Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 5

உளமாற உனதாகிறேன் – 5

 

இன்னும் சற்று நேரத்தில் திருமணம்… ஆனால் அதற்கான எந்தவொரு படபடப்பும் இல்லாது அமைதியாக கண்ணாடியை பார்த்திருந்தான் வாசு கீர்த்தனன். நிச்சயம் திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை என்றெல்லாம் சொல்ல மாட்டான்…

 



Advertisement

ஆனால் என்னவோ வெண்பாவை தனக்கானவளாக பார்க்க இயலவில்லை… சரி திருமணம் முடியட்டும் எல்லாம் சரியாக செல்லும் என்றவனின் கனவு தகர்ந்ததை போன்று பெண் ஓடிப் போய்விட்டாள் என்ற செய்தி அவன் செவி மோதியது!

 

நிச்சயம் தந்தை இதை சும்மா விடாமட்டார் என்பதை போல் கீழே வளையாபதி தாம் தூம் என்று குதித்து கொண்டிருந்தார்.

Advertisement

 

Advertisement

“என்னடா சொல்ற… கல்யாண பொண்ணு ஓடிப்போயிட்டாளா… எங்க அந்த பெருமாளு… அந்தாளை நாலு கிழி கழிச்சா பொண்ணு எங்கன்னு தெரிஞ்சிடப்போகுது”  என்று செய்தி சொன்னவனிடம் எகிறிக் கொண்டிருக்க…

 

“எதுக்கு இப்படி அவசரப்படுறிங்க… யாரோ ஏதோ சொன்னங்கன்னு நீங்க பாட்டுக்கு கத்திட்டு இருக்கிங்க… மொத சம்பந்திக்கு போனை போட்டு கேளுங்க… இல்லைன்னா அந்த மெருமாளுக்கு போடுங்க‌…” என்ற மங்களத்தின் வார்த்தையில் தானாய் செல்பேசி பெருமாளுக்கு அழைப்பு விடுக்க… அந்த பக்கம் சொன்ன செய்தியில் கொதித்தெழுந்தான் வளையபாதி…

Advertisement

 

“என்னய்யா பெருமாளு… நம்ப வைச்சு கழுத்து அறுக்குறியா… எவனக்கிட்ட காசு வாங்கிட்டு இந்த வேலை பார்க்குற… இப்போ நேரா அங்க தான் வரேன்… பொண்ணு மட்டும் இல்ல… அப்புறம் இந்த வளையாபதியை வேற மாதிரி பார்ப்ப” என்று பட்டென்று அழைப்பேசியை துண்டித்துவிட்டவரின் பார்வை தனக்கு எதிரில் எந்த சலனமும் இல்லாது இருந்த மகனின் மீது நிலைத்தது!

 

மங்களத்தின் பார்வையும் வாசு மீதுதான்…

 

“என்ன வாசு இந்நேரம் உனக்கும் விஷயம் தெரிஞ்சிருக்குமே… எந்த ரியாக்ஷனும் இல்ல… இதே எப்படி நான் எடுத்துக்கிறது…”

 

“நீங்க எப்படி வேணும்னா எடுத்துக்கோங்க…  எப்படியோ உங்க புருஷன் பார்த்த பொண்ணு ஓடிப்போயிடுச்சு… இனி அடுத்து என்ன… அடடா… இன்னும் முகூர்த்தத்துக்கு அரைமணிநேரம் தான் இருக்கு… அதுக்குள்ள என்ன செய்ய போறாரு உங்க புருஷன்” என்றவனின் நக்கலில்…

 

“வேணாம் வாசு… என்னை சீண்டாத… குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நடக்கும்… நடத்திக் காட்டுவேன்…”

 

“எப்படி நடத்திக் காட்டுவிங்க… அக்காவுக்கு பதில் தங்கச்சியை கல்யாணம் செஞ்சு வைப்பிங்களா…”

 

“கல்யாணம் நடக்கனும்னா அதையும் நடத்திக் காட்டுவேன்…” என்றவரின் பேச்சில் நாற்காலியை விட்டு விருட்டென்று எழுந்தவன்…

 

“என்ன சொன்னிங்க… என்ன சொன்னிங்க… உங்க அரசியல் ஆதாயத்துக்கு எதை வேணும்னாலும் செய்விங்களா… அது மட்டும் முடியாது…”

 

“முடியாதுன்னா அந்த குடும்பத்தையே உருத் தெரியாம அழிச்சிடுவேன்…” என்ற பதிலில் அப்படியே அமர்ந்துவிட்டான் வாசு. நிச்சயம் அதை செய்யக்கூடியவர் தான்…

 

“இன்னும் நீங்க மாறவேயில்ல தான…  நான் போகும் போது எப்படி இருந்திங்களோ… இன்னும் அப்படியே இருக்கிங்க… இந்த கல்யாணம் மட்டும் நடந்தா எப்போவும் உங்களுக்கு நான் கிடைக்க மாட்டேன்… அதை யோசிச்சுக்கோங்க” என்றவனின் பேச்சில் ஒரு நொடி அதிர்ந்தாலும்…

 

“இந்த கல்யாணம் நடந்தே ஆகனும் வாசு…” என்றவரை ஆழப் பார்த்தவன்… அமைதியாக சென்றுவிட… என்னவோ உறுத்தியது மங்களத்திற்கு…

 

“என்னங்க வாசு இவ்ளோ சொல்லும் போது… நாம கொஞ்சம் யோசிக்கலாமே…”

 

“என்ன யோசிக்கிறது மங்களம்… ஊருல நடக்குற அத்தனை கல்யாணத்துக்கும் தாலி எடுத்து கொடுக்கிறவன் நான்… அப்படியிருக்க என் மகன் கல்யாணம் நடக்காம போயிட விட்ருவேனா… அப்படி விட்ட இந்த ஊரு என்னப்பத்தி என்ன பேசும்…”

 

“நீ வர்றியா… இல்ல நான் மட்டும் போகட்டுமா…” என்றவர் நமச்சிவாயத்தின் இல்லம் நோக்கி செல்ல..‌. மங்களமும்… அவரோடு இணைந்து கொண்டார்…

 

•••••••••••••

 

அழுதழுது கண்கள் வீங்கி போயிருக்க… இதற்கு மேலும் என்னால் முடியாது என்பது போல் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள் கண்ணுக்கினியாள்.

 

சத்தியமாய் வெண்பா இப்படி செய்வாள் என்று கனவிலும் அவள் நினைக்கவில்லை… முதலில் அத்தை ஞானசெல்வி கத்தி கூச்சலிட… தவறாக அவர் புரிந்து விட்டார் என்று தான் நினைத்தாள்.

 

“அய்யோ அத்தை எதுக்கு இப்படி கத்துறீங்க… வெண்பா இங்க பக்கத்துல தான் போயிருப்பா… இருங்க போன் பண்றேன்…” என்றபடி கால் செய்ய முதலில் ரிங் போய் கட்டாகியது. மீண்டும் முயற்சிக்க செல்பேசி அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று குரல் பதிவு வர… ஏதோ ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.

 

அதற்குள்ளாகவே விடயம் காட்டுத்தீ போல் பரவிட… கோவிலில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த பெருமாளும் வீட்டிற்கு வந்துவிட்டார்.

 

“ஏய் இனியா… இனியா…” என்று அந்த வீடே அதிரும்படி கத்தியபடி உள்நுழைந்தவரை கண்டு அதிர்ந்து நின்றாள் இனியாள்…

 

“வெண்பா எங்க போய் இருக்கா… ஒழுங்கா சொல்லு… உனக்கு கண்டிப்பா தெரியும்… எங்க அவ… சொல்லு… சொல்லு” என்று அவளை அடிப்பதை போலவே பாய்ந்திட…

 

“அய்யோ நில்லுங்க.‌‌ அவளுக்கு எதுவும் தெரியாதாம்… நானும் நல்லா கேட்டுட்டேன்… கேட்டா மாப்பிள்ளையை பார்க்க தான் வெண்பா போனான்னு அடிச்சு சொல்றா” என்று நடுவில் வந்த பிரபாவை ஓங்கி அறைந்திருந்தார் பெருமாள்.

 

“ஏய் வாயை மூடுடி… என்ன நீயும் உன் தங்கச்சிகளோடு சேர்ந்து நாடகம் போடுறீயா… கொன்னு புதைச்சிடுவேன்…” என்று கர்ஜித்த மாமனை கண்டு உண்மையில் பயந்து தான் போனாள் இனியாள்.

 

“நிஜமா மாமா… எனக்கிட்ட வாசு மாமாவை பார்க்க போறேன்னு தான் சொன்ன” என்று விம்மலோடே சொல்லிட…

 

“ஏன்டி இதை நாங்க நம்பனுமா… போறதுக்கு முன்னாடி உங்க அக்கா உன்னை கட்டி புடிச்சு அழுதா… நீ அவளை சமாதானப்படுத்துன… ஆமாவா… இல்லையா… வாயை தொறந்து சொல்லுடி” என்று ஞானசெல்வியின் பேச்சில் தானாக அவள் தலை அடியாது. இதையெல்லாம் பார்த்த நமச்சிவாயமோ ஓரமாக இடிந்து போய் அமர்ந்திருந்தார்.

 

“சொந்த ஊருக்கு வந்து நிம்மதியா இருக்கலாம்னு நினைச்ச மனுஷனை இப்படிப் பண்ணிப்புட்டாளே… இனி என்னன்னு வெளியே தலையை காட்டுறது” என்று வாசகியும் அழுதிட… புயலென வீட்டினுள் நுழைந்தார் வளையாபதி.

 

“யோவ் பெருமாளு… எங்கய்யா கல்யாண பொண்ணு… ஊருல ஆளாளுக்கு ஒன்னொன்னு பேசிட்டு இருக்கானுங்க… என்ன நடக்குது இங்க… ஒத்த மவன் கல்யாணம்… ஏதோ வேண்டுதலங்கிறதால கோவில்ல வைச்சிட்டோம்… ஆனா சாய்ங்காலம் வரவேற்புக்கு அத்தனை பேரை கூப்பிட்டு இருக்கேன்… கல்யாணம் மட்டும் நின்னுச்சு… நீ இருக்கிற இடம் இல்லாம போயிடும்…”

 

“நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது… ஓடிப்போனவளை தேடிப் பிடிப்பியோ… இல்ல அக்காவுக்கு பதில் தங்கச்சியை மனவறையில உட்கார வைப்பியோ… அது உன் கஷ்டம்… ஆனா குறிச்ச முகூர்த்தத்துல இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்… இல்ல உன் குடும்பம் இருந்த இடம் தெரியாம அழிச்சிடுவேன்…” என்றவரின் குரலில் அப்பட்டமான மிரட்டல்.

 

மிரட்டியவர் வீட்டின் வெளி சென்று அமைதியாக அமர்ந்துவிட… வீட்டினுள் இருப்பவர்களுக்கு தான் அந்த அமைதி இல்லாது போனது…

 

நிச்சயமாய் இப்படியொரு திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் பெருமாளே கூட வெண்பா இல்லாததால்  திருமணம் நின்றுவிடும் என்று தான் நினைத்திருக்க… அதற்கு பதிலாக இனியாளை பெண் கேட்பார்கள் என்று எண்ணவில்லை. ஒரு நொடி அர்ஜூனின் முகம் வந்து போனாலும்… அதை துரத்தியவர் அடுத்தடுத்து நடக்க வேண்டியதை யோசித்தவர் அதை செயல்படுத்தவும் முனைந்தார்.

 

“ஏய் பிரபா… தலைவர் சொன்னது காதுல விழுந்துச்சா இல்லையா… போ… போய் சீக்கிரம் உன் தங்கச்சியை ரெடி பண்ணு…” என்றவரின் பேச்சில் அதுவரை நின்றிருந்த இளியாள் சரக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

 

“முடியாது மாமா… என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது… நீங்க என்னை கொன்னே போட்டாலும் சரி… முடியாது… முடியாது… இது தான் என் முடிவு… அப்பா… பிளிஸ் அமைதியா இருக்காதிங்க… நீங்க மாமாக்கிட்ட சொல்லுங்க… இது இல்லைன்னா அதுன்னு பேரம் பேச நான் என்ன பொருளா… பிளிஸ் வாயை தொறந்து பேசுங்கப்பா” என்று நமச்சிவாயத்தின் கையை பற்றி அழுதுக் கொண்டிருக்க… மகளை ஒரு பார்வை பார்த்தவர்… மருமகனிடம் தன் பார்வையை நிலைத்தார்.

 

“இனியா சொல்றதும் சரிதான் மாப்பிள்ளை… வேணாம்… நின்னுப் போன கல்யாணம்… நின்னதாவே இருக்கட்டும்… எதுவும் வேண்டாம்” என்று சோர்ந்த குரலில் சொல்ல…

 

“ஓ… சரி மாமா… சரி… இந்த கல்யாணம் நிறுத்திடுங்க… அப்படியே அதே கையோட எனக்கு கருமாதியும் பண்ணிடுங்க…” என்றபடி சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேலே ஊற்றிக் கொள்ள…

 

“அய்யோ அடியாத்தே எம்மவன்… டேய் பெருமாளு வேண்டாம் டா… டேய் சிவம் ஆம்பிளை புள்ளை இல்லாத உனக்கு புள்ளைக்கு சமமா நின்னவனுக்கு இதுதான் நீ செய்ற கைமாறா…” என்று ஞானசெல்வி மார்பில் அடித்து கொண்டு அழ.‌..

 

“அய்யோ வேணாம் மருமவனே… இப்போ என்ன இந்த கல்யாணம் நடக்கனும்… அவ்ளோதான… நடக்கும்… இனியா… மனப்பொண்ணா வந்து உட்காருவ” என்று முடித்துவிட அனைத்தும் இனி முடிந்தது என்ற நிலையில் எதுவும் பேச திரணியற்றவளை அப்படியே அமர்ந்துவிட்டாள் இனியாள்.

 

ஊர் கூடியிருக்க… மேளதாளம் முழங்க… அக்னி சாட்சியாக…  முருகனின் முன்… மாங்கல்யம் சூட்டி… அவளின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து கண்ணுக்கினியாளை தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் வாசு கீர்த்தனன்.

 

கலங்கிய விழிகளிலிருந்த விழுந்த கண்ணீர்துளி அவன் கரத்தின் மீது விழ இருவரின் விழிகளும் சங்கமித்துக் கொண்டது…

 

தொடரும்…

 

One thought on “உளமாற உனதாகிறேன் – 5

  • Divyalakshmi Sugumar

    Venba too selfish🙄🙄🙄🙄

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!