வயது வரை ஹைதராபாத்தில் இருந்தனர்.

ஜோகித் திருடும் பொருட்களை மாளிகையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.இதற்கு உதவுவது எல்சனே.

இப்படியே நாட்களும் அதன் போக்கில் செல்ல அன்ரூட்டிம் இருந்து ஜோகித்திற்கு அழைப்பு வந்தது ” ஜோகித் பாலஸுக்கு வா ” என்று ஜோகித்தும் இரண்டு  வருடங்களின் பின் மாளிகைக்குள் நுழைய அவனை வரவேற்ற நயோமிக்கு மகனைப் பிரிந்த வலி தாயை அனைத்தவன் “எப்படி  மாம் இருக்கீங்க” “நான் நல்லாரிக்கன் ஜோ,நீ தான் ரொம்ப இளச்சுப் போய்ட” “ஹாய்னா” என்றபடி லிடியாவும்  தமயனை  அனைத்து விடுவித்தான்.”எல்சன் எல்ஷா எங்க ” இருக்காங்க ப்ரஸ்சாகிட்டு வா சாப்பிடலாம் ஜோ என்ற தாயின் பேச்சுக்கினங்க லிஃப்ட்டின் உதவியுடன் தனதறைக்கு  சென்றான்.அவன் அறை இருப்பதோ ஆறாவது தளத்தில்  அறையினுள் நுழைவாயில் அவனது முகத்தை ஸ்கேன் செய்தே செல்ல வேண்டும்.அத் தளம் முழுவதும் ஜோதிடத்தின் வசம் தான். அவனும அகுளித்து வெளியே வர அவனுக்காக பிரத்யேகமாக உணவும் தயாரிக்கப்பட்டது.

Advertisement

அனைவரும் உணவுண்ண வந்தனர்.ஜார்ச் மட்டும் வரவில்லை “பாட்டி தாத்தா எங்க ” என அவன் வினவ எலிசபெத்திற்கோ  கவலையில் முகம் கசக்கியது, உணவை உண்ணாது அவரிடம் வந்தவன்  ” என்னாச்சு பாட்டிமா” என  மென்மையாக வினவ  “தாத்தாவுக்கு  ஹார்ட் அட்டாக், ரெஸ்ட் எடுக்கார் என்றார்.

Advertisement

அவனும் தாத்தாவின்  அறைக்கு விரைய “முதுமை யாரைத் தான் விட்டது ” ஜோகித்” என்றபடி அவர் எழ முயற்சிக்க “நீங்க ரெஸ்ட் எடுங்க தாத்தா என அவர் கையைப் பற்றியபடி இருந்தவன் இறுக்காமாக வெளியே வர அவனுக்காக அனைவரும் உணவுண்ணாது காத்திருந்தனர்.

சாப்பாட்டு மேசையில் மீண்டும் வந்தமர்ந்தவன் ” சாப்பிடுங்க என்றான் அழுத்தமாக அவ் உணவு  வேளை அமைதியாகவே சென்றது.

” ரோகித் மார்னிங் எயிட் தென்கிழக்கு  கிரேஸ் மீட்டிங் இருக்கு  என்றார் மெட்ரிக் ” ம்ம் என்னோடு சரி அவனும் உணவுண்டு முடித்தவன் பாட்டியோடு சிறிது நேரம் செலவிட்டவன் தனதறைக்கு வந்தான்.

Advertisement

மஞ்சத்தில் தஞ்சமடைநத்வனுக்கோ இப்போ எதுக்கு கிரேஸ் மீட்டிங் இப்போ நடக்க என்ன அவசரம் என தனக்குள் யோசித்தபடி தூங்கிப் போனான்.

காலையில் நேரத்திற்கே எழுந்தவன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஜீம் அறையினுள் நுழைந்தவர் காலைப் பயிற்சியில் ஈடுபட்டவன் இடையை சிறிய சாட்ஸ் தழுவியிருக்க உடற்பயிற்சியின் விளைவாய் அவன் உடல் முழுக்க வியர்வையால் குளிர்த்திருந்தது.

சுற்றி கண்ணாடிகள் இருக்க முகத்தை சுற்றி சுற்றிப் பார்த்தவன் தனதறைக்கு வந்தவன் குளித்து கறுப்பு நிற கோர்ட்டில் தயாராகி வர உணவும் தயார் நிலையில் இருந்தது.

உணவு விசயத்தில் எலிசபெதும சரி நயோமியும் சரி தாங்களே முன்னின்று சமைப்பர். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு  தனியே சமையல் நடக்கும்.

காலை உணவை முடித்த படி ஜோகித்தும், எல்சனும்  மீட்டிங் நடைபெறும் ஹாலிற்கு வந்தனர்.

அன்ரூட் நடுநாயகமாக இருக்க அவரைச் சுற்றி நீள் வட்ட  அமைப்பில் கிரேஸ்  குடும்ப முக்கிய புள்ளிகள் அங்கு அமர்ந்திருந்தனர். தந்தைக்கு அருகில் ஜோகித் அமர அவனுக்கு அடுத்ததாக  எல்சன் அமர்ந்திருந்தான். பெண்கள் இதில் பங்கு கொள்ளவில்லை. ஜோகித்தும் யோசனையுடன் அமர்ந்திருந்தான்

இருபது பேரும் வந்ததும் அன்ரூட் பேச்சைத் தொடங்கினார்.

“அனைவருக்கும் வணக்கம்  உலக நாடுகள்ல சனத்தொகை துரிதமா அதிகயிச்சு வருது. யுத்தம்,பிணி,பட்டினி,இயற்கை அனர்த்தம் என பல காரணங்களால் சனத்தைகைல மாற்றம் வருது. அந்த வகைல சீனால ஒரு வகை தொற்று  பரப்பப்படுவதா தகவல் வந்திருக்கு என்ற நொடி அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

அன்ருட் மீண்டும் பேச்சைத் தொடர அவ்வறை அமைதியானது.   “தொற்று  அப்படி நடந்தா உலக சனத்தொகை மூன்றில் ஒரு பங்காகும் என்றார்.

அனைவருக்கும் இச் செய்தி அதிர்ச்சியே ஜோகித் தாடையை தடவியபடி அன்ரூட்டை நோக்க  அதில் ஒருவர் “இத உடனே தடுக்கனும்  கோடிக்கணக்கான மக்கள் இருப்பாங்க என்றார்.அதற்கு மற்றொருவரோ மாற்று மருந்து தேவை,  அத உலக நாடுகள் முழுக்க விநியோகிக்கனும் ” என்றார்.

“நீங்க சொல்றதும் சரி தான் மக்கள்ற தொகை குறைந்தால் நல்லம் தான்”  என சிலர் .அத் தொற்று பரவுதை  விரும்பும் கூட்டம் அது மனிதாபிமான என்றால் என்ன என்று கேட்கும் கூட்டம். “ஜோகித்தின் பார்வை அவர்களை அழுத்தமாய் நோக்க

அன்ரூட்டோ “மக்கள் தொகை குறைய தான் வேணும் ஆனா  அதன் பிறகு ஈடு கட்ட ஏலாதளவுக்கு வந்துடும்” “அதோட இது பொருளாதார அடியும் வந்துடும் ” என்றார்.

அதற்கு அங்கிருந்த வயதானர்  அன்ரூட்டை நோக்கி “சீனா ஏன் இத் செய்து “என அவர் கேள்வி எழுப்பினார்.

“ம்ம்  நீங்கள் கேட்கிறதும் பாயின்ட் தான், அவனுங்க இதுக்கான மாற்று மருந்தையும் கண்டுபிடிச்சிடானுக  சோ எல்லாமே வியாபார நோக்கம் தான்” என்றார்.

“இத தடுக்க சீனாவோட பேச்சு வார்த்தை வைக்கலாமே” என மற்றொருவர் கேட்க. “பொருளாதார நஷ்டம் எப்படி வரும்” என மற்றோருவர் கேட்க…..தொற்று பரவினா எல்லாமே முடக்கப்டும்  அதனாலே  பொருளாதார நெருக்கடியை நாடு சந்திக்கும்” என்றான் ஜோகித்

“ஆமா பெரும் இழப்பா இருக்கும் அடுத்த கட்டமா பேச்சு வார்த்தை  நடத்தனும்” என்றார் அன்ரூட்.

“அந்த தொற்று பரவ முதல் அத இல்லாமற் செய்தாலே போதும் அதாவது அத அழிச்சாலே போதும் என்றான் ஜோகித். மகனைப் பார்த்த அன்ரூட் எப்படி இத செய்றது?” எனக் கேட்க “நீங்க  பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ங்க என்றான் ஜோகித். “ஆனா என் அவர் இழுத்தவர் தொண்டையைச் செருமியபடி இந்த பேச்சு வார்த்தை முடிய  நானும் இந்த வருசம் ரிடேர் ஆகலாம்னு இருக்கன் அடுத்த  வாரிசா ஜோகித் கிரேஸ் தலைமை வகிப்பான் என்றார் அன்ரூட்.

சுற்றி இருந்த அனைவரும் கைகளை மேசையில் தட்டி அதை ஏற்றுக் கொண்டனர். மீட்டிங் முடிந்ததும்  அனைவரும் கலைய “தந்தையை அழுத்தமாக பார்த்த  ஜோகித்  எழுந்து வெறியேற, அவனோடு தமையனைப் பின்பற்றி எல்சனும் வெளியேறினான்.

அர்ஜுன் ஜோகித்தின் உற்ற நண்பன். இருவருக்கும் ஒரே வயது தான் தாய் வழி உறவில் வந்தவன்   மாளிகையை விட்டு வெளியே  அனுபவம் பெற சென்ற வேளை கிடைத்த நட்பு அர்ஜுன்.

அர்ஜுனுக்கு அழைப்பெடுக்க அவனும் “மச்சி  என்ன இந்தப்பக்கம் காற்றடிக்குது” என்றான்.அர்ஜுன் டிக்கெட் போடுறேன் சைனாக்கு  வந்து சேரு” ” டேய் என்னடா ஏதோ பார்க்குக்கு வா என்ற போல் சொல்ற”  “சொல்றத செய்டா ”   என்றவனும்  சீனாவிற்குப் புறப்பட்டான்.

“அர்ஜுனோ அம்மா அடுத்த ப்ராஜெக்ட் வந்திருக்கு போயிட்டு வாரன்” என்றவன் தனது பொருட்களுடன் விமான நிலையத்திற்குச் சென்றவன் அனைத்து ஃபார்மலிடிசையும் முடித்தவர் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.சில மணிநேரம் பயணத்தின் பின் சீனாவின் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவன்  விமான நிலையம் இருந்து வெளியேற அவன் முன் வந்து நின்றான் ஜோகித்

“மச்சி” என்றபடி அவனை அனைத்தான் அர்ஜுன்  அவனை தன்னில் இருந்து பிரத்தெடுத்தவன் “இங்க என்ன ப்ராஜெக்டா எனக் கேட்க எதுவும்  பேசாமல் காரில் ஏறினான். ‘இவனுட கதைய வாங்கிட்டாலும்  என நொந்த படியே உயர் ரக ஹோட்டலிற்குச் சென்றனர்.

அறைக்கு வந்ததும் “அர்ஜுன் உட்காரு” என்றான். அவனும் அமர “அர்ஜூன் நாம போகப் போரது சீனாட தடை செய்யப்பட்ட ரீசர்ச்  சென்டருக்கு அங்க முக்கியமான ஒரு பொருளை அழிக்கனும்” அர்ஜுனும் அசட்டையாக “பண்ணிடலாம் பண்ணிலாம்”என்றான்.

“அர்ஜுன்” என ஜோகித் அழுத்தமாய் அழைக்க அவன் குரலில் கையில் இருந்த அலைபேசியை வைத்து விட்டு ஜோதித்தைப் பார்க்க “உயிர் கொல்லி நோய்  ரீசர்ச் சென்டர்ல கண்டுபிடிச்சிருக்கானுங்க அத அழிக்கனும் இல்லனா உலக நாடுகள்ல பரவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிவாங்க” என்றவன் “ஃப்ரெஷ்ஷாகி ரெடியா இரு” போகலாம்” என்றான்.

அர்ஜுனும் இதன் முக்கியம் புரிய இருவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினர். இருவரும்  அந்த ரீசர்ச் சென்டர் உள்ள பகுதிக்கு பதுங்கிப் பதுங்கிச்  சென்றனர். வெள்ளை நிறப் போர்வையால் சுற்றி மூடியபடி  இருந்தது அக் கட்டிடம். “அர்ஜுன்  மாஸ்க், கிளவுஸ் போடு சேஃப்டி பஸ்ட்” என்ற ஜோகித் கண்ணாடியிலான முகக் கவசத்தை கொடுத்தான்.” என்ரன்ஸ்ல சிசிடிவி இருக்கு நீ எல்லாத்தையும் ஐந்து நிமிசம் ஸ்டாப் பண்ணி ஆன் பண்ணு அந்த கேப்ல நான் உள்ள போயிடுவேன்” என்றான்.

அதன் படி அர்அஜுன் சிசிடிவியின் இயக்கத்தை சிறிது நேரம் நிறுத்த  அந்த இடைவெளியில் ஜோகித் அங்கு பணிபுரிபவர்கள் போல்  உள்ளே நுழைந்து கொண்டான். அர்ஜுனோடு பேசும் வகையில் ஜோகித்தின் காதில ப்ளூ டூத் இருந்தது. ஆளில்லாத இடத்தில் இருந்து நடப்பவற்றை  பார்த்தான். அங்கு ஒரு பத்துப் பேர் மட்டில் தான் பம்பரமாய் சுழன்று வேலை செய்தனர்.

வௌவால், நாய், பாம்பு என மிருகங்களில் அவர்கள் தஙக்ளது ஆராய்சியின முடிவுகளை பரிசோதித்தனர். மறைந்து நின்ற ஜோகித் அர்ஜுன் ஸ்டார்ட் என்றான். மீண்டும். சிசிடிவியை நிறுத்த  அதே வேளை ஜோகித் நின்ற இடத்தை நோக்கி ஒருவன் வர அவனின் வாயை மூடி மயக்க ஸ்பிரேயை அடிக்க அவனும் மயங்கிப் போனான்.அவனை இழுத்து அவ் அறையில் உள்ள மேசையின் கீழ் போட்டவன்  அவனது கால், கைகளை கட்டிவிட்டு அவனது ஹோர்ட்டையும், அவனது ஐடியையும் எடுத்துக் கொண்டவன் வெளியேறினான்.

ஜோகித்தும் “சாதாரணமாக ஒவ்வொரு இடமாக பார்வையிட்டபடி வந்தவனுக்கோ ஒரு அறைக் கதவைத் நெருங்க அங்கு பேச்சுக் குரல்கள் கேட்க மெல்ல கதவைத் நீக்கியபடி பார்க்க  அன்ரூட்டும் மற்றோரு சீனருடன் பேசிக் கொண்டிருந்தார். “இந் நேரம்  இந்தியால பரவியிருக்கும்” என்றார்  விகாரமாய் சிரித்தபடி அதே வேளை  அவ்வறையில் இருந்த குளிரூட்டியை திறந்து அதில் இருந்த சிறிய போத்தலைக் காட்டியவர் “இதான்  அதுக்கான வூஸ்டர்” என்றார்.

அதற்கு அன்ரூட்டோ ஒரு மாதம் முடியடும்  அதுக்கு பிறகு  வூஸ்டர் கொடுக்கிறதப் பத்தி யோசிப்போம்”  என்றார் இரக்கமே இல்லாது .

 

அனைத்தையும் கேட்ட ஜோகித்திற்கோ கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்ப அப்படியோரு கோபம் .மக்கள்ற உயிர் இவங்களுக்கு  அவளோ இலகுவாகப் போச்சா என மனம் வெதும்பிப் போனான்.

இருவரும் பேசியபடி அங்கிருந்து வெறியேற  அவர்கள் இருந்த கதவைத் திறந்த ஜோகித் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை  திறந்து வூஸ்டரை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்தவன். அது தொடர்பான ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா என  அவ் அறையில் தேட  அதுவும் ஒரு இழுப்பறையில் இருந்தது. யாரும் அங்கு வரும் சாத்தியம் இருப்பதால்  அவ் ஆவணங்கள் தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

ஏதோ உந்துதலில் அருகில் இருந்த பெட்டியைத் திறக்க அதிலோ பன்னிரண்டு நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட மிகச் சிறிய போத்தல்கள் இருந்தன. அப்போத்தலில் ஒருவித சாம்பல் நிற புகை ஜோகித்தோ அதிர்ச்சியோடு ‘ அப்போ ஒவ்வொரு நாட்டுக்கும் இத பரப்பப் போரானுக இதுக்கு மிஸ்டர் அன்ரூட்டும் உடந்தையா இருக்கார். என் தனக்குள் எண்ணியவன். அப் பெட்டியில எழுதி இருப்பதை பார்க்க தொடங்கினான். அதில் சீன மொழியில் தான் எழுதப்பட்டிருந்தது.

அதில் குறிப்பிட்டதோ ‘வைரஸ்’ என்பதே ஆதலால் இது நீர்,காற்றில் பரவும்  அபாய ம் இருப்பதால்  என்ன செய்யலாம் என யோசிக்கையில் கதவைத் திறந்து கொண்டு இன்னொரு ஆராய்ச்சியாளன் வந்தான். வந்தவன் வைரஸ் போத்தல்கள் இருந்த  பெட்டி திறந்திருபப்தைக் கண்டவன்  “யூ இடியட் இப்படியா திறந்து வைப்ப ” என திட்டியபடி அதை மூட ஜோகித்தும் ஒன்றும் பேசாது இருக்க “கெட் அவுட்” என திட்டியபடி அப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற கதவை நெருக்கும் போது   அவனை போக விடாது கதவை மூட மற்றயவனோ “என்ன” என கேட்க அவனையும் அடித்து மயக்கமடையச் செய்த ஜோகித் அங்கிருந்த குளிர்சாதப் பெட்டியை திறந்து அதன் பின் இணைப்ப்பில் மின் கசிவை    ஏற்படுத்தியவன் அவ்வறையை  விட்டு வெளியேற வெளியே ஒரே பரபரப்பு சிசிடிவி செயழிலந்ததால் பாதுகாவலர்கள் உள்ளே வந்து செக் பண்ணிக் கொண்டு இருக்க அதே வேளை பக்கத்து அறைக்குச் சென்றொருவன்  கை கால் கட்டப்பட்ட நிலையில் இருந்தவனை கண்டவனோ வெளியே வந்து விபரத்தை சொல்ல “அலர்ட் வெளிய இருந்து யாரோ வந்திருக்காங்க” என சீன மொழியில் சொல்ல  ஜோகித்தும்  ஆராய்ச்சியாளர்களோடு லைனில் நின்றான். ஒவ்வொருவரையும துப்பாக்கி முனையில் முகக் கவசத்தை கழற்றி சோதனையிட்டனர்.

ஜோதிடத்தை நெருக்கிய வேளை பக்கத்து அறையில் வெடிப்பும் சத்ததுடன் தீ பரவ அனைவரும்  அங்குமிங்கும் ஓடினர்.  அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஜோகித் அங்கிருந்து வெளியேறினான். அர்ஜுன் இருக்குமிடம் வந்தவன் தான் அணிந்த கோர்ட்டையும் முகக்கவசத்தை கழற்றி வீசியபடி அங்கிருந்து இருவரும் வெளியேறினர்.

இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் இவ் ஆட் கொல்லி நோய் பரவத் தொடங்கி இறப்பு வீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

ஜோகித்தும் அர்ஜுனும்  வூஸ்டரை எடுத்துக் கொண்டு சென்றதென்னவோ ரஷ்யாவிற்கு தான் அங்கு தான் கொண்டு வந்த வூஸ்டர் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை  ரஷ்யாவின் ரிசர்ச் சென்ட்ரலில்  கொடுத்தவன்  அதைக் கண்டுபிடிக்கக் கூறினான்.  அதற்கான மொத்த செலவையும் அவனே ஏற்றுக் கொண்டான்.

இதனிடையே நாடுகளுக்கிடையே முடக்கம் வீடுகளுக்கிடையே மக்கள் தனிமைப்படுத்தப்படல், உயிரிழப்பு பொருளாதார ரீதியாக நாடுகளுக்குள்  பெரும் அடி, நாளுக்கு நாள்  இறப்பு வீதம்  மில்லியன் கணக்கைத் தாண்டியது.அனைத்தையும் பார்த்த ஜோகித் திற்கு   தந்தை மேல் கொலை வெறி ஆத்திரம், அன்ரூட்டை சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!