Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 9

ரேவந்தும், ரேஷ்மாவும் அதி விரைவாக சென்றும், மதுராவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதற்குள் தன் ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டாள்.

ரேவந்தும் வேகமாக சென்று காரை எடுத்துக் கொண்டு அவள் ஸ்கூட்டியைப் பின் தொடர்ந்தான்.

ஆனால் அதற்குள் அவள் கொஞ்சம் முன்னே போய் விட, இவர்களை போக விடாமல் சிக்னல் விழுந்து விட்டது.



Advertisement

“உனக்கு அவ வீடு தெரியுமா ரேஷ்மா?”

“ம்ம். தெரியும். அவங்க சிஷ்டருக்கு குழந்தைப் பிறந்து இங்கு இருந்தப்போ ஒரு தரம் நான் போய் இருக்கேன் அவங்க வீட்டுக்கு” என்று சொல்லி அவனுக்கு வழியை சொன்னாள் ரேஷ்மா.

இருவரும் சென்று அவள் ப்ளாட்டை அடைந்து அழைப்பு மணியை அடித்து விட்டு காத்திருந்தார்கள்.

Advertisement

“யாரு?’ என்று கேட்டவாறு கதவைத் திறந்தாள் லக்கி.

Advertisement

ரேஷ்மாவை முதலில் கண்டவள்,

“மேம்.. வாங்க.. வாங்க” என்று உள்ளே அழைத்தவள், அவள் பின்னால் நின்று கொண்டிருந்த ரேவந்த்தையும் கவனித்து விட்டு,

“ஹாய்.. டுயுட்? வாட் எ சர்ப்ரைஸ்? நீங்க எப்படி?” என்று ஆச்சர்யப்பட,

Advertisement

“என்னோட ப்ரதர் தான் இவன்” என்று ரேஷ்மா சொன்னாள்.

“அய்யோ.. சூப்பர்.. டியூட்.. ரொம்ப கிட்ட வந்திட்டீங்க!” என்று குதூகலத்தோடு அவர்களை வரவேற்றாள் லக்கி.

“உன் அக்கா எங்க?” கேட்டாள் ரேஷ்மா பதட்டத்தை மறைத்தவாறு!

“அக்கா.. உள்ளே தான் இருக்கா.. உங்க வீட்டுக்கு தான் அவசரமா கிளம்பி போனா.

ஆனா போற வழில வண்டி ஸ்கிட் ஆகிட்டாம். அதான் திரும்பி வந்துட்டாளாம்.

உள்ள ரூம்ல தான் இருக்கா. கொஞ்ச நேரம் என்னை தனியா விடுன்னு சொல்லிட்டு இப்ப தான் உள்ள போனா.

ஆமா என்ன விசயம்? நீங்க ஏதோ டென்சனா இருக்கிற மாதிரி இருக்கே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன் அக்காவை அர்ஜெண்டா பார்க்கணும். போன்ல சொல்ல முடியாது. அதான் நேர்ல வந்துருக்கோம்.

கொஞ்சம் கூப்பிடேன் அவங்கள!”

“அர்ஜெண்டா பேசணுமா? இருங்க ஒரு நிமிஷம்!” என்று சொல்லியவள், உள்ளே போய் அறைக்கதவை தட்டி,

“அக்கா.. ரேஷ்மா மேம் வந்திருக்காங்க. உன் கிட்ட பேசணுமாம். வெளிய வாக்கா”.

உள்ளே மவுனம்..

லக்கி மீண்டும் அழைக்க,

“லக்கி. அவங்க கிட்ட நான் அப்புறமா போன்ல பேசறேன்னு சொல்லுடா.. சாரி கேட்டேன்னு சொல்லு.

 இப்ப என்னால யாரையும் பார்க்க முடியாது. ப்ளீஸ் அவங்கள கிளம்ப சொல்லு.

 நான் ரெக்வெஸ்ட் பண்ணினேன்னு சொல்லு”. என்று பதில் மட்டும் வந்தது!

ரேஷ்மாவுக்கு வருத்தமாகி விட்டது. ரேவந்த்தை முறைத்தாள்.

“எல்லாம் உன்னால.. அவங்க என் மேல் எவ்வளவு ரெஸ்பெக்ட் வச்சுருந்தாங்க தெரியுமா?

இப்ப நான் அவங்க வீட்டுக்கே வந்து ரூம் வாசலில் நின்னு கூப்பிட்டும் வெளியே வர மாட்டேங்கிறாங்க! போடா”. என்று அவன் முதுகில் மெல்ல அடித்தாள்!

“என்ன ஆச்சு? ஏதோ நடந்துருக்கு? என்னன்னு சொல்லுங்க” லக்கி கேட்க, அவளிடம்

“உன் அக்காவை தப்பா நினைச்சு நான் அவங்கள அறைஞ்சுட்டேன்! அதான் சாரி கேக்க வந்திருக்கோம்” என்றான் ரேவந்த்.

“நீங்க என் அக்காவ அடிச்சீங்களா? என் அக்கா தானே எல்லோரையும் அடிப்பா. சில சமயம் கம்ப்லைன்ட் கூட ஆகிருக்கு!

ஆனா என் அக்காவை நீங்க அடிச்சது நிச்சயம் வரலாறு தான்!

 இந்த இடத்தில் நீங்க இல்லாம வேற ஆளா இருந்திருந்தா, லக்கியோட வேற முகத்தைத் தான் பார்த்துருப்பீங்க!

ஆனா நீங்களும் ஒரு பக்கா ஜெண்டில்மேன்! அப்போ ஏதோ தப்பா தான் நடந்துருக்கு!”

“இப்ப உன் அக்காவை நாங்க பார்த்தே ஆகணும் அதுக்கு எதாச்சும் பண்ணு” என்றான் ரேவந்த்!

“ம்ம்.” என்று  சொல்லி கொஞ்சம் யோசித்தவள்,

“ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே சைலண்டா இருங்க” என்று சொல்லி, ஐந்து நிமிஷம் கழித்து,

“அக்கா .. அவங்கள அனுப்பி வச்சுட்டேன்..  நீ வெளிய வாக்கா. எனக்கு ரொம்ப பசிக்குது.

 தலையெல்லாம் வலிக்குது. வந்து தோசை சுட்டு தாக்கா” என்று கொஞ்சல் குரலில் சொன்னாள் லக்கி.

ரொம்ப பசிக்குது என்று லக்கி சொல்லியவுடன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் மதுரா.

அதற்குள் ரேவந்த் கொஞ்சம் மறைந்து நின்று கொண்டான்.

வெளியே வந்த மதுரா, இன்னமும் ரேஷ்மா போகாமல் இருப்பதைக் கண்டு லக்கியை முறைத்தாள்.

“அவளை முறைக்காதீங்க. நான் தான் அவளை விட்டு உங்கள கூப்பிட சொன்னேன்.

உங்க கிட்ட நான் பேசனும்”. என்றாள் ரேஷ்மா.

“ப்ளீஸ் மேம். இன்னிக்கு ஒரு நாள் என்னை விட்டுடுங்க. நாளைக்கு ஆபீஸில் வச்சுப் பேசிப்போம்”.

“அதெல்லாம் வேணாம். இப்பவே  பேசனும்.

லக்கி நீ கொஞ்சம் வெளியே இரு” என்று ரேஷ்மாவே மதுராவைத் தள்ளிக்  கொண்டு உள்ளே போனாள்!

“மேம். என் அண்ணன் பண்ணினது ரொம்ப தப்பு தான்.

என் மேல உள்ள பாசத்துல சட்டுன்னு உங்கள அடிச்சுட்டான்.

அப்புறம் நான் எடுத்து சொன்னவுடன் புரிஞ்சிகிட்டு ரொம்ப வருத்தப்பட்டான்.

உங்க கிட்ட சாரி கேக்க தான் நினைக்கிறான்!

அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சைல்ட்ஹுட் பிரண்ட்ஸா? எங்க அம்மாச்சி வீட்டுக்கு நைபராமே நீங்க?

எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல!

நான் ரொம்ப அங்க வந்ததும் இல்ல! ரேவந்த் தான் சம்மர் லீவ் ஃபுல்லா அங்க இருப்பான்.

நான் என் அம்மா கூட சென்னையில் தான் இருப்பேன்! அதான் எனக்கு தெரியல!

சரி.. அதெல்லாம் விடுங்க.. நடந்ததுக்கு நானும் சாரி கேட்டுக்கிறேன்.

நீங்க இத மனசுல வச்சுக்காம இன்னியோட இத மறந்துட்டு எப்பவும் போல இருக்கணும்.

ப்ளீஸ் எனக்காக” என்று மதுராவின் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு கேட்டாள் ரேஷ்மா!

“அய்யோ.. நீங்க எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க. அதான் நான் சொன்னேனே! நாளைக்கு நான் எப்பவும் போல ஆபிஸ் வந்துடுவேன்.

ஒரே ஒரு சின்ன ரிக்வெஸ்ட். உங்க அண்ணனை மட்டும் திரும்ப நான் மீட் பண்ற சிச்சுவேசன் வராம பார்த்துக்கங்க அது போதும்!”

“ஏன்.. இன்னும்” என்று ஏதோ கேட்க வந்த ரேஷ்மாவை, “ப்ளீஸ்” என்று மதுரா அழுத்திக் கேட்கவும் “சரி” என்று சொல்லி விட்டாள் ரேஷ்மா.

“அப்ப சரி.. நான் கிளம்புறேன். நாளைக்கு ஆபிசில் மீட் பண்ணுவோம்” என்று ரேஷ்மா கிளம்ப,

“இருங்க.. ஒரு நிமிஷம்.” என்று சொல்லி எழுந்த மதுரா, கிச்சனுக்குள் சென்று மீண்டும் அந்த மருந்தை தயாரித்து மோரில் கலக்கி எடுத்து வந்து  கொடுத்து அவளை குடிக்க வைத்தாள்.

இவர்கள் கிச்சனில் பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஹாலில் உட்கார்ந்திருந்த ரேவந்த் கண்ணில் அந்த ஷோகேஸும் அதில் இருந்த அந்த போட்டோவும் பட்டது!

“வாவ்.. லக்கி.. இது.. இந்த போட்டோ.. இது நான் எடுத்தது! இத இன்னமுமா பத்திரமா வச்சுருக்கீங்க?” என்றான் லக்கியிடம் ஆச்சர்யமாய்!

“என்ன? நீங்க எடுத்த போட்டோவா? எப்படி?”

“உனக்கு தெரியாது லக்கி.. எனக்கு உங்க ஃபேமிலிய சின்ன வயசுல இருந்தே தெரியும்!

என் அம்மாச்சி வீட்டுக்கு பக்கத்து வீடு தான் உங்க வீடு! நான் அப்பல்லாம் சம்மர் ஹாலிடேஸ் புல்லா அங்க தான் இருப்பேன்

. நீ பிறந்தது கூட எனக்கு தெரியும்!

உன்னைக் கூட நான் சின்ன வயசில் தூக்கி வச்சுருக்கேன்! இப்ப தான்  அடையாளம் தெரியல!”

“ஓ.. ரியலி.. என் அக்காவுக்கு இது ரொம்ப ப்ரசியஸ் ஆன போட்டோ! ரொம்ப பத்திரமா வச்சுருக்கா!

இது மட்டுமில்ல.. இன்னும் கொஞ்ச கலெக்சன்ஸ் இருக்கு அவ கிட்ட! ஆனா என்னைக் கூட தொட விட மாட்டா!

வீடு கிளீன் பண்ணும் போது கூட, அவளே தான் அத எடுத்து ஒரு இடத்தில் பத்திரமா வச்சுட்டு தான் மத்த வேலைய பார்ப்பா!

அவளுக்கு யாரோ சின்ன வயசு க்ரஷ் இருந்திருக்காங்க போல!

எனக்கென்னமோ அவ கல்யாணமே வேண்டாம் சொல்றதுக்கும், அந்த பேக்ல இருக்கிற திங்க்ஸ்க்கும் ஏதோ கனெக்சன் இருக்குன்னே தோணுது!”

“அப்ப அதை எடேன் பார்ப்போம்” என்றான் ரேவந்த் ஆவலாக!

“ஓ.. நோ வே. என்ன தான் நீங்க என்னோட பெஸ்ட் பிரன்ட்ன்னாலும், நான் அக்காவுக்கு தான் லாயலா தான் இருப்பேன்!

எடுக்கவே மாட்டேன்”.

“ஹேய்.. அப்படியில்லடா.. எனக்கு என்னமோ நானும் அதில கனெக்டாகி இருக்கேன்னு தோணுது! அதான்!”

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க? என் அக்காவோட சின்ன வயசு கிரஷ் நீங்க தான்னு சொல்ல வர்றீங்களா?”

“ம்ம். அப்படி இருக்கவும் சான்ஸ் இருக்கு! அப்படி இருந்தா நான் ரொம்ப லக்கி!

ஏன்னா.. என்னோட சின்ன வயசு க்ரஷ் அவ . அத க்ரஷ்ன்னு கூட சொல்ல முடியாது! நிச்சயமா லவ் தான்!

அதனால தான் வேற எவளையும் பொண்டாட்டியா என்னால இப்ப கூட நினைச்சுக் கூட பார்க்க முடியல!

ப்ளீஸ் பாரேன்.. எனக்காக” என்று அவன் கெஞ்சவும்,

லக்கி மதுராவின் வார்ட் ரோப் டிராவில் இருந்த அந்த சின்ன பேக், அப்புறம் ஒரு சிறிய பர்ஸ் இவற்றை வெளியே எடுத்தாள்!

ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன!

“என்ன” வென்று ரேவந்த் கேள்வியாக பார்க்க, அவனிடன் காட்டினாள் அதை!

அது ரேவந்த்தின் வோட்டர் ஐடி கார்ட்!

“ஹேய்.. இது..இது என்னோட தொலஞ்சு போன வோட்டர் ஐடி. லாஸ்டா நான் ஊருக்கு வந்தப்போ ஒரு ஜெராக்ஸ் கடையில் மிஸ் பண்ணிட்டேன் இத!

தாத்தா வீட்டு ப்ராபர்ட்டி ரெஜிஸ்ட்ரேசன் பண்ண வந்தப்போ மிஸ் பண்ணியது இது!”

“ஓ.. அப்ப கிளியர். அக்காவோட சின்ன வயசு க்ரஷ் நீங்க தானா? ஆனா அக்கா இப்பவும் உங்கள தான் மனசுல நினைச்சுட்டு இருக்காளோ?”

“இருக்காளோ என்ன இருக்கா! ஆனா நீ வேணா பாரேன். நாம சொன்னா கட்டாயம் ஒத்துக்கவே மாட்டா!”

“அவ ஒத்துக்கிறது இருக்கட்டும்! நீங்க என்ன பண்ண போறீங்க இப்போ?”

“நான் அவளை காதலிக்கணும் காதலிக்க வைக்கணும். அப்புறம் கல்யாணம் கட்டணும்” என்று சிங்காரவேலன் கமல் மாடுலேசனில் கூறினான் ரேவந்த்!

அவனுள் சந்தோஷப் பேரலை!

பொங்கி பொங்கி சந்தோசமாக வந்தது!

அப்படியே லக்கியை பிடித்து சுற்றியபடி சொன்னான், சின்ன பையன் போல!

“ஹலோ.. ஹலோ.. டியூட்.. ரொம்ப இமோசனல் ஆகாதீங்க. நீங்க சொல்றது எல்லாம் ரொம்ப லாங் டைம் ப்ராசஸ்!

இப்பவே உங்களுக்கு தேர்ட்டி ப்ளஸ் இருக்கும்! அங்கிள் வயசு!

நீங்க சொல்ற மாதிரியெல்லாம் எப்போ  நடந்து அக்காவுக்கு கல்யாணம் ஆகி, நான் எப்போ கல்யாணம் பண்றது?

வேற எதாச்சும் ஐடியா பண்ணுங்க!”

“அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது! உனக்கு அவசரம்னா, உனக்கு லைன் கிளியர் ஆகணும்னா, நீ எனக்கு சப்போர்ட் பண்ணு!”

“அடப்பாவி. என்று செல்லமாக திட்டியவள்,

அது சரி.. எனக்கு உங்கள விட்டா பெட்டர் அத்தான் வேற யாரு கிடைப்பா? ஓகே டீல்!” என்று சம்மதம் சொன்னாள் லக்கி!

“அப்போ இந்த பேக் என்கிட்ட இருக்கட்டும்! எவிடென்ஸ்!” என்று அந்த பையை எடுத்துக் கொண்டு விட்டு,

லக்கியிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் போய் சமர்த்துப் பிள்ளையாக உட்கார்ந்து கொண்டு விட்டான் அவள் வருங்கால அத்தான்!

இந்த ரகசிய டீல் பற்றி எதுவும் தெரியாமல் உள்ளே பேசிக் கொண்டிருந்தார்கள் ரேஷ்மாவும் மதுராவும் கிச்சனில்!

ரேஷ்மாவை பேசி அனுப்பி வைத்து விட்டு, லக்கிக்கும் தோசை ஊற்றிக் கொடுத்தவள், மீண்டும் அவள் அறைக்குள் போய் தாழிட்டுக் கொண்டு விட்டாள்!

உள்ளே போய் மெத்தையில் தொம் என்று விழுந்தவளுக்கு அது வரை அவள் அடக்கி வைத்திருந்த அழுகை மிகப் பெரிய கேவலாக வெளிப்பட்டது!

“அப்பா… அப்பா.. நீ ஏன்பா என்னை விட்டுட்டுப் போனே?

என்னால இப்ப இருக்கிற மனநிலையில் அப்படியே செத்துப் போய்டலாம் போல இருக்கு!

ரொம்ப அவமானமா இருக்குப்பா.

நீ மட்டும் உயிரோட நல்லபடியா இருந்திருந்தா நான் லக்கியைப் பத்தி கவலைப் படாமே நானும் அம்மா கிட்ட போயிருப்பேன்!

இப்படி என்னை தனியா விட்டுட்டு பொறுப்பைக் கொடுத்துட்டு போயிட்டியேப்பா..

அவன்.. அந்த ரேவந்த் என்னை அடிச்சது கூட என்னால் சகிக்க முடியுதுப்பா.

ஆனா அவன் என்னைத் தொட்டு தூக்கினப்போ, அவன் தோளோடு என்னை கட்டிக்கிட்டப்போ நான் என்ன பண்ணி இருக்கணும்!

அவனை தட்டி விட்டு விலகி வந்திருக்கணும் தானே!

ஆனா என்னால முடியலப்பா..

ரொம்ப வருஷம் கழிச்சு அவனைப் பார்த்தவுடனே அவனைக் கட்டிக்க  தான்ப்பா தோணுச்சு!

விலக தோணல!

அது தான் எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு! அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கலாம்!

இல்ல இத்தனை வருசத்துல  வேற  யாரையாச்சும் லவ் கூட பண்ணிட்டு இருக்கலாம்!

அப்படி இருக்கும் போது, நான் இப்படி நடந்துகிட்டத என்னால தாங்கிக்கவே முடியலப்பா..

இருந்திருந்தும் ரேஷ்மா மேம்க்கு அவன் தான் அண்ணனா இருக்கணுமா!

இப்ப என்னால அவங்களையும் விட்டு வர முடியாது!

அம்மா அப்பா இல்லாத அவங்களும் எனக்கு லக்கி மாதிரி ஒரு தங்கச்சி போல தான்!

அவங்களையும் ஒருத்தன் கையில் பிடிச்சு கல்யாணம் பண்ணி கொடுக்கிற வரைக்குமாவது நான் அவங்க கூட இருந்தே ஆகணும்!

ஆனா எப்படி!

ரேவந்த் அவங்க அண்ணனா இருக்கும் போது?

ஏம்ப்பா எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது! என்று அழுதுக் கொண்டே இருந்தாள் மதுரா.

அழுது அழுது கண்ணீர் வற்றிய பின் அப்படியே அவள் அப்பா அம்மாவின் போட்டோவை பார்த்தவாறே அமைதியாக படுத்திருந்தாள் மதுரா!

அவள் மனது ஸ்ரீரங்கத்தின் அருகே இருந்த அவள் கிராமத்துக்கும் அங்கு இருந்த அவள் அம்மா அப்பா, இனியா, அப்பாயி மதுராம்பாள், சித்தப்பாக்கள் என்று அவர்களின்  கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கும், அந்த காலத்துக்கே இட்டு சென்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!