Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-17

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

மு.வ விளக்க உரை: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

அனைவருக்குமாய் காபி கலந்து கொடுத்தவள் காத்யாயினி அழைத்ததும் அவரருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“வீடு காபி எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு. உன்னை மாதிரியே..”, என்றதில் தேவா புன்னகைக்க காயத்ரி அவளிடம்,



Advertisement

“அண்ணி அண்ணா வரலைனு கொஞ்சமா வருத்தம் தெரியுதே?”

“அது.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணி..”

“அவ உன்னை விட சின்னவ தான். சும்மா பேர் சொல்லியே கூப்பிடு தேவா.”

Advertisement

“..”

Advertisement

“அதிரன் முக்கியமான வேலையா சூரத் போயிருக்கான். நேத்து நைட் தான் கிளம்பினான்.

ஃபேப்ரிக்ஸ் லோடிங்கில் ஏதோ பிரச்சனை அதுக்காக போயிருக்கான்.”

“ஓ!!”

Advertisement

“என்ன அண்ணி உங்ககிட்ட சொல்லலையா? இனியெல்லாம் அப்படி இருக்க விடாதீங்க.

சொல்லாம போனால் சாப்பாடு போட முடியாதுனு சொல்லுங்க..”, என்று கயல் வம்பிழுத்தாள்.

“இதை அப்படியே உங்க அண்ணன்கிட்ட சொல்றேன் அண்ணி.”, என்றதில் அனைவருமாய் சிரித்தனர்.

“சரி கிளம்பலாமா அப்போ தான் சீக்கிரம் எடுத்துட்டு திரும்ப முடியும்.”

“அம்மாக்கு சிறுமுகையில் இருக்குற ஒரு நெசவு குடும்பம் தான் சென்ட்டிமென்டலா பிடித்தம். அதனால அலைச்சல் பார்க்காம கிளம்பிடுவாங்க..”

“ஆமா நமக்கே அப்படி. இப்போ எடுக்க போறது ஆசை மருமகளுக்கு வேற..”

“ஏன் அண்ணி அப்படி சொல்றீங்க. எப்பவும் அம்மாக்களுக்கு பிள்ளைங்க தான முதல்ல..இனி எனக்கும் நீங்க மூணு பேரும் முக்கியம்.”, என்றவளை வாஞ்சையாய் பார்த்திருந்தார் காத்யாயினி.

அனைவருமாய் கிளம்பி சிறுமுகையில் கடையோடு தரி நெசவு நடக்கும் இடத்தை அடைந்து அவர்களை ஒரு வழியாக்கி நால்வருக்குமான புடவைகளை தேர்ந்தெடுத்திருந்தனர்.

தேவாவிற்கான நிச்சயப் புடவை மட்டும் ஆர்டர் கொடுத்து இரு தினங்களுக்குள் வருமாறு ஏற்பாடு செய்திருந்தனர்.

தேவா தன் மகள்களோடு பழகும் விதம் காத்யயினிக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

தேவாவிற்கோ எவ்வித பாகுபாடுமின்றி அத்தனை பெரிய பணக்கார குடும்பத்து மகள்கள் என்ற தோரணை சிறிதும் இன்றி தன்னோடு பழகும் அவர்களை வெகுவாய் பிடித்தது.

பாதி வேலை முடிந்திருந்த நேரம் ஜெயனும் விஜயனும் அங்கு வர கணவர்களை தேவாவிற்கு அறிமுகப் படுத்தினர்.

காத்யாயினி கடை உரிமையாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க ஜெயன் தேவாவிடம்,

“என்னம்மா எங்க மச்சானோட இரண்டு நிமிசம் பேசவே எங்களுக்கு நாக்கு தள்ளும் உன் நிலைமை எப்படி?”

“என் நிலைமையும் கொஞ்சம் அப்படி தான் இருக்குண்ணா..”, என்றவள் சிரித்தாள்.

“ஏங்க இதை அண்ணாகிட்ட சொல்லாம விட மாட்டேன். அண்ணி! நீங்களுமா?”

“உண்மையை யாரு வேணாலும் சொல்லலாம் என்ன தங்கச்சி?”

“கண்டிப்பா ண்ணா.. நீங்க தைரியமா சொல்லுங்க. என்ன வந்தாலும் நான் பார்த்துக்குறேன்.”, என்றதில் அனைவருமாய் சிரித்தனர்.

“ஹப்பாடா உங்க அண்ணனை அடக்கி வைக்க ஆள் வந்தாச்சு. இனி தெரியும் எங்க கஷ்டமெல்லாம்.”

“ஓகோ! அப்படி என்ன கஷ்டப்பட்டீங்க சார்?”
“ஒண்ணா ரெண்டா! அந்த சோகத்தையெல்லாம் இப்போ ஏன் சொல்லிகிட்டு.”

“அண்ணா ஆனாலும் உங்களுக்கு ரெம்ப தைரியம் தான் மாமியாரை வைச்சுகிட்டே இதெல்லாம் பேசுறீங்களே!”, என்ற தேவா கேலியாய் கூற அதற்கும் பதில் கூறி சிரித்த வண்ணம் நேரம் கழிந்தது.

“என்ன தேவா நீ புடவையைப் பார்க்காம இப்படி கதை பேசிட்டு இருக்க?”, என்றவர் அவளுக்காக கூறிய டிசைனை அவளிடத்தில் காட்டினார்.

“ரொம்ப நல்லயிருக்கு ம்மா.. எனக்கு இதெல்லாம் பத்தி ஐடியாவே இல்ல. அதனால தான் அந்தப் பக்கம் வரலை.”

“நல்ல பொண்ணு. மாப்பிள்ளை எல்லாரும் வாங்க சாப்பிட்டே வீட்டுக்கு போகலாம்.”

“சரி அத்தை நீங்க முன்னாடி போங்க நாங்க வரோம்.”

“ம்மா நீங்களும் அண்ணியும் ஃப்ரீயா வாங்க. நாங்க எங்க காரில் வரோம்.”, என்ற படி காத்யாயினியை காரில் ஏற்றி விட்டு அவர்களது காருக்குச் சென்றனர் கயல்விழியும் காயத்ரியும்.

“என்ன தேவா அவன் சொல்லாம கிளம்பி போயிட்டானேனு வருத்தமா?”

“அதெல்லாம் இல்ல மா. அந்தளவு எல்கேஜி மாதிரி தெரியுதா என்னைப் பார்த்தா?”, என்றவள் புன்னகைக்க காத்யாயினி சிரித்தார்.

“இந்த நேரத்தில் இதெல்லாம் இருக்குறது தான கண்ணா..”

“நாங்க அந்தளவெல்லாம் பேசிக்குறது இல்ல மா. முந்தா நாள் டின்னர் போனதே அதுக்காக தான். மத்த படி..”

“அப்பறம் ஏன் முகம் வாட்டமா இருக்கு?”

“இல்ல உங்களை எல்லாம் பார்த்த உடனேயே நான் ஓகே தான். அது ஒரு மாதிரி டென்ஷன். நேத்து ஆபிஸிலிருந்து கிளம்பும் போதே கோபமா தான் கிளம்பினார். அதான் என்னவோனு யோசனை.”

“உன் தம்பியை சொல்லிட்டு நீயே அப்படி தான் இருக்க..”, என்றவர் அவள் தோள் தட்டினார்.

“அது..”

“அதிரனை உனக்கு நெருக்கமான உறவா மனசார ஏத்துகிட்டனு இதிலேயே தெரியுது. எப்பவும் இப்படியே இருங்க.”

“..”

“அதிரனோட உலகமே தனி. எங்களோட எல்லாம் பேசுவான் பார்த்துப்பான் ஆனால் அவனோட கோவம் வருத்தம் எல்லாமே அவனோட அமைதிக்குள்ளேயே தான் இருக்கும்.

ரொம்ப ரொம்ப இன்ட்ரோவெர்ட். தொழிலுக்கு வந்தப்பறம் இன்னும் மோசம். எனக்குத் தெரிஞ்சு அவனோட தனிப்பட்ட உலகத்துக்குள்ளே இருக்கப் போறது அவன் பொண்டாட்டி மட்டும் தான்.”

“!!”

“அதனாலேயே அவனாவே கல்யாண பேச்சை எடுக்காத வரை நான் கட்டாயப் படுத்த நினைக்கல.

வயசு போகுது சொந்த பந்தமெல்லாம் கேட்குறாங்கனு எல்லாம் அவனை தொந்தரவு பண்ணலை.

அப்பறம் உன்னைப் பார்த்தவுடனே எனக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு நீ தான் அதிக்கு பொருத்தமானவனு. மத்த எதுவும் என் கண்ணுக்குத் தெரியலை.”

“..”

“அதி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தேவா. கல்யாணமாகி மூணு வருஷம் கழிச்சு பிறந்தவன். எனக்கும் அவங்க அப்பாக்கும் அவன் தான் எல்லாமே.

கால் தரையில் படாம வளர்த்ததா சொல்லுவாங்களே கயல் பிறக்குற வரை அவன் அப்படி தான் வளர்ந்தான்.”

“…”

“அவன் வளர வளர எனக்கும் உங்க மாமனாருக்கும் ஒரு விஷயம் தான் தோணும்.

ஏன் இவ்வளவு சீக்கிரம் வளர்றான். இப்போ தானே இவனை நர்ஸ் உங்க பையன்னு கொண்டு வந்து என் கையில் கொடுத்தாங்கனு தோணும்.”

“…”

“ஏன் இதெல்லாம் சொல்றேன்னால் இப்படி வளர்த்தவனை அவங்க அப்பாவோட இழப்பு ரொம்பவே பாதிச்சது.

அதுக்கு நிகரான என் அரவணைப்பு கிடைக்க வேண்டிய நேரத்தில் என் நிலைமை இப்படி ஆகிடுச்சு.”

“..”

“கிட்டதட்ட அவனும் ஒரு வகையில் அன்புக்கு ஏங்குறவன் தான்.”, என்றவரின் குரல் லேசாய் பிசிறு தட்டியது.

“ம்மா..”, என்றவள் காத்யாயினியின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“உன்னோட எல்லா எதிர்பார்ப்பும் கண்டிப்பா அவனுக்கும் இருக்கும். என்ன ஆம்பளைனு பெருசா வெளியில் காட்டிக்க மாட்டான்.

அதனால அவனைத் தொந்தரவு பண்ணுறோமோ எதுவும் நினைச்சுப்பானோனு எல்லாம் யோசிக்காத தேவா.”

“..”

“உனக்குப் பேசணும்னு தோணினால் நீயே அவனுக்கு கால் பண்ணு இல்லையா ஒரு மெசெஜ் அனுப்பு. அவன் இதுக்கெல்லாம் பழக நேரமெடுக்கலாம்.

உன்னை அவன் ரொம்பவே விரும்புறான் இல்லைனால் இதுவரை நடந்த எதுவுமே நிச்சயமா சாத்தியமில்லை.

இதை மனசில் வைச்சுக்கோ உன்னோட எல்லா தயக்கமும் உன்னை விட்டு போயிடும். சரியா?”, என்றவர் உண்மையிலேயே அன்னையாகத் தான் தெரிந்தார் தேவாவிற்கு.

அவள் மனதில் இருந்த சிறு சிறு குழப்பங்களுக்கும் அவள் கேட்காமலே தெளிவான பதில்களைக் கொடுத்திருந்தார்.

அதிரன் இத்தனை விளக்கமாய் பேசுவதென்பதெல்லாம் நடவாத காரியம்.
அவினாஷிடம் இதைப் பற்றி பேச விருப்பமில்லை.

அவனுக்கு அந்த வயதும் இல்லை. எப்போதும் போல் தாயிடம் ஓடிச் சென்ற மனது இப்போது காத்யாயினியிடத்தில் அதை கண்டு கொண்டது.

தன் உணர்வுகள் புரிந்து நடந்தவருக்கு தேவையான நம்பிக்கையை கொடுக்க நினைத்தவளாய்,

“கண்டிப்பா உங்க பையனை நான் நல்ல படியா பார்த்துக்குவேன் மா. அதோட உங்களையும்.

எனக்கும் அவிக்கும் இனி அம்மா இல்லைங்கிற கவலையே கிடையாது.”, என்றதில் நிறைவான புன்னகையோடு தேவாவின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்துக் கொண்டார்.

உணவகத்தை அடைந்து மதிய உணவை முடித்து விட்டு தேவாவை அலுவலகத்தில் இறக்கி விட்டு கிளம்பியிருந்தனர் அதிரன் குடும்பத்தினர்.

தனது தளத்திற்கு வந்தவளின் எதிரில் வந்த வசந்த் சிநேகமாய் புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்தவளாய் அவளது அறைக்குள் சென்றாள்.

அன்றைய தினத்தின் வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவள் தம்பியிடம் புடவை எடுக்கச் சென்றதைப் பற்றியெல்லாம் பேசி விட்டு தனதறைக்கு வந்தாள்.

சில நொடி யோசனைக்குப் பிறகு அதிரனின் எண்ணிற்கு அழைத்தாள்.

அழைப்பு நிற்கும் நேரத்தில் ஏற்கப்பட அங்கு யாரிடமோ ஹிந்தியில் கத்திக் கொண்டிருந்தான் அதிரன்.

“சொல்லு ரஞ்சனா..”

“என்ன சொல்லணும்?”, என்றவளின் குரலில் அப்போதிருந்த மனநிலை அப்படியே மட்டுப் பட்டிருந்தது அதிரனுக்கு.

“ஹலோ?”

“ஊருக்கு போனால் சொல்லிட்டு போற பழக்கம் எல்லாம் இல்லையா?”

“அம்மா எப்படியும் சொல்லுவாங்கனு நினைச்சேன்.”

“நான் யாரை கல்யாணம் பண்ணிக்க போறேன்?”, என்றதில் மெலிதாய் சிரித்தவன் நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திய படி கீழுதட்டை பற்களால் லேசாய் கடித்த படி நின்றிருந்தான்.

“என்ன மேடம் ஃபுல் ஃபார்மில் இருக்கீங்க?”

“நீங்களும் வருவீங்கனு நினைச்சேன்.”, என்றவள் மனதை மறைக்காமல் அவனிடத்தில் கூற அதிரனுக்கு அவளது மனம் புரிந்தது.

“கல்யாணத்துக்கு நாம சேர்ந்து போய் எத்தனை புடவை வேணாலும் எடுக்கலாம். ஐ ப்ராமிஸ் யூ.”

“ம்ம் சரி வைச்சுரட்டுமா?”

“போனில் பேச்சு நல்லா தான் வருது. நேரில் தான் கஷ்டம் போல?”, என்றவனின் குரலில் அத்தனை துள்ளல் ஒளிந்திருந்தது.

“ஆமா அந்த ப்ரௌன் கண்ணு என்ன பேச விடுறதே இல்ல..”, என்றதில் அதிரனின் முகத்தில் அழகான வெட்கம் அதை அமைதியாய் அவன் அனுபவித்திருக்க தேவாவோ,

“வெட்கத்தை அங்கே வேஸ்ட் பண்ணாதீங்க. நான் பார்க்கணும் அந்த அழகை.”, என்றவள் பட்டென அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

இந்த நொடி அதிரன் மொத்தமாய் வீழ்ந்திருந்தான் அவனது தேவாவின் இடத்தில்.

தேவாவும் இங்கு தனக்குத் தானே சிரித்த படி இருக்க மீண்டுமாய் அதிரனே அழைத்தான்.

“நான் வைக்கவே சொல்லலை. கட் பண்ணுவியா நீ?”

“…”

“எதுக்கு போன் பண்ணினனு இன்னும் சொல்லல?”

“காரணம் இருந்தா தான் பேசணுமா உங்களோட? அது மட்டும் தானா இல்ல அப்பாயிண்மெண்ட் வேற போடணுமா?”

“இப்படியெல்லாம் பேசுற ரஞ்சனா என்னை இன்னும் அயோக்கியனா மாத்துறாளே!”, என்றதைக் கேட்டவளுக்கோ முகம் செவ்வானமாகி விட்டிருந்தது.

“எப்போ வருவேன்னு தெரியணுமா?”

“ம்ம்..”

“அதை உன் வாயால கேட்க மாட்டியா?”

“உங்களைப் பார்க்கணும் எப்போ வருவீங்க?”

“நாளைக்கு காலையில் உன் முன்னாடி இருப்பேன். ஓகே தான?”

“ம்ம்..”

“நேரமாச்சே இன்னும் ஏன் தூங்காம இருக்க?”, என்று கேட்டவனுக்கு மறுபுறம் பதிலில்லாமல் அமைதியாய் இருக்க கைப்பேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்து விட்டு மீண்டுமாய்,

“ஹலோ?!”, என்றதில் எதிர்புறம் கேட்ட பாடலில் அப்போதே ரஞ்சனாவைப் பார்த்து விடும் வேகம் அவனிடத்தில் எழுந்திருந்தது.

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ”

தம்பியின் கைப்பேசியில் ஒலித்த அந்தப் பாடலை அவனைக் கேட்கச் செய்து விட்டு அப்படியே அழைப்பைத் துண்டித்திருந்தாள் தேவ ரஞ்சனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!