அடுத்த நாள் காலை கண் விழித்த சிவா தன் மேல் பாரமாக இருப்பதாய் தோன்ற கீழே பார்த்தான்.. அவனவன் தான் அவன் நெஞ்சில் சாய்ந்து அணைத்தவாறு படுத்து கொண்டு இருந்தான்… அந்த விடியலே அவனுக்கு இன்பமாய் இருந்தது… அவனோ அவள் காதோரம் ஊத அவள் அது கூட அறியாமல் சிறு குழந்தை போல் உறங்கி இருந்தாள்.. அவளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தவன் குளித்து முடித்து வந்து இருந்தான்.. சிவப்பு சட்டை வெள்ளை வேட்டி கட்டிகொண்டு வந்து அவன் மனைவியை எழுப்பினான்…
“ரிதும்மா எந்திரிச்சிக்கோ… விடிஞ்சு போச்சு பாரு…” என்று மென்மையாக கூறினான்… அவ்ளோ சினுங்கி கொண்டே திரும்பி படுக்க “அடியே என் பொண்டாட்டி எந்திரி…” என்று கூறினான்.. அவள் அப்போது தான் மெதுவாக கண் திறந்து பார்த்தாள்.. அவன் அருகில் படுத்து இருப்பதை பார்த்து பதட்டமானவள் பின் திருமணம் ஆனது ஞாபகம் வந்து நாக்கை கடித்து கொண்டு அவனை பார்த்தாள்..
அவன் அவளை ரசித்து விட்டு “எந்திரிடா.. போய் குளிச்சிட்டு வா.. லேட் ஆகிடுச்சு..” என்று நெற்றியில் முத்தமிட்டு அனுப்பினான்…
Advertisement
அவளும் வெட்கத்துடன் குளிக்க சென்றுவிட்டாள்.. குளித்து முடித்தவன் அங்கு இருக்கும் ட்ரெஸ்ஸிங் அறையில் மென்பட்டு ஒன்றை எடுத்து உடுத்தியவள் அதற்கேற்ப ஒரு சிறு அட்டிகையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்… அவள் வருவதற்குள் அறையை சுத்தம் செய்தவன் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்தான்…
வெளியில் அறையில் இருக்கும் கண்ணாடியில் தலையை தளர பின்னி பொட்டு வைத்து கொண்டவள் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்கும் போது சிவா அதனை வாங்கி கொண்டு நெற்றியிலும் உச்சியிலும் வைத்துவிட்டான்…. குங்குமத்தை வைத்தவன் அவளின் கன்னத்தில் பட்டென்று முத்தமிட்டு நிமிர்ந்தான்…
அவளுக்கு வெட்கமாய் இருந்தது.. இருந்தும் எதோ ஒரு உந்துதலில் அவளும் குங்குமத்தை எடுத்தவள் அவன் நெற்றில் வைக்க முயன்றாள்.. ஆனால் முடியவில்லை…. அவள் எக்கி வைக்க முயலும் போது அவனே கொஞ்சம் குனிந்து அவளுக்கு முகத்தை காட்டினான்…
Advertisement
வெட்கப்பட்டு கொண்டே அவனின் நெற்றியில் வைத்துவிட்டவள் அவன் கண்களை மூடி ஊதிவிட்டாள்… பின் இருவரும் கீழே வரும் போது குடும்பமே ஹாலில் தான் இருந்தனர்… அவளுக்கு வெட்கமாய் இருந்தது.. செண்பகம் அம்மா தான் பூஜை சென்று விளக்கேற்ற கூறினார்.. சாமியை வணங்கி விட்டு வந்தவர்களை பெரியவர்களிடம் ஆசீ வாங்க கூற அவர்கள் மருதாயி பாட்டியிடம் மட்டும் ஆசீ வாங்க கூறினர்… மருதாயி பாட்டியும் “சீக்கிரம் எனக்கு எள்ளு பேரனையோ பேத்தியோ பெத்து குடுங்க.. ரெண்டு பேரும் நூறு ஆயிசுக்கு புள்ள குட்டியோட சந்தோசமா இருங்க….” என்று கூறி ஆசீர்வாதம் செய்தார்.. அவளுக்கு அவர் கூறியதும் கன்னம் எல்லாம் சிவந்துவிட்டது….
Advertisement
பின் அனைவரும் காலை உணவு அருந்தி முடித்தனர்.. நிரவி இன்று இரவு ஊருக்கு அப்துல் குடும்பத்தோடு கிளம்புகிறாள்.. ரியாஸ் கல்யாணத்திற்கு வரவில்லை… அப்துலும் ஆஷாவும் மட்டும் வந்து இருந்தனர்.. நிரவியோடு அர்ஜுனனும் சுபாவும் வருகிறேன் என்று கூறினர்.. ஆனால் நிரவி தான் இன்று தான் திருமணம் முடிந்து உள்ளது உங்களுக்கு வேலை இருக்கும் நான் மட்டும் செல்கிறேன் என்று கூறிவிட்டாள்.. சசி வருகிறேன் என கூறிய போது “சசிப்பா பாப்பாவுக்கு உடம்பு சரியில்ல… அவளை பாருங்க… நான் என்ன தனியாவா போறேன்.. மாமா அத்தை கூட தானே போறேன்.. கவலைப்படாம இருங்க..” என்று கூறினாள்.. அனைவரும் அரை மனதாக ஒத்துக்கொண்டனர்…
இரவு ஏழரை மணிக்கு விமானம் என்பதால் மாலை ஆறு மணிக்கே விமான நிலையம் செல்ல வேண்டும் என வேகமாக கிளம்பினாள்.. கோவை விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதால் ஐந்து மணிக்கே நிரவி கிளம்பி இருந்தாள்… பெரியவர்கள் தவிர்த்து மொத்த குடும்பமும் விமான நிலையதிற்கு வழி அனுப்ப கிளம்பி இருந்தனர்….
அனைவரிடமும் பிரியாவிடை பெற்று தன் கல்லூரி வாழ்க்கையில் ஆதி எடுத்து வைக்க டெல்லிக்கு கிளம்பி இருந்தாள் நிரவிகா அர்ஜுனன்…
Advertisement
அவளை வழி அனுப்பி வைத்த அனைவரும் அர்ஜுனன் வீடு நோக்கி கிளம்பினர்.. நாளை மணமக்கள் மாப்பிளை வீட்டிற்கு கிளம்ப உள்ளனர்… அனைவரும் இரவு உணவு உண்டு விட்டு உறங்க சென்று இருந்தனர்…
இரவு பதினொரு மணிக்கு விமானம் டெல்லியில் தரையிறங்க ரியாஸ் இவர்களுக்காக காத்துகொண்டு இருந்தான்…. ஆஷா அப்துல் இருவரின் நடுவில் பாதுகாப்பாய் நடந்து வந்தாள்.. ரியாஸை பார்த்ததும் “யாஷ்” என்று அவனிடம் ஓடினாள்…
“வெல்கம் டெல்லி மை கேர்ள்” என்று கூறி அவள் தலையை ஆட்டியவன் “சாப்பிட்டீங்களா” என்று கேட்டான்.. “பிளைட்ல சாப்டோம் ரியாஸ்.. வீட்டுக்கு
கிளம்பலாமா” என்று கேட்டார் அப்துல்..
“கிளம்பலாம் பப்பா..” என்று கூறி அவரிடம் இருந்த லக்கேஜ் வாங்கி காரில் வைத்தவன் நிரவியுடைய பேக்கையும் வாங்கி டிக்கியில் வைத்தான்… பின் நால்வரும் வீடு நோக்கி சென்றனர்… அனைவரும் உறங்க செல்ல நிரவி எப்போது வந்தாலும் தங்கும் அறைக்கு உறங்க சென்றாள்…
அவள் பாத்ரூம் சென்று விட்டு வெளியில் வரும் போது ரியாஸ் கட்டிலில் அமர்ந்து இருந்தான்… அமைதியாக அவன் அருகில் வந்து அமர்ந்துவிட்டாள்…
“பாப்பு ம்மா….” என்று அழைத்தான்… அவள் கண்கள் கலங்கினாலும் அதை கட்டுப்படுத்தி கொண்டு “மாமு நான் நல்லா இருக்கேன்..” என்று கண் சிமிட்டி கூறினாள்… அவள் பொய் கூறுகிறாள் என்று தெரிந்தாலும் “பாப்பு ம்மா நீ தூங்கு” என்று கூறி அவள் தூங்கிய பின் தான் தன் அறைக்கு சென்றான்.. அவளை அவள் கவலையில் இருந்து வெளியில் கொண்டு வர வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டு உறங்க சென்றான்….
அடுத்த நாள் காலை நன்றாக உறங்கி கொண்டு இருந்தவளை “நிரா எந்திரி…. வேக்கப்” என்று ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்த நிரவியை எழுப்பி கொண்டு இருந்தான்…
நிரவி கண்ணை கசக்கி கொண்டு எழுந்தவள் மணி ஐந்து என இருப்பதாய் பார்த்து “போடா” என்று தூங்க “ஹே ஒழுங்கா எந்திரி… இனிமே அஞ்சு மணிக்கு கரெக்ட்டா எழுந்து வாக்கிங் போகனும்… சோ வேக்கப் கமான் குயிக்..” என்று கூறி அவளை குளியலறையில் தள்ளி கொண்டு விட்டவன் “பைவ் மினிட்ஸ் தான் டைம்” என்று கூறி வெளியில் சென்று விட்டான்…
இவளும் திட்டி கொண்டே முகம் கழுவி வாக்கிங் செல்ல ஏற்றவாறு உடை அணைந்து கொண்டு வெளியில் வந்தாள்.. இன்னும் ஆஷாவும் அப்துலும் எழுந்துகொள்ளவில்லை… எனவே ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டவன் அவளை அழைத்து கொண்டு அருகில் இருக்கும் பார்க் சென்றான்…
“நிரா இந்த பார்க் சேப் தான்… நீ இங்க சேப்பா வாக்கிங் போகலாம்… பர்ஸ்ட் டே அதனால் அரை மணி நேரம் மட்டும் வாக்கிங் பண்ணிட்டு இதே பிளேஸ்ல உட்காரு.. நான் ஒன் ஹவர்ல வந்துருவேன்” என்று கூறி தன் வழக்கமான உடற்பயிற்சி செய்ய சென்றுவிட்டான்… நிரவியும் அவன் எது செய்தலும் நல்லதாக தான் இருக்கும் என எண்ணி வாக்கிங் செல்ல ஆரம்பித்தாள்…
முக்கால் மணி நேரம் நடந்தவள் அவள் சொன்ன இடத்தில் அமர்ந்தாள்.. டெல்லி எப்போதும் காற்று மாசுபாடாக தான் இருக்கும்.. அனால் அந்த பார்க் மரங்கள் நிறைந்து ரம்மியமாக காட்சி அளித்தது.. அங்கு நிறைய பேர் வாக்கிங் நடந்து கொண்டு இருந்தனர்.. அது காவலர் குடியிருப்பின் பார்க் என்பதால் காவலர்கள் அவர்களின் பிள்ளைகள் என நிறைய பேர் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர்…. சொன்னது போல் வேர்வை நினைய இவள் அருகில் வந்த ரியாஸ் “பாப்பு வா வீட்டுக்கு கிளம்பலாம்” என்று கூறி வீட்டிற்கு சென்றான்..
வீட்டிற்கு சென்றது சலுகையாக “அத்தை பாருங்க இவனை காலைலயே என்னை தூங்க கூட விடாம வாக்கிங் கூட்டிட்டு போயிட்டான்” என்று கூறினாள்…
“மீ.. உங்க பாப்பாவை ஒன்னும் செய்ய மாட்டேன்.. பட் அவ கண்டிப்பா வாக்கிங் வந்து தான் ஆகனும்.. இன்னிக்கு லீவ் தான் டூ டேஸ்ல இவளுக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகுது.. சோ ஷாப்பிங் போகலாம்” என கூறி கொண்டு இருக்கும் போதே “ஷாப்பிங்கா” என இரு பெண்களும் உற்சாகமாக கூவி அறைக்கு சென்றுவிட்டனர்.. இவன் தான் போகும் இருவரையும் பார்த்து முழித்து கொண்டு இருந்தான்…
அப்துல் தான் “மகனே நீ ஷாப்பிங்னு சொன்னா இப்படி தான் ஆகும்.. இதுவரைக்கும் உன் அம்மா ஷாப்பிங் பண்றதை பார்த்தது இல்லையே.. இன்னிக்கு நிரவியும் சேர்ந்து இருக்கா.. அவளை கைல பிடிக்க முடியாது.. இன்னிக்கு உன் பர்ஸ் காலி தான்….” என்று கேலியாக கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்…
சொன்னது போல் இருவரும் கடையையே புரட்டி தான் போட்டனர்… அன்று முழுவதும் நால்வரும் சந்தோசமாக இருந்தனர்.. நிரவி வீட்டினரிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிட்டாள்.. அனைவரிடம் இருந்தும் தள்ளி இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டாள்…
இரண்டு நாட்கள் மின்னல் வேகத்தில் செல்ல அனைவரிடமும் வாழ்த்து பெற்று தன் முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை தொடங்க கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள்…
அதன்பின் நாட்கள் வேகமாக சென்று மூன்று மாதங்கள் ஓட ரியாஸ் போலீசாக செய்யும் வேலைகளை பார்த்து தானும் போலீசாக ஆசைப்பட்டு அவனிடம் கூற அவன் போலீஸ் வேண்டாம் என மறுத்து கலெக்டர் ஆகு என்று கூறினான்.. அதற்கு அவளும் ஒத்துக்கொள்ள அடுத்த நாளே அவளை அழைத்து கொண்டு அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்த்து இருந்தான்… ஆனால் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லவில்லை அவர்கள்.. ஆஷா அப்துல் இருவருக்கும் தெரியும்.. அவர்களும் நிரவி சொல்லி இருப்பாள் என கூறி கூறாமல் விட்டுவிட்டனர்…
அவள் டெல்லி சென்ற ஒரு மாதத்தில் அர்ஜுனனும் சுபாவும் அவளை பார்க்க டெல்லி கிளம்பி செல்லும் நேரத்தில் மருதாயி பாட்டிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனதால் அது தடைபட்டு விட்டது.. அவர் முழுக்க தேறி வர இரண்டு வாரங்கள் ஆனதால் யாராலும் எங்கும் நகர முடியவில்லை…
சிவா தன் விடுமுறை முடிந்து தன் மனைவியை அழைத்து கொண்டு பெங்களூர் பறந்துவிட்டான்… முதலில் டெல்லியில் இருந்தவன் இப்போது பெங்களூருவிற்கு மாறிவிட்டான்… அவர்கள் இன்னும் தங்கள் வாழ்க்கையை தொடங்கவில்லை.. ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு தொடங்கலாம் என அமைதியாக உள்ளனர்…
டெல்லியில் ரியாஸ் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் சரியாக இருக்கும் என்று நம்பினாள் நிரவி… அவன் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்வாள்… அவன் மூலம் அவனுக்கு அறிமுகம் ஆனவன் தான் சமர்.. டீவியில் பிறந்து வளர்ந்தவன்… இருவரும் சிறிது நாட்களிலேயே சொந்த சகோதரன் சகோதரி போல் பேச ஆரம்பித்து இருந்தனர்….
அன்று அனைவரும் டெல்லி வந்து இருக்க ரியாஸ் ஒரு விபத்து நடந்த இடத்திற்கு நள்ளிரவே சென்று இருந்தான்… பயம் இல்லாத இடம் என்பதால் அவன் இல்லாத சமயம் தனியாக வாக்கிங் சென்று விடுவாள்..
இன்றும் அவள் அது போல் கிளம்பி சென்றுவிட அவள் கிளம்பிய ஐந்து நிமிடத்தில் அவளின் குடும்பம் வீட்டிற்கு வந்து இருந்தது…கதவை திறந்தது என்னவோ ஆஷா தான் அர்ஜுனனை பார்த்து “அண்ணா” என்று கூறி அவர் கையை பிடித்து கொண்டவர் மற்ற அனைவரையும் பார்த்து “எல்லாரும் வாங்க வாங்க” என்று கூறி வரவேற்று அனைவரையும் உட்கார வைத்து “ஒரு நிமிஷம் இருங்க” என்று கூறி அப்துலை எழுப்பி பால் வாங்க கடைக்கு அனுப்பினார்… அவரும் அனைவரையும் வரவேற்று விட்டு கடைக்கு சென்றுவிட்டார்…. சுபா தான் ஆஷாவிடம் “குட்டிமா தூங்குறாளா” என்று கேட்டார்…
ஆஷா சிரித்து கொண்டே “பாப்பா இந்நேரம் வாக்கிங் போய் இருப்பா… இனிமே ஒரு மணி நேரம் கழிச்சு தான் வருவா…” என்று கூறினார்…
பக்கத்தில் தான் கடை என்பதால் அப்துல் உடனே வந்துவிட ஆஷா டீ போட சென்றுவிட்டார்… அதன்பின் அனைவரும் ரெபிரஷ் ஆகி வர ஆஷா கொடுத்த டீயை கொடுத்தனர்..
அவர்கள் குடித்து முடிப்பதற்கும் நிரவி வருவதற்கும் சரியாக இருந்தது… மூன்று மாதமாக யாரையும் பார்க்காமல் சரியாக பேசாமால் இருந்தவள் இன்று அனைவரையும் பார்த்து கலங்கிவிட்டாள்…
அர்ஜுனன் சுபாவை அணைத்து கொண்டவள் அடுத்து சசியை அணைத்து கொண்டவள் “மிஸ் யூ சசிப்பா” என்று கூறினாள்.. அவரும் “மிஸ் யூ குட்டிமா” என்று கூறி அணைத்து கொண்டாள்… அடுத்த இரண்டு நாள் நிரவி தன் குடும்பத்துடன் சந்தோசமாக இருந்தாள்…. ஞாயிறு இரவு அனைவரும் கிளம்ப சந்தோசமாகவே வழி அனுப்பி வைத்தாள்… அதன்பின் நாட்கள் வேமாக ஓட அவள் தன் முதல் வருட படிப்பை முடித்து இருந்தாள்… அனைவரும் ஊருக்கு வர கூற அப்போது தான் யூபிஎஸ்சி தேர்வுக்கு படிப்பதை கூறினாள்… எனவே திருவிழாவிற்கு கூட செல்லவில்லை… இதுவே அடுத்த வருடமும் தொடர்ந்தது….
திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும் சிவா ரித்திகா இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.. சிவாவிற்கு அது பெரிய விஷயமாய் தெரியவில்லை… ஆனால் ரித்திகா தான் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்… நான்கு நாட்கள் முன்பு தான் ஊரில் இருந்து வந்து இருந்தாள்…