Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

35. Dayani Shalokshan - ஹார்ட் பீட் திருடன்

ஹார்ட் பீட் திருடன் – 09

ஹார்ட் பீட் திருடன் – 09

அர்ஜுன் மற்றும் ஜோகித்தின் திட்டம் முறியடிக்கப்பட்டது. மகிஷா கரன் அதை அடித்திருந்தனர். நிகழ்வும் முடிய அனைவரும் கலைந்தனர். ஜோகித்தின் பார்வை அவளில் ரசனையாக படிந்தது தனது ஹேண்ட் பேக்குடன் கிளம்ப ஆயத்தமாகனவளை எதிர்பாராது அவள் கையைப் பற்றி அருகில் இருந்த அறையொன்றில் தள்ளி கதவை சாத்தினான். அவளோ ஜோகித்தை அதிர்ச்சியாய் நோக்க, அவனது ராயல் பர்பியும் பாசம் அவளது இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கச் செய்தது அவளை நெருங்கி சுவரில் அவளை சாய்த்தவன் “செம்மையா இருக்கடி” என்றான் அவளோ முறைக்க அவள் முகத்தில் ஊத அவளுக்கு உடல் சிரித்து அடங்கியது.

அவள் முகத்தில் இருந்து விரலால் கோடிட்டவன் அவள் கழுத்தை அவன் விரல்கள் அடைந்ததும் அவள் கழுத்தில் இருந்த டைமன் நெக்லஸை ஒரு விரலால் வருடியவன் “ரோசிய விட இந்த ஜுவல் உனக்குத்தான் பொருத்தமா இருக்கு” என்றார். அவனை அதிர்ச்சியுடன் அவள் நோக்க “அஞ்சறைக்கு உன் ஆபீஸ் பக்கத்துல இருக்குற காபி ஷாப்ல வெயிட் பண்றேன்  வந்துடு பேப்”  என கண் சிமிட்டியவன் விலக அவளுக்கு இன்னும் நிலை கொள்ளவே முடியவில்லை அவன் அருகாமையில் ஒருபுறம்  நகையை அவன் கண்டு கொண்டது என ஒருவித படபடப்பு அவளுள்.

அப்போது அவள் அலைபேசி தன் இருப்பைக் காட்ட கரண் தான் அழைத்திருந்தான். “மகி எங்கயிருக்க ” உள்ள பேக் எடுக்க வந்தன்,  இருடா  வாரன்” என்றவள் அவ்வறையிலிருந்து  வெளியேறி வர கரணும் வர இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.



Advertisement

அவர்கள் வெளியேறுவதை ஜோகித் தனது காரில் இருந்து பார்த்தான்.அவள் தான்  நகையை திருடியுள்ளாள் என அவள் கழுத்தை பார்த்த நொடியே கண்டு கொண்டான். எல்லா விதத்திலும் பர்பெக்ட்டை எதிர் பார்ப்பவனுக்கோ அவளின் இச் செயல் முதலில் கோபத்தையே தந்தது. தான் த்ரில்லிங்கிற்காக  செய்வது ஒரு வகை என்றால் அவள் ஏன் திருட வேண்டும் என பல கேள்விகள் அவனுள்

அர்ஜுனிடம் கூட மகி பற்றி ஜோகித் சொல்லவில்லை குவார்ட்ஸிற்கு வந்த மகி தான் அணிந்திருந்த நகையைக் கழற்றி மீண்டும் அதை இருந்தது  போலே கோர்த்தவள் அதனை  ஒரு பெட்டியில் வைத்துப் மூட்டினாள்.

குளித்து வந்தவள்  அலைபேசியைப் பார்க்க அதிலோ ” இரவு ஒன்பது மணி ஸ்டார் கிளப் டேபிள் ரெண்டு ” என குறுஞ்செய்தி வந்திருந்தது.

Advertisement

உணவை உண்டவள் கரணிற்கு அழைக்க அவனோ அழைப்பை ஏற்கவில்லை.’ தனியாப் போகுமே என அவள் யோசனையோடு ஜீன்ஸ் ஷர்டில் தாயாரா கியவள், டைமண்ட் நகையையும் தனது ஹேண்ட் பேக்கில் வைத்தபடி கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேறினாள்.

Advertisement

அவள் சற்று தூரம் வந்ததும் ” அவள் முன் ஒரு கறுப்பு கார் வந்து நின்றது. கண்ணாடியை இறக்கிய ஜோகித் ” கெட் இன்” என்றான். அவளோ அவனை         முறைத்த படியே முன்னேற காரும் அவளோடு வந்தது. ” பச்ச என்ன”  ” இந்த நேரத்தில் தனியா போறது சேஃப்டி இல்ல” என்றான். அவளோ பெருமூச்சுடன் அவன் அருகில் அமர காரும் மிதமான வேகத்தில் சென்றது.

” எங்க போக “ஸ்டார் கிளப்” என்றாள்.” கிளம்புக்கா?, என்றவன் அதிகமா குடிக்காத அப்புறம் தொப்ப வந்துடும்”  என்றான் அவள் இடையை பார்த்தபடி.

அவளுக்கோ அவன் பேச்சு ஒருவித அசூசையை தந்தது. அவனைக் காணும் போதெல்லாம்  அவளின் இதயத் துடிப்பு அதிகரிக்கும் அது ஒரு வித உணர்வை அவளுள் தோற்றுவித்தது. கிளப்பின் முன் கார் நிற்க, காரில் இருந்து இறங்கியவள் கிளப்பினுள் நுழைந்தவள் டேபிள் இரண்டில் அமர்ந்தாள். அவளை விட்டு இரண்டு மேசைகள்  தள்ளி ஜோகித் அமர்ந்து கொண்டான்.

Advertisement

சிறிது நேரத்தில் அவள் முன் கோர்ட் சூட்டில் ஒருவர் வந்தமர்ந்தார் அவள் முன் ஒரு பெட்டியை வைத்தவர்  அதனைத் திறந்து அவள் முன் காட்டினார்.அதனை புருவம் சுருக்கி பார்த்தவள் அப் பெட்டியில் இருந்த பணத்தை கைகளால் வருடியவள்,தன் பையைத் திறக்க  அவள் மேசையின் கீழ்  துப்பாக்கியை வைத்தவர். “பேக்ல கண்ணா?  என் சீறலாய் கேட்க, அவரை அலட்சியமாக பார்த்தவள்   பேக்கிலிருந்து  நகைப் பெட்டியை அவர் முன் வைத்தாள்.

அதனை திறந்தவருக்கோ கண்கள் கூட அவ் நகையைக் கண்டதும் ஒளிர்ந்தது. அடுத்த நொடி மேசையில் அவர் வைத்த பெட்டியை எடுத்தவள் விறு விறுவென கிளப்பை விட்டு வெளியேறினாள்.

கண்கள் இடுங்க அவளைப் பார்த்த ஜோகித்  அவள் பின்னே சென்றவன் ” மகி” என அழைக்க வெளியேறியவள் ” நீ இன்னும் போகலையா?” என் அவனை முறைக்க  ” பாதில விட்டுட்டு போன பழக்கம் எனக்கில்லை ” என்றான் அவளின் கண்களைப் பார்த்தபடி   அவளுக்கோ  அவன் பார்வை ஏதோ செய்ய சில நிமிடம் அவன் பார்வையில் கட்டுண்டு நின்றவள் அருகில் சென்ற வாகனத்தின் சத்தத்தில் தன்னிலை மீண்டவள் முன்னே செல்ல ” மகி லேட்டா கிட்டு ,என்றவன் அவள் கையில் இருந்த பெட்டியில் பார்வையைப் பதித்தவன் ” நானே ட்ராப் பண்றேன் ” என்றான்.

அவள் “சரி” எனும் விதமாக தலையாட்டியவள் காரில் எரிக்கொண்டாள் காரும் மெதுவாக முன்னேற மகி யோசனையில் ஜோகித்தை பார்த்தவள் “உங்க பேரென்ன?” என கேட்க சத்தமாய் சிரித்தவன் “ரொம்ப ஏர்லியா கேட்டுட்ட”  “ஜோகித்” என்றான்.

“ஓகே ஜோகித், என்ன பண்றீங்க? “நானும் ஐடிலான் வொர்க் பண்றேன், பெரும்பாலும் வொர்க் ஃப்ரம் ஹோம் தான்” என்றான்.

“ஓஓ என்றாள்”ஜோகித்திற்கோ அவள் தன்னைப் பற்றி விசாரிப்பது ஒரு வித குதுகலத்தைத் தந்தது. அழுத்தமான அவனும் ஆழ ஊடுருவி விட்டாள் இந்தத் திருடி.

” ம்ம் உங்க ஃபேமிலி ” அவங்க வெளியூர்ல இருக்காங்க ” ரெண்டு தங்கச்சும் ,ஒரு தம்பியும் என்றான்.” ம்ம்” என்றவள்  எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா?”  எனத் தயக்கமாய்க்  கேட்க,காரை அவள் குவாட்டர் அருகில் நிறுத்தியவன்.  அவளை பக்கவாட்டாக திருப்பிப் பார்க்க “ஒரு இடத்துல இந்தப் பணத்தக் கொடுக்கனும்” என்றாள் அவனோ அவளை புருவம் சுருக்கி பார்க்க” அன்பு இல்லம் பொல்லாச்சி ” என்றாள் .

ஜோகித்தும் இவள் பற்றிய தகவலைத் திரட்டும் போது பொல்லாச்சி என இருந்ததே தவிர அவனும் அதைப் பார்கக்வில்லை

“நாளைக்கு லீவு நாள் தானே போகலாம்” என்றான்.

அவளும் “தாங்ஸ்” என்றவள் புன்னகையுடன் இறங்க,” சிரிச்சா ரொம்ப அழகாயிருக்க , எப்பவும்  இப்படியே இரு” என்றான். அவளோ ஒன்றும் பேசாது குவார்ட்ஸிற்குள் நுழைந்தாள்.

கரணிற்கு அழைக்க அவனும் ” என்ன மகி நாளைக்கு பொல்லாச்சிக்கு போகனும் எல்லாம் ஓகே” என்றான்.

“மகி  நாளைக்கு நானும் ஊர்க்கு போறேன்  பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு முடியல” என்றான். “சரிடா” என்றவள் அவனின் வங்கிக் கணக்கிற்கு இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியவள் கிளப்பில் இருந்து கொண்டு வந்த பணத்தை எண்ணி அடுக்கியவள் தன்னை சுத்தப்படுத்திக்  கொண்டு தூங்கிப் போனாள்.

வீட்டிற்கு வந்த  ஜோகித்திற்கும் மகிஷாவின் எண்ணம் தான் ” அப்போ திருடி ,இல்லத்துக்கு செலவு பண்றாளா? என யோசித்தவனுக்கோ ,ஒரு மாதிரியாக மனம் பிசைய ஆரம்பித்தது, பார்த்த முதல் பார்வையில் காதல் வருமா என போன மாதம் கேட்டால் பைத்தியம் என்றிருப்பான். ஆனால் இப்போது கண்டதும் காதல் சாத்தியம் என்பான்.

நாளை அவளுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதே அவனுக்கு ஒரு வித  ஆனந்தத்தை தந்தது. ஜோகித்தும் மெல்ல மெல்ல உறக்கத்திற்கு சென்றான்

” மறு நாள் காலை  கறுப்பு ஜீன்ஸ்  மற்றும்  வெளிர் நீல நிற டீ சர்ட்டில்  தயாராகிய ஜோதித்தை கண்ட அர்ஜீன் “மச்சி எங்க போக, இவளோ காலைல” எனக் கேட்க, அவனோ “ஏன் ஆளப் பார்க்கப் போறன்.” எனப் பாடியபடி கண்சிமிட்ட  அர்ஜீனோ ” என்னடா நடக்குது இங்க”என முழிக்க ஜோகித்தோ ,அவன் கண்ணத்தில் தட்டிக் கொண்டு ஸ்டைலாக கூலரை  அணிந்து கொண்டு வெளியேறினான்.

காரை எடுத்துக் கொண்டு மகிஷாவின் குவார்ட்ஸின் முன் நிற்க அவனைக் கண்ட் வாட்ச்மேனோ” சார் இன்னைக்கும் கிஃப்ட்டா” எனக் கேட்க நீல நிற சுடிதாரில் அழகோவியமாக வந்தாள் மகி  அவள் கையில் ஒரு பெட்டியும்  தோளில் ஹேன்ட்  பேக்குடன்  வர அவளைக்  கண்ட வாட்ச்மேனோ  ” வாழ்த்துக்கள் தம்பி  ,தங்கமான பொண்ணு ,நல்லாப பார்த்துக்கோங்க,” என்றார்.

மகிஷாவோ அவரை முறைக்க  ஜோகித்தோ இதழுக்குள் சிரிப்பை அடக்கியவன் முன் கதவைத் திறந்து விட  அவளும் உள்ளே அமர காரும் புறப்பட்டது.

” ஜோகித்”  அவனும் அவளைப் பார்க்க, இந்தப பணத்தை  நீங்க டொனேட் பண்ற போல அன்பு இல்லத்துக்கு கொடுங்க” ” அவனோ ஏன் நீ கொடுத்தா என்ன?”

பார்வையை முன்னே திரும்பியவள்   அடிக்கடி நான் அன்பு இல்லத்து அக்கவுண்ட்டிற்கு பணம் போடுவர்,ஆனா இது பெரிய தொகை  கட்டாயம் தேவியம்மா கேட்பாங்க அதான்’… என்றாள் முகம் கசங்க. அவள் சொல்ல வருவது புரிந்ததால் அவன் வேறு எதுவும் பேசவில்லை.

நேற்று இரவு அவள்  அன்பு இல்லத்திற்கு வந்தது,படித்தது என அனைத்தையும் அறிந்து கொணட்வனிற்கோ அவள் மேல் காதல் ஒருபடி கூடியது. ஆம், அவள் திருடி  அவ் இல்லத் தேவையை பூர்த்தி செய்வதை எண்ணியவனுக்கோ அவள் மேல் இரக்கமே சுரந்தது.

அவனுக்கு ஒரு நிமிடம் போதும் இல்ல  நிலமையை மாற்ற  அப்படிச் செய்ய முற்படும் போது  மகிஷா எப்படி எடுத்துக் கொள்வாள்  இதுவரை தன்னைப் பற்றி எதுவுமே  தெரியாதே என பலவாறு தனது சிந்தனையையில் மூழ்கியிருந்தான்.

” காலை உணவை உண்ண ஒரு ஹோட்டலின முன் காரை நிறுத்தினான்.அதுவோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அவளும் சிறு தயக்கத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்.

சென்னை வந்து ஆறு மாதம் முடிவடைந்துள்ளது.ஆபிஸ் பார்ட்டி,பெத்டே பார்ட்டி என இப்பயியான ஹோட்டலுக்கு வந்துள்ளாள் தான் ஆனால் மனதிற்கு பிடித்தவருடன் வருவது இதுவே முதல் தடவை ஜோகித்தின் அன்பு, கேயாரிங் அனைத்தும்  அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் அவனின் காதலை ஏற்கத் தயக்கம் தனது அநாதை என்னும் அடையாளம். அதுவே  அவனிடம் இருந்து சற்று தள்ளி வைத்தது அவளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!