Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 22

கருப்பன் ஆட்டம் 22

இரவு வெகு நேரமாக கருப்பனுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தாலும் எப்பொழுதும் போல் அதிகாலையிலேயே மிகுந்த உற்சாகத்தோடும் புத்துணர்வோடும் மனதும் உடலும் பரவிய புது வித மகிழ்வோடும் துயில் கலைந்து எழுந்தாள் மலர்விழி.

 தனது காலை வேலைகளை முடித்து தனது பேக்கில் இருந்து புதிதாக ஒரு சேலையை எடுத்து கட்டிக் கொண்டு அதில் ஒன்றை மறைத்து எடுத்து கொண்டு அமுதாவிடம் வந்தவள்,



Advertisement

“அம்மா…! கருப்பன் இருக்காருல்ல அவரோட தோட்டத்துக்கு நேத்து என்னுடைய ஸ்டூடண்ட் கூட்டிட்டு ப்ராக்டிக்கலுக்காக விசிட்டிங் வந்திருந்தோம்.

Advertisement

 அவர்கிட்ட ஸ்டூடண்ட்ஸ் பார்ட்டிசிபேசன் பத்தின சில பேப்பர்ஸ் கொடுத்துருந்தோம், அதை அவர் ஃபில் பண்ணி சைன் பண்ணி குடுக்கணும்.

Advertisement

நேத்து லேட் ஆனதால இன்னைக்கு வந்து வாங்கிக்க சொன்னாரு, நான் போய் வாங்கிட்டு வந்துட்றேன்மா..” என்று ஒரு பொய் காரணத்தை கூறிவிட்டு அங்கிருந்து நழுவி கருப்பனின் அந்த தோட்டத்து வீட்டிற்கு வந்திருந்தாள்.

Advertisement

 தர்மனை லோடு வேலைக்கு அழைத்து இருக்க அவன் அதிகாலைக்கு முன்பே எழுந்து அங்கு சென்று விட்டிருந்தான்.

 வீட்டினுள் கருப்பன் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான். வழக்கம் போல் அந்த இயற்கை அழகை ரசித்து அந்த அதிகாலை நேர இயற்கை மனம் கமழும் தென்றல் காற்றை கண்கள் மூடி உணர்ந்து உள்ளிழுத்து கொண்டவள்

முன்பு ஒரு முறை மயிலுடன் வந்த பொழுது இருந்த தயக்கம் சிறிதும் இப்பொழுது இல்லாமல் தைரியமாகவே அந்த வீட்டினுள் நுழைந்து இருந்தாள்.

கருப்பன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, ஆறடி ஆண்மகனின் அகன்ற முகம் உறக்கத்திலும் புருவம் இடுங்கி இருக்க,

“தூக்கத்துல கூட என்னத்த யோசிப்பரோ…!” என்று எண்ணியவாரு அவன் உறங்கும் அழகையே சில கணம் ரசித்தவள் பின் அந்த வீடு முழுவதும் தனது விழிகளை சுழல விட்டு பார்க்க, மிகச் சிறிய வீடு ஒரு அறையும் அதில் தடுத்த சின்ன அடுப்படியும் மட்டுமே இருந்தது.

அதனை ஆசையாக தனது விழிகளை சுழல விட்டு பார்த்து கொண்டே நின்றிருக்க, திடீரென்று தன் பின்னால் நிழல் ஆடுவதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே கருப்பன் நின்றிருந்தான்.

மலர்விழி வீட்டின் உள்ளே வந்ததும் அவளின் வாசம் அவனின் நாசி வழி சென்று நுரையீரலை தீண்டியிருந்ததோ என்னவோ உறக்கம் களைந்து எழுந்தவன் தன் வீட்டில் தன்னவள் இருப்பதை கவனித்து அமைதியாக எழுந்து வந்து அவளின் பின்னால் நின்று இருந்தான்.

பட்டென திரும்பியவள் ஆணவனின் கருமை நிற முடிகள் நிறைந்த வெற்று மார்பில் முட்டி நின்றவளுக்கு நொடி பொழுதில் ஆணவனின் ஆண்மை வாசம் பெண்ணவளின் உள்ளம் நிறைந்து போக, ஆணவனின் இத்தனை நெருக்கத்தில் பேச வாய் எழாமல் “நீ. நீங்க.. எந்திரிச்சுடீங்களா…?” என்று கேட்டாள்.

“ஆமாண்டி திருட்டு பூனை..! நீ என்ன காலங்காத்தால இங்க வந்திருக்க…?” என்று கேட்டான்.

அதற்கு அவ்ளோ “சும்மா வரணும்னு தோணுச்சு…! என்றவள் சில கணம் அமைதிக்கு பிறகு அமைதியான குரலில் நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கவா…?”

“ம்ம்ம் கேளு..!”

“இல்ல இதுக்கு முன்னாடி ஒரு தடவை இந்த வீட்டுக்கு நானும் மயிலும் வந்து இருந்தோம்ல, அப்ப கூட நீங்க ஒன்னு சொன்னீங்களே! உங்களுக்கு அது ஞாபகம் இருக்கா…?” என்று கேட்டாள்.

“நான் சொன்னேன்னா…? என்ன சொன்னே…?” என்று சிலகனம் யோசித்தவனுக்கு தான் கூறியது நினைவில் வந்தாலும் அதனை அவளிடம் காட்டிக் கொள்ளாமல்

“எனக்கு ஒன்னும் ஞாபகம் வரலையே…! நீயே சொல்லு…!” என்றான்.

“அட என்னங்க நீங்க இதை கூடவா மறப்பீங்க…! அடுத்த முறை இந்த வீட்டப்பக்கம் நான் வர்ற வேலை வச்சுக்கிட்டா இந்த வீட்ல சாணி மொழுக வச்சு காலம் முழுக்க உங்களுக்கு தொண்டூழியம் பண்ண வச்சுடுவேன்னு சொன்னீங்களே…!” என்று கேட்டால் மலர்.

 “ஆமா சொன்னேன்… அதுக்கு என்ன இப்போ…?” என்றான் கருப்பன்.

“அதுதான்.ஆனா இப்போ மட்டும் இல்ல ஜென்மம் ஜென்மமா உங்களுக்கு தொண்டூழியம் பண்றதுக்கு நான் தயாரா இருக்கேன்னு சொல்லணும்னு நெனச்சேன்…” என்று கன்னம் சிவக்க கூறிய மலர்விழி அவனைப் பார்த்து வெட்க சிரிப்பு சிரித்தவள் மீண்டும் அவன் முகம் பார்க்க தாளாதவலாக அங்கிருந்து நகர்ந்து வேறு புறம் திரும்பி நிற்க,

 “ஏய் இந்தாடி, திருட்டு பூனை…! என்று கூறி அவள் பின்னால் வந்தவன்,

தன்னை பார்க்க நாணி சிவந்து திரும்பி நின்றிருந்தவளை தன் புறம் திருப்பி நிறுத்தி அவளின் சிவந்த கன்னங்களை தனது வலிய கரத்தால் தாங்கி அவளின் முகம் பார்த்த கருப்பன் “என்னடி சொன்ன…!” என்றான்.

“இந்த ஜென்மம் மட்டும் இல்லாம இன்னும் இருக்குற ஏலேழு ஜென்மம் முழுசும் இந்த காட்டனுக்கு தொண்டூழியம் பண்றதுக்கு நான் காத்துருக்கேன்னு சொன்னேன்..!”என்றால் மலர்.

 அவள் கூறியதை கேட்ட கருப்பன் எந்த பதிலும் கூறாமல் அவளின் அந்த சிவந்த முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வை வீச்சை பார்க்க தாளாமல் விழிகளை தாழ்த்தியவள் “என்ன அப்படி பாக்குறீங்க…!” என்று உள்ளிழுத்த குரலில் கேட்டாள்.

 அதற்கு கருப்பனோ மெலிதாக புன்னகைத்து “ஒன்னும் இல்ல” என்று கூறி அவளின் கன்னத்தில் இருந்து கையை எடுத்துக்கொண்டவன் அங்கிருந்து நகர,

அவனின் அகன்ற முதுகு புறத்தை பார்த்தவாறே “நீங்க என்ன படிச்சு இருக்கீங்க..?” என்று கேட்டால் மலர்.

 “ஏன் கேக்குற….?”

“இல்ல உங்கள ஆரம்பத்துல பார்த்ததிலிருந்து நேத்து பாக்குற வரைக்குமே, நீங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கி இருக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்…!

ஆனா நேத்து அவ்வளவு சூப்பரா ஸ்டூடண்ட்ஸ்க்கு எக்ஸ்ப்ளைன் பண்ண விதத்தை வச்சு பார்க்கும் போது நீங்க கண்டிப்பா இது விஷயமா படிச்சு இருப்பீங்கன்னு தோணுச்சு, அதான் என்ன படிச்சு இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்”.

 அவள் சொன்னதை கேட்ட உதடு வளைத்து சிரித்தவன் “ஏன் படிக்கலைன்னு சொன்னா என்ன கட்டிக்க மாட்டியா…?”

“அய்யயோ அப்படியெல்லாம் இல்ல சும்மா தெரிஞ்சுக்க ….!” என்றவளின் வார்த்தைகள் தயங்கி தயங்கி வெளி வர,

“பி எஸ் சி அக்ரிகல்ச்சர்!!“ என்றான் கருப்பன்.

 “என்னது பிஎஸ்சி அக்ரிகல்ச்சரா…!” என்று அதிர்ச்சியில் முகம் விரிய கேட்டால் மலர்.

“ஏண்டி இவ்ளோ ஷாக் ஆகுற…? ஏன் நான் அவ்வளவு எல்லாம் படிக்க கூடாதா…?” என்று கருப்பன் கேட்க,

“அச்சோ அப்பிடி எல்லாம் இல்ல உங்கள பார்த்தா அப்படி தெரியல, அதுதான் அந்த ஷாக் வேற ஒன்னும் இல்ல..!” என்றவள் அழகாக கன்னம் சுருக்கி சிரிக்க,

 அவளின் கன்ன சிரிப்பில் மயங்கியவன் “மலரு நான் ஒன்னு கேக்கவா…?”

“ ம்ம்ம் கேளுங்க..”

“ நீ மயிலு வீட்ல இருக்கல்ல, அங்க இருக்க உனக்கு புடிச்சிருக்கா..? அங்க இருக்குறது உனக்கு கம்ஃபர்ட்டபிலா இருக்கா…? அந்த அய்யனாரால உனக்கு எதுவும் தொல்லை இல்லையே…?” என்று கேட்டான் கருப்பன்.

“அய்யனார் மூலமா எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இருந்தது இல்ல, அவர் மயில எப்படி பாக்குறாரோ, அதே மாதிரி தான் என்னையும் பாக்குறாரு,

அதனால அவர்கிட்ட ஒரு பாதுகாப்பான உணர்வு தான் இருக்குதே தவிர நீங்க சொல்ற மாதிரி ஒரு அன்கம்ஃபர்ட்டபில் ஃபீல் இருந்தது இல்ல.

அப்பறம் அங்க இருக்க பிடிக்குதா பிடிக்கலயான்னா கேட்டா எனக்கு வேற ஆப்ஷன் இல்லயே! ஏன்னா எப்பவோ தற்கொலைன்ற தப்பான முடிவ எடுத்து போய் சேந்துருக்க வேண்டிய என்னை தடுத்து,

ஊரு விட்டு ஒரு கூட்டிட்டு வந்து இத்தனை நாளா அவளோட வீட்ல என்ன தங்க வச்சுருக்கா மயிலு.

என்ன ஒரு சின்ன கடுமையான சொல் கூட சொல்லாம அவ்வளவு தங்கமா வச்சு பாத்துக்குறாங்க அமுதாம்மா, நான் இன்னிக்கு இப்படி உங்க முன்னாடி நின்னு பேசுறேன்னா அதுக்கு முழு காரணம் மயில் மட்டும் தான். எனக்கு அங்க விட்டா பாதுகாப்பா இருக்க வேற வீடும் இல்லையே….! என்றவள்

ஆமா…! இத்தனை நாள் விட்டுட்டு இப்ப ஏன் இந்த கேள்விய கேக்குறீங்க…?” என்று கேட்டாள்.

 “இத்தனை நாளா நீ மலருக்கு ஃப்ரண்ட் மட்டும் தான். அதனால நீ அங்க இருந்ததெல்லாம் எனக்கு பெரிய விஷயமா தெரியல…..

 ஆனா இதுக்கு அப்புறம் நீ எனக்கு பொண்டாட்டியா என் உசுரா வரப்போறவ, அப்போ உனக்கு வேண்டிய பாதுகாப்பு எல்லாம் நான் தானே கவனிச்சுக்கணும். அதுக்கு தான் கேட்டேன்” என்றார்

கருப்பன்.

 அவன் பொண்டாட்டி என்று கூறிய வார்த்தையில் மலரின் முகத்தில் இத்தனை நேரம் இருந்த கலக்கம் மறைந்து அவன் காதலில் மீண்டும் சிவந்து போக, அவள் தலை குனிந்து கொண்டு நின்று இருந்தாள்.

 “இந்தாடி காலங்காத்தால இப்படி வீட்டுக்குள் வந்துட்டு சொல்றதுக்கெல்லாம் செவந்து போயி மனுஷன் ஃபீலிங்ஸ தூண்டிகிட்டு இருக்காம முதல்ல இடத்தை காலி பண்ணு….!” என்றான்

கருப்பன்.

“ஓஹோ அப்படியா…! நான் உங்களுடைய ஃபீலிங்ஸ் தூண்டிவிடுறேனா..!’ என்றால் மலர்.

 “பின்ன இல்லையா..! இத்தனை வருஷம் முரட்டு பயலா மொட்டை பயலா திரிஞ்சவன் நானு என் மனசுக்குள்ளேயும் இத்தனை காதலும் ஆசையும் ஒரு பொண்ணு மேல வரும்னு நேத்து நைட்டு தான் நானே உணந்தேன்.

சரி ஃபீலிங்ஸ் வந்துருச்சுன்னு உடனே எந்த சேட்டையும் வச்சுக்க வேணாம் கொஞ்ச நாளைக்கு அமைதியா இருக்கலாம்னு பார்த்தா, நீயே வாண்ட்டட வீடு தேடி வந்து இப்படி பேசி, கன்னம் செவந்துன்னு சும்மா இருக்குறவன கிளப்பி விடுறியே …!” என்று கேட்டவன் மலரை நெருங்கி இருந்தான்.

 அவன் கேள்வியை கேட்டுக் கொண்டே தன்னிடம் நெருங்கி வருவதை உணர்ந்த மலர்,

“ஆங் இதை மறந்துட்டேன்..!” என்றவள் தனது உடையினுள் தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த பெரிய சைஸ் சாக்லேட்டை எடுத்து அவன் கையில் குடுத்தாள்.

அதனை வாங்கியவன் என்னவென்று புரியாமல் அவளை பார்த்தான்

“இன்னைக்கு எனக்கு பர்த்டே! அதான் நேத்து காலேஜ் முடுஞ்சு வரும் போதே உங்களுக்குன்னு வாங்கிட்டு வந்தேன். இன்னும் மயில் கிட்ட கூட சொல்லாம உங்கள பாக்க வந்தேன். எப்பவுமே என்னோட அப்பா அம்மா என்னோட பர்த்டேவ க்ராண்டா செலிப்ரேட் பண்ணுவாங்க…!

ஆனா இந்த வருஷம் என்னால அவங்க கூட இருக்க முடியல. ஆனாலும் பரவால்ல. அதான் நீங்க என் கூட இருக்கீங்களே! அது போதும்…!” என்றவள் தாய் தந்தையரை நினைத்து வெளிவர துடித்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு அவன் முகம் பார்த்து சிரித்தாள்.

அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் “நீ உங்க அப்பா அம்மாவ குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றியா…?” என்று கேட்டான்.

அதற்கு அவளோ “முன்ன மிஸ் பண்னேன். ஆனா எப்போ உங்கள பார்த்தேனோ அப்போ இருந்தே எனக்கு அவங்க ஞாபகம் வர்றதில்லை.

 எனக்கு இப்போ இந்த நிமிஷம் உங்க கூடயே இருந்தா போதும்னு தோணுது..!” என்று கூறியவளை இறுக அணைத்துக் கொண்டான் கருப்பன்.

 முதன் முதலாக தனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆணின் ஸ்பரிசம் தனது உடலை முழுவதும் நிறைந்திருக்கவும், கண்கள் மூடி அவனின் வெற்று மார்பில் படர்ந்த பிரத்யேக வாசத்தை உள்ளிழுத்து கொண்டவள் அங்கேயே கோழிக்குஞ்சாய் அடங்கிப் போனாள்.

தனது மார்பில் புதைந்திருக்கும் மலர்விழியின் உச்சந்தலையில்

காதலாக இதழ் பதித்தவன் பின் அவளின் முகத்தை கையில் ஏந்தி கலங்கி இருக்கும் அவளின் விழிகளை பார்த்தவன்

“இனிமே எந்த ஒரு காரணத்துக்காகவும் நீ கலங்க கூடாது. இனிமே உனக்கு உங்க அப்பாவா அம்மாவா எல்லாமுமா நான் இருப்பேன். இது உன்னோட பிறந்த நாளைக்கு இந்த கருப்பன் உனக்கு குடுக்குற வாக்கு. இது என்னைக்குமே மாறாது….!” என்று கூறினான்.

மீண்டும் அவனை அனைத்து அவனின் மார்பில் புதைந்தவள் “ரொம்ப தேங்க்ஸ்…இத்தனை வருஷத்துல ! என் அம்மா அப்பா எனக்கு எத்தனையோ விலை உயர்ந்த தங்கமும் வைரமும் வாங்கி கொடுத்திருக்காங்க.

 ஆனா அப்ப நான் அனுபவிச்ச சந்தோஷத்தை விட, இப்ப இந்த நொடி நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன். என்னோட வாழ்க்கைக்கே இது மட்டும் போதும். என் ஆயுசு முழுக்க உங்களுக்குள்ள பொதைஞ்சு உங்களுக்காக மட்டுமே நான் வாழனும்…!” என்று காதலில் கசிந்துருகி கூறினால் மலர்விழி.

 “ஏண்டி ஏன் என்னைய உனக்கு அவ்ளோ புடிச்சிருக்கு…! நான் மத்த பசங்கள மாதிரி உன்கிட்ட வந்து வழிஞ்சிக்கிட்டு நிக்கல, உன் பொறந்த நாளைக்கு விலை உயர்ந்த பொன்னும் பொருளும் வாங்கி குடுக்கல,

ஆனா நான் சொன்ன இந்த ஒரு வார்த்த ஏன் உனக்கு அவ்ளோ பெரிய விஷயமா இருக்கு…?” என்று கேட்டான் கருப்பன்.

“உங்களுக்கு அத பத்தி தெரியாது மாமா. நீங்க எனக்கு எவ்ளோ பெரிய விலை மதிக்க முடியாத கிஃப்ட் கொடுத்து இருக்கீங்கன்னு என்னால மட்டும் தான் உணர முடியும்…!” என்று கூறியவள் மேலும் அவனை கட்டிக் கொள்ள,தானும் அவளை காதலாக அணைத்துக் கொண்டான் கருப்பன்.

அந்த நேரம் அவர்களின் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

கருப்பனின் காதல் வேட்கை தொடரும்….🥰

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

உங்களின் சேவை எனக்கு தேவை மக்களே!  கமெண்ட் ப்ளீஸ் 🙏🏻😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!