Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் 5

அத்தியாயம் – 5

 

அறை கதவை தட்டினாள் சிந்து.



Advertisement

ஆனால் அது திறக்கப்படவில்லை.

அக்கா அவங்க டோர் ஓபன் பண்ண மாட்டேங்கறாங்க என்றாள் சிந்து.

பாப்பா…. வெளிப்பக்கம் தாள் போட்டு இருக்கு. நீ தான் திறக்கணும் என்று கீழே இருந்து சத்தம் கொடுத்தார் பணி பெண் கீதா .

Advertisement

வெளிப்பக்கம் ஏன் இவங்க தாள் போட்டு வச்சு இருக்காங்க என்று யோசித்தவள்

Advertisement

ஹ்ம்ம்….நமக்கு என்ன வந்தது. நம்ம உண்டு நம்ம ஜோலி உண்டுன்னு போயிரணும் என்று கதவை திறந்து தயக்காதோடு உள்ளே நுழைந்தாள்.

அம்மா….!!யாராச்சும் உள்ள இருக்கீங்களா?அம்மா…என்று அழைத்தபடி அறையில் அங்கும் இங்குமாக தேடினாள்.

தன் ஆள்கட்டி விரலின் நகத்தினை கடித்து துப்பியவள்

Advertisement

என்ன?!!! இங்க யாரும் இல்ல.

இப்ச்…இப்போ நான் யாரை தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று திரும்ப அங்கு ஒரு மூலையில் பயந்தப்படி அமர்ந்து இருந்தார் சுசிலா.

அம்மா என்ன ஆச்சு என்று பதறியப்படி அவர் அருகே சென்றாள் சிந்து.

அவளை தள்ளி விட்டு இங்க இருந்து போ என்று கத்தினார்.

கையில் இருந்த சாப்பாட்டு தட்டை பிடுங்கி எறிந்தார்.

அம்மா என்ன பண்றிங்க? “

இங்க இருந்து போ…என்று ஆக்ரோசமாக கத்தினார் சுசிலா.

கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து அவளை அடிக்க துவங்கினார்.

அவரை தடுக்க நினைத்து தோற்றாள்.

இறுதியில் வேறு வழி இன்றி அறையை விட்டு வெளியேறினாள் சிந்து.

என்ன இவங்க இந்த அளவிற்கு மோசமா நடந்துக்கறாங்க.

அப்போ இவங்களுக்கு மன நிலை சரியில்லை போல் இருக்கிறது.

இதை தான் இந்த ரஞ்சி அப்படி சொன்னாளா?

பாவி, வரட்டும் பேசுகிறேன்.

வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று திரும்பி செல்ல

அறையினுள் ஒரு பாடல் ஒலித்தது.

அவள் கால்கள் நடப்பத்தை நிறுத்தியது.

“அழகு நிலவே”….

“ஆயிரம் சூரியனே”…

“சில்லென்ற பூங்காற்றே”…

“என் இரவின் ஒளி நீயே”,

“வரமாய் வந்தாயே ”

“பகலின் நிழலும் நீ”

“சோலை நிறைந்த மலர் நீ”

“மலர் தரும் தேன் அமுதும் நீ ”

“இசையும் நீ, அதன் சந்தமும் நீ ”

“ஆதி நீ அந்தம் நீ”

“கால் நனைக்கு அலை நீ”,

“அமைதியாய் உறங்கும் ஆழியும் நீ”.

“எண்ணம் நீ, வண்ணம் நீ என் உயிரில் கடைந்து எடுத்த உயிர் ஓவியம் நீ”…

“நீ அழ தாங்கிடுமோ இந்த தாய்மை உள்ளம்”.

“ஒரு நொடி விலகினாள் தீ பற்றும் என் உலகு”

“நிரந்தர தீயில் கருகியதோ பூஞ்சிறகு”….என்று அந்த பாடல் ஒரு அமுத குரலில் ஒலித்து அடங்கியது.

மீண்டும் சிந்துவின் கால்கள் அறையை நோக்கி நடந்தது.

அறை கதவை திறந்தாள்.

ஜன்னலை வெறிக்க பார்த்து கொண்டு இருந்தார் சுசிலா.

அங்கு ஒரு மஞ்சள் வண்ண பட்டாம்பூச்சி சிறகடித்து கொண்டு இருந்தது.

அம்மா….!! என்று மீண்டும் அழைத்தாள்.

அவர் கண்கள் அவ்விடம் விட்டு மீளவில்லை.

சுசிலாவின் தலை விரி கோலம் கண்டு,

“என்னமா நீங்க, இப்படி இருட்டில் இருந்தால் எப்படி?

வாங்க வெளிச்சதில் போய் அமரலாம்” என்று அவரை தொட

கையை உதறிவிட்டார் சுசிலா.

அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“அந்த பட்டாம்பூச்சி வேணுமா” என்றாள்.

மெல்ல சுசிலாவின் இதழ் விரிந்தது.

“ஹ்ம்ம்…. சரி அப்போ நான் சொல்றதை கேட்பிங்களா சொல்லுங்க?

நான் அதை உங்களுக்கு பிடிச்சு தரேன்” என்றாள் கொஞ்சலாக.

முகத்தை வாட்டமாக வைத்து கொண்டு குழந்தைப்போல் ஹ்ம்ம்…என்றார் சுசிலா.

ஹ்ம்ம்…குட். இதோ இப்போவே போய் பிடிச்சிட்டு வறேன் என்று வெளியே சென்றாள்.

ஆவலோடு சிந்துவிற்காக இல்லை இல்லை பட்டாம்பூச்சிக்காக காத்து கொண்டு இருந்தார் சுசிலா.

சில வினாடிகளில் திரும்பி வந்தாள் கையில் சாப்பாட்டு தட்டுடன்.

அதை கண்டதும் முகம் கருத்தது அவருக்கு.

கோபம் கொண்ட சுசிலா மீண்டும் அவள் கையில் இருந்த தட்டை பிடுங்கி வீச போகும் பொழுது

பட்டாம்பூச்சிக்கு வலிக்காமல் அதை பிடித்து இருக்கும் தன் மறுக்கையை காட்டினாள் சிந்து.

கண்கள் விரிய…முகத்தில் சந்தோசப் புன்னகையோடு அதை பிடுங்க போனார் சுசிலா.

கையை உயர்த்தி

“ஹான்…. பாத்திங்களா ஏமாத்திறீங்க?”

“நான் சொல்றதை கேட்டா தான் இந்த பட்டாம்பூச்சி உங்களுக்கு.

இல்லைனா நான் இப்போவே அதை வெளியே பறக்க விட்டுட்டு வந்தறேன் என்று நகர,

அவள் கையை பிடித்து தடுத்தார் சுசிலா.

“என்ன மா…. அப்போ நான் சொல்றதை கேக்க தயாரா இருக்கீங்க போல இருக்கு” என்றாள் சிந்து .

ஹ்ம்ம்…என்று ஒரு குழந்தையை போலே அப்பாவியாய் தலையை அசைத்தார் சுசிலா.

ஹ்ம்ம்.. தட்ஸ் குட் என்றவள்.

“நான் இப்போ சாப்பாடு ஊட்டி விடுவேன். நீங்க சமத்தா சாப்பிடணும்” என்றாள்.

ஹுஹும்…என்றார்.

“சரி அப்போ இந்த பட்டாம்பூச்சியை பறக்க விட்டரேன்” என்று பறக்க விட பயந்தார் சுசிலா அம்மா.

“பயம் இருக்குல்ல,அப்போ சாப்பிடுங்க” என்று அவர் கையில் இருந்த சாப்பாட்டு தட்டை வாங்கி சுசிலாவிற்கு அன்போடு ஊட்டினாள் சிந்து.

“என்ன இவ்ளோ நேரம் ஆகுது.

ஒரு சத்தத்தையும் காணோம்.

ஒரு வேலை அந்த பொண்ண சுசிலா அம்மா போட்டு தள்ளிட்டாங்களோ எதுக்கும் போய் பார்க்கலாம்” என்று அறைக்குள்ளே எட்டி பார்த்தார் அவர்.

“கண்கள் விரிய, பரவாயில்லையே. ரொம்ப சாமார்த்தியமான பொண்ணு தான்.

சுசிலா அம்மாவையே சாப்பிட வச்சிருச்சு.

அப்போ இந்த பொண்ணு தான் இந்த வீட்டுக்கு லாயக்கு” என்றார் அந்த பணி பெண்.

சிந்து பேசி பேசியே அந்த உணவு முழுவதையும் உண்ண செய்தாள்.

“இந்தாங்க இந்த தண்ணியையும் குடிங்க என்று கொடுக்க…

அதையும் வேகமாக வாங்கி அருந்தி விட்டு பட்டாம்பூச்சி என்றார்.

ஹ்ம்…இந்தாங்க என்று அவர் கையில் அந்த அழகான பட்டாம்பூச்சியை கொடுத்து விட்டு வெளியே சென்றாள் சிந்து.

“அம்மாடி உனக்கு வேலை கான்ஃபோர்ம்”.

“இதுவரைக்கும் யார் சொல்லியும் சுசிலாமா கேட்டது இல்ல.

ஏன் அவர் பையன் விக்ரம் சார் சொன்னா கூட கோபப்படுவாங்களே தவிர சொல்றதை கேக்க மாட்டாங்க,

ஆனா உன் பேச்சை கேட்டு இருக்காங்க.

இந்தா…. ம்மா. இது தான் சுசிலாமாவோட டெய்லி ஸ்டேட்யுல்.

இது மாதிரி தான் நீ அவங்களுக்கு உணவு, மருந்து எல்லாம் கொடுக்கணும்” என்று ஒரு கோப்பை கையில் கொடுத்தார்.

சரிங்க அக்கா. நான் பார்த்துக்கறேன் என்று கையில் அதை வாங்கி கொண்டாள்.

“சார்…அம்மாவை பார்த்துக்க ஒரு லேடி அப்பொய்ன்மெண்ட் பண்ணி இருந்தோம்ல அவங்க இன்னைக்கு ஜோய்ன்ட் பண்ணிட்டாங்க.

இதோ அவங்க டீடெயில்ஸ்” என்று நீட்ட

“இப்ச்…. யாரை அப்பொய்ன்மெண்ட் பண்ணாலும் அம்மாவை சமாளிக்க முடியாது”.

“அந்த லேடியை நாளையில் இருந்து வர வேண்டான்னு சொல்லிரு.

நான் அவர்களை மன நல காப்பாகத்தில் சேர்க்க போகிறேன்”.

“எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்றான் வருத்ததோடு.

சார்…. என்று அதிர்ந்தான் ஆதவ்.

இப்ச்…சொன்னதை செய் ஆதவ்.

“நாளைக்கே நாம அம்மாவை கொண்டு போய் சேர்க்குறோம்’ என்றான் விக்ரம்.

எஸ் சார் என்று விட்டு சென்றான் ஆதவ்.

“மூச்சை இழுத்து விட்டு சிந்தனையாய் கண்களை மூடினான்”.

“அம்மா…. வாங்க உங்களுக்கு நல்ல வடிவா முடி முடைந்து விடுகிறேன்” என்றாள் சிந்து.

என்னவோ தெரியவில்லை, சுசிலாவிற்கு சிந்துவின் கனிவான, அன்பான பேச்சு மிகவும் பிடித்து போனது.

சுசிலாவிற்கு நல்ல நீண்ட அடர்த்தியான கூந்தல்.

நன்கு எண்ணெய் வைத்து முடைந்து பின்னல் இட்டாள் சிந்து .

சாமி படத்தின் முன் இருந்த ஒரு மஞ்சள் வண்ண சாமந்தி பூவை அவர் தலையில் சூடி விட்டாள்.

“அம்மா…. நீங்க இப்போ எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா?

நீங்க ரொம்ப அழகு”…என்று கொஞ்சினாள் சிந்து.

பின் நினைவு வந்தவளாய்…

“அம்மா அந்த பட்டாம்பூச்சி எங்கே?!”

“பறக்க விட்டுட்டீங்க தானே” என்றாள் சிந்து.

இல்ல…. என்றார்.

“இல்லையா? பின்ன”என்று வினாவினாள்.

“வா காட்டுறேன்” என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றார் சுசிலா.

ஒன்றும் புரியாமல் எங்கம்மா என்றாள்.

“அவர் எதுவும் மிண்டாது அவளை அழைத்து சென்று

இதோ இங்க இருக்கு பாரு” என்று காண்பித்தார்.

அம்மா…என்ன மா?

“ஏன் இப்படி பண்ணீங்க சொல்லுங்க” என்றாள் சிந்து.

“என்ன நீ இது கூட தெரியாதா?”

இது பறந்து போய்டும்.

என்ன விட்டு போக கூடாதுல அதான் அடிச்சு என் கூடவே இருன்னு சொன்னேன்.

பார்த்தியா அதால பறக்க முடியல.

“இது இனி என்ன விட்டு எங்கையும் போகாது, என் பையன் வந்ததும் அவன் கிட்ட காட்டுவேன் “என்றார்.

அப்போது தான் புரிந்தது சிந்துவிற்கு சுசிலாவின் மனம் என்ன என்பது.

சுசிலாவிற்கு இழப்புகளை தாங்கும் சக்தி இல்லை.

பாவம் பட்டாம்பூச்சி தன்னால் உயிர் இழந்து விட்டதே என்று வருத்தம் கொண்டாள் சிந்து.

நேரம் விரைந்து ஓடியது.

“கீதா அக்கா….மணி ஏழு ஆயிடுச்சு.

நான் கிளம்பறேன், நாளைக்கு மீட் பண்ணலாம் “என்றாள்.

“சரி மா பார்த்து போயிட்டு வா” என்றார் கீதா.

சிந்து வாசலை விட்டு கடந்து செல்ல விக்ரமின் கார் கேட்டின் உள்ளே நுழைந்தது.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

உள்ளே நுழைந்ததும் அம்மா இன்னைக்காவது சாப்பிட்டாங்களா இல்லையா?என்று கத்தினான் விக்ரம்.

“தம்பி அம்மா, சாப்பிட்டு தூங்குறாங்க தம்பி” என்றார் கீதா.

என்ன?” சாப்டாங்களா?

ஆமாம் தம்பி! என்றார் கீதா.

“சாப்பிட அடம் பிடித்து கொண்டு இருந்தாங்க அப்பறம் எப்படி?!!”

எல்லாம் அந்த பொண்ணால தான் என்றார் அவர்.

பொண்ணா எந்த பொண்ணு?!என்று சந்தேகத்தோடு கேட்க

அதான் தம்பி புதுசா அம்மாவை பார்க்க அப்பொய்ன்மெண்ட் பண்ணி இருக்கீங்கள்ல அந்த பொண்ணு.

“ரொம்ப தங்கமான பொண்ணு தம்பி.

நல்லா புத்திசாலியாவும் இருக்கா.

“அம்மாவை எப்படியோ பேசி சாப்பிட வச்சிட்டாளே கெட்டிக்காரி”என்று புழ்ந்தார் கீதா.

“ஹ்ம்ம்…பரவாயில்லையே, ஆதவ் நல்லா ஸ்டாப்ஃபா பார்த்து தான் அப்பொய்ன்மெண்ட் பண்ணி இருக்கான்” என்று மனதிற்குள் பெருமை பட்டு கொண்டான்.

 

சரி டேப்லெட் எல்லா…ம்.

அந்த பொண்ணு தான் தம்பி கொடுத்துச்சு.

சரி நீங்க போங்க என்று தன் அன்னையின் அறைக்குள் சென்றான் விக்ரம்.அங்கே நிம்மதியோடு துங்கி கொண்டு இருந்தார் சுசிலா.

அவர் தோற்றத்தில் மிகுந்த மாற்றங்கள்.

தலைவாரி பூச்சூடி நெற்றியில் செந்தூரம் இட்டு பார்க்கவே அத்தனை அழகாய் தோன்றினார் சுசிலா.

அம்மா என்று கண்கள் கலங்கி அவரை ஆழ்ந்து பார்த்து ரசித்தான் விக்ரம்.

எத்தனை வருஷம் ஆச்சுமா உன்ன இப்படி பார்த்து…

யார் அந்த பொண்ணு, பல வருசத்துக்கு முன்னாடி இழந்த என் அம்மாவை எனக்கு திருப்பி கொடுத்து இருக்கா.

கண்டிப்பா அந்த பொண்ண பார்த்து நான் தேங்க்ஸ் சொல்லனும் என்றபடி

சுசிலாவின் கால் அடியில் படுத்து அப்படியே உறங்கியும் போனான் விக்ரம்.

தென்றல் மீண்டும் வீசும்…..*

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!