Skip to content
Post Views: 1,218
இவர்களுக்காக வெளியே காத்திருக்க உலகநாதனிடம் வந்தவள், “மாயா எனக்கு பாப்பாவை தர மாட்டாளாம்” என்று சொல்லி விட்டு அழுக..
“கொஞ்ச நேரம் தான் வாங்கம்மா என்று மாயா ரதியை அழைத்தாள்.
Advertisement
“நான் வரமாட்டேன், எனக்கு வலிக்கு போ” என்றாள் ரதி அழ..
Advertisement
“அப்போ பாப்பாவை தரமாட்டேன்’ என்று அவள் இவளை மிரட்ட.
Advertisement
அழுதுட்டு இருந்த ரதியை பார்த்த, உலகநாதன் .
Advertisement
“அவ தரலைன்னா என்ன நாம போய் பாப்பாவை தூக்கிட்டு வந்துடலாம், நீ அழதடா”,, என்று உலகநாதன் ரதியை சமாதானம் பண்ண.
“அப்படியா” என்பது போல் ரதி உலகநாதனை பார்க்க..
” ஆமாம் டா உனக்கு இல்லாத உரிமையா?, உனக்கு இல்லாத பாப்பாவா ? நாமளே பாப்பாவை தூக்கிட்டு வந்து வளர்த்துக் கொள்ளலாம் ஓகேவா” என்று ரதியை சமாதானம் பண்ண..
மாயாவை பார்த்து சிரித்த ரதி.. “பார்த்தியா இந்த வளர்ந்தவன் பாப்பாவை என்கிட்ட தந்திடுவான்” என்று உலகநாதனை பார்த்து சொன்னவள்..
உலகநாதனின் கையோடு கைகோர்த்துக் கொண்டவள்..
“நம்ம வீட்டுக்கு போகலாம் வளர்ந்தவனே, இங்கே எனக்கு இருக்க பிடிக்கல” என்று கூற..
“ரதிம்மா இன்னும் கொஞ்சம் தான் வாங்க” என்று மாயா ரதியை ப்யூட்டி பார்லருக்கு அழைக்க..
உலகநாதனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவள் போக மாட்டேன் என்பது போல் நிற்க.
“போதும் மாயா ரதிக்கு இதுவரைக்கும் பண்ணியதே போதும் அவளை ரொம்ப தொந்தரவு பண்ணாதே” என்றார்…
தன்னை பியூட்டி பார்லரில் இருந்து காப்பாற்றி உலகநாதனை ரதிக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்றிலிருந்து மாயா எதாவது அவளுக்கு பிடிக்காததை சொன்னாலும் உலகநாதன் தான் வந்து நிற்பாள்..
உலகநாதன் அவளுக்கு சப்போர்ட் பண்ண,, அனைத்திற்க்கும் உலகநாதனிடம் தான் வந்து நிற்பாள் ரதி…
ரதி உலகநாதனின் வீட்டை சுத்தி சுத்தி வருவாள்…வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு விளையாடுவாள், உலகநாதனின் வீட்டில் வேலை செய்பவர்களிடம் கதை பேசுவாள்,, வீட்டில் வேலை செய்பவர்கள் கூட ரதி ப்பிரெண்டாகினர்,..
ரதி உலகநாதனின் வீட்டில் நன்றாக இருந்தாள்..
அவளிற்கு இருக்கும் ஒரே, ஒரு தொல்லை மாயா தான்,
ரதிம்மா இங்கே வாங்க,குளிங்க, சாப்பிடுங்க, தூங்குங்கள் என்று டைம் பார்த்து கூற..
அவளை முறைத்தபடியே அனைத்தையும் செய்தாள் ரதி.
அன்று மாயா, ரதியை கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று மாயா ரதியை புடவை கட்ட வைக்க,, .
“முடியாது” என்றாள் ரதி..
“ரதிம்மா பிளிஸ்” என்று சொல்ல..
ரதி வெளியே வந்த உலகநாதனை தேடினாள்..
“அப்பா இல்ல ஆபிஸ் போயிட்டாரு வாங்க” என்று ரதியை புடவை கட்ட வைத்து, அவளும் புடவை கட்டிக்கொண்டு கோவில் சென்று வந்தனர்..
உலகநாதன் அக்னியின் ஆபீஸ்க்கு வந்திருந்தார், அக்னியை பார்க்க …
அக்னியே நினைத்திருந்தான் உலகநாதனை பார்த்து பேசி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று..
உலகநாதனே அவன் ஆபீசுக்கு அவனை தேடி வந்திருக்க “வாங்க” என்று தன் முன் இருந்த சேரில் அமர சொன்னான்….
அக்னிக்கு எப்படி பேசுவது என்று தெரியவில்லை.. அவன் அமைதியாக இருக்க..
உலகநாதன் தான் பேச ஆரம்பித்தார் “உன்கிட்ட ஒன்னு கேட்கனும் அக்னி” என்று..
” சொல்லுங்க”…
“ரதிக்கு எப்படி தலையில் அடிபட்டது, டாக்டர் ரதியை செக்பண்ணப்போ அவள் தலையில் அடிப்பட்டிருந்ததை பார்த்து கேட்டாங்க.., ரதி தலையில் இத்தனை சிச்சஸ் போடும் அளவிற்கு, அவளுக்கு எப்படி அடி பட்டது அக்னி? என்கிட்ட விவரமா சொல்லு ” என்றார் உலகநாதன்…
இதே கேள்வியை உலகநாதன் முன்பே கேட்டிருந்தால், அவரின் சட்டையை பிடித்து எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம் என்று கத்தி இருப்பான் அக்னி,, இப்போது அவனால் அதை கூற முடியவில்லை ஏன்னென்றால் உலகநாதன் பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டவன் அமைதியாக இருக்க….
“சொல்லு அக்னி என்ன நடந்தது ரதிக்கு” என்று உலகநாதன் கேட்க..
அன்றைய நாள் ஞாபகத்துக்கு வந்தது அக்னிக்கு..
உலகநாதனிடம் சொல்ல ஆரம்பித்தான்….
அன்னைக்கு ஒரு நாள் அத்தையை வீட்டில் காணோம்னு எல்லாரும் ரதியத்தையை தேடிக்கிட்டு இருந்தோம்,, அத்தையை எங்கே தேடியும் காணல..
நான் தான் கிணத்து பக்கம் அத்தை இருக்காங்களான்னு பார்க்கப் போனேன்,, பார்த்தா ரதி அத்தை கிணத்து பக்கத்துல தான் உக்காந்துட்டு இருந்தாங்க..
எனக்கு அப்போ ஒன்னும் சரியா தெரியல, புரியல, புரியுற வயசும் இல்ல, அய்யப்பாவும், அய்யம்மாவும் இறந்து போய் சில நாட்கள் தான் இருக்கும்,,
அத்தை யார்கிட்டயும் பேச மாட்டாங்க அழுது கிட்டே இருப்பாங்க,, கண்ணுல இருந்து மட்டும் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்,, நான் தான் அதை பார்த்து துடைச்சு விட்டு சாப்பாடு கொடுப்பேன்,,.
அத்தை வேண்டாம் என்று சொல்லுவாங்க,, நான் தான் நீங்க சாப்பிட்டாதான் நான் சாப்பிடுவேன்னு சொல்லி அத்தைகிட்ட அடம் பண்ணி சாப்பிட வைப்பேன்,,..
அன்னைக்கு அத்தை கிணத்து கிட்ட ஏன் உக்காந்துட்டு இருந்தாங்கன்னு எனக்கு அப்போ புரியல,, “நீ வா அத்தை அப்பாவும் சித்தப்பாவும் உன்னை தேடுறாங்கன்னு கூப்பிட்டேன்”..
அத்தை “எல்லாருக்கும் என்னால தான் கஷ்டம் அப்புகுட்டி, அத்தை யாருக்கும் தொந்தரவு தராமா தூரமா போறேன்னு” சொன்னாங்க”..
அதுக்கு “நானும் உன் கூட வருவேன்னு சொன்னேன்”..
“நீ நல்லா படி பெரிய ஆளா வரனும் அப்புகுட்டின்னு சொன்னாங்க”…
“சரி அத்தை நீ வீட்டுக்கு வான்னு நான் கூப்பிட்டேன்”..
“இனி நான் வீட்டுக்கு வந்து வாழ்ந்து யாருக்கு என்ன பிரயோஜனம் என்று சொல்லி புலம்புனாங்க”..
“அத்தை நீ கவலைப்படாத நான் பெரியவனாகி உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்..
அத்தை என் தலையில் முத்தம் கொடுத்துட்டு “நல்லா படிக்கணுமுன்னு” சொன்னாங்க..
எனக்கு அத்தை பேசுவதை பார்த்து பயமா இருந்துச்சு,, “அத்த நீயும், அய்யப்பா,அய்யம்மா மாதிரி செத்து போக போறீயான்னு கேட்டேன்..
” இல்லடா கண்ணான்னு அத்தை என்னை கட்டிபிடிச்சு அழுதாங்க”..
“நீ சாகப் போனா என்னையும் சேர்த்து உன் கூட கூட்டிட்டு போ அத்தையின்னு” நான் சொல்லி அழுதேன். என்று அன்று பேசியது போலவே இன்றும் பேசிவிட்டு அக்னி குலுங்கி அழ….
உலகநாதனுக்கு அக்னி அழுததும் தாங்க முடியவில்லை, உடனே எழுந்து அக்னியின் அருகில் சென்றார்,,.
அக்னி முகத்தை மூடிக்கொண்டு அழுக,, அவனின் தலையை வருடி விட்டார் உலகநாதன்..
அவர் வருடி விட்டதும்,, “சாரி மாமா” என்று உலகநாதனை இடுப்போடு அணைத்துக் கொண்டான் அக்னி…..
” அழாதே சொல்லு ” என்று அவனின் முதுகை தட்டிக்கொடுக்க,,.
அத்தைக்கு நான் பேசியதும் மனசு தாங்கல போல,,..
“நான் சாகமாட்டேன் அப்புகுட்டின்னு சொல்லியிட்டு, நீ போய் அப்பாவை கூட்டிட்டு வான்னு சொன்னாங்க”..
“சரி அத்தைன்னு” நானும் சொல்லிட்டு அப்பாவை கூப்பிட போனேன்..
திடீர்னு எனக்கு ஏதோ தோணுச்சு திரும்பி பார்த்தேன்,,
அத்தை கிணத்துக்கு மேல நின்னுட்டு இருந்தாங்க,, அவங்க குதிக்க போறாங்கன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு..
அத்தை கிணத்துல குதிச்சுட்டாங்க, அதை பார்த்ததும் “அத்தை நானும் உங்க கூட வர்ரேன், என்னையும் உன்கூட கூட்டிட்டு போங்கன்னு” கத்திட்டே ஓடிபோய் நானும் கிணத்துல குதிச்சிட்டேன்..
அத்தைக்கு நான் பேசுனது கேட்டிருக்கும் போல.. அத்தை என்னை கிணத்துல இருந்து காப்பாத்தி மேலே நீந்தி தூக்கிட்டு வந்தாங்க,,.
நான் மயக்கத்துல இருந்தேன்,, என் கன்னத்த தட்டி, என் வயித்துல இருந்த தண்ணீய வெளியே எடுத்து என்னை காப்பாத்தி விட்டுட்டு,, அவங்க மயங்கி விழுந்துட்டாங்க….
எனக்கு ஒன்னும் புரியல அத்தை தலையில் இருந்து ரத்தம் நிறைய வந்துச்சு,, நான் பயந்து கத்தி எல்லாரையும் கூப்பிட்டேன்…
அத்தை ஹாஸ்பெட்டலில் சேர்த்தோம். அவங்க கிணத்துல விழுந்ததினால தலையில நல்ல அடிப்பட்டு ,, அவங்களுக்கு நிறைய தையல் போட்டாங்க,.
அத்தைக்கு பழசு எல்லாம் மறந்து போச்சு,,நாங்க யாருன்னு கூட அவங்களுக்கு தெரியல ஆனா உங்கள மட்டும் ஞாபகம் இருந்துச்சு உலகநாதன் உலகநாதனுன்னு உங்க பேர மட்டும்தான் சொன்னாங்க,,
ஆனா எங்களை எல்லாம் யாருன்னு அவங்களுக்கு தெரியல..
நாங்க எல்லாம் எங்களை பற்றி சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டோம் அதனால எங்ககிட்ட பேசுவாங்க ஆனா அதுக்கப்புறம் குழந்தை மாதிரி நடக்க ஆரம்பிச்சாங்க..
நாங்களும் நிறைய டாக்டர்கிட்ட போனோம் சரி பண்ண முடியல என்று அக்னி கூறி முடிக்க..
இரு ஆண்களும் சிறிது நேரம் அமைதியாக இருக்க..
அக்னி தன்னிடம் இருந்து ரதியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை உலகநாதனிடம் தந்தான்..
அதை அக்னியிடமிருந்து வாங்கிக் கொண்டவர்..
” ரொம்ப நன்றி அக்னி” என்று கூற..
எதற்கு என்பது போல் அக்னி அவரை பார்த்து நிற்க..
“என் ரதியின் மேல் இவ்வளவு பாசம் வச்சிருக்கியே, அதுக்கு உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்” என்று உலகநாதன் உணர்ச்சி வசப்பட்டு கூற..
” என் அத்தையை இனிமேல் நல்லா பாத்துக்கோங்க அது போதும்” என்றவன்.
” நான் என் அத்தையை பார்க்க உங்க வீட்டுக்கு வரலாமா? “…
” உன் அத்தையை மட்டும் தான் பார்க்க என் வீட்டுக்கு வரணுமா” என்றவருக்கு..
தன் மகளை அவன் கூறவில்லையே என்ற வருத்தம் தோன்ற..
” என் வாழ்க்கை, என் உயிர் எல்லாமே உங்க வீட்டுல தான் இருக்கு அதை பத்திரமா பார்த்துக்கோங்க” என்றான்..
அவனின் முகம் சொல்ல முடியாத வேதனைகளோடு தவிப்பதை பார்த்த உலகநாதன்.
” சீக்கிரம் எல்லாம் சரியாகும்,, வீட்டுக்கு வா” என்றவர்..
ரதியை தேடி அவர் வீட்டுக்கு செல்ல..
வீடே அமைதியாக இருந்தது..
ரதியும், மாயாவும் இன்று கோயில் கோயிலாக சுற்றித்திரிந்தவர்கள் வீட்டிற்கு வந்ததும் அசதியாக இருக்க, அவரவர் அறையில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தனர்…
மாயா தன் அறை பக்கத்தில் உள்ள ஒரு அறையை ரதிக்கு ஒதுக்கி கொடுத்திருந்தாள்..
தந்தை ரதியை பார்க்க. தன் அறைக்கு வர சங்கடபடுவார் என்று ரதிக்கு தனி அறை கொடுத்திருக்க….
இருவரும் அவரவர் அறையில் தூங்கிக் கொண்டு இருக்க..
அக்னி தன்னவள் கஷ்டப்பட்டதை சொல்ல சொல்ல துடித்துப் போனவர்.
எனக்காக தன் உயிரையே குடுக்க துணிந்து, தலையில் அடிபட்டு அனைத்தையும் மறந்து, தன்னை மட்டும் மறக்க வில்லையே அவள்.
அப்போ அவள் மனதில் நான் எந்த இடத்தில் இருந்திருக்கிறேன் என்று புலம்பிய படியே ரதியின் அறைக்கு வந்தார்..
ரதி அப்போது தான் தூங்கி எழுந்து அமர்ந்திருந்தாள்..
இன்றைக்கென்று ரதி புடவை கட்டி இருக்க..
உலகநாதன் ரதியை புடவையில் பார்த்ததும், பழய ரதி டீச்சர் ஞாபகம் வர..
வேகமாக வந்தவர், ரதி கட்டிலில் அமர்ந்திருக்க..
அவளை தூக்கி நிற்க வைத்தவர்..
“கண்ணம்மா, உன்னை இவ்வளவு கஷ்டபடுத்திட்டேனே” என்றவர்..
அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டவர்..
“ரதி, ரதி” என்று அவள் முகமெல்லாம் முத்தம் வைக்க..
ரதிக்கு என்ன நடக்குது என்றே தெரியவில்லை.
வந்தான், கட்டிபுடுச்சான், முத்தம் கொடுக்குறான்..
“ஏய் என்னை விடு” என்று உலகநாதனிடம் இருந்து போராட..
உலகநாதன் அவர் சுயநினைவில் இல்லை, ரதியை அணைத்து முத்தமிட்டு கொண்டே இருக்க..
“டேய் வளந்தவனே, விடுடா என்னை” என்று ரதி திட்ட..
ரதி திட்டியதும் தான் சுயநினைவுக்கு வந்தவர், அவளிடம் இருந்து பிரிந்து..
“சாரி, சாரிடா” என்று கூறி விட்டு ரதியிடமிருந்து விலகி வெளியே சென்று விட..
உலகநாதன் மனதில் என்ன காரியம் பண்ணி வச்சு இருக்க, என்று தன்னை தானே திட்டிக்கொண்டவர்….
ரதியை அணைத்து முத்தமிட்டது அவருக்கு வெட்கத்தை தர.. அவரின் தலை முடியை கோதி தன் மனதையும், உணர்ச்சியையும் சமம் பண்ணிக்கொண்டிருக்க..
மீண்டும் தன்னவளை அணைத்து, முத்தமிட்டது நினைவு வர.. ரதியை காதலிச்ச பழய உலகநாதன் வெளியே வந்திருந்தார்..
மனதில் ஒரு பாடல் ஒலித்தது “இளமை திரும்புதே,” என்ற ரஜினிகாந்த் பாடல் மனதில் தோன்ற,,
சிரித்தபடியே நின்று இருந்த தந்தையை பார்த்த மாயா ..
அப்பாவிடம் வந்து “சாப்பிட வாங்கப்பா” என்று அழைக்க..
“சரிமா”என்று அவளோடு டைனிங் ரூம் வந்தார்..
டைனிங் ரூமில் இருந்தபடியே “ரதிமா ரதிமா, சாப்பிட வாங்க” என்று மாயா குரல் கொடுக்க..
அமைதியாக வந்த ரதி டைனிங் டேபிள் முன் அமர்ந்து கொண்டாள்..
வேலைக்காரர்கள் எல்லாம் அவரவர் வீட்டிற்கு சென்றிருக்க..
மாயா தான் மூன்று பேருக்கும் உணவு பரிமாறிக் கொண்டு அமர.
ரதி சாப்பிடாமல் கோபமாக அமர்ந்திருப்பதை பார்த்த மாயா.
ரதியை பார்த்து “என்னாச்சும்மா சாப்பிடுங்க” என்று மாயா கூற.
ரதி நிமிர்த்து உலகநாதனை பார்த்து முறைக்க,,
அவரோ ரதியை பார்த்து கண்ணடித்து சிரித்தார்..
டேய் வளர்ந்தவனே என்று உலகநாதனை மனதில் திட்டியவள்..
மாயாவிடம் ரதி எதோ சொல்லப் போக..
“சொல்லாதே” என்று கண்ணாலே ரதியை மிரட்டினார் உலகநாதன்..
“நான் சொல்வேன்” என்றவள்.
“மாயா இந்த வளர்ந்தவன் என்னை ப்பேட் டச் பண்ணுறான், என்னன்னு கேளு”.. என்றதும்..
மாயாவுக்கு உண்டது புறையேறியது,, என்ன என்பது போல தந்தையை பார்க்க..
உலகநாதன் தன் தலையில் மேல் கை வைத்திருந்தார்..
“நீயே என்னன்னு கேளு மாயா” என்று ரதி மீண்டும் கூற ..
“டாடி”…. என்று மாயா தந்தையை மிரட்டுவது போல் பார்த்து சிரிக்க…
” நான் ஒன்னும் பண்ணல டா” என்று மகளின் முன் அசடு வழிந்தார்…
“நீங்க சாப்பிடுங்க ரதியம்மா நான் அப்பாவை திட்டுறேன்” என்று மாயா கூற..
” நல்லா திட்டு இவனை” என்று ரதி கூற..
மாயா சிரித்துக்கொண்டே உணவை உண்டு முடித்தவள் அவள் ரூம் சென்று விட…
தனியாக உண்டு கொண்டிருந்த ரதியை பார்த்த உலகநாதன்.
“ரதி டீச்சர்” என்று உலகநாதன் ரதியை அழைக்க..
உலகநாதனை முறைத்து பார்த்தாள் ரதி…
error: Content is protected !!