Skip to content
Post Views: 1,697
அத்தியாயம் 17
“ண்ணா!” என கதவை திறந்த அஞ்சலி கையில் புத்தகத்துடன் இருக்க, அவள் கேள்வியாய் பார்த்து வைத்தாலும் அவள் அழுது முடித்த தடம் கண்களின் சிகப்பில் புரிந்திருந்தது கீர்த்திஸ்வரனுக்கு.
Advertisement
சாதாரணமாய் அவளை பார்த்திருந்தால் இத்தனை தூரம் அவன் கவனித்திருக்கவும் மாட்டான். அவனுக்கு புரிந்தும் இருந்திருக்காது. பல்லவி சொல்லையாதால் தான் இத்தனை அவளை கவனிப்பதும் கூட.
Advertisement
Advertisement
“படிக்கிறியா அஞ்சலி?” எனக் கேட்டு அவளைஉன் தாண்டிக் கொண்டு அவளறைக்குள் சென்றான் ஈஸ்வர்.
Advertisement
“ஆமா ண்ணா! எக்ஸாம்க்கு!” என்றவள் என்ன செய்கிறான் என அவள் பார்க்கவும் உள்ளே வந்தவன்,
“அஞ்சலி! என்கிட்ட நீ எதுவா இருந்தாலும் சொல்லலாம். அண்ணாவும் இப்படி தான்னு யாரையும் யார் கூடவும் கம்பேர் பண்ணாத. நான் என்னைக்காவது உன்கிட்ட ஹார்டா ஹர்ட் பண்ற மாதிரி பேசி இருக்கேனா?” என சத்தமே வெளியில் கேட்க கூடாது என்று அத்தனை மெதுவாய் அவன் பேசியதற்கே அரண்ட பார்வை பார்த்தாள் அஞ்சலி.
“இப்படி பயப்படாதனு தான் சொல்றேன். நான் எப்படி நீ படிக்க கூடாதுன்னு சொல்வேன் அஞ்சலி? யார் உன்னை டிஸ்டர்ப் பன்றாங்களோ அவங்களை டிஸ்போஸ் பண்ண பார்க்கணும். அதைவிட்டுட்டு அழுதுட்டு வந்திருக்க?” என்றவன் புரியும்படி சத்தமே இல்லாமல் சமாதானமாய் மெதுவாய் அவளுக்கு புரியும்படி எடுத்து சொல்லவும் தான் அஞ்சலிக்கு அவ்வளவுக்கு ஒரு ஆசுவாசம்.
“பல்லவி பார்த்ததனால சரியாப் போச்சு. இல்லைனா?” என்றவன்,
“அப்பா இப்படி அதனால எல்லாரும் அப்படி தான்னு என்ன நினைப்பு இது? அப்பா அப்படி உன்னை பேசினாலுமே எதிர்த்து பேசி நான் படிக்கணும் படிப்பேன்னு நீ தான் பேசணும். அதைவிட்டுட்டு பேசுவாங்களேன்னு நினைச்சே இப்படி தான் பயந்து தனியா அழுவியா?” என்றான் கொஞ்சம் முறைத்து.
“எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணனும். அப்படி உன்னால ஃபேஸ் பண்ண முடியாதுன்னு தோணுச்சுன்னா அடுத்து உடனே உனக்கு அம்மா, அண்ணா, அப்பானு வீட்ல இருக்கவங்க தானே நியாபகம் வரணும்? அவங்க என்ன சொல்வாங்கனு பயப்படுற அளவுக்கா அம்மா உன்னை பாத்துக்குறாங்க?” என்று அவன் கேட்கவுமே,
“ண்ணா!” என்றவள் அழ,
“அழாதன்னு தானே சொல்லிட்டு இருக்கேன்?” என்றவன் சொல்லில் கண்களைத் துடைத்துக் கொண்டவள்,
“அம்மாவும் என்ன பண்ணுவாங்க. அப்பாகிட்ட தானே பயந்து சொல்லுவாங்கனு நினைச்சேன் ண்ணா!” என்றாள் அழுகையை அடக்கி.
“இதை தான் சொல்றேன். அஸ்யூம் பண்ணாத. பேசு. உனக்கு வேணும்னா நீ பேசிப் பழகு. அழக் கூடாது இனி!” என்றவன்,
“நாளைக்கு நான் வர்றேன். யார்னு நீ காட்டு நான் பாத்துக்குறேன். சரியா?” என்று கேட்க, தலையை மட்டும் ஆட்டினாள்.
“அப்புறமா அம்மாகிட்ட பேசு. இப்ப பாரு கண்ணெல்லாம் எப்படி இருக்குன்னு. இவ்ளோ அழணுமா நீ?” என்றவன் அவள் கண்ணீரை துடைக்க, நிஜமாய் புதுவித தைரியத்தை உணர்ந்தாள் அஞ்சலியுமே.
“ஹ்ம்! இனி இப்படி எல்லாம் இருக்க கூடாது. என்கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன். சரியா?” என மீண்டும் கேட்க, அதற்கும் அவளிடம் தலையாட்டல் தான்.
எதையும் விவரித்து அவள் சொல்லவே இல்லை. அவனும் கேட்கவில்லை. பார்த்துக் கொள்ளலாம் என்று அஞ்சலிக்கு தைரியம் வர, பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது கீர்த்திஸ்வரனுக்கு.
அஞ்சலி விஷயத்தில் இதில் மட்டும் இன்றி இனி எப்போதும் தானும் அவளுக்கு துணை இருப்பதை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என கீர்த்திஸ்வரன் ஒரு முடிவுக்கு வந்திருக்க, காரணமான பல்லவி மீதுமே ஒருபடி அதிகமாகி இருந்தது மரியாதை. கூடவே கண்ணுக்கு தெரியாத ஒருவித ஈர்ப்பும்.
ஏற்கனவே அன்னை அவ்வபோது அவள் செய்தது செய்வது என சொல்லி சிரித்திருக்க, விளையாட்டுத்தனமும் கூடவே இந்த பொறுப்புணர்வும் என இவ்வளவு நாள் இல்லாத அளவுக்கு இன்று அவளை பற்றி மட்டும் நினைத்திருந்தான்.
அடுத்தநாள் காலை அஞ்சலி பள்ளி செல்ல கிளம்பி வரும் முன்னேயே தான் தயாராகி ஹாலுக்கு வந்துவிட்டான் கீர்த்திஸ்வரன்.
“உன்னை தான் கூப்பிடலாம்னு கிளம்பி வந்தேன். நீயும் ரெடியா இருக்க. கொஞ்சம் என் கூட வா. சைட் வரைக்கும் போய்ட்டு வரணும்!” என மகனை அழைத்தார் மகேஸ்வரன்.
“இப்ப கொஞ்சம் வேலை இருக்கே ப்பா. நீங்க கிளம்புங்க. ஒரு ஹால்ஃப் அன் ஹவர்ல நான் ஜாயின் பண்ணிக்குறேன்!” என்றான் ஈஸ்வரும்.
“அப்படி என்ன முக்கியமான வேலை. கூப்பிட்டது வரதராஜன். வேலை விஷயமா மட்டுமா பேசுவார்? கல்யாணத்தை வேற நிறுத்தி வச்சிருக்க. என் தலையை குடுக்க முடியாது நான். வந்து நீயும் நில்லு!” என கொஞ்சம் கடுகடுப்போடு அவர் சொல்ல,
‘இதுக்கு தானா!’ என தோன்றினாலுமே,
“ப்பா நான் தான் சொல்றேன்ல. அஞ்சலியை ட்ராப் பண்ண போறேன். போய்ட்டு வந்து வர்றேன்!” என மெதுவாய் அவன் கூறினான்.
“இப்ப அவளை ட்ராப் பண்றது தான் ரொம்ப முக்கியமா? போக வழி இல்லைனா வீட்டுல இருக்கட்டும் நீ வா!” என இதை ஒரு காரணமாய் சொல்கிறானே என்ற கோபத்தில் மகேஸ்வரன் சொல்லும் நேரம் அஞ்சலியும் அதைக் கேட்டபடி வந்திருக்க, சட்டென எழுந்துவிட்டான் கீர்த்திஸ்வரன்.
அஞ்சலி கண்களில் அப்பட்டமாய் மிரட்சி. என்ன பேசிக் கொண்டிருந்தனர் என்று கூட அவளுக்கு தெரியாது. அவளை வீட்டில் இருக்க சொல்லியது மட்டுமே கேட்டு அவள் நடுங்கி நிற்க, அதைக் கண்ட கீர்த்திஸ்வரனும் எழுந்துவிட்டான்.
“அந்த ஆளு வெய்ட் பண்ண மாட்டான் அதான் சொல்றேன். ஏற்கனவே நம்ம மேல கோவத்துல இருக்கான். இப்ப லேட்டா போனா அதுக்கு ஒரு பேச்சு அவன்கிட்ட நான் கேட்கணுமா?” என மகேஸ்வரன் சொல்ல,
“அஞ்சலி சாப்பிடு போலாம்!” என்றவன் சொல்லில் இன்னுமென்ன இவனுக்கு என அவன் தந்தைப் பார்க்க,
“உன்னை சாப்பிடுன்னு சொன்னேன் அஞ்சலி. அம்மா கோவிலுக்கு கார்ல போயிருக்காங்க. தேவி அக்கா உள்ள இருக்காங்க. போய் கேட்டு சாப்பிடு!” என இன்னும் பார்த்து நின்றவளிடம் பொறுமையாய் சொல்லியவன் அவள் தலையாட்டி நகரவும்,
“ப்பா! இது சரி வராது. ஒவ்வொண்ணுக்கும் இப்படி பயந்துட்டே இருக்க முடியாது!” என்று கூறினான் தந்தையிடம்.
“வேற என்ன பண்ண சொல்ற? எதையும் கேட்க மாட்டுறான். நீயும் பிடிவாதமா இருக்க. எனக்கு தான் வாய் திறக்க முடியல!” என்றார் பொருமலாய் அவரும்.
“ஹ்ம்! அதுக்கு தான் நீங்க வீட்டுல இருக்கவங்களை சும்மா சத்தம் போட்டுட்டு இருக்கிங்க!” என்று ஈஸ்வர் சொல்லவும் அவன் கேள்வியாய்ப் பார்க்க,
“வரதராஜன் அவரால அவர் பொண்ணை கண்ட்ரோல் பண்ண முடியலைனு மத்தவங்களை பேசுறார்னா நீங்க மத்தவங்களை கண்ட்ரோல் பண்ண முடியலைனு வீட்டுல இருக்கவங்களை பேசி வைக்குறிங்க. இங்க மட்டும் எல்லாரும் கேட்டுட்டே இருக்கனும்னு என்ன இருக்கு?” என்றான் கீர்த்திஸ்வரன்.
“நான் என்ன சொல்றேன் நீ என்ன டா சொல்ற? இப்ப என் கூட வர முடியுமா முடியாதா உனக்கு?” என மகேஸ்வரன் கேட்க,
“நான் வர்லப்பா. இப்ப மட்டும் இல்லை எப்பவும் தான். உங்களை மாதிரி நானும் போய் நிக்க முடியாது. அதனால தான் சொல்றேன்….” என்றவனை என்ன இப்படி பேசுகிறான் என அவன் தந்தை பார்த்து நிற்கும் போதே,
“ஜஸ்ட் கால் ஆஃப் தி வெட்டிங். இனி வீட்டுக்கும் யாரும் தொந்தரவு பண்ண வர கூடாது. நம்ம வேலைக்கும் டிஸ்டர்ப்பா இருக்க கூடாது. அவரோட காண்ட்ராக்ட் கான்செல் பண்ணுங்க. புதுசா நம்பிக்கையான ஆளா நான் பார்த்து தர்றேன்! அடுத்தவங்க கண் பார்வைல எப்பவும் நாம இருந்துட்டே இருக்க முடியாது” என ஈஸ்வர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவசர அவசரமாய் சாப்பிட்டு முடித்து அஞ்சலி வெளிவந்திருந்தாள்.
“கார்ல ஏறு அஞ்சலி!” என்றவன் தந்தையைப் பார்க்க, அதிர்ந்து மூச்சடக்கி நின்றிருந்தார் அவர்.
“வேலையில மட்டும் யாரும் குறை சொல்லிட கூடாதுன்னு பார்த்து பார்த்து நடந்தது போதும். வீட்டையும் நிறைய கவனிக்க வேண்டியது இருக்கு. அதைப் பார்ப்போம்!” என பொதுவாய் சொல்லிவிட்டு அவன் நகர்ந்துவிட, அவன் திருமணத்தை நிறுத்த சொல்லியதை இன்னுமே நம்ப முடியாமல் நின்றிருந்தார் மகேஸ்வரன்.
அவர் அப்படியே நிற்கவும் கீர்த்திஸ்வரன் வெளிவர, அஞ்சலியிடம் பேசிக் கொண்டு நின்றிருந்தாள் பல்லவி.
“அஞ்சலி சொன்னது உண்மையா? நீங்க வர்றிங்களா எங்களோட?” ஆச்சர்யம் காட்டி பல்லவி கேட்டதில் அவளை முறைத்த ஈஸ்வர்,
“நீ என்ன இவ்வளவு காலையில?” என்றான் காரில் ஏறியபடி இருவரையும் காருக்குள் அமர சொல்லிவிட்டு.
அஞ்சலி முகத்திலும் அண்ணன் கூடவே வரும் தைரியம் தெரிவதை பல்லவி கண்டு,
“இவளுக்காக தான் வந்தேன். லதாம்மாவை பார்க்கலையே!” என்றாள்.
“அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க அண்ணி!” என அஞ்சலி சொல்ல,
“பார்த்தியா அஞ்சலி? உனக்காக உங்க அண்ணா இருக்கார். நான் தான் சொன்னேன்ல. எதுவா இருந்தாலும் பேமிலிகிட்ட தான் முதல்ல சொல்லணும்!” என்றவளை கண்ணாடி வழி கீர்த்திஸ்வரனும் கண்டான்.
“இனி டெய்லி நானே உன்னை ட்ராப் பண்றேன் அஞ்சலி!” என அவன் வழியில் சொல்லவும்,
“ஏன் சார்? வேற வேலை இல்லையா உங்களுக்கு?” என்றவளை அதே கண்ணாடி வழி அவன் முறைத்துப் பார்த்தவன், “நேத்து நீ தானே வேலையா முக்கியம்னு கேட்ட” என்றான்.
“அதுக்காக இதே வேலையா இருப்பிங்களா? அவ ஆட்டோல போனாலும் நடந்தே போனாலும் தைரியமா எல்லாம் ஃபேஸ் பண்ண கத்து குடுங்க சொன்னேன். இப்படி பின்னாடியே பாடிகாட் மாதிரி போக சொல்லல” என அவனையும் பல்லவி அத்தனை மிரட்ட, அவள் மேல் கோபம் எல்லாம் வரவில்லை அவனுக்குமே.
“உங்களுக்கு வரப் போற பொண்ணு மட்டும் நல்லா போல்ட்டா கட்டிக்க போறவன் வீட்டுக்கே வந்து கல்யாணம் பண்ணிக்கிறியா இல்லையானு கேட்டு சட்டையை பிடிக்குற மாதிரி நல்லா வெயிட்டா பார்த்து வச்சா போதுமா? தங்கச்சிக்கும் அதெல்லாம் சொல்லி குடுங்க” என்று லாவண்யாவை அவள் பேச்சில் இழுக்கவும் மீண்டும் முறைக்க ஆரம்பித்துவிட்டான்.
“அதென்ன எப்ப பாரு லாவண்யாக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க நீ? அன்னைக்கு அம்மாகிட்டயும் லாவண்யாக்காக பேசின தானே?” என பல்லவியிடம் பேசினாலும் நகம் கடித்து பதட்டத்தில் வந்த அஞ்சலியையும் கண்டான் ஈஸ்வர்.
“சப்போர்ட்டா? ஐய்யய்ய! அவ்வளவு சீன் எல்லாம் இல்ல அந்த பொண்ணுக்கு. திமிரு மட்டும் தான் அதிகம். ஆனா உங்களுக்கு அந்த பொண்ணு தான் சரி. உங்களுக்கு வேணும் சார்!” என்றவளை கண்கள் சுருக்கி ஏன் எனக் கண்டான் கீர்த்திஸ்வரன்.
அவள் பேசிய தோரணை என்னவோ ‘உனக்கு ஆவணும் டா!’ என்பதாய் தான் இருந்தது.
error: Content is protected !!