Skip to content
Post Views: 1,311
ரதியின் சொந்தகாரர்கள் “எவ்வளவு தைரியமா எங்க ஊருக்கு வந்து இருப்பான்,
அடிங்க அவனை, நம்ம வீட்டு பொண்ணு இப்படி இருக்க இவன் தானே காரணம், இவனை அடிக்காம பேசிட்டு இருக்கீங்க” என்று பேச..
அனைவரும் உலகநாதனை அடிப்பது போல் வர.. பயந்து போன மாயா,,. எழ முடியாமல் எழுந்து நின்று, ” ப்ளீஸ் எங்க அப்பா எந்த தப்பும் பண்ணல, அவரை ஒன்னும் பண்ணிடாதீங்க” என்று உலகநாதனின் முன் வந்து அவரை காப்பது போல் நிற்க.
Advertisement
” அட என்னம்மா, ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்திட்டு விட்டு போனவனை நல்லவன் மாதிரி பேசுற,, அவன் பண்ணது தப்பு”..
” எங்க அப்பா எந்த தப்புமே பண்ணல” என்றாள் மாயா..
Advertisement
Advertisement
“உங்க அப்பா பண்ணது பெரிய தப்புமா அதுக்கான தண்டனை நாங்க கொடுத்தே தீருவோம், டேய் அவனை கட்டி வைங்கடா” என்று ஊரு தலைவர் ஒருவர் கூற…
ஒரு சில இளைஞர்கள் உலகநாதனை பிடிக்க வர..
Advertisement
“அவ்வளவுதான் உங்களுக்கெல்லாம் மரியாதை எங்க அப்பா மேல கைய வச்சீங்க யாருன்னு பாக்க மாட்டேன் கொன்னுடுவேன் எல்லாரையும்” என்றவள் பத்ரகாளி போல் தந்தையை தனக்கு பின் நிற்க வைத்து கொண்டவள்..
ஒற்றை ஆளாக நின்று தந்தையை காத்து நிற்க..
“என்னம்மா இப்படி வயித்துல பிள்ளையை வச்சி கிட்டு கத்திட்டு நிக்கிற, உன் அப்பன் பண்ணது சரியா, அவனால ஒரு குடும்பமே பாதிக்க பட்டு இருக்கு அதுக்கு பதில் சொல்லு நீ”.. என்றதும்..
“நான் எல்லாத்துக்கும் பதில் சொல்லுறேன் அதுவரைக்கு என் அப்பாவை யாரும் தொடக்கூடாது, தள்ளி போங்க என்று உலகநாதனின் அருகில் நின்ற சில இளைஞர்களை அவள் விரல் நீட்டி தள்ளி போகச்சொல்ல..
அவளின் கோபத்தில் ஏதோ உண்மை இருப்பது போல் அனைவரும் தெரிய அமைதியாக அவள் என்ன கூறுவாள் என்று பார்த்து நிற்க,,..
“எங்க அப்பா மேல எந்த தப்பும் இல்ல,, ரதியம்மா மேல என் அப்பா உயிரையே வச்சு இருந்தாரு, தன்னை விரும்பிய பொண்ணு சாகக்கிடக்கும் போது அதை கேட்ட என் அப்பா அனுதாபபட்டு என் அம்மாவை காப்பாத்த போனார்,,
நீங்களே சொல்லுங்க ஒரு உயிர் நம்மலால போகும் போது அவங்களை காப்பாத்த போகாம சந்தோஷமா தாலி கட்டி எப்படி வாழ சொல்லுறீங்க,,” என்றவள்.. ஊரு தலைவர் முன் வந்து நின்று.
“நீங்களே சொல்லுங்க ஒரு பொண்ணு உங்களை விரும்பி, நீங்க அவளை விரும்பாம, வேற பொண்ணு கழுத்தில் தாலி கட்ட போகும் போது, அந்த பொண்ணு உங்கள மறக்க முடியாம பாய்சன் சாப்டு, ஐ, சீ யூ வுல சாகக்கிடக்குற, அந்த விசயத்தை நீங்க கேள்வி பட்டு, அந்த பொண்ணா காப்பாத்த போவீங்களா?, இல்லை அந்த பொண்ணு செத்தா கூட பரவால, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்வேன்னு இருப்பீங்களா?, பதில் சொல்லுங்க ?” என்றவுடன். ஊரு தலைவர் அமைதியாக இருக்க..
“எங்க அப்பா பண்ணதை மாதிரி தானே நீங்களும் பண்ணி இருப்பீங்க,, மனுதாபிமானம் உள்ள எல்லாவனும் இதை தான் செஞ்சு இருப்பான்,, எங்க அப்பா பண்ணது தப்பே இல்ல,” என்று மாயா கூற..
“சரிமா நீ சொல்லுற மாதிரி வச்சுக்கலாம்,, உங்க அப்பா ஏன் திரும்பி வரல?”…
மாயா தன் தாத்தா நாடகம் ஆடி, உலகநாதனை, ரதியையும் பிரித்தார், அவருக்கு உதவியது என் அப்பா பிரண்ட் சுரேஷ்” என்றவள், தன் தாத்தா செய்த அனைத்தையும் ஒன்றும் விடாமல் கூற,…
ஊர் காரர்கள் மாயா சொல்வதை நம்ப வில்லை,, “என்னம்மா இப்படியெல்லாம் சொன்னா நாங்க நம்ப முடியும், “இதெல்லாம் எங்களால நம்ப முடியாதுமா எங்க ரதிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க, எங்க ஊரு தேவதை அந்த பொண்ணு, இப்போ பாரு எப்படி இருக்கு” என்று ரதியை காண்பிக்க..
அக்னி மாயா அருகில் வந்து “நீ சொல்லுற கதையை எல்லாம் நான் நம்ப மாட்டேன், உங்கப்பன் என் அத்தைக்கு பண்ண துரோகத்துக்கு பதில் சொல்லியே ஆகணும்” என்றான்..
” எங்க அப்பா எதுவும் பண்ணல அவர் நல்லவர் தூய்மையானவர் எனக்கு கடவுள் மாதிரி” என்றாள்..
அக்னி மாயாவை இழுத்து வந்தவன் அவளை ரதியின் அருகில் நிற்க வைத்து ” பாருடி என் அத்தையே பாரு எப்படி இருக்காங்க பாரு,,உங்க அப்பனை பாரு அவன் எப்படி இருக்கான்,, என் அத்தையை இப்படி ஆக்கி வச்சுட்டு அவன் மட்டும் கல்யாணம் பண்ணி பிள்ள பெத்து, சந்தோஷமா காரு, பங்காளவென்று வாழ்வான்,, என் அத்தை உன் அப்பனை விரும்பியதற்க்காக பித்து பிடிச்சு திரியணுமா? “…
” உங்க அத்தை இப்படி ஆனதுக்கு நீங்க எல்லாரும் தான் காரணம்,, எங்க அப்பா ரதியம்மை விட்டுட்டு போனாரு,, நீங்க எல்லாரும் எங்க அப்பாகிட்ட வந்து தானே பேசி இருக்கணும்,,.
அத விட்டுட்டு யாரோ ஒருத்தர் சொன்னது நம்பி,, என் அப்பா கல்யாணம் பண்ணிட்டாரு ஏன் நம்புனீங்க,, எங்க அப்பாவை நேருல வந்து தானே நீங்க பார்த்து பேசியிருக்கணும்,, யார் எத சொன்னாலும் நம்புவீங்கல,…?
ஹாஸ்பெட்டல் சூசைட் பண்ண பொண்ணுக்கு ஒரு வாரத்தில் எப்படி கல்யாணம் நடக்கும், அத கூட நீங்க யாரும் யோசிக்கல,, என் தாத்தா, உலகநாதனும், பெர்னிலாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க சொன்னத எப்படி நீங்க நம்புனீங்க,, எங்க அப்பாகிட்ட வந்து சண்டை போட்டு இருக்கனும்,, என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதிலுன்னு அன்னைக்கு வந்து அவர் சட்டையைபிடிச்சு கேட்டு இருக்கனும், அத விட்டுட்டு,, இப்போ பேசி என்ன பயன்.. உங்க பொண்ண நீங்க தான் சரியா பார்த்திருக்கனும்..
உங்க அத்தையை இப்படி ஆக்கி வச்சுறக்கிறதுக்கு நீங்கள் தான் காரணம்”… என்றாள் மாயா..
” யாரோ உங்க அப்பனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னாங்கன்னு, சொன்ன..
உன் தாத்தா தானடி சொன்னாரு அதானே உண்மை,, என் அத்தை உன் அப்பனை நினைத்து இங்கு பித்து புடிச்சிருக்காங்க, உன் அப்பன் கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளைய பெத்து சந்தோஷமான வாழ்ந்து இருக்கான்”..
” நீங்க பார்த்தீங்க எங்க அப்பா கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ள பெத்து சந்தோசமா வாழ்ந்ததை நீங்க பார்த்தீங்க? ” என்றாள்..
“ஆமாண்டி அதுதானே உண்மை” என்றவன் மீண்டும் உலகநாதனை திட்டி அக்னி அவரை அடிக்க போக…
அக்னியின் முன் வந்து நின்றவள்.. “உனக்கு அவ்வளவு தான் மரியாதை, என் அப்பா மேல வச்ச கையை எடுடா ” என்றாள்..
“முடியாது உங்க அப்பனை பார்க்க பார்க்க எனக்கு ஆத்திரமா வருது நம்பிக்கை துரோகி பய,, இவன் என் அத்தை வாழ்க்கை அழிச்சவன், என் குடும்ப நிம்மதியை கெடுத்துட்டான், என் கையால தான் இவன் சாகனும்?” என்றவன் உலகநாதனை கொல்லும் வேகத்தில் அடிக்க..
“ஏய்ய்…. ” என்று கத்தியவள் அக்னியின் சட்டையை பிடித்து தன் முன் கொண்டு வந்தவள்..
” யாருடா துரோகி என் அப்பா துரோகியா? “.. என்றவள் கதறி அழ..
” ஆமாம் டி உன் அப்பன் தான் துரோகி” என்று அக்னி கூற..
” இன்னொரு வாட்டி என் அப்பாவை சொன்ன”..
“சொல்வேண்டி சொல்வேன் ஒரு பொண்ணை ஆசைக்காட்டி ஏமாத்திட்டு போன பச்ச துரோகி உன் அப்பன்”..
” இல்லை என் அப்பா யாருக்கும் துரோகம் பண்ணல” என்று கத்தி சொல்ல..
” நீ கத்தி சொன்ன பொய் உண்மை ஆகிடுமா?”.. என்றான் அக்னி..
மகள் எங்கே அனைவரின் முன்பு உண்மையை சொல்லிவிடுவாளோ என்று பயந்த உலகநாதன் “மாயா நீ அமைதியா இரு, வா நம்ம கிளம்பலாம், தலையில் அடிபட்டு இருக்கு ஹாஸ்பிடல் போகலாம் வா,” என்று மகளை கைபிடித்து இழுக்க..
” தப்பிச்சு ஓட பார்க்கிறான் பாரு பொட்ட பய” என்று அக்னி வார்த்தையை விட..
” எங்க அப்பாவை என்ன சொன்ன? சொன்ன வாயை கிழிச்சு விட்டுடுவேன்” என்றாள் மாயா ஆத்திரமாக..
“உனக்கு உண்மைய சொன்னா கோபம் வருதா, உன் அப்பனை என்கிட்ட நின்னு பதில் சொல்ல சொல்லடி பாப்போம்”… என்றான்..
” நான் சொல்லுறேன் உங்களுக்கு பதில்”.. என்றவள்..
“உங்க அத்தை கஷ்டப்படுறாங்க,, எங்க அப்பா கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்தாரு அவ்வளவு தானே உங்க பிரச்சனை”..
“ஆமாம்” என்றான் அக்னி..
மகள் செய்யும் விபரிதத்தை உணர்ந்த உலகநாதன் “மாயா நீ வா” என்றார்…
“நீங்க பட்டது எல்லாம் போதும் அப்பா, இனியும் நீங்க எனக்காக சிலுவை சுமக்க வேண்டாம்”..
“இவ அப்பன் பெரிய ஏசுபிரான் அவனுக்கு இவ வக்காலத்து வாங்குறா”..
“உனக்கு அவ்வளவு தான் மரியாதை” என்று அக்னியை பார்த்து திட்டியவள்..
ஞானபிரகாஷ் அருகில் சென்ற மாயா “என் அம்மா பெர்னிலா, என் அப்பா எட்வின், அவங்க ரெண்டு பேருக்கும் பிறந்த பொண்ணுதான் நான் மாயா,,
என் இனிஷியல் பாதர் எட்வின் என்றதும் அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க..
என் அப்பா அம்மா கார் விபத்துல இறந்துட்டாங்க எனக்கு கார்டியனா இருக்காரு என்னோட அப்பா உலகநாதன்..
எங்க அம்மா பெர்னிலாவை உலகநாதன் அப்பா கல்யாணம் பண்ணல, உலகநாதன் அப்பா கல்யாணமே பண்ணிக்கல போதுமா”.. என்றவள்.
“யாராவது என் அப்பாவை பத்தி தப்பா பேசுனீங்க அவ்வளவு தான்” என்றாள் ஆத்திரமாக..
“மாயாம்மா நான் உங்க அப்பா தான்டா, இவங்களுக்கு ஏன் நீ விளக்கம் சொல்லுற”..
“இல்லப்பா எனக்காகவும் என் அக்கா ரியாக்காகவும் நீங்க வாழ்ந்தது போதும்” என்றவள்..
ஞானபிரகாஷிடம் வந்து “இத நீங்க நம்புறீங்களா, என் அப்பா எந்த தவறும் செய்யலை” என்றவள்,, “ஒரு நிமிசம்” என்றவள்..
உலகநாதனிடம் இருந்த அவர் போனை வாங்கியவள், “இது என் அப்பா போன்” என்றவள்..
“இதோட பாஸ்வர்ட் என்ன தெரியுமா? ” என்றவள்..
ஞானதுரையின் கண்முன்னாடி “ஆர், எ, டி, எச், ஐ, ரதி” என்று ஆங்கிலத்தில் டைப் பண்ண,, அது அழகாய் ஓபன் ஆகியது அந்த போன் வால் போட்டோ பேப்பரில் ரதியும், உலகநாதனும் தோள் மேல் கையை போட்ட படியே ஒரு புகைப்படம் இருக்க..
அதை பார்த்த ஞானபிரகாஷ்க்கு தலை சுற்றியது..
“இப்போவது நம்புறீங்களா என் அப்பாவை” என்றதும்..
அவர் தலை நம்புறேன் என்று வேகமாக ஆடியது…
“ரதியம்மா இப்படி ட்ரெஸ் போட்டுகிட்டு, என் அப்பா ஞாபகமா சுத்துறாங்க,, ஆனா என் அப்பா கோர்ட் சூட் போட்டு கிட்டு,, ரதியம்மை மனசுல நெனச்சிகிட்டு, அவங்களை மறக்க முடியாம போலியா வாழ்ந்துட்டு இருக்காரு,, இதுக்கு நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க” என்று ஞானபிரகாஷை பார்த்து கேட்டவள்..
அக்னியை திரும்பி பார்த்து சொடக்கு பொட்டு அவனை அழைத்தவன், இப்போ பதில் சொல்லு, நான் சொல்லிட்டேன் என் அப்பா தப்பே பண்ணலன்னு,, நிறுபிச்சிட்டேன்..
ஆனா நீ என்னை பண்ணி வச்சு இருக்குறதுக்கு பதில் சொல்லு,” என்று அக்னியை பார்த்து மாயா கேட்க…
கூனி குருகி போனான் அக்னி…
error: Content is protected !!