Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 21 2

உலகநாதன் கார் பக்கத்தில் நின்று இருக்க, வசந்தாவை பார்த்து “எல்லாரும் வாங்க கிளம்பலாம்” என்று உலகநாதன் கூற.
“உலகா, இப்படித்தான் மரியாதை இல்லாம எழுந்து வருவீயா?” என்றார்  கோபமாக மகனிடம்..


Advertisement

 “என்னம்மா சித்தப்பா இப்படி கேக்குறாரு,?  அவங்க பொண்ணுக்கும் அவங்க இஷ்டப்படி செய்றாங்க, அது அவங்க இஷ்டம், அத  விட்டுட்டு நீங்க  இவ்வளவு  தான் நகை போடனுமுன்னு சொல்லுறது தப்புமா?, பொண்ணு வீட்டுல சீர்  வாங்கி தான் நம்மளுக்கு நிறைய போகுதா?..
 அது தான் நம்ம கிட்ட நிறைய இருக்கே, நகை வாங்குறதே தப்பு, இதில் பொண்ணுக்கு  சொத்து வேற  கேக்குறாங்க இதெல்லாம் ரொம்ப அநியாயம் மா,, இவங்கள கஷ்டப்படுத்தி நகை பணம் சொத்தெல்லாம்  வாங்கிட்டு போன நாங்க எப்படிமா சந்தோசமா வாழ்வோம்”  என்றார் உலகநாதன்….

Advertisement

 பின்னாடியே வந்த உலகநாதனின்  சித்தப்பா,, “இது எல்லாம் முறை தானே உலகா அவங்க பொண்ணுக்கு செய்யறது சரியா செஞ்சா,  அது உனக்கு தானே உதவியா இருக்கும், அப்பா இல்லாத பையன், உனக்கு நாங்க தானே எல்லாம்  பார்த்து செய்யணும்” என்றார்..

Advertisement

 “சித்தப்பா பொண்ணு வீட்டில் இருந்து வாங்கிட்டு போய் தான் நம்ம வீடு நிறையனும்னு ஒன்னும் இல்ல,,  நாம நல்லா தானே இருக்கோம், முதலில் வரதட்சனை கேட்கிறதே தப்பு,,  இதில் பொண்ணு பேர்ல சொத்த எழுதி கேக்குறீங்க, எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் சித்தப்பா கிளம்புங்க” என்றார்…

Advertisement

 வசந்தா மகனிடம் “ஏண்டா இப்படி பேசுற, உனக்கு அந்த பொண்ணை  புடிச்சிருக்கு  தானே அப்புறம் ஏன் இப்படி பேசுற”..
 ‘எனக்கு அந்த பொண்ணா  ரொம்ப  புடிச்சிருக்கு தான்,,  ஆனாலும்  சொத்து, நகையின்னு   கேட்கிற இந்த கூட்டத்தில் அந்த பொண்ணு  வந்து வாழ வேண்டாம், வாங்க கிளம்பலாம்” என்றார்..
 “டேய் உலகா  பொறுமையா பேசுடா” என்றார் வசந்தா.
” உனக்கு இப்போ என்னடா பிரச்சனை  மகனே?!.. நான்  சொத்து  நகையோ  பத்தி கேட்க கூடாது அவ்வளவு தானே”..
“ஆமாம்” என்றார் உலகநாதன்..
 “சரிடா நான் வாயை திறக்க மாட்டேன் வா, உள்ளே வா” என்று உலகநாதனை அழைத்தவர். “ஆனாலும் உனக்கு இவ்வளவு கோபம் வரக்கூடாது டா”என்றார்  அண்ணனின் மகனை பார்த்து..
 “சித்தப்பா நான் ஒன்னு சொல்லட்டுமா?”.
“சொல்லு”..
 “ஒரு பொண்ணா  பெத்து, வளத்து,   அந்த பிள்ளைக்கு  நல்லது, கேட்டது எல்லாம்  சொல்லிக் கொடுத்து ,, படிக்க வச்சு,ஆளாக்கி,, நம்ம வீட்டுக்கு அனுப்புறாங்க,. அந்த பொண்ணு பொறந்த ஊர விட்டு,பொறந்த வீட்டை விட்டு,  கூட பிறந்தவங்களை  எல்லாத்தையும் விட்டுட்டு, தனக்கு எல்லாம் செய்த  அப்பாவையும்,  தன்னை  பெத்த  அம்மாவையும் விட்டு என் கூட வாழ வர்ர அந்த பொண்ணுக்கு நான் தானே நகை சீர் செஞ்சு அழைச்சிட்டு போகணும்.. அதை விட்டுட்டு  அந்த பொண்ணு கிட்ட கேட்டு வாங்குறது  தப்பு சித்தப்பா என்றவர் அது மட்டும் இல்ல”..
 “இப்போ  பாக்க வந்தோமே அந்த பொண்ணு  டீச்சர்,, அவங்க வீட்டுல என்னிடம் என்ன கேட்டாங்க தெரியுமா? அந்த பொண்ணு வேலைக்கு போகணும்னு ஆசைப்படுதுன்னு கேட்டாங்க, அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தும் வேலை பார்த்து என் குடும்பத்தையும் என் பிள்ளைகளையும் பார்த்துக்க போகுது,  அப்படிப்பட்ட பொம்பள பிள்ளை கிட்ட  நகையை கொடுங்க, சொத்தை எழுதி  குடுங்கன்னு கேட்கிறது  எவ்வளவு அசிங்கமான செயல் சித்தப்பா” என்றார் உலகநாதன்..
 என்  அண்ணன் பையனா இவன்? என்று பார்த்திருந்தார்  உலகநாதனினன்  சித்தப்பா..
 வசந்தாவுக்கு தன் வளர்ப்பு வீண் போகவில்லை என்று மகனை  பார்க்க பெருமையாக இருந்தது..
 உலகநாதன் பின்னிருந்து அவர் பேசியதை கேட்ட  சிவப்பிரகாஷமும் அவரின் அப்பா வேலாயுதத்திற்கும் இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க நாங்க  கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று நினைத்தவர்கள்..
” மாப்பிள்ளை” என்று உலகநாதனை  அழைக்க…
 திரும்பி  பார்த்த உலகநாதன்..
 “எங்க சித்தப்பா கேட்டதுக்கு,  நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூற..
 “பரவாயில்லை  மாப்பிள்ளை உங்க சித்தப்பா இப்படி கேட்க போய் தானே,உங்க  நல்ல குணத்தை  பற்றி  எங்களுக்கு தெரிஞ்சது ரொம்ப சந்தோஷம், மாப்பிள்ளை வாங்க உள்ள  வாங்க” என்று  அனைவரையும்  அழைக்க,,..
 உலகநாதன் தயங்கி நிற்க..
 “வாங்க மாப்பிள்ளை” என்று சிவப்பிரகாஷ் அவரின் கையை  பிடித்து  அழைத்துச் வீட்டினுள்ளே சென்றார்…
 உலகநாதன் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே  வந்து..
 ரதிதேவியை  உலகநாதனுக்கு கல்யாணம் பண்ண பேசி முடித்து.
ரதிதேவியை அழைத்து   அவள் தலையில் பூ வைத்து,, கல்யாணத்தை உறுதி செய்து முடித்தனர்.. பின்பு
 முகூர்த்த தேதி குறித்து முடித்தனர்..
 உலகநாதன் ரதி தேவியை பார்க்க அவளோ அவரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. அவள் அழுததற்கான  தடம்  அவள் முகத்தில் தெரிய..
 எதுக்கு அழுதிருப்பாள்  என்று தோன்றியது…
 கல்யாணம்  உறுதி செய்தவுடன்.. வந்த அனைவருக்கும் உணவு பரிமாறப்பட உலகநாதன் குடும்பத்தினர்  அனைவரும் உண்டு முடித்து கிளம்பும்போது கூட. ரதிதேவி அவள் அறையை விட்டு  வெளியே வரவில்லை உலகநாதன் அம்மா,, ரதி அறைக்கே  சென்று சொல்லி விட்டு  வந்தார்..
 உலகநாதன் அனைவரிடம் வருவதாக  சொல்லிவிட்டு  கிளம்பினார்..
 இன்னும் கல்யாணத்துக்கு இரண்டு வாரங்களே இருக்க..
 இரு வீட்டினருக்கும் கல்யாண வேலைகள் அதிகமாக இருந்தது. அனைவரும் மும்மரமாக   கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்..
 ரதியை  வேலைக்கு போக வேண்டாம் என்று அவரின் அப்பா  சொல்லிவிட..
 அவளோ  தனக்கு பள்ளியில் கொஞ்சம் வேலை இருக்கிறது என்று சொல்லியிருந்தாள்..
” பூ வச்ச உடனே போக வேண்டாம் பாப்பா இரண்டு நாள் கழித்து வேலைக்கு போ”என்று ரதியின் அம்மா சொல்ல..
  “சரி” என்று இருந்தவள், இரண்டு நாள் கழித்து வேலைக்கு செல்ல தயாரானாள்..
 ரதிதேவியின் மனதில் ஒரு எண்ணம் இன்றும் அவர் பள்ளிவாசலில் வந்து  நிற்பாரா.. என்ற எண்ணம் தோன்ற,,
அது எப்படி அவர் வருவார்..
 அவர் தான்  இங்கே என்னை  வந்து  பார்த்து கல்யாணத்தை பேசி முடிச்சிட்டாரே.
  இப்போ எப்படி வருவார், இன்னும் இரண்டு வாரங்களில் கல்யாணம்..
 அவருக்கும்   கல்யாணம்  வேலை இருக்குமே என்று தோன்ற..  உலக நாதனை பார்க்க வேண்டும் எண்ணம் தோன்றியது, அன்று கூட அவரை சரியாக  பார்க்கவில்லையே என்ற எண்ணத்தோடு கிளம்பினாள்..
 ரதியின்  அண்ணன்  அவளை  வண்டியில்  பள்ளிக்கு கொண்டு விடுவதாக   சொல்ல,,  “இல்லண்ணா, இன்னும் ஒரு வாரம் தானே   நானே  தனியாவே போகிறேன்” என்றவள்,,  அக்னியை “பள்ளிக்கூடத்திற்கு  கிளம்பு  வாடா” என்று அழைக்க..
“போங்கத்தை நான் அம்மா கூட இருக்கிறேன்”  என்று அக்னி பள்ளிக்கு   வர மறுத்திருக்க..
 சவிதா வீட்டுக்கு சென்றார் ரதி..
 வாசலிலே ரெடியாக நின்ற சவிதா ரதியை பார்த்து,,, வேகமாக வந்தவள்..
” வா வா கல்யாண பொண்ணு”என்றவள்..,
“ஏன்கா என்கிட்ட சொல்லல்ல கல்யாணத்தை  பத்தி” என்றாள்..
 “சும்மா பாக்க வர்ராங்கன்னு நினைச்சேன் சவிதா ஆனா  கல்யாணம் பேசி முடிவாகிருச்சு”..
 “சரி ராதிக்கா  மாப்பிள்ளை சென்னையாமே  உனக்கு புடிச்சிருக்கா?” என்றாள்..
 “எல்லாருக்கும் பிடிச்சிருக்கு, சவி அதனால ஓகே சொல்லிட்டேன்” என்றாள் ரதி,,
“அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்  பாரு ரதிக்கா,, உன் பின்னாடி ஒருத்தர் வந்தாரே அந்த ரஜினிகாந்த் அவர்  ரெண்டு நாளா உன்னைய பார்க்க காலையிலும் சாயங்காலம், உன்னை பார்க்க ஸ்கூல் வாசலில்  வந்து நிற்பாரே.. எனக்கு பயங்கர கோபம் போய் அவர்கிட்ட திட்டிட்டேன்,,..
ரதி அக்காக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு இனிமே பார்க்க வராதீங்கன்னு சொன்னேன்..
 அதுக்கு அவர் என்னை  பார்த்து சிரிக்கிறார் அக்கா,,
 போயா லூசுன்னு திட்டிட்டு வந்துட்டேன்,, இனிமே அவர் உன்னை பார்க்க வரமாட்டார்” என்று சவி  பேசிய படியே வர….
  “என்னது ரஜினிகாந்த் வந்தாரா” என்றாள்..
 “ஆமாக்கா நீ வரலையின்னு சோகமா மூஞ்ச வச்சு கிட்டு  நின்னாரு,, நான்  கோபப் பட்டு நல்ல டோஸ் விட்டேன்  இனிமே வரமாட்டார்”…
 நீ ஏண்டி அவரை  திட்டுன என்று மனதில்  தோன்றியதை ரதி  அவளிடம் கேட்க வில்லை……
 ரதிக்கு மனம் பாரமாக இருந்தது என்னை பார்க்கத்தான் வந்திருக்கிறார் நான்தான் ஸ்கூலுக்கு வரலையே, பாவம் என்னை  தேடி வருத்தப்பட்டிருப் பாருல இன்னைக்கு வருவாரா?.
 அவரைப் பார்க்க  வேண்டுமென்று  தோன்ற. இன்றும் வருவாரா  என்று ஸ்கூல் வாசலை  பார்த்தபடி வந்தாள் ரதி.
இன்றைக்கு  உலகநாதன் பள்ளிகூடத்துக்கு ரதியை பார்க்க வரவில்லை.
 ஸ்கூல்  வாசலிலே தேடியப்படியே வந்தாள்  ரதி. இன்று உலகநாதன் வரவில்லை, என்பதை அவளால ஏற்றுக்கொள்ள முடியவில்லை சுத்தி, முற்றிலும்  தேடினாள் உலகநாதனை..
 “ரதிக்கா அந்த ரஜினிகாந்த் வரலை நீ பயப்படாம உள்ளே வா” என்றால் சவிதா..
 ரதிதேவிக்கு கண்ணெல்லாம் கலங்கியது..
 பெண் பேசி முடிக்கும் போது ஏதோ சத்தம் கேட்டு ரதி வெளியே எட்டிப் பார்க்க..
 உலகநாதன் எழுந்துப்போவது தெரிந்தது,,  என்னாச்சு அவங்க ஏன்  எழுந்து போறாங்க என்று ரதி  பார்க்க,, அங்கே உள்ளவர்கள் “சீர்வரிசை பத்தி பேசியதால் பிரச்சனை, மாப்பிள்ளை கோச்சிகிட்டு எழுந்து  போயிட்டார்” என்று சொல்ல…
 ரதிக்கு தன் வீட்டில் நல்லா தானே சீர்  செய்வாங்க பிறகு ஏன் இவர் எழுந்து போனார்,, இன்னும் அதிகமா  எதிர் பாக்குறாங்கலோ என்று தோன்ற ரதிக்கு அழுகை வந்தது,, ஏன் இந்த அழுகை என்று அவளுக்கு தெரியவில்லை,, உண்மையிலே உலகநாதனை அவளுக்கு பிடித்து இருந்தது,,
முதல் பார்வையிலே தன் முன் சிரித்த முகமாக கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்து ஸ்கூலுக்கு சேர்க்கலாமா  என்று கேட்ட உலகநாதனின் மேல் கோபம் வந்தது, முதலில்  திட்டி அனுப்பியவள்,, பின்பு  மனதில் சிரித்து கொண்டே வந்தாள்,, எப்படி எல்லாம் ப்ரபோஸ் பண்ணுறாங்க பாரு, பசங்க ரொம்ப தேரிட்டாங்க பாரு,, உலகநாதனின்  உரிமையான பார்வை, பேச்சு அவளுக்கு ஒரு வித பயத்தை நேற்றே கொடுக்க..
உன்னை  நாளைக்கு பொண்ணு பேசி முடிக்க வர்ராங்க, மனசை அலையே விடாத  என்று  தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
இன்று தன்  வீட்டில் தனக்கு மாப்பிள்ளையாக அமர்ந்து இருந்தவனை பார்த்தது இவரா, மாப்பிள்ளை என்று அவள் மனதில் பூட்டி வைத்திருந்த ரஜினிகாந்த் வெளியே வந்தார்,, ரதிக்கு அவ்வளவு சந்தோஷம் வெளியே காட்டி கொள்ளவில்லை,,  மனசுக்குள் குத்தாட்டம்  போட்டு கொண்டு இருந்தாள்..
உலகநாதனின்  முகத்தை தன் மனதில் பதிந்து கொண்டாள் ரதி,, ஒரே ஒரு பார்வை தான்  பார்த்தார் ரதியை  உலகநாதன்..
 அந்த ஒற்றை பார்வையிலே அவருக்கு அவளின் மேல் உள்ள நேசத்தை கண்களால் அவளிடம் கடத்தி விட,, அந்த நோடியே  உருகி விட்டாள்  பெண்,,
ஒற்றை பார்வையில கண்களால் விருப்பத்தை சொல்ல முடியுமா? என்று ரதியே அவள் மனதிடம் கேட்டு கொண்டாள்..
 நேற்று கூட  அவரை சரியாக பார்க்கவில்லை, இப்போது கூட அவரை ஒரு முறை பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு கண்கலங்கிய படியே பள்ளிக்கூடம் சென்றாள்..
 அன்றைய வேலைகள்  பள்ளியில் அதிகமாக இருக்க ரதியை அது  இழுத்துக் கொண்டது,,
 பள்ளி முடியும் வேளையில்  தான் சவிதா அவளுடன் செல்ல காத்திருந்தவள்..
 “டைம் ஆச்சு  ரதிக்கா வாங்க'” என்று அழைத்ததும்  தான் அனைத்தையும் எடுத்து வைத்து கிளம்பினாள்,, ரதி  ஹிந்தி பாடம் எடுப்பதை தவிர ஆபிஸ் ரூம்பிலும் சில  வேலைகள்  பார்ப்பாள்,,..
சவிதா ஆபிஸ் ரூம் வெளியே நின்று கொண்டு  அழைக்க,.
“வர்ரேன் சவி” என்று வேகமாக கிளம்பினாள்..
 சவிதா  ஏதோ பேசிக் கொண்டே வர..
 அவளோ  உலகநாதனை   பார்க்க முடியவில்லையே என்று வருத்தத்தோடு   வெளியே வந்தவள்..
 காலையிலே அவர்  வரவில்லை சாயங்காலம் எப்படி வருவார் அவருக்கு ஏதாவது வேலை இருக்கும், என்று நினைத்து  வருத்தமாக இவள் குனிந்தபடியே பள்ளியைவிட்டு வெளியே  நடந்து வர…
 சவிதா  நிமிர்ந்து உலகநாதனை பார்த்து   “அக்கா அங்க பார்” என்றாள்..
” சும்மா வாளா” என்றாள்  ரதி..
 “ரதிக்கா அங்க பாரு ரஜினிகாந்த் வந்து இருக்காரு” என்று கூற..
 ரதி பள்ளிவாசலில் முன் நின்று இருந்து உலக நாதனை பார்த்தாள்.
 உலகநாதன் இவளை பார்த்து சிரிக்க.
 ரதி அவர் தானா என்று மீண்டும்  உலகநாதனை பார்த்தாள்  பைக்கில் மேல் சாய்ந்து போன் பேசிய படியே இவளை  பார்த்து கையசைத்து  உலகநாதன் சிரிக்க….
 ரதிக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை மிகவும் உணர்ச்சி வேசப்பட்டு இருந்தாள் காலையில் ஏன் வரவில்லை என்பது போல் அவனை பார்த்து முறைக்க..
 உலகநாதனுக்கு  அதுக்கும் சிரிப்பு வந்தது. அவள் தன்னை தேடி இருக்கிறாள் என்று அவள் முகத்தைப் பார்த்து உடனே தெரிந்து கொண்டவருக்கு சந்தோஷம் பல மடங்கானது..
 அவளைப் பார்த்தபடியே உலகநாதன் நிற்க..
 ரதியும் உலகநாதனை  விட்டு பார்வையை திருப்பாமல் நின்றிருந்தாள்..
 உலகநாதனை  பார்த்த சந்தோஷத்தில் ரதியின் முகம் மலர்ந்து சிரித்து , பின்பு அழுகை, சிரிப்பு என்று  இரண்டு சேர்ந்து  அவளது முகத்தில்  ஒரு வித அழகை தர….
 தன்னை இவ்வளவு தேடி இருக்காளா என் ரதி என்று உலகநாதனுக்கு  அவள் காட்டிய ஒவ்வொறு  முக பாவனையும்  ரசித்துப் பார்த்தவர்…
   இன்று வரும் போதே, ரதி வேலைக்கு  வருவாளோ, இல்லையோ வந்தாலும்   என்னை பார்த்து  வெட்கப்பட்டு  குனிந்து கொண்டு பேசாமல் போவாள் என்று நினைத்தவருக்கு,,அவள் தன்னை  பார்த்து  நின்று இவ்வளவு உணர்ச்சியை வெளிபடுத்துவாள் என்று நினைத்திறாதவர்…
பேசிக்கொண்டிருந்த போனை ஆப் பண்ணி  வைத்து  விட்டு, ரதியின் அருகில் வர..
“ஐஐஐ.. யோ ரதிக்கா ரஜினிகாந்த் பக்கத்துல  வர்ரார்” என்று சவிதா கத்த..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!