Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

 என் ஜீவன் உன்னை சேருமா 16

 என் ஜீவன் உன்னை சேருமா

  அத்தியாயம் – 16

  கிஷோருக்கு, மாறனுக்கும்  நீண்ட நாள் முன்பு ஆசைப்பட்ட பொக்கிஷம் கிடைத்துவிட்டது போல் நினைத்து, மாயாவை தூக்கிக் கொண்டு மாடி அறைக்கு  செல்ல.

 அதைக் கெடுப்பது போல் வாசல் கதவு டம் என்று  பெருத்த சத்தம் வர,,.



Advertisement

” டேய் யார் அது நல்ல நேரத்தில்  கரடி மாதிரி” என்று மாறன் கத்த..

 “டேய் மச்சி இவ  உனக்குத்தான் முதல்ல போல மாயாவை பிடி” என்று தன் தோளில் துள்ளிக் கொண்டு இருந்தவளை,  மாறன் தோளுக்கு மாற்றிய கிஷோர்,,

“நான் யாருன்னு பாத்துட்டு மேல வரேன்” என்று வாசல் பக்கம் சென்றான்..

Advertisement

 மாயா மாறனின் தோளிலிருந்து கீழே  இறங்கி ஓட பார்க்க, அவளை வயிற்றோடு பிடித்து தூக்கியபடியே,, ” எங்கே ஓட பார்க்கிற உன்னை யாரும்,  இங்க காப்பாத்த  வர முடியாது, பேபி  டால்” என்று அவளை இழுத்துக் கொண்டு   மாறன் மேலே  சென்றான்..

Advertisement

 மாயாவுக்கு தான் தனியே இங்கே வந்து இருக்கக் கூடாது என்று எண்ணி வருந்தியவள்..

 எப்படியாவது இவங்க கிட்ட இருந்து தப்பிக்கணும் என்று தோன்ற..

 மாறன் அவளை கட்டிலில் தூக்கி போட்டு..

Advertisement

 அவனின் ஆடையை களைய… இதுதான் சாக்கு என்று அந்த அறையை விட்டு ஓட பார்த்த மாயாவை  முடியை பிடித்து இழுத்து வந்து,, அந்த அறையை பூட்டி விட..

 மாயா தன் கையில் கிடைக்கும் பொருளை  எல்லாம் எடுத்து மாறன் மீது வீசினாள்…

 அவள் வீசிய பொருட்களை தன்மேல் படாதவாறு விலகியமாறன்,, அவனின்  பாதி ஆடையை களைத்து  விட்டு அவளிடம் வர,,,.

 மாயா பக்கத்தில் இருந்த பொருளை எடுத்து மாறனை அடிக்க வந்தாள்,, அவள் கையில் இருந்த பொருட்களை அவளிடம்  இருந்து தூக்கி எறிந்தவன்,, மாயாவின் கன்னத்தில் ஓங்கி அரைந்திருந்தான்..

அவன் அரைந்த வேகத்தில்..

 மாயா சுருண்டு போய் கீழே விழுந்தாள்..

 விழுந்தவளின்  தலைமுடியை  கொத்தாக  பிடித்து தூக்கியவன்.  “என்னடி ஓவரா ஆட்டம் காட்டுற, உன் ஆட்டத்தை அடக்குறேன் பாரு” என்று மாயாவை  தூக்கிபடியே கட்டிலுக்கு வந்தான்..

 மாயா தன் பலத்தை எல்லாம் உபயோகப்படுத்தி மாறனை பிடித்து தள்ளிவிட,,

 மாயா  பலமாக தள்ளியதை பொறுக்க முடியாத மாறன் மீண்டும் மாயாவின்  கன்னத்தில் ஓங்கி அரைந்திருந்தான்.. அவன் அரைந்த வேகத்தில் மாயாவின் உதடு கிழிந்து ரத்தம் கொட்ட..

“ஆவென்று” கத்தியவளை…

 பார்த்து சிரித்த மாறன்..

” உன்கிட்ட சாப்டா நடந்துக்க நினைக்கிறேன்,, என்னை மிருகமாக மாத்தாத மாயா” என்றவன் மாயாவின் உடையில் மேல் கை வைக்க போக..

 கிஷோர் அலரும் சத்தம் கேட்ட மாறன்..

 என்ன ஆச்சு  என்று மாயாவிடம் இருந்து பிரிந்து கதவை திறந்து கொண்டு வெளியே பார்க்க..

 யாரோ கிஷோரின் காலை உடைப்பது  போல் மடக்கி இருக்க.கிஷோர்  கத்தி கொண்டு  இருந்தான்..  யார் என்று பார்த்தான்  மாறன்,, கிஷோர் கத்தி கதறலை கேட்டு  வேகமாக கீழே வந்திருந்தான்,,

 “டேய் யாருடா நீ” என்று அருகில்   வர..

 அக்னி கிஷோரின் காலை மிதித்த படியே திரும்பி பார்த்தான் மாறனை…

 ஒரு கையில்  கதவை உடைத்த சுத்தியலோடு,, இன்னொரு கையில் கிஷோரின்  கையை  முறுக்கிய படியும் திரும்பி பார்த்தான் அக்னி..

  அரைகுறை ஆடையில் மாறனை  பார்த்தவனுக்க வெறி வர.. கிஷோரை விட்டு  மாறனின்  அருகில் வர..

  மாறனும் அக்னியை  அடிக்க வந்தான்.

 அக்னி  தன் கையில் இருந்த சுத்தியலால் மாறனின் நாடியில்  ஓங்கி அடிக்க “ஆவென்று “என்று கத்திய அப்படியே கீழே விழுந்தான் மாறன்…

 மாயாவுக்கு மாறன் அடித்த அடியில் இதழிலிருந்து ரத்தம் வர.. கன்னம், காது, தலை எல்லாம் வலி உயிர் போனது.. மாறன் சத்தம் கேட்டு சென்றவுடன் மெல்ல எழுந்து இங்கே இருந்து தப்பி சென்றுவிடலாம் என்று மாயா மாடியிலிருந்து கீழே வர..

அக்னி  சுத்தியலை வைத்து மாறனை அடிப்பதை பார்த்தவளுக்கு,,,

அப்பாடா வந்து விட்டான் அக்னி தன்னை காப்பாற்ற என்று தோன்ற..

 “டேய் யாருடா  நீ” என்று மாறனும் கிஷோரும்  கேட்க..

 “யாரு மேல டா கைய  வச்சீங்க?  என் பொண்டாட்டி மேல கைய வச்ச உங்களை உயிரோட விடமாட்டேன்” என்றவன் கிஷோரின்  உயிர் பகுதியை  மிதிக்க,.

” ஐயோ அம்மா”  என்று கிஷோர் கத்திய கத்தலில் அந்த வீடே  அதிர..

 மாறன் அக்னியின்  பின்னாடி இருந்து அக்னியை மிதிக்க..

 அக்னி தள்ளி  போய் கீழே விழுந்தான்.

 கீழே விழுந்த அக்னி மீண்டும் எழுந்து வந்து மாறனை அடிக்க.. அக்னியின் ஆக்ரோஷமான அடியை தாங்க முடியாத மாறன் அவனும்  அக்னியை அடிக்க இருவரும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டனர்..

 கிஷோர் எழுந்துக்க முடியாதபடி அக்னி பலமாக அடி வெழுத்து இருந்தான்..

 மாறன் மாயாவை அனுபவிக்க முடியாது கோபத்தால் அக்னியை தாக்க,, அக்னி தன் மாயாவை அனுபவிக்க நினைத்தவர்களை கொல  வெறியில் அவர்களை   அடித்து வெழுத்துக்கொண்டு இருந்தான்.

 மாறனுக்கு பயங்கர வெறி, அக்னி தாக்குவதை  அவனால் தாங்க முடியவில்லை,,  பக்கத்தில் கிடந்த சேரை  எடுத்து அக்னியின் தலையில் அடிக்க, அக்னியின் தலையில் பலமாக  அடிபட்டு ரத்தம் பீறிட்டு வர..

 அதையெல்லாம் பொருட்படுத்தாத அக்னி அந்த சேரை பிடுங்கி மாறனின்  மண்டையில் அவனும் அடிக்க..

 மாறனின் தலை உடைந்து அவனுக்கும் ரத்தம் வந்தது  கொண்டு இருந்தது..

 மாயா பயந்து போனாள் எங்கே அக்னி இருவரையும் கொன்று விடுவானோ என்று அக்னியை  தடுக்க ஓடினாள்,, அக்னி வெறிகொண்டவன் போல் கிஷோரையும், மாறனையும்  மீண்டும் மீண்டும் அடிக்க மாயா அக்னியின்  கையை பிடித்து.

 “போதும்” என்று கூற அப்பொழுது தான் அக்னி   மாயாவின்  முகத்தை பார்த்தான் இரண்டு கன்னங்களில் கைத்தடங்கள் பதிந்து இருக்க, இதடு வேற  கிழிந்து ரத்தம் வந்து உறைந்து இருக்க,,.

 “ஏய் எவன்டா என் பொண்டாட்டியை  அடிச்சது” என்று மீண்டும் கீழே கிடந்த .கிஷோரையும், மாறனையும்  பக்கத்தில் கிடந்த சுத்தியலை வைத்து   அடிக்க ஆரம்பித்தான்..

 மாயாவுக்கு  கண்டிப்பாக தெரிந்தது, அக்னி அடித்த அடியில் இருவரும் உயிர் பிளைப்பதே கடினம் என்று மனதில் நினைத்தவள் அக்னியை தடுக்க அவன் பின்னிருந்து அணைத்து “வேண்டாம் அடிக்க வேண்டாம் செத்துருவானுங்க போதும்” என்று மாயா தடுக்க..

 மாயா அவனை இழுத்தாலும் அவன் காலை வைத்து இருவர் கழுத்தையும்  மிதித்து  கொண்டிருந்தான் அக்னி..

 “எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டி மேல கைய வைத்திருப்பீங்க சாவுங்கடா” என்று மறுபடியும் மிதித்தான்..

“மாயா வேண்டாம், வேண்டாம்”  என்று அக்னியை  பிடித்து இழுக்க..

 பார்த்திபன் வந்து சேர்ந்தான் சில ஆட்களோடு..

 அக்னி தலையில் இருந்து ரத்தம் வழிய இருவரை மிதித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். மாயா அவனை  வேண்டாம் என்று தடுத்து அவனை இழுப்பதை  பார்த்தவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று தோன்ற..

 அவர்கள் அருகில் வந்தான்..

மாயா பார்த்திபனை பார்த்ததும் அவனிடம் சென்று “அண்ணா அவரை அவனுங்களை  அடிக்க வேண்டாமுன்னு  சொல்லுங்க அண்ணா” என்று சொல்ல..

 அக்னி இன்னும் இருவரையும் அடிப்பதை  நிறுத்தவில்லை இருவரின் உடலில் இருந்து ரத்தம் வழிய முகம் சேதம் அடைத்து வாயிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவனுங்களை  விடவில்லை “என் மாயாவை எவண்டா அடிச்சது எவன்டா என் மாயா மேல கை வச்சது  சொல்லுடா'” என்று சொல்ல.. கிஷோர் மாறனை கைகாட்டி  இருந்தான்…

 “நீதான் என் மாயா அடிச்சியா” என்றவன்,, மாறனின்  நெஞ்சின் மேல் அமர்ந்து சுத்தியலை எடுத்து மாறன் விரல்களை நைக்க  ஆரம்பித்தான்,,

  மாறன் கத்திய காதலில் அந்த வீடே அதிர  மாயா அக்னியை  பார்த்து பயந்து போய் பார்த்திபன் பின்னாடி மறைந்து நின்றாள்..

 பார்த்திபன் மாயாவை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு அக்னியை அவர்களிடம் இருந்து பிரித்துக் கொண்டு தனியே இழுத்து வந்தவன்..

 அவன்  அழைத்து வந்த சில ஆட்களை பார்த்து  கிஷோரையும் மாறனையும்  ஆஸ்பத்திரியில் கொண்டு செல்லுமாறு கூற.. இருவரையும்   தூக்கிக்கொண்டு சென்றனர் அந்த  ஆட்கள்..

 “வேண்டாம் பார்த்திபா என்னை விடு,, அவனுங்களை  என் கையால்  கொல்லனும் எனக்கு ஆத்திரம் தீரும் வரை அவனுங்களை  அடித்துக் கொல்லனும், ”  என்று அக்னி கத்த..

 “அக்னி போதும் இன்னும் கொஞ்சம் அடிச்சா அவனுக்கு செத்து  போய்டுவானுங்க விடு” என்றான் பார்த்திபன்..

 “சாகட்டும் செத்து தொலையட்டும் என் மாயா மேல கைய வச்சவனை  உயிரோட விட சொல்றியா?  எவ்ளோ தைரியம் இருந்தா என் மாயாவை  அடிச்சிருப்பானுங்க அவ கன்னத்த பாத்தியா டா,” என்றான் கதறலோடு..

 “சரி விடு மாயாவுக்கு  ஒன்னு ஆகல இல்ல,, நீ வா  ஹாஸ்பிட்டலுக்கு போலாம் தலையில இருந்து ரத்தம் வருது பாரு “என்றான் பார்த்திபன்..

 “எனக்கு ஒன்னும் இல்ல நீ அவளை  போய் பாரு” என்றான் அக்னி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!