Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 21 1

என் ஜீவன் உன்னை சேருமா
 அத்தியாயம் – 21


Advertisement

Advertisement

Advertisement

   காலையிலிருந்து ரதிக்கும் பார்வதிக்கும் வீட்டின் வேலைகள் சரியாக இருந்தது..
 வீட்டை சுத்தப்படுத்துவது, காலை உணவு செய்து  அனைவருக்கும் பரிமாறுவது,  பூக்களை கட்ட என்று நேரம் சரியாக இருந்தது.

Advertisement

 சாயங்காலம் ரதி தேவிவை  பெண் பார்த்து பேசி முடிப்பதற்காக உலகநாதன் வீட்டில்  இருந்து வருவதாக இருக்க.. ரதியின் வீட்டில் ஆட்கள் நிறைந்திருந்தனர்,.
 உலகநாதன் வீட்டிலிருந்து வெறும் ஐந்து,ஆறு பேர் மட்டுமே இரண்டு கார்களில்  வந்திருந்தனர்..
 பெண்ணை  பிடித்து  போய் தான். இன்றைக்கு பேசி முடிக்கவே வந்திருந்தார்கள்…
 உலகநாதனை நேரில் பார்த்த பெண் வீட்டினர்க்கு  பரமத்திருப்தி..
 உலகநாதன் காரில் வந்து இறங்க அனைவரும் மாப்பிள்ளை காரில் வந்து  இறங்குகிறார்,மாப்பிள்ளை கார் வைத்திருக்கிறார் என்று ரதியின்  சொந்த பந்தங்கள்  பார்த்து பேசிக்கொண்டனர்..
 ரதியின் வீட்டில் கார்  இல்லை. உலகநாதன் காரிலே வந்திறங்க.
 சிவப்பிரகாஷ் வாசலுக்கே வந்து உலகநாதனையும், அவரின்  குடும்பத்தை வாங்க வாங்க என்று வரவேற்றார்..  சிவபிரகாஷ் தன் மகன்  தேவ்வை   தோளில் சுமந்துபடியே அனைவரையும்  அழைத்தார்..
 அந்த ஊரிலே ரதியின் வீடு தான் பெரிய  மச்சி வீடு என்பார்களே அதை போல் மிக உயரமாக இருக்கும். அந்த காலத்து கல்வீடு, வீட்டை வெளியில்  இருந்தே பார்க்கலாம் மிகப்பெரியதாக இருக்கும். இப்போது  பிள்ளைகள் தேவைக்காக  நவீன வசதிகளாக கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தனர்…
 வீட்டை பார்த்த உடனே உலகநாதன் சொந்தங்கள், “நல்ல இடமா  தான் பார்த்திருக்க வசந்தா” என்று பேசிக்கொண்டே உள்ளே வந்தனர்..
 சிவபிரகாஷ் உலகநாதன் அருகில் அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தார்,  “உலகநாதனிடம்  என் தங்கையை உங்களுக்கு  பிடித்திருக்கிறதா,  கல்யாணத்துக்கு சம்மதமா” என்று கேட்க,,.
 “ரொம்ப பிடித்திருக்கிறது” என்றார் உலகநாதன்..
” சரி கல்யாணம் முடிஞ்சவுடன் என் தங்கச்சியை மெட்ராஸ்க்கு கூட்டிட்டு போயிடுவீங்களா இல்ல உங்க அம்மா கூட இங்க ஊர்ல விட்டுட்டு போவீங்களா”? என்றார்  சிவப்பிரகாஷ்..
” இல்லை சார் கல்யாணம் முடிஞ்சவுடன் ரதியை என் கூடவே மெட்ராசுக்கு கூட்டிட்டு போயிடுவேன்”,  என்றவர்..
“கல்யாணம்   தேதி  முடிவு செய்தவுடனே அங்கே  வீடு  பார்க்க சொல்லி இருக்கேன்”.. என்றதும்..
“அப்புறம் ஒன்று ” என்ற சிவபிரகாஷ்..
உலகநாதனிடம்  “பாப்பாவுக்கு  வேலைக்கு போகனுமுன்னு ஆசை நீங்க  கல்யாணம் பண்ணதுக்கப்பறமா   ரதியை  வேலைக்கு அனுப்புவீங்களா”?..
 “அது ரதியோட இஷ்டம்,, வேலைக்கு போனா போகட்டும்,  இல்லைனாலும், வீட்டுலயே  இருக்கலாம்,, நான் வீடு பாக்குறதே நிறைய ஸ்கூல்ல இருக்குற பக்கமா தான் பாக்குறேன்,, அப்ப தானே ரதிக்கு   வேலைக்கு போயிட்டு வர வசதியா  இருக்கும்” என்றார்…
 உலகநாதன் தன் தங்கையை ரதி, ரதி  என்று உரிமையாக பேசுவதையும்,  அவள்  வேலைக்கு போக எந்த தடங்கலும்  சொல்லாமல் இருப்பது  சிவப்பிரகாஷுக்கு உலகநாதனை மிகவும் பிடித்துப் போக..
 தன் முகத்தையே  எதிர் பார்த்து நின்ற மனைவி  பார்வதியை பார்த்து சிவபிரகாஷ்   கட்டைவிரலை உயர்த்தி காட்டினார்…
 பார்வதிக்கு புருஷன் கட்டை விடலை காட்டி, சிரித்ததும்  தான் அப்பாடா என்றவர் உடனே ரதியின் அறைக்கு சென்று “மாப்பிள்ளை நீ  வேலைக்கு போக சரின்னு சொல்லிட்டாராம் ரதி” என்று நாத்தனாரை கட்டி  அணைத்து கொண்டார்..
 ரதி ஏற்கனவே  தன் அண்ணா விடம்  சொல்லி இருந்தாள்.. “அண்ணா நான் வேலைக்கு போகணும் அண்ணா, அவங்க கிட்ட இது மட்டும் கேட்டு சொல்லுங்க” என்று..
“கண்டிப்பாக மாப்பிள்ளை கிட்ட கேட்டு சொல்றேன்டா”‘ என்று சொல்லி இருந்தவர், அதே போல் கேட்டு சொல்ல,,.
 ரதிதேவிக்கு மிகவும் சந்தோஷம் மாப்பிள்ளை  வேலைக்கு போக சரி சொல்லிட்டார் என்று..
 அதே சந்தோஷத்தோடு கையில் காபி ட்ரேயில்    எடுத்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டினருக்கு காபி கொடுக்க வெளியே  வந்தாள் ரதி..
 இன்று ரதி  ஆரஞ்சு கலர் வண்ண பட்டுப்புடவை உடுத்தி  மிதமான நகை அணிந்து தலை நிறைய மல்லிகை பூ வைத்திருந்தவள்..
 குனிந்தபடியே  அனைவருக்கும் காப்பியை கொடுக்க.. அவள் வெளியில் வந்ததில் இருந்து உலகாநாதன் ரதியை தான் பார்த்திருந்தார்,, ரதியின் முகம் சந்தோஷமாக இருந்தது.. ஆனால் அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை.. குனிந்த படியே அனைவருக்கு காபி குடுத்துக்கொண்டிருக்க,,
 வசந்தா அருகில் வந்ததும் உறவுக்கார பெண்மணி ஒருவர்,  “இதுதான் உன்  வருங்கால மாமியார் நல்லா பாத்துக்கோ ரதி” என்றார்..
 ரதிதேவி  வசந்தாவை  நிமிர்ந்து பார்த்து  “வாங்கம்மா” என்று சிரித்திருந்தாள்..
 காபியை எடுத்துக் கொண்டு  வசந்தாவும் சிரித்தார்…
 ஏற்கனவே பார்வதி ரதியிடம் சொல்லி இருந்தார். உன்  பெரியண்ணன் பக்கத்தில் தான் மாப்பிள்ளையை அமர்ந்திருக்கிறார்  நல்லா பார்த்துக்கோ  என்று..
 அண்ணன் அருகில் செல்ல செல்ல ரதிதேவிக்கு இதயம் தாறுமாறாக  துடிக்க,, ஆரம்பித்திருந்தது.கைநடுங்க, எங்கே காபி தட்டை  கீழே போட்டு விடுவோமோ என்று பயந்தவள் குனிந்து கொண்டே,  சிவப்பிரகாஷிடம்  வந்து காபி ட்ரேயை நீட்ட..
“முதலில் மாப்பிள்ளைக்கு குடுடா” என்றார் சிவப்பிரகாஷம்..
அவர்கள் பக்கத்தில் கீழே அமர்ந்திருந்த   உலகநாதனின்  சித்தி “இவர்தான் மாப்பிள்ளை நல்லா  பார்த்துக்கோமா” என்று கூற.
ரதி தேவிக்கு நிமிர்ந்து பார்க்க பயமாக இருக்க.. காபியை நீட்டிய படியே உலகநாதன்  முன்  நிற்க.,, நீ  நிமிர்ந்து பார்த்தால்  தான் காபியை  எடுப்பேன் என்பது போல் அவர் காபியை  எடுக்காமல்  அமர்ந்திருக்க…
ரதி  நீட்டியும் மாப்பிள்ளை காபியை எடுக்காமல் அமர்ந்திருக்க.. இன்னும்  அவர் பக்கம் வந்து ரதி  காபி ட்ரேயை முன்  நீட்ட..
 பெண் வீட்டுக்காரர்களில்  ஒருவர் “காபி எடுத்துக்கோ தம்பி” என்று கூற..
“அது எப்படி பொண்ணு நிமிர்ந்து  பார்க்காம எங்க தம்பி காப்பியை  எடுப்பார்” என்று உலகநாதனின் உறவினர் ஒருவர் கூறி  விட்டு சிரிக்க.
 அனைவரும் உலகநாதன் காபியை எடுக்காமல், ரதியிடம் விளையாடுவதை பார்த்து சிரிக்க.. ரதிதேவி வெட்கம் வந்து,  ஒரு நிமிடம்  உலகநாதனை நிமிர்ந்து பார்த்தவள்.
ஐஐயோ! இவரா?என்று ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்து நிற்க..
 “எப்பா  பொண்ணு எப்படியோ  மாப்பிள்ளை நிமிர்ந்து  பார்த்துருச்சுப்பா காப்பி எடுத்துக்கோ”  என்று கூற..
 உலகநாதன் ரதிதேவியை பார்த்து கண்ணடித்து  சிரித்துக் கொண்டே காபி எடுத்துக் கொண்டார்….
அவ்வளவு தான்  ரதி வெட்கம் வந்து  அவள் ரூம்பிற்கு ஓடி சென்று விட்டாள்…
இதயம் பட, படவென துடிக்க  ஆரம்பித்து இருந்தது…
 ” என்ன ரதி   உள்ளே  வந்துட்ட” என்றார் பார்வதி..
  “எனக்கு பயமா இருக்கு அண்ணி”  என்றாள் ரதி…
 “என்ன பயம் உனக்கு ரதி மாப்பிள்ளை நல்ல பொறுப்பா பேசுறாரு,,  அவங்க அம்மா கூட ரொம்ப அமைதியா சாந்தமா இருக்காங்க, சந்தோஷமா இருக்கணும் என்ன” என்று பார்வதி ரதிதேவியின் கன்னத்தை தட்ட..
 சிவபிரகாஷ் ரதிதேவியை பார்க்க அறைக்கு  வந்திருந்தார் “பாப்பா உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?”  கல்யாணத்தை   பேசி முடிச்சிடலாமா” என்று தங்கையின் விருப்பத்தை  கேட்க..
 “உங்க  எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கு ஓகே தான் அண்ணா பேசி முடிச்சிடுங்க”..
 “நல்லா யோசிச்சு சொல்லுடா மெட்ராஸ் மாப்பிள்ளை” என்று சிவப்பிரகாஷம் கூற.
 “அவளுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்குங்க” என்று சொன்னாள்  பார்வதி..
 “உனக்கு எப்படி தெரியும்” என்று மனைவியை பார்த்து சிவப்பிரகாஷ்  கேட்க..
” உங்க தங்கச்சி மாப்பிள்ளையை  பார்த்து வெட்கப்பட்டு ஓடி வந்தாளே  அதை  நீங்க பாக்கலையா? “..
 மனைவியை பார்த்து முறைத்தவர்..
” நீ சொல்லுடா பாப்பா” என்றார்..
 ” பாப்பாவாம் பாப்பா,  அடுத்த வருஷம் அவ கையில  ஒரு பாப்பா இருக்கும். இன்னும் பாப்பாவாம்” என்று கூறி பார்வதி  சிரிக்க..
 “உனக்கு என்னடி பிரச்சனை என் தங்கச்சியை  நான் பாப்பான்னு கூப்பிட்டா முதலில் உன்னை பாரு,,  காலையில இருந்து எல்லா வேலையும் பார்த்து கால்  வீங்கி போய் உட்கார்ந்துட்டு  இருக்க.. உனக்கு இதெல்லாம் தேவையா டி”.. என்றார்..
 “என்ன பண்றது மச்சான்  நான் தானே மூத்த மருமக அப்போ  எல்லாத்தையும் நான் தானே பார்க்கணும்”..
 “முதலில் உன் உடம்பையும், வயித்துல இருக்குற நம்ம  குழந்தையை பாரு  அப்புறம் கல்யாண வேலையை பார்க்கலாம்”..என்றவர்..
” பாப்பா உனக்கு கல்யாணத்துக்கு சம்மதமுன்னு  ஐயாகிட்ட  சொல்லிடுறேன் சரியா” என்றவர்  வெளியே வந்து  தன் தாய், தந்தையிடம்  ரதிக்கு கல்யாணத்துக்கு  சம்மதம் என்று கூற..
 இரு  வீட்டுக்காரர்களும்  கூடி பேசி திருமணத்திற்கு  சம்மதம் தெரிவித்து,,, அடுத்து   இரண்டு  வாரம் கழித்து  வரும் நல்ல முகூர்த்த நாளில்  கல்யாணத்தை  முடித்து விடலாம், என்று பேசி முடித்திருக்க….
 உலகநாதனின்  சித்தப்பா ரதியின்  அப்பாவை பார்த்து  “நீங்க  உங்க பொண்ணுக்கு  என்ன செய்வீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்”  என்றார் சபையில்..
ரதி  அப்பா  வேலாயுதம் சபையில்  முன் எழுந்து நின்று.. “என் பொண்ணுக்கு 40 பவுன் நகை போடுவேன்,, கல்யாண செலவை  மொத்தத்தையும் நாங்களே பாத்துக்குறோம், மாப்பிள்ளைக்கு 5 பௌவுன்  நகை போடுவோம்,, பொண்ணுக்கு மூணு வருஷம், பொங்கல் சீர், தீபாவளி   சீர் செய்வோம்.. பொண்ணுக்கு தேவையான சீர்வரிசை பாத்திரம் பண்டம் எல்லாமே  அவளுக்கு வாங்கிகொடுப்போம்,.. என் காலத்துக்குப் பிறகு என் சொத்தில் இருந்து 10% சொத்தை என் பெண்  பிள்ளைகளுக்கு  என்பையன்கள்   கொடுப்பாங்க” என்றார்..
“நாற்பது பௌவுனு  எல்லாம்  முடியாதுங்க ஒரு 75 பவுனாவது   போடுங்க” என்றார்..உலகநாதன் சித்தப்பா..
 உலகநாதன்  தன் சித்தப்பாவை வேண்டாம் என்று  தடத்து பேச வர.. வசந்தா உலகநாதனின்  கையை  பிடித்து  “அமைதியா இரு நான் பேசிக் கொள்கிறேன்” என்று..
 வேலாயுதம் “எனக்கு ஒரு பொண்ணு மட்டும் இல்லைங்க, இரண்டாவது   பொண்ணு இருக்கு.. அதனால  நான் அந்த பொண்ணுக்கும் நகை சீர் எல்லாம்  செய்யனுமே” என்று  அவர் நிலைமை எடுத்து  கூற..
 “அப்போ  சொத்தையாவது மருமகப்பிள்ளை  மேல இப்பவே எல்லாத்தையும் எழுதி வைங்க,, உங்க காலத்துக்கு அப்புறம் நாங்க இங்க வந்து நின்னு பேச முடியாது இல்லையா” என்றார்..
 வேலாயுதம்  மகன் சிவப்பிரகாஷை பார்க்க “அவர் உங்க இஷ்டம்” என்று  தலையை ஆட்டி  இருந்தார்..
 உலகநாதனுக்கு அசிங்கமாக இருந்தது அவனின் சித்தப்பா வரதட்சணை  கேட்டது.. உடனே எழுந்து நின்றவர்,,
 சித்தப்பாவை பார்த்து “நகை சொத்து எல்லாம்  கேட்டு தான் இந்த கல்யாணம் நடக்கணும்னா? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் சித்தப்பா” என்றவர் வெளியே சென்று விட…
 அனைவருக்கும் அதிர்ச்சி என்ன மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டு கிளம்பிவிட்டார் என்று..
  வசந்தா அனைவரையும் பார்த்து “எல்லாரும்  மன்னிச்சிடுங்க  ஒரு நிமிஷம் என் பையன் கிட்ட பேசி கூட்டிட்டு வரேன்” என்று வெளியில் வேகமாக வந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!